Thursday, February 24, 2022

மிஃராஜ் ஈமானுக்கு சோதனை

 

இன்னும் ஓரிரு தினங்களில் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வான மிஃராஜ் பயணம் நடைபெற்ற இரவு வர இருக்கிறது. ரஜப் 27 மிஃராஜ் இரவாக இஸ்லாமிய சமூகம் கொண்டாடிக் கொண்டிருக்கிறது.

மிஃராஜ் ரஜப் 27 என்பது ஆதாரப்பூர்வமான வரலாற்று நூட்களில் பதிவு செய்யப்பட்டிருக்கிற செய்தியாகும். 

كان الاسراء قبل الهجرة بسنة  وبه جزم ابن حزم في ليلة سبع وعشرين من شهر رجب وهو الشهور وعليه عمل الناس وكان ليلة الاثنين وكان بعد خروجه الي الطائف.

நபி ஸல் அவர்கள் தன்னுடைய 50 வது வயதில் தாயிஃபுக்கு சென்று வந்தார்கள். தனது 53 ம் வயதில் மதீனாவிற்கு ஹிஜ்ரத் சென்றார்கள். அந்த இரண்டு நிகழ்விற்கு இடைப்பட்ட காலத்தில் ரஜப் மாதத்தின் 27 ம் நாள் மிஃராஜ் நடை பெற்றது என்பது தான் பிரபல்யமான கருத்து என முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்என்ற வரலாற்று நூலில் இடம் பெற்றிருக்கிறது.  

இந்தப் பயணம் இரண்டு கட்டங்களாக இரு பிரிவுகளாக நடந்தது.1 இஸ்ரா,2 மிஃராஜ். மக்காவிலிருந்து பைத்துல் முகத்தஸிற்கு சென்ற அந்த தரை வழிப் பயணத்திற்கு இஸ்ரா என்று சொல்வார்கள். அங்கிருந்து ஏழு வானங்களைக் கடந்து ஸித்ரதுல் முன்தஹாவை கடந்து அல்லாஹ்வை சந்தித்து வந்த அந்த பயணத்திற்கு மிஃராஜ் என்று சொல்வார்கள்.இஸ்ராவை அல்லாஹ் தெளிவாக பேசுகிறான். மிஃராஜை லேசாக சுட்டிக் காட்டுகிறான்.ஆனால் ஹதீஸில் இரண்டுமே ஒரு நீண்ட ஹதீஸில் தெளிவாகவே வந்திருக்கிறது.

சாதாரணமாக இன்றைக்கு விண்வெளியில் ஆராய்ச்சி செய்வதற்காக செல்லக்கூடிய விண்வெளி வீரர்களை நாம் பார்த்திருப்போம். அவர்களுக்கென்று தனி ஆடை இருக்கும். தனி வாகனம், தனியான இருக்கை இருக்கும். மட்டுமில்லாமல் புவியீர்ப்பு சக்தி இல்லாத காரணத்தினால் ஆக்ஸிஜன் சிலிண்டரும் வைத்திருப்பார்கள். ஆனால் நபி ஸல் அவர்களுக்கு இது போன்று செயற்கையான எந்த ஏற்பாடும் கிடையாது.என்றாலும் இயற்கையாகவே அல்லாஹ் ஏற்பாடு செய்தான். ஜம்ஜம் கிணற்றுக்கு அருகில் அவர்களது நெஞ்சு பிழக்கப்பட்டு இதயம் கழுகப்பட்டு அதில் ஹிக்மத்தையும் ஈமானையும் நிரப்பினான். புவியீர்ப்பு சக்தியில்லாத இடத்தில் ஆக்ஸிஜன் கருவி இல்லாமல் சுவாசிக்க முடியாது. அந்த உள்ளம் கழுவப்பட்டதினால் அவர்களுக்கு தனி ஆற்றல் கிடைத்தது. அதைக் கொண்டு அவர்களுக்கு அந்த பயணம் இலகுவாக அமைந்தது.

