Friday, November 18, 2022

மனிதர்களில் சிறந்தவர் யார் ?

 

வருடந்தோறும் நவம்பர் 19 ம் தேதி INTERNATIONAL MENS DAY தேசிய ஆண்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது.அல்லாஹுத்தஆலா மனிதர் களில் ஆண் பெண் என்ற இரு பாலினத்தைப் படைத்திருக்கிறான். பேச்சுக்களில் தன்மைகளில் நடைமுறைகளில் பழக்க வழக்கங்களில் ஆண்,பெண் இருவருக்குமிடையில் நிறைய வித்தியாசங்கள் உண்டு. ஒரு சில மார்க்க சட்ட திட்டங்களில் கூட இருவருக்கும் வித்தியாசங்கள் இருப்பதை நாம் காணலாம். ஆண்,பெண் இரு பாலர்களில் பொதுவாக ஆண்கள் என்றைக்கும் தங்களை உயர்வாகவே நினைக்கும் குணம் கொண்டவர்கள். பெண்களை விட தாங்கள் தான் சிறந்தவர்கள் என்று நினைத்துக் கொள்வதில் அனைத்து ஆண்களும் ஒன்றாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் உண்மையும் யதார்த்தமும் என்னவென்றால் பல விஷயங்களில் ஆண்களை விட பெண்கள் தான் சிறந்தவர்களாக இருக்கிறார்கள்.

1 கற்றுக் கொள்வதில் பெண்கள் சிறந்தவர்கள். எதையும் பெண்கள் எளிமையாகக் கற்றுக்கொள்வார்கள். கற்றல் திறன் எல்லோருக்கும் பொதுவானதாக இருந்தாலும் ஆண்களுக்குப் பொறுமை குணம் குறைவு. எனவே தான், வகுப்புகளில் பெரும்பான்மை பெண்களே முதலிடம் பிடிக்கிறார்கள்.

2 சுகாதார விஷயத்தில் பெண்கள் எப்போதும் பல படிகள் மேலே என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஒரு வீட்டையோ, அலுவலகத்தின் குறிப்பிட்ட ஓர் இடத்தையோ பார்க்கும் போதே அந்த இடத்தில் இருப்பவர் ஆணா, பெண்ணா என்று சொல்லி விடலாம். பெண்கள், தன்னைச் சுற்றியுள்ள எல்லாமே சுத்தமாக இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவார்கள்.

3 தைரியத்தில் பெண்களுக்கே முதல் இடம். ஒரு இன்டெர்வியூ, அல்லது ஒரு பரிட்சை என்றால் எல்லாருக்கும் பயம் வரும். பெண்களுக்கும் அந்த பயம் உண்டு. ஆனால், அதை வெளிக்காட்டாமல் கூலாக அதை கையாள்வதில் சாமர்த்தியர்கள். அதனால் தான், செல்லும் இடங்களில் எல்லாம் வெற்றி பெறுகிறார்கள்.

4 ரொம்ப மெச்சூர்டாக செயல்படுவதும் பெண்கள் தான். அவர்கள் தன்மானத்தைக் காத்துக்கொள்வதில் பெரும் பங்காற்றுபவர்கள்.

5 எந்த ஒரு விஷயத்திலும் பெண்கள் தெளிவான உறுதி கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனால், ஆண்கள் கொஞ்சம் குழப்பவாதிகள். ஓர் செயலில் ஈடுபடுவதற்கு முன்னரே யோசித்து, அதற்கு தகுந்தபடி செயல்படுவதே பெண்களின் வெற்றிகளுக்குக் காரணமாக இருக்கிறது.

6 பிறருக்கு மரியாதை செலுத்துவதிலும் பெண்கள் மேலானவர்கள். தன்னை விட வயதில் குறைந்தவர்களாக இருந்தாலும், அவர்களிடம் மரியாதையோடு செயல்படுவதையே விரும்புவார்கள்.

7 அறிவியல், கணிதம் சார்ந்த கல்விகளில் பெண்கள் லேசுபட்டவர்களல்ல. தங்களுக்குப் பிடிக்காத சப்ஜெக்ட்டாக இருந்தாலும், அதிலும் தேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்றே விரும்புவார்கள். எனவே அதிலும் அவர்கள் முதலிடம் பிடித்து விடுவார்கள்.

