Friday, October 3, 2025

கௌஸ் நாயகத்தின் வரலாற்று பக்கங்களில் சில...

 


அவர்களின் பிறப்பு


كانت ولادته سنة (٤٧١هـ) كما في معظم تراجمه .


ولد الشيخ - رحمه الله تعالى - بمنتصف شهر رمضان في سنة إحدى وسبعين وأربع مئة بجيلان ، وبها أمضى فترة شبابه الأول إلى أن بلغ الثامن عشرة سنة ، فارتحل إلى بغداد ، ودخلها سنة ثمان وثمانين وأربع مئة " ، واستمر فيها إلى نهاية حياته


அவர்கள் ஹிஜ்ரி 471 ஆம் ஆண்டு ரமலான் மாதத்தில் ஜீலான் என்ற நகரத்தில் பிறந்தார்கள். அங்கேயே அவர்களின் 17 ம் வயது வரைக்கும் இருந்தார்கள். அதற்குப் பிறகு பக்தாத் நகரத்திற்கு பயணப்பட்டார்கள். அவர்களின் இறுதி நேரம் வரை அங்கேயே இருந்தார்கள்.



அவர்களின் மரணம்


توفي الشيخ بعد مرض قصير لم يطل، حتى قيل إنه دام يوماً وليلة، وكان ذلك ليلة السبت عاشر ربيع الآخر، سنة (٥٦١هـ).


وكانت مدة حياته تسعين عاماً، قضاها بالعمل الخير وتعليم الناس وإرشادهم .. الله


ஹிஜ்ரி 561 ஆம் ஆண்டு ரபீவுல் ஆகிர் மாதத்தில் அவர்களின் 91ம் வயதில் இவ்வுலகை விட்டும் பிரிந்து சென்றார்கள்.



குழந்தை பருவத்திலேயே அவர்களுக்கு அல்லாஹ் விலாயத்தைக் கொடுத்து விட்டான்.


وحكى عن أمه رضي الله عنها وكان لها قدم في الطريق أنها قالت: لما وضعت ولدي عبد القادر كان لا يرضع ثديه في نهار رمضان، ولقد غم على الناس هلال رمضان، فأتوني وسألوني عنه، فقلت لهم : إنه لم يلتقم اليوم له ثدياً، ثم اتضح أن ذلك اليوم كان من رمضان، واشتهر ببلدنا في ذلك الوقت أنه ولد للأشراف، ولد لا يرضع في نهار رمضان (غنية)


முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி ரஹ் அவர்களின் தாயார் கூறுகிறார்கள் ;  என்னுடைய அருமை மகனார் ரமலான் மாதத்தினுடைய பகல் காலங்களில் என்னிடத்தில் பால் குடிக்க மாட்டார். அந்த வருடத்தின் ரமலானுடைய பிறை விஷயத்தில் மக்களுக்கு  குழப்பம் ஏற்பட்ட போது என்னிடத்தில் வந்து விசாரித்தார்கள். அப்போது இன்று என்னுடைய மகன் பால் குடிக்க வில்லை என்று சொன்ன போது, இது ரமலான் மாதத்தினுடைய முதல் நாள் என்பதை மக்கள் விளங்கிக் கொண்டார்கள். அந்த அளவிற்கு அந்த விஷயம் மக்களிடையே மிகவும் பிரபல்யமானதாக இருந்தது என்று குறிப்பிடுகிறார்கள். (குன்யா)



அவர்களின் அறிவுக்கூர்மை


وكان رضي الله عنه يقول: تراءى لي نور عظيم ملأ الأفق ثم تدلى فيه صورة تناديني : يا عبد القادر أنا ربك، وقد حللت لك المحرمات، فقلت: إخسأ يا لعين، فإذا ذلك النور ظلام وتلك الصورة دخان ؛ ثم خاطبني يا عبد القادر نجوت مني بعلمك بأمر ربك وفقهك في أحوال منازلاتك، ولقد أضللت بمثل هذه الواقعة سبعين من أهل الطريق، فقلت : الله الفضل، فقيل له كيف علمت أنه شيطان؟ قال: بقوله قد حللت لك المحرمات. (غنية)


முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்; ஒரு நாள் அடி வானத்தில் ஒளி ஒன்று தோன்றியது. அங்கிருந்து சப்தம் ஒன்று கேட்டது. அப்துல் காதிரே!  நான் தான் உன் இறைவன். இன்று முதல் உனக்கு தடை செய்யப்பட்ட அனைத்தையும் நான் ஆகுமாக்கி விட்டேன். நீ விரும்பியபடி எதையும் செய்து கொள்வதற்கு நான் அனுமதி வழங்கி விட்டேன் என்று சொல்லப்பட்டது. உடனே நான் பழிக்கப்பட்ட ஷைத்தானே வாயை மூடு என்று கூறினேன். அப்போது இதே வார்த்தையை சொல்லி நேர்வழி பெற்ற 70-க்கும் மேற்பட்டோரை நான் வழிகெடுத்து இருக்கிறேன். ஆனால் நீங்கள் உங்களுடைய கல்வி அறிவாலும் புத்திசாலித்தனத்தாலும் என்னிடமிருந்து தப்பி விட்டீர்கள் என்று கூறினான். அவ்வாறு அவன் கூறிய போது அவனை சைத்தான் என்று எப்படி அடையாளம் கண்டீர்கள் என்று அவர்களிடத்தில் கேட்கப்பட்டது. அப்போது அவர்கள் கூறினார்கள் ; எல்லாவற்றையும் உங்களுக்கு ஆகுமாக்கி விட்டேன் என்று அவன் சொன்ன போதே அவன் வழிகெட்ட சைத்தான் என்பதை நான் விளங்கிக் கொண்டேன். ஏனெனில்  படைத்த ரப்புல் ஆலமீன் அவ்வாறு சொல்ல மாட்டான் என்று கூறினார்கள். (குன்யா)



அவர்களின் பாட அறை


يقول الشيخ أبو الحسن الندوي في وصف الشيخ ووصف مجلسه


كان صاحب نفس زكية، وهمة قوية مؤثرة، وعلى جانب عظيم من الزهد والقناعة والعزوف عن الشهوات .


يجد ضعاف الإيمان في مجالسه قوة اليقين وحرارة الإيمان.


ويجد أهل الشك والارتياب السكينة والإذعان.


ويجد أصحاب النفوس القلقة والقلوب الجريحة المنكسرة الهدوء والعزاء والسلوان.


ويجد هواة الحقائق والمعارف وأصحاب الدراسات : العلوم الدقيقة، والنكت اللطيفة.


ويجد أصحاب البطالة والعطلة، وأصحاب القلوب الخامدة ما يملؤهم حماسة وإيماناً، وما يحفزهم إلى العمل والجهاد.


ويجد عباد الملذات والشهوات، والمترفون في الحياة، الذين تجرؤوا على المعاصي والمحارم ما يبعث فيهم الإقلاع والندامة والتوبة والإنابة.


وبالجملة : يجد كل أحد في مجالسه : غناءه ودواءه وغذاءه وشفاءه، ويقف كمنارة عالية من الإيمان والعلم في بحر الظلمات والجاهلية يأوي إليها الغرقى ويهتدي به الحائرون 

(رجال الفكر والدعوة في الاسلام لابي الحسن الندوي  ص ٢٥١)


முகையிர்தீன் அப்துல் காதர் ஜீலானி அவர்களின் பாடலை அனைவருக்கும் அனைத்தையும் தரக்கூடிய இடமாக அமைந்திருந்தது அவர்களின் வகுப்பறையில் பலவீனமான ஈமானுடையவர் அமர்ந்தால் ஈமானிய பலத்தை பெற்று விடுவார். சந்தேகத்திலும் அறியாமையிலும் அமரக்கூடியவர் தெளிவை பெற்று விடுவார் திருக்கத்திலும் குழப்பத்திலும் இருப்பவர் அமைதியை பெற்று விடுவார். வணக்க வழிபாடுகளில் ஈடுபாடு இல்லாதவருக்கு ஈடுபாட்டை பெற்று தந்து விடும் உலக மோகங்களிலும் இன்பங்களிலும் திளைத்து பாவங்களில் மூழ்கி இருப்பவர்கள் அமர்ந்தால் இறையச்சம் பெற்று திருந்தும் வாய்ப்பை பெற்று விடுவார்கள். (ரிஜாலுல் ஃபிக்ரி வத்தஅவா லிஅபில் ஹஸன் அந்நத்வீ)



