Thursday, November 3, 2022

கௌஸுல் அஃழம் ரலி அவர்கள்

 

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மகத்தான அருளால் இஸ்லாமிய ஆண்டின் வசந்தமான மாதங்கள் என்று சொல்லப்படுகிற இரண்டு மாதங்களில் முதல் வசந்தமான ரபீவுல் அவ்வல் நிறைவு பெற்று இரண்டாம் வசந்தமான ரபீவுஸ்ஸானி தொடங்கியிருக்கிறது. உலக முஸ்லிம்களால் போற்றப்படுகிற, உயர்த்திப் பேசப்படுகிற, பரிசுத்தமான வாழ்வில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட, கௌஸுல் அஃலம் என்று எல்லோராலும் அழைக்கப்படுகிற ஹள்ரத் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ் அவர்கள் நினைவுகூறப்படுகிற, அவர்களின் வரலாறுகள் பேசப்படுகின்ற மாதம் இந்த ரபீவுல் ஆகிர் மாதம்.

எல்லாம் வல்ல இறைவன், மனிதர்களை நேர்வழிப்படுத்தவும் அவர்களை ஒழுங்குபடுத்தவும் அவர்களுக்கு சத்தியத்தை எடுத்துக்கூறவும் உலகிற்கு ஒவ்வொரு கால கட்டத்திலும் இறைத்தூதர்களை அனுப்பி வைத்தான்.இவ்வாறு அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட ஆதம் (அலை)  அவர்கள் முதற் கொண்டு அனைத்து நபிமார்களும் தங்கள் சமூகத்தை இறைவன் பக்கம் அழைத்தார்கள். அவர்களை நல்வழிப்படுத்தினார்கள். அவர்களின் உள்ளத்தை தூய்மைப்படுத்தினார்கள். அவர்களுக்கு சத்தியத்தை எடுத்துச் சொன்னார்கள். ஷரீஅத்தை விளக்கிச் சொன்னார்கள். அந்த வரிசையில் நபிமார்கள் அத்தனை பேருக்கும் முத்திரையாக, அத்தனை நபிமார்களுக்கும் தலைவராக நபிகள் நாயகம் அவர்கள் அகிலத்தில் அவதரித்தார்கள்.

நபிமார்கள் உலகில் செய்த பணிகள் உயர்வானது. அவர்கள் செய்த சாதனைகள் மகத்தானது. நபிமார்களின் மறைவுக்குப் பின்னால் அவர்கள் செய்த அந்தத்தூய பணியை  தொடர்வதற்காக இறைவனால் தேர்வு செய்யப்பட்ட பரிசுத்தமானவர்கள் தான் வலிமார்கள் எனப்படும் இறைநேசர்கள்.

واني خاتم النبيين لا نبي بعدي

நிச்சயமாக நான் நபிமார்களின் முத்திரையாக இருக்கிறேன். எனக்குப் பின் நபியில்லை. (ஸஹீஹுல் ஜாமிஃ ; 4258)

நபி அவர்களோடு நபித்துவம் முற்றுப் பெற்று விட்டது. நிறைவு பெற்று விட்டது. அவர்களுக்குப் பிறகு நபித்துவம் இல்லை. ஆனால் விலாயத் கியாமத் வரை நிலைத்திருக்கும். நபி அவர்களுக்கு முன்பும் வலிமார்கள் இருந்தார்கள். அவர்கள் வாழும் காலத்திலும் வலிமார்கள் இருந்தார்கள். அதற்கும் பிறகும் இருந்தார்கள், இப்போதும் இருக்கிறார்கள். இனி கியாமத் வரைக்கும் இருப்பார்கள். நம்மோடு இருக்கலாம். நம் சபைகளில் அமர்ந்திருக்கலாம். ஆனால் அவர் வலி என்பதை நம்மால் அறிந்து கொள்ள இயலாது.

