ஆண்களே!...2
அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்]. அல்ஹம்து
லில்லாஹ். அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன். வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா சய்யிதினா
முஹம்மதின் வஆலிஹி வஸஹ்பிஹி அஜ்மஈன்.
குடும்ப மகிழ்ச்சிக்கு ஆண் சமூகம் தான் பெரும் காரணம் என்று நான் உணர்த்த
வந்திருக்கிறேன். தனிக்காட்டு ராஜாவைப்போல கம்பீரமாய் அமர்ந்திருக்கும் அருமையான
நடுவர் அவர்களே!
எத்தனை
எதிர்ப்புகள் வந்தாலும் கலங்காமல் நின்று ஜெயிக்கக் கூடிய எனதணியினரே! திருவிழாவுல காணாம போன ஆடு மாதிரி திருதிருன்னு
முழிச்சிக் கிட்டு இருக்குற எதிரணி பைந்தாங்கோழிகளே! மற்றும் பட்டிமன்றம் இப்ப முடியுமோ, இனி எப்ப
முடியுமோ என்று மணிய மணியப் பார்த்துக் கொண்டிருக்கிற தாய்மார்களே! பெரியோர்களே! எது நடந்தாலும் துணிஞ்சி அடிக்கிற எங்கள் ஊர்
இளம் வாலிபர்களே! உங்கள் அனைவரையும்
ஜாமிவுல் அன்வார் மதரஸாவின் சார்பில் வருக வருக என அன்போடு வரவேற்று என் வாதத்தை
தொடங்குகிறேன்.
நடுவர் அவர்களே! எதிரணியிலயிருந்து
புலடங்கா ஒன்னு வந்துச்சு. புடலங்கான்னு சொன்னவுடனேயே உங்களுக்கு தெரியுமே யாருன்னு. அந்த ரண்டாவதா
உக்காந்துருக்குதுல்ல.....அதான். வந்து அதுபாட்டுக்கு அடிச்சி வுடுது. எங்களலாம்
அர வேக்காடுன்னு சொல்லிட்டு அது கா வேக்காடு மாதிரி பேசிட்டு போயிருக்குது. இதுல
வேற இடையில இடையில இதுல என்ன சந்தேகம், இதுல என்ன டவுட்டு அப்டின்னு.
ஒன்னுந்தெரியாத மக்கு கிளி புதையல காட்டுன கதையாவுல இருக்குது......
நடுவர் அவர்களே உங்களுக்கு அந்த கத தெரியுமா? ஒரு ஊர்ல டுபாகூர் ஒருத்தன் ஒரு கிளி வளத்தான்.
அது ஒன்னத்துக்கும் உதவாத கிளி. இதோ இந்த மூனு புள்ளைங்க மாதிரி. எது கேட்டாலும்
இதுல என்ன சந்தேகம். இதுல என்ன சந்தேகம் அப்டின்னு மட்டுந்தான் சொல்லத்தெரியும். ஒன்னத்துக்கும்
உதவாத அந்த கிளிய எப்படியாவது வித்து காசாக்கிடனுன்னு நெனச்சான்.
ஒரு நாள் அவன் வீட்ல ஒரு சில இடங்கள்ள தோண்டி அதுல புதையல வச்சான். அப்புறம்
எல்லா மக்களையும் கூப்புட்டு இது அதிசயமான கிளி. எங்க என்ன புதையல் இருக்குதுன்னு
கரைக்டா சொல்லிடும் அப்டின்னா. மக்கள்ளாம் ஆச்சரியமா பாத்தாங்க. அவன் எங்கலாம்
தோண்டி புதையல வச்சானோ அந்த இடத்தலாம் காட்டி இங்கே புதையல் இருக்கா அப்டின்னு
கேட்டான், உடனே அந்த கிளி இதுல என்ன சந்தேகம் இதுல என்ன சந்தேகம் அப்டின்னு
சொல்லுச்சி. அப்டியே எல்லா புதையலையும் எடுத்துட்டான். இதையும் உண்மன்னு நம்பி
ஒருத்தன் அந்த கிளிய ஒரு லட்ச ரூபா கொடுத்து வாங்கிட்டு போனான்.
