Sunday, June 28, 2020

அல்லாஹ்வின் பாதுகாப்பில் மூன்று



நாம் 21 ம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.கடந்த காலங்களை விட இந்த காலத்தில் எல்லா வகையிலும் வளர்ச்சி பெற்றிருக்கிறோம்.எல்லா வகையான முன்னேற்றங்களையும் சந்தித்திருக்கிறோம்.ஒரு பக்கம் எல்லா வகையான வளர்ச்சிகளையும் முன்னேற்றங்களையும் சந்தித்திருந்தாலும் இன்னொரு பக்கம் பல வகையான பிரச்சனைகளையும் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.
21 ம் நூற்றாண்டு தொடங்கியதிலிருந்தே பல்வேறு சோதனைகளையும் பிரச்சனைகளையும் இன்னல்களையும் இடர்களையும் சந்தித்து வருகிறோம், கேட்டு வருகிறோம்,ஆங்காங்கே பார்த்தும் வருகிறோம்.

போராட்டங்களும் போர்க்களங்களும் நிறைந்த உலகத்தில் வாழ்ந்து வருகிறோம்.போராட்டங்களைச் சந்திக்காத போராட்டங்களை எதிர் கொள்ளாத எந்த உயிரினமும் இல்லை என்று சொல்கின்ற அளவு அத்தனை உயிரினங்களும் இவ்வுலகில் போராட்டங்களை சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறது.மற்ற உயிரினங்கள் சாப்பிடுவதற்கும் வாழ்வதற்கும் மட்டும் தான் போராடுகிறது.ஆனால் மனித இனமான நாம் வாழ்க்கையின் அத்தனை விஷயங்களுக்கும் போராடிக் கொண்டிருக்கிறோம்.

கருவாக இருந்தாம்  வளர போராடினோம்! மழலையாக - இருந்தோம்  தவள போராடினோம்!! குழந்தையாக – இருந்தோம் நடக்க போராடினோம்!! சிறுவனாக - இருந்தோம்  படிக்க போராடினோம் !!! படித்து பட்டங்கள் பெற்றோம்  பணிக்கு போராடினோம்!!! பணிகள் கிடைக்கப்பெற்றோம் வாழ்க்கை நடத்த போராடிக் கொண்டிருக்கிறோம்.போராட்டங்கள் நிறைந்தது தான் வாழ்க்கை.

நம் பிறப்பே ஒரு போராட்டம் தான். ஒருவன் தன் மனைவியோடு உறவு கொண்டு தன் விந்துத்துளிகளை அவள் உடம்புக்குள் செலுத்துகிறான்.அந்த சிறு துளிகளில் கோடிக்கணக்கான அனுக்கள் இருக்கும்.அந்த கோடிக்கணக்கான அனுக்களும் போட்டிப் போட்டுக் கொண்டு அந்த பெண்ணின் கரு முட்டையை நோக்கி பயணிக்கும்.ஆனால் அந்த கோடிக்கணக்கான அனுக்களோடும் சண்டை போட்டு அதோடு போராடி  அவைகளை வீழ்த்தி விட்டு  அதில் ஒரே ஒரு அணு மட்டும் தான் கரு முட்டைக்கு போய் கருவாக உருவாகிறது.

இப்படி பிறப்பதில் தொடங்குகிற போராட்டம் மரணம் வரை நம்மை விடாது துறத்திக் கொண்டே இருக்கிறது.குறிப்பாக முஸ்லிம்களாக நமக்கு நம் வாழ்க்கை முழுக்க போராட்டமாகத்தான் இருக்கிறது.அதிலும் இன்றைக்குள்ள அரசியல் வாதிகள் மூலமாகவும் அதிகார வர்க்கத்தினர் மூலமாகவும் அனுதினமும் நாம் சந்திக்கிற பிரச்சனைகளுக்கும் குழப்பங்களுக்கும் அளவே கிடையாது.  இன்றைக்கு இருக்கிற அரசாங்கள் தன் இந்துதுவ கொள்கையை பரப்பும் விதமாகவும் உலகில் வாழும் சிறுபான்மையினரின் உரிமைகளை பரிக்கும் விதமாகவும் அவ்வப்போது தன் மோசமான நடவடிக்கைகளை வெளிப்படுத்தி வருகிறது.