حكمة غسل صدر النبي صلى الله عليه وسلم  بماء زمزم ليقوى به صلى الله عليه وسلم  على رؤية ملكوت السموات والأرض والجنة والنار ؛ لأنّ من خواص ماء زمزم أنه يقوّي القلب ويسكّن الرّوع

வானம் மற்றும் பூமியின் அரசாட்சி, சொர்க்கம், நரகம் இவைகளையெல்லாம் அவர்களுக்கு காட்ட வேண்டும். அதற்கு அவர்களது உள்ளம் தயாராக இருக்க வேண்டும் என்பதற்குத்தான் நெஞ்சை பிழக்கும் நிகழ்வு நடைபெற்றது. ஏனெனில் ஜம்ஜம் நீர் உள்ளத்திற்கு ஆற்றலைத் தரும். திடுக்கத்தைப் போக்கும் என்று கூறுகிறார்கள்.

இங்கே இன்னொரு விஷயம். சுவனத்திலிருந்து தான் ஜிப்ரயீல் அலை அவர்கள் வந்திருக்கிறார்கள்.ஆனால் கவ்ஸரையோ சொர்க்கத்தின் நீரான தஸ்னீமையோ கொண்டு வர வில்லை.எனவே அந்த நீர்களை விட ஜம்ஜம் நீர் மிகச் சிறந்தது என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

ماءُ زمزمَ لِما شُرِبَ لَهُ ، فإِنَّ شَرِبْتَهُ تَسْتَشْفِى بِهِ شفَاكَ اللهُ ، وإِنْ شَرِبْتَهُ مسْتَعِيذًا أعاذَكَ اللهُ ، وإِنْ شربْتَهُ لِتَقْطَعَ ظَمَأَكَ قطَعَهُ اللهُ ، وإِنْ شرِبْتَهُ لشَبَعِكَ أشبعَكَ اللهُ

ஜம்ஜம் நீர் எந்த நோக்கத்திற்காக குடிக்கப்படுகிறதோ அந்த நோக்கம் நிறைவேறும். நோயுக்கு மருந்தாக நினைத்து குடித்தால் அல்லாஹ் சுகத்தைத் தருவான். பாதுகாப்பை எதிர் பார்த்து குடித்தால் அல்லாஹ் அதைக் கொண்டு பாதுகாப்பளிப்பான். தாகத்தை தனிப்பதற்காக குடிப்பால் அல்லாஹ் அதைக் கொண்டு தாகத்தைத் தீர்ப்பான். வயிறு நிரம்ப வேண்டும் என்ற எண்ணத்தில் குடித்தால் அதைக் கொண்டு அல்லாஹ் வயிறு நிரம்பச் செய்வான். (அல்ஜாமிவு ; 4972)

இந்நிகழ்வின் மூலம் சொர்க்கத்தின் நீரை விட உலகில் இருக்கிற இந்த ஜம்ஜம் நீர் தான் சிறந்தது என்ற உண்மை உணர்த்தப்படுகிறது.

இந்நிகழ்வு அண்ணல் வாழ்வில் நடந்த பேரற்புதம்.உலகில் வேறு எவருக்கும் வழங்கப்படாத உயர்ந்த அந்தஸ்து. நாம் பூமியில் வாழ்கிறோம்.நம்மைப் பொறுத்த வரை பூமி மிக பிரமாண்டமானது.ஆனால் அந்த பூமி என்பது ஒரு சிறிய பந்து. சூரிய குடும்பத்தின் அங்கங்களில் அதுவும் ஒன்று. அவ்வளவு தான்.இந்த பூமிக்கும் அந்த சூரியனுக்கும் உள்ள தூரம் 9 கோடியே 30 லட்சம் மைல்.அந்த சூரியனில் இருந்து ஒளி பூமிக்கு 8 நிமிடத்தில் வருகிறது.ஒளி என்பது ஒரு வினாடிக்கு 186282 மைல் தூரம் பயணிக்கும்.இந்த வேகமுள்ள ஒளி நமக்கு அருகில் இருக்கும் நட்சத்திரத்திலிருந்து பூமிக்கு வர சுமார் நாளரை வருடமாகும்.மணிக்கு 10000 மைல் தூரம் வேகத்தில் பயணிக்கும் ஒரு ராக்கட் அந்த நட்சத்திரத்திற்கு போவதற்கு 70000 வருடம் ஆகும் என்று அறிவியல் கூறுகிறது.

