Thursday, August 7, 2025

மனித துணை - humen companion

 

சமீப காலமாக பிராணிகளை வாங்கி வீட்டில் வளர்க்கும் கலாச்சாரம் அதிகரித்து வருகின்றது. ஆதி காலத்தில் மனிதனின் தேவைக்காகவும் உதவிக்காகவும் சில மிருகங்களை வளர்த்து வந்த மனிதன், பிறகு அவைகளினால் சில இயற்கை நன்மைகளை பெற்ற பொழுது பிராணிகளின் அவசியத்தை உணர்ந்து அவைகளோடு நெருங்கி பழக ஆரம்பித்தான். ஆனால் இன்று பிராணிகளை வளர்ப்பது நவீன காலத்து கலாச்சாரமாக மாறி விட்டது. தேவைக்காகவும் உதவிக்காகவும் வளர்த்த காலம் கடந்து இப்போது அதை வளர்ப்பது ஃபேஷனாக மாறிப்போனது.பிராணிகள் விஷயத்தில் சிலர் எல்லை கடந்து அதற்கு அடிமையாகி விட்டார்கள். வித விதமான பறவைகளையும் பிராணிகளையும் வீட்டில் வாங்கி நிரப்புவதை வழமையாக கொண்டிருக்கின்றார்கள்.

அமெரிக்காவில் செல்லப் பிராணிகளை பிராணிகள் என்று  சொல்லக் கூடாது. மனித துணை (humen companian ) என்று தான் சொல்ல வேண்டும் என்கிறார்கள். 

இன்று ஆகஸ்ட் 8 ம் நாள். சர்வதேச பூனைகள் தினம் அனுசரிக்கப் படுகின்றது.ஐரோப்பிய நாடுகளில் பூனைகள் கெட்ட சகுனமாகக் கருதப்படும் மூடநம்பிக்கை பரவியது. இதனால் 1600-கள் வரை ஆயிரக்கணக்கான பூனைகள் உலகெங்கிலும் கொல்லப்பட்டன. இந்நிலையில், பூனை இனத்தைப் பாதுகாக்கும் இலக்குடன் சர்வதேச விலங்குகள் நல நிதியத்தால் கடந்த 2002-ம் ஆண்டு சர்வதேச பூனைகள் தினம் அறிவிக்கப்பட்டது.

எகிப்து நாட்டில் ஆதிகாலத்தில் பூனைகளை வழிபடும் பாரம்பரியம் கடைபிடிக்கப்பட்டு வந்தது. அதன் பிறகு எலிகள், பூச்சிகளை கட்டுப்படுத்துவதற்கான விலங்காகப் பூனைகளை கிரேக்கர்களும் ரோமானியர்களும் வளர்க்கத் தொடங்கினர்.

மனிதர்களால் அதிகம் விரும்பப்படுகின்ற மனிதர்களுடன் அதிகம் நெருங்கிப் பழகுகின்ற பிராணிகளில் ஒன்றாக பூனை இருக்கிறது.எனவே இன்றைக்கும் பல வீடுகளில் பூனை வளர்க்கப்படுகின்றன.

 

பூனை ஒரு செல்லப்பிராணி

، عَنْ كَبْشَةَ بِنْتِ كَعْبِ بْنِ مَالِكٍ – وَكَانَتْ تَحْتَ ابْنِ أَبِي قَتَادَةَ

أَنَّ أَبَا قَتَادَةَ، دَخَلَ فَسَكَبَتْ لَهُ وَضُوءًا، فَجَاءَتْ هِرَّةٌ فَشَرِبَتْ مِنْهُ، فَأَصْغَى لَهَا الْإِنَاءَ حَتَّى شَرِبَتْ، قَالَتْ كَبْشَةُ: فَرَآنِي أَنْظُرُ إِلَيْهِ، فَقَالَ: أَتَعْجَبِينَ يَا ابْنَةَ أَخِي؟ فَقُلْتُ: نَعَمْ، فَقَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّهَا لَيْسَتْ بِنَجَسٍ، إِنَّهَا مِنَ الطَّوَّافِينَ عَلَيْكُمْ وَالطَّوَّافَاتِ»

கப்ஷா பின்த் கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அபூகத்தாதா (ரலி) அவர்களின் மகனின் மனைவியாக இருந்தேன். என் மாமனார் அபூகத்தாதா (ரலி) அவர்கள் ஒருநாள் என் வீட்டிற்கு வந்தார்கள். அவர்களுக்கு ‘உளூ’ செய்ய பாத்திரத்தில் தண்ணீர் வைத்தேன். ஒரு பூனை வந்து அதில் கொஞ்சம் தண்ணீரைக் குடித்தது. (என் மாமனார், பூனை சிரமப்படாமல் நன்றாகக்) குடிப்பதற்காகப் பாத்திரத்தைச் சாய்த்தார்கள். (பூனை திருப்தியாகக் குடித்தது).

