Showing posts with label உம்மத். Show all posts
Showing posts with label உம்மத். Show all posts

Thursday, February 26, 2015

உம்மத்தை மறவாத உம்மி நபி


لقد جاءكم رسول من انفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رءوف رحيم


இறை நம்பிக்கையாளர்களே... நிச்சயமாக உஙகளிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கிறார். நீங்கள் துன்பத்திற்குள்ளாகி விட்டால் அது அவருக்கு மிக்க வருத்தத்தை கொடுக்கிறது. அன்றி உங் (கள் நன்மைகளையே பெரிதும் விரும்புகிறார். இன்னும் இறை நம்பிக்கையாளார்கள் மீது மிக்க அன்பும், இரக்கமும் உடையோராகவும் இருக்கிறார்.  திருக்குர்ஆன். 9-128.)

நம்மைப் படைத்த ஏகனான அல்லாஹுத்தஆலா நம் மீது எல்லையில்லா அருளாளனாக நிகரில்லா கிருபையாளனாக எண்ணிலடங்கா அன்பாளனாக இருக்கிறான்.தாயைவிட மேலான பாசம் கொண்ட பேரருளாளன் அல்லாஹ், நரகத்தின் வாசல்களை ஏழாகவும், சுவனத்தின் வாயில்களை எட்டாகவும் அமைத்து தன் அருள் விசாலத்தை காட்டி யுள்ளான்.அல்லாஹ் நமக்கு செய்திருக்க அருள்கொடைகளை  சொல்லி முடிக்க நாவுகளில்லை. எழுதி முடிக்க வார்த்தைகளில்லை.