ஆனால் நபி [ஸல்] அவர்கள் அந்த நட்சத்திரம் மட்டுமல்ல எல்லா நட்சத்திரங்களையும் கடந்து ஏழு வானங்களையும் கடந்து, யாரும் கடக்க முடியாத சித்ரத்துல் முன்தஹாவையும் கடந்து, அல்லாஹ்வையும் தரிசித்து வந்தது ஒரு இரவின் சிறு பகுதி என்பது ஆச்சர்யத்தின் உச்சம் என்பது நாம் அறிந்த விஷயம்.

அல்லாஹ் அதைப்பற்றி லைலன் என்று கூறுகிறான்.லைலன் என்றால் கொஞ்ச நேரம் என்று பொருள்.நாம் சாதாரணமாக கொஞ்ச நேரம் என்பதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு அளவை வைத்திருப்போம். ஆனால் ஹதீஸில் அதற்கான விளக்கம் இருக்கிறது. படுக்கையின் சூடு தனிய வில்லை. ஒழு செய்த தண்ணீரின் சளனம் அடங்க வில்லை. கதவு தாழ்ப்பாளின் அசைவு நிற்க வில்லை என்று.

இந்த நேரத்திற்குள் தான் அவர்களுக்கு அத்தனையும் நடந்திருக்கிறது. அவர்களது உள்ளம் பிழக்கப்பட்டது,அதற்கு பிறகு பைத்துல் முகத்தஸுக்கு போனது.அங்கே இடையில் வியாபாக்கூட்டத்தை சந்தித்தது. அங்கே நடந்த நிகழ்வுகள்.பைத்துல் முகத்தஸில் நபிமார்களுக்கு தொழுகை நடத்தியது.அதற்கு பிறகு ஏழு வானங்களை கடந்து நபிமார்களை சந்தித்தது.அவர்களிடத்தில் உரையாடல் நடத்தியது. குறிப்பாக மூஸா அலை அவர்களிடத்தில் தொழுகை குறித்த உரையாடல் நடத்தியது.சொர்க்க நரகத்தைப் பார்த்தது.அல்லாஹ்வை சந்தித்து உரையாடியது என இவை அனைத்தும் நடந்தது இந்த கொஞ்ச நேரத்தில் தான்.

இது எப்படி நடந்தது? இது எப்படி சாத்தியமானது? என்று நாம் யோசிக்கலாம். அதனால் தான் அந்த மக்களும் அதை நம்ப மறுத்தார்கள், ஏற்க மறுத்தார்கள்.

أنها كانت تقول ‏‏:‏‏ ما أُسري برسول الله صلى الله عليه وسلم إلا وهو في بيتي ، نام عندي تلك الليلة في بيتي ، فصلى العشاء الآخرة ، ثم نام ونمنا ، فلما كان قبيل الفجر أهبَّنا رسول الله صلى الله عليه وسلم ؛ فلما صلى الصبح وصلينا معه ، قال ‏‏:‏‏ يا أم هانىء ، لقد ‏صليت معكم العشاء الآخرة كما رأيت بهذا الوادي ، ثم جئت بيت المقدس فصليت فيه ، ثم قد صليت صلاة الغداة معكم الآن كما ترين ، ثم قام ليخرج ، فأخذت بطرف ردائه ، فتكشَّف عن بطنه كأنه قُبطية مطوية ، فقلت له ‏‏:‏‏ يا نبي الله ، لا تحدث بهذا الناس فيكذبوك ويؤذوك ؛ قال ‏‏:‏‏ والله لأحدثنهموه ‏‏.

