இன்று நவம்பர் 14. நாடு முழுக்க சில்ட்ரன்ஸ் டே – குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவிற்கு குழந்தைகள் மீது அதிக அன்பும் அக்கறையும் அவர்களின் எதிர்காலம் குறித்த சிந்தனையும் இருந்தது. குழந்தைகள் நலனில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக 1955 ல் சில்ட்ரன்ஸ் ஃபிலிம் சொசைட்டி இந்தியாவை நிறுவினார். குழந்தைகளின் நலனில் தனி கவனம் செலுத்தியதாலும் அந்த கவனத்தை சமூகத்திற்கு உணர்த்தியதாலும் அவர்களின் பிறந்த நாளான நவம்பர் 14 ம் தேதியை இந்த நாடு குழந்தைகள் தினமாக கொண்டாடுகிறது.
நாட்டிலேயே
குழந்தைகளை பாதுகாக்க எத்தனையோ அம்சங்கள் இருக்கிறது.
மாநில
குழந்தைகள் பாதுகாப்பு சங்கம்
மாவட்ட
குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு.
குழந்தைகள் நலக்
குழு.
சிறார் நீதி
வாரியங்கள்.
சிறப்பு சிறார்
காவல் பிரிவு.
குழந்தைகள்
நீதிமன்றம்.
இத்தனை
அமைப்புகளும் திட்டங்களும் இருக்கின்ற இந்த நாட்டில் குழந்தைகள்
பாதுகாக்கப்படுகிறார்களா?
சிறார்கள் சரியாக கவனிக்கப் படுகிறார்களா? அல்லது நாம் நம் குழந்தைகளை சரியாக
நடத்துகிறோமா?
என்பது இந்த நேரத்தில் சிந்திக்க வேண்டிய செய்தி.
நம் குழந்தைகள் 18
வயதை நெருங்கி விட்டால் அவர்களின்
திருமணம் குறித்து சிந்திக்க ஆரம்பித்து விடுவோம் ஆண் மக்களாக இருந்தால் அந்த வயதில்
வரன் பார்க்க ஆரம்பித்து விடுவோம். பெண் குழந்தைகளாக இருந்தால் அந்த வயதில்
திருமணம் முடித்து வைத்து விடுவோம். திருமணம் ஆகின்ற வரைக்கும் தான் அவருடைய மகன்,
அவருடைய மகள் என்று இந்த உலகம் சொல்லும். திருமணம் ஆகி விட்டால் அந்த பெண்ணுடைய கணவர்.
அல்லது அவருடைய மனைவி என்று சொல்ல ஆரம்பித்து விடும். அவர்களுக்கு குழந்தைகள்
பிறந்து விட்டால் அந்த குழந்தைகளின் பெயர்களைச் சொல்லி அவர்களின் தாய் என்றும்
தகப்பன் என்றும் சொல்ல ஆரம்பித்து விடுவார்கள்.
ஆக திருமணம்
ஆகின்ற வரை அவர்கள் குழந்தைகளாகவே பார்க்கப்படுகிறார்கள்.எனவே அந்த வயது வரை
இருக்கும் பிள்ளைகளின் வளர்ப்பு குறித்தும் அவர்களிடம் நாம் நடந்து கொள்ள வேண்டிய
நடைமுறை குறித்தும் இந்த ஜும்ஆவின் வழியாக நாம் பார்க்க இருக்கிறோம்.
21
வயது இருக்கும் பிள்ளைகளின் பருவத்தை இஸ்லாம் மூன்று பகுதியாக பிரிக்கிறது.
ஒவ்வொரு பகுதிகளிலும் ஒரு பெற்றோர் எப்படி இருக்க வேண்டும்? எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை
கற்றுத் தருகிறது.
முதல் 7 விளையாட்டுப் பருவம்
குழந்தைகளின் ஆரம்ப நிலையாக இருக்கின்ற 7
வயது வரைக்கும் அவர்கள் விளையாட மட்டுமே செய்ய வேண்டும்.
ஓடி விளையாடும் போது
அவர்களுடைய உடல் மட்டுமின்றி மனமும் உற்சாகமடையும். தேவையற்ற மன அழுத்தங்கள்
வராது.
விளையாட்டின் மூலம்
பொறுமை மற்றும் தலைமைத்துவப் பண்பு, ஆளுமைத்திறன்
வளரும்.
விளையாட்டின்
போது ஏற்படும் சிறு காயங்கள் குழந்தைகளை உடல் ரீதியாக வலிமையாக்குகின்றன.
இன்றைய காலச்
சூழ்நிலையில் பிள்ளைகளுக்கு விளையாட நேரமே கிடைப்பதில்லை. அந்த அளவிற்கு சற்றும்
ஓய்வில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். விளையாட வேண்டிய பருவத்தில் விளையாடாமல்
தொடர்ந்து அவர்களுக்கு சுமைகள் தரப்படுவதால் நாளடைவில் மனஅழுத்தத்திற்கு உள்ளாகி
மன நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.
குழந்தைகளை
விளையாட்டுப் பருவத்தில் விளையாட அனுமதிக்க வேண்டும். அவர்களுடன் சேர்ந்து நாமும்
விளையாட வேண்டும்.
قال بعض
السلف، لاعب ابنك سبعاً وأدبه سبعاً، وآخه سبعاً
முதல் ஏழு வருடங்கள் குழந்தைகளோடு சேர்ந்து விளையாடுங்கள். இரண்டாவது
ஏழு வருடங்கள் அவர்களுக்கு ஒழுக்கங்களையும் நாகரீகங்களையும் கற்றுக் கொடுத்து
விடுங்கள். மூன்றாவது ஏழு வருடங்கள் அவர்களின் தோழர்களாக நீங்கள் மாறி விடுங்கள்
என்று சொல்வார்கள்.
குழந்தைகளோடு விளையாடிய வள்ளல் நபி
ஸல் அவர்கள்
وعن عمر -
يعني ابن الخطاب - قال : - 1 رأيت الحسن والحسين على عاتقي [ ص: 182 ] النبي - صلى
الله عليه وسلم - فقلت : نعم الفرس تحتكما . فقال النبي - صلى الله عليه وسلم - :
" ونعم الفارسان هما " .رواه أبو يعلى في الكبير
ஹஸன்,ஹுஸைன் ரலி ஆகிய இருவரும் நபி ஸல் அவர்களின் தோளின் மீது
அமர்ந்திருந்ததைக் கண்ட உமர் ரலி அவர்கள் உங்களுக்கு கிடைத்த வாகனம் சிறந்த வாகனம்
என்று கூறினார்கள். அதைக் கேட்ட நபி ஸல் அவர்கள் வாகனிப்பவர்களில் அவர்கள்
இருவரும் சிறந்தவர்கள் என்று கூறினார்கள்.
குழந்தைகளின் குறும்பை ஏற்றுக் கொள்ள
வேண்டும்
عَنْ أُمِّ
خَالِدٍ بِنْتِ خَالِدِ بْنِ سَعِيدٍ، قَالَتْ
أَتَيْتُ
رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَ أَبِي وَعَلَيَّ قَمِيصٌ
أَصْفَرُ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «سَنَهْ
سَنَهْ» – قَالَ عَبْدُ اللَّهِ: وَهِيَ بِالحَبَشِيَّةِ حَسَنَةٌ -، قَالَتْ: فَذَهَبْتُ
أَلْعَبُ بِخَاتَمِ النُّبُوَّةِ، فَزَبَرَنِي أَبِي، قَالَ رَسُولُ اللَّهِ
صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «دَعْهَا»، ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى
اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَبْلِي وَأَخْلِفِي ثُمَّ، أَبْلِي وَأَخْلِفِي،
ثُمَّ أَبْلِي وَأَخْلِفِي»
உம்மு காலித்
(ரலி) அறிவிக்கிறார்கள் :
இறைத்தூதர்
(ஸல்) அவர்களிடம் நான் என் தந்தையுடன் மஞ்சள் நிறச் சட்டை ஒன்றை அணிந்து சென்றேன்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘(இவள்) நன்றாயிருக்கிறாள். (இவள்)
நன்றாயிருக்கிறாள்’ என்றார்கள். நான் (நபி (ஸல்) அவர்களின் இரண்டு
புஜங்களுக்கிடையே இருந்த) நபித்துவ முத்திரையுடன் விளையாடத் தொடங்கினேன். உடனே, என்
தந்தை என்னை அதட்டினார். இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘(குழந்தை
தானே!) அவளை (விளையாட விடுவீராக!’ என்று கூறினார்கள். பிறகு இறைத்தூதர் (ஸல்)
அவர்கள் (இந்தச் சட்டையை) நீ (பழையதாக்கிக்) கிழித்து நைந்து போகச் செய்து விடு.
