Monday, March 7, 2022

அதிகாலை

 


الحمد لله والصلوة والسلام علي رسول الله سيدنا محمد واله وصحبه اجمعين اما بعد قال الله تعالي في القران العظيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما ارسلناك الا رحمة للعالمين

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் வல்லோன் அல்லாஹ்வின் திருநாமத்தால் ஆரம்பம் செய்கிறேன்.சாந்தியும் சமாதானமும் எங்கள் உயிரிலும் மேலான கண்மனி நாயகம் ரசூலுல்லாஹி ஸல் அவர்களின் மீதும் பரிசுத்தமான அவர்களின் குடும்பத்தார் மீது உன்னதமான அவர்களின் தோழர்கள் மீதும் உண்டாகட்டுமாக.

மாணவர்களின் பேச்சுத்திறனை வளர்க்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த மன்றத்தில் அதிகாலை நேரத்தின் மகிமை என்ற தலைப்பில் பேசுவதற்காக நான் வந்திருக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்]. அளவற்ற அருளாள் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயர் கூறி ஆரம்பம் செய்கிறேன்.


அல்லாஹ் நம் வாழ்வில் எண்ணற்ற பாக்கியங்களை செய்திருக்கிறான். இப்போதும் செய்து கொண்டிருக்கிறான்.நாம் மவ்த்தாகி மண்ணரையை சந்தித்து இன்ஷா அல்லாஹ் சுவனம் வரை அல்லாஹ்வின் நிஃமத்துகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். அல்லாஹ்வின் நிஃமத்துகளை நீங்கள் எண்ணி முடிக்க இயலாது என்று அல்லாஹ் கூறுகிறான்.அந்தளவு எண்ணி முடிக்க முடியாத நிரப்பமாக விசாலமாக அல்லாஹ்வின் நிஃமத்துகள் இருக்கிறது.

அந்த அல்லாஹ்வின் நிஃமத்துகளை நாம் இரு வகையாகப் பிரிக்கலாம். 

1, அது நமக்கு நிஃமத்தாக தெரியும்.அதை நிஃமத் என்று நாம் புரிந்திருப்போம்.வீடு,வாகனம்,செல்வம்,பிள்ளைகள்,உணவு,நீர்,உடை இது வெல்லாம் அல்லாஹ்வின் நிஃமத்துகள்.அவை நிஃமத்துகள் என்பது எல்லோருக்கும் தெரியும்.

2, அதுவும் நிஃமத்துகள் தான்.ஆனால் அவை நமக்கு நிஃமத்தாக தெரியாது.நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.இரண்டு நிஃமத்துகள் இருக்கிறது.ஆனால் அதிகமான மக்கள் அதை உணருவதில்லை.ஒன்று ஆரோக்கியம்,இன்னொன்று ஓய்வு.

நமக்கு அல்லாஹ் தருகின்ற ஆரோக்கியமும் நமக்கு கிடைக்கும்  ஓய்வும் நிஃமத்துகள் தான். ஆனால் அவைகள் நம் பார்வைக்கு நிஃமத்தாக தெரிவதில்லை.அதை நாம் நிஃமத்தாகவே உணருவதில்லை. அவ்வாறு தெரியாத காரணத்தினால் தான் வாலிபத்தை சீரழிக்கிறோம், ஆரோக்கியத்தை பாழ்படுத்துகிறோம், நேரத்தை வீணடிக்கிறோம், வாழ்க்கையை தொலைத்து விடுகிறோம்.

இப்படி நிஃமத் என்று புரியாத எண்ணற்ற விஷயங்கள் நம் வாழ்வில் குவிந்து கிடக்கிறது.அதிலே ஒன்று தான் அதிகாலைப் பொழுது.அதை நாம் விளங்க வில்லை.அதை நாம் புரிய வில்லை.எனவே தான் நாம் அதை வீணடித்துக் கொண்டிருக்கிறோம்.