إِنْ أَوْلِيَاؤُهُ إِلَّا الْمُتَّقُونَ وَلَٰكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ

நிச்சயமாக இறைய்யச்சமுள்ளவர்கள் தான் இறைநேசர்கள். என்றாலும்  அவர்களில் அதிகமானோர் அறிந்து கொள்ள மாட்டார்கள்.  (அல்குர்ஆன் :  8 34)

இந்த வசனத்திற்கு இரண்டு விளக்கங்கள் சொல்லப்படுகிறது. 1,யார் வலி என்று மக்களுக்கு தெரியாது.2,தான் ஒரு வலி என்று தனக்கே தெரியாது.

எனவே விலாயத் என்பது இரகசியமானது.சில நபர்களை அல்லாஹ் வெளிப்படுத்துகிறான். பல நபர்களை அல்லாஹ் மறைத்து விடுகிறான். யார் வேண்டுமானாலும் இறைநேசராக இருக்கலாம். இறைநேசர்களை எல்லோராலும் அறிந்து கொள்ள முடியாது. என்றாலும் விலாயத்திற்கு சில அடையாளங்களை மார்க்கம்  கூறுகிறது. அவைகளை வைத்து அறிந்து கொள்ளலாம். அந்த அடையாளங்களை வைத்துத்தான் வலிமார்கள் உலகில் அறியப்படுகிறார்கள். அந்த அடையாளங்களை வைத்து நாம் வலிமார்களுக்கெல்லாம் தலைவராக இருக்கிற கௌஸுல் அஃலம் ரலி அவர்களின் வாழ்கையை சிந்தித்தால் அவர்கள் எவ்வளவு பெரிய இறைநேசராகவும் அல்லாஹ்வின் அன்பைப் பெற்றவராகவும் இருந்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

கௌஸுல் அஃலம் ரலி அவர்கள் ஹிஜ்ரி 470 ம் ஆண்டு ஜீலான் என்ற நகரத்தில் பிறந்தார்கள். ஹிஜ்ரி 561 ம் ஆண்டு பக்தாதில் அவர்கள் மரணிக்கிறார்கள். சுமார் 90 வருடங்கள் உலகில் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் வாழ்ந்த 90 வருட வாழ்வும் மிகவும் தூய்மையாகவும் பரிசுத்தமாகவும் கரை காண முடியாத அளவு அப்பழுக்கற்றதாகவும் அமைந்திருந்தது. விலாயத்தின் அனைத்து அடையாளங்களையும் அவர்களின் வாழ்வில் நாம் காண முடியும்.

விலாயத்தின் முதல் அடையாளம் ;

الا ان اولياء الله لا خوف عليهم ولا هم يحزنون

அறிந்து கொள்ளுங்கள். நிச்சயமாக இறை நேசர்களுக்கு பயமும் இருக்காது. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். (அல்குர்ஆன் 10 62)

قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ مِنْ عِبَادِ اللَّهِ لَأُنَاسًا مَا هُمْ بِأَنْبِيَاءَ وَلَا شُهَدَاءَ يَغْبِطُهُمْ الْأَنْبِيَاءُ وَالشُّهَدَاءُ يَوْمَ الْقِيَامَةِ بِمَكَانِهِمْ مِنْ اللَّهِ تَعَالَى قَالُوا يَا رَسُولَ اللَّهِ تُخْبِرُنَا مَنْ هُمْ قَالَ هُمْ قَوْمٌ تَحَابُّوا بِرُوحِ اللَّهِ عَلَى غَيْرِ أَرْحَامٍ بَيْنَهُمْ وَلَا أَمْوَالٍ يَتَعَاطَوْنَهَا فَوَاللَّهِ إِنَّ وُجُوهَهُمْ لَنُورٌ وَإِنَّهُمْ عَلَى نُورٍ لَا يَخَافُونَ إِذَا خَافَ النَّاسُ وَلَا يَحْزَنُونَ إِذَا حَزِنَ النَّاسُ وَقَرَأَ هَذِهِ الْآيَةَ

أَلَا إِنَّ أَوْلِيَاءَ اللَّهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ }

அல்லாஹ்வின் அடியார்களில் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் நபிமார்களும் அல்ல. இறைவனின் பாதையில் உயிர் நீத்தவர்களும் அல்ல. இவர்களுக்கு அல்லாஹ் விடத்தில் கிடைக்கும் அந்தஸ்தைப் பார்த்து நபிமார்களும் தியாகிகளும் பொறாமைப்படுவார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். சஹாபாக்கள்அவர்கள் யார்என எங்களுக்குக் கூறுங்கள் அல்லாஹ்வின் தூதரே என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் தங்களுக்கிடையே இரத்த உறவிற்காகவோ, கொடுத்து வாங்கிக் கொள்ளும் செல்வங்களுக்காகவோ அல்லாமல் அல்லாஹ்விற்காக ஒருவரையொருவர் நேசித்துக் கொண்டவர்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நிச்சயமாக அவர்களுடைய முகங்கள் ஒளியாக இருக்கும். அவர்கள் ஒளியின் மீது இருப்பார்கள். மக்கள் அஞ்சும் போது அவர்கள் அஞ்சமாட்டார்கள். மக்கள் கவலைப்படும் போது அவர்கள் கவலைப்பட மாட்டார்கள் என்று கூறி விட்டு அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்த  பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள் என்ற வசனத்தை படித்துக் காட்டினார்கள்.  (அபூதாவூத் : 3060)

கடந்த காலத்தைப்பற்றிய கவலையோ எதிர்காலத்தைப்பற்றிய அச்சமோ அவர்களுக்கு இருக்காது என்று குறிப்பிடுகிறான்.நம்மிடம் இருக்கிற மிகப்பெரிய பலவீனமே இந்த இரண்டும் தான். கடந்த காலத்தைப்பற்றிய கவலையும் எதிர்காலத்தைப்பற்றிய அச்சமும். இப்படி ஆகி விட்டதே அப்படி ஆகி விட்டதே இது நடந்து விட்டதே அது நடந்து விட்டதே வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டு விட்டதே போட்ட முதலெல்லாம் வீணாப் போய் விட்டதே பயிரெல்லாம் வாடிப் போய் விட்டதே என்று கடந்த காலத்தைப் பற்றிய கவலை ஒரு பக்கம்.அப்படி ஆகி விடுமோ இப்படி ஆகி விடுமோ வியாபாரம் நஷ்டமாகி விடுமோ போட்ட முதல் வீணாப்போய் விடுமோ பயிர் வாடிப்போய் விடுமோ வாழ்க்கையில் தோற்றுப் போய் விடுவோமோ என்று எதிர் காலத்தைப் பற்றிய அச்சம் ஒரு பக்கம்.கல்யாணம் ஆகாதவர்களுக்கு கல்யாணம் செய்ய வேண்டும் என்ற  கவலை, கல்யாணம் ஆனவர்களுக்கு கல்யாணம் ஆகி விட்டதே இனி என்ன நடக்க போகிறதோ என்ற அச்சம், வீட்டை கட்டுவதற்கு முன்பு வீட்டை கட்ட வேண்டுமென்ற  கவலை,கட்டி முடித்த பிறகு வாங்கிய கடனை அடைக்க வேண்டுமென்ற அச்சம்.

ஆக இந்த இரண்டு இல்லாத மனிதர்களை அதிகம் பார்க்க முடியாது. நம் வாழ்வில் இருக்கிற சந்தோஷத்தையும் நிம்மதியையும் பறித்து நம்மை மீளாத் துயரத்தில் நிறுத்தி விடுகிற மிக ஆபத்தான விஷயங்கள் இந்த இரண்டும் தான். எனவே நம் வாழ்வில் சந்தோஷம் நிலைக்க வேண்டுமென்றால் நிம்மதி பெருக வேண்டுமென்றால் முதல்ல இந்த இரண்டையும் நம்மிலிருந்து தூக்கி எறிந்து விட வேண்டும்.வலிமார்களுக்கு இந்த இரண்டும் இருக்காது என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான். இந்த இரண்டும் இல்லாத அமைதியான உள்ளம் கொண்டவர்கள் வலிமார்கள்.

ஹள்ரத் கௌதுல் அஃலம் ரஹ் அவர்களிடம் பல கோடி மதிப்புள்ள அவர்களின் சரக்கு கப்பல் கவிழ்ந்து விட்டது என்று சொல்லப்பட்ட போது அவர்கள் உள்ளம் கவிழ வில்லை. அதைப்பற்றி எந்தக் கவலையும் பட வில்லை.

