Tuesday, October 1, 2013

ஹஜஜின் தத்துவங்கள்,பயன்களும்

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                         
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                       மற்ற நான்கு கடமைகளுக்கு இல்லாத சிறப்புக்களும், மாண்புகளும், செய்யப்படுகின்ற ஒவ்வொரு அமலும் ஒவ்வொரு தத்துவங்களை நமக்குத் தருகிறது. 
ஆரம்பமாக அந்த ஹஜ் பயணத்திற்காக நாம் குறந்தது இரண்டு மாதங்களுக்கு முன்பிருந்தே முன் ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்து விடுகிறோம்.இதேபோன்று முன் ஏற்பாடுகளை இதை விட மிகப்பெரிய பயணமாக இருக்கிற மறுமைக்காக தயார் செய்திருக்கிறாயா?என்று நம் ஒவ்வொருவரையும் பார்த்து ஹஜ் கேட்கிறது.


1-நான் என்ற கர்வம்,என்னை மிஞ்சிய ஆளில்லை என்ற தற்பெருமை, சொத்துக்களையும்,செல்வங்களையும் வைத்து பெருமையடிக்கிற பலருக்கும் நீ என்ன தான் பெருமையடித்தாலும் கடையியில் உனக்கு கிடைப்பது இந்த இரண்டு ஆடைகள் தான் என்பதை மறந்து விடாதே என்ற பாடத்தை இஹ்ராம் நமக்கு கற்றுத்தருகிறது 

2-ஒரு நாளைக்கு ஐந்து முறை நாம் அல்லாஹ்வின் அழைப்பை நிராகரித்துக் கொண்டிருக்கிறோம்.ஆனால் உன் தவனை நெருங்குகிறபோது அப்போது என் அழைப்பிற்கு நீ பதில் கொடுத்துத் தானே ஆக வேண்டும் என்ற பாடத்தை தல்பியா நமக்கு கற்றுத் தருகிறது. 

3-ஒரு முஸ்லிமின் உள்ளம் எப்போதும் அல்லாஹ்வைத்தான் சுற்றி வர வேண்டும் என்பதை தவாஃப் நமக்கு கற்றுத் தருகிறது. 

4- ஒரு முஸ்லிம் எப்போதும் அல்லாஹ்வின் அருளை நோக்கியும்,ரஹ்மத்தை நோக்கியும்,மக்ஃபிரத்தை நோக்கியமே ஓட வேண்டும் என்பதை ஸஈ நமக்கு உணர்த்துகிறது.

 5- ஒரு நாள் இதே போன்று ஒரு மைதானத்தில் அல்லாஹ்வுக்கு முன் நிற்க வேண்டும் என்பதை அரஃபா நமக்கு உணர்த்துகிறது.

 6-உள்ளத்திலிருந்து தேவையில்லாத விஷயங்களை தூக்கி எறிய வேண்டும் என்பதை கல் எறிதல் நமக்கு உணர்த்துகிறது.

 7- நம் உள்ளம் முழுக்க அல்லாஹ்வின் அன்பை நிறப்ப வேண்டும் என்பதை ஜம்ஜம் நமக்கு உணர்த்துகிறது.

 8- அல்லாஹ்விற்காக உயிரையும் கொடுக்க தயாராக இருக்க வேண்டும் என்பதை குர்பானீ நமக்கு உணர்த்துகிறது. 

இப்படி ஒவ்வொரு அமலும் நமக்கு நிறைய தத்துவங்களைத் தருகிறது. ஹஜ் செய்பவர்கள் ஒவ்வொரு அமலையும் உணர்ந்து செய்கிற போது இந்த தத்துவங்களை உணர்ந்து கொள்வார்கள். அந்த பாடங்கள் வாழ்க்கையில் நல்ல பயனைக் கொடுக்கும். அதே போன்று அது ஹாஜிகளுக்கு நிறைய பயன்களை கொடுக்கிறது.