நம் இந்திய நாட்டில் வாழக்கூடிய அனைத்து சமூக மக்களுக்கும் அவர்களுக்குரிய அடிப்படை உரிமைகளை அரசியல் சாசனம் வழங்கியிருக்கிறது.ஆனால் அவ்வாறு வழங்கப்பட்டிருக்கிற அரசியல் சாசன உரிமைகளின் படி நம்மை வாழ விடாமல் இந்த அரசாங்கம் தொடர்ந்து பல சதி வேளைகளை செய்து வருகிறது.இந்த நாட்டில் வாழக்கூடிய மக்களிலேயே அமைதியான குடும்ப வாழ்க்கைக்கு சொந்தக்காரர்கள் முஸ்லிம்களாகிய  நாம் தான். நாட்டினுடைய குடும்ப நீதிமன்றங்களில் பதிவாகியிருக்கும் விவாகரத்து வழக்குகளில் மிக மிக குறைவாக பதிவாயிருப்பது முஸ்லிம் சமூகத்தினுடைய வழக்குகள் தான்.ஆனால் வேண்டுமென்றே பொய்யான போலியான வழக்குகளை உருவாக்கி அதை வைத்து உச்சநீதி மன்றத்தை தூண்டி விட்டு அதன் பின்னனியில் இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் கலங்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்.

கொஞ்ச நாளைக்கு முன்னால பொதுசிவில் என்ற ஒரு பிரச்சனையைக் கொண்டு வந்தார்கள்.நாடு முழுக்க நாம் பல்வேறு வகையான போராட்டங்களையும் ஆர்பாட்டங்களையும் செய்து அதன் மீது நம் எதிர்ப்பை வெளிப்படுத்தினோம்.அதன் சூடு தனிவதற்குள் இப்போது முத்தலாக் என்ற பிரச்சனையை கையில் எடுத்திருக் கிறார்கள்.ஒருவன் தன் மனைவியை முத்தலாக் கூறி விவாகரத்து செய்தால் அவன் மூன்று ஆண்டு சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் அபராதம் கட்ட வேண்டும் என்றும் ஒரு சட்டத்தை கொண்டு வருவதற்கான முயற்சியில் இறங்கி அதன் மூலம் இஸ்லாமிய ஷரீஅத் சட்ட திட்டங்களையும் அழிக்க முயற்சிக்கிறார்கள்.ஆனால் இஸ்லாத்தையும் இஸ்லாமிய ஷரீஅத்தையும் பாதுகாக்கும் பொறுப்பை வல்ல இறைவன் தன் கைவசம் வைத்திருக்கிறான்.

மூன்று விஷயங்களை பாதுகாக்கும் பொறுப்பு அல்லாஹ்விடம் இருக்கிறது.உலகத்தில் யார் நினைத்தாலும் அந்த மூன்றையும் அழிக்கவும் முடியாது அதன் அருகில் நெருங்கவும் முடியாது.அதிலே ஒன்று  கலாமுல்லாஹ். அல்லாஹ்வின் வேதமான அல்குர்ஆன்.

انا نحن نزلنا الذكر وانا له لحافظون
இந்த குர்ஆனை நாமே இறக்கினோம்.நாமே அதை பாதுகாக்கிறோம்.
(
அல்குர்ஆன் : 15 ; 9)

அதற்கு முன்பு அல்லாஹ்வால் அருளப்பட்ட தவ்ராத், இன்ஜீல், ஜபூர் போன்ற வேதங்களில் ஆயிரக்கணக்கான மாற்றங்கள் நிகழ்ந்து விட்டன.அந்த மக்கள் தங்கள் மனம் போன போக்கில், தான் விரும்பிய கருத்துக்களை அதில் தினித்து அவைகளை மாற்றி விட்டார்கள். ஆனால் அல்குர்ஆன் 1400 வருடங்களுக்கும் மேலாக என்னைப்போன்று ஒரு அத்தியாயத்தை கொண்டு வாருங்கள்,என்னைப் போன்று ஒரு வசனத்தை கொண்டு வாருங்கள் என்று வீர முழக்கமிட்டும் இன்று வரை அதன் ஒரு புள்ளி கூட மாறாமல் இருக்கிறது.