நான் அதை (வியப்புடன்) உற்று நோக்கிக் கொண்டிருந்ததைக் கண்ட அபூகத்தாதா (ரலி) அவர்கள், “என் சகோதரர் மகளே! (நான் இவ்வாறு செய்ததைப் பார்த்து) ஆச்சரியப்படுகிறாயா?” என்று கேட்டார்கள். அதற்கு நான் ‘ஆம்’ என்று கூறினேன்.

அப்போது அவர்கள், “பூனை அசுத்தமான பிராணியல்ல. அது வீட்டில் (உங்களுடன்) சுற்றித் திரிகிற பிராணிகளில் ஒன்றாகும்” என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத்: 75)

 

 

பிராணிகளை வளர்ப்பது குறித்து இஸ்லாத்தின் பார்வை

அல்லாஹ்வின் படைப்புக்களை சிந்திப்பதற்காகவும் மன ஆறுதலுக்காகவும் வீடுகளில் செல்லப் பிராணிகளை வளர்ப்பதை இஸ்லாம் தடுக்க வில்லை.

عَنْ أَنَسٍ، قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَحْسَنَ النَّاسِ خُلُقًا، وَكَانَ لِي أَخٌ يُقَالُ لَهُ أَبُو عُمَيْرٍ – قَالَ: أَحْسِبُهُ – فَطِيمًا، وَكَانَ إِذَا جَاءَ قَالَ: «يَا أَبَا عُمَيْرٍ، مَا فَعَلَ النُّغَيْرُ» نُغَرٌ كَانَ يَلْعَبُ بِهِ، فَرُبَّمَا حَضَرَ الصَّلاَةَ وَهُوَ فِي بَيْتِنَا، فَيَأْمُرُ بِالْبِسَاطِ الَّذِي تَحْتَهُ فَيُكْنَسُ وَيُنْضَحُ، ثُمَّ يَقُومُ وَنَقُومُ خَلْفَهُ فَيُصَلِّي بِنَا

அனஸ்(ரலி) அறிவித்தார்கள்

நபி(ஸல்) அவர்கள் மக்களிலேயே மிகவும் நற்குணமுடையவராக விளங்கினார்கள். எனக்கு ‘அபூ உமைர்’ என்றழைக்கப்பட்ட ஒரு தம்பி இருந்தார்கள். அப்போது அவர் பால்குடி மறக்கவைக்கப்பட்ட பருவத்தில் இருந்தார் என்றே எண்ணுகிறேன். நபி(ஸல்) அவர்கள் (எம் விட்டிற்கு வந்தால்), ‘அபூ உமைரே! பகுதி உன் சின்னக்குருவி என்ன செய்கிறது?’ என்று கேட்பார்கள். அவன் அப்பறவையுடன் விளையாடிக் கொண்டிருப்பான். சில வேளை நபி(ஸல்) அவர்கள் எங்கள் வீட்டில் இருக்கும்போது தொழுகைக்குத் தயாராம் விடுவார்கள். தாம் அமர்ந்திருக்கும் விரிப்பைச் சுத்தம் செய்திடுமாறு உத்தரவிடுவார்கள். அவ்வாறே அது கூட்டிச் சுத்தம் செய்யப்பட்டு தண்ணீர் தெளிக்கப்படும். பிறகு அதன் மீது நிற்பார்கள். நாங்களும் அவர்களுக்குப் பின்னால் நிற்போம். அப்போது அவர்கள் எங்களுக்குத் தொழுகை நடத்துவார்கள்.(புகாரி: 6203)

قال ابن حجر في الفتح : إن في الحديث دلالة على جواز إمساك الطير في القفص ونحوه ،

وقال  : ويجب على من حبس حيواناً من الحيوانات أن يحسن إليه ويطعمه ما يحتاجه لقول النبي صلى الله عليه وسلم الله عليه وسلم الله عليه وسلم: " دخلت امرأة النار في هرة ربطتها، فلم تطعمها، ولم تدعها تأكل من خشاش الأرض". متفق عليه .