இறைநேசர்களுக்கான இரண்டாவது தன்மை 

இஸ்திகாமத். சிறிய அமலோ பெரிய அமலோ எந்த அமலைச் செய்தாலும் அதை விடாமல் தொடர்ந்து செய்ய வேண்டும்.

قال الإمام ابن حجر العسقلاني رحمه الله: المراد بولي الله: العالم بالله، المواظب على طاعته، المخلص في عبادته؛ 

அல்லாஹ்வை அறிந்தவராகவும் வணக்க வழிபாடுகளில் தொடர்ந்திருப்பவராகவும் அதில் மனத்தூய்மையுடையவராகவும் இருப்பவர்களே இறை நேசர் என இப்னு ஹஜர் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

இன்றைக்கு அந்த இஸ்திகாமத் நம்மிடம் அறவே இல்லை. எதையுமே தொடர்ந்து செய்ய மாட்டோம். ஒரு நாள் செய்வோம், ஒரு நாள் செய்ய மாட்டோம். அந்த இஸ்திகாமத் என்ற பண்பு எல்லோரிடத்திலும் இருக்காது. இறை நேசர்களிடம் மட்டுமே அந்தப் பண்பைக் காண முடியும்.

 

அந்த இஸ்திகாமத் வருவதற்காக நம் முன்னோர்கள் தன் நஃப்ஸோடு கடுமையாக போராடினார்கள்.

قال ابن المنكدر رحمه الله: كابدت نفسي أربعين سنة حتى استقامت

நாற்பது வருடங்களாக என் ஆத்மா சிரமப்பட்டது.அதற்குப் பிறகு தான் இஸ்திகாமத்தானது என்று இப்னு முன்கதிர் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.


كن طالبا للاستقامة لا طالبا للكرامة

வலிமார்களின் முக்கியமான அடையாளமே இந்த இஸ்திகாமத் தான். அதனால் இறை நேசரிடத்தில் இஸ்திகாமத்தைத் தேடு. கராமத்தைத் தேடாதே என்று ஞானவான்கள் கூறுவார்கள்.

وكان الشيخ عبد القادريأخذ بالعزيمة في أحواله جميعًا، ويُكثر من النوافل في أوقاته كلها حتى إنه كان كالفروض من حيث التزامه بأدائها

கௌஸுல் அஃலம் ரலி அவர்கள் எதை செய்தாலும் மன உறுதியோடு நியமமாக செய்வார்கள். விடாமல் தொடர்ந்து செய்வதால் அவர்கள் செய்கின்ற உபரியான வணக்கங்கள் கூட கடமையான வணக்கங்களைப் போல் இருக்கும்.

يقول أبو الفتح الهروي رضي الله عنه: خدمت الشيخ عبد القادر رضي الله عنه أربعين سنة فكان في مدتها يصلي الصبح بوضوء العشاء

அபுல் ஃபத்ஹுல் ஹரவீ ரஹ் அவர்கள் கூறுகிறார்கள் ;  நான் கௌஸுல் அஃலம் ரலி அவர்களுக்கு நாற்பது வருடங்கள் பணிவிடை செய்திருக்கிறேன். அந்த நாற்பது வருடங்களும் அவர்கள் இஷாவிற்கு செய்த ஒழுவுடனே ஃபஜ்ரையும் தொழுபவர்களாக இருந்தார்கள். (அத்தபகாதுல் குப்ரா)

இஷாவின் ஒழுவைக் கொண்டு ஃபர்ள் தொழ வேண்டும் என்றால் இரவு முழுக்க வணக்கத்தில் ஈடுபட்டால் மட்டுமே அது சாத்தியமாகும். அவர் பார்த்த 40 வருடத்தைத் தான் சொல்லியிருக்கிறார்கள். கௌஸுல் அஃலம் ரலி அவர்களது வாழ்க்கையில் இன்னொரு 40 வருடம் இருக்கிறது. அதை அவர்கள் பார்க்க வில்லை. பார்த்திருந்தால் அதையும் சேர்த்து சொல்லியிருப்பார்கள். அந்த இஸ்திகாமத் தான் அவர்களுடைய மிகப்பெரும் கராமத்.