முன்னர் வாழ்ந்த நபிமார்கள் முஃஜிஸாக்களை - அற்புதங்களை நிகழ்த்திக் காட்டினார்கள். அவர்களுக்கு பின்னால் அடுத்தடுத்து நபிமார்கள் வந்ததால் அவர்கள் காட்டிய  அற்புதங்கள் எல்லாம் தற்காலிகமானவையாகவே இருந்தன. ஆனால் அண்ணல் நபி (ஸல்) இறுதி நபியாக இருந்ததால் இனி எவரும் நபியாக வரப்போவதில்லை என்ற நிலையில் அவர்களுக்கு வழங்கப்படுகின்ற அற்புதம் முஃஜிஸா இறுதி நாள் வரை நிரந்தரமாக இருக்க கூடிய பேரற்புதமாக இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருந்தது. எனவே அத்தகைய பேரற்புதமாக இறுதி நாள் வரை  அற்புதமாகவே திகழக் கூடிய குர்ஆனை அல்லாஹ் அருளினான்.

அந்தக்குர்ஆன் அற்புதங்களிலெல்லாம் மாபெரும் அற்புதமாக திகழ்கிறது.காரணம் உலகில் இதுவரை எழுதப்பட்ட எந்த நூலும் எந்த நூலாசிரியரும்  இப்படிப்பட்ட ஒரு சவாலை - அறை கூவலை மனித இனத்துக்கு முன் வைத்ததில்லை.இந்த அறை கூவல் இது வரை, பதினான்கு நூற்றாண்டுகளாக இருந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் இன்று வரை இந்த சவால் எவராலும் எதிர் கொள்ளப்பட வில்லை.குர்ஆனில் பல்வேறு இடங்களில் இந்த அறிவிப்பு திரும்ப திரும்ப இடம் பெற்றுள்ளது.

இது போன்று மனிதனை திகைப்பில் ஆழ்த்தக் கூடிய ஓர் அறைக்கூவல் விடுவதற்கு எந்த நூலாசிரியருக்கும் துணிவு இல்லை. ஏனெனில் ஒரு மனிதன் எழுதுகின்ற நூலைப் போல் இன்னொரு மனிதர் இயற்றி விட முடியும். எனவே மனித மூளை இது போன்ற ஒரு நூலை இயற்றி விட முடியாது. முடிந்தால் இயற்றட்டும் பார்க்கலாம் என்று அறைகூவலிடப்பட்டு 1400 ஆண்டுகளுக்கு மேலாகியும் கூட இன்னும் எவராலும் அதை முறியறிக்க முடிய வில்லை.

இதுவரை உலகில் யாருமே இப்படி ஒர் அறைகூவலை விடுத்ததே இல்லை.அந்த சவாலை எதிர்த்து இதுவரை எவரும் வெற்றி பெற்றதும் இல்லை.அரபி இலக்கண இலக்கியத்தில் கை தேர்ந்த பலரும் மோதிப்பார்த்து தோற்றுப் போனார்கள்.

ما حدث من الشاعر العربي لبيد بن ربيعة الشهير ببلاغة منطقه ، وفصاحة لسانه ، ورصانة شعره. فعندما سمع أن محمدا يتحدي الناس بكلامه قال بعض الأبيات ردا علي ما سمع ، وعلقها علي باب الكعبة ، وكان التعليق علي باب الكعبة امتيازا لم تدركه إلا فئة قليلة من كبار شعراء العرب ، وحين رأي أحد المسلمين هذا أخذته العزة فكتب بعض آيات الكتاب الكريم وعلقها إلي جوار أبيات لبيد ومر لبيد بباب الكعبة في اليوم التالي ولم يكن قد أسلم بعد فأذهلته الآيات القرآنية حتي أنه صرخ من فوره قائلا: (والله ما هذا بقول بشر ، وأنا من المسلمين)(132).
وكان من نتيجة تأثر هذا الشاعر العربي العملاق ببلاغة القرآن أنه هجر).
அரபு உலகிலே தனது ஆற்றல் மிகு கவிதைகளாலும், வீறு கொண்ட உணர்வுகளாலும் புகழ் பெற்ற லபீத் என்பவர் இதை ஏற்று போட்டியிட முன் வந்தார். அரபு நாட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் கவிதை வெள்ளம் கரைபுரண்டு கொண்டிருந்த காலத்தில் கஃபாவில் தொங்கவிடப்படுகின்ற கவிதைகளுக்குத் தனிபுகழ் இருந்தது. மிகச் சிறந்த கவிதைக்கு மட்டுமே அந்த மரியாதை கிடைத்தது.