அவர்களின் சீர்திருத்தம்


وقد اشتهر الشيخ بمجالس وعظه التي كان يقصدها الآلاف، وقد كان له التأثير الكبير في إصلاح المجتمع، فقد أسلم على يده أكثر من خمسة آلاف، وتاب على يده أكثر من عشرين ألفاً 

(الفتح الرباني، ص ١٤٥)


அவர்களுடைய வார்த்தைகள் உபதேசங்கள் ஒவ்வொன்றும் மனித உள்ளங்களுக்குள் ஊடுருவி மாபெரும் தாக்கத்தையும் மாற்றங்களையும் ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும் பலருடைய நேர்வழிக்கும் சீர்திருத்தத்திற்கும் அல்லாஹ் அவர்களை காரணமாக ஆக்கினான். அவர்களின் கரம் பற்றி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். அவர்கள் முன்னிலையில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தவ்பா செய்து கொண்டார்கள். (அல் ஃபத்ஹுர் ரப்பானீ)



அவர்களின் குர்ஆனிய ஞானம்



قال الحافظ أبو العباس أحمد البندنيجي: حضرت أنا والشيخ جمال الدين ابن الجوزي رحمه الله تعالى مجلس سيدنا الشيخ عبد القادر رحمة الله عليه .. فقرأ


القارئ آية، فذكر الشيخ في تفسيرها وجهاً ...


فقلت للشيخ جمال الدين : تعلم هذا الوجه؟


قال : نعم .


ثم ذكر وجهاً آخر، فقلت له: أتعلم هذا الوجه؟


قال : نعم .


فذكر فيها الشيخ أحد عشر وجهاً، وأنا أقول له : أتعلم هذا الوجه؟ وهو يقول : نعم.


ثم ذكر الشيخ فيها وجهاً آخر. فقلت له : أتعلم هذا الوجه ؟


قال : لا .


حتى ذكر فيها كمال الأربعين وجهاً، يعزو كل وجه إلى قائله، والشيخ جمال الدين يقول: لا أعرف هذا


الوجه، واشتد عجبه من سعة علم الشيخ


 (الشيخ عبد القادر الجيلاني للدكتور عبد الرزاق الكيلاني ص ۱۷۰ ، نقلاً عن قلائد الجواهر)


அல்ஹாபிழ் அபுல் அப்பாஸ் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள் ; ஒரு நாள் நானும் அறிஞர் இப்னுல் ஜவ்ஸி ரஹ் அவர்களும் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி ரஹ் அவர்களின் பாட வகுப்பறையில் அமர்ந்திருந்தோம். அவர்கள் குர்ஆனுடைய வசனங்களுக்கு விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் ஒரு வசனத்திற்கு விளக்கம் சொல்ல சொல்ல எனக்கு அருகில் அமர்ந்திருந்த இப்னுல் ஜவ்ஸி ரஹ் அவர்களிடத்தில் இந்த விளக்கம் உங்களுக்கு தெரியுமா என்று கேட்டுக் கொண்டிருந்தேன். அவர்கள் தெரியும் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஒரே வசனத்திற்கு பல விளக்கங்களை தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருந்தார்கள். 11 விளக்கம் வரைக்கும் எனக்கும் இது தெரியும் என்று இப்னுல் ஜவ்ஸி ரஹ் அவர்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள். 12 வது விளக்கத்தை சொல்லுகின்ற பொழுது இது எனக்கு தெரியாது என்று சொன்னார்கள். ஆனால் அவர்கள் அதை எல்லாம் தாண்டி சுமார் அந்த ஒரு வசனத்திற்கு மட்டும் 40 விளக்கங்களை சொல்லி முடித்தார்கள். (கலாயிதுல் ஜவாஹிர்)



அவர்களின் நற்குணங்கள்



அவர்கள் நாயகத்தின் நற்குணத்தைப் பெற்றிருந்தார்கள்.