இப்னு ஹஜர் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள் ;

ஒரு பறவையை வீட்டில் வைத்து வளர்ப்பதற்கு ஷரீஅத்தில் அனுமதியுண்டு என்பதற்கு இந்த ஹதீஸ் ஆதாரமாகும்.ஆனால் அவ்வாறு வளர்ப்பவர் அவைகளிடத்தில் சரியாக நடந்து கொள்ள வேண்டும்.தேவையான நேரத்தில் உணவு கொடுப்பது மற்றும் அவசியத் தேவைகளை பூர்த்தி செய்வது அவர் மீது கடமையாகும் ஏனெனில் உணவு தராமல் நோவினை கொடுப்பவரை நபி ஸல் அவர்கள் எச்சரித்திருக்கிறார்கள். (ஃபத்ஹுல் பாரி)

عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ

«دَخَلَتِ امْرَأَةٌ النَّارَ فِي هِرَّةٍ رَبَطَتْهَا، فَلَمْ تُطْعِمْهَا، وَلَمْ تَدَعْهَا تَأْكُلُ مِنْ خَشَاشِ الأَرْضِ

ஒரு பெண், பூனையொன்றைக் கட்டி வைத்தாள். அதற்கு அவள் தீனி போடவுமில்லை; பூமியிலுள்ள புழு பூச்சிகளைத் தின்று (பிழைத்துக் கொள்ளட்டும் என்று அதை அவிழ்த்து) விடவுமில்லை. அதன் காரணத்தால் அவள் நரகம் புகுந்தாள். (புகாரி: 3318)

 

நாய் வளர்க்கும் கலாச்சாரம் இன்று பெருகி விட்டது. ஆரம்பத்தில் மேலை நாடுகளில் இருந்த இந்த பழக்கம் இப்போது நம் நாட்டிலும் பரவலாகி விட்டது. எத்தனையோ இஸ்லாமியர்களின் வீடுகளில் நாய் இருக்கிறது.

 

நாய் வளர்ப்பது பற்றி

أَنَّ عَبْدَ اللهِ بْنَ عَبَّاسٍ، قَالَ: أَخْبَرَتْنِي مَيْمُونَةُ

أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَصْبَحَ يَوْمًا وَاجِمًا، فَقَالَتْ مَيْمُونَةُ: يَا رَسُولَ اللهِ، لَقَدِ اسْتَنْكَرْتُ هَيْئَتَكَ مُنْذُ الْيَوْمِ، قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ جِبْرِيلَ كَانَ وَعَدَنِي أَنْ يَلْقَانِي اللَّيْلَةَ فَلَمْ يَلْقَنِي، أَمَ وَاللهِ مَا أَخْلَفَنِي»، قَالَ: فَظَلَّ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَهُ ذَلِكَ عَلَى ذَلِكَ، ثُمَّ وَقَعَ فِي نَفْسِهِ جِرْوُ كَلْبٍ تَحْتَ فُسْطَاطٍ لَنَا، فَأَمَرَ بِهِ فَأُخْرِجَ، ثُمَّ أَخَذَ بِيَدِهِ مَاءً فَنَضَحَ مَكَانَهُ، فَلَمَّا أَمْسَى لَقِيَهُ جِبْرِيلُ، فَقَالَ لَهُ: «قَدْ كُنْتَ وَعَدْتَنِي أَنْ تَلْقَانِي الْبَارِحَةَ»، قَالَ: «أَجَلْ، وَلَكِنَّا لَا نَدْخُلُ بَيْتًا فِيهِ كَلْبٌ وَلَا صُورَةٌ»، فَأَصْبَحَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَئِذٍ فَأَمَرَ بِقَتْلِ الْكِلَابِ، حَتَّى إِنَّهُ يَأْمُرُ بِقَتْلِ كَلْبِ الْحَائِطِ الصَّغِيرِ، وَيَتْرُكُ كَلْبَ الْحَائِطِ الْكَبِيرِ

நபி (ஸல்) அவர்களின் துணைவியார்) மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு நாள் காலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வழக்கத்திற்கு மாறாகக்) கவலையோடு அமைதியாக இருந்தார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! இன்றைய தினம் தங்களது தோற்றத்தில் ஏதோ மாற்றத்தை நான் காண்கிறேனே (ஏன்)?” என்று கேட்டேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(வானவர்) ஜிப்ரீல் இன்றிரவில் என்னை வந்து சந்திப்பதாக வாக்களித்திருந்தார். ஆனால், அவர் வரவில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் என்னிடம் வாக்கு மாறி நடந்ததில்லை” என்று சொன்னார்கள். அந்நாள் முழுவதும் அதே நிலையிலேயே அவர்கள் காணப்பட்டார்கள்.

பிறகு அவர்களது மனதில், எங்கள் வீட்டிலிருந்த கூடாரமொன்றுக்குக் கீழே நாய்க்குட்டி இருக்கும் நினைவு வந்தது. உடனே அதை அப்புறப்படுத்துமாறு உத்தரவிட்டார்கள். அவ்வாறே அது அப்புறப்படுத்தப்பட்டவுடன் தமது கையில் தண்ணீர் அள்ளி அந்த இடத்தில் தெளித்து விட்டார்கள்.

