Saturday, December 19, 2020

நிகாஹ் பயான்

 


நிக்காஹ் என்பது வாழ்க்கையின் மிக முக்கியமான தருணம் அந்த திருமண உறவில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிற இந்த குடும்ப வாழ்க்கையில் தன்னை இணைத்துக் கொள்கிற அத்தனை பேரும் எதிர்பார்க்கிற ஒரே விஷயம்

வாழ்க்கை இன்பமாக இருக்க வேண்டும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் சந்தோசமாக அமைய வேண்டும் இவ்வளவு காலம் தனியாக இருந்து விட்டோம் இதற்கு பிறகு தனக்கு ஒரு துணை கிடைக்க வேண்டும் இன்ப துன்பங்களில் லாப நஷ்டங்களில் பங்கு எடுத்துக் கொள்கிற ஒரு துணை வேண்டும் கவலையான தருணங்களில் ஆறுதல் சொல்வதற்கும் கண்ணீரைத் துடைப்பதற்கும் வாழ்க்கையில் சரிவுகளை சந்திக்கிற பொழுது தனக்கு தோள் கொடுப்பதற்கும் ஒரு இணை வேண்டும் என்று பல்வேறு கனவுகளோடு தான் இந்த வாழ்க்கையில் இணைகிறார்கள். ஆனால் அவ்வாறு இணைகிற பலருக்கு அந்த வாழ்க்கை இனிப்பாக இருப்பதற்கு பதிலாக கசப்பாக அமைந்து விடுகிறது காரணம் நபி ஸல் அவர்களின் திருமண வாழ்க்கை குறித்த ஒரு மேலான உயர்ந்த வழிமுறையை நாம் பின்பற்றுவதில்லை


அதுதான் விட்டுக்கொடுத்து வாழ்வது பல விஷயங்களின் மூலமாக ஒரு கணவன் மனைவிக்கு இன்பத்தை கொடுக்க முடியும் காஞ்சிபுர பட்டை கொடுத்து இன்பத்தை தரலாம் பணம் துட்டைக் கொடுத்து இன்பத்தை தரலாம் நகை நட்டை கொடுத்தும் இன்பத்தை தரலாம் ஆனால் விட்டுக்கொடுத்து இன்பத்தை தருகிற அந்த வாழ்க்கை தான் மிக மிக இன்பமாக இருக்கும்



وعاشروهن بالمعروف فان كرهتموهن فعسي ان تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا



أنَّها كانت مع النَّبيِّ صلَّى اللهُ عليه وسلَّم في سفَرٍ، قالت: فسابَقْتُهُ فسبَقْتُهُ على رِجْلَيَّ، فلمَّا حمَلْتُ اللَّحْمَ سابَقْتُهُ فسبَقني، فقال: هذه بتِلك السَّبْقةِ. .


الراوي: عائشة أم المؤمنين المحدث: أبو داود - المصدر: سنن أبي داود - الصفحة أو الرقم: 2578


இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களுக்கும் இடையே நடந்த இந்த ஓட்டப்பந்தயத்தில் முதல் தடவை நபியவர்கள் தோற்றுப்போக அன்னை ஆயிஷா வெற்றி பெறுகிறார்கள் மறு தடவை அன்னை ஆயிஷா தோற்றுப்போக நபியவர்கள் வெற்றி பெறுகிறார்கள் என்பது இந்த ஹதீஸின் வெளிப்படையான பார்வை. இந்த ஹதீஸை உற்று நோக்கக் கூடிய ஞானிகள் ஹதீஸ்கலை வல்லுநர்கள் நடந்த ஓட்டப்பந்தயத்தில் இருமுறையும் நபியவர்கள் தான் வெற்றி பெற்றார்கள் என்று கூறுகிறார்கள் அது எப்படி என்று உங்களுக்கு சந்தேகம் எழலாம்


முதல்முறை தோற்றுப் போனார்கள் என்றால் நபி அவர்களால் வெற்றி பெற முடியவில்லை என்றா பொருள் ?  இல்லை இல்லை நபியவர்களுக்கு வெற்றி பெறுவதற்குரிய எல்லா தகுதியும் முழுமையான பலமும் அவர்களுக்கு இருந்தது


ஒரு இரவின் சிறு பகுதியில் ஏழு வானங்களை கடந்து பயணத்தை மேற்கொண்டவர்கள்


யாரும் தாங்க முடியாத அளவு மிகப்பெரும் கனமாக இருக்கக்கூடிய வஹியின் கணத்தை 23 ஆண்டுகளுக்கு மேலாக அதை சுமந்தவர்கள்


