Wednesday, December 18, 2013

இங்லிஷ் தமிழ் உகைல் ரலி நிகழ்வு

    BISMILLAH-HIR-RAHMAN-NIR-RAHIMUkail  Ibnu  Abeethalib(rali)  says: once  i   had   an   opportunity  to   journey  with  Rasul(sal)  I  gained   three   valuable  messages  from  him  in  this  journey.  The  impact  of   there   three   messages      made    me  to  realise   the   beauty   and  truth  of  islam.   Let   us  known   about  the  messages
1st  message :-        

during  that   journey  Rasul(sal) wanted   to  do  his  personal  needs.  so  he  took   a  break  on  his  way. it  was  a  path   lovered   by   trees   on  both   sides .   By   the  time  he  called  me  and  said,           Ukail   tells  the  trees   that  i am  going   do   my  personal  needs.     After   that  i  should  do  my   'olu' . so  you  ask  the  trees  to  cover  me
     i  was   surprised  by  his  message  because  i  was   asked  to  speak   with  trees  But  i  had  to  obey  him so  i  went  and  delivered   his   message  to  the  trees  .Even  before  finishing   my  message  , All  the   trees   plugged  their  roots    themselves   and   came  to  cover   him  After   finishing   their   duties   they  returned    to  their   own  place
                                     SUBUHANALLAH  !

2nd  message  :-      

After  this  incident   we  continued  our  journey  on   the  way  i  felt  very  thirsty.   so   i   searched   for   water   .  But   i   could    not     find   out   At  that   , Rasul(sal)  came  to  me  and  asked  to  go  the  nearest     mountain.  he  wanted    me   to    convey  his   salam  to  the  mountain  .then   he   asked  me  to   deliver   a  message  to  the  mountin  the   message  was,      " If    you  have   a  water   to  drink,  please     give    us" i   also  informed    the    mountain   said  a   big   sound  and   started    to  speak  with   me  it  saidUkail           The    kuran   says  ,The  true   followers  of  islam   you   save  youerself    and    your    family   from   the   fire    of   hell.   Humanbeings   and  stones   are   the   fules  of  this   fire.After  knowing   this,    i  feared  that   i   would    also   be  fired  .   so  i  cried  a lot  for  a   long   period.  so    i     lost   all  my   water  in  the  name   of    tears .  Now   i   became   dry.  i   cannot   help  you   inform   this   to  Rasul(sal)
                                                 SUBUHANALLAH!


3rd  message :-        

 on  the  way    we    happaned      to  meet  a  camel.  it  was  seeking   the    help   of   Rasul(sal) Within  a   few   second  a   wild   Arabic  man  came  with  a  sward  and    saw   a  camel    Rasul(sal) stopped   him   and     asked  what  would   you   do  with   this   sword?  He    answered   that  he  had  brought  the    camel  for   huge  price,  But  it  was  stubbon  to  obey,  so  he  had  decided  to  use  the  flesh  of  the   camel  Now   Rasul...  asked    the   camel  ,  why    do  you   dis   obey   you  owner?   it  replied   i     disobeyed  them   because    they    would    never    do   Isha  namas ,  it    is    sure   they    will  be  punished.    so   i     feared  that  i  would       also     suffer .     Because    i  live   with  them.  this   is  the  reason  for  my    action. if  the  promise  to  do    Isha  namas,   i  will   obey  all   his   orders  Now  the  wild  man  promised    Rasul(sal) to  do  Isha   namas. After  that  the  camel    went    happily    with   wild    Arabic  man
                                                SUBUHNALLAH !
Evidence:     Dhurrathun  - Nasiheen                                     

உகைல் பின் அபீ தாலிப் ரலி அவர்கள் கூறுகிறார்கள்;
ஒரு தடவ எனக்கு  கண்மனி நாயகம் ஸல் அவங்களோட பயணம் செய்ற வாய்ப்பு கெடச்சிச்சி. அது எனக்கு சிறந்த அனுபவமாவும் இருந்துச்சி.அதில மூனு விஷயங்கள பாத்தேன்.அந்த மூனு விஷயமும்தான் என்னோட இஸ்லாம் உறுதியாகுறதுக்கு காரணமாக அமைச்சிச்சி அப்டின்னு சொல்றாங்க          

முத நிகழ்வு  :-

அந்த பயணத்தில ஒரு இடத்தில நபி ஸல் அவங்க தன் சுய தேவைய பூர்த்தி செய்ய விரும்புனாங்க.அங்கே சில மரங்கள் இருந்துச்சி. அப்ப நபி ஸல் அவங்க என்னை கூப்புட்டு உகைலே நான் ஒழு செய்யனும்.இங்க மறைவான இடம் எதுவும் இல்ல.அதனால அந்த மரத்துகிட்ட போய் அல்லாஹ்வுடைய தூதர் அவங்க  தன்ன மறைக்கிறதுக்காக உன்ன கூப்புடுறாங்கன்னு சொல்லு அப்டின்னு சொன்னாங்க.நானும் அவங்க சொன்ன மாதிரியே சொன்னேன். ஆனா சொல்லி முடிக்கிறதுக்குள்ள என்ன ஆச்சர்யம் அங்க இருந்த மரங்கள் லாம் அப்படியே வேரோடு பிடுங்கி வந்து நபி ஸல் அவங்கள சூழ்ந்துடுச்சி.நபி ஸல் அவங்க தன் தேவையை முடிச்ச பிறகு மறுபடியும் அந்த மரங்கள் தங்களோட இடங்களுக்கு திரும்பிப் போயிடுச்சி.                                                                                        