அன்று மாலை நேரமானதும் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து அவர்களைச் சந்தித்தார்கள். அப்போது “நீங்கள் நேற்றிரவு என்னிடம் வருவதாக வாக்களித்திருந்தீர்களே?” என்று நபியவர்கள் கேட்டார்கள். அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள் “ஆம். ஆயினும், (வானவர்களாகிய) நாங்கள் நாயும் உருவப்படமும் உள்ள வீட்டில் நுழையமாட்டோம்” என்று கூறினார்கள். அன்றைய பொழுது புலர்ந்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நாய்களைக் கொல்லுமாறு கட்டளையிட்டார்கள். சிறிய தோட்டங்களில் உள்ள நாய்களைக் கொல்லுமாறும் கட்டளையிட்டார்கள். பெரிய தோட்டங்களில் உள்ள நாய்களை விட்டு விட்டார்கள். (அவற்றைக் கொல்லுமாறு உத்தரவிடவில்லை.) (முஸ்லிம்: 4273)

قَالَ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

«مَنِ اتَّخَذَ كَلْبًا، لَيْسَ بِكَلْبِ صَيْدٍ، وَلَا غَنَمٍ، نَقَصَ مِنْ عَمَلِهِ كُلَّ يَوْمٍ قِيرَاطٌ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் வேட்டை நாய், ஆடுகளைக் காவல் காக்கும் நாய் அல்லாமல் வேறு நாய்களை வளர்க்கிறாரோ அவருடைய நற்செயல்களி(ன் நன்மையி)லிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு “கீராத்” (கணிசமான) அளவுக்குக் குறைந்து விடும். (முஸ்லிம்: 3212)

 

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

«مَنِ اتَّخَذَ كَلْبًا إِلَّا كَلْبَ مَاشِيَةٍ، أَوْ صَيْدٍ، أَوْ زَرْعٍ، انْتَقَصَ مِنْ أَجْرِهِ كُلَّ يَوْمٍ قِيرَاطٌ»، قَالَ الزُّهْرِيُّ: فَذُكِرَ لِابْنِ عُمَرَ قَوْلُ أَبِي هُرَيْرَةَ، فَقَالَ: «يَرْحَمُ اللهُ أَبَا هُرَيْرَةَ كَانَ صَاحِبَ زَرْعٍ

யார் நாய் வளர்க்கிறாரோ அவருடைய நன்மையிலிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு “கீராத்” (கணிசமான) அளவுக்குக் குறைந்து விடும்; கால்நடைகளைக் காவல் காக்கும் நாயையும், வேட்டை நாயையும், விவசாயப் பண்ணைகளைக் காவல் காக்கும் நாயையும் தவிர. (முஸ்லிம்: 3210)

قال الإمام النووي

وقد اتفق أصحابنا وغيرهم على أنه يحرم اقتناء الكلب لغير حاجة مثل أن يقتني كلبا إعجابا بصورته أو للمفاخرة به فهذا حرام بلا خلاف

நபி ஸல் அவர்கள் கூறிய இந்த மூன்று காரணங்களைத் தவிர்த்து ஆசைப்பட்டோ அல்லது பெருமைக்காகவோ நாயை வளர்ப்பது ஷரீஅத்தில் தடை செய்யப்பட்டுள்ளது என்று இமாம்கள் கூறுகிறார்கள்.

 

வளர்ப்பதற்கு தடை. ஆனாலும் நாய்கள் மீதும் இரக்கம் காட்ட வேண்டும்.

أن الدمشقيين أنشؤوا وقفاً للكلاب الشاردة المريضة يداويها ويؤويها، كان في حي العمارة، ويسمونه "محكمة الكلاب". وغير ذلك من أعاجيب الأوقاف التي استغرقت كل

ما يخطر بالبال من رعاية للإنسان والحيوان.

 

இமாம் தன்தாவீ (ரஹ்) அவர்களின் “திக்ரயாத்” என்ற நூலில் இடம் பெற்றிருக்கும் ஒரு செய்தி:

டமாஷ்கஸ் நகரத்து மக்கள் அம்மாரா மாவட்டத்தில், நோயுற்றுத் திரியும் தெரு நாய்களின் நலனுக்காக-அவற்றுக்கு சிகிச்சையளித்து அரவணைத்திட வக்ஃப்களை உருவாக்கி வைத்திருந்தனர்.  “நாய்களுக்கு நியாயம் வழங்குமிடம்” என்று அதற்கு  பெயரிட்டு அழைத்தனர்.”

