Thursday, March 24, 2022

அல் குர்ஆனுக்கு யார் விளக்கம் சொல்ல வேண்டும் ?

 


உலக மக்களை சீர்திருத்த அவர்களை நலவழிப்படுத்த நன்மைகள் எது தீமைகள் எது என்று சொல்லி அவர்களை பன்படுத்த எதை எப்படி செய்ய வேண்டும் யாரிடத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று உணர்த்தி அவர்களை பக்குவப்படுத்த உன்னத மறையான அல்குர்ஆன் ஷரீஃபை எல்லாம் வல்ல ரப்புல் ஆலமீன் மாநபி ஸல் அவர்களின் மூலமாக நமக்கு வழங்கியிருக்கிறான்.குர்ஆன் ஷரீஃபை நம் கையில் கொடுத்து அந்த அல்குர்ஆன் ஷரீஃபிடம் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், அதை எவ்வாறு அனுக வேண்டும் என்பதையும் நமக்கு தெளிவுபடுத்தி விட்டான். அல்குர்ஆன் அருளப்பட்ட நபி ஸல் அவர்களும் அதை தெளிவுபடுத்தியிருக் கிறார்கள்.

ﻋﻦ أﺑﻲ رﻗﻴﺔ ﺗﻤﻴﻢ ﺑﻦ أوسٍ اﻟﺪاري رﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻪ: أن اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ

ﻋﻠﻴﻪ وﺳﻠﻢ ﻗﺎل: ))اﻟﺪ ﻳﻦ اﻟﻨﺼﻴﺤﺔ((، ﻗﻠﻨﺎ: ﻟِﻤَﻦ؟ ﻗﺎل: ))ﻟﻠﻪ، وﻟﻜﺘﺎﺑﻪ، وﻟﺮﺳﻮﻟﻪ، وﻷﺋﻤﺔ اﻟﻤﺴﻠﻤﻴﻦ، وﻋﺎﻣﺘﻬﻢ

நபி ஸல் அவர்கள் மார்க்கம் என்பது (பிறருக்கு) நலவை நாடுவதுஎன்று கூறிய போது, “யாருக்கு?” என நாங்கள் கேட்டோம்; அதற்கு நபி ஸல் அவர்கள், “அல்லாஹ்வுக்கும் அவனது வேதத்திற்கும் அவனது தூதருக்கும் முஸ்லிம்களின் தலைவர்களுக்கும் அனைத்து முஸ்லிம்களுக்கும்என்று கூறினார்கள். (முஸ்லிம் ; 55)

وﻟﻜﺘﺎﺑﻪ:(( ﺑﺤﻔﻈﻪ وﺗﺪﺑﺮه، وﺗﻌﻠﻢ أﻟﻔﺎﻇﻪ وﻣﻌﺎﻧﻴﻪ، واﻻﺟﺘﻬﺎد ﻓﻲ اﻟﻌﻤﻞ ﺑﻪ ﻓﻲ ﻧﻔﺴﻪ وﻏﻴﺮه

மேற்கூறப்பட்ட ஹதீஸில் அவனுடைய வேதத்திற்கு நலவை நாடுதல் என்பதற்கு விளக்கம் கூறும் இமாம்கள், குர்ஆனை ஓதுவது, அதைப் பாதுகாப்பது, அதைப் பற்றி சிந்திப்பது, அதிலுள்ள வார்த்தைகளையும் அதன் பொருள்களையும் விளங்க முற்படுவது, அதைக் கொண்டு அமல் செய்வது என்று அதற்கு பல விளக்கங்களை கூறியுள்ளார்கள்.

 

اﻓﻼ ﻳﺘﺪﺑﺮن اﻟﻘﺮان ام ﻋﻠﻲ ﻗﻠﻮب اﻗﻔﺎﻟﻬﺎ

இந்தக் குர்ஆனை அவர்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டாமா ? அல்லது அவர்களின் உள்ளங்களில் பூட்டு போடப்பட்டிருக்கிறதா ? (அல்குர்ஆன் : 47 ; 24)

كِتٰبٌ اَنْزَلْنٰهُ اِلَيْكَ مُبٰرَكٌ لِّيَدَّبَّرُوْۤا اٰيٰتِهٖ وَلِيَتَذَكَّرَ اُولُوا الْاَلْبَابِ‏

(நபியே!) இவ்வேதத்தை நாமே உங்கள் மீது இறக்கி வைத்தோம். இது மிக பாக்கியமுள்ளது. அறிவுடையவர்கள் இதன் வசனங்களை கவனித்து ஆராய்ந்து நல்லுணர்ச்சி பெறுவார்களாக! (அல்குர்ஆன் : 38:29)