8 நோய் எதிர்ப்பு சக்தி பெண்களுக்குத் தான் அதிகம் என்கிறது அமெரிக்க ஆய்வு ஒன்று. அவர்களது உடலில் உற்பத்தியாகும் ஹார்மோன்கள், நோய்க்கிருமிகளை எளிதில் அழித்து விடும். அதனால் தான், மனதளவிலும் சக்தி வாய்ந்தவர்களாகப் பெண்கள் இருக்கிறார்கள்.

9 பெற்றோர்கள் மீது அக்கறை செலுத்துவதில் பெண்களுக்கே முதலிடம் என்றால் மிகையாகாது. 36 சதவிகிதப் பெண்கள், பெற்றோர்களுக்கு மிகுந்த ஆதரவு அளிப்பார்கள். ஆனால், 16 சதவிகித ஆண்களே பெற்றோர்களைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்துவார்கள் என்பது ஒரு ஆய்வின் முடிவு.

10 சேமிப்பு என்று வந்து விட்டால், அதிலும் பெண்கள் தான் சிறந்தவர்கள். ஆண்களுக்கு அதில் பக்குவம் குறைவு என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். மேக்கப், டிரெஸ்ஸிங், காஸ்மெடிக்ஸ் என்று பெண்கள் செலவு செய்தாலுமே, பிற்காலத் தேவைக்கும் பயன்படும் வகையில் பணத்தை சேமிப்பார்கள்.    

இதல்லாமல் ஒரு குடும்பத்தை அழகான முறையில் நிர்வகிப்பதில் பெண்கள் தான் சிறந்தவர்கள், குழந்தைகளைக் கவனிப்பதில், அவர்களை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்வதில், அவர்களை நல்ல முறையில் வளர்த்து உருவாக்குவதில் பெண்கள் தான் சிறந்தவர்கள், தொழுகை போன்ற வணக்க வழிபாடுகளில் பெண்கள் தான் சிறந்தவர்கள், இறைவனுக்கு அஞ்சி நடப்பதிலும் பெண்கள் தான் சிறந்தவர்கள். இப்படி எந்த விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் ஆண்களை விட பெண்களே சிறந்தவர்களாக இருக்கிறார்கள்.

அப்படியானால் ஆண்கள் எந்த விஷயத்தில் தான் சிறந்தவர்களாக, தனித்துவம் உடையவர்களாக விளங்குகிறார்கள் என்று பார்த்தால், சமூக சேவைகளில், சமுதாயத்திற்கு ஆற்றும் அறும் பணிகளில் பிற மக்களுக்கு பயனளிக்கும் காரியங்களில் ஈடுபடுவதில் தான் ஆண்கள் சிறந்தவர்களாக இருக்கிறார்கள். பெண்களின் உலகம் மிகவும் சிறியது. பெற்றோர்கள், கணவன், பிள்ளைகள் என ஒரு சிறிய வட்டத்திற்குள் அவர்களின் உலகம் சுருங்கி விடுகிறது. ஆனால் ஆண்களின் உலகம் மிகப்பெரியது. தினம் தினம் எண்ணற்ற மனிதர்களைப் பார்க்கிற, சந்தக்கின்ற, பழகுகின்ற வாய்ப்பினைப் பெற்ற ஆண்கள் தன்னைச் சுற்றியிருப்பவர்களுக்கு பலன் தருபவர்களாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டும் தான் அவர்கள் சிறந்தவர்கள். இல்லையென்றால் அவர்கள் பெண்களை விட எந்த விஷயத்திலும்  உயர்ந்தவர்களாக கருதப்பட மாட்டார்கள்.

للذكر مثل حظ الانثيين

ஒரு ஆணுக்கு இரு பெண்களுக்குரியது போன்ற பாகம் உண்டு. (அல்குர்ஆன் : 4 ; 11)

பெண்கள் பலவீனமானவர்கள். ஆண்களைப் போன்று பொருளீட்டும் ஆற்றல் இல்லாதவர்கள். நியாயமாக பார்த்தால் பெண்களுக்குத் தான் சொத்து அதிகமாக கொடுக்க வேண்டும். ஆனால் அவ்வாறிருந்தும் அந்த பெண்களை விட ஆண்களுக்கே அதிகமாக கொடுக்க வேண்டும் என்று அல்லாஹ் சொன்ன காரணம் ;