وقال بن حجر العسقلاني رحمة الله تعلى : 

- كان الشيخ عبد القادر متمسكاً بقوانين الشريعة , 

- يدعو إليها وينفر عن مخالفتها ويشغل الناس فيها 

- مع تمسكه بالعبادة والمجاهدة ومزج ذلك بمخالطة الشاغل عنها غالبا كالأزواج والأولاد , 

ومن كان هذا سبيله كان أكمل من غيره لأنها صفة صاحب الشريعة صلى الله علية وسلم . 

(قلائد الجواهر ص 23)



நபி ஸல் அவர்களின் குணம் -1



1. தன்னை விட பிறரை தேர்ந்தெடுக்கும் குணம்.


عَنْ سَهْلٍ رَضِيَ اللَّهُ عَنْهُ


«أَنَّ امْرَأَةً جَاءَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِبُرْدَةٍ مَنْسُوجَةٍ، فِيهَا حَاشِيَتُهَا»، أَتَدْرُونَ مَا البُرْدَةُ؟ قَالُوا: الشَّمْلَةُ، قَالَ: نَعَمْ، قَالَتْ: نَسَجْتُهَا بِيَدِي فَجِئْتُ لِأَكْسُوَكَهَا، «فَأَخَذَهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُحْتَاجًا إِلَيْهَا، فَخَرَجَ إِلَيْنَا وَإِنَّهَا إِزَارُهُ»، فَحَسَّنَهَا فُلاَنٌ، فَقَالَ: اكْسُنِيهَا، مَا أَحْسَنَهَا، قَالَ القَوْمُ: مَا أَحْسَنْتَ، لَبِسَهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُحْتَاجًا إِلَيْهَا، ثُمَّ سَأَلْتَهُ، وَعَلِمْتَ أَنَّهُ لاَ يَرُدُّ، قَالَ: إِنِّي وَاللَّهِ، مَا سَأَلْتُهُ لِأَلْبَسَهُ، إِنَّمَا سَأَلْتُهُ لِتَكُونَ كَفَنِي، قَالَ سَهْلٌ: فَكَانَتْ كَفَنَهُ


பெண்மணி ஒருவர்,  நபி(ஸல்) அவர்களிடம் புர்தா — குஞ்சங்கட்டப்பட்ட ஒரு சால்வையைக் கொண்டு வந்தார் என்று ஸஹ்ல்(ரலி) கூறிவிட்டு –‘புர்தா என்றால் என்ன என்பது உங்களுக்குத் தெரியுமா?’ என்று கேட்டபோது (அங்கிருந்தோர்) ‘ஆம்! புர்தா என்பது சால்வைதானே! என்றனர். ஸஹ்ல் ‘ஆம்’ எனக் கூறிவிட்டு மேலும், அப்பெண்மணி ‘நான் என்னுடைய கையாலேயே இதை நெய்திருக்கிறேன். இதனை உங்களுக்கு அணிவிக்கவே நான் கொண்டு வந்தேன்’ என்றதும் அது தேவையாயிருந்ததால் நபி(ஸல்) அவர்கள் அதைப் பெற்றார்கள்.

பிறகு அவர்கள் அதைக் கீழாடையாக அணிந்து எங்களிடம் வந்தபோது ஒருவர் ‘இது எவ்வளவு அழகாக இருக்கிறது! எனக்கு இதை நீங்கள் அணிவித்து விடுங்கள்’ என்று கேட்டார். உடனே அங்கிருந்தோர் ‘நீர் செய்வது முறையன்று; நபி(ஸல்) அவர்களுக்கு அது தேவைப்பட்டதால் அதை அணிந்திருக்கிறார்கள். நபி(ஸல்) அவர்கள் கேட்பவர்களுக்குக் கொடுக்காமலிருக்க மாட்டார்கள் என்று தெரிந்து கொண்டே நீர் அதை அவர்களிடம் கேட்டு விட்டீரே’ எனக் கூறினார்கள்.அதற்கவர் அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் அதை (சாதாரணமாக) அணிந்து கொள்வதற்ககாகக் கேட்கவில்லை: அது எனக்கு கஃபனாக ஆகி விடவேண்டும் என்றே கேட்டேன்’ என்றார். ‘பின்பு அது அவருக்குக் கஃபனாகவே ஆகிவிட்டது’ என்று ஸஹ்ல் கூறினார். (புகாரி: 1277)


