Thursday, March 4, 2021

பரக்கத் வேண்டுமா

 


والبَرَكَة تعني تكاثرَ الخير ونمائه واستقراره واستمراره

நலவு அதிகமாகுதல், வளர்ச்சியடைதல், தரிபட்டிருத்தல், நீடித்திருத்தல் என்பது பரக்கத் என்ற வார்த்தைக்கு சொல்லப்படும் அர்த்தங்களில் ஒன்று. (அல்முஃஜமுல் வஸீத் ; 49)

இன்றைக்கு உலகில் இருக்கிற அத்தனை பேரும் தன் வாழ்வில் நலவுகள் ஏற்பட வேண்டும். அது வளர்ந்து கொண்டே போக வேண்டும்.அது நீங்காமல் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள். அந்த வகையில் பார்க்கின்ற போது பரக்கத் என்பது இறைவனுடைய அளப்பெரும்  நிஃமத்துக்களில் ஒன்று. எனவே அதைத் தேடுவதும் முயற்சிப்பதும் அதைப் பெறுவதற்கு ஆசைப்படுவதும் தான் ஒரு மூஃமினின் முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும்.

இறைவனின் அளப்பெரும் நிஃமத்தாக பார்க்கப்படுகின்ற பரக்கத்தை பெற்றுக் கொள்வதற்கு மார்க்கம் குர்ஆன் ஹதீஸின் வழியாக சில வழிமுறைகளை கற்றுத் தருகின்றது.

1, இறையச்சம்.

 وَلَوْ أَنَّ أَهْلَ الْقُرَى آمَنُوا وَاتَّقَوْا لَفَتَحْنَا عَلَيْهِم بَرَكَاتٍ مِّنَ السَّمَاءِ وَالأَرْضِ وَلَكِن كَذَّبُوا فَأَخَذْنَاهُم بِمَا كَانُوا يَكْسِبُونَ

நிச்சயமாக அவ்வூர்வாசிகள் ஈமான் கொண்டு அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்திருந்தால், நாம் அவர்களுக்கு வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் - பரக்கத்துகளை - பாக்கியங்களைத் திறந்து விட்டிருப்போம்; ஆனால் அவர்கள் (நபிமார்களை நம்பாது) பொய்ப்பித்தனர், ஆகவே அவர்கள் செய்து கொண்டிருந்த (பாவத்)தின் காரணமாக நாம் அவர்களைப் பிடித்தோம். (அல்குர்ஆன் : 7 ; 96)

وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجاً . وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لا يَحْتَسِبُ وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ

எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கின்றாரோ, அவருக்கு அவன் (தக்க ஒரு) வழியை உண்டாக்குவான்.அ(த்தகைய)வருக்கு, அவர் எண்ணியிராத புறத்திலிருந்து, அவன் உணவு (வசதி)களை அளிக்கிறான்; மேலும், எவர், அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு அவனை முற்றிலும் சார்ந்திருக்கிறாரோ, அவருக்கு அவனே போதுமானவன். (அல்குர்ஆன் : 65 ; 2,3)

பரக்கத் கிடைப்பதற்கு இறையச்சம் அவசியம். குறிப்பாக எதில் நாம் அதிகம் பரக்கத்தை எதிர்பார்க்கிறோமோ அத்தகைய வியாபாரத்திலும் கொடுக்கல் வாங்கலிலும் இறையச்சம் மிக மிக அவசியம்.

நமது பொருளாதாரத்தில் அபிவிருத்தியைப் பெற வேண்டுமானால் நாம் பொருளாதாரத்தை திரட்டும் போது, இஸ்லாம் அனுமதித்த முறையில் இறைவனுக்கு பயந்து இறையச்சத்தோடு அதைத் திரட்ட வேண்டும். அவ்வாறு  திரட்டினால் தான் அவனின் பரக்கத்தை அடைய முடியும். இல்லா விட்டால் நமக்கு எவ்வளவு பொருளாதரம் கிடைத்தாலும் அதில் பரக்கத் இல்லாமல் போய் விடும்.

இன்றைக்கு நம் சமுதாயத்திலிருந்து பரக்கத் எடுபட்டுப் போனதற்கு  காரணம் நம் வியாபரத்தில் வட்டி போன்ற மார்க்கம் அனுமதிக்காத காரியங்களை செய்வது தான் என்பதை நாம் இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்க வேண்டும்.