மிஃராஜ் பயணத்தை முடித்த நபி ஸல் அவர்கள் மக்கா திரும்பிய போதுமுதலாவதாக அச்செய்தியைக் குறித்து அபூ தாலிப் அவர்களின் மகள் உம்முஹானீ ரலி அவர்களிடம் கூறினார்கள். நேற்றிரவு உங்களுடன் இங்கே இஷா தொழுகையை தொழுதேன். பின்பு பைத்துல் முகத்தஸுக்கு சென்று அங்கே தொழுதேன். இப்போது ஃபஜ்ர் தொழுகையை உங்களோடு தொழுகிறேன் என்று சொல்லி விட்டு இதை மக்களிடம் சொல்லப் போகிறேன் என்று வீட்டை விட்டு கிழம்பினார்கள். அப்போது உம்முஹானீ ரலி அவர்கள் அவர்களின் துண்டைப் பிடித்து தடுத்து நிறுத்தி அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நீங்கள் இதைப்பற்றி மக்களிடம் சொல்ல வேண்டாம். அவ்வாறு சொன்னால் உங்களை அவர்கள் பொய்யர் என்று சொல்வார்கள். உங்களை நோவினைப்படுத்துவார்கள் என்று கூறினார்கள். ஆனால் நபி ஸல் அவர்கள் இல்லை, அல்லாஹ்வின் மீது சத்தியமாக நான் சொல்வேன் என்று கூறி விட்டு மக்களை ஒன்று கூட்டி நடந்தவை அனைத்தையும் சொன்னார்கள்.  

 

وقالوا ‏‏:‏‏ ما آية ذلك يا محمد ‏‏؟‏‏ فإنا لم نسمع بمثل هذا قط ؛ قال ‏‏:‏‏ آية ذلك أني مررت بعير بني فلان بوادي كذا وكذا ، فأنفرهم حس الدابة ، فندَّ لهم بعير ، فدللتهم عليه ، وأنا موجَّه إلى الشام ‏‏.‏‏

ثم أقبلت حتى إذا كنت بضجنان مررت بعير بني فلان ، فوجدت القوم نياما ، ولهم إناء فيه ماء قد غطوا عليه بشيء ، فكشفت غطاءه وشربت ما فيه ، ثم غطيت عليه كما كان ؛ وآية ذلك أن عيرهم الآن يصوب من البيضاء ، ثنية التنعيم ، يقدمها جمل أورق ، عليه غرارتان ، إحداهما سوداء ، والآخرى برقاء ‏‏.‏‏ قالت ‏‏:‏‏ فابتدر القوم الثنية فلم يلقهم أولُ من الجمل كما وصف لهم ، وسألوهم عن الإناء ، فأخبروهم أنهم وضعوه مملوءا ماء ثم غطوه ، وأنهم هبوا فوجدوه مغطى كما غطوه ، ولم يجدوا فيه ماء ‏‏.‏‏ وسألوا الآخرين وهم بمكة ، فقالوا ‏‏:‏‏ صدق والله ، لقد أُنْفرنا في الوادي الذي ذكر ، وندّ لنا بعير ، فسمعنا صوت رجل يدعونا إليه ، حتى أخذناه ‏‏

இது வரைக்கும் கேள்விப்படாத, நடப்பதற்கு சாத்தியம் இல்லாத விஷயத்தை சொல்கிறீர்கள். இதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டார்கள்.பைத்துல் முகத்தஸின் அடையாளங்களைப் பற்றி கேட்டார்கள்.நபி ஸல் அவர்கள் வழியில் தான் சந்தித்த வியாபாரக்கூட்டத்தைப் பற்றி சொன்னார்கள். பைத்துல் முகத்தஸைப்பற்றி சொன்னார்கள்.இருந்தாலும் அவர்கள் ஏற்றுக் கொள்ள வில்லை.

மிஃராஜ் என்பது மக்களின் ஈமானை சோதிக்கிற ஒரு நிகழ்வு.ஒரு விஷயம் நமக்கு விளங்கா விட்டாலும் புரியா விட்டாலும் நடப்பதற்கு சாத்தியமே இல்லாத விஷயமாக தெரிந்தாலும் இறைவன் கூறினால், அல்லது நபி ஸல் அவர்கள் கூறினால் அதை நம்ப வேண்டும். ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது மிஃராஜ் பயணத்திலிருந்து நாம் பெறும் முக்கியமான பாடம்.

(إن الله يأمركم أن تذبحوا بقرة). قال: كان رجل من بني إسرائيل, وكان غنيا ولم يكن له ولد, وكان له قريب وارثه, فقتله ليرثه, ثم ألقاه على مجمع الطريق, (76) وأتى موسى فقال له: إن قريبي قتل وأُتي إلي أمر عظيم, وإني لا أجد أحدا يبين لي من قتله غيرك يا نبي الله. قال: فنادى موسى في الناس: أنشد الله من كان عنده من هذا علم إلا بينه لنا. فلم يكن عندهم علمه. فأقبل القاتل على موسى فقال: أنت نبي الله, فاسأل لنا ربك أن يبين لنا. فسأل ربه، فأوحى الله إليه: (إن الله يأمركم أن تذبحوا بقرة).