குர்ஆனின் வசனங்களை புரிய வேண்டும், சிந்திக்க வேண்டும், அதை ஆராய வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான். ஆனால் குர்ஆன் வசனங்கள் அனைத்தையும் அனைவராலும் புரிந்து கொள்ள முடியுமா என்றால் இயலாது. அல்குர்ஆன் மிக உயர்ந்த இலக்கிய நடையிலும், நிறைந்த பொருளை உள்ளடக்கிய குறைந்த சொற்கள் கொண்டதாகவும் இருக்கிறது. அதில் பொதிந்திருக்கும் பொருட்செறிவையும் அதில் பொதிந்திருக்கும் நுட்பங்களை யும் புரிந்து கொள்வது சாமானிய மக்களால் முடியாது.

அல்குர்ஆனில் சில வசனங்களில் வெளிப்படையாக ஒரு கருத்து தெரியும். ஆனால் அதன் உட்பொருள் வேறொரு முக்கிய நோக்கத்தைக் கொண்டதாக அமைந்திருக்கும். அதே போன்று சில வசனங்கள் சில பின்னணிகளைக் கொண்டதாக இருக்கும். அந்த பின்னணியை தெரிந்து கொள்ளாமல் அந்த வசனத்தை விளங்க முடியாது. ஒரு வசனம் வெளிப்படையில் இன்னொரு வசனத்திற்கு முரண்படுவதாக தெரியும். ஆனால் குர்ஆனில் எந்த வசனமும் இன்னொரு வசனத்திற்கு முரனாக இல்லை. குர்ஆனில் ஆழம் கண்டவர்களால் மட்டுமே அதை புரிந்து கொள்ள முடியும். மட்டுமல்ல அல்குர்ஆன் வசனங்களில் சில வார்த்தைகள் சில நுட்பங்களுக்காக அதிகப்படியாக இடம் பெற்றிருக்கும். அதை நீக்கி விட்டுத்தான் அதற்கு பொருள் தர வேண்டும். சில வசனங்களில் சில வார்த்தைகளை சேர்த்தால் தான் பொருள் கிடைக்கும். எனவே குர்ஆனை அதனை விளங்கும் முறையான அறிவு இல்லாமல் ஒருவரால் விளங்க முடியாது.

 

ﻗَﺎلَ اﺑﻦُ عباس : " اتفسير ﻋَﻠَﻰ ا رْﺑَﻌَﺔِ ا وْﺟُﻪٍ : وَﺟْﻪٌ ﺗَﻌْﺮِﻓُﻪُ اﻟﻌَﺮَبُ ﻣِﻦْ

ﻛَﻼَﻣِﻬَﺎ ، وَﺗَﻔْﺴِﻴﺮٌ ﻻَ ﻳُﻌْﺬَرُ ا ﺣَﺪٌ ﺑِﺠَﻬَﺎﻟَﺘِﻪِ ، وَﺗَﻔﺴﻴﺮٌ ﻳَﻌْﻠَﻤُﻪُ اﻟﻌُﻠَﻤَﺎءُ ، وَﺗَﻔْﺴِﻴﺮٌ ﻻَ

ﻳَﻌْﻠَﻤُﻪُ ا, اﻟﻠﻪُ - ﺗَﻌَﺎﻟَﻰ ذِﻛْﺮُهُ - وَاﻟﻠﻪُ - ﺳُﺒْﺤَﺎﻧَﻪُ وَﺗَﻌَﺎﻟَﻰ - ا ﻋْﻠَﻢُ

குர்ஆன் வசனங்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று அரபி அறிந்தவர்கள் மட்டும் அதை விளங்க முடியும். இரண்டாவது, சாதாரணமாக அனைவரும் விளங்கிக் கொள்வார்கள். மூன்றாவது, குர்ஆனைப் பற்றிய ஞானம் உள்ளவர்கள் மட்டும் விளங்கிக் கொள்வார்கள். நான்காவது அல்லாஹ்வுக்கு மட்டுமே அதன் விளக்கம் புரியும் என்று இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் கூறுகிறார்கள்.

நாம் இன்றைக்கு யாரை மிகப்பெரும் குர்ஆன் விரிவுரையாளர்கள் என்று கூறுகிறோமோ அவர்கள் கூட சில நேரங்களில் சில வசனங்களுக்கு விளக்கம் கேட்ட போது எனக்கு தெரியாது என்று கூறியிருக்கிறார்கள்.

عَنْ أَنَس , قَالَ : قَرَأَ عُمَر بْن الْخَطَّاب رَضِيَ اللَّه عَنْهُ { عَبَسَ وَتَوَلَّى } فَلَمَّا أَتَى عَلَى هَذِهِ الْآيَة { وَفَاكِهَة وَأَبًّا } قَالَ : قَدْ عَرَفْنَا الْفَاكِهَة , فَمَا الْأَبّ ؟  وفي رواية قَالَ عُمَر  وَمَا يَتَبَيَّن فَعَلَيْكُمْ بِهِ , وَمَا لَا فَدَعُوهُ

உமர் ரலி அவர்கள் அபஸ் அத்தியாயத்தை ஓதிக் கொண்டிருந்தார்கள். அதில் 31 வது வசனம் வந்த போது ஃபாகிஹத் என்றால் என்ன என்பதை நாம் அறிந்திருக்கிறோம். அப்பு என்றால் என்ன என்று கேட்டார்கள். மேலும், உங்களுக்கு எது தெளிவாக தெரிகிறதோ அதை எடுத்துக் கொள்ளுங்கள். தெரியாததை விட்டு விடுங்கள் என்று கூறினார்கள். (தஃப்ஸீர் தப்ரீ)

ﻋﻦ اﺑﻦ أﺑﻲ ﻣﻠﻴﻜﺔ، ﻗﺎل: ﺳﺄل رﺟﻞ اﺑﻦ ﻋﺒﺎس ﻋﻦ ﻳﻮم ﻛﺎن ﻣﻘﺪاره أﻟﻒ ﺳﻨﺔ، ﻗﺎل: ﻓﺎﺗﻬﻤﻪ، ﻓﻘﻴﻞ ﻟﻪ ﻓﻴﻪ، ﻓﻘﺎل: ﻣﺎ ﻳﻮم ﻛﺎن ﻣﻘﺪاره ﺧﻤﺴﻴﻦ أﻟﻒ

ﺳﻨﺔ؟ ﻓﻘﺎل: إﻧﻤﺎ ﺳﺄﻟﺘﻚ ﻟﺘﺨﺒﺮﻧﻲ، ﻓﻘﺎل: ﻫﻤﺎ ﻳﻮﻣﺎن ذﻛﺮﻫﻤﺎ اﻟﻠﻪ ﺟﻞّ وﻋﺰّ، اﻟﻠﻪ أﻋﻠﻢ ﺑﻬﻤﺎ، وأﻛﺮه أن أﻗﻮل ﻓﻲ ﻛﺘﺎب اﻟﻠﻪ ﺑﻤﺎ أﻋﻠﻢ

குர்ஆனில் மறுமை நாளைப் பற்றி ஒரு இடத்தில் அல்லாஹ் ஆயிரம் வருடம் என்றும் இன்னொரு இடத்தில் ஐம்பது ஆயிரம் வருடம் என்றும் கூறுகிறான். இதற்கான விளக்கம் என்று என்று ஒருவர் இப்னு அப்பாஸ் ரலி அவர்களிடம் கேட்டார். அதற்கவர்கள், அதைப் பற்றி அல்லாஹ்விற்கே நன்கு தெரியும். குர்ஆனில் எனக்குத் தெரியாததை கூறுவதை நான் விரும்ப வில்லை என்று கூறினார்கள். 

குர்ஆன் இறங்குவதை நேரடியாக பார்த்த, குர்ஆனின் மறு உருவமாக வாழ்ந்த நபி ஸல் அவர்களோடு பயணித்த, அரபி மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட ஸஹாபாக்களுக்கு கூட சில வசனங்களின் உட்பொருளை புரிய முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

 

ﻋَﻦْ ﻋَﺪِي ﺑْﻦِ ﺣَﺎﺗِﻢٍ لَمَّا نَزَلَتْ: {حتَّى يَتَبَيَّنَ لَكُمُ الخَيْطُ الأبْيَضُ مِنَ الخَيْطِ الأسْوَدِ} [البقرة: 187] عَمَدْتُ إلى عِقَالٍ أسْوَدَ، وإلَى عِقَالٍ أبْيَضَ، فَجَعَلْتُهُما تَحْتَ وِسَادَتِي، فَجَعَلْتُ أنْظُرُ في اللَّيْلِ، فلا يَسْتَبِينُ لِي، فَغَدَوْتُ علَى رَسولِ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ، فَذَكَرْتُ له ذلكَ فَقالَ: إنَّما ذلكَ سَوَادُ اللَّيْلِ وبَيَاضُ النَّهَارِ.

அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : கறுப்புக் கயிற்றிலிருந்து வெள்ளைக் கயிறு உங்களுக்குத் தென்படும் வரை நீங்கள் உண்ணுங்கள்; பருகுங்கள்” (2:187) என்ற வசனம் அருளப்பெற்ற போது நான் நபி (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! நான் வெள்ளை நிறத்தில் ஒரு கயிறு, கறுப்பு நிறத்தில் மற்றொரு கயிறு என இரு கயிறுகளை என் தலையணையின் கீழே வைத்து, பகலில் இருந்து இரவை (பிரித்து) அறிய முயன்றேன். (ஆயினும், என்னால் பிரித்தறிய முடிய வில்லை)என்று சொன்னேன். அதற்கு அவர்கள், இரவின் கருமைக்கு கருப்பு நூல் என்றும் பகலின் வெண்மைக்கு வெள்ளை நூல் என்றும்  விளக்கம் ஆகும்என்று கூறினார்கள். (புகாரி ; 1916)

ﻋﻦ اﺑﻦ ﻋﺒﺎس ﻗﺎل : ﻛﺎن ﻋﻤﺮ ﻳﺪﺧﻠﻨﻲ ﻣﻊ أﺷﻴﺎخ ﺑﺪر ، ﻓﻜﺄن ﺑﻌﻀﻬﻢ وﺟﺪ ﻓﻲ ﻧﻔﺴﻪ ، ﻓﻘﺎل : ] ص: 510 [ ﻟﻢ ﻳﺪﺧﻞ ﻫﺬا ﻣﻌﻨﺎ وﻟﻨﺎ أﺑﻨﺎء ﻣﺜﻠﻪ ؟ ﻓﻘﺎل ﻋﻤﺮ : إﻧﻪ ﻣﻤﻦ ﻗﺪ ﻋﻠﻤﺘﻢ ﻓﺪﻋﺎﻫﻢ ذات ﻳﻮم ﻓﺄدﺧﻠﻪ ﻣﻌﻬﻢ ، ﻓﻤﺎ رؤﻳﺖ أﻧﻪ

دﻋﺎﻧﻲ ﻓﻴﻬﻢ ﻳﻮﻣﺌﺬ إ ﻟﻴﺮﻳﻬﻢ ، ﻓﻘﺎل : ﻣﺎ ﺗﻘﻮﻟﻮن ﻓﻲ ﻗﻮل اﻟﻠﻪ ﻋﺰ وﺟﻞ : ) إذا ﺟﺎء ﻧﺼﺮ اﻟﻠﻪ واﻟﻔﺘﺢ ( ؟ ﻓﻘﺎل ﺑﻌﻀﻬﻢ : أﻣﺮﻧﺎ أن ﻧﺤﻤﺪ اﻟﻠﻪ

وﻧﺴﺘﻐﻔﺮه إذا ﻧﺼﺮﻧﺎ وﻓﺘﺢ ﻋﻠﻴﻨﺎ . وﺳﻜﺖ ﺑﻌﻀﻬﻢ ﻓﻠﻢ ﻳﻘﻞ ﺷﻴﺌﺎ ، ﻓﻘﺎل ﻟﻲ


أﻛﺬﻟﻚ ﺗﻘﻮل ﻳﺎ اﺑﻦ ﻋﺒﺎس ؟ ﻓﻘﻠﺖ : . ﻓﻘﺎل : ﻣﺎ ﺗﻘﻮل ؟ ﻓﻘﻠﺖ : ﻫﻮ أﺟﻞ رﺳﻮل اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ وﺳﻠﻢ أﻋﻠﻤﻪ ﻟﻪ ، ﻗﺎل : ) إذا ﺟﺎء ﻧﺼﺮ اﻟﻠﻪ واﻟﻔﺘﺢ ( ﻓﺬﻟﻚ ﻋﻼﻣﺔ أﺟﻠﻚ ) ﻓﺴﺒﺢ ﺑﺤﻤﺪ رﺑﻚ واﺳﺘﻐﻔﺮه إﻧﻪ ﻛﺎن ﺗﻮاﺑﺎ ( ﻓﻘﺎل ﻋﻤﺮ ﺑﻦ اﻟﺨﻄﺎب : أﻋﻠﻢ ﻣﻨﻬﺎ إ ﻣﺎ ﺗﻘﻮل . ﺗﻔﺮد ﺑﻪ اﻟﺒﺨﺎري

இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள் ; பத்ர் போரில் போரிட்ட முதிர்ச்சி பெற்றவர்களுடன் உமர் ரலி அவர்கள் என்னை உட்கார வைப்பவர்களாக இருந்தார்கள். அவர்களில் சிலர் உமர் ரலி  அவர்களிடம்: "எங்களுக்கு இவரைப் போன்ற மகன்கள் இருக்கும் போது, ​​எங்களுடன் உட்கார ஏன் இவரை அழைத்து வந்தீர்கள்?" என்று கேட்ட போது உமர் ரலி அவர்கள் "அவரது நிலைப்பாட்டை நீங்கள் அறிந்திருப்பதன் காரணமாக" என்று பதிலளித்தார்கள். (அதாவது இங்கே வந்து அமர்ந்து கருத்து சொல்வதற்கான அறிவும் தகுதியும் அவருக்கு இருக்கிறது என்று கூறினார்கள்) ஒரு நாள் உமர்  ரலி அவர்கள் என்னைக் கூப்பிட்டு அந்த மக்கள் கூடும் கூட்டத்தில் உட்கார வைத்தார்கள், அவர்களுக்கு (எனது மார்க்க அறிவை) காட்டவே அவர்கள் என்னை அழைத்தார்கள் என்று நினைக்கிறேன். அப்போது உமர் ரலி அவர்கள் அங்கிருந்தவர்களிடம்,  அல்குர்ஆனில் நஸ்ர் அத்தியாயத்தின் கருத்து என்ன என்று என் முன்னிலையில் கேட்டார்கள். அவர்களில் சிலர் சொன்னார்கள்: "இறைவனின் உதவியும் வெற்றியும் நமக்கு வரும் போது , ​​​​அவனைப் புகழ்ந்து அவனிடம் மன்னிப்பு கேட்க நாங்கள் கட்டளையிடப்பட்டுள்ளோம் ". இன்னும் சிலர் எதுவும் பேசாமல் அமைதி காத்தனர். அதற்குப் பிறகு உமர் ரலி அவர்கள் என்னிடம் "ஓ இப்னு அப்பாஸே, நீயும் அதையே சொல்கிறாயா?" என்று கேட்டார்கள். அப்போது நான், "இல்லை" என்றேன். அவர்கள்,  அப்படியென்றால் இதைப்பற்றி நீ என்ன சொல்கிறாய்? என்று கேட்டார்கள்" நான், "இது முஹம்மது நபி ஸல் அவர்களின் மரணத்தின் அடையாளம் என்று கூறினேன். அதற்கு உமர் ரலி அவர்கள் "நீ சொன்னதைத் தவிர வேறு எதுவும் இதிலிருந்து எனக்குத் தெரியாது என்று கூறினார்கள். (புகாரி ; 4970)

குர்ஆன் வசனங்களுக்கு விரிவுரை சொல்வதற்கு சில தகுதிகள் இருக்கிறது. அந்த தகுதி உள்ளவர்களால் மட்டும் தான் விளக்கம் சொல்ல முடியும். அந்த தகுதிகள் நம் முன்னோர்களான ஸஹாபாக்களிடமும் இமாம்களிடமும் தான் அமைந்திருந்தது. குர்ஆன் விரிவுரை செய்வதற்கு மொத்தம் 15 தகுதிகள் இருக்க வேண்டும் என்று உஸூலுத் தஃப்ஸீர்களில் விவரிக்கப்பட்டுள்ளது.

1, அரபி மொழியறிவு, 2, அரபி இலக்கணம். 3, ஸர்ஃப் 4, வார்த்தைகளின் அஸல் 5, மஆனீ 6, பயான் 7,பதீஃ 8, கிராஅத் 9, அடிப்படை கொள்கை சார்ந்த அறிவு 10,உஸூலுல் ஃபிக்ஹ் 11, வசனங்களின் பின்னனி. 12, நாஸிஹ், மன்ஸூஹ் 13 ஃபிக்ஹ் 14,ஹதீஸ் 15, அல்லாஹ்விடமிருந்து விஷேச ஞானம்.

ﻗﺎل اﺑﻦ أﺑﻲ اﻟﺪﻧﻴﺎ : وﻋﻠﻮم اﻟﻘﺮآن وﻣﺎ ﻳﺴﺘﻨﺒﻂ ﻣﻨﻪ ﺑﺤﺮ ﺳﺎﺣﻞ ﻟﻪ ﻗﺎل : ﻓﻬﺬه اﻟﻌﻠﻮم ـ اﻟﺘﻲ ﻫﻲ ﻛﺎﻵﻟﺔ ﻟﻠﻤﻔﺴﺮ ـ ﻳﻜﻮن ﻣﻔﺴﺮا إ ﺑﺘﺤﺼﻴﻠﻬﺎ ، ﻓﻤﻦ ﻓﺴﺮ ﺑﺪوﻧﻬﺎ ﻛﺎن ﻣﻔﺴﺮا ﺑﺎﻟﺮأي اﻟﻤﻨﻬﻲ ﻋﻨﻪ ، وإذا ﻓﺴﺮ ﻣﻊ ﺣﺼﻮﻟﻬﺎ