 

2, நன்றி செலுத்துதல்

لئن شكرتم لازيدنكم

நீங்கள் நன்றி செலுத்தினால் உங்களுக்கு நான் அதிகப்படுத்துவேன். (அல்குர்ஆன் : 14 ; 7)

நன்றி செலுத்தியதால் உயர்வு பெற்ற வரலாறுகளும் நன்றி மறந்ததினால் அழிந்து போன வரலாறுகளும் குர்ஆனில் நிறையவே உண்டு.இப்ராஹீம் நபியை தேர்வு செய்தோம் என்று சொல்லும் இடத்தில் அதற்கான காரணங்களை கூறும் போது அவர்களின் சிறந்த பண்புகளில் ஒன்றாக நிஃமத்துகளுக்கு நன்றி செலுத்து  பவராகவும் இருந்தார் என்று நஹ்ல் அத்தியாயத்தில் அல்லாஹ் குறிப்பிடுகிறான். அதேபோன்று நன்றி மறந்த பல சமுதாயங்களை இறைவன் அழித்த வரலாறு  களையும் குர்ஆனில் அநேக இடங்களில் காண முடியும்.

لَقَدْ كَانَ لِسَبَأٍ فِي مَسْكَنِهِمْ آيَةٌ جَنَّتَانِ عَن يَمِينٍ وَشِمَالٍ كُلُوا مِن رِّزْقِ رَبِّكُمْ وَاشْكُرُوا لَهُ بَلْدَةٌ طَيِّبَةٌ وَرَبٌّ غَفُورٌ  فَأَعْرَضُوا فَأَرْسَلْنَا عَلَيْهِمْ سَيْلَ الْعَرِمِ وَبَدَّلْنَاهُم بِجَنَّتَيْهِمْ جَنَّتَيْنِ ذَوَاتَيْ أُكُلٍ خَمْطٍ وَأَثْلٍ وَشَيْءٍ مِّن سِدْرٍ قَلِيلٍ

நிச்சயமாக ஸபா நாட்டினருக்கு, அவர்கள் வசித்திருந்த இடங்களில் ஓர் அத்தாட்சி இருந்தது. (அதன்) வலப்புறத்திலும் இடப்புறத்திலும் இரண்டு சோலைகள் இருந்தன; “உங்கள் இறைவன் அளித்துள்ள ஆகாரத்திலிருந்து புசியுங்கள்; அவனுக்கு நன்றியும் செலுத்தி வாருங்கள். (அது மணமுள்ள) வளமான நகரம்; இன்னும் (அவன்) மன்னிப்பளிக்கும் இறைவன்” (என்று அவர்களுக்குக் கூறப்பட்டது). 

ஆனால் அவர்கள் (இப்போதனையைப்) புறக்கணித்தார்கள்; ஆகவே, அல் அரிம் (என்னும் பெரும் அணையை உடைக்கும்) கடும் பிரவாகத்தை அவர்கள் மீது அனுப்பினோம், இன்னும் (சுவை மிக்க கனிகளைக் கொண்ட) அவர்களுடைய இரு தோப்புகளை கசப்பும் புளிப்புமுள்ள பழங்களுடைய மரங்களும், சில இலந்தை மரங்களும் உடைய இரு தோட்டங்களாக மாற்றினோம். (அல்குர்ஆன் : 34 ; 15,16)

 

3، இஸ்திக்ஃபார்.

فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إنَّهُ كَانَ غَفَّاراً . يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُم مِّدْرَاراً . وَيُمْدِدْكُم بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَل لَّكُمْ جَنَّاتٍ وَيَجْعَل لَّكُمْ أَنْهَاراً]

மேலும், “நீங்கள் உங்களுடைய இறைவனிடம் மன்னிப்புத் தேடுங்கள்; நிச்சயமாக அவன் மிகவும் மன்னிப்பவன்என்றுங் கூறினேன்.அப்படிச் செய்வீர்களாயின்) அவன் உங்கள் மீது தொடர்ந்து மழையை அனுப்புவான்.அன்றியும் அவன் உங்களுக்குப் பொருள்களையும், புதல்வர்களையும் கொண்டு உதவி செய்வான்; இன்னும், உங்களுக்காகத் தோட்டங்களை உண்டாக்குவான்; உங்களுக்காக ஆறுகளையும் (பெருக்கெடுத்து ஓடுமாறு) உண்டாக்குவான். (அல்குர்ஆன் : 71 ;10,11,12)

وَأَنِ اسْتَغْفِرُوا رَبَّكُمْ ثُمَّ تُوبُوا إلَيْهِ يُمَتِّعْكُم مَّتَاعاً حَسَناً إلَى أَجَلٍ مُّسَمًّى وَيُؤْتِ كُلَّ ذِي فَضْلٍ فَضْلَهُ