ففعلوا، واشتروها فذبحوها. فأمرهم موسى أن يأخذوا عظما منها فيضربوا به القتيل. ففعلوا, فرجع إليه روحه, فسمى لهم قاتله, ثم عاد ميتا كما كان. فأخذوا قاتله - وهو الذي كان أتى موسى فشكى إليه, - فقتله الله على أسوء عمله

சாதாரணமாக பிறந்தவுடன் குழந்தை பேசாது.ஆனால் ஈஸா நபி அவர்கள் பிறந்தவுடன் பேசியதாக குர்ஆன் கூறுகிறது.இறந்த போன மய்யித் பேசாது.ஆனால் மூஸா நபியின் காலத்தில் மய்யித் பேசியதாக குர்ஆன் சான்று பகர்கிறது. இவ்வாறு நடப்பதற்கு சாத்தியம் இல்லை என்பதற்காக அதை ஒருவர் ஏற்க மாட்டேன் என்று கூறினால் அவர் காஃபிராகி விடுவார்.

ஒருவர் குளிர் காலங்களில் காலுறை அணிந்திருந்தால் ஒழு செய்யும் போது அந்த காலுறையின் மேல் பகுதியில் மஸஹ் செய்தால் போதுமானது. காலை கழுவ வேண்டிய தேவையில்லை. இது ஷரீஅத்தின் சட்டம்.ஆனால் முறைப்படி பார்த்தால் காலுறையின் கீழ் பகுதியில் தான் மஸஹ் செய்ய வேண்டும். ஏனென்றால் அதில் தான் தூசி பட்டிருக்கும். ஆனால் சட்டம் மேல் பகுதியில் மஸஹ் செய்யும்படி கூறுகிறது. இருந்தாலும் நாம் அதை ஏற்க வேண்டும்.

 

عن عليٍّ رَضِيَ اللهُ عنه قال: ((لو كان الدِّينُ بالرأي، لكان باطنُ القَدَمينِ أحقَّ بالمسحِ مِن ظاهِرِهما، وقد مسح النبيُّ صلَّى اللهُ عليه وسلَّم على ظَهرِ خفَّيه

மார்க்கம் என்பது அறிவைக் கொண்டு இருந்திருந்தால் காலுறையின் மேல் பகுதியை விட கீழ் பகுதியில் மஸஹ் செய்வது தான் ஏற்றமானது. ஆனால் மார்க்கம் அறிவைக் கொண்டு முடிவு செய்யப்படும் விஷயமல்ல. நபி ஸல் அவர்கள் அதன் மேல் பகுதியில் தான் மஸஹ் செய்தார்கள். எனவே அது தான் மார்க்கமாகும் என்று ஹழ்ரத் அலி ரலி அவர்கள் கூறுகிறார்கள்.

எனவே மார்க்கத்தைப் பொறுத்த வரை அதை நாம் நம் அறிவைக் கொண்டு அளந்து பார்க்கக்கூடாது. மார்க்கம் அறிவுப்பூர்வமானது தான். ஆனால் அறிவை வைத்து அளந்து பார்க்கும் விஷமல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே மிஃராஜ் பயணம் நம் ஈமானை சோதிக்கும் ஒரு நிகழ்வு. அதைப்பற்றி அறிவு இல்லா விட்டாலும் அதை ஈமான் கொள்வது அனைவரின் மீது கடமையாகும்.

ஆனால் அறிவியல் வளர்ச்சியடைந்த இன்றைய நவீன காலகட்டத்தில் அதை இலகுவாக புரிந்து கொள்ளலாம். உலகத்தில் இடத்தை சுருக்குவது நேரத்தை சுருக்குவது என்று இரண்டு விஷயங்கள் உள்ளது. இரண்டுமே குர்ஆனில் உள்ளது. கஹ்ஃப் வாசிகள் 309 வருடங்கள் உறங்கியதும் உஜைர் அலை அவர்கள் 100 வருடங்கள் தூங்கியதும் காலத்தை சுருக்குவது. பல்கீஸ் ராணியின் சிம்மாசனத்தை கண் இமைக்கும் நேரத்தில் அல்லாஹ் கொண்டு வந்தான். இது இடத்தை சுருக்குவதாகும்.ஆனால் இங்கே நபி ஸல் அவர்களுக்கு இரண்டுமே நடந்தது.

