Monday, February 24, 2014

குடும்ப மகிழ்ச்சிக்கு பெரிதும் காரணம் ஆண்களா? பெண்களா?

                                                                                                

             பெண்களே!...2

அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்]. அல்ஹம்து லில்லாஹ். அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன். வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா சய்யிதினா முஹம்மதின் வஆலிஹி வஸஹ்பிஹி அஜ்மஈன்.

குடும்ப மகிழ்ச்சிக்கு பெரிதும் காரணமாக இருப்பது பெண்களே என்று நான் பேச வந்திருக்கிறேன். அருமையான நடுவர் அவர்களே! இன்றைக்கு பெண்களப்பத்தி பல விதமா பேசப்படுது.
பெண்ணுன்னா அடக்க ஒடுக்கமா இருக்கனும், குனிஞ்ச தல நிமிராம போகனும், குழந்தைகள கவனிக்கனும், வீட்ட சுத்தம் செய்யனும்,சோறு ஆக்கிப் போடனும்,துணி துவைக்கனும், புருஷனுக்காக எல்லாத்தையும் விட்டுக் கொடுத்துட்டு ஒரு அடிம போல இருக்கனும் என்றெல்லாம் பல விதமா பெண்களைப் பத்தி பேசப்படுது. ஆனா நம்முடைய இஸ்லாம் மார்க்கம் தான், உன் தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது என்று சொல்லி  மண்ணை விட கேவலமா மதிக்கப்பட்ட பெண்களுக்கு மரியாதைய வழங்கிச்சு.அவர்களுக்கு கண்ணியத்த கொடுத்துச்சு.

யார் மூனு பொம்பளப் புள்ளைங்கள முறையா வளர்த்து அவங்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள செய்றாரோ அவர் என்னோடு சொர்க்கதில் இருப்பார்னு கண்மனி நாயகம் [ஸல்]அவங்க சொன்னாங்க.

நடுவர் அவர்களே ! இப்படிப்பட்ட உயர்ந்த பெண்களப்போய் இந்த மூனு பேரும் கழிவிக்குடிக்க வந்துருக்காங்கன்னா இவங்க எவ்ளோ பெரிய அர வேக்காடுன்னு உங்களுக்கு நல்லா புரிஞ்சிருக்கும்.அதனால அந்த அர வேக்காடுங்க பேச்சல்லா கண்டுக்காம நாங்க சொல்றத கேளுங்க.கேட்டுட்டு நல்ல தீர்ப்பா சொல்லுங்க, இப்ப நான் என் விஷயத்துக்கு வர்ரேன்.

 ஒரு குடும்பம் மகிழ்ச்சியா  இருக்குறதுக்கு யார் காரணம்னு கேக்குறாங்க.நடுவர் அவர்களே ! இதுல கேக்குறதுக்கு என்ன இருக்குது? குடும்பம்னாவே அங்க மகிழ்ச்சியும் சந்தோஷமும் வர்ரது எங்கள மாதிரி பொம்பளப் புள்ளைங்களால தான....இதுல என்ன சந்தேகம்?
      
எப்பவுமே வாப்பா உம்மான்னு அன்போட கூப்புடுறது, தனக்கு பிறகு பொறக்கும் குழந்தைங்களுக்கு ஒரு தாயா இருக்குறது.வீட்டு வேளைகள செஞ்சு உம்மாவுக்கு உதவியா இருக்குறது, அதே உம்மா வயசான பிறகு அவங்கள கவனிக்கிறது எல்லாமே நாங்க தான இதுல என்ன டவுட்டு?

அதுமட்டுமில்லாம நடுவர் அவர்களே! பொம்பளப் புள்ளைங்க விஷயத்துல எல்லாமே அழகு தான்,எல்லாமே சந்தோஷந்தான். அழகழகா ட்ரஸ் போட்டு  பாக்குறது, நக போட்டு போக்குறது, சீவி சிங்காரிச்சி பூ வச்சிப் பாக்குறது, மருதாணி வச்சிப் பாக்குறது, இப்டி ஒவ்வொரு விஷயங்களும் பெத்தவங்களுக்கு எவ்ளோ பெரிய மகிழ்ச்சிய கொடுக்குது தெரியுமா? இதுலாம் இந்த அர வேக்காடுங்களுக்கு எங்க தெரியப்போகுது?