வாங்கிட்டு வீட்டுக்கு போய் ஒவ்வொரு இடத்தையா காட்டி இங்க புதையல் இருக்கா
இங்க புதையல் இருக்கான்னு கேட்டான். அந்த மக்கு கிளியும் இந்த சித்திக்கா மாதிரி
இதுல என்ன சந்தேகம், இதுல என்ன சந்தேகம்னு சொல்லிச்சி.கடைசியில வீட பூராம்
ஒடைச்சது தான் மிச்சம். எங்கயும் புதையல் இல்லை. கடைசியில அவன் டென்ஷனாகி உன்ன
போய் வாங்கிட்டு வந்தம்பாரு நான் பெரிய முட்டாள் அப்டின்னான். உடனே அந்த கிளி
அப்பவும் இதுல என்ன சந்தேகம் அப்டின்னுச்சா.
அந்த மாதிரி என்ன சொல்றோம் என்ன பேசுறோம்னு விளங்காம எதையதையோ உளரிட்டு, நாங்க தான மகிழ்ச்சிக்கு காரணம் இதுல என்ன
சந்தேகம் அப்டின்னு சொல்லுது இந்த புடலங்கா.
இந்த புள்ளைங்க கா வேக்காடுன்னு புரிய வக்கிறதுக்கு என்னன்ன கதைலா சொல்ல
வேண்டியதா இருக்குது. எப்பா.......முடியல.....
நடுவர் அவர்களே எதிரணி புடலங்கா வந்து நிறைய பொய் மூட்டைகள அவுத்து
விட்டுச்சு.பெத்தவங்களப்பாத்து இவங்கலாம் வாப்பா உம்மான்னு அன்போட
கூப்புடுவாங்களாம், நாங்க மட்டும் எப்டி கூப்புடுறோம்? நாங்களும்
வாப்பா உம்மான்னு தான் கூப்புடுறோம். இதுலாம் ஒரு விஷயமா?
அடுத்து, தனக்குப் பிறகு பிறக்குற குழந்தைகள கவனிக்கிறது பொம்பளப் புள்ளைங்க
தான் அப்டின்னு சொல்லுச்சு. ஏன் நாங்களுந்தான் எங்க தங்கச்சிகள கவனிக்கிறோம்.
இன்னைக்கி அதிகமான வீடுகள்ள குமருங்க கர சேர்ரதே எங்கள மாதிரி அண்ணங்களால தான்
தெரியுமா? அதுமட்டுமில்லாம
என்னைக்குமே அக்கா தங்கச்சி பாசத்த விட அண்ணன் தங்கச்சி பாசந்தான் அதிகமாக
இருக்கும் இதுலாம் இவங்களுக்கு தெரியாதா?
அடுத்து, வீட்ல பெத்தவங்களுக்கு உதவி
செய்றதே பொம்பளப் புள்ளைங்க தான் அப்டின்னு சொல்லுச்சு. நான்
கேக்குறேன்....இன்னைக்கி இவங்க எத்தனை பேரு வீட்ல வேள செய்றாங்க.அறட்ட
அடிக்கிறதும், சீரியல் பாக்குறதுந்தான இவங்க பொலப்பு, இவங்களா.....வது உதவியா.....வது
பன்றதா.....வது.
அடுத்து, பொம்பளப்
புள்ளைங்க விஷயத்துல எல்லாமே அழகா இருக்குதாம். நக போடுறது - ட்ரஸ் போடுறது - சீவி
சிங்காரிச்சு,பூ வச்சு மருதாணி வச்சு விடுறது. இப்டி எல்லாமே அழகுன்னு சொல்லுச்சு.