நீங்கள் உங்கள் இறைவனிடம் மன்னிப்பைத் தேடி (பாவங்களை விட்டு) அவனிடம் திரும்புங்கள்; (நீங்கள் அவ்வாறு செய்தால்) அவன் ஒரு குறித்த தவணைவரை உங்களுக்கு வாழ்க்கை வசதிகளை ஏற்படுத்துவான்; இன்னும், அருளுடைய ஒவ்வொருவருக்கும் (மறுமையில்) தன் அருளை (அதிகமாகவே) கொடுப்பான். (அல்குர்ஆன் : 11 ; 3)

وعنِ ابْنِ عَبَّاسٍ رضِي اللَّه عنْهُما قَال: قالَ رَسُولُ اللَّهِ : منْ لَزِم الاسْتِغْفَار، جَعَلَ اللَّه لَهُ مِنْ كُلِّ ضِيقٍ مخْرجًا، ومنْ كُلِّ هَمٍّ فَرجًا، وَرَزَقَهُ مِنْ حيْثُ لاَ يَحْتَسِبُ .

எவர் பாவமன்னிப்பை அவசியமாக்கிக் கொள்கிறாரோ அவருக்கு எல்லா நெருக்கடியிலிருந்தும் விடுதலையையும் அனைத்து கவலையிலிருந்து மகிழ்ச்சியையும் அல்லாஹ் ஏற்படுத்துவான். மேலும் அவன் அறியாத புறத்திலிருந்து அவனுக்கு உணவளிப்பான். (அபூதாவூது ; 1518)

 

4، துஆ.

 فعن أنس قال: "مَاتَ ابْنٌ لِأَبِي طَلْحَةَ، مِنْ أُمِّ سُلَيْمٍ، فَقَالَتْ لِأَهْلِهَا: لَا تُحَدِّثُوا أَبَا طَلْحَةَ بِابْنِهِ حَتَّى أَكُونَ أَنَا أُحَدِّثُهُ. قَالَ: فَجَاءَ فَقَرَّبَتْ إِلَيْهِ عَشَاءً، فَأَكَلَ وَشَرِبَ، فَقَالَ: ثُمَّ تَصَنَّعَتْ لَهُ أَحْسَنَ مَا كَانَتْ تَصَنَّعُ قَبْلَ ذَلِكَ، فَوَقَعَ بِهَا. فَلَمَّا رَأَتْ أَنَّهُ قَدْ شَبِعَ وَأَصَابَ مِنْهَا، قَالَتْ: يَا أَبَا طَلْحَةَ أَرَأَيْتَ لَوْ أَنَّ قَوْماً أَعَارُوا عَارِيَتَهُمْ أَهْلَ بَيْتٍ، فَطَلَبُوا عَارِيَتَهُمْ، أَلَهُمْ أَنْ يَمْنَعُوهُمْ؟ قَالَ: لَا، قَالَتْ: فَاحْتَسِبِ بما كان ابْنَكَ. فغضِب أبو طلحة وانطلق حتى أتى رسولَ الله صلى الله عليه وسلم فأخبره، فقال رسول الله صلى الله عليه وسلم: «بَارَكَ اللهُ لَكُمَا فِي غَابِرِ لَيْلَتِكُمَا». قال: فحَمَلَتْ وأنجبت بعد ذلك عشرةَ أولادٍ كلهم يقرؤون القرآن.

உம்மு சுலைம் மூலமாக அபூ தல்ஹாவுக்குப் பிறந்த குழந்தை இறந்து விடுகின்றது. உடனே உம்மு சுலைம் தம் குடும்பத்தாரை நோக்கிஅவரது மகனின் (இறப்புச்) செய்தியை நான் அவரிடம் தெரிவிக்கும் வரை நீங்கள் தெரிவிக்காதீர்கள் என்று சொன்னார். அவர் வந்ததும் இரவு உணவை வழங்கினார். அவர் சாப்பிட்டு முடித்து நீர் பருகவும் துவங்கினார். பிறகு உம்மு சுலைம் இதற்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அபூதல்ஹாவிடம் காட்சியளித்தார். அவர் நன்றாகச் சாப்பிட்டு விட்டு இல்லறத்தில் ஈடுபட்டதும், “அபூ தல்ஹாவே! ஒரு கூட்டத்தார் ஒரு பொருளை ஒரு வீட்டாரிடம் இரவலாகக் கொடுக்கின்றனர். பின்னர் தாங்கள் இரவல் கொடுத்த பொருளைத் திருப்பிக் கேட்கும் போதுஅவ்வீட்டார் கொடுக்காமல் இருப்பது முறையாகுமா?’’ என்று கேட்கின்றார். அதற்கு அபூ தல்ஹா (ரலி), “கூடாது’’ என்று பதிலளித்தார். “(அது போலத் தான்) உங்கள் மகனின் நிலையைக் கருதிக் கொள்ளுங்கள்’’ என்று சொல்கின்றார். அதற்கு அபூ தல்ஹா (ரலி) கோபப்படுகின்றார். பிறகு அல்லாஹ்வின் தூதர் அவர்களிடம் சென்று நடந்ததைத் தெரிவிக்கின்றார். அதற்கு நபி அவர்கள், “சென்று விட்ட அந்த இரவில் அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக’’ என்று துஆச் செய்தார்கள்.