3 வது அடையாளம் ஈமானில் உறுதி மிக்கவர்களாக இருப்பார்கள். உறுதியான ஈமானுடையவர்களாக இருப்பார்கள். இந்த அடையாளத்தை வைத்து கௌஸ் நாயகத்தின் வரலாற்றை உற்று நோக்கினால் அவர்கள் மிக மிக உறுதியான ஈமானை உடையவர்களாக இருந்தார்கள். அசைக்க முடியாத ஈமான். ஆட்டம் காணாத ஈமான். தடுமாற்றம் அடையாத ஈமான்.

قال الشيخ عبد القادر الجيلاني قال: رأيت عرشًا بين السماء والأرض، فناداني صوت قال: يا عبد القادر أنا ربك قد أسقطت عنك الفرائض، وأبحت لك المحارم كلها، أسقطت عنك جميع الواجبات، قال: فقلت له: اخسأ يا عدو الله، فتمزق ذلك العرش، وذلك النور، وقال: نجوت مني بحلمك وعلمك يا عبد القادر وقد فتنت بهذه الفعلة سبعين صديقا أو كما قال. قيل له: كيف عرفت يا عبد القادر أنه شيطان. قال: عرفت بقوله: أسقطت عنك الواجبات، وأبحت لك المحرمات، وعرفت أن الواجبات لا تسقط عن أحد إلا من فقد عقله، وقال: إنه لم يستطع أن يقول: أنا الله، بل قال: أنا ربك  

ஒரு நாள் அவர்கள் வான் வெளியில் அர்ஷ் ஒன்றைக் கண்டார்கள். அப்போது, அப்துல் காதிரே! நான் தான் உன் இறைவன். நான் உங்களுக்கு எல்லா கடமைகளையும் நீக்கி விட்டேன். நீங்கள் இனிமேல் எதையும் செய்யத் தேவையில்லை. தடுக்கப்பட்டவை அனைத்தையும் உங்களுக்கு ஆகுமாக்கி விட்டேன். இனிமேல் நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்ற சப்தம் கேட்டது. உடனே தூரப்போ இப்லீஸே என்று கூறினார்கள். அப்போது இப்லீஸ் சொன்னான் ; இதே வார்த்தையைக் கூறி பல பேரை நான் வழிதவறச் செய்திருக்கிறேன். ஆனால் நீங்கள் உங்களின் கல்வி மற்றும் நிதானத்தால் என்னிலிருந்து தப்பி விட்டீர்கள். எப்படி அவனை இப்லீஸ் என்று கண்டு பிடித்தீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள் அவன் சொன்ன வார்த்தையிலிருந்து அறிந்து கொண்டேன். நபி அவர்களோடு ஷரீஅத் முழுமை பெற்று விட்டது. அதற்குப் பிறகு அதில் எந்த மாற்றத்தையும் யாராலும் கொண்டு வர இயலாது.எனவே கடமைகள் தளர்த்தப்படுவதற்கோ தடுக்கப்பட்டவை ஆகுமாக்கப் படுவதற்கோ முகாந்திரம் இல்லை என்றார்கள்.

நான்காவது அடையாளம் ;

அதிக கல்வி ஞானத்தை உடையவர்களாக இருப்பார்கள். அல்லாஹ் விடமிருந்து விஷேசமான அறிவு ஞானம் வழக்கப்பட்டவர்களாக இருப்பார்கள். கௌஸ் நாயகம் மிகப்பெரும் அறிவு தீட்சன்யம் பெற்றவர்களாக இருந்தார்கள். அவர்களது பேச்சில் ஞானங்கள் அறிவியாய் கொட்டும். அவர்கள் கூறுகின்ற விளக்கங்களை எந்த கிதாபிலும் பார்க்க முடியாது. எந்த புத்தகத்திலும் படிக்க முடியாது. இறைவனால் வழங்கப்படுகின்ற விஷேசமான அறிவு ஞானங்கள் அவை.