 1-அவர்களின் பாவங்களை கழுவி அவர்களை பரிசுத்தப்படுத்துகிறது,அவர்களின் தீய எண்ணங்களைப் போக்கி,உலக ஆசைகளை விட்டும் அவர்களை தூயாமைப்படுத்தி அவர்களின் ஆன்மாவை சுத்தப்படுத்துகிறது.


 حَدَّثَنَا آدَمُ حَدَّثَنَا شُعْبَةُ حَدَّثَنَا سَيَّارٌ أَبُو الْحَكَمِ قَالَ سَمِعْتُ أَبَا حَازِمٍ قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ
سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ حَجَّ لِلَّهِ فَلَمْ يَرْفُثْ وَلَمْ يَفْسُقْ رَجَعَ كَيَوْمِ وَلَدَتْهُ أُمُّهُ وقال صلى الله عليه وسلم " من حج البيت فلم يرفث ولم يفسق خرج من ذنوبه كيوم ولدته أمه {ibnu kaseer} 

 " وقال أيضاً صلى الله عليه وسلم " ما رؤي الشيطان في يوم أصغر ولا أدحر و أحقر ولا أغيظ منه يوم عرفة " وما ذلك إلا لما يرى من نزول الرحمة وتجاوز الله سبحانه عن الذنوب العظام إذ يقال " إن من الذنوب ذنوباً لا يكفرها إلا الوقوف بعرفة " {ihya} 

 2-அவர்களின் ஆன்மா தூய்மையாகிவிட்டதினால் அவர்கள் எதைக் கேட்டாலும் அல்லாஹ் கொடுக்கிறான்.

 وقال صلى الله عليه وسلم " حجة مبرورة خير من الدنيا وما فيها وحجة مبرورة ليس لها جزاء إلا الجنة " وقال صلى الله عليه وسلم " الحجاج والعمار وفد الله عز وجل وزواره إن سألوه أعطاهم وإن استغفروه غفر لهم وإن دعوا استجيب لهم وإن شفعوا شفعو ihya. 

 3-அவர்களுக்கு மட்டுமல்ல அவர்கள் யாருக்கெல்லாம் மன்னிப்பு தேடுகிறார்களோ அவர்களுக்கும் பாவ மன்னிப்பு கிடைக்கிறது. Ihya

 وقال صلى الله عليه وسلم " اللهم اغفر للحاج ولمن استغفر له الحاج 

4-சமத்துவத்தை போதிக்கிறது.கிழக்கே சீனா முதல் மேற்கே அமெரிக்கா வரை உலகம் முழுக்க பல மொழியைச்சார்ந்த பல நிறத்தைச்சார்ந்த பல நிலையைச்சார்ந்த மக்கள் அங்கே வருகிறார்கள். வெளியே எவ்வளவுதான் நிற வெறி குல வெறி மொழி வெறி இருந்தாலும் அங்கே வந்தவுடன் எல்லாவற்றையும் மறந்து தோளோடு தோள் நின்று அமல்களைச் செய்கிறார்கள்.எந்த பிரிவினையையும் பார்ப்பதில்லை.என்கின்ற போது ஹஜ் பயணம் எந்தளவு சமத்துவத்தை கற்றருத் தருகிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம். அந்த அரஃபா வில் வைத்துத்தான் –அரபியை விட அஜமிக்கோ அடமியை விட அரபிக்கோ எந்த சிறப்பும் கிடையாது என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