 

இரக்கம் காட்டுவதற்கு கூலி உண்டு

بَيْنَمَا رَجُلٌ يَمْشِي بِطَرِيقٍ اشْتَدَّ عَلَيْهِ الْعَطَشُ، فَوَجَدَ بِئْرًا، فَنَزَلَ فِيهَا فَشَرِبَ، ثُمَّ خَرَجَ فَإِذَا كَلْبٌ يَلْهَثُ يَأْكُلُ الثَّرَى مِنَ الْعَطَشِ، فَقَالَ الرَّجُلُ لَقَدْ بَلَغَ هَذَا الْكَلْبَ مِنَ الْعَطَشِ مِثْلُ الَّذِي كَانَ بَلَغَ مِنِّي، فَنَزَلَ الْبِئْرَ فَمَلَأَ خُفَّهُ مَاءً، ثُمَّ أَمْسَكَهُ بِفِيهِ حَتَّى رَقِيَ فَسَقَى الْكَلْبَ فَشَكَرَ اللهُ لَهُ فَغَفَرَ لَهُ» قَالُوا: يَا رَسُولَ اللهِ وَإِنَّ لَنَا فِي هَذِهِ الْبَهَائِمِ لَأَجْرًا؟ فَقَالَ: «فِي كُلِّ كَبِدٍ رَطْبَةٍ أَجْرٌ

ஒரு மனிதர் ஒரு பாதை வழியே நடந்து சென்றுகொண்டிருந்த போது அவருக்குக் கடுமையான தாகம் ஏற்பட்டது. அவர் (வழியில்) கிணறு ஒன்றைக் கண்டார். உடனே அதில் இறங்கித் தண்ணீர் குடித்தார். பிறகு (கிணற்றிலிருந்து) அவர் வெளியே வந்தார். அப்போது நாய் ஒன்று தாகத்தால் (தவித்து) நாக்கைத் தொங்கவிட்டபடி ஈரமண்ணை நக்கிக்கொண்டிருப்பதைக் கண்டார்.

அந்த மனிதர் (தமது மனதுக்குள்) “எனக்கு ஏற்பட்டதைப் போன்ற அதே (கடுமையான) தாகம் இந்த நாய்க்கும் ஏற்பட்டிருக்கின்றது போலும்!” என்று சொல்லிக்கொண்டார். உடனே (மீண்டும்) அக்கிணற்றில் இறங்கித் (தண்ணீரைத் தோலால் ஆன) தனது காலுறையில் நிரப்பிக்கொண்டு, அதைத் தமது வாயால் கவ்விய படி மேலேறி வந்து அந்த நாய்க்குப் புகட்டினார். அல்லாஹ் இதற்கு நன்றியாக அவரை (அவருடைய பாவங்களை) மன்னித்தான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.   இதைச் செவியுற்ற நபித்தோழர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! கால்நடைகள் (மற்ற பிராணிகளுக்கு உதவும்) விஷயத்திலும் எங்களுக்குப் பலன் கிடைக்குமா?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘(ஆம்;) உயிருடைய பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் (அதற்கு உதவும் பட்சத்தில் மறுமையில்) அதற்கான பிரதிபலன் கிடைக்கும்’ என்று கூறினார்கள். (புகாரி: 2363)

 

நாய் வளர்ப்பதை ஷரீஅத் ஏன் தடை செய்திருக்கிறது

1.       நாய்க் கடியால் தினம் தினம் பலரும் பாதிக்கப்படுகிறார்கள்.

2.       அதன் எச்சில் மூலம் ரேபிஸ் என்ற கடும் நோய் ஏற்படுகிறது.

தமிழகத்தில் கடந்த 2018 முதல் 2022 வரை, நாய் கடியால் 3771496 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் 121 பேர் ரேபிஸ் நோயால் இறந்துள்ளனர், என்று பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டில் மட்டும், 2,42,782 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 22 பேர் உயிரிழந்துள்ளனர்,

ஆசியா மற்றும் ஆப்பிக்காவில்   நாய்க்கடி நோயால் வருடந்தோறும் பல ஆயிரம் பேர் இறக்கிறார்கள்.

இவ்வாறு நாயினால் ஏற்படும் பாதிப்புக்கள் அதிகம். எனவே தான் ஷரீஅத் தடை செய்திருக்கிறதா?

பிராணிகளை அல்லாஹ் நமக்காகவே படைத்திருக்கிறான்.

هُوَ الَّذِىْ خَلَقَ لَـكُمْ مَّا فِى الْاَرْضِ جَمِيْعًا ثُمَّ اسْتَوٰۤى اِلَى السَّمَآءِ فَسَوّٰٮهُنَّ سَبْعَ سَمٰوٰتٍ‌ وَهُوَ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ‏

அவன்தான் (பூமியையும்) பூமியிலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான். பிறகு, அவன் வானத்திற்கு மேல் (தன் தகுதிக்குத் தக்கவாறு) உயர்ந்து அதை ஏழு வானங்களாக அமைத்தான். மேலும், (அவற்றிலும் அகிலத்திலும் உள்ள) அனைத்தையும் அவன் நன்கறிந்தவன் ஆவான். (அல்குர்ஆன் : 2:29)

 