ال الحافظ أبو العباس أحمد بن أحمد البندنيجي رحمه الله تعالى: حضرت أنا والشيخ جمال الدين بن الجوزي رحمه الله تعالىمجلس سيدنا الشيخ عبد القادر رحمة الله عليه فقرأ القارئ آية فذكر الشيخ في تفسيرها وجهًا، فقلت للشيخ جمال الدين: أتعلم هذا الوجه؟ قال: نعم، ثم ذكر وجهًا آخر، فقلت له: أتعلم هذا الوجه؟ قال: نعم، فذكر الشيخ فيها أحد عشر وجهًا وأنا أقول له: أتعلم هذا الوجه؟ وهو يقول: نعم، ثم الشيخ ذكر فيها وجهًا آخر، فقلت له: أتعلم هذا؟ قال: لا، حتى ذكر فيها كمال الأربعين وجهًا يعزو كل وجه إلى قائله، والشيخ جمال الدين يقول: لا أعرف هذا الوجه، واشتد عجبه من سعة علم سيدنا الشيخ رضي الله عنه...، (قلائد الجواهر

அல்லாமா இப்னுல் ஜவ்ஸீ ரஹ் அவர்கள் கூறுகிறார்கள். கௌஸுல் அஃலம் ரலி அவர்கள் ஒரு சபையில் ஒரு வசனத்திற்கு விளக்கம் சொன்னார்கள். அது எனக்கு தெரிந்த விளக்கமாக இருந்தது. பிறகு ஒரு விளக்கம் சொன்னார்கள். அதுவும் எனக்கு தெரிந்த விளக்கமாகவே இருந்தது. இவ்வாறு 11 விளக்கங்களை சொன்ன போது, அந்த விளக்கங்கள் நான் அறிந்த விஷயங்களாக இருந்தது. பிறகு 12 வது விளக்கத்தை சொன்னார்கள். அது எனக்கு தெரியாத விளக்கம். இப்படியே அடுத்தடுத்து ஒரு ஆயத்திற்கு 40 விளக்கங்களை சொன்னார்கள். (கலாயிதுல் ஜவாஹிர்)

ஐந்தாவது அடையாளம் ;

ஸகாவதுன் நஃப்ஸ். எதற்கும் ஆசைப்படாத, இருப்பதைக் கொண்டு போதுமாக்கிக் கொள்கின்ற தன்மை. உலக ஆசையில்லாத பற்றற்ற வாழ்க்கை. கௌஸ் அஃலம் ரஹ் அவர்கள் அறவே உலக ஆசையில்லாதவர்களாக உலக மோகம் இல்லாதவர்களாக இருந்தார்கள். கடுமையான சோதனையாக காலங்களில் கூட உள்ளத்தை கட்டுப்படுத்துபவர்களாக இருந்தார்கள்.