الرجل لكمال عقله يصرف المال الي ما يفيده نحو بناء الرباطات واعانة الملهوفين والنفقة علي الايتام والارامل

மடங்களைக் கட்டுவது,அநீதம் இழைக்கப்பட்டவர்களுக்கு உதவுவது, அநாதைகள் மற்றும் விதவைகளுக்கு உதவுவது போன்ற நன்மையான காரியங்களை ஆண்கள் தான் செய்வார்கள். எனவே தான் பெண்களை விட அவர்களுக்கு அதிகமாக கொடுக்கும் படி அல்லாஹ் கூறுகிறான். (தஃப்ஸீர் ஜலாலைன் ஓரக்குறிப்பு)

ஒருவன் சிறந்தவன் என்பதற்கான அடையாளம் பிறருக்கு பயன் தருபவனாக இருப்பது.

خير الناس انفعهم للناس

மக்களுக்கு பயன் தருபவரே மக்களில் சிறந்தவர். (தப்ரானீ)

மனிதனாகப் பிறந்தவன் பிறருக்கு உபகாரம் செய்ய வேண்டும், தேவைப்படுவோருக்கு உதவிகள் புரிய வேண்டும். அவனைச் சுற்றியிருப்பவர்கள் அவனைக் கொண்டு பயனடைய வேண்டும். இல்லையென்றால் அவன் மனிதனாகவும் இருக்க முடியாது, சிறந்தவனாகவும் இருக்க முடியாது.

பிறருக்கு உதவி புரிதல் என்பது நபிகள் நாயகம் அவர்களின் மேலான பண்புகளில் ஒன்றாக இருக்கிறது.

قَالَتْ لَهُ خَدِيجَةُ: كَلا، أَبْشِرْ، فَوَاللهِ، لا يُخْزِيكَ اللهُ أَبَدًا، وَاللهِ، إِنَّكَ لَتَصِلُ الرَّحِمَ، وَتَصْدُقُ الْحَدِيثَ، وَتَحْمِلُ الْكَلَّ، وَتُكْسِبُ الْمَعْدُومَ، وَتَقْرِي الضَّيْفَ، وَتُعِينُ عَلَى نَوَائِبِ الْحَقِّ

அல்லாஹ்வின் மீது ஆணையாக உங்களை ஒரு போதும் அல்லாஹ் இழிவுபடுத்த மாட்டான். (ஏனெனில்) தாங்கள் உறவினர்களுடன் இணங்கி இருக்கின்றீர்கள். (சிரமப்படுவோரின்) சுமைகளைத் தாங்கள் சுமந்து கொள்கிறீர்கள். வறியவர்களுக்காக உழைக்கிறீர்கள், விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள். உண்மையான சோதனைகளில் (ஆட்பட்டோருக்கு) உதவி புரிகின்றீர்கள் என்று அன்னை கதீஜா ரலி அவர்கள் கூறினார்கள். (புகாரி ; 4953)

ஒருவர் ஒரு உதவி என்றாலோ அல்லது ஒரு பிரச்சனை என்றாலோ உடனே முன்னால் வந்து நிற்பது நபி  அவர்கள் தான்.

وذات يوم، أقبل رجل من بلد اسمها (إراش) إلى مكة، فظلمه أبو جهل، وأخذ منه إبله، فذهب الرجل إلى نادي قريش يسألهم عن رجل ينصره على 

أبي جهل، وهنا وجد الكفار فرصة للتسلية والضحك والسخرية من رسول الله صلى الله عليه وسلم، فأمروا الرجل أن يذهب إلى الرسول صلى الله عليه وسلم ليأخذ له حقه، فذهب الرجل إلى رسول الله صلى الله عليه وسلم، وأخذوا ينظرون إليه ليروا ما سيحدث، فقام النبي صلى الله عليه وسلم مع الرجل ليعيد له حقه من أبي جهل، فأرسلوا وراءه أحدهم؛ ليرى ما سوف يصنعه أبوجهل مع رسول الله صلى الله عليه وسلم، فذهب الرسول صلى الله عليه وسلم إلى بيت أبي جهل، وطرق بابه، فخرج أبو جهل من البيت خائفًا مرتعدًا، وقد تغير لونه من شدة الخوف، فقال له رسول الله صلى الله عليه وسلم: (أعطِ هذا الرجل حقه) فرد أبو جهل دون تردد: لا تبرح حتى أعطيه الذي له، ودخل البيت مسرعًا، فأخرج مال الرجل، فأخذه، وانصرف.