அந்த மிகச்சிறந்த கவிஞர்களில் ஒருவரான லபீத் ஒரு கவிதை எழுதி கஃபாவின் வாயிலில் தொங்க விட்டார். இவ்வாறு அவர் தொங்க விட்ட நிகழ்ச்சி நடந்த உடனே முஸ்லிம் ஒருவர் குர்ஆனிலிருந்து ஓர் அத்தியாயத்தை எழுதி அதற்கு அருகிலேயே மாட்டி வைத்தார். இஸ்ஸாத்தை அது வரை ஏற்றுக் கொள்ளாதிருந்த கவிஞர் லபீத் மறுநாள் கஃபா ஆலயத்தின் வாயில் அருகே வந்தார். திருக்குர்ஆன் அத்தியாயத்தை வாசித்தார். அத்தியாயத்தின் ஆரம்ப வரிகளிலேயே அவர் அசாதாரண முறையில் ஒருவித மாறுதலுக்கு ஆளானார்.

இவை மனிதனின் வார்த்தைகளே அல்ல. இவை இறைவசனங்கள் தாம் என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று கூறினார். அரபு உலகின் ஒர் ஒப்பற்ற கவிஞர் இவர். திருக்குர்ஆனின் இலக்கிய நடையால் மிகப்பெரிய அளவில் ஆட்கொள்ளப்பட்ட இவர் அதன் பிறகு கவிதை எழுதுவதையே விட்டு விட்டார்.

الشعر وقد قال له عمر بن الخطاب رضي الله تعالي عنه يوما: يا أبا عقيل: أنشدني شيئا من شعرك فقرأ سورة البقرة وقال: ما كنت لأقول شعرا بعد إذ علمني الله البقرة وآل عمران(133
ஒருமுறை உமர் (ரலி) அவர்கள் இந்த கவிஞரிடம் ஒரு  கவிதை கூறும்படி வேண்டிய போது லபீத் (ரலி) பின்வருமாறு பதிலளித்தார்கள்."அல்பகரா மற்றும் ஆல இம்ரான் போன்ற அத்தியாயங்களை அல்லாஹ் எனக்கு வழங்கியிருக்கும் போது கவிதையை தொடுவதே எனக்கு அழகல்ல."

ولما مضي علي الاتفاق نصف عام عادوا إليه ، وبهم تطلع إلي معرفة ما حققه أديبهم لمواجهة تحدي رسول الإسلام ؛ وحين دخلوا غرفة الأديب الفارسي الأصل ، وجدوه جالسا والقلم في يده وهو مستغرق في تفكير عميق ، وأوراق الكتابة متناثرة أمامه علي الأرض ، بينما امتلأت غرفته بأوراق كثيرة كتبها ثم مزقها.
لقد حاول هذا الكاتب العبقري أن يبذل كل مجهود عساه أن يبلغ هدفه ، وهو الرد علي تحدي القرآن المجيد. . ولكنه أصيب بإخفاق شديد في محاولته هذه ، حتي اعترف أمام أصحابه ، والخجل والضيق يملكان عليه نفسه أنه ، علي الرغم من مضي ستة أشهر حاول خلالها أن يجيب علي التحدي ، فإنه لم يفلح في أن يأتي بآية واحدة من طراز القرآن ! وعندئذ تخلي ابن المقفع عن مهمته مغلوبا مستخذيا