அந்த இருவருக்கும் பத்து குழந்தைகள் இருப்பதை நான் பார்த்தேன். அவர்கள் அனைவரும் குர்ஆனை ஓதுபவர்களாக இருந்தனர் என்று மதீனாவைச் சேர்ந்த அன்சாரிகளில் ஒருவர் கூறினார்’’ என்று சுஃப்யான் ரஹ் அவர்கள் கூறுகின்றார்.  (முஸ்லிம் ; 2144)

 

5, வியாபாரத்தில் உண்மை.

البَيِّعانِ بالخِيارِ ما لَمْ يَتَفَرَّقا، فإنْ صَدَقا وبَيَّنا بُورِكَ لهما في بَيْعِهِما، وإنْ كَذَبا وكَتَما مُحِقَتْ بَرَكَةُ بَيْعِهِما

விற்பவரும் வாங்குபவரும் பிரியாமலிருக்கும் வரை வியாபாரத்தை முறித்துக் கொள்ளும் உரிமை இருவருக்கும் உண்டு! அவ்விருவரும் உண்மை பேசிக்குறைகளைத் தெளிவுபடுத்தியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் பரக்கத் (அருள் வளம்) அளிக்கப்படும்! குறைகளை மறைத்துப் பொய் சொல்லியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் உள்ள பரக்கத் நீக்கப்படும்!"  (புகாரி ; 2110)

 

நாம் செய்யும் வியாபாரத்தில் பொருள்களின் சரியான தரத்தை சொல்லி விற்க வேண்டும். பொருள்களில் குறை நிறைகளை சொல்லி விற்க வேண்டும். அப்படி சொல்லி விற்கும்  போது நமது வியாபாரத்தில் அருள்வளம் உண்டாகும். குறைகளை மறைத்தும், சரியான தரத்தை சொல்லாமலும் விற்கும் போது நமது பொருளில் அருள் வளம் எடுக்கப்பட்டு விடும் என்பதை இந்த ஹதீஸ் தெளிவு படுத்துகிறது.

 

6, பேராசையின்மை.

وعن ثوبان قال: "جاء حَكِيم بن حِزام فسأل النبي صلى الله عليه وسلم فأعطاه، ثم سأله فأعطاه، ثم سأله فأعطاه، فقال: «يَا حَكِيمُ، إِنَّ هَذَا المَالَ خَضِرَةٌ حُلْوَةٌ، فَمَنْ أَخَذَهُ بِسَخَاوَةِ نَفْسٍ بُورِكَ لَهُ فِيهِ، وَمَنْ أَخَذَهُ بِإِشْرَافِ نَفْسٍ لَمْ يُبَارَكْ لَهُ فِيهِ، كَالَّذِي يَأْكُلُ وَلاَ يَشْبَعُ، اليَدُ العُلْيَا خَيْرٌ مِنَ اليَدِ السُّفْلَى». قَالَ حَكِيمٌ: فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، وَالَّذِي بَعَثَكَ بِالحَقِّ لاَ أَرْزَأُ أَحَداً بَعْدَكَ شَيْئاً حَتَّى أُفَارِقَ الدُّنْيَا، فَكَانَ أَبُو بَكْرٍ رضي الله عنه يَدْعُو حَكِيماً إِلَى العَطَاءِ، فَيَأْبَى أَنْ يَقْبَلَهُ مِنْهُ، ثُمَّ إِنَّ عُمَرَ رضي الله عنه  دَعَاهُ لِيُعْطِيَهُ فَأَبَى أَنْ يَقْبَلَ مِنْهُ شَيْئاً، فَقَالَ عُمَرُ: إِنِّي أُشْهِدُكُمْ يَا مَعْشَرَ المُسْلِمِينَ عَلَى حَكِيمٍ أَنِّي أَعْرِضُ عَلَيْهِ حَقَّهُ مِنْ هَذَا الفَيْءِ فَيَأْبَى أَنْ يَأْخُذَهُ، فَلَمْ يَرْزَأْ حَكِيمٌ أَحَداً مِنَ النَّاسِ بَعْدَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم حَتَّى تُوُفِّيَ"