فقال: (وكنت أقتات بخرنوب الشوك، وقمامة البقل، وورق الخس من جانب النهر والشط، وبلغت الضائقة في غلاء نزل ببغداد إلى أن بقيت أيامًا لم آكل فيها طعامًا، بل كنت أتتبع المنبوذات أطعمها، فخرجت يومًا من شدة الجوع إلى الشط لعلي أجد ورق الخس أو البقل، أو غير ذلك فأتقوّت به. فما ذهبت إلى موضع إلا وغيري قد سبقني إليه وإن وجدت أجد الفقراء يتزاحمون عليه فأتركه حُبًّا، فرجعت أمشي وسط البلد لا أدرك منبوذًا إلا وقد سبقت إليه، حتى وصلت إلى مسجد ياسين بسوق الريحانيين ببغداد وقد أجهدني الضعف، وعجزت عن التماسك، فدخلت إليه وقعدت في جانب منه وقد كدت أصافح الموت، إذ دخل شاب أعجمي ومعه خبزٌ صافٍ وشواء، وجلس يأكل، فكنت أكاد كلما رفع يده باللقمة أن أفتح فمي من شدة الجوع، حتى أنكرت ذلك على نفسي: فقلت ما هذا؟ وقلت: ما ههنا إلا الله أو ما قضاه من الموت، إذ التفت إلى العجمي فرآني فقال: بسم الله يا أخي! فأبيت فأقسم علي فبادرت نفسي فخالفتها فأقسم أيضًا فأجبته، فأكلت متقاصرًا، فأخذ يسألني: ما شغلك؟ ومن أين أنت؟ وبمن تعرف؟ فقلت: أنا متفقّهٌ من جيلان! فقال: وأنا من جيلان فهل تعرف شابًّا جيلانيًّا يسمى عبد القادر يُعرف بسبط أبي عبد الله الصومعي الزاهد؟ فقلت: أنا هو، فاضطرب وتغير وجهه وقال: والله لقد وصلت إلى بغداد معي بقية نفقة لي، فسألت عنك فلم يرشدني أحد ونفذت عقَّتي، ولي ثلاثة أيام لا أجد ثمن قوتي، إلا مما كان لك معي، وقد حلت لي الميتة وأخذت من وديعتك هذا الخبز والشواء، فكل طيبًا فإنما هو لك وأنا ضيفك الآن بعد أن كنت ضيفي، فقلت له: وما ذاك؟ فقال: أمُّك وجهت لك معي ثمانية دنانير فاشتريت منها هذا للاضطرار، فأنا معتذر إليك! فسكَّتُّه وطيّبتُ نفسه ودفعت إليه باقي الطعام وشيئًا من الذهب برسم النفقة فقبله وانصرف) ذيل طبقات الحنابلة

அவர்கள் பக்தாதில் கல்வி கற்ற அந்த நேரம் கடுமையான கஷ்டம்.கடுமையான வறுமை, பசி.இலைதழைகளையும் செடி கொடிகளையும் சாப்பிடும் அளவிற்கு நிலை இருந்தது. அப்படி எதாவது கிடைத்தால் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்றெண்ணி ஒரு நாள் தேடிப் பார்த்தார்கள். அவர்கள் எங்கு சென்றாலும் அங்கே அவர்களுக்கு முன்னால் பெரிய கூட்டம் நின்று கொண்டிருக்கிறது. மரணம் வந்து விடுமோ என்று அஞ்சும் அளவு கடும் பசி. இருந்தாலும் வேறு வழியின்றி அப்படியே நடக்க முடியாமல் நடந்து ஒரு பள்ளிவாசலில் வந்து அமர்ந்திருந்தார்கள். அப்போது அங்கே ஒரு வெளியூர்வாசி ரொட்டி இறைச்சியையும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். கௌஸுல் அஃலம் ரலி அவர்களைப் பார்த்து நீங்களும் சாப்பிடுங்கள் என்றார். வேண்டாம் என்றார்கள். மீண்டும் மீண்டும் சொன்னதால் இலேசாக எடுத்து சாப்பிட ஆரம்பித்தார்கள். அப்போது நீங்கள் எந்த ஊர் என்று விசாரித்தார். நான் ஜீலான் என்றார்கள். நானும் ஜீலானிலிருந்து தான் வருகிறேன் என்று அவர் கூறினார். உங்கள் பெயர் என்ன உங்கள் தந்தை பெயர் என்று விசாரித்தார். எல்லா விவரங்களையும் சொன்ன போது அவர் ஆச்சரியப்பட்டு என்னை மன்னித்துக் கொள்ளுமாறு கூறினார். ஏனென்று விளக்கம் கேட்ட போது, நான் ஜீலானுக்கு சென்றிருந்தேன். உங்கள் தாயார் என்னை சந்தித்து 8 தீனாரை என் கையில் கொடுத்து பக்தாதில் என் மகனைக் கண்டால் இதை அவனிடம் கொடுத்து விடு என்றார்கள். நான் மூன்று நாட்களாக தேடினேன். உங்களைக் காண முடிய வில்லை. என் கையில் வைத்திருந்த பணம் காசுகளும் தீர்ந்து விட்டது. வேறு வழியின்றி உங்களுக்காக உங்கள் தாயார் தந்த அந்த தீனாரிலிருந்து தான் இந்த உணவை நான் வாங்கினேன். எனவே உங்கள் காசை செலவழித்து விட்டதால் என்னை மன்னித்து விடுங்கள் என்றார். சரி பரவாயில்லை என்று கூறி மீதி உணவை அவரிடமே கொடுத்து விட்டு சில தீனார்களையும் அவருக்கு கொடுத்து வழியனுப்பி வைத்தார்கள். (தைலு தபகாதில் கனாபிலா)    