மீண்டும் அதைக் கிழித்து நைந்து போகச் செய்து விடு’ என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர்
அப்துல்லாஹ் பின் முபாரக் (ரஹ்), ‘அந்தச் சட்டை, நிறம்
பழுத்துப் போய் மக்களால் பேசப்படும் அளவிற்கு உம்மு காலித் (ரலி) நெடுங்காலம்
வாழ்ந்தார்கள்’ என்று கூறுகிறார்கள். மேலும், நபி
(ஸல்) அவர்கள் கூறிய ‘சனா’ (நன்றாயிருக்கிறாள்) என்னும் சொல் அபிசீனிய மொழிச்
சொல்லாகும்’ என்றும் கூறுகிறார்கள். (புகாரி:
3071)
فلمّا
انصَرَفَ رَسولُ اللهِ ﷺ قال الناسُ: يا رَسولَ اللهِ، لقد سجَدتَ في صَلاتِكَ هذه
سَجدةً ما كُنتَ تَسجُدُها، أفَشَيءٌ أُمِرتَ به، أو كان يُوحى إليكَ؟ قال: كُلُّ
ذلك لم يَكنْ، إنَّ ابني ارتَحَلَني، فكرِهتُ أنْ أُعْجِلَه حتى يَقضيَ حاجَتَه.
ஒரு நாள் நபி ஸல் அவர்கள் தொழ வைக்கும் போது ஸஜ்தாவில் நீண்ட நேரம்
இருந்து விட்டார்கள். தொழுகை முடிந்த பிறகு அதற்கான காரணத்தை நபித்தோழர்கள் கேட்ட
போது என்னுடைய இந்த குழந்தை என் மீது அமர்ந்து கொண்டது. அது அதன் தேவையை முடித்து
தானாக இறங்குவதற்கு முன்பு அவசரமாக அக்குழந்தையை இறக்கி விட நான் விரும்ப வில்லை.
எனவே தான் நீண்ட நேரம் ஸஜ்தாவில் இருந்தேன் என்று கூறினார்கள். (அபூயஃலா)
عَنْ أَبِي
قَتَادَةَ الأَنْصَارِيِّ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ
كَانَ
يُصَلِّي وَهُوَ حَامِلٌ أُمَامَةَ بِنْتَ زَيْنَبَ بِنْتِ رَسُولِ اللَّهِ صَلَّى
اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَلِأَبِي العَاصِ بْنِ رَبِيعَةَ بْنِ عَبْدِ شَمْسٍ
فَإِذَا سَجَدَ وَضَعَهَا، وَإِذَا قَامَ حَمَلَهَا»
அபூ கதாதா (ரலி)
அறிவிக்கிறார்கள் :
நபி(ஸல்)
அவர்கள் தங்களின் மகள் ஸைனப் அவர்களின் குழந்தை ‘உமாமா’வைத் (தோளில்) சுமந்த
நிலையில் தொழுதிருக்கிறார்கள். ஸஜ்தாவுக்குச் செல்லும்போது இறக்கி விடுவார்கள்.
நிற்கும்போது தூக்கிக் கொள்வார்கள். (புகாரி:
516)
2 வது ஏழு கல்வி மற்றும் ஒழுக்கம்
கொடுக்கும் பருவம்
இந்த பருவம் தான்
கற்றுக் கொள்வதற்கான சரியான சந்தர்ப்பம். ஏழு வயதிற்கு முன்னால் குழந்தை பருவமாக
இருப்பதால் அவர்களிடம் எதையும் சொல்ல முடியாது. 14 வயதை
கடந்து விட்டால் அதற்குப் பிறகு சொன்னாலும் அவர்களின் மூளையில் ஏறாது. எனவே
கற்றுக் கொடுப்பதற்கான அல்லது கற்றுக் கொள்வதற்கான வயது இந்த பருவம் அந்த வயதில்
கொடுக்க வேண்டியதை கொடுத்து விட்டால் கடைசி வரைக்கும் அது அவர்களை விட்டும்
விலகாது.