இரண்டாவது நிகழ்வு :-

அங்கயிருந்து கிழம்பி நாங்க பயணத்தைத் தொடர்ந்தோம்.இடையில எனக்கு கடுமையான தாகம் ஏற்பட்டுச்சி.எங்கயாச்சும் தண்ணீ இருக்குதான்னு தேடுனேன். ஆனா எங்கயும் கிடைக்கல.அப்ப நபி ஸல் அவங்க என்னை கூப்புட்டு அந்த மலைக்கு மேல ஏறு.ஏறி அந்த மலைக்கு நான் சொன்னதா ஸலாம் சொல்லிட்டு உன் கிட்ட தண்ணீ இருந்தா எனக்கு தான்னு கேளு அப்டின்னு சொன்னாங்க. உடன நான் மலையில ஏறி நபி ஸல் அவங்க சொன்ன மாதிரி சொல்றதுக்குள்ள என்ன ஆச்சர்யம் அந்த மலை என் கிட்ட சத்தமாக பேச ஆரம்பிச்சிச்சி.                                     
உகைலே  மனிதர்களும்,கற்களும் எறிகொல்லிகளாக இருக்கக்கூடிய நரகத்தை விட்டும் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்ற வசனத்தை எப்ப அல்லாஹ் இறக்கி வச்சானோ அந்த நேரத்திலிருந்தே நானும் அந்த எறி கொல்லியாக ஆயிடுவோனோ அப்டிங்ற பயத்தில அழுதுகிட்டே இருக்குறேன்.அப்டியே அழுது அழுது என்கிட்ட இருந்த  தண்ணீ லாம் வத்திப்போச்சி அதனால உங்களுக்கு கொடுக்குறதுக்கு என்கிட்ட தண்ணீ இல்ல அப்டின்னு சொல்லிச்சி.                                                                                     

மூனாவது நிகழ்வு :-    
நாங்க அங்கிருந்து பயணத்தைத் தொடர்ந்தோம்.இடையில ஒரு ஒட்டகத்த பாத்தோம்.அந்த ஒட்டகம் நபிட்ட  வந்து எனக்கு பாதுகாப்பு வேணும் அப்டின்னு சொல்லி உதவி தேடிச்சி. கொஞ்ச நேரத்தில காட்டரபி ஒருத்தர் கையில வாளோட அந்த ஒட்டகத்த தொரத்திக் கிட்டு வந்தார். அதப்பாத்தவுடன நபி ஸல் அவங்க ஏம்பா அந்த ஒட்டகத்த வெட்ட வர்ர அப்டின்னு கேட்டாங்க. அதுக்கு அந்த காட்டரபி நான் இந்த ஒட்டகத்த அதிக விலை கொடுத்து வாங்குனேன். ஆனால் அது எனக்கு கட்டுப்படுறதில்லை.அதனால் அத அறுத்தாவது சாப்பிடலான்னு சொல்லி தான் அத தொறத்திட்டு வர்ரேன்னு சொன்னார். அதக்கேட்ட நபி ஸல் அவங்க நீ ஏன் உன் எஜமானனுக்கு கட்டுப்படுறதில்லை அப்டின்னு  அந்த ஒட்டகத்தப்பாத்து கேட்டாங்க. அப்ப என்ன ஆச்சர்யம் அந்த ஒட்டகமே பேசுச்சி.என் எஜமான் வசிக்கிற அந்த ஊர்வாசிங்க யாரும் தினமும் இஷா தொழுகை தொழுகுறதே இல்ல. அதனால அல்லாஹ்வோட வேதன வந்து அந்த வேதனையில நானும் மாட்டிக் கொள்வேனோன்னு பயப்படுறேன். அதனால தான் அவனுக்கு கட்டுப்படாம விரண்டோடுறேன்.அவங்க தினமும் இஷா தொழுவதாக என் கிட்ட ஒப்பந்தம் செய்தா நானும் அவனுக்கு கட்டுப்படுவேன் அப்டின்னு ஒப்பந்தம் செய்றேன் இல்லன்னா அவங்கூட போவ மாட்டேன் அப்டின்னு சொல்லிச்சி.அதுக்கு பிறகு அந்த காட்டரபியிட்ட இனிமே தொழுகைகள விடமாட்டேங்ற வாக்குறுதியை வாங்கி கிட்டு அந்த ஒட்டகத்த நபி ஸல் அவங்க அவன்ட ஒப்படச்சாங்க. இந்த மூனு நிகழ்ச்சியும் தான் என் ஈமான் அதிகமாவதற்கு காரணமா இருந்தது என்று உகைல் பின் அபீ தாலிப் ரலி அவர்கள் கூறுகிறார்கள். அன்புத் தாய்மார்களே இதக்கேட்டுட்டு உங்களோட ஈமானும் அதிகமாகியிருக்கும் என்று நம்பி விடை பெறுகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்.
      


No comments:

Post a Comment