وعندما أقبل أبو جهل على قومه بادروه قائلين: ويلك! ما بك؟ فقال لهم: والله ما هو إلا أن ضرب عليَّ وسمعت صوته فملئت منه رعبًا، ثم خرجت إليه، وإن فوق رأسه لفحلا من الإبل ما رأيتُ مثلَه قط، فوالله لو أبَيتُ لأكلني. [البداية والنهاية

இராஷ் என்ற ஊரிலிருந்து ஒரு வியாபாரி மக்கா நகருக்கு வந்திருந்தார். அபூஜஹ்ல் அவரிடமிருந்து ஒரு ஒட்டகத்தை வாங்கி விட்டு அதற்கான விலையை தராமல் அநீதம் செய்து விட்டான். அதனால் மக்காவில் இருக்கிற முக்கிய தலைவர்களை சந்தித்து தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று முறையிட்டார். நபியவர்களை கேலி செய்வதற்கும் பரிகாசம் செய்வதற்கும் அவகாசத்தை தேடிக்கொண்டிருந்த மக்கா வாசிகளுக்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பமாக அமைந்தது. எனவே மக்காவாசிகள் அந்த வியாபாரியை நபியிடத்தில் சென்று நீ முறையீடு. அவர் உனக்கு உதவி செய்வார் என்று சொல்லி அனுப்பினார்கள். அவரும் நபியிடத்தில் சென்றார். அங்கே என்ன நடக்கிறது என்பதை பார்ப்பதற்காக ஒருவரையும் அவருக்கு பின்னால் அனுப்பி வைத்தார்கள். அந்த வியாபாரி தனக்கு நடந்ததை நபியிடத்தில் எடுத்துச் சொன்னதும் நபியவர்கள் அந்த வியாபாரியை அழைத்துக்கொண்டு அபூஜஹ்லின் வீட்டிற்கு சென்றார்கள். சென்று அவனுடைய வீட்டின் கதவைத் தட்டி தன் குரலை எழுப்பினார்கள். நபியின் அந்த கம்பீரமான குரலைக் கேட்டவுடன் முகமெல்லாம் மாறியவனாக உடல் நடுங்கியவனாக பயந்த நிலையில் வெளியே வந்தான். அவனைப் பார்த்ததும் நபியவர்கள் இவனுக்கு கொடுக்கவேண்டிய பணத்தைக் கொடு என்று சொன்னார்கள். உடனே அபூஜஹ்ல்  இங்கேயை நில்லுங்கள். நான் எடுத்து வருகிறேன் என்று சொல்லி வேகமாக சென்று அந்த ஒட்டகத்திற்குரிய பணத்தை எடுத்துக்கொண்டு வந்து அந்த வியாபாரியிடத்தில் கொடுத்தான். மக்காவாசிகள் அனுப்பிய அந்த மனிதர் இந்த நிகழ்வுகளையெல்லாம் பார்த்து விட்டு நடந்ததை மக்காவாசிகளிடத்தில் வந்து சொன்னார். உடனே அவர்கள் அபூஜஹ்லை அழைத்து, உங்களுக்கு என்ன ஆனது? ஏன் இப்படி நடந்து கொண்டீர்கள்? உங்களிடத்திலே நபியை அனுப்பியக் காரணமே, அவரிடம் நீ ஏதாவது சொல்ல வேண்டும். அதைப் பார்த்து நாங்கள் சிரிக்க வேண்டும். அவர்களை கேலி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தான். ஆனால் ஏன் இப்படி நடந்து கொண்டீர்கள் என்று கேட்ட பொழுது, அவருடைய குரலைக் கேட்டவுடன் என் உடலெல்லாம் நடுங்க ஆரம்பித்து விட்டது. மட்டுமல்ல அவருடைய தலைக்கு மேல் நான் ஒரு ஒட்டகத்தைப் போன்ற ஒரு தோற்றத்தை பார்த்தேன். இதுவரை அதைப்போன்ற ஒட்டகத்தை நான் கண்டதில்லை. ஒருவேளை நான் கொடுக்காமல் மறுத்திருந்தால் என்னை அது கடித்து சாப்பிட்டு விடுவோ என்று நான் பயந்தேன் என அபூஜஹ்ல் கூறினான். (அல்பிதாயா வன்நிஹாயா)