مرت الأيام على بني إسرائيل في فلسطين، وانحرفوا كثيراً عن منهج الله عز وجل. فأراد الله أن يجدد دينهم، بعد أن فقدوا التوراة ونسوا كثيرا من آياتها، فبعث الله تعالى إليهم عزيرا. أمر الله سبحانه وتعالى عزيرا أن يذهب إلى قرية. فذهب إليها فوجدها خرابا، ليس فيها بشر. فوقف متعجبا، كيف يرسله الله إلى قرية خاوية ليس فيها بشر. وقف مستغربا، ينتظر أن يحييها الله وهو واقف! لأنه مبعوث إليها. فأماته الله مائة عام. قبض الله روحه وهو نائم، ثم بعثه. فاستيقظ عزير من نومه. فأرسل الله له ملكا في صورة بشر: (قَالَ كَمْ لَبِثْتَ). فأجاب عزير: (قَالَ لَبِثْتُ يَوْمًا أَوْ بَعْضَ يَوْمٍ). نمت يوما أو عدة أيام على أكثر تقدير. فرد الملك: (قَالَ بَل لَّبِثْتَ مِئَةَ عَامٍ). ويعقب الملك مشيرا إلى إعجاز الله عز وجل (فَانظُرْ إِلَى طَعَامِكَ وَشَرَابِكَ لَمْ يَتَسَنَّهْ وَانظُرْ إِلَى حِمَارِكَ) أمره بأن ينظر لطعامه الذي ظل بجانبه مئة سنة، فرآه سليما كما تركه، لم ينتن ولم يتغير طعمه أو ريحه. ثم أشار له إلى حماره، فرآه قد مات وتحول إلى جلد وعظم. ثم بين له الملك السر في ذلك (وَلِنَجْعَلَكَ آيَةً لِّلنَّاسِ) ويختتم كلامه بأمر عجيب )وَانظُرْ إِلَى العِظَامِ كَيْفَ نُنشِزُهَا ثُمَّ نَكْسُوهَا لَحْمًا( نظر عزير للحمار فرأى عظامه تتحرك فتتجمع فتتشكل بشكل الحمار، ثم بدأ اللحم يكسوها، ثم الجلد ثم الشعر، فاكتمل الحمار أمام عينيه. يخبرنا المولى بما قاله عزير في هذا الموقف: (فَلَمَّا تَبَيَّنَ لَهُ قَالَ أَعْلَمُ أَنَّ اللّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ) سبحان الله أي إعجاز هذا.. ثم خرج إلى القرية، فرآها قد عمرت وامتلأت بالناس. فسألهم: هل تعرفون عزيرا؟ قالوا: نعم نعرفه، وقد مات منذ مائة سنة. فقال لهم: أنا عزير. فأنكروا عليه ذلك. ثم جاءوا بعجوز معمّرة، وسألوها عن أوصافه، فوصفته لهم، فتأكدوا أنه عزير. فأخذ يعلمهم التوراة ويجددها لهم، فبدأ الناس يقبلون عليه وعلى هذا الدين من جديد، وأحبوه حبا شديدا وقدّسوه للإعجاز الذي ظهر فيه، حتى وصل تقديسهم له أن قالوا عنه أنه ابن الله (وَقَالَتِ الْيَهُودُ عُزَيْرٌ ابْنُ اللّهِ). واستمر انحراف اليهود بتقديس عزير واعتباره ابنا لله تعالى –ولا زالوا يعتقدون بهذا إلى اليوم- وهذا من شركهم والعياذ بالله.