நான் ரஸூல் அவர்களிடம் சென்று கேட்டேன். அவர்கள் எனக்குக் கொடுத்தார்கள். பிறகு அவர்களிடம் கேட்டேன். அவர்கள் எனக்குக் கொடுத்தார்கள். மீண்டும் அவர்களிடம் கேட்டேன். அவர்கள் எனக்குக் கொடுத்தார்கள். பிறகு இந்தச் செல்வம் பசுமையானதும் இனிப்பானதுமாகும். யார் இதனைத் தூய மனதுடன் பெறுகிறாரோ, அவருக்கு பரக்கத் வழங்கப்படும். யார் இதனைப் பேராசையுடன் எடுத்துக் கொள்கிறாரோ அவருக்கு பரக்கத் வழங்கப்படாது. அவர் சாப்பிட்டும் வயிறு நிரம்பாதவரைப் போன்று. கொடுக்கும் கை வாங்கும் கையை விடச் சிறந்ததுஎன்று நபியவர்கள் கூறினார்கள்.

அப்போது ஹகீம் (ரலி), ‘அல்லாஹ் வின் தூதரே! உங்களை சத்தியத்துடன் அனுப்பி வைத்தவன் மீது ஆணையாக! உங்களுக்குப் பின் எவரிடத்திலும் எதையும் நான் தர்மமாகக் கேட்க மாட்டேன்என்று கூறினார். இதன் பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் அவருக்கு ஸகாத்தைக் கொடுக்க அழைத்தார். அவர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. பிறகு உமர் (ரலி) அவர்கள் தம் ஆட்சிக் காலத்தில் அவருக்கு தர்மம் கொடுப்பதற்காக அழைத்தார்கள். அவர் அதை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார். அப்போது உமர் (ரலி) அவர்கள், ‘முஸ்லிம் சமுதாயமே! நான் ஹகீமை கனீமத் பொருட்களில் அவருக்குள்ள பங்கைப் பெற்றுக் கொள்ளுமாறு அழைக்கிறேன். அவரோ அதை மறுக்கிறார். இதற்கு நீங்களே சாட்சி!என்று கூறினார்.(புகாரி ; 3143)

 

ஹகீம் நபியவர்களுக்குப் பின் வேறு யாரிடமும் தாம் மரணிக்கும் வரை எதையும் கேட்கவே இல்லைஎன ஸயீத் இப்னு முஸய்யப் ரலி அவர்கள் கூறுகிறார்கள். 

 

இந்த செய்தியின் மூலம் செல்வத்தை பேராசையில்லாமல் எடுத்தால் பரகத்தை பெற முடியும். பேராசையுடன் பெற்றுக் கொள்ளப்படும் செல்வத்தில் பரக்கத் இல்லாமல் போய் விடும் என்பதை உணர முடிகின்றது.

 

7, உறவுகளை சேர்ந்து வாழுதல்.

عن أنسٍ رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: «مَنْ أَحَبَّ أَنْ يُبْسَطَ لَهُ فِي رِزْقِهِ، وَيُنْسَأَ لَهُ فِي أَثَرِهِ، فَلْيَصِلْ رَحِمَهُ»:

உணவில் விஸ்தீரணத்தையும் ஆயுளில் பரக்கத்தையும் எவர் விரும்புகிறாரோ அவர் தன் உறவோடு சேர்ந்து வாழ்ந்து கொள்ளட்டும். (புகாரி ; 2067)

 

8, அதிகாலை நேரம்.

فعن صَخْر بن وَدَاعَة الغامِدِيِّ رضي الله عنه أن النبيَّ صلى الله عليه وسلم قال: «اللَّهُمَّ بَارِكْ لِأُمَّتِي فِي بُكُورِهَا»، وَكَانَ إِذَا بَعَثَ سَرِيَّةً أَوْ جَيْشاً بَعَثَهُمْ مِنْ أَوَّلِ النَّهَارِ، وَكَانَ صَخْرٌ رَجُلاً تَاجِراً، وَكَانَ يَبْعَثُ تِجَارَتَهُ مِنْ أَوَّلِ النَّهَارِ فَأَثْرَى وَكَثُرَ مَالُهُ.