இந்த நிகழ்வை கொஞ்சம் நாம் ஆய்வு செய்து பார்ப்போம்.வெளியூரிலிருந்து ஒருவர் வந்திருக்கிறார்.அவர் யாரென்று தெரியாது. அவருடன் நட்போ உறவோ பழக்கமோ எதுவும் இல்லை.அவருக்கு ஒரு பிரச்சனை என்றவுடன் எதையும் யோசிக்காமல்  நபி அவர்கள் செல்கிறார்கள்.அப்படி எதையும் யோசிக்காமல் செல்வார்கள் என்று மக்காவாசிகளுக்கும் தெரியும்.அதனால் தான் அவரை நபியிடத்தில் அனுப்பி வைக்கிறார்கள். இங்கே நாம் யோசிக்க வேண்டிய இன்னொரு விஷயம், அபூஜஹ்ல் ரொம்ப மோசமானவன்..   فرعون هذه الامة இந்த உம்மத்தின் ஃபிர்அவ்ன் என்று சொல்லப்படுகிற அளவுக்கு ரொம்ப ஆபத்தானவன். ஒவ்வொரு நேரத்தில் நபிக்கு எதிராக செயல்படக்கூடியவன், எத்தனையோ சமயங்களில் நபியைக் கொல்வதற்கும் திட்டங்கள் தீட்டியவன்.இவை அனைத்தும் நபிக்கு தெரியும். இருந்தாலும் அவனிடத்தில் செல்கிறார்கள்.

நபியவார்களிடம் இருந்த இதே குணம், இதே தன்மைகள் ஸஹாபாக்களிடமும் இருந்தது. குறிப்பாக அபூபக்கர் சித்தீக் ரலி அவர்களிடம் இருந்தது.நபி அவர்களைப் பார்த்து கதீஜா ரலி அவர்கள் என்ன வார்த்தைகளை சொன்னார்களோ அந்த வார்த்தைகளில் சற்றும் வித்தியாசமின்றி அபூபக்கர் ரலி அவர்களைப் பார்த்து இப்னு தகினா கூறினார்.

فَلَمَّا ابْتُلِيَ المُسْلِمُونَ، خَرَجَ أَبُو بَكْرٍ مُهَاجِرًا قِبَلَ الحَبَشَةِ، حَتَّى إِذَا بَلَغَ بَرْكَ الغِمَادِ لَقِيَهُ ابْنُ الدَّغِنَةِ، وَهُوَ سَيِّدُ القَارَةِ، فَقَالَ: أَيْنَ تُرِيدُ يَا أَبَا بَكْرٍ؟ فَقَالَ أَبُو بَكْرٍ: أَخْرَجَنِي قَوْمِي، فَأَنَا أُرِيدُ أَنْ أَسِيحَ فِي الأَرْضِ، فَأَعْبُدَ رَبِّي، قَالَ ابْنُ الدَّغِنَةِ: إِنَّ مِثْلَكَ لاَ يَخْرُجُ وَلاَ يُخْرَجُ؛ فَإِنَّكَ تَكْسِبُ المَعْدُومَ، وَتَصِلُ الرَّحِمَ، وَتَحْمِلُ الكَلَّ، وَتَقْرِي الضَّيْفَ، وَتُعِينُ عَلَى نَوَائِبِ الحَقِّ، وَأَنَا لَكَ جَارٌ، فَارْجِعْ فَاعْبُدْ رَبَّكَ بِبِلاَدِكَ