ﻟﻢ ﻳﻜﻦ ﻣﻔﺴﺮا ﺑﺎﻟﺮأي اﻟﻤﻨﻬﻲ ﻋﻨﻪ

குர்ஆன் சார்ந்த அறிவுகளும் அதில் ஆய்வு செய்வதும் கரையில்லாத மாபெரும் கடல். மேற்கூறப்பட்ட விஷயங்கள் அனைத்தும் குர்ஆன் விரிவுரையாளர்களுக்கு அவசியம் இருக்க வேண்டும். அவை இல்லாமல் ஒருவர் தப்ஸீர் செய்ய முடியாது. அவ்வாறு செய்தாலும் அது ஏற்கப்படாது என்று அப்னு அபித்துன்யா ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

குர்ஆன் வசனங்களுக்கான முதல் விரிவுரை மற்ற குர்ஆன் வசனங்கள் தான். இரண்டாவது விளக்கம் நபி ஸல் அவர்கள். மூன்றாவது ஸஹாபாக்கள். ஸஹாபாக்களிடம் இந்த ஞானங்கள் அனைத்தும் இருந்தது. அரபி என்பது அவர்களிடம் இயல்பாகவே இருந்தது. மற்றவைகளை அவர்கள் நபி ஸல் அவர்களிடம் இருந்து பெற்றுக் கொண்டார்கள். எனவே அவர்கள் நபி ஸல் அவர்களுக்குப் பிறகு முதன்மை குர்ஆன் விரிவுரையாளர்களாக இருக்கிறார்கள். நான்காவது இமாம்கள். இமாம்களிடமும் இவை அனைத்தும் காணப்பட்டது. குர்ஆன் விரிவுரைகளை நாம் இப்படித்தான் அணுக வேண்டும். இந்த நான்கு வழிகளில் தான் குர்ஆன் வசனங்களுக்கான விளக்கங்களைத் தேட வேண்டும்.

அந்தப் பதினைந்து விஷயங்களில் இறுதியாகக் கூறப்பட்ட இறைவன் புறத்திலிருந்து நேரடியாக வழங்கப்படும் அறிவு என்பது மனித முயற்சியால் கிடைக்கும் விஷயமல்ல. அது இறையச்சத்தாலும் உலகப் பற்றற்ற வாழ்க்கையாளும் கிடைக்கும் ஒரு ஞானம். இந்த அறிவை பெறக்கூடிய தகுதியும் நம் முன்னோர்களுக்கு இருந்தது.

ﻗﺎل ﻓﻲ اﻟﺒﺮﻫﺎن : اﻋﻠﻢ أﻧﻪ ﻳﺤﺼﻞ ﻟﻠﻨﺎﻇﺮ ﻓﻬﻢ ﻣﻌﺎﻧﻲ اﻟﻮﺣﻲ ، و ﻳﻈﻬﺮ ﻟﻪ أﺳﺮاره وﻓﻲ ﻗﻠﺒﻪ ﺑﺪﻋﺔ أو ﻛﺒﺮ أو ﻫﻮى أو ﺣﺐ اﻟﺪﻧﻴﺎ ، أو وﻫﻮ ﻣﺼﺮ ﻋﻠﻰ ذﻧﺐ ، أو ﻏﻴﺮ ﻣﺘﺤﻘﻖ ﺑﺎﻹﻳﻤﺎن أو ﺿﻌﻴﻒ اﻟﺘﺤﻘﻴﻖ ، أو ﻳﻌﺘﻤﺪ ﻋﻠﻰ ﻗﻮل ﻣﻔﺴﺮ ﻟﻴﺲ ﻋﻨﺪه ﻋﻠﻢ ، أو راﺟﻊ إﻟﻰ ﻣﻌﻘﻮﻟﻪ ؛ وﻫﺬه ﻛﻠﻬﺎ ﺣﺠﺐ وﻣﻮاﻧﻊ ﺑﻌﻀﻬﺎ آﻛﺪ ﻣﻦ ﺑﻌﺾ

பதுருதீன் முஹம்மது பின் அப்துல்லாஹ் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள் ; யாரிடத்தில் பித்அத்தான காரியங்கள், பெருமை, மனோ இச்சை, உலக மோகம், பாவத்தில் தொடர்ந்திருக்கும் தன்மை, ஈமானில் உறுதி இல்லாத நிலை, தன் அறிவைக் கொண்டு மார்க்கம் சொல்லுதல், இதுபோன்ற காரியங்கள் இருக்கிறதோ அவருக்கு இறை வஹியின் அர்த்தங்கள் விளங்காது. அதன் ரகசியங்களையும் புரிந்து கொள்ள முடியாது.

மேற்கூறப்பட்ட அனைத்திலிருந்தும் பாதுகாக்கப்பட்டவர்கள் தான் ஸஹாபாக்களும் இமாம்களும். குர்ஆனில் ஒளிந்து கிடக்கும் எண்ணற்ற மர்மங்களையும் ரகசியங்களையும் நமக்கு அறிய தந்தவர்கள் தான் ஸஹாபாக்களும் நம் இமாம்களும். அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய அபாரமான ஆற்றலாலும் கல்வி அறிவாலும் நமக்கு குர்ஆன் விளக்கங்களைக் கொடுத்தார்கள். அவர்கள் இல்லையென்றால் குர்ஆனின் எண்ணற்ற வசனங்களுக்கு நமக்கு சரியான பொருள் கிடைக்காமலே போயிருக்கும்.

எனவே இறையச்சமுள்ள பேணுதல் மிக்க எல்லா தீய குணங்களை விட்டும் தங்களை பாதுகாத்துக் கொண்ட அந்த பரிசுத்தமானவர்களின் வழியாக குர்ஆனுக்கு விரிவுரைகளை தேடுவது தான் சிறந்த வழிமுறை. அது தான் குர்ஆனை நாம் அணுகும் முறை. அதைத்தாண்டி குர்ஆனுக்கு விளக்கத்தைத் தேட முற்படுவது மிகப்பெரும் அறிவீனம்.

ஆனால் இன்றைக்கு குர்ஆனுக்கு மனம் போன போக்கில் அவரவர் அறிவிற்கு எட்டியதை வைத்து விளக்கம் சொல்கிற கலாச்சாரம் பெருகி இருக்கிறது. நம் சமூகத்திலேயே இருக்கக்கூடிய மார்க்கத்தை சரியாக விளங்கிக் கொள்ளாத சிலர், குர்ஆனை அல்லாஹ் இலகுபடுத்தி இருக்கிறான். அதை யார் வேண்டுமானால் விளங்கலாம். யாரும் குர்ஆனுக்கு விளக்கம் சொல்லலாம் என்று கூறி இமாம்களின் கண்ணியத்தை துடைத்தெறித்ததோடு தங்கள் விருப்பப்படி குர்ஆன் வசனங்களுக்கு விளக்கம் சொல்லி மக்களை வழிகெடுத்தார்கள். குர்ஆனின் கண்ணியத்தை மக்கள் மனதிலிருந்து நீக்கினார்கள். மக்களை வழிகெடுப்பதற்கு அவர்கள் எடுத்துக் கொண்ட ஆயுதம் தான் அல்குர்ஆன். தங்களுடைய கருத்தாக ஒரு விஷயத்தைப் பதிவு செய்தால் மக்கள் ஏற்க மாட்டார்கள். காலங்காலமாக செய்து கொண்டிருந்த ஒரு காரியத்தை விட மாட்டார்கள். எனவே குர்ஆனையும் ஹதீஸையும் காட்டினால் தான் மக்கள் நம்புவார்கள் என்பதைப் புரிந்து கொண்ட அவர்கள், குர்ஆன் வசனங்களை தங்கள் கொள்கைக்குத் தோதுவாக வளைக்க ஆரம்பித்தார்கள். குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் தப்பர்த்தம் கொடுத்தார்கள். குர்ஆனையும் ஹதீஸையும் மேற்கோள் காட்டி தங்கள் கருத்தை சொல்ல முற்பட்டவுடன் மக்கள் அவர்கள் பக்கம் போக ஆரம்பித்தார்கள்.

وَلَا يَسْتَطِيْعُوْنَ لَهُمْ نَـصْرًا وَّلَاۤ اَنْفُسَهُمْ يَنْصُرُوْنَ‏

அவை இவர்களுக்கு எத்தகைய உதவியும் செய்ய சக்தியற்றவையாக  இருப்பதுடன், தங்களுக்குத்தாமே ஏதும் உதவி செய்து கொள்ளவும் சக்தியற்றவையாக இருக்கின்றன. (அல்குர்ஆன் : 7:192)

இது தான் இந்த ஆயத்திற்கான சரியான பொருள். ஆனால் இதற்கு அவர்கள் கொடுத்த பொருள் : மேலும் அவர்கள் இவர்களுக்கு எத்தகைய உதவி செய்ய சக்தி பெற மாட்டார்கள் தங்களுக்கு தாங்களே (ஏதும்) உதவி செய்து கொள்ளவும் சக்தி பெற மாட்டார்கள்.