பிராணிகளைத் துன்புறுத்தக்கூடாது

عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، قَالَ

كُنْتُ عِنْدَ ابْنِ عُمَرَ، فَمَرُّوا بِفِتْيَةٍ، أَوْ بِنَفَرٍ، نَصَبُوا دَجَاجَةً يَرْمُونَهَا، فَلَمَّا رَأَوْا ابْنَ عُمَرَ تَفَرَّقُوا عَنْهَا، وَقَالَ ابْنُ عُمَرَ: «مَنْ فَعَلَ هَذَا؟» إِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَعَنَ مَنْ فَعَلَ هَذَا ” تَابَعَهُ سُلَيْمَانُ، عَنْ شُعْبَةَ، حَدَّثَنَا المِنْهَالُ، عَنْ سَعِيدٍ، عَنْ ابْنِ عُمَرَ: «لَعَنَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ مَثَّلَ بِالحَيَوَانِ

ஸயீத் இப்னு ஜுபைர் (ரஹ்) கூறினார்கள்

நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் இருந்தேன். அப்போது நாங்கள் ‘இளைஞர்கள் சிலரை அல்லது ‘மக்கள் சிலரைக்’ கடந்து சென்றோம். அவர்கள் கோழியொன்றைக் கட்டி வைத்து அதன் மீது அம்பெய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் இப்னு உமர் (ரலி) அவர்களைக் கண்டவுடன் அதை அப்படியே விட்டு விட்டு கலைந்து சென்று விட்டனர். இப்னு உமர் (ரலி), ‘இதைச் செய்தது யார்? இவ்வாறு செய்பவர்களை நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்’ என்று கூறினார்கள்.

இதே ஹதீஸ் வேறு அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்னு உமர்(ரலி) கூறினார்கள் ;

பிராணிகளின் அங்கங்களைச் சிதைப்பவனை நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள். (புகாரி: 5515)

 

عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، قَالَ:

كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ، فَانْطَلَقَ لِحَاجَتِهِ فَرَأَيْنَا حُمَرَةً مَعَهَا فَرْخَانِ فَأَخَذْنَا فَرْخَيْهَا، فَجَاءَتِ الْحُمَرَةُ فَجَعَلَتْ تَفْرِشُ، فَجَاءَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «مَنْ فَجَعَ هَذِهِ بِوَلَدِهَا؟ رُدُّوا وَلَدَهَا إِلَيْهَا

இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் ;

நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தோம். அவர்கள் ஒரு தேவைக்காக வெளியே சென்றார்கள். அப்போது நாங்கள் சிறு குருவியையும் அதன் இரு குஞ்சுகளையும் கண்டோம். நாங்கள் இரு குஞ்சுகளையும் எடுத்துக் கொண்டோம். தாய்ப் பறவை சிறகடித்துக் கொண்டு வந்தது. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வந்து விட்டனர். இந்தத் தாய்ப் பறவையைப் பதறச் செய்தவர் யார் என்று கேட்டு விட்டு அதன் குஞ்சுகளை அதனிடம் விட்டு விடுங்கள் எனக் கூறினார்கள். மேலும் ஒரு எறும்புப் புற்றை நாங்கள் எரித்திருப்பதையும் அவர்கள் கண்டனர். யார் இதை எரித்தவர் என்று கேட்ட போது நாங்கள் தான் என்று கூறினோம். நெருப்பின் சொந்தக்காரன் (அல்லாஹ்) தவிர வேறு யாரும் நெருப்பின் மூலம் தண்டிக்கக் கூடாது எனக் கூறினார்கள். (அபூதாவூத்: 2675)

يحدث الامام الزمخشري عن نفسه أن إحدى رجليه كانت ساقطة، وكان يمشي في جارن خشب، فلما دخل بغدادسئل عن سبب قطع رجله – وكان يظن أن ذلك بسبب برد خوارزم الشديد لكنه قال: دعاء الوالدة: وذلك أني كنت في صباي أمسكت عصفوراً وربطته بخيط من رجله، فأفلت من يدي، فأدركته وقد دخل في خرق، فجذبته فانقطعت رجله في الخيط، فتألمت والدتي لذلك وقالت: قطع الله رجل الأبعد كما قطعت رجله، يقول فلما وصلت الى سن الطلب، رحلت الى بخارى أطلب العلم، فسقطت عن الدابة فانكسرت رجلي، وعملت عليّ عملاً أوجب قطعها.