பிற்காலத்தில் இப்னுல் முகப்பஃ என்பவர் இந்தச் சவாலை ஏற்க முன் வந்தார். மதங்களையே மறுக்கும் ஒரு குழுவினர் குர்ஆன் வெகு வேகமாக மக்களை தன் அளவில் ஈர்ப்பதையும் அதனால் மக்கள் இஸ்லாத்தை தழுவதையும் கண்டு குர்ஆனின் சவாலை ஏற்று அதற்கு எதிராக ஒரு வேதத்தை உருவாக்க தீர்மானித்தார்கள்.  இந்த நோக்கத்திற்காக அவர்கள் இப்னு முகஃப்பஃ தங்கியிருந்த அறைக்குச் சென்றார்கள். அவர் உட்கார்ந்திருந்தார். அவரது கையில் பேனா இருந்தது. ஆழ்ந்த வாசிப்பில் ஈடுபட்டிருந்தார்.அவர் அமர்ந்திருந்த இடத்திற்கு அருகே ஒரு கூடை இருந்தது. எழுதி, எழுதி கிழிக்கப்பட்ட காகிதங்கள் பெரும் குவியலாக அதில் கிடந்தன. அங்கு மட்டுமல்ல அறை முழுவதுமே அத்தகைய குவியல்கள் காணப்பட்டன. அவை வெறும் தாள்கள் ஒரு வரி கூட அதில் எழுதப்படவில்லை. அளவு கடந்த திறமையுடைய மிகச் சிறந்த மொழி அறிவு படைத்த அந்த ஈரான் நாட்டு மேதை தன்னுடைய எல்லா சக்திகளையும் பிரயோகித்து குர்ஆனுக்கு எதிராக ஒரு நூலை எழுதுகின்ற தமது முயற்சியில் ஈடுபட்டு ஒரு வரி கூட எழுத முடியாமல் தோற்றுப் போய் உட்கார்ந்திருந்தார். அவர் தன்னுடைய தோல்வியை ஏற்றுக் கொண்டார். ஒரு வரி எழுத முயன்று ஆறு மாதங்கள் ஆகியும் அவரால் எழுத முடியவில்லை. அவர் நம்பிக்கை இழந்து வெட்கமுற்று அந்த பணியை விட்டே ஒதுங்கிக் கொண்டார்.இப்படி இஸ்லாமிய வரலாற்றில் குர்ஆனை எதிர்த்து அதன் சவாலை முறியடிக்க வேண்டும் என்று வந்த அத்தனை பேருக்கும் கடைசியில் தோல்வி தான் மிஞ்சியது.காரணம் குர்ஆனை அல்லாஹ்வின் பாதுகாப்பில் இருக்கிறது.

அல்லாஹ்வின் மேலான பாதுகாப்பில் இருக்கிற இரண்டாவது விஷயம் பைத்துல்லாஹ். உலகின் மையப்பகுதியில் அமைந்திருக்கிற கஃபதுல்லாஹ். உலகில் யாராலும் அதை அழிக்கவும் முடியாது.அதன் அருகில் நெருங்கவும் முடியாது.அதனை இடிப்பதற்காக வந்த அப்ரஹாவையும் அவனது பிரமாண்டமான யானைப்படைகளையும் அபாபீல் என்ற சிறிய பறவைகளின் மூலம் அல்லாஹ் அழித்த வரலாறு நமக்கு தெரியும்.

واستولى أبرهة الأشرم على مائة من الإبل كانت لسيد قريش عبد المطلب جد النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم َ، فذهب إليه عبد المطلب وقال له: إنك قد أصبت لي مائة بعير فأرجو أن تردها إليّ. فقال أبرهة الأشرم: جئت لأهدم بيتكم، وبيت آبائكم، ثم لا تكلمني فيه وتكلمني في مائة من الإبل أصبتها منك؟ فقال عبد المطلب: أنا رب هذه الإبل، أما البيت فله رب يحميه.
கஃபதுல்லாஹ் அல்லாஹ்வின் பாதுகாப்பில் இருக்கிறது.அதை யாராலும் எதுவும் செய்ய முடியாது என்ற உணர்வு இருந்தது.அதனால் தான் அவர்களால் தைரியாம அவ்வாறு சொல்ல முடிந்தது.