முஸ்லிம்கள் சோதனைக்குள்ளாக்கப்பட்ட போது அபூபக்ர் (ரலி) அவர்கள் தாயகம் துறந்து அபிசீனியாவை நோக்கிச் சென்றார்கள். பர்குல் ஃகிமாத் எனும் இடத்தை அடைந்த போது அப்பகுதியின் தலைவர் இப்னு தகினா என்பவர் அவர்களைச் சந்தித்தார். அவர் அவர்களிடம் எங்கே செல்கிறீர்? என்று கேட்டார். அபூபக்ர் (ரலி) அவர்கள் என் சமுதாயத்தினர் என்னை வெளியேற்றி விட்டனர். எனவே பூமியில் பயணம் சென்று என் இறைவனை வவ்ங்கப் போகிறேன் என்று கூறினார்கள். அதற்கு இப்னு தகினா அவர்கள் உம்மைப் போன்றவர் வெளியேறவும் கூடாது. வெளியேற்றப்படவும் கூடாது. ஏனெனில் நீர் ஏழைகளுக்காக உழைக்கிறீர். உறவினர்களுடன் இணங்கி வாழ்கிறீர். பிறருக்காகச் சிரமங்களைத் தாங்கிக் கொள்கிறீர். விருந்தினர்களை உபசரிக்கிறீர். துன்பமுற்றவர்களுக்கு உதவுகிறீர். எனவே நான் உமக்கு அடைக்கலம் தருகிறேன். ஆகவே திரும்பி உமது ஊருக்குச் சென்று உமது இறைவனை வணங்குவீராக என்று கூறினார். (புகாரி ; 2297)

உண்மையில் ஸஹாபாக்களின் வாழ்வு முழுக்க முழுக்க மற்றவர்களுக்கு பயன் தரும் ஒரு அற்புத வாழ்வாகத்தான் இருந்தது என்பதை வரலாறு பதிவு செய்திருக்கிறது.

روى الترمذي عن أنس بن مالك رضي الله عنه، قال: لما قدم النبي صلى الله عليه وسلم المدينة أتاه المهاجرون، فقالوا: يا رسول الله، ما رأينا قومًا أبذل من كثير ولا أحسن مواساةً من قليل - (أي من مال قليل) - من قوم - (أي الأنصار) - نزلنا بين أظهرهم - (أي عندهم) - لقد كفونا المؤنة، وأشركونا في المهنأ - (أي: أحسنوا إلينا؛ سواء كانوا كثيري المال، أو فقيري الحال) - حتى لقد خفنا أن يذهبوا بالأجر كله، فقال النبي صلى الله عليه وسلم: ((لا، ما دعوتم الله لهم وأثنيتم عليهم))؛ (حديث صحيح)، (صحيح الترمذي ، حديث 2020).

நபி அவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்த வந்த நேரத்தில் முஹாஜிர்கள் நபி அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதர் அவர்களே அன்ஸாரிகளை விட தங்களுடைய பொருளாதாரத்தை அதிகம் செலவு செய்கின்ற ஒரு கூட்டத்தை நாங்கள் கண்டதில்லை. மேலும் அவர்களை விட பிறருக்கு ஆதரவளிக்கின்ற ஒரு சமூகத்தை நாங்கள் கண்டதில்லை. எங்களுக்காக அதிகம் அவர்கள் சிரமத்தை தாங்கிக் கொள்கிறார்கள். எங்களுக்கு அதிகம் உபகாரம் செய்கிறார்கள். அனைத்து நன்மைகளையும் அவர்களே எடுத்துச் சென்று விடுவார்களோ என்று நாங்கள் அஞ்சுகிறோம் என்று கூறினார்கள். அப்போது பெருமானார் அவர்கள் கூறினார்கள் ; அவர்கள் செய்யும் நற்காரியங்களை நீங்கள் புகழ்ந்து அவர்களுக்காக நீங்கள் துஆ செய்து கொண்டிருந்தால் அவர்களின் உபகாரத்திற்கு நீங்கள் பிரதி உபகாரம் செய்தவர்களாக ஆகி விடுவீர்கள் என்றார்கள். (திர்மிதி ; 2487)

நன்மைகள் அனைத்தையும் அவர்களே எடுத்துச் சென்று விடுவார்களோ என்று அஞ்சும் அளவிற்கு அன்ஸாரிகளின் உபகாரங்கள் இருந்தது என்பதை பார்க்கிறோம்.