ஒரு நாளின் ஐவேளைத் தொழுகைகளில் பஜ்ர் தொழுகைக்கு அல்லாஹ்விடம் இருக்கும் மரியாதையும் கண்ணியமும் வேறு எந்த தொழுகைக்கும் இல்லை.அந்தளவு எண்ணற்ற சிறப்புக்களும் மேன்மை களும் ஃபஜ்ர் தொழுகையில் இருக்கிறது.அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கிறது. ஒன்று வணக்கங்களில் நமக்கு ஏற்படுகிற சிரமங்கள் அளவுக்கு கூலி கிடைக்கும் என்பது அல்லாஹ்வின் நியதியாகும். அன்னை ஆயிஷா ரலி அவர்களைப் பார்த்து நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

ان لك من الاجر علي قدر نصبك


உன் சிரமத்தின் அளவே உனக்கு கூலி கிடைக்கும்  என்று கூறினார்கள்.

மற்ற தொழுகைகளை விட ஃபஜ்ர் தொழுகையில் இருக்கும் சிரமம் நம் எல்லோருக்கும் தெரியும்.அதுவும் நம்ம ஊட்டில சொல்ல வேண்டிய அவசியமே இல்ல.கடும் சிரமத்தோடு தான் தொழ வேண்டும். எனவே சிரமம் அதிகமாக இருப்பதால் அதன் பலன்களும் மிக அதிகமாகத்தான் இருக்கும்.


இரண்டாவது காரணம் அது பரக்கத்தான அதிகாலை நேரத்தில் தொழப்படுகிறது.

அல்லாஹ் தன் திருமறையில் والفجر என்று ஃபஜ்ர் தொழுகையின் மீது சத்தியமிட்டுச் சொல்கிறான். 

    

பஜ்ர் தொழுதவர் அல்லாஹ்வின் பாதுகாப்பை பெற்றுவிட்டார் என்ற ஹதீஸை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.


ஒரு பதினான்காம் இரவில் நாங்கள் நபி ஸல் அவர்களின் சபையில் அமர்ந்திருந்தோம். அப்போது நபி ஸல் அவர்கள் ; நீங்கள் இன்றைய இரவில் சந்திரனைப்பார்ப்பது போல நாளை மறுமையில் அல்லாஹ்வை பார்ப்பீர்கள்.அதற்கு நீங்கள் முடிந்தவரை பஜ்ர் மற்றும் அஸர் தொழுகைகளில் பேனுதலாக இருங்கள் என்று கூறினார்கள். எனவே ஃபஜ்ர் தொழுவதின் மூலம் அல்லாஹ்வை பார்க்கும் பெரும் பாக்கியம் நமக்கு கிடைக்கிறது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.ஆனால் இன்று நம்மில் எத்தனை பேர் அந்த ஃபஜ்ர் தொழுகையில் கவனம் செலுத்துகிறோம் என்பதை நாம் யோசித்துப் பார்க்க வேண்டும்.


ஒரு சமயம் அன்னை ஃபாத்திமா ரலி அவர்கள் ஃபஜ்ர் தொழுது விட்டு தூங்கிக் கொண்டிருந்தார்கள்.நம்மல மாதிரி ஃபஜ்ர் தொழாம தூங்குறவங்க கிடையாது.ஃபஜ்ர் தொழுதுட்டு தூங்குனாங்க.அதைப் பார்த்த நபி ஸல் அவர்கள் அவர்களை எழுப்பி, இது அல்லாஹ்வின் ரிஜ்க் வழங்கப்படும் நேரம். இந்த நேரத்துல போய் தூங்குறியாமா என்று சொன்னார்கள். ஃபஜ்ர் தொழுது விட்டே தூங்கக் கூடாதுன்னு சொன்னா நாம இன்னைக்கு ஃபஜ்ரே தொழாம தூங்குறோமே நம்மை என்ன சொல்றது.


இனி வரும் காலங்களில் நாம் நம்மை சீர்படுத்திக் கொள்ள வேண்டும். வல்லோனாம் அல்லாஹ் அருள் புரிவானாக   




 



No comments:

Post a Comment