நடுவர் அவர்களே பொம்பளப் புள்ளைங்களுக்கு..... இதுலாம் செஞ்சா தான் அழகு. ஆனா
நாங்க எதுவுமே செய்யாமயே அழகு. ஜான் புள்ளையானாலும் ஆண் புள்ளைன்னு சும்மாவா
சொன்னாங்க.......
அதுமட்டுமில்லாம ஆம்பளப் புள்ள
பொறந்தா சிங்கக் குட்டி பொறந்துருக்கான்னு லட்டே கொடுப்பாங்க. ஆனா பொம்பளப் புள்ள
பொறந்தா ஒரு மிட்டாய் கூட கொடுக்க மாட்டாங்க. என்ன காரணம்? ஆகா சனியன் வந்து பொறந்து தொலைச்சிடுச்சே.....இனி
எத்தன செலவு வரப்போகுதோ அப்டின்னு கவல.
நடுவர் அவர்களே பொம்பளப் புள்ளைய பெத்தவங்க மூஞ்ச பூராம் பாருங்க கொஞ்சங்கூட
சந்தோஷத்தையே பாக்க முடியாது. எதையோ பரிகொடுத்த மாதிரியே..... இருப்பாங்க.
ஏன்னா..... பொம்பள புள்ள பொறந்துடுச்சே.....நல்ல ஒழுக்கமா
வளக்கனுமே......பாதுகாப்பா வளக்கனுமே......நல்ல இடமா பாக்கனுமே.....நகை
எடுக்கனுமே..... கல்யாணத்துக்கு பணம் சேக்கனுமே.....கட்டிக் கொடுத்த பிறகு நல்ல
வாழனுமே.....கட்டிக் கொடுத்த பிறகு பிரியனுமே என்று 1008 கவல வந்துரும். பின்ன
எப்டி சந்தோஷமா இருப்பாங்க?
நடுவர் அவர்களே இன்னைக்கி....பொம்பளப் புள்ளைய பெத்தவங்க பூராம் சொல்லக் கூடி
ஒரு டைலாக் என்ன தெரியுமா? உலகத்துல பத்து
பதினஞ்சி ஆம்பள புள்ள வச்சிருக்கவன் லாம்..... சந்தோஷமா இருக்கான், ஆனா ஒரே ஒரு
பொட்ட புள்ளைய வச்சிகிட்டு நான் படுற அவஸ்த இருக்கே அய்யய்யய்யோ.......
ஒரு பலமொழி கூட அழகா சொல்வாங்க, ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலேன்னு. ஆனா
இந்த புள்ளைங்களால பெத்தவங்களுக்கு ஆவுதோ இல்லையோ அழிவு நிறைய ஏற்படுது.
அதுமட்டுமா பொம்பளப் புள்ளைங்கள என்னதான் பாசத்தோட வளத்தாலும் கல்யாணம்னு
ஒன்னு ஆன பிறகு பெத்தவங்கள விட்டுட்டு போயிருவாங்க. அதுக்கு பிறகு பெத்தவங்கள
கவணிக்க முடியாது. அவங்க கவல பூராம் கணவன் வீட்டப்பத்தி தான் இருக்கும். ஆனா காலம்
முழுக்க பெத்தவங்களோட இருக்குற வாய்ப்பு எங்களுக்கு தான் கிடைக்குது. அவங்கள
அதிகமா சந்தோஷப்படுத்துற வாய்ப்பும் எங்களுக்கு தான் கிடைக்குது.
எனவே அன்பான நடுவர் அவர்களே காலம் முழுக்க பெத்தவங்களுக்கு கவலய கொடுக்குற
பெண்களால் நிச்சயம் குடும்பத்தில் சந்தோஷம் இருக்காது. குடும்பம் மகிழ்ச்சியாக
இருப்பது ஆண்களைக் கொண்டே என்று கூறி விடைபெறுகிறேன்.அஸ்ஸலாமு அலைக்கும்.
No comments:
Post a Comment