அல்லாஹவின் மிகச்சிறந்த பாதுகாப்பில் இருக்கிற மூன்றாவது விஷயம் ரசூலுல்லாஹ். அல்லாஹ்வின் திருத்தூதர் கண்மனி நாயகம் முஹம்மதுர் ரசூலுல்லாஹி ஸல் அவர்கள்.
والله يعصمك من الناس
قال ابن كثير بلغ انت رسالتي وانا حافظك وناصرك فلا تخف ولا تحزن فلن يصل اليك احد منهم بسوء يؤذيك
நபி ஸல் அவர்கள் நபித்துவத்தை மக்களுக்கு சொல்லிக் கொண்டிருந்த அந்த ஆரம்ப காலத்தில் அதற்கு கடுமையான எதிர்ப்புகளும் விமர்சனங்களும் எழுந்தது மட்டுமல்ல அவர்களுக்கு கடுமையான தொந்தரவுகளையும் சிரமங்களை அம்மக்கள் கொடுக்க ஆரம்பித் தார்கள். அவர்களின் அந்த ஓரிரைக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாத அந்த மக்கள் நபி ஸல் அவர்களை எந்த நேரத்தில் எது வேண்டுமானாலும் செய்து விடலாம் என்ற அச்சமும் பீதியும் இருந்த காரணத்தினால் எந்த நேரமும் நபியைச் சுற்றி 4 பேர் பாதுகாப்புக்கு இருந்து கொண்டே இருப்பார்கள்.ஆனால் இந்த  வசனம் இறங்கிய நேரத்தில் நபி ஸல் அவர்கள் சொன்னார்கள்.
يا ايها الناس انصرفوا عني فقد عصمني الله
அல்லாஹ் அவர்களைச் சுற்றிலும் பாதுகாப்பு வலையத்தை அமைத்து வைத்திருந்தான். அதனால் அவர்களை அழிக்க வேண்டும் அவர்களைக் கொல்ல வேண்டும் என்ற சூழ்ச்சி செய்த அத்தனை பேரும் கடைசியில் தோற்றுப் போனார்கள்  என்பது வரலாறு.
ان النبي اتي خيبر فقدمت له يهودية
لما نزل تبت يدا ابي لهب وتب جاءت ام جميل الي النبي صلي الله عليه
وذات يوم، أقبل رجل من بلد اسمها (إراش) إلى مكة، فظلمه أبو جهل، وأخذ منه إبله، فذهب الرجل إلى نادي قريش يسألهم عن رجل ينصره على
அல்லாஹ்வின் மேலான பாதுகாப்பு நபிக்கு இருந்த காரணத்தினால் மக்காவாசிகள் நபியை அழைப்பதற்கும் அவர்களை கொல்வதற்கும் அத்தனை சூழ்ச்சிகள் செய்தும் அவை அனைத்தும் வீணாகப்போனதே தவிர அவர்களை அவர்களால் ஒன்றும் செய்ய முடிய வில்லை.

அந்த வரிசையில் அல்லாஹ் இந்த ஷரீஅத்தையும் பாதுகாக்கும் பொறுப்பை தான் எடுத்துக் கொண்டான்.
يريدون ليطفئوا نور الله بافواههم والله متم نوره ولو كره الكافرون
அவர்கள் தங்கள் வாய்களால் அலலாஹ்வின் ஒளியை அனைக்க நினைக்கிறார்கள்.காஃபிர்கள் வெறுத்தாலும் அல்லாஹ் தன்னுடைய ஒளியை பூர்த்தியாக்கக்கூடியவன். (அல்குர்ஆன் : 61;8)

எனவே பொதுசிவில் என்றும் முத்தலாக் என்றும் இன்னும் இதைப்போன்று 1000 பிரச்சனைகளைக் கொண்டு வந்தாலும் அவர்களால் இஸ்லாத்தையோ இஸ்லாமிய ஷரீஅத் சட்டத்தையோ ஒன்றும் செய்ய முடியாது என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கும் புரிய வைக்க வேண்டும். 



No comments:

Post a Comment