Monday, March 7, 2022

அவசரம் ஆபத்து

 


الحمد لله والصلوة والسلام علي رسول الله سيدنا محمد واله وصحبه اجمعين اما بعد قال الله تعالي في القران العظيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم 

قال النبي صلي : الاناة من الله والعجلة من الشيطان


அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் வல்லோன் அல்லாஹ்வின் திருநாமத்தால் ஆரம்பம் செய்கிறேன்.சாந்தியும் சமாதானமும் எங்கள் உயிரிலும் மேலான கண்மனி நாயகம் ரசூலுல்லாஹி ஸல் அவர்களின் மீதும் பரிசுத்தமான அவர்களின் குடும்பத்தார் மீது உன்னதமான அவர்களின் தோழர்கள் மீதும் உண்டாகட்டுமாக.


மாணவர்களின் பேச்சுத்திறனை வளர்க்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த மன்றத்தில் அவசரம் ஒரு ஆபத்து என்ற தலைப்பில் பேசுவதற்காக நான் வந்திருக்கிறேன்.

அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! நாம் வாழ்க்கையில் எந்தக் காரியத்தை செய்தாலும் அதில் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும் ஒரு குறிக்கோல் இருக்கும் ஒரு இலக்கு இருக்கும்.எதிர்பார்ப்பு இல்லாமல் குறிக்கோல் இல்லாமல் இலக்கு இல்லாமல் எந்த காரியத்தையும் நாம் செய்வதில்லை, எந்தக் காரியத்திலும் நாம் இறங்குவதில்லை.அப்படி எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் எந்தக் குறிக்கோலும் இல்லாமல் இறங்குபவர் கள் நிச்சயம் புத்திசாலிகளாக இருக்க முடியாது.எனவே நம் வாழ்க்கை யில் எந்தக் காரியமாக இருந்தாலும் ஒரு குறிக்கோலோடு தான் செய்ய வேண்டும்.

பெரிய குறிக்கோல் எதுவும் இல்லா விட்டாலும் குறைந்தபட்சம் நாம் செய்கின்ற  அந்த காரியம் நமக்கு எதாவது ஒரு வகையில் பலன் தர வேண்டும் என்ற எண்ணமாவது நிச்சயம் இருக்கும்.ஆனால் உண்மையில் ஒரு காரியம் நமக்கு பலன் தருவதற்கும் அந்த காரியத்தில் நாம் நினைத்த இலக்கை அடையவதற்கும் நம்மிடம் இருக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் நிதானம்.

வாழ்க்கைல எந்தக் காரியத்தை செய்தாலும் எந்தக் காரியத்தை செய்வதாக இருந்தாலும் நின்று நிதானமா அமைதியா பக்குவமா யோசித்து, செய்யலாமா? வேண்டாமா? அது நன்மையா? தீமையா? நமக்கு அது தேவையா? தேவை இல்லையா? என்று தீர்க்கமா முடிவு செய்து அதற்குப் பிறகு செய்யனும். நாம் செய்வது உலகத்தின் காரியங்களாக இருந்தாலும் சரி மறுமையின் காரியங்களாக இருந்தாலும் நிதானம் தேவை, பொறுமை தேவை.

இன்னைக்கி நம் வாழ்கையில எல்லாத்திலேயும் அவசரம் தான். சாப்பிடுவதிலும் அவசரம், சிறுநீர் கழிப்பதிலும் அவசரம்,வாகனம் ஓட்டுவதிலும் அவசரம், வாழுகிற வாழ்க்கையிலும் அவசரம். எல்லாத்திலும் அவசரம்.இன்னைக்குள்ள அவசர காலத்துல என்னைக் காவது நாம நிதானமா சாப்டு இருக்கோமா? வேகமாக எடுத்து வேகமா வாயில் போட்டு வேகமா முழுங்குற கதையா தான் இருக்குது. இதனால சாப்டுற சாப்பாடு ஒழுங்கா செரிமானம் ஆகாம அதனால பெரிய பிரச்சனைகள சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுது. Fast food னு சொல்றான். அதை சாப்பிட்டா fast death ஆயிடு. வாகனத்துல fast டா போறான். கடைசில அத விட fast டா அவன ஆம்புலன்ஸ்ல கொண்டு போக வேண்டியதா இருக்கு. அவசரம் என்றைக்குமே ஆபத்து தான். அவசரமா செய்கின்ற காரியங்கள் அவசரமா முடிவெடுக்கிற விஷயங்கள் நிச்சயம் ஆபத்துல போய் தான் முடியும்.

அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே இன்னைக்கு நடக்கிற அதிகமான பிரச்சனைகள், குடும்ப தகராறுகள், குறிப்பாக கணவன் மனைவிக்கு மத்தியில் ஏற்படுகின்ற மனக்கசப்புக்கள், அதனால் நிகழ்கின்ற தலாக்குகள் இவை அனைத்திற்கும் அடிப்படைக் காரணம் இந்த அவசரம் தான்.அவசரம் வாழ்க்கையில் எண்ணற்ற சிக்கலையும் பிரச்சனைகளையும் இழப்புக்களையும் ஏற்படுத்தி விடும்.

இஸ்லாமிய வரலாற்றில் நடந்த இரண்டாவது போர்க்களமான உஹது போர்க்களம் தோல்வியில் முடிந்ததற்கு முக்கிய காரணமே இந்த அவசரம் தான்.உஹதுப் போர்க்களம் அன்றைக்கு மட்டுமல்ல இன்று வரை இஸ்லாமியர்களின் உள்ளத்தில் மிகப்பெரிய பாதிப்பையும் தாக்கத்தையும் ஏற்படுத்திய போர்க்களம். தன் வாழ்வில் எந்த யுத்த்திலும் காயமடையாத அண்ணலம்பெருமான் (ஸல்) அவர்கள் உஹது யுத்தத்தில் காயமடைந் தார்கள். அவர்களது கண்ணத்தில் காயம் பட்டு அவர்களது முன்பற்கள் ஷஹீதாக்கப்பட்டது. பதுரு யுத்தத்தில் காபிர்களுக்கு ஏற்பட்ட அளவுக்கு நிகரான உயிர்சேதம் உஹது யுத்தத்தில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டது. 70 முஸ்லிம்கள் ஷஹீதானார்கள்.நபி ஸல் அவர்களுக்கு எல்லா வகையிலும் உருதுணையாக இருந்த ஹம்ஸா, முஸ் அப் (ரலி) போன்ற முக்கிய சஹாபாக்கள் ஷஹீதானார்கள்.பத்ரு போர்க்களத்தில் வெற்றி பெற்று உற்சாகத்திலும் உத்வேகத்திலும் இருந்த ஸஹாபாக்களின் உள்ளத்தில் இந்த உஹதின் தோல்வி மிகப்பெரும் காயத்தை ஏற்படுத்தியதோடு அவர்கள் கொஞ்சம் தடுமாறுவதற்கும் காரணமாக அமைந்தது.அல்லாஹ்விற்காக போரிடுகிற நாம் எப்படி தோற்றுப் போனோம். முஹம்மது நபி (ஸல்) அவர்கள் நம்மோடு இருக்கும் போது எப்படி நமக்கு தோல்வி ஏற்பட்டது என்பது போன்ற கேள்விகள் அவர்களுடையை மனதை உலுக்கி எடுத்தது.இப்படி எண்ணற்ற மோசமான விளைவுகளை ஏற்படுத்திய உஹதின் தோல்விக்கு காரணம் அவசரம்.

நான் சொல்லும் வரை இந்த இடத்தை விட்டு நகரக்கூடாது என்று சொல்லி நபி ஸல் அவர்கள் மலைக்கு மேல் அம்பு எறியும் வீரர்கள் சிலரை நிறுத்தி வைத்தார்கள்.ஆனால் அவர்கள் வெற்றி அடைந்து விட்டோம் என்று எண்ணி தனது நிலையிலிருந்து கீழே இறங்கியது தான், புறமுதுகிட்டு ஓடிய நிராகரிப்பாளர்கள் திரும்பி வந்து மறுதாக்குதல் தொடுக்க காரணமாக இருந்தது, அதுவே தோல்விக்கும் காரணமாக இருந்தது. 

அவசரமாக செயல்படுவதும் நிதானித்து யோசிக்காமல் அவசரமாக முடிவெடுப்பதும் கசப்பான சூழ்நிலைகளை ஏற்படுத்தி விடும் என்பதற்கு உஹதுப் போர்க்களம் ஒரு சான்று.

அதனால் தான் இஸ்லாம் அவசரம் கூடாது என்று சொல்கிறது.வாழ்க்கையானாலும் வணக்கமானாலும் அவசரம் இல்லாமல் நிதானமாக செய்ய வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது.

الاناة من الله والعجلة من الشيطان

நிதானம் அல்லாஹ்வின் குணம்.அவசரம் ஷைத்தானின் குணம் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள். எனவே எல்லா காரியத்திலும் நிதானத்தைக் கடைபிடித்து வெற்றியைப் பெறுவதற்கு அல்லாஹ் அருள் புரிவானாக



1 comment: