Thursday, March 20, 2025

தராவீஹ் 20 - இஃதிகாஃப்

 கடைசி பத்தில் குறிப்புகள் தர இயலாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.



இன்ஷா அல்லாஹ் நாளை ரமலான் மாதத்தின் கடைசி பகுதியை அடைய இருக்கிறோம். இந்த பகுதியில் புனிதம் நிறைந்த லைலத்துர் கத்ர் இரவு இடம்பெற்றிருக்கிறது.


அருள் நிறைந்த லைலத்துல் கத்ர் இடம் பெற்றிருக்க இந்த பாக்கியமான நாட்களில் அந்த இரவை அடைந்து கொள்வதற்காக செய்யப்படுகின்ற மிக முக்கியமான அமல்களில் ஒன்று இஃதிகாஃப்.

ان النبي صلى الله عليه وسلم كان يعتكف العشر الأواخر من رمضان حتى توفاه الله عز وجل ثم اعتكف أزواجه من بعده . )

நபி ﷺ அவர்கள் மரணிக்கும் வரை ரமளான் மாதத்தின் கடைசிப் பத்தில் இஃதிகாஃப் இருக்கக் கூடியவர்களாக இருந்தார்கள். அவர்கள் மரணித்த பிறகு அவர்களின் மனைவிமார்கள் இஃதிகாஃப் இருந்தார்கள். (புகாரி,முஸ்லிம்)

وفي العام الذي قبض فيه صلى الله عليه وسلم اعتكف عشرين يوماً البخاري

நபி ﷺ அவர்கள் ஒவ்வொரு ரமளான் மாதமும் பத்து நாட்கள் இஃதிகாஃப் இருப்பார்கள். மரணித்த வருடத்திலே இருபது நாட்கள் இஃதிகாஃப் இருந்தார்கள் என அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி)

من اعتكف يوما ابتغاء وجه الله جعل الله بينه وبين النار ثلاث خنادق أبعد مما بين الخافقين ) (5345). والخافقان المشرق والمغرب .

அல்லாஹ்வின் திருப்தியை நாடி ஒருவர் ஒரு நாள் இஃதிகாஃப் இருந்தால் அவருக்கும் நரகிற்குமிடையில் அல்லாஹ் மூன்று ஹன்தக் தூரத்தை ஆக்கி விடுகிறான்.ஒரு ஹன்தக் என்பது கிழக்கு மேற்கிடையே உள்ள தூரமாகும். {தப்ரானி}

எந்நேரமும் குடும்பம் சமூகம் நன்பர்கள் சொந்த பந்தங்கள் என்று பல தொடர்புகளோடு இருக்கிற ஒரு மனிதர் அந்த அத்தனை தொடர்புகளையும் துண்டித்து குறிப்பாக இணையதள தொடர்புகளைத் துண்டித்து இறைவன் இல்லத்தில் அந்த இறைவனோடு மட்டும் தொடர்பு கொள்கிற இந்த இஃதிகாஃபில் இருக்கிற நன்மைகளையும் பாக்கியங்களையும் சொல்ல வேண்டிய அவசியமில்லை.



எல்லாவற்றுக்கும் மேலாக ஊரிலேயே சிறந்த இடம் என்று மாநபி ﷺ அவர்கள் குறிப்பிட்டுக் காட்டிய இறை இல்லத்தோடு நம்மை இணைத்து வைக்கும் பணியை இந்த இஃதிகாப் செய்கிறது.

இறை இல்லங்களோடு என்றைக்கும் நெருங்கி இருப்பது, இறை இல்லங்களோடு என்றைக்கும் அன்மித்து இருப்பது அந்த இறை இல்லங்களின் அதிபதியான இறைவனோடு நாம் நெருங்குவதற்கு காரணமாக அமையும்.

பள்ளிவாசலோடு நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டவர்கள் அல்லாஹ்வின் விருந்தாளிகள் மட்டுமல்ல அல்லாஹ்வின் பிரியத்திற்குரியவர்கள். அதனால் தான் அவர்கள் வராத போது அவர்களை அல்லாஹ் தேடுகிறான்.அவர்கள் வந்தால் மகிழ்கிறான்.

ما توطَّنَ رجلٌ مسلمٌ المساجدَ للصَّلاةِ والذِّكرِ إلَّا تبشبشَ اللَّهُ لَهُ كما يتبشبشُ أَهلُ الغائبِ بغائبِهم إذا قدمَ عليهم

வீட்டை விட்டு வெளியே சென்றவர் திரும்பி வரும் போது வீட்டிலுள்ளவர்கள் மகிழ்ச்சியடைவதைப் போன்று தொழுவதற்காகவும் அல்லாஹ்வை நினைவு கூறுவதற்காகவும் அல்லாஹ்வின் இறை இல்லங்களுக்கு வருவதை யார் வழமையாக்கிக் கொள்கிறாரோ அவரைப் பார்த்து அல்லாஹ் மகிழ்ச்சியடைகிறான். (இப்னுமாஜா ; 800)




இஃதிகாஃப் இருப்பதால் கிடைக்கும் வேறு பல நன்மைகள்.



1. தொழுகைக்காக காத்திருக்கும் நன்மை.


عَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

المَلاَئِكَةُ تُصَلِّي عَلَى أَحَدِكُمْ مَا دَامَ فِي مُصَلَّاهُ، مَا لَمْ يُحْدِثْ: اللَّهُمَّ اغْفِرْ لَهُ، اللَّهُمَّ ارْحَمْهُ، لاَ يَزَالُ أَحَدُكُمْ فِي صَلاَةٍ مَا دَامَتِ الصَّلاَةُ تَحْبِسُهُ ، لاَ يَمْنَعُهُ أَنْ يَنْقَلِبَ إِلَى أَهْلِهِ إِلَّا الصَّلاَةُ


உங்களில் ஒருவர் தாம் தொழுமிடத்தில் உளூவுடன் இருக்கும் போதெல்லாம் அவருக்காக வானவர்கள் பிரார்த்திக்கிறார்கள். தங்கள் பிரார்த்தனையில், ‘இறைவா! இவரை மன்னித்து விடு! இவருக்கு நீ கருணை புரி!’ என்றும் கூறுவார்கள்.

உங்களில் ஒருவர் தொழுவதற்காகக் காத்திருந்து தொழுகைதான் அவரைத் தம் மனைவி மக்களிடம் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தியிருக்குமானால் அவர் தொழுகையில் இருப்பவராகவே கருதப்படுவார்.’ என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார். (புகாரி: 659)


2. தொழுகைக்கு பின் அமர்ந்திருக்கும் நன்மை


عنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللّهِ صلى الله عليه وسلم قَالَ: "أَلاَ أَدُلُّكُمْ عَلَى مَا يَمْحُو الله بِهِ الْخَطَايَا وَيَرْفَعُ بِهِ الدَّرَجَاتِ؟" قَالُوا: بَلَى. يَا رَسُولَ اللّهِ! قَالَ: "إِسْبَاغُ الْوُضُوءِ علَى الْمَكَارِهِ. وَكَثْرَةُ الْخُطَا إِلَى الْمَسْاجِدِ. وَانْتِظَارُ الصَّلاَةِ بَعْدَ الصَّلاَةِ. فَذلِكُمُ الرِّبَاطُ" رواه مسلم

அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள், “(உங்கள்) தவறுகளை அல்லாஹ் மன்னித்து, தகுதிகளை உயர்த்தும் செயல்கள் சிலவற்றை உங்களுக்கு நான் சொல்லட்டுமா?” என்று கேட்டார்கள். நபித்தோழர்கள், “ஆம்; (சொல்லுங்கள்) அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள், “(அவை:) சிரமமான சூழ்நிலைகளிலும் உளூவை முழுமையாகச் செய்வதும், பள்ளிவாசல்களை நோக்கி அதிகமான காலடிகளை எடுத்து வைத்துச் செல்வதும், ஒரு தொழுகைக்குப் பின் அடுத்தத் தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருப்பதும் ஆகும். இவை தான் கட்டுப்பாடுகளாகும்” (முஸ்லிம் ; 251)



قُلْتُ لِجَابِرِ بْنِ سَمُرَةَ: أَكُنْتَ تُجَالِسُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: نَعَمْ كَثِيرًا، «كَانَ لَا يَقُومُ مِنْ مُصَلَّاهُ الَّذِي يُصَلِّي فِيهِ الصُّبْحَ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ، فَإِذَا طَلَعَتْ قَامَ وَكَانُوا يَتَحَدَّثُونَ، فَيَأْخُذُونَ فِي أَمْرِ الْجَاهِلِيَّةِ فَيَضْحَكُونَ وَيَتَبَسَّمُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

ஸிமாக் பின் ஹர்ப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஜாபிர் பின் ஸமுரா (ரலி) அவர்களிடம், “நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது அவையில் அமர்ந்திருக்கிறீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம்; அதிகமாகவே (அமர்ந்திருக்கிறேன்). அவர்கள் ஸுப்ஹுத் தொழுகையை முடித்தபின் சூரியன் உதயமாவதற்குமுன் தாம் தொழுத இடத்திலிருந்து எழுந்திருக்கமாட்டார்கள்.