 5-அல்லஹ்வின் கோபத்தைப் போக்குகிறது. கஃபா ஏன் கட்டப்பட்டது என்பதற்கு சூஃபியாக்களில் சிலர் இப்படியும் ஒரு விளக்கம் சொல்வார்கள். குழப்பம் செய்யக்கூடிய மனிதனை ஏன் படைக்கிறாய் என்று மலக்குமார்கள் அல்லாஹ்விடம் எதிர் கேள்வி கேட்டபோது அல்லாஹ்வின் கோபம் ஏற்பட்டது.அப்போது அவர்கள் அல்லாஹ்வின் கோபத்தை தனித்து திபருப்தியைப் பெறுவதற்காக ஏழு நாட்கள் அர்ஷை சுற்றி வந்தார்கள் அதன் பிறகு அல்லாஹ் திருப்தி கொண்டான். அப்போது அல்லாஹ் அந்த மலக்குகளிடம் உலகத்தில் எனக்கொரு வீட்டை கட்டுங்கள் என் அடியார்கள் பாவம் செய்து என் கோபம் ஏற்பட்டால் அதை வலம் வந்து என் திருப்தியைப் பெற்றுக்கொள்வார்கள் என்று கூறினான். {நுஜ்ஹத்} 6-கியாமத்தில் ஈடேற்றத்தைப் பெற்றுத்தரும். கியாமத்தில் கஃபாவானது அல்லாஹ்விடம் சில மனிதர்களுக்கு பரிந்துரைக்க அனுமதி கேட்கும். யா அல்லாஹ் மூன்று நபர்களுக்கு நான் பரிந்துரைக்கிறேன். 1-என்னை வலம் வந்தவர். 2-என்னை சந்திப்பதற்காக வீட்டை விட்டு புறப்பட்டு ஏதோ தடையினால் என்னை வந்து சேராதவர். 3-என்னிடம் வர வேண்டும் என்ற ஆசை நிறைய இருக்கும் ஆனால் அதற்கு சந்தர்ப்பம் வாய்க்கப்பெறாதவர். {நுஜ்ஹத்} 

 7-அல்லாஹ்வின் ரஹ்மத் கிடைக்கிறது.

 وروى ابن عباس رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم أنه قال " ينزل على هذا البيت في كل يوم مائة وعشرون رحمة ستون للطائفين وأربعون للمصلين وعشرون للناظرين {ihya}

 8-நிறைய நன்மைகளை அள்ளித்தருகிறது.

 وروى ابن عباس عن النبي صلى الله عليه وسلم أنه قال " صلاة في مسجد المدينة بعشرة آلاف صلاة وصلاة في المسجد الأقصى بألف صلاة وصلاة في المسجد الحرام بمائة ألف صلاة {ihya}. 

 9-மலக்குமார்களின் முஸாஃபஹாவைப் பெற்றுத்தரும். 

 وقال مجاهد وغيره من العلماء: إن الحجاج إذا قدموا مكة تلقتهم الملائكة فسلموا على ركبان الإبل وصافحوا ركبان الحمر واعتنقوا المشاة اعتناقاً. {Ihya}وقال الحسن: من مات عقيب رمضان أو عقيب غزو أو عقيب حج مات شهيداً 

இவ்வளவு சிறப்புக்களைத்தருகின்ற ஹஜ்ஜை நாம் இன்றைக்கு அலட்சியப்படுத்துகிறோம்.எல்லா வசதியிருந்தும் அதை நிறைவேற்றாமல் இருக்கிறோம். ஆனால் அந்த காலத்தில் எந்த வசதியும் இல்லமலேயே புறப்படுவார்கள்.

 இப்னு சீரீன் ரஹ் அவர்கள் ஹரமில் அமர்ந்திருப்பார்கள் அப்போது ஒருவர் இப்னு சீரீன் அவர்களே நீங்கள் எங்கிருந்து வருகிறீர் என்று கேட்ட போது நான் ரொம்ப தூரமான ஈராக்கிலிருந்து வருகிறேன் என்றார்கள்.அப்படியானால் நீங்கள் ஹரமுக்கு ரொம்ப நெருக்கத்தில் அல்லவா இருக்கிறீர் என்று அந்த மனிதர் கூறினார்.ஈராக்கையே பக்கம் என்கிறீர்களே உங்களது ஊர் எது என்று கேட்டார்கள். அதற்கவர் நான் ரஷ்யாவிலிருந்து வருகிறேன் நான் என் வீட்டை விட்டு புறப்பட்டு ஐந்து வருடங்கள் ஆகிறது என்றார். எப்படியென்றால் சுமார் ஒரு 10 நாட்களுக்குத் தேவையான பயணச்சாமான்களை மட்டும் வைத்துக் கொண்டு கிழம்புவார்கள்.அந்த பொருள் முடிந்த பிறகு அங்கே ஏதாவது வேளை செய்து கொஞ்சம் காசு சேர்ந்த பிறகு மறு படியும் பயணத்தை தொடர்வார்கள் இப்படியே பயணம், வேளை,பயணம்,வேளை என்றே மக்காவிற்கு வந்துவிடுவார்கள்.இதனால் தான் ஐந்து வருடங்களும் ஆகும்.இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு ஹஜ்ஜிற்கு வருவார்கள்.இன்றைக்கு எல்லா வதசியும் இருந்தும் கிழம்புவதில்லை.