யாஅல்லாஹ், என்னுடைய சமுதாயத்தினருக்கு அதிகாலையில் பரக்கத் செய்வாயாக!என்று   அவர்கள் துஆச் செய்துள்ளார்கள். மேலும், அவர்கள் சிறிய படை அல்லது பெரும்படையை அனுப்பி வைக்கும் போது அவர்களைக் காலை நேரத்தில் அனுப்பி வைப்பார்கள். ஹஜ்ரத் ஸக்ர் (ரலி) அவர்கள் வியாபாரியாக இருந்தார்கள், அவர்கள் தமது வியாபாரப் பொருட்களைக் காலைப் பொழுதில் தன் வேலையாட்கள் மூலம் விற்பனைக்கு அனுப்பி வைப்பார்கள். அதனால் அவர்கள் செல்வந்தரானார்கள், (அவர்களின் செல்வம் பெருகிவிட்டது) (அபூதாவூத் ; 2606)

 

9, சேர்ந்து சாப்பிடுவது.

وعن عمر بن الخطاب رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: «كُلُوا جَمِيعاً وَلَا تَفَرَّقُوا؛ فَإِنَّ طَعَامَ الْوَاحِدِ يَكْفِي الِاثْنَيْنِ، وَطَعَامَ الِاثْنَيْنِ يَكْفِي الثلاثة والْأَرْبَعَةَ، كُلُوا جَمِيعاً وَلَا تَفَرَّقُوا؛ فإن البَرَكَة في الجماعة»]،

நீங்கள் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுங்கள்; பிரிந்து விடாதீர்கள். ஏனெனில், நிச்சயமாக ஒருவரின் உணவு இருவருக்குப் போதுமானதாகும். இருவரின் உணவு மூவருக்குப் போதுமானதாகும். மேலும், நால்வருக்குக்கூட போதுமானது. அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுங்கள். பிரிந்து விடாதீர்கள். அபிவிருத்தி என்பது ஒரு கூட்டமைப்பில் தான் உள்ளது. (இப்னுமாஜா ; 3287)

يا رسولَ اللَّهِ إنَّا نأكلُ ولا نَشبعُ قالَ: فلعلَّكُم تأكُلونَ متفرِّقينَ ؟ قالوا: نعَم، قالَ: فاجتَمعوا على طعامِكُم، واذكُروا اسمَ اللَّهِ علَيهِ، يبارَكْ لَكُم فيهِ

அல்லாஹ்வின் தூதர் அவர்களே நாங்கள் சாப்பிடுகிறோம். ஆனால் வயிறு நிரம்புவதில்லை. (அதாவது திருப்தியாக இருப்பதில்லை) என்று சிலர் வந்து சொன்ன பொழுது, நீங்கள் தனித்தனியாக சாப்பிடுகிறீர்களா என்று கேட்டார்கள் ஆம் என்று அவர்கள் சொன்னார்கள். அப்போது நபியவர்கள் நீங்கள் சேர்ந்து சாப்பிடுங்கள். சாப்பிடும் போது பிஸ்மில்லா சொல்லிக் கொள்ளுங்கள் அதிலே உங்களுக்கு பரக்கத் செய்யப்படும் என்று கூறினார்கள். (இப்னுமாஜா ; 2674)

 

10, ஸதகா.

وما أنفقتم من شيء فهو يخلفه

நீங்கள் எந்தப் பொருளை (அல்லாஹ்வின் பாதையில்) செலவு செய்தாலும் அவன் அதற்குப் பிரதிபலன் அளிக்கிறான். (அல்குர்ஆன் : 34 ; 39)

وفي الحديث القدسي: قال الله تبارك وتعالى: « يا ابن آدم أنفق، أُنفق عليك].

ஆதமின் மகனே நீ செலவு செய். நான் உனக்கு தருகிறேன் என்று அல்லாஹ் கூறினான். (முஸ்லிம் ; 993)

وعن أبي هُريرة  قَالَ: قالَ رَسُول اللَّه : مَا مِنْ يَوْمٍ يُصبِحُ العِبادُ فِيهِ إِلَّا مَلَكَانِ يَنْزِلانِ، فَيَقُولُ أَحَدُهُمَا: اللَّهُمَّ أَعْطِ مُنْفِقًا خَلَفًا، وَيَقُولُ الآخَرُ: اللَّهُمَّ أَعْطِ مُمْسِكًا تَلَفًا متفقٌ عَلَيْهِ.