நடுவர் அவர்களே! பொம்பளப் புள்ளைங்க பெத்தவங்களுக்கு ரொம்ப சந்தோஷத்த கொடுப்பாங்கன்னு தான் அல்லாஹுத்தஆலா நபிகள் நாயகம் [ஸல்] அவங்களுக்கு கூட நாலு பொம்பளப் புள்ளைங்கள கொடுத்தான், நபி [ஸல்] அவங்க அன்னை பாத்திமா [ரலி] அவங்க மேல எவ்வளவு பாசம் வச்சிருந்தாங்க - அன்னை பாத்திமா [ரலி] அவங்க நபி [ஸல்] அவங்க மேல எவ்வளவு பாசம் வச்சிருந்தாங்க என்பதையெல்லாம் நாம கேள்விப் பட்டிருக்கோம்.

நபி [ஸல்] அவங்களோட குடும்பம் இன்னைக்கி வரைக்கும்  மட்டுமல்ல இனி கியாமத் வரைக்கும் நிலச்சி இருப்பாங்கன்னா..... அதுக்கு காரணம் பாத்திமா [ரலி] அவங்க தான.... எனவே எங்கள மாதிரி பொம்பளப் புள்ளைங்களால தான் நிச்சயமா ஒரு குடும்பம் சந்தோஷமாக இருக்கும் என்பதில எந்த வித சந்தேகமும் இல்ல.

ஆனா இவங்க அப்டியா.....பெத்தவங்க என்னதான் கஷ்டப்பட்டு வளத்தாலும் கடைசில இவங்களால நடுத்தெருவுக்கு வரனும்.

நடுவர் அவர்களே உண்மையா நடந்தா ஒரு சோகக் கதைய சொல்றேன், அதுக்கு பிறகு யாருக்கு தீர்ப்பு வழங்குறதுன்னு நீங்களே முடிவு பன்னிக்கோங்க

ஒரு அம்மா வீடு வீடா போயி பாத்தரம் கழுவி துணி துவச்சி, கஷ்டப்பட்டு தன் மகன படிக்க வச்சி, வெளி நாட்டுக்கு வேளைக்கு அனுப்புனாங்க. அவனும் ரண்டு வருஷம் வேள பாத்து நல்ல வசதியா ஆயிட்டான். ஒரு நாள் வெளிநாட்டுல இருந்து ஊருக்கு திரும்பி வந்தான், அவன கஷ்டப்பட்டு படிக்க வச்ச அம்மா அவன பாக்குறதுக்காக ஆசையோட ஏர்போட்டுக்கு போனாங்க. அவனும் தன் ப்ரண்ட்ஸ்களோட வந்து இறங்குனான், அந்த அம்மாவும் ரொம்ப நாள் கழிச்சி மகன பாத்த சந்தோஷத்துல அவன கட்டிப் புடிச்சி அழுதாங்க. அப்பந்தாங்க அந்த தாங்க முடியாத சம்பவம் நடந்துச்சி. அன்பிற்குறிய தாய்மார்களே தயவு செஞ்சி உங்க மனச கல்லாக்கிக் கோங்க. இல்லன்னா உங்களால தாங்க முடியாது.

என்ன நடந்துச்சுன்னா.....அந்த அம்மா ஆசையோட மகன கட்டி புடிச்சப்போ கூட இருந்த ப்ரண்ட்ஸுங்க ; இது யாருடான்னு கேட்டாங்க. அப்ப அவன் என்ன சொன்னான் தெரியுமாஇவ எங்க வீட்டு வேளக்காரி அப்டின்னு.

பெத்து வளத்து கஷ்டபட்டு படிக்க வச்சி நல்ல நிலமைக்கு கொண்டு வந்த தாயப் பாத்து எங்க வீட்டு வேளக்காரின்னு சொன்னா அந்த அம்மா எந்த அளவுக்கு வேதன பட்டுருப்பாங்க?

இப்டிப்பட்ட பசங்களால எப்டிங்க பெத்தவங்க சந்தோஷப்படுவாங்க?  அன்பிற்குறிய நடுவர் அவர்களே! இதல்லாம் கேட்ட பிறகும் நீங்க இவங்க பக்கம் தீர்ப்பு வழங்குனீங்கன்னா அப்புறம் எங்க தாய்மார்களே உங்கள சும்மா வுட மாட்டாங்க பாத்துங்கோங்க.

எனவே குடும்ப மகிழ்ச்சிக்கு பெரிதும் காரணமாக இருப்பது பெண்களே என்று கூறி என் வாதத்தை நிறைவு செய்கிறேன் அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்]




No comments:

Post a Comment