நமக்கு வழங்கப்பட்டிருக்கிற இளமையும்,உடல் வலிமையும்,பொருளாதாரமும்,நமக்கு கிடைக்கிற ஓய்வும் நமக்கு அல்லாஹ் வழங்கியிருக்கிற மிகப்பெரிய நிஃமத்துகள்

 عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ
قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نِعْمَتَانِ مَغْبُونٌ فِيهِمَا كَثِيرٌ مِنْ النَّاسِ الصِّحَّةُ وَالْفَرَاغُ {புகாரி}

எனவே அது கிடைக்கிற போது அதை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இல்லையெனில் மிகப்பெரிய நஷ்டவாளிகளாக ஆகிவிடுவோம்.


சந்தர்ப்பங்களும்,வாய்ப்புகளும் எல்லா நேரத்திலும் கிடைப்பதில்லை.எனவே கிடைக்கிறபோது அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.அவ்வாறு பயன்படுத்தியவர்கள்தான் வெற்றி பெற்றார்கள்.

நல்ல வாய்ப்பை பயன் படுத்திய உக்காஷா ரலி அவர்கள்

عن ابن عباسٍ رضي الله عنهما قال: قال رسول الله صلى الله عليه وعلى آله وسلم: عرضت علي الأمم، فرأيت النبي ومعه الرهيط، والنبي ومعه الرجل والرجلان، والنبي وليس معه أحدٌ إذ رفع لي سوادٌ عظيمٌ فظننت أنهم أمتي، فقيل لي: هذا موسى وقومه ولكن انظر إلى الأفق، فنظرت فإذا سوادٌ عظيمٌ، فقيل لي: انظر إلى الأفق الآخر، فإذا سوادٌ عظيمٌ، فقيل لي: هذه أمتك، ومعهم سبعون ألفاً يدخلون الجنة بغير حساب ولا عذابٍ ثم نهض فدخل منزله، فخاض الناس في أولئك الذين يدخلون الجنة بغير حسابٍ ولا عذابٍ، فقال بعضهم: فلعلهم الذين صحبوا رسول الله صلى الله عليه وسلم، وقال بعضهم: فلعلهم الذين ولدوا في الإسلام، فلم يشركوا بالله شيئاً - وذكروا أشياء - فخرج عليهم رسول الله صلى الله عليه وسلم فقال: ما الذي تخوضون فيه ؟ فأخبروه فقال: هم الذين لا يرقون، ولا يسترقون ولا يتطيرون، وعلى ربهم يتوكلون فقام عكاشة بن محصنٍ فقال: ادع الله أن يجعلني منهم، فقال: أنت منهم ثم قام رجلٌ آخر فقال: ادع الله أن يجعلني منهم، فقال: سبقك بها عكاشة متفقٌ عليه.
[Riyalussaliheen ,]

வாய்ப்பை பயன்படுத்திய கிழவி.