அனுதினமும் அதிகாலை இரு மலக்குகள் (வானத்திலிருந்து) இறங்குகின்றனர். ஒருவர், “யா அல்லாஹ்! தர்மம் செய்பவர்க்கு பிரதி பலனைக்கொடுஎன்று சொல்கிறார். மற்றொருவர், “யா அல்லாஹ்! தேக்கி வைப்பவரின் பொருளை அழித்து விடுஎன்று சொல்கிறார். (புகாரி ; 1442)

 

11, போதுமென்ற மனம்.

 

أَنَّ اللَّهَ يَبْتَلِي عَبْدَهُ بِمَا أَعْطَاهُ ، فَمَنْ رَضِيَ بِمَا قَسَمَ اللَّهُ لَهُ ، بَارَكَ اللَّهُ لَهُ فِيهِ ، وَوَسَّعَهُ ، وَمَنْ لَمْ يَرْضَ لَمْ يُبَارِكْ لَهُ.

அல்லாஹ் தன்னுடைய அடியானுக்கு கொடுத்த பொருளில் அவனை சோதனை செய்கிறான். யார் அல்லாஹ் கொடுத்ததை பொருந்திக்கொள்கிறாரோ அவருக்கு அதில் பரக்கத் செய்கிறான். யார் அல்லாஹ் கொடுத்ததில் திருப்தி கொள்ள வில்லையோ அதில் அல்லாஹ் பரக்கத் செய்வதில்லை. (அஹ்மது ;19398)

 

12, மறுமையின் நோக்கம்.

« مَنْ كَانَتِ الآخِرَةُ هَمَّهُ جَعَلَ اللَّهُ غِنَاهُ فِى قَلْبِهِ وَجَمَعَ لَهُ شَمْلَهُ وَأَتَتْهُ الدُّنْيَا وَهِىَ رَاغِمَةٌ وَمَنْ كَانَتِ الدُّنْيَا هَمَّهُ جَعَلَ اللَّهُ فَقْرَهُ بَيْنَ عَيْنَيْهِ وَفَرَّقَ عَلَيْهِ شَمْلَهَ وَلَمْ يَأْتِهِ مِنَ الدُّنْيَا إِلاَّ مَا قُدِّرَ لَهُ ».

யாருடைய எண்ணம் மறுமையை நோக்கி இருக்கிறதோ அவருடைய உள்ளத்தில் போதுமென்ற நிலையை அல்லாஹ் உருவாக்கி விடுவான். அவருடைய காரியங்களை ஒன்றுகூடச் செய்வான். உலகம் சரணடைந்து அவருக்கு ஓடிவரும். யாருடைய எண்ணம், உலகத்தை நாடி இருக்கிறதோ அவருடைய கண்ணுக்கு முன் ஏழ்மையை கொண்டு வருவான். அவருடைய காரியங்களை சிதறடித்து விடுவான் உலகத்தில் அவருக்கு ஏற்படுத்தப்பட்ட அளவு (மட்டும்) வரும் என்று. (திர்மிதி ; 2389)

 

13, நபியின் வார்த்தைக்குக் கட்டுப்படுவது.

فقال رسولُ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم لرَجُلٍ مِنَ الأنصارِ: زوِّجْني ابنَتَكَ، قال: نعم وكرامةً يا رسولَ اللهِ ونُعمةَ عَيْنٍ. قال: إنِّي لستُ أُريدُها لنفْسِي، قال: فلمَنْ يا رسولَ اللهِ ؟ قال: لجُلَيْبِيبٍ، قال: أُشاوِرُ أُمَّها، فقال: رسولُ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم يَخُطُبُ ابنتَكِ، قالت: نعم ونُعمةَ عَيْنٍ، فقال: إنَّه ليس يَخطُبُها لنفْسِه، إنَّما يَخطُبُها لجُلَيْبِيبٍ، فقالت: أُجَلَيْبِيبٌ ابنة، أجُلَيْبِيب ابنة، أجُلَيْبِيب ابنة؟ لا لَعَمْرُ اللهِ لا نُزَوِّجُه، فلمَّا أرادَ أنْ يَقُومَ لِيأتِيَ رسولَ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم فيُخبِرَ بما قالت أُمُّها قالت الجاريةُ: مَن خَطَبَني إليكم ؟ فأخبرتْها أُمُّها، فقالت: أَتَرُدُّون على رسولِ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم أمْرَه ؟ ادْفَعُوني إليه؛ فإنَّه لنْ يُضَيِّعَني. فانطَلَقَ أبوها إلى رسولِ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم، فأخْبَرَه، فقال: شأنَكَ بها، فزوَّجَها جُلَيْبِيبًا،