அந்த கஷ்டமான சூழலிலும் கடும் பசியிலும் காசுக்கு ஆசைப்படாமல் அதை பிறருக்கு விட்டுக் கொடுக்கிற குணம். இதற்குப் பெயர் தான் ஸகாவத்துன் நஃப்ஸ்.

எல்லாவற்றிற்கும் மேலாக கராமத்துகளை உடையவர்களாக இருந்தார்கள். ஒருவரின் உள் உணர்வுகளையும் அவரின் எண்ண அலைகளையும் கூட அறியும் ஆற்றல் பெற்றவர்களாக இருந்தார்கள்.

يقول الشيخ أَبو بكر العماد -رحمه الله-:

كنت قرأْتُ في أُصول الدِّين، فأَوقع عندي شكّاً، فقلتُ: حتّى أَمضي إلى مجلس الشيخِ عبد القادر، فقد ذُكِرَ أَنه يتكلّم على الخواطر.

فمضيتُ وهو يتكلم، فقال: اعتقادنا اعتقاد السَّلَفِ الصَّالح والصحابة.

فقلتُ في نفسي: هذا قاله اتِّفاقاً.

فتكلَّم، ثم التفت إِلى ناحيتي فأعاده، فقلتُ: الواعظ قد يلتفتُ.

فالتفت إِليَّ ثالثة، وقال: يا أَبا بكر، فأعاد القول، ثمَّ قال: قُم قد جاء أَبوك.

وكان غائباً، فقمتُ مبادراً، وإِذا أَبي قد جاء

அபூபக்கருல் அம்மாத் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள் ; கௌஸுல் அஃலம் ரலி அவர்கள் மனோஇச்சைப் படி பேசுகிறார்கள். மார்க்கத்தில் சொந்தக் கருத்தை சொல்கிறார்கள் என்று சிலர் கூறினார்கள். நான் அந்த சந்தேகத்துடனும் குழப்பத்துடனும் அவர்களின் சபையில் அமர்ந்திருந்தேன். அவர்கள் பிரசங்கம் செய்து கொண்டே என்னை நோக்கி திரும்பி என் முன்னோர்கள் வழியே என் வழி என்றார்கள். நான் யதார்த்தமாக திரும்பியதாக நினைத்தேன். கொஞ்ச நேரம் கழித்து மறுபடியும் என் முகத்தைப் பார்த்து அதே வார்த்தையை சொன்னார்கள். அப்போதும் யதார்த்தமாக திரும்பியதாக நினைத்தேன். மூன்றாவதும் ஒரு தடவை என்னைப் பார்த்து அபூபக்கரே எழுந்திருந்து வெளியே போய் பாருங்கள் உங்கள் தந்தை வந்து விட்டார் என்றார்கள். நான் சென்று பார்த்தேன். வெளியூர் போய் நீண்ட நாட்கள் ஆகி விட்ட என் தந்தை வந்திருந்தார்கள். அப்போது தான் எனக்கு புரிந்தது;  பிரசங்கத்தின் போது என்னை எதார்த்தமாக திரும்பிப் பார்க்க வில்லை. என் உள்ளத்திலுள்ளதை விளங்கி என் சந்தேகத்திற்கு விளக்கமாகத்தான் அதை சொல்லியிருக்கிறார்கள்.

7 comments:

  1. அல்ஹம்துலில்லாஹ் ! மாஷா அல்லாஹ் பாரக்கல்லாஹ் ஹழ்ரத்

    ReplyDelete
  2. அல்லாஹ் உங்களுக்கு அதிகம் அதிகம் கிருபை செய்வானாக

    ReplyDelete
  3. Pls give your phone number hazrat my no.7200405499

    ReplyDelete
  4. அல்ஹம்துலில்லாஹ்

    ReplyDelete