Showing posts with label குர்ஆன். Show all posts
Showing posts with label குர்ஆன். Show all posts

Sunday, March 26, 2023

கல்நெஞ்சும் கறையும்

 

وَاِذَا سَمِعُوْا مَاۤ اُنْزِلَ اِلَى الرَّسُوْلِ تَرٰٓى اَعْيُنَهُمْ تَفِيْضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوْا مِنَ الْحَـقِّ‌ يَقُوْلُوْنَ رَبَّنَاۤ اٰمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشّٰهِدِيْنَ‏

தவிர, (இத்தகையவர்களில் பலர் நம்முடைய) தூதர் மீது அருளப்பட்டவைகளை செவியுற்றால், உண்மையை அவர்கள் உணர்வதன் காரணமாக அவர்களின் கண்கள் (தாரை தாரையாக) கண்ணீர் வடிப்பதைக் காண்பீர்கள். அன்றி "எங்கள் இறைவனே! (இவ்வேதத்தை) நாங்கள் நம்பிக்கை கொண்டோம். ஆகவே, (இவ்வேதம் உண்மையானதென) சாட்சி கூறுபவர்களுடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக!" என்றும் (பிரார்த்தித்துக்) கூறுகின்றனர். (அல்குர்ஆன் : 5:83)

Sunday, April 3, 2022

குர்ஆனிய தொடர்பு

 

شَهْرُ رَمَضَانَ الَّذِىْٓ اُنْزِلَ فِيْهِ الْقُرْاٰنُ هُدًى لِّلنَّاسِ وَ بَيِّنٰتٍ مِّنَ الْهُدٰى وَالْفُرْقَانِ فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَـصُمْهُ  وَمَنْ کَانَ مَرِيْضًا اَوْ عَلٰى سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ اَيَّامٍ اُخَرَ يُرِيْدُ اللّٰهُ بِکُمُ الْيُسْرَ وَلَا يُرِيْدُ بِکُمُ الْعُسْرَ وَلِتُکْمِلُوا الْعِدَّةَ وَلِتُکَبِّرُوا اللّٰهَ عَلٰى مَا هَدٰٮكُمْ وَلَعَلَّکُمْ تَشْكُرُوْنَ‏

ரமழான் மாதம் எத்தகைய (மகத்துவமுடைய)தென்றால் அதில்தான் மனிதர்களுக்கு நேர்வழிகாட்டும் திருக்குர்ஆன்   (என்னும் வேதம்) இறக்கப்பட்டது. அது (நன்மை, தீமையைப்) பிரித்தறிவித்து நேரான வழியைத் தெளிவாக்கக்கூடிய வசனங்களை உடையதாகவும் இருக்கிறது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கவும். ஆனால் (அக்காலத்தில் உங்களில்) யாராகிலும் நோயாளியாகவோ அல்லது பிரயாணத்திலோ இருந்தால் (ரமழான் அல்லாத) மற்ற நாள்களில் (விட்டுப்போன நாள்களின் நோன்பைக்) கணக்கிட்டு (நோற்று)விடவும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவா(ன கட்டளையைக் கொடு)க்க விரும்புகிறானே தவிர கஷ்டத்தை(க் கொடுக்க) விரும்பவில்லை. மேலும் (தவறிய நாள்களைக் கணக்கிடும்படி கட்டளையிட்டதெல்லாம், உங்கள்மீது கடமையாக உள்ள ஒரு மாத நோன்பின்) எண்ணிக்கையை நீங்கள் முழுமை செய்வதற்காகவும்; (அவ்வாறே) அல்லாஹ் உங்களை நேரான பாதையில் நடத்தியதற்காக அவனை நீங்கள் பெருமைப்படுத்துவதற்காகவும்; (நோய்,   பிரயாணம் போன்ற சந்தர்ப்பங்களில் நோன்பு நோற்காதிருக்க உங்களுக்கு அனுமதி வழங்கியதற்காக) நீங்கள் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்துவதற்காகவுமே ஆகும்! (அல்குர்ஆன் : 2:185)

Thursday, March 24, 2022

அல் குர்ஆனுக்கு யார் விளக்கம் சொல்ல வேண்டும் ?

 


உலக மக்களை சீர்திருத்த அவர்களை நலவழிப்படுத்த நன்மைகள் எது தீமைகள் எது என்று சொல்லி அவர்களை பன்படுத்த எதை எப்படி செய்ய வேண்டும் யாரிடத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று உணர்த்தி அவர்களை பக்குவப்படுத்த உன்னத மறையான அல்குர்ஆன் ஷரீஃபை எல்லாம் வல்ல ரப்புல் ஆலமீன் மாநபி ஸல் அவர்களின் மூலமாக நமக்கு வழங்கியிருக்கிறான்.குர்ஆன் ஷரீஃபை நம் கையில் கொடுத்து அந்த அல்குர்ஆன் ஷரீஃபிடம் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், அதை எவ்வாறு அனுக வேண்டும் என்பதையும் நமக்கு தெளிவுபடுத்தி விட்டான். அல்குர்ஆன் அருளப்பட்ட நபி ஸல் அவர்களும் அதை தெளிவுபடுத்தியிருக் கிறார்கள்.

Sunday, June 28, 2020

அல்லாஹ்வின் பாதுகாப்பில் மூன்று



நாம் 21 ம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.கடந்த காலங்களை விட இந்த காலத்தில் எல்லா வகையிலும் வளர்ச்சி பெற்றிருக்கிறோம்.எல்லா வகையான முன்னேற்றங்களையும் சந்தித்திருக்கிறோம்.ஒரு பக்கம் எல்லா வகையான வளர்ச்சிகளையும் முன்னேற்றங்களையும் சந்தித்திருந்தாலும் இன்னொரு பக்கம் பல வகையான பிரச்சனைகளையும் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.