قال الذي عنده علم من الكتاب ) واختلفوا فيه فقال بعضهم هو جبريل . وقيل : هو ملك من الملائكة أيد الله به نبيه سليمان عليه السلام . وقال أكثر المفسرين : هو آصف بن برخياء ، وكان صديقا يعلم اسم الله الأعظم الذي إذا دعي به أجاب وإذا سئل به أعطى . وروى جويبر ، ومقاتل ، عن الضحاك عن ابن عباس قال : إن آصفقال لسليمان حين صلى : مد عينيك حتى ينتهي طرفك ، فمدسليمان عينيه ، فنظر نحو اليمين ، ودعا آصف فبعث الله الملائكة فحملوا السرير من تحت الأرض يخدون به خدا حتى انخرقت الأرض بالسرير بين يدي سليمان . [ ص: 165 ]

وزهير بن محمد ، وغيرهم : لما دعا الله ، عز وجل ، وسأله أن يأتيه بعرش بلقيس - وكان في اليمن ، وسليمان عليه السلام ببيت المقدس - غاب السرير ، وغاص في الأرض ، ثم نبع من بين يدي سليمان ، عليه السلام .

 

இது அன்றைக்கு ஆச்சரியமாக தெரிந்தது.ஆனால் இன்றைக்குள்ள அறிவியல் வளரச்சியில் இதை சாதாரணமாக நாம் விளங்கிக் கொள்ள முடியும். 19 ம்  நூற்றாண்டில் வாழ்ந்தவர் ஐன்ஸ்டீன்.மிகப்பெரிய அறிவியல் விற்பன்னர். அவர் ஒளியின் வேகத்தில் ஒருவர் பயணித்தால் அவருக்கு காலமோ நேரமோ இருக்காது என்று குறிப்பிடுகிறார்.ஒருவரக்கு 35 வயது.அவரின் மனைவிக்கு 30 வயது. அவர் ஒளியின் வேகத்தில் பயணிக்கிற ஒரு வாகனத்தில் ஒரு நாள் பயணிக்கிறார்.அவர் திருப்பி வருகிற போது அவரது மனைவிக்கு 90 வயது இருக்கும். ஆனால் அவருக்கு 35 வருடமும் ஒர நாளும் மட்டுமே ஆகியிருக்கும் என்று கூறுகிறார்.எனவே நபி ஸல் அவர்கள் இரவின் ஒரு பகுதியில் நடந்தது சாத்திமானது தான் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

அறிவியலில் இத்தனை பெரிய வளர்ச்சிகள் ஏற்பட்டு விட்ட இந்த காலத்தில் நாம் அறிவியலோடு ஒப்பிட்டுப் பார்த்து இந்த நிகழ்வை நாம் இலகுவாக புரிந்து கொள்கிறோம். ஆனால் எந்த அறிவியல் வளர்ச்சியும் ஏற்படாத அந்த காலத்தில் இருந்த ஸஹாபாக்கள் அதை ஏற்றுக் கொண்டது தான் மிகப்பெரிய ஈமானுக்கான அடையாளம்.

فعن عائشة رضي الله عنها قالت: لما أسري بالنبي صلى الله عليه وسلم إلى المسجد الأقصى؛ أصبح يتحدث الناس بذلك؛ فارتدَّ ناس ممن كان آمنوا به وصدقوه، وسعى رجال من المشركين إلى أبي بكر رضي الله عنه، فقالوا: هل لك إلى صاحبك يزعم أنه أُسري به الليلة إلى بيت المقدس؟ قال: أو قال ذلك؟ قالوا: نعم قال: لئن قال ذلك لقد صدق، قالوا: أو تصدقه أنَّه ذهب الليلة إلى بيت المقدس، وجاء قبل أن يصبح؟ فقال: نعم، إني لأصدقه ما هو أبعد من ذلك، أصدقه في خبر السماء في غدوة أو روحة. فلذلك سُمِّي أبا بكر الصديق رضي الله عنه