சூரியன் உதயமான பின்பே (அங்கிருந்து) எழுவார்கள். அப்போது மக்கள் அறியாமைக் காலத்தில் நடந்த விஷயங்கள் பற்றிப் பேசிச் சிரித்துக்கொண்டிருப்பார்கள். (அதைக் கேட்டு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்துக்கொண்டிருப்பார்கள்” என்று கூறினார்கள். (முஸ்லிம் : 4641)



3. ஒன்று கூடி குர்ஆன் ஓதுவதின் நன்மை

عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَا اجْتَمَعَ قَوْمٌ فِي بَيْتٍ مِنْ بُيُوتِ اللَّهِ تَعَالَى، يَتْلُونَ كِتَابَ اللَّهِ وَيَتَدَارَسُونَهُ بَيْنَهُمْ، إِلَّا نَزَلَتْ عَلَيْهِمُ السَّكِينَةُ، وَغَشِيَتْهُمُ الرَّحْمَةُ، وَحَفَّتْهُمُ الْمَلَائِكَةُ، وَذَكَرَهُمُ اللَّهُ فِيمَنْ عِنْدَهُ» سنن أبي داود (2 / 71


மக்கள் இறையில்லங்களில் ஒன்றில் ஒன்றுகூடி, அல்லாஹ்வின் வேதத்தை ஓதிக்கொண்டும் அதை ஒருவருக்கொருவர் படித்துக்கொடுத்துக் கொண்டும் இருந்தால், அவர்கள்மீது அமைதி இறங்குகிறது. அவர்களை இறையருள் மூடிக்கொள்கிறது. அவர்களை வானவர்கள் சூழ்ந்துகொள்கின்றனர். மேலும் இறைவன், அவர்களைக் குறித்துத் தம்மிடம் இருப்போரிடம் (பெருமையுடன்) நினைவுகூறுகிறான். (முஸ்லிம் : 5231)


4. திக்ர் செய்யும் நன்மை


عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ

خَرَجَ مُعَاوِيَةُ عَلَى حَلْقَةٍ فِي الْمَسْجِدِ، فَقَالَ: مَا أَجْلَسَكُمْ؟ قَالُوا: جَلَسْنَا نَذْكُرُ اللهَ، قَالَ آللَّهِ مَا أَجْلَسَكُمْ إِلَّا ذَاكَ؟ قَالُوا: وَاللهِ مَا أَجْلَسَنَا إِلَّا ذَاكَ، قَالَ: أَمَا إِنِّي لَمْ أَسْتَحْلِفْكُمْ تُهْمَةً لَكُمْ، وَمَا كَانَ أَحَدٌ بِمَنْزِلَتِي مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَقَلَّ عَنْهُ حَدِيثًا مِنِّي، وَإِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ عَلَى حَلْقَةٍ مِنْ أَصْحَابِهِ، فَقَالَ: «مَا أَجْلَسَكُمْ؟» قَالُوا: جَلَسْنَا نَذْكُرُ اللهَ وَنَحْمَدُهُ عَلَى مَا هَدَانَا لِلْإِسْلَامِ، وَمَنَّ بِهِ عَلَيْنَا، قَالَ: «آللَّهِ مَا أَجْلَسَكُمْ إِلَّا ذَاكَ؟» قَالُوا: وَاللهِ مَا أَجْلَسَنَا إِلَّا ذَاكَ، قَالَ: «أَمَا إِنِّي لَمْ أَسْتَحْلِفْكُمْ تُهْمَةً لَكُمْ، وَلَكِنَّهُ أَتَانِي جِبْرِيلُ فَأَخْبَرَنِي، أَنَّ اللهَ عَزَّ وَجَلَّ يُبَاهِي بِكُمُ الْمَلَائِكَةَ


அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

பள்ளிவாசலில் வட்டமாக அமர்ந்திருந்த ஒரு குழுவினரிடம் முஆவியா (ரலி) அவர்கள் புறப்பட்டுவந்து, “நீங்கள் இங்கு அமர்ந்திருப்பதற்கு என்ன காரணம்?” என்று கேட்டார்கள். அதற்கு அக்குழுவினர், “அல்லாஹ்வை நினைவுகூர்ந்து போற்றுவதற்காக அமர்ந்துள்ளோம்” என்று கூறினர். அதற்கு முஆவியா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இதற்காகத்தான் நீங்கள் அமர்ந்துள்ளீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அக்குழுவினர், “அல்லாஹ்வின்மீது சத்தியமாக! அதற்காகத்தான் நாங்கள் அமர்ந்துள்ளோம்” என்று கூறினர்.

முஆவியா (ரலி) அவர்கள் கூறினார்கள்: உங்கள்மீது சந்தேகப்பட்டு நான் உங்களைச் சத்தியமிட்டுக் கூறச் சொல்லவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் என் அளவுக்கு நெருக்கமாக இருந்தவர்களில் எவரும் என்னைவிடக் குறைவான ஹதீஸ்களை அவர்களிடமிருந்து அறிவிக்கவில்லை. (நானே மிகக் குறைவான ஹதீஸ்களை அறிவித்தவன்.)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு முறை) வட்டமாக அமர்ந்திருந்த தம் தோழர்களில் சிலரிடம் வந்து, “நீங்கள் (இங்கு) அமர்ந்திருப்பதற்கு என்ன காரணம்?” என்று கேட்டார்கள். அதற்குத் தோழர்கள், “அல்லாஹ் எங்களுக்கு இஸ்லாத்திற்கு நேர்வழி காட்டியதற்காகவும், எங்களுக்கு அருட்கொடைகள் புரிந்ததற்காகவும் அவனை நினைவுகூர்ந்து போற்றுவதற்காக அமர்ந்திருக்கிறோம்” என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இதற்காகத் தான் நீங்கள் அமர்ந்துள்ளீர்களா?” என்று கேட்டார்கள்.

அதற்குத் தோழர்கள், “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இதற்காகத்தான் நாங்கள் அமர்ந்துள்ளோம்” என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அறிந்துகொள்ளுங்கள்! உங்கள்மீது சந்தேகம் கொண்டுச் சத்தியமிட்டு உங்களிடம் நான் கேட்கவில்லை. மாறாக, (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னிடம் வந்து, “வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் உங்களைப் பற்றி வானவர்களிடம் பெருமையுடன் பேசிக்கொள்கிறான்” என்று தெரிவித்தார் என்றார்கள். (முஸ்லிம்: 5233)


இப்படி இஃதிகாஃப் எண்ணற்ற நன்மைகளை பெறுவதற்கு காரணமாக அமைகின்றன.



நபி ﷺ அவர்கள் தன் வாழ்நாளில் விடாமல் தொடர்ந்து செய்த அமல்களில் ஒன்று இஃதிகாஃப்.

وقال الزهري رحمه الله : ( عجباً للمسلمين ! تركوا الاعتكاف ، مع أن النبي صلى الله عليه وسلم ، ما تركه منذ قدم المدينة حتى قبضه الله عز وجل )

இமாம் ஜுஹ்ரீ ரஹ் அவர்கள் கூறுகிறார்கள் : நபி ﷺ அவர்கள் மதினா வந்ததிலிருந்து விடாமல் செய்த ஒரு அமல் இஃதிகாஃப். அப்படியிருக்க அதில் கவனம் செலுத்தாமல் விட்டு விடுகிற முஸ்லிம்களைப் பார்த்து நான் ஆச்சரியப்படுகிறேன்.

6 comments:

  1. மாஷா அல்லாஹ்
    அருமை மவ்லானா

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ்

    பாரகல்லாஹ்

    எல்லாம் வல்ல அல்லாஹ் எல்லா அருள் வளங்களையும் தங்களுக்கு நிறைவாக வழங்குவானாக

    ReplyDelete
  3. மாஷா அல்லாஹ்

    ReplyDelete
  4. கடைசி பத்திலும் தாங்கள் குறிப்பு கொடுத்தால் நன்றாக இருக்கும்

    ReplyDelete
  5. அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு உடல் ஆஃபியத்திலும் கல்வியிலும் பரக்கத் செய்வானாக ஆமீன் பழைய பயான் லிங் தந்தால் நன்றாக இருக்கும் ஹஜரத்

    ReplyDelete