அல்லாஹ் சிலைகளுக்கு குறிப்பிட்ட விஷயத்தை இவர்கள், அவை என்பதற்கு பதிலாக அவர்கள்என்று பொருள் கொடுத்து அஃறிணையை உயர் திணையாக மாற்றி சிலைகளை இறைநேசர்களாக சித்தரித்துக் காட்டி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். உதாரணத்திற்காக இந்த வசனத்தை சுட்டிக் காட்டியிருக்கிறேன்.

நம் சமூகமே குர்ஆனின் கண்ணியம் விளங்காமல் தன் சொந்த கருத்தை குர்ஆனுக்கு விளக்கமாக கொடுக்கும் போது நம் எதிரிகளைச் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. அவர்களும் இதே பானியை கையில் எடுக்க ஆரம்பித்து விட்டார்கள். மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை (2 ; 256) என்ற  வசனத்தை மேற்கோள் காட்டி இஸ்லாத்தில் எதுவும் நிர்பந்தம் இல்லை. எனவே ஹிஜாப் இஸ்லாத்தில் கட்டாயமில்லை என்று தீர்ப்பை எழுதியிருக்கிறார்கள்.  குர்ஆனுக்கு அவரவர் விளக்கம் கொடுக்க ஆரம்பித்தால் என்ன விளைவு ஏற்படும் என்பதற்கான உதாரணம் தான் கர்நாடக நீதிமன்றத்தின் தீர்ப்பு.   

குர்ஆன் என்பது சாதாரணமான வார்த்தைகள் அல்ல. இறைவனுடைய பேரற்புதமான வார்த்தைகள் அது. அவ்வளவு சீக்கிரம் அனைவராலும் இலகுவாக புரிந்து கொள்ள இயலாது. அவ்வாறு விளங்க முற்படுவதும் முறையான அறிவு இல்லாமல் குர்ஆன் வசனத்திற்கு விளக்கம் சொல்வதும் ஆபத்தானது. மார்க்கம் அதை தடை செய்திருக்கிறது.

مَن قالَ في القرآنِ برأيِهِ فأصابَ فقَد أخطأَ

குர்ஆனில் ஒருவர் தன் சுய அறிவைக் கொண்டு விளக்கம் கூறி அது சரியாகவே இருந்தாலும் அது தவறு தான். (திர்மிதி ; 2952(

قُلْ اِنَّمَا حَرَّمَ رَبِّىَ الْـفَوَاحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ وَ الْاِثْمَ وَالْبَـغْىَ بِغَيْرِ الْحَـقِّ وَاَنْ تُشْرِكُوْا بِاللّٰهِ مَا لَمْ يُنَزِّلْ بِهٖ سُلْطٰنًا وَّاَنْ تَقُوْلُوْا عَلَى اللّٰهِ مَا لَا تَعْلَمُوْنَ‏

(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "நிச்சயமாக என்னுடைய இறைவன் (ஆகாது என்று) தடுத்திருப்பதெல்லாம் பகிரங்கமாகவோ, இரகசியமாகவோ செய்யப்படும் மானக்கேடான காரியங்களையும், மற்ற பாவங்களையும், நியாயமின்றி ஒருவர் மீது (ஒருவர்)  கொடுமை செய்வதையும், யாதொரு ஆதாரமும் இல்லாதிருக்கும் போதே அல்லாஹ்வுக்கு நீங்கள் இணைவைப்பதையும், நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது (பொய்யாகக்)    கூறுவதையும் தான். (அல்குர்ஆன் : 7:33)

குர்ஆனில் சரியாக ஞானம் இல்லாமல் தன் சொந்த அறிவைக் கொண்டு விளக்கம் கூறுவதை இஸ்லாம் தடை செய்திருக்கிறது. எனவே தான் ஸஹாபாக்கள் குர்ஆன் வசனங்களுக்கு விளக்கம் சொல்வதில் மிகவும் கவனமாக செயல்பட்டார்கள். ஒரு வசனத்தைப் பற்றிய முழுமையான விளக்கம் தெரியாமல் எந்த ஸஹாபியும் அதற்கு விளக்கம் சொல்ல மாட்டார்கள். அல்லாஹுத்தஆலா அத்தகைய பேணுதலான வாழ்க்கை நமக்கு வழங்குவானாக!

 

 

 


2 comments:

  1. காலத்துக்கு ஏற்ப சிறந்த கட்டுரை மாஷா அல்லாஹ்

    அல்லாஹ் உங்களுடைய வாழ்நாளில் எல்லாவிதமான வளங்களையும் நலங்களையும் நிரப்பமாக்கிக் தந்தருள் புரிவானாக ஆமீன்

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ் இன்றைய சூழ்நிலையில் ரொம்ப அவசியமான கட்டுரை நல்ல பயான் பாரகல்லாஹு ஃபீ இல்மிக

    ReplyDelete