كنتُ أكتُبُ لرسولِ اللهِ صلَّى اللهُ عليه وسلَّمَ، فقال: اكتُبْ {لَا يَسْتَوِي الْقَاعِدُونَ مِنَ الْمُؤْمِنِينَ غَيْرُ أُولِي الضَّرَرِ وَالْمُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ} [النساء: 95]، فجاء عبدُ اللهِ ابنُ أمِّ مَكْتومٍ فقال: يا رسولَ اللهِ، إنِّي أُحِبُّ الجِهادَ في سبيلِ اللهِ، ولكنْ بي مِنَ الزَّمانةِ ما قد تَرى، ذهَبَ بَصَرِي، قال زَيدٌ: فثَقُلَتْ فَخِذُ رسولِ اللهِ صلَّى اللهُ عليه وسلَّمَ على فَخِذي، حتَّى خَشيتُ أنْ تَرُضَّها، ثمَّ سُرِّيَ عنه، ثمَّ قال: اكتُبْ {لَا يَسْتَوِي الْقَاعِدُونَ مِنَ الْمُؤْمِنِينَ غَيْرُ أُولِي الضَّرَرِ وَالْمُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ} [النساء: 95]. .


الراوي: زيد بن ثابت المحدث: أحمد شاكر - المصدر: عمدة التفسير - الصفحة أو الرقم: 1/558


இரண்டு நபர்களுக்கு ஏற்படக்கூடிய காய்ச்சலின் பாதிப்பை சந்தித்தவர்கள்


دَخَلْتُ علَى رَسولِ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ وهو يُوعَكُ وعْكًا شَدِيدًا، فَمَسِسْتُهُ بيَدِي فَقُلتُ: يا رَسولَ اللَّهِ، إنَّكَ لَتُوعَكُ وعْكًا شَدِيدًا؟ فقالَ رَسولُ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ: أجَلْ، إنِّي أُوعَكُ كما يُوعَكُ رَجُلانِ مِنكُم فَقُلتُ: ذلكَ أنَّ لكَ أجْرَيْنِ؟ فقالَ رَسولُ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ: أجَلْ ثُمَّ قالَ رَسولُ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ: ما مِن مُسْلِمٍ يُصِيبُهُ أذًى، مَرَضٌ فَما سِواهُ، إلَّا حَطَّ اللَّهُ له سَيِّئاتِهِ، كما تَحُطُّ الشَّجَرَةُ ورَقَها. .


الراوي: عبدالله بن مسعود المحدث: البخاري - المصدر: صحيح البخاري - الصفحة أو الرقم: 5660


இத்தனை பெரிய ஆற்றலுடைய நபியவர்களால் வெற்றி பெற முடியவில்லை என்று சொல்வது எப்படி பொருந்தும்? எனவே நடந்த அந்த ஓட்டப்பந்தயத்தில் நபியவர்கள் தோற்றுப் போகவில்லை மாறாக அன்னை ஆயிஷா அவர்களை வெற்றி பெற வைத்தார்கள் என்று சொல்வதுதான் மிகப் பொருத்தமானதாக இருக்கும். தன் மனைவியான அன்னை ஆயிஷா அவர்களை வெற்றி பெற வைத்து அதன்மூலம் அவர்களை மகிழ்ச்சி அடையச் செய்து அவர்களும் மகிழ்ந்தார்கள்


மனைவியிடத்தில் தோற்றுப் போவதில் கூட வெற்றி இருக்கிறது என்பதை உலகிற்கு உணர்த்தியவர்கள் நபிகள் நாயகம் ஸல் அவர்கள்

இன்று நம்மில் பலருக்கு மனைவியிடத்தில் தோற்றுப் போவதற்கு கொஞ்சம் வெட்கம் ஆம்பள கெத்து எல்லா சமயங்களிலும் மனைவியிடத்தில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற துடிப்பு. அதனால் வாழ்க்கையில் பல்வேறு கட்டங்களில் நாம் தோற்றுப் போய் விடுகிறோம் ஆனால் மனைவியிடத்தில் தோற்றுப் போவதில் தான் வாழ்க்கையின் வெற்றி இருக்கிறது என்பதை நபியவர்களின் இந்த வரலாறு நமக்கு அழகான முன்னுதாரணமாக விளங்குகிறது.


أكرموا النساء فوالله ما أكرمهن إلا كريم، ولا أهانهن إلا لئيم، يغلبن كل كريم ويغلبهن لئيم، وأنا أحب أن أكون كريماً مغلوباً، من أن أكون لئيماً غالباً


[ابن عساكر عن علي]


No comments:

Post a Comment