قال محمد بن
المظفر " إن سهل بن عبد الله ألتستري لما بلغ من عمره ثلاث سنين كان يسهر
الليل ينظر إلي صلاة خاله محمد بن سوار وربما قال له خاله قم يا بني . فقد شغلت
قلبي . ولما رأي خاله ذلك قال له ألا تذكر الله الذي خلقك ؟ قال كيف أذكره ؟ قال
قل الله معي " الله شاهدي " الله ناظر إلي . كل ليلة ثلاث مرات ففعل ذلك
ليالي . ثم قال له خاله . قله سبع مرات في كل ليلة . فلبث علي ذلك مدة . ثم قال له
خاله قله احدي عشر مرة في كل ليلة . ففعل ذلك زماناً قال سهل فوجدت في نفسي وقلبي
حلاوة لذلك . فأخبرت خالي فقال يا سهل من كان الله معه وشاهده وناظرا إليه كيف
يعصيه ؟!!! إياك أن تعصي الله
.
ஸஹ்ல் பின் அப்துல்லாஹ்
ரஹ் அவர்கள் கூறுகிறார்கள் : எனக்கு மூன்று வயது இருக்கும் போது எனது
மாமா இரவு நின்று வணங்குவதை பார்த்துக் கொண்டிருப்பேன். ஒரு நாள் அவர்கள் என்னைப்
பார்த்து உன்னை படைத்த இறைவனை நீ திக்ர் செய்ய வேண்டாமா என்று கேட்பார்கள். என்
இறைவனை எப்படி திக்ர் செய்வது என்று நான் கேட்ட போது, அல்லாஹ் என்னுடன் இருந்து என்
செயல்களை கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்ற பொருளைக் கொண்ட அந்த
குறிப்பிட்ட திக்ரை சொல்லிக் கொடுத்து விட்டு இதை ஒவ்வொரு நாளும் மூன்று முறை சொல்ல
வேண்டும் என்று உணர்த்துவார்கள். அவ்வாறே செய்து வந்தேன். சில நாட்கள் கழித்து
ஒவ்வொரு நாளும் இதை ஏழு முறை சொல்ல வேண்டும் என்று சொல்ல அவ்வாறே செய்தேன். சில
நாட்கள் கழித்து ஒவ்வொரு நாளும் 11 முறை சொல்ல வேண்டும் என்று உணர்த்த அவ்வாறே செய்து
வந்தேன். அவ்வாறு செய்ய செய்ய என் உள்ளத்தில் அதன் இன்பம் ஏற்பட்டு விட்டது. ஒரு
நாள் என்னுடைய மாமா என்னை அழைத்து உன்னோடு இருந்து கொண்டு உன் செயல்களை கண்கூடாக
பார்த்துக் கொண்டிருக்கிற உன் இறைவனுக்கு நீ மாறு செய்யலாமா என்று கேட்டு இறை
அச்சத்தை எனக்கு ஏற்படுத்தினார்கள்.
.
إن الحارث بن أسد المحاسبي " مر وهو
صبي بصبيان يلعبون علي باب رجـــل تمار موسر فوقف الحارث ينظر إلي لعبهم وخــرج
صاحب الدار وبيده تمرات فقال للحارث كل هـــذه التمرات يا صبي " فقال الحارث
ما خبرك فيهن ؟ قال أني بعت الساعة تمراً من رجل فسقطن من تمـــره . فقال الحارث
أتعرفه ؟ قال نعم : فالتفت الحارث إلــي الصبيان الذين يلعبون علي باب الدار .
فقال لهــم . أهذا الشيخ مسلم ؟ قالوا نعم . نعم . فمر الحــارث وتركه فاتبعه
ألتمار حتى قبض عليه . وقال والله لا تنفلت من يدي حتى تقول لي مــا في نفسك مني .
فقال الحارث يا شيخ إن كنت مسلمـاً فاطلب صاحب التمرات كما تطلب الماء إذا عطشــت
. حتى تبرأ من التبعة !! أنت مسلم وتطعـم أولاد المسلمين الحرام : فقال الشيخ
والله لاتجرت للدنيــا أبداً . أ . هـ أنباء نجباء الأنبياء صـ 195 -197
மூன்றாவது ஏழு தோழமை கொள்ளும் பருவம்
நண்பனிடம் தான்
ஒருவன் மிகவும் நெருக்கமாக இருப்பான். எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொள்வான்.