அல்லாமா ஜமஹ்ஷரீ ரஹ் அவர்களிடம் உங்கள் கால் உடைந்து போனதற்கு என்ன காரணம் என்று கேட்கப்பட்டது. அப்போது அவர்கள், நான் சிறு பிராயத்தில் இருந்த போது ஒரு சிட்டுக் குருவியின் காலில் கயிற்றை கட்டி விளையாடிக் கொண்டிருந்தேன். ஒரு நாள் என் கையை விட்டு விலகிச் சென்றது. அதைப் பிடிக்க முற்பட்ட போது ஒரு துளைக்குள் புகுந்து கொண்டது. அந்த நேரத்தில் அதன் காலில் கட்டப்பட்டிருந்த கயிற்றைப் பிடித்து இழுத்தேன். அப்போது அதன் கால் உடைந்து விட்டது. இதைப் பார்த்து வேதனைப் பட்ட என் தாய் ஒரு வாயில்லா ஜீவனை இவ்வாறு செய்து விட்டாயே! உன் காலை அல்லாஹ் உடைத்து விட்டால் என்ன செய்வாய் என்று சொன்னார்கள். கல்வியைத் தேடி புகாராவிற்கு சென்று கொண்டிருந்த போது வாகனத்திலிருந்து விழுந்து என் கால் உடைந்து விட்டது என்று கூறினார்கள்.

பிராணிகள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்ச வேண்டும்

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرٍ، قَالَ:

أَرْدَفَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَلْفَهُ ذَاتَ يَوْمٍ، فَأَسَرَّ إِلَيَّ حَدِيثًا لَا أُحَدِّثُ بِهِ أَحَدًا النَّاسِ، وَكَانَ أَحَبُّ مَا اسْتَتَرَ بِهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِحَاجَتِهِ هَدَفًا، أَوْ حَائِشَ نَخْلٍ، قَالَ: فَدَخَلَ حَائِطًا لِرَجُلٍ الْأَنْصَارِ فَإِذَا جَمَلٌ، فَلَمَّا رَأَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَنَّ وَذَرَفَتْ عَيْنَاهُ، فَأَتَاهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَمَسَحَ ذِفْرَاهُ فَسَكَتَ، فَقَالَ: «مَنْ رَبُّ هَذَا الْجَمَلِ، لِمَنْ هَذَا الْجَمَلُ؟»، فَجَاءَ فَتًى مِنَ الْأَنْصَارِ فَقَالَ: لِي يَا رَسُولَ اللَّهِ. فَقَالَ: «أَفَلَا تَتَّقِي اللَّهَ فِي هَذِهِ الْبَهِيمَةِ الَّتِي مَلَّكَكَ اللَّهُ إِيَّاهَا؟، فَإِنَّهُ شَكَا إِلَيَّ أَنَّكَ تُجِيعُهُ وَتُدْئِبُهُ

ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைத் தமது வாகனத்தில் தமக்குப் பின்னால் அமர்த்திக்கொண்டார்கள். அப்போது அவர்கள் எனக்கு ஒரு இரகசியத்தைச் சொன்னார்கள். அதை மக்களில் யாருக்கும் நான் சொல்லமாட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது தேவையை நிறைவேற்றிக்கொள்வதற்காக ஒரு குன்றின் பின்னாலோ அல்லது பேரீச்சைத் தோட்டத்திலோ மறைந்துகொள்வதை விரும்புவார்கள். (இதை அறிவிப்பவர் கூறுகிறார்:) நபி (ஸல்) அவர்கள் அன்சாரிகளில் ஒருவரின் தோட்டத்திற்குள் நுழைந்தார்கள். அங்கே ஒரு ஒட்டகம் இருந்தது. அது நபி (ஸல்) அவர்களைப் பார்த்ததும் (வேதனையுடன்) ஒலித்தது. அதன் கண்களில் கண்ணீர் ததும்பியது. நபி (ஸல்) அவர்கள் அதன் அருகில் சென்று, அதன் தலைப்பகுதியைத் தடவிக் கொடுத்தார்கள். உடனே அது அமைதியானது. பிறகு நபி (ஸல்) அவர்கள், “இந்த ஒட்டகத்தின் உரிமையாளர் யார்? இது யாருடையது?” என்று கேட்டார்கள். அப்போது அன்சாரி இளைஞர் ஒருவர் வந்து, “இது என்னுடையது, இறைத்தூதரே!” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் உனக்கு உரிமையாக்கியுள்ள இந்த விலங்கைப் பற்றி நீ அல்லாஹ்வுக்கு அஞ்சவில்லையா? நீ இதை பட்டினி போடுகிறாய் மேலும் இதை அதிகமாக வேலைவாங்குகிறாய் என்று இது என்னிடம் முறையிட்டுக்கொண்டது” என்று கூறினார்கள். (அபூதாவூத்: 2549)

كأبي الدرداء الذي كان له بعير فيقول له عند موته: “يا أيها البعير لا تخاصمني إلى ربك، فإني لم أكن أحملك فوق طاقتك

அபுத்தர்தா ரலி அவர்களிடம் ஒரு ஒட்டகம் இருந்தது. அவர்கள் மரணத்தை நெருங்கும் நேரத்தில் அந்த ஒட்டகத்தைப் பார்த்து ஒட்டகமே! உன்னுடைய சக்திக்கு மீறி உன் மீது நான் சுமையை ஏற்ற வில்லை. எனவே நாளை மறுமையில் இறைவனிடத்தில் எனக்கு எதிராக வந்து நிற்காதே என்று கூறினார்கள்.