قال سيدنا عبدالقادرالجيلاني رضي الله عنه:

 أقمت ببغداد عشرين يوماً ما أجد ما أقتات به، فخرجت إلى إيوان كسرى أطلب مباحاً، فوجدت سبعين رجلاً من الفقراء كلهم يطلبون، فقلت: ليس من المروءة أن أزاحمهم، فرجعت إلى بغداد، فلقيني رجل لا أعرفه، من اهل بلدي، فأعطاني قطعا من النقود، وقال: ( هذه بعثت بها أمك إليك معي) فأخذت منها قطعة واحدة تركتها لنفسي، وأسرعت بالباقي إلى خراب الإيوان، وفرّقتها على أولئك السبعين فقالوا: ما هذا؟ قلت: إنه قد جاءني هذا من عند أمي، وما رأيت أن أختص به دونكم.

ثم رجعت إلى بغداد واشتريت بالقطعة التي معي طعاماً، وناديت الفقراء فأكلنا جميعاً.


பக்தாதில் அவர்கள் கல்வியை தேடிக் கொண்டிருந்த அந்த காலகட்டத்தில் அவர்கள் பெரும் சிரமங்களையும் கஷ்டங்களையும் அனுபவித்தார்கள். பல நாட்கள் உணவில்லாமல் பசியோடு கழித்திருக்கிறார்கள். அவர்கள் கூறுகிறார்கள் ; 20 நாட்களாக தொடர்ந்து உணவில்லாமல் வெறும் வயிற்றோடு நாட்களை கழிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. உணவைத் தேடி அங்கும் இங்கும் அலைந்து திரிந்து கொண்டிருந்தோம். என்னோடு சேர்த்து 70-க்கும் மேற்பட்டோர் உணவை தேடிக் கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் என்னுடைய தாயார் எனக்காக சில நாணயங்களை அனுப்பி வைத்தார். அதைப் பெற்றுக் கொண்ட நான் அதில் ஒரே ஒரு நாணயத்தை மட்டும் எனக்காக வைத்துக் கொண்டு மீதி இருக்கிற அனைத்தையும் நீண்ட நாட்களாக பசியோடு சிரமப்படுகிற அந்த 70 நபர்களுக்கும் பங்கிட்டு கொடுத்து விட்டேன். அந்த ஒரு நாணயத்திற்கு உணவை வாங்கி என்னோடு ஏழைகளை அமர வைத்து அந்த உணவை நான் உட்கொண்டேன் என்று கூறுகிறார்கள். 



2. நபி ஸல் அவர்களின் குணம் -2


யாரையும் நேரடியாக குத்திக்காட்டாத பண்பு 


عن عائشة، قالت: "كان النبي ﷺ إذا بلغه عن الرجل الشيء، لم يقل: ما بال فلان يقول، ولكن يقول: ما بال أقوام يقولون كذا وكذا


ஒரு மனிதரைப் பற்றி ஏதும் ஒரு செய்தி அவர்களுக்கு சொல்லப்பட்டால் அந்த மனிதரின் பெயரை குறிப்பிட்டு அவருக்கு என்ன ஆனது ஏன் இப்படி சொன்னார் இப்படி செய்தார் என்று கேட்க மாட்டார்கள் மாறாக மக்களுக்கு என்ன நேர்ந்தது இவ்வாறு கூறுகிறார்கள் என்று பொதுவாக கேட்பார்கள். (ஸஹீஹுல் ஜாமிவு : 4692)



وهو أسلوب الخطاب، فإن الشيخ بالرغم من علمه بدقائق واقع الناس، فإنه لم يكن يواجههم بما ينفرهم، وإنما كان خطابه عاماً، لا يخاطب شخصاً بعينه ولا فئة بعينها، متبعاً في ذلك السنة في قوله : (ما بال أقوام يفعلون كذا وكذا . .) .


فقد كان يخاطب الناس فيقول : یا قوم یا غلام یا مسكين .