நபி அவர்கள் மதீனாவில் புகழ் பெற்ற ஒரு அன்சார் சஹாபியின் வீட்டுக்குச் சென்றார்கள்.  நான் உங்களது மகளை பெண் கேட்டு வந்துள்ளேன் என்று சொன்னார்கள். அந்த சஹாபியோ, யா ரசூல் அவர்களே இதை விட சிறந்த பாக்கியம் எங்களுக்கு வேறு என்ன இருக்க முடியும் என்பதாக. நபிகளார் கூறினார்கள்: நான் எனக்காக கேட்க வில்லை. எனது நண்பர் ஜுலைபீப் رضي الله عنهم அவர்களுக்காக என்றார்கள். அந்த சஹாபியோ மிக நொந்தவராக,   ஜூலைபீப் رضي الله عنهم அவருக்காகவா என்றார்கள். நபி ஆம் என்று கூறினார்கள். அப்படியானால்  நான் எனது மனைவிடம் கலந்தாலோசனை செய்து வருகிறேன் என்றார்கள். மனைவியிடம் செய்தியைச் சொன்னதும் அவர்களும் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள், இல்லை, நபியவர்கள் நம் மகளை அவர்களுக்காக கேட்க வில்லை என்ற விபரத்தை சொன்ன போது நான் ஜுலைபீப் رضي الله عنهم அவரைத் தவிர எவருக்கு வேண்டுமானாலும் எனது மகளை மணமுடித்து குடுப்பேன். அவருக்கு என் மகளைத் தர மாட்டேன் என்று  கூறி விட்டார்கள். இவர்களின் உரையாடலைக் கேட்ட மகள் விபரம் கேட்டார் தனது பெற்றோரிடம். (அந்த பெண்ணோ மதீனாவின் மிக சிறந்த அழகியாக போற்றப் பட்டவர். சிறந்த பயபக்தி உடைய அந்த பெண்மணி சதா வணக்கங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்) அந்தப் பெண் தனது தாயிடம், எனது அருமை தாயே, எல்லாம் வல்ல அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நீங்கள் நபிகளாரின் . கோரிக்கையை நிராகரிக்கப் போகிறீர்களா என்று கூறி அவர்களையே திருமணம் செய்து கொண்டார்கள்.

وحدَّثَ إسحاقُ بنُ عبدِ اللهِ بنِ أبي طَلْحةَ ثابِتًا، قال: هل تَعلَمُ ما دعا لها رسولُ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم ؟ قال: اللَّهمَّ صُبَّ عليها الخيرَ صَبًّا، ولا تَجعَلْ عَيْشَها كَدًّا كَدًّا. قال: فما كان في الأنصارِ أَيِّمٌ أَنْفَقَ منها

அந்தப் பெண்மணியைப் பார்த்து மகிழ்ந்த மா நபி அவர்கள் இறைவா! அப்பெண்மணியின் வாழ்க்கையில் அனைத்து வகையான நலவுகளையும் கொட்டுவாயாக! கேடுகளும், சோதனைகளும் நிறைந்த வாழ்வை கொடுத்து விடாதே!என்று துஆ செய்தார்கள்.

இந்த செய்தியை அறிவிக்கின்ற அபூ பர்ஸா {ரலி} அவர்கள் மதீனாவிலேயே, அன்ஸாரிப் பெண்களிலேயே இந்தப் பெண்மணியை விட செல்வச் சீமாட்டியை நாங்கள் கண்டதில்லை  என்று கூறுகின்றார்கள். (பைஹகீ ; 2/204)

அல்லாஹ் நம் அனைத்துக் காரியங்களிலும் பரக்கத் செய்வானாக. பரக்கத்தைப் பெற்றுத்தரும் அனைத்துக் காரியங்களையும் நம் வாழ்க்கையில் தருவானாக.    


3 comments:

  1. அல்ஹம்துலில்லாஹ் நிறைவான பல செய்திகள்
    படிக்கப் படிக்க இன்னும் செய்திகள் இருக்காதா என்ற ஒரு தேட்டம் உங்கள் கட்டுரையை நான் உணர்ந்தேன்
    அல்லாஹ் உங்களுக்கும் அது போன்ற நிறைவான பரக்கத்தை அடையும் வழியயும் ஞானத்தையும் அறிவாற்றலையும் நோயற்ற வாழ்வையும் குறைவற்ற செல்வத்தையும் நீடித்த ஆயுளையும் அல்லாஹ் உங்களுக்கு தந்தருள் புரிவானாக ஆமீன் ஆமீன்

    ReplyDelete
  2. ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்.

    ReplyDelete
  3. ...بارك الله فيك وفي علمك ومالك وأهلك وولدك

    ReplyDelete