Monday, February 24, 2014

குடும்ப மகிழ்ச்சிக்கு பெரிதும் காரணம் ஆண்களா? பெண்களா?

                                                                                                                                

                ஆண்களே!...1


அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்]. அல்ஹம்து லில்லாஹ். அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன். வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா சய்யிதினா முஹம்மதின் வஆலிஹி வஸஹ்பிஹி அஜ்மஈன்.
     
அன்பிற்குறிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! பாசத்திற்குறிய தாய்மார்களே! ஆண் சமூகத்தை உயர்த்திப் பேச வந்திருக்கும் கேம்பல் இளம் சிங்கங்களே! எங்களை எதிர்த்து பேச வந்திருக்கும் குட்டிப் பூனைகளே! நியாயத்திற்கு கட்டுப்பட்டு தீர்ப்பு வழங்கும், கருப்பா இருந்தாலும் வெள்ளை மனம் கொண்ட எனதருமை நடுவர் அவர்களே!
உங்கள் அனைவருக்கும் என் ஸலாமைக் கூறி என் வார்த்தைகளை துவங்குகிறேன். அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்].           

குடும்ப மகிழ்ச்சிக்கு பெரிதும் காரணம் ஆண்களே! என்று நான் வாதாட வந்திருக்கிறேன்.அன்பான நடுவர் அவர்களே! எதிரணியிலிருந்து ஒரு கத்திரிக்கா வந்துச்சு. பெரிய கத்திரிக்கா மாதிரி பேசிச்சு.நீங்கள் லாம் குர்ஆன்,ஹதீஸ படிக்கல,ஒழுங்கா மதரஸாவுக்கு வரல அப்டின்னு கத்துச்சு.

நடுவர் அவர்களே! தவல தன் வாயால் கெடும்னு ஒரு பலமொழி சொல்லுவாங்க கேள்விப்பட்டிருக்கீங்களா? அந்த பலமொழி உலகத்துல யாருக்கு பொருந்துதோ இல்லையோ நம்ம எதிரணி கத்திரிக்காவுக்கு கரைக்டா பொருந்தும். எப்டின்னு கேக்குறீங்களா ? அவ மதரஸாவுக்கு ஒழுங்கா வர்ரதே இல்லை. அவ வந்தா தான யாரு வர்ரா..... யார் வரலன்னு தெரியும். தூங்குறவனுக்கு...... உலகமே இருட்டாதான் தெரியும். அதனால விடியவே இல்லன்னா அர்த்தம் ? அந்த மாதிரி வராதவனுக்கு யாருமே வராத மாதிரி தான் தெரியும். அதனால யாருமே வரலன்னா அர்த்தம். நீ முதல்ல ஒழுங்கா வா அப்பறம் எங்களப்பத்தி சொல்லு என்ன.......

ஆம்பளப் பசங்களாம் ரொம்ப மோசம், அவங்களால பெத்தவங் களுக்கு நிம்மதி இருக்காது.சந்தோஷம் இருக்காது,அவங்களால பெத்தவங்களுக்கு தலகுனிவு தான் ஏற்படும் அப்டி இப்டின்னு வாயிக்கு வந்த படி உளருச்சு. நடுவர் அவர்களே! அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்த ஒரு சில சம்பவங்கள மட்டும் வச்சி ஆம்பளைங்கள மொத்தமா மட்டம் தட்ட முடியாது. எங்கள மாதிரி, ஏன் உங்கள மாதிரி பெத்தவங்களுக்கு பெருமய சேக்குற, ஆண்மகன்களும் இருக்கத்தான செய்றாக!

நடுவர் அவர்களே! உண்மையிலேயே பெத்தவங்க மானத்த காப்பாத்துறது, பெத்தவங்க நம்பிக்கைய காப்பாத்துறது, பெத்தவங்களுக்கு எல்லா வகையிலும் மகிழ்ச்சிய கொடுக்குறது நாங்க தான் அப்டிங்கறத இப்ப நான் நிரூபிக்கிறேன். அதுக்கு பிறகு இந்த மூனும் எந்த மூஞ்ச வச்சிட்டு இங்க உக்காருதுங்கன்னு பாப்போம்.

நடுவர் அவர்களே! பெத்தவங்களுக்கு பெருமை சேக்குறது நாங்க தான் அப்டின்னு நான் மட்டும் சொல்லல.குர்ஆனே சொல்லுது.

கலீலுல்லாஹ்,அல்லாஹ்வுடைய நேசர் என்ற பட்டத்தைப் பெற்றது இப்ராஹீம் [அலை] அவங்க தான். உங்க மகன அறுக்கனுன்னு அல்லாஹ் சொன்னப்போ கொஞ்சங்கூட யோசிக்காம  அறுக்கத் துணிஞ்சாங்க. அதனால தான் அவங்களுக்கு அந்த பட்டம் கிடைச்சிச்சுன்னு உங்க எல்லாத்துக்கும் தெரியும்.