روى أبو نعيم عن مالك الداراني: أن عمر بن الخطاب رضي الله تعالى عنه أخذ أربعمائة دينار فجعلها في صرة، فقال للغلام: اذهب بها إلى أبي عبيدة بن الجراح، ثم انتظر ساعةً في البيت حتى تنظر ما يصنع، فذهب بها الغلام، فقال: يقول لك أمير المؤمنين: اجعل هذه في بعض حاجتك، فقال: وصله الله ورحمه، ثم قال: تعالي يا جارية، اذهبي بهذه السبعة إلى فلان، وبهذه الخمسة إلى فلان، وبهذه الخمسة إلى فلان، حتى أنفذها، فرجع الغلام إلى عمر رضي الله تعالى عنه، وأخبره فوجده قد أعد مثلها لمعاذ بن جبل، فقال: اذهب بها إلى معاذ وانتظر في البيت ساعةً حتى تنظر ما يصنع، فذهب بها إليه، فقال: يقول لك أمير المؤمنين: اجعل هذه في بعض حاجتك، فقال: رحمه الله ووصله، تعالي يا جارية، اذهبي إلى بيت فلان بكذا، اذهبي إلى بيت فلان بكذا، فاطلعت امرأة معاذ، فقالت: ونحن والله مساكين فأعطنا، ولم يبق في الخرقة إلا ديناران، فدحا - (ألقى) - بهما إليها - (أي: أعطاهما) - ورجع الغلام إلى عمر، فأخبره، فسُرَّ بذلك، وقال: "إنهم إخوة بعضهم من بعض"؛ (حلية الأولياء؛ لأبي نعيم، ج1، ص237).

உமர் ரலி அவர்கள் 400 தீனாரை ஒரு பையில் வைத்து தன் அடிமையிடம் கொடுத்து அபூஉபைதா ரலி அவர்களிடம் கொடுத்து விட்டு, அவர், அதை என்ன செய்கிறார் என்று நின்று பார்த்து வரும் படி சொன்னார்கள். அவரும் அதை கொடுத்து விட்டு அங்கு நின்று பார்த்துக் கொண்டிருந்தார். அபூஉபைதா ரலி அவர்கள் அதைப் பெற்றுக் கொண்டு அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து தேவையுடையோருக்கு கொடுத்து அனைத்தையும் முடித்து விட்டார்கள். பிறகு உமர் ரலி அவர்கள் மீண்டும் ஒரு பையில் அதேபோன்று 400 தீனாரை வைத்து முஆத் பின் ஜபல் ரலி அவர்களிடம் கொடுத்து வரும் படி சொன்னார்கள். அவர்களும் அபூஉபைதாவைப் போன்றே அனைத்தையும் கொடுத்து விட்டார்கள். முஆத் ரலி அவர்களின் மனைவி, நாமும் தேவையுடையவர்கள் தான். எங்களுக்கும் தாருங்கள் என்று சொன்ன போது மீதியிருந்த 2 தீனாரை மட்டும் கொடுத்தார்கள். நடந்த விஷயத்தை அந்த அடிமை உமர் ரலி அவர்களிடம் வந்து சொன்ன போது அவர்கள் ரொம்பவும் மகிழ்ச்சியடைந்தார்கள். (ஹுல்யதுல் அவ்லியா) 

நபிமார்கள் அத்தனை பேரிடத்திலும் இந்த உபகாரம் செய்யும் குணம் இருந்ததாக அல்குர்ஆன் கூறுகிறது.

وَلَمَّا وَرَدَ مَآءَ مَدْيَنَ وَجَدَ عَلَيْهِ اُمَّةً مِّنَ النَّاسِ يَسْقُوْنَ  وَوَجَدَ مِنْ دُوْنِهِمُ امْرَاَتَيْنِ تَذُوْدٰنِ‌  قَالَ مَا خَطْبُكُمَا‌  قَالَـتَا لَا نَسْقِىْ حَتّٰى يُصْدِرَ الرِّعَآءُ‌ ٚ وَاَبُوْنَا شَيْخٌ كَبِيْرٌ‏