ஒருவர் தவறு செய்து விட்டார் என்று அவர்களுக்கு தெரியும். ஆனாலும் அவரை முன்னிறுத்தி நேருக்கு நேராக அவருடைய பெயரை குறிப்பிட்டு பேச மாட்டார்கள். மாறாக மக்களுக்கு என்ன ஆனது ஏன் இப்படி செய்கிறார்கள் என்று பொதுவாக யாரையும் குறிப்பிடாமல் பேசும் பழக்கமுடையவர்களாக அவர்கள் இருந்தார்கள்.(அல் ஃபத்ஹுர் ரப்பானி)


நபி ஸல் அவர்களின் குணம் -3


பணிவு


عَنِ الرُّبَيِّعِ بِنْتِ مُعَوِّذٍ، قَالَتْ

دَخَلَ عَلَيَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ غَدَاةَ بُنِيَ عَلَيَّ، فَجَلَسَ عَلَى فِرَاشِي كَمَجْلِسِكَ مِنِّي، وَجُوَيْرِيَاتٌ يَضْرِبْنَ بِالدُّفِّ، يَنْدُبْنَ مَنْ قُتِلَ مِنْ آبَائِهِنَّ يَوْمَ بَدْرٍ، حَتَّى قَالَتْ جَارِيَةٌ: وَفِينَا نَبِيٌّ يَعْلَمُ مَا فِي غَدٍ. فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لاَ تَقُولِي هَكَذَا وَقُولِي مَا كُنْتِ تَقُولِينَ»


ருபய்யிஉ பின்த் முஅவ்வித் (ரலி) அறிவித்தார்.


எனக்குத் திருமணம் நடந்த அன்று காலை நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். (இந்த ஹதீஸைக் கேட்டுக் கொண்டிருந்த காலித் இப்னு தக்வான் – ரஹ் – அவர்களிடம்) ‘எனக்கருகில் நீங்கள் அமர்ந்திருப்பது போன்று நபி (ஸல்) அவர்கள் என்னுடைய விரிப்பின் மீது அமர்ந்திருந்தார்கள்’ (என்று ருபய்யிஉ கூறினார்கள்) அங்கு சில (முஸ்லிம்) சிறுமிகள் (சலங்கையில்லா) கஞ்சிராக்களை அடித்துக் கொண்டு பத்ருப் போரில் கொல்லப்பட்ட தங்கள் முன்னோர்களைப் புகழ்ந்து (இரங்கல்) பாடிக் கொண்டிருந்தனர்.


அவர்களில் ஒரு சிறுமி, ‘எங்களிடையே ஓர் இறைத்தூதர் இருக்கிறார். அவர் நாளை நடக்க விருப்பதையும் அறிவார்’ என்று கூறினாள். உடனே நபி (ஸல்) அவர்கள், ‘இப்படிச் சொல்லதே. (இதைவிடுத்து) முன்பு நீ சொல்லிக் கொண்டிருந்ததை (வேண்டுமானால்) சொல்’ என்று கூறினார்கள்.(புகாரி: 4001)


كان الشيخ عبد القادر لا يحب ان يذكر نسبه او ان يتباهي به وكان ينهي اولاده عن ذلك ايضا تواضعا منه رح


முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ் அவர்கள் நபி ஸல் அவர்களின் புனித குடும்பத்தைச் சார்ந்தவர்கள். இருந்தாலும் அதை சொல்லி பெருமை கொள்வதை விரும்ப மாட்டார்கள். பெருமை வந்து விடும் என்பதற்காக அவ்வாறு சொல்லக்கூடாது என்று தன் பிள்ளைகளை தடுத்திருந்தார்கள். 


وعليك بخدمة الفقراء بثلاثة أشياء:أولها: التواضع،وثانيها: حسن الخلق،وثالثها: صفاء النفس.


பணிவு நன்னடத்தை தெளிந்த இதயம் இம்மூன்றைக் கொண்டும் ஏழைகளுக்கு சேவகம் செய்வதை உனக்கு அவசியமாக்கிக் கொள்.

وحسبك من الدنيا شيئان صحبة فقير وحرمة (وفي رواية: وخدمة) ولي.

இந்த உலகத்தில் ஏழைகளின் தொடர்பு இறைநேசர்களுக்கு கண்ணியம் செய்வது இவ்விரண்டு விஷயங்களே நீ ஈடேற்றம் பெறுவதற்கு போதுமாகும்.

No comments:

Post a Comment