இந்த மிஃராஜைப் பற்றி நபி ஸல் அவர்கள் மக்களிடம் சொன்ன போது ஈமான் கொண்டவர்களில் கூட சிலர் இஸ்லாத்தை விட்டும் வெளியேறி விட்டார்கள்.அந்த நேரத்தில் மக்களில் சிலர் அபூபக்கர் சித்தீக் ரலி அவர்களிடம் சென்று இவ்வாறு உங்கள் நண்பர் கூறுகிறார் என்று சொன்ன போது, அவர்கள் சொன்னால் அது உண்மையாகத்தான் இருக்கும் என்று கூறினார்கள். ஒரு இரவில் பைத்துல் முகத்தஸுக்கு சென்று மீண்டும் ஃபஜ்ர் தொழுகைக்கு இங்கே வந்திருக்கிறார் என்பதை உங்களால் ஏற்க முடிகிறதா என்று அவர்கள் திருப்பிக் கேட்டார்கள். அதற்கு அவர்கள், இதையல்ல, இதை விட மிகவும் பாரதூரமான விஷயத்தைச் சொன்னாலும் நான் ஏற்றுக் கொள்வேன் என்றார்கள். அதனால் தான் அவர்களுக்கு ஸித்தீக் என்ற பெயர் சூட்டப்பட்டது.

ஸஹாபாக்கள் நபி ஸல் அவர்களை ஈமான் கொண்ட விதம் இப்படித்தான் இருந்தது.

أن النبي صلى الله عليه وسلم اشترى فرساً من أعرابي، ولم يكن هناك أحد فأنكر الأعرابي بيع الفرس، فشهد خزيمة بأنه باعه، فقال له رسول الله صلى الله عليه وسلم:"كيف تشهد ولم تكن حاضراً"؟ قال: يا رسول الله أُصَدِّقُكَ في كل ما جئت به من الله، أفلا أصدّقك في شراء الفرس؟ فقال رسول الله صلى الله عليه وسلم:"من شهد له خزيمة فحسبه

நபி ஸல் அவர்கள் ஒரு கிராமவாசியிடத்தில் குதிரை ஒன்றை விலை பேசினார்கள். அவர்கள் பேசுகின்ற அந்த நேரத்தில் அங்கே வேறு எவரும் இல்லை. விலை பேசிய பிறகு இந்த கிராமவாசி அந்த குதிரையை விற்பதற்கு மறுத்து விட்டார். நான் உங்களிடத்தில் விலை பேசவே இல்லை. வேண்டுமானால் நீங்கள் அதற்கு ஒரு சாட்சியை கொண்டு வாருங்கள் என்று கூறினார். அந்த நிகழ்வைக் கேள்விப்பட்ட குஜைமா ரலி அவர்கள் அதற்கு சாட்சி சொன்னார்கள். அப்போது நபியவர்கள் நாங்கள் பேசிக் கொண்ட பொழுது நீ அந்த இடத்தில் இல்லை. பிறகு எப்படி நீ சாட்சி கூறினாய் என்று கேட்டார்கள். அப்போது அவர்கள் நீங்கள் இறைவன் புறத்திலிருந்து கொண்டு வருகின்ற ஒவ்வொரு செய்தியையும் நாங்கள் நம்புகிறோம். ஒரு குதிரை வாங்கிய விஷயத்தில் உங்களை நாங்கள் நம்ப மாட்டோமா என்று கேட்டார்கள். அப்போது நபி அவர்கள் (பொதுவாக ஒவ்வொரு விஷயத்திற்கும் இரண்டு சாட்சிகள் வேண்டும்) குஜைமா  ஒருவருக்கு சாட்சி சொன்னால் அவரின் ஒரு சாட்சியே அதற்குப் போதுமானது ஆகும் என்று கூறினார்கள். (உம்ததுல் காரி)

அந்த ஸஹாபாக்களிடம் இருந்த அந்த ஈமான் நம்மிடம் வர வேண்டும். இது தான் இந்த மிஃராஜ் பயணம் கற்றுத்தரும் மிக அற்புதமான பாடமாகும். எல்லாம் வல்ல ரப்புல் ஆலமீன் அந்த உறுதியான ஈமானை நம் அனைவருக்கும் தருவானாக  

6 comments:

  1. நல்ல சிறந்த தகவல்கள்...

    ReplyDelete
  2. ஆரம்பத்தில் குர்ஆன் வசனம் ஹதீஸ் பதிவிட்டு இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்

    ReplyDelete
  3. அல்லாஹ் தங்களுடைய வாழ்விலும் நேரத்திலும் பரகத் செய்வானாக

    ReplyDelete
  4. அருமை. பாரகல்லாஹு லக

    ReplyDelete