(அவ்வாறு சென்ற அவர்) மத்யன் நகரத்தி(ன் வெளியி)  லிருந்த ஒரு கிணற்றின் சமீபமாக வந்தபொழுது ஒரு கூட்டத்தினர் (தங்கள் ஆடு, மாடு, ஆகிய கால்நடைகளுக்குத்) தண்ணீர் புகட்டிக் கொண்டிருப்பதையும், அதற்கருகில் இரு பெண்கள் (தங்கள் ஆட்டு மந்தையை) வளைத்து(த் தடுத்து நிறுத்தி)க் கொண்டிருப்பதையும் கண்டு (அப்பெண்களை நோக்கி) "உங்கள் விஷயமென்ன? (எதற்காக நீங்கள் தேங்கி  நிற்கிறீர்கள்?)" என்று கேட்டார். அதற்கு அவ்விரு பெண்களும் "இம்மேய்ப்பர்கள் (தங்கள்  கால்நடைகளுக்குத் தண்ணீர் புகட்டிக்கொண்டு இங்கிருந்து) விலகும் வரையில் நாங்கள் (எங்கள் ஆடுகளுக்குத்) தண்ணீர் புகட்ட முடியாது. எங்கள் தந்தையோ வயதடைந்த கிழவர். (அவர் இங்கு வர முடியாததால் நாங்களே இவைகளை ஓட்டி வந்திருக்கிறோம்)" என்றார்கள். (அல்குர்ஆன் : 28:23)

فَسَقٰى لَهُمَا ثُمَّ تَوَلّٰٓى اِلَى الظِّلِّ فَقَالَ رَبِّ اِنِّىْ لِمَاۤ اَنْزَلْتَ اِلَىَّ مِنْ خَيْرٍ فَقِيْرٌ‏

(இதைச் செவியுற்ற மூஸா) அவ்விரு பெண்களுடைய கால்நடைகளுக்குத் தண்ணீர் (இறைத்துப்) புகட்டிவிட்டு(ச் சிறிது) விலகி ஒரு (மரத்தின்) நிழலில் அமர்ந்துகொண்டு "என்   இறைவனே! எதை நீ எனக்குத் தந்தபோதிலும் நிச்சயமாக நான் அதனை விரும்பக் கூடியவனாகவே இருக்கிறேன்" என்று பிரார்த்தித்தார். (அல்குர்ஆன் : 28:24)

மூஸா நபி அவர்கள் மிஸ்ரிலிருந்து மத்யன் நகரத்திற்கு வந்திருக்கிறார்கள். பயணக்கலைப்பு ஒரு பக்கம். தன் குடும்பத்தையும் தன் சமூகத்தையும் விட்டு வந்த சோகம் ஒரு பக்கம். ஃபிர்அவ்னும் அவனுடைய கூட்டத்தார்களும் தன்னைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்ற அச்சம் ஒரு பக்கம். ஒரு புதிய ஊருக்கு வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு அங்கு யாரையும் தெரியாது. யாருக்கும் அவர்களைத் தெரியாது. அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்று தெரியாது. பொதுவாக இந்த மாதிரியான நெருக்கடியான நிர்கதியான நேரங்களில் தன் நிலை என்னவாகும் என்று அச்சப்படும் நேரங்களில் யாரையும் நாம் கண்டு கொள்ள மாட்டோம்.ஆனால் அந்த நேரத்திலும் அவர்கள் அப்பெண்களுக்கு உதவி உபகாரம் செய்தார்கள் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

ஒருவர் தன்னை மட்டும் நினைக்காமல் பிறரைப் பற்றியும் நினைத்துப் பார்க்க வேண்டும். பிறரைப் பற்றியும் கவலைப்பட வேண்டும். அவரே சிறந்த முஃமினாக இருக்க முடியும்.

ليس المؤمنُ بالذي يشبعُ وجارُه جائِعٌ إلى جنبَيْهِ

பக்கத்து வீட்டுக்காரன் பசித்திருக்க வயிறு நிரம்ப சாப்பிடுபவன் முஃமினல்ல. (ஸஹீஹுல் ஜாமிவு)

 

5 comments:

  1. மாஷா அல்லாஹ் பாரக்கல்லாஹ் ஹழ்ரத்

    ReplyDelete
  2. அல்லாஹூ அக்பர்

    ReplyDelete
  3. அநேகமாக கட்டுரை ஆசிரியர் நிஸ்வானில் மாணவிகளுக்கு ஆசிரியராக இருந்திருக்க வேண்டும் அல்லது கட்டுரை எழுதும் சமயம் அருகில் மனைவி இருந்திருக்க வேண்டும்.... அதனால் தான் என்னவோ பெண்களின் சிறப்பை 10ல் வகைப்படுத்தி யுள்ளார்.😊😊😊

    ReplyDelete
  4. பெண்களை தொடாமல் அவர் எழுத மாட்டார். மாஷா அல்லாஹ்

    ReplyDelete