- حدثنا محمد بن يعقوب ، نا يعقوب بن إسحاق ، نا الحسن بن عنبسة ، ثنا محمد بن كثير الكوفي ، عن أبي العلاء الخفاف ، عن المنهال بن عمرو ، عن حبة العرني ، عن علي قال : كان النبي صلى الله عليه وسلم إذا سئل شيئا فأراد أن يفعله قال : « نعم » ، وإذا أراد أن لا يفعل سكت ، وكان لا يقول لشيء : لا ، فأتاه أعرابي ، فسأله ، فسكت ، ثم سأله فسكت ، ثم سأله ، فقال له النبي صلى الله عليه وسلم كهيئة المنتهر : « سل ما شئت يا أعرابي » ، فغبطناه ، فقلنا : الآن يسأل الجنة ، فقال الأعرابي : أسألك راحلة (1) ، فقال له النبي صلى الله عليه وسلم : « لك ذاك » ، ثم قال : « سل » قال : أسألك زادا (2) قال : « ولك ذاك » قال : فتعجبنا من ذلك ، فقال النبي صلى الله عليه وسلم : « كم بين مسألة الأعرابي وعجوز بني إسرائيل » ثم قال : « إن موسى لما أمر أن يقطع البحر فانتهى إليه ، فضربت وجوه الدواب ، فرجعت ، فقال موسى : ما لي يا رب ، قال له : إنك عند قبر يوسف ، فاحتمل عظامه معك ، وقد استوى القبر بالأرض ، فجعل موسى لا يدري أين هو ، قالوا : إن كان أحد منكم يعلم أين هو ، فعجوز بني إسرائيل لعلها تعلم أين هو ، فأرسل إليها موسى عليه السلام قال : هل تعلمين أين قبر يوسف عليه السلام ؟ قالت : نعم قال : فدليني عليه ، قالت : لا والله حتى تعطيني ما أسألك ، قال : ذاك لك ، قالت : فإني أسألك أن أكون معك في الدرجة التي تكون فيها في الجنة . قال : سلي الجنة ، قالت : لا والله أن أكون معك ، فجعل موسى يرادها ، فأوحى الله تبارك وتعالى إليه : أن أعطها ذلك ، فإنه لا ينقصك شيئا ، فأعطاها ودلته على القبر ، فأخرج العظام وجاوز البحر » « لا يروى هذا الحديث عن علي رضي الله عنه إلا بهذا الإسناد ، تفرد به : يعقوب بن إسحاق القلوسي »thabrani7991

வாய்ப்பை பயன்படுத்திய அபூஹுரைரா ரலி அவர்கள்.

عن إسماعيل بن أمية ، أن محمد بن قيس بن مخرمة ، حدثه ، أن رجلا جاء زيد بن ثابت فسأله عن شيء ، فقال له زيد : عليك بأبي هريرة ، فإنه بينا أنا وأبو هريرة وفلان في المسجد ذات يوم ندعو الله تعالى ، ونذكر ربنا خرج علينا رسول الله صلى الله عليه وسلم حتى جلس إلينا ، قال : فجلس وسكتنا ، فقال : « عودوا للذي كنتم فيه » . قال زيد : فدعوت أنا وصاحبي قبل أبي هريرة ، وجعل رسول الله صلى الله عليه وسلم يؤمن على دعائنا ، قال : ثم دعا أبو هريرة فقال : اللهم إني أسألك مثل الذي سألك صاحباي هذان ، وأسألك علما لا ينسى ، فقال رسول الله صلى الله عليه وسلم : « آمين » ، فقلنا : يا رسول الله ، ونحن نسأل الله علما لا ينسى فقال : « سبقكما بها الدوسي
المستدرك على الصحيحين

எனவே நாம் நமது நல்ல சந்தர்ப்பங்களை பயன்படுத்தி விரைவில் ஹஜ்ஜிக்காக புறப்படுவோம்.அல்லாஹ் நம் எல்லோருக்கும் அந்த புனிதம் நிறைந்த கஃபாவை மீண்டும் மீண்டும் தரிசிக்கும் பாக்கியத்தை நல்குவானாக!

No comments:

Post a Comment