நடுவர் அவர்களே! இங்க நாம பாக்க  வேண்டிய விஷயம் என்னன்னா.....மகனே நான் உன்ன அறுக்கப் போறேன் அப்டின்னு இப்ராஹீம் [அலை] அவங்க தன் மகன்ட்ட சொன்னாங்க. இதே வார்த்தைய இந்த புள்ளைங்களைப் பார்த்து அவங்களோட வாப்பாமார்கள் சொல்லியிருந்தா என்ன ஆயிருக்கும்வாப்பா.....மரியாதையா ஓடிருங்க. இல்ல...... நான் உங்கள வெட்டிருவேன் அப்டின்னு சொல்லிருப்பாங்க. ஆனா இஸ்மாயீல் [அலை] அவங்க என்ன சொன்னாங்க தெரியுமா? வாப்பா தாராளமா என்ன அறுங்க அப்டின்னு சொன்னது மட்டுமில்லாம அறுக்கும் போது என் முகத்த பாக்காதீங்க வாப்பா. என் முகத்த பாத்தீங்கன்னா அப்புறம் இரக்கப்பட்டு என்ன அறுக்காம விட்ருவீங்க அப்டின்னு சொன்னாங்க.

பாருங்க நடுவர் அவர்களே! அவங்க அன்னைக்கி அப்டி சொன்னதுனால தான் - இப்ராஹீம் [அலை] அவங்க அறுக்கத் துணிஞ்சாங்க – அதனால தான் அவங்களுக்கு கலீலுல்லாஹ் என்ற பட்டமே கிடச்சிச்சு. இப்ப சொல்லுங்க நடுவர் அவர்களே!இந்த மாதிரி பெத்தவங்களோட நம்பிக்கைய காப்பாத்தி அவங்களுக்கு பேர வாங்கி கொடுக்குறது எங்கள மாதிரி பசங்களா? இல்ல பன்னுங்களா? ச்சீ பொன்னுங்களா?

அதுமட்டுமா மர்யம் [அலை] அவங்களுக்கு ஆண் துண இல்லாம குழந்த பிறந்தப்போ ஊரே அவங்கள தப்பா பேசிச்சு. அவங்கள ஒரு மாதிரியா பாத்துச்சு. என்ன செய்றதுன்னு தெரியாம மர்யம் [அலை] அவங்க கண் கலங்கிக் கொண்டிருந்த நேரத்துல வாய் தொரந்து பேசி உம்மாவுடைய மானத்த காப்பாத்துனது அவங்க மகன் ஈசா [அலை] அவங்க தான..... எனவே பெத்தவங்க யாரு முன்னாலயும் தலை குனியாம அவங்க மானத்த காப்பாத்தி அவங்களுக்கு கண்ணியத்த கொடுக்குறது எங்கள மாதிரி பசங்களா இல்ல பன்னுங்களா? ச்சீ பொன்னுங்களா?

அதுமட்டுமா இன்னும் சொல்றேன்.அதோட இந்த புள்ளைங்க வீட்ட பாத்து ஓடனும். முந்தய காலத்துல ஒரு மூனு பேர் ஒரு குகைல மாட்டிக்கிட்டாங்க.ஒரு பெரிய பாற அந்த குகையோட வாசல அடச்சிடுச்சு. அவங்களால வெளிய வர முடியல.கடைசியா அந்த மூனு பேரும் அவங்க செஞ்ச நல்ல காரியத்த நெனச்சி அல்லாட்ட துஆ செய்றாங்க.அதுல ஒரு ஆளு சொன்னாரு ; நான் வேளைக்கு போயிட்டு வந்தா முதன் முதல்ல என் வாப்பா உம்மாவுக்கு தான் உணவு கொடுப்பேன்.அதுக்கு பிறகு தான் என் மனைவிக்கும் புள்ளைங்களுக்கும் உணவு கொடுப்பேன்.இதான் என் வழக்கம்.ஆனா ஒரு நாள் நான் வர்ரதுக்குள்ள என் வாப்பா உம்மா அசந்து தூங்கிட்டாங்க. ஆனா நான் அந்த உணவ வேற யாருக்கும் கொடுக்காம என் வாப்பா உம்மா எழுத்திருக்கிற வரைக்கும் காத்திருந்து அவங்களுக்குத் தான் முதன் முதல்ல கொடுத்தேன் அப்டின்னு சொன்னவுடன அதிசயமா அந்த பாறையே நகன்டுடுச்சி. அதுக்கு பிறகு அவங்க அந்த குகையிலயிருந்து தப்பிச்சி போனாங்க.

நடுவர் அவர்களே! இப்ப சொல்லுங்க . இந்த மாதிரி பெத்தவங்கள மதிக்கிறது எங்கள மாதிரி பசங்களா? இல்ல இவங்கள மாதிரி பன்னுங்களா? ச்சீ பொன்னுங்களா?

இதுவே உங்களுக்கு போதுன்னு நெனைக்கிறேன்.இதோட இறங்கி தப்பிச்சி ஓடிடுங்க. ஏன்னா அடுத்து ரண்டு சிங்கங்கள் இருக்குது. அவங்க வந்தாங்கன்னா உங்கள அழ வைக்காம வுட மாட்டாங்க அப்பறம் பாத்துக்குங்க. எனவே நடுவர் அவர்களே குடும்பத்தின் மகிழ்ச்சிக்கு பெரிதும் காரணம் ஆண்களே ஆண்களே ஆண்களே என்று கூறி தீர்ப்பு சொல்லுங்க. இல்லன்னா உங்களுக்கும் இதே நிலம தான் அப்டின்னு சொல்லி விடைபெறுகிறேன், அஸ்ஸலாமு அலைக்கும்.



  
      

No comments:

Post a Comment