அத்தகைய நண்பர்களாக பெற்றோர்கள் இருக்க வேண்டும்.
14 வயதை கடந்து
விட்டால் வெளி உலகத்திற்கு வர ஆரம்பித்து விடுவார்கள். அப்போது அவர்கள் நிறைய
பிரச்சனைகளையும் சவால்களையும் சந்திக்கிறார்கள். மட்டுமல்ல, குழந்தைப்
பருவத்தில் ஏற்படுகின்ற பிரச்சனைகள் அவர்கள் உள்ளத்தில் நீங்கா வடுவை ஏற்படுத்தி
விடுகிறது.
மோசமான குழந்தை
பருவத்தை அனுபவித்த நபர்களுக்கு 13
வகையான மனநல பிரச்சனைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தீவிரமான மன
அழுத்தம்,
அதீதமான கோபம்,
யாரிடமும் பழக
முடியாத தன்மை,
எபோதுமே
பதற்றமாக இருப்பது,
மாறிக் கொண்டே
இருக்கும் மனநிலை, போன்ற பாதிப்புகள் இன்றைக்கு அதிகம் ஏற்படுகிறது.இதுபோன்ற பிரச்சனைகளுக்கு
காரணம் பெற்றோர்கள்.
இன்றைக்குள்ள பெற்றோர்கள் பெரும்பாலும் குழந்தைகளோடு
நெருங்குவதில்லை.குழந்தைகள் தங்களிடம் சுதந்திரமாக பேசுவதற்கு இடம் தருவதில்லை.
இதனால் குழந்தைகள் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். குறிப்பாக பாலியல் பிரச்சனைகளை
அதிகம் சந்திக்கிறார்கள்.
கன்யா பாபு என்ற
சமூக ஆர்வளர் கூறுகிறார் ;
சிறுவயதில்
தனக்கு நடந்த பாலியல் சீண்டல் தான், இந்த துறையில்
தன்னை ஈடுபட வைத்தது என்கிறார் அவர். "என் சிறு வயதில், எனக்கு
ஒரு சம்பவம் நடந்த போது,
பெற்றோரிடம் கூற முடிய வில்லை. அவர்களிடம் இது குறித்து பேச
எனக்கு நிறைய காலம் எடுத்தது. அது ஏன் என்று யோசித்த போது தான்,
பெற்றோருக்கும், குழந்தைகளுக்கும் இருக்கும் பெரிய
இடைவெளி புரிந்தது. அந்த இடைவெளியை பெற்றோர் தான்
குழந்தைகளிடம் பேசி குறைக்க வேண்டும். அதுவே நாளை அவர்களுக்கு ஏதேனும் நேர்ந்தால்,
துணிச்சலுடன் வந்து பெற்றோரிடம் கூற வைக்கும்," என்கிறார்.
يقول الدكتور
عبد الحميد هاشم أستاذ الطب النفسي في جامعة القاهرة: (إن العلاقة بين الأبناء
والآباء هي المسؤولة عن تنشئة طفل سليم نفسيًّا، فكلما توطَّدت هذه العلاقة أصبح
أكثر ثباتًا في مواجهة الحياة، ويدعم ثقته بنفسه، وكلما ضعفت أدت إلى كبح وإعاقة
النمو النفسي الشخصي
எகிப்தின்
தலைநகர் கெய்ரோவிலுள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் மனநலத் துறை ஆசிரியராக இருந்த
டாக்டர், அப்துல்
ஹமீது ஹாஷிம் கூறுகிறார்; ஒரு
குழந்தை மன ரீதியான பாதிக்குள்ளாமல் ஆரோக்கியமாக வளர்வது அந்த குழந்தைக்கும் அதன்
பெற்றோருக்கும் இடையில் உள்ள தொடர்பைப் பொருத்தது. பெற்றோருக்கும்
குழந்தைகளுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இல்லையென்றால் குழந்தைகள் மன ரீதியான
பிரச்சனைகளுக்கு உள்ளாவார்கள் என்று குறிப்பிடுகிறார்.
No comments:
Post a Comment