பிராணிகள் நலனில் கவனம் செலுத்திய இஸ்லாமியர்கள்

وفي كتاب " من روائع حضارتنا :

أخبار عن أوقاف دمشقية بلغت درجة من الرفاهية لم تعرفها البلدان الغربية المتقدمة إلا في العصور الأخيرة، فقد كان فيها وقف للقطط تأكل فيه وتنام، وكان المرج الأخضر الأرض التي صارت موقعاً المعرض دمشق الدولي منذ سنة (1954) وقفاً للحيوانات والخيول المسنة العاجزة

التي تركها أصحابها لعدم الانتفاع بها، فكانت تُترك لترعى في المرج حتى تموت.

முஸ்லிம்களின் டமாஷ்கஸ் நகரத்தின் வக்ஃப் நிறுவனங்கள் பிராணிகளுக்கு நிறைய வசதிகளை வக்ஃபின் மூலம் செய்து கொடுத்தன.

பூனைகளின் நலனுக்கென அங்கே ‘வக்ஃப்’கள் இருந்தன. அவற்றில் பூனைகள் உணவு சாப்பிட்டு உறங்கும் வசதிகள் இருந்தன.

குதிரைகள் இன்னபிற உயிரினங்கள் வயது மூப்படைந்து நலிவுற்ற பின் அவற்றால் பயனில்லை என்பதற்காக உரிமையாளர்கள் கைவிட்டுச் சென்றிருப்பின் அவற்றின் நலனுக்கென ‘வக்ஃப்’கள் இருந்தன. இதற்காக வக்ஃப் செய்யப்பட்ட ஒரு பசுமையான புல்வெளியில் அவை இயல்பாக மரணமடையும் வரை (யாருடைய இடையூறுமின்றி சுகமாக) மேய்ந்து திரிந்தன.

இவ்வாறு நீண்ட காலமாக பயன்பாட்டிலிருந்த அந்த பசுமைப் புல்வெளி 1954 ஆம் ஆண்டு முதல் டமாஷ்கசின் சர்வதேச கண்காட்சி தளமாக மாறி விட்டது.

அமெரிக்கர்கள் கூறுவதைப் போன்று பிராணிகள் மனித துணைகளாக இருக்கிறது. அப்பிராணிகள் மீது இரக்கம் காட்டுவோம். அவைகளின் உணர்வுகளை புரிந்து நடப்போம். இறைவனின் அன்பைப் பெறுவோம்.அல்லாஹ் அருள் புரிவானாக!

 

8 comments:

  1. அல்லாஹூ அக்பர் அற்புதமான கட்டுரை ஹழ்ரத் உங்களின் இல்மிலும் முயற்ச்சிக்கும் அல்லஹ் பரக்கத்தை வாரி வாரி வழங்குவானாக

    ReplyDelete
  2. human companion னு வரும் ஹழ்ரத்

    ReplyDelete
  3. ஹஜ்ரத் உங்களின் சேவையும் கட்டுறையும் அனைத்து ஆலிம் பெருமக்களும் கட்டாயம் அவசியம் தேவை

    ReplyDelete
    Replies
    1. அற்புதம் ஜஸாகல்லாஹ் மௌலா
      முகத்திமா மட்டும் இன்னும் அழகாக இருந்தால் நலம்
      ஜும்ஆ பயான் எடுத்த உடனே செய்திக்குள் நுழைய முடியாது

      Delete
    2. الَّذِىْ خَلَقَ لَـكُمْ مَّا فِى الْاَرْضِ جَمِيْعًا
      அல்லாஹ் நமக்கு செய்த பெரிய உபகாரம் நம்மை இந்த உலகில் படைத்து உலகில் உள்ள அனைத்தையும் நமக்காகவே படைத்திருக்கிறான் வானம்,பூமி,நிலம், காற்று, நீர், நெருப்பு, மட்டுமல்ல இந்த பூமியில் சுற்றித் திரியக்கூடிய கால்நடைகள், பறவைகள், பூச்சிக்கள், ஊர்வன,பறப்பன,மிதப்பன என அனைத்தும் நமக்காகவே படைக்கப்பட்டிருக்கின்றன.

      Delete
  4. எனது அருமை தம்பி...
    நல்ல நிறைய தகவல்கள்!
    மனதுக்கு குளிர்ச்சி! ஜஸாக்கல்லாஹ் அஹ்ஸனல் ஜஸா ஃபித்தாரைனி 🤲

    ReplyDelete