Friday, June 9, 2023

மக்காவின் மாண்புகள்

 

உலகத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் ஹாஜிகள் ஹஜ்ஜை பூர்த்தி செய்வதற்காக மக்கா நகரை நோக்கி சென்று கொண்டிருக்கிற ஹஜ்ஜினுடைய காலம் இது. இந்த நேரத்தில் மக்காவின் மாண்புகளைக் குறித்து நாம் சிந்திக்கலாம்.

உலக மக்களால் நேசிக்கப்படும் நகரம் மக்கா

ஹஜ் என்பது இஸ்லாத்தின் மிக முக்கியமான கடமை. ஹஜ் செய்ய வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். குறிப்பாக மக்கா நகருக்குள் நுழைய வேண்டும். அங்கே ஒரு நாளாவது தங்க வேண்டும். அந்த மண்ணின் காற்றை சுவாசிக்க வேண்டும் என்ற ஆசையும் தேட்டமும் இல்லாதவர்கள் உலகில் யாரும் இருக்க முடியாது.

மக்கா நகர் என்பது உலகத்தில் இருக்கிற அனைத்து தரப்பு மக்களாலும் விரும்பப்படுகின்ற, நேசிக்கப்படுகின்ற ஒரு ஊர். உலகில் முஸ்லிம்களாக பிறந்த அல்லது முஸ்லிம்களாக வாழ்ந்து கொண்டிருக்கிற யாராக இருந்தாலும் அவருடைய உள்ளத்தில் மக்கா நகர் மீது அளவு கடந்த அன்பும் பிரியமும் இருப்பதைப் பார்க்க முடியும். நமது தந்தை இப்ராஹிம் அலை அவர்கள் கேட்ட உன்னதமான துஆவே அதற்குக் காரணம்.

رَبَّنَاۤ اِنِّىْۤ اَسْكَنْتُ مِنْ ذُرِّيَّتِىْ بِوَادٍ غَيْرِ ذِىْ زَرْعٍ عِنْدَ بَيْتِكَ الْمُحَرَّمِۙ رَبَّنَا لِيُقِيْمُوْا الصَّلٰوةَ فَاجْعَلْ اَ فْـٮِٕدَةً مِّنَ النَّاسِ تَهْوِىْۤ اِلَيْهِمْ وَارْزُقْهُمْ مِّنَ الثَّمَرٰتِ لَعَلَّهُمْ يَشْكُرُوْنَ‏

எங்கள் இறைவனே! நிச்சயமாக நான் என் சந்ததிகளை, மிக்க கண்ணியம் வாய்ந்த உன் வீட்டின் சமீபமாக வசித்திருக்கச் செய்து விட்டேன். அது விவசாயமற்றதொரு பள்ளத்தாக்கு! எங்கள் இறைவனே! அவர்கள் (உன்னைத்) தொழுது கொண்டிருப்பதற்காக (அங்கு வசிக்கச் செய்தேன்.) மனிதர்களில் ஒரு தொகையினரின் உள்ளங்கள் அவர்களை நோக்கும்படி நீ செய்வாயாக! (பற்பல) கனி வர்க்கங்களையும் நீ அவர்களுக்கு உணவாக அளித்து வருவாயாக! (அதற்கு) அவர்கள் உனக்கு நன்றி செலுத்துவார்கள். (அல்குர்ஆன் : 14:37)

قالَ الأصْمَعِيُّ: هَوِيَ يَهْوِي هَوِيًّا بِالفَتْحِ إذا سَقَطَ مِن عُلْوٍ إلى سُفْلٍ. وقِيلَ: ﴿تَهْوِي إلَيْهِمْ﴾ تُرِيدُهم، وقِيلَ: تُسْرِعُ إلَيْهِمْ. وقِيلَ: تَنْحَطُّ إلَيْهِمْ وتَنْحَدِرُ إلَيْهِمْ وتَنْزِلُ، يُقالُ: هَوِيَ الحَجَرُ مِن رَأسِ الجَبَلِ يَهْوِي إذا انْحَدَرَ وانْصَبَّ، وهَوِيَ الرَّجُلُ إذا انْحَدَرَ مِن رَأسِ الجَبَلِ.

அல்லாமா அஸ்மஈ ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்  ; இந்த வசனத்தில் அல்லாஹ் تهوي என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறான். تهوي என்பது உயரமான மலையிலிருந்து கீழே உருண்டு வருவதற்கு பயன்படுத்தப்படும் வார்த்தை. மலையிலிருந்து உருண்டு வரக்கூடியவன் இடையில் எங்கேயுமே நிற்காமல் நேராக தரையை வந்தடைந்து விடுவான். அதே போன்று உலகத்தின் எல்லா திசைகளிலிருந்தும் மனிதர்கள் வேகமாக கஃபத்துல்லாவை நோக்கி பயணப்படுவார்கள். மனித ஆசைகள் கஃபத்துல்லாவாகத்தான் இருக்கும் என்பதை இந்த வார்த்தையின் மூலம் இறைவன் சுட்டிக்காட்டுகிறான்.

இதுவரை செல்லாதவர்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது அங்கே சென்று வர வேண்டும். அந்தப் புனித மண்ணை மிதிக்க வேண்டும். அந்த கஃபத்துல்லாவை கண்ணாரக் கண்டு மகிழ வேண்டும் என்று ஆசைப்படுவதும், அங்கே சென்று, அந்த மண்ணை மிதித்து, கஃபத்துல்லாவை கண் குளிரக் கண்டு அந்த இன்பத்தை அனுபவித்து விட்டு வந்தவர்கள் மீண்டும் மீண்டும் அங்கே செல்ல துடிப்பதும் இப்ராஹிம் அலை அவர்களின் பிரார்த்தனையின் வெளிப்பாடு.

عن الحسن بن عمران بن عيينة بن أبي عمران ابن أخي سفيان, قال: "حججتُ مع عمِّي سفيان, آخرَ حجةٍ حجَّها؛ سنة سبع وتسعين ومائة, فلمَّا كنا بجمع, وصلى, استلقى على فراشه, ثم قال: وقد وافيتُ هذا الموضع, سبعين عاماً, أقول في كل سنة: اللَّهمَّ لا تجعله آخر العهد من هذا المكان, وإنِّي قد استحييت الله؛ من كثرة ما أسأله ذلك, فرجع, فتُوفِّى في السنة الداخلة؛ يوم السبت؛ أولَ يوم من رجب؛ سنة ثمان وتسعين ومائةٍ ودُفن بالحجون". سير اعلام النبلاء

இம்ரான் பின் ஹுஸைன் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள் ; ஹிஜ்ரி 197 ம் ஆண்டு எனது சிறிய தந்தை சுஃப்யான் பின் உயைனா ரஹ் அவர்கள் செய்த இறுதி ஹஜ்ஜில் அவர்களுடன் நான் இருந்தேன். அப்போது ஒரு நாள் அவர்கள் கூறினார்கள் ; நான் என் வாழ்நாளில் இந்த இடத்திற்கு 70 முறை வந்து விட்டேன். ஒவ்வொரு முறை நான் இங்கு வரும் போதும் இறைவா இதை எனக்கு இறுதியாக ஆக்கி விடாதே என்று கேட்பேன். 70 முறை இங்கே வரும் பாக்கியத்தை இறைவன் தந்து விட்டேன். இதற்குப் பிறகும் அவனிடம் அதைக் கேட்பதற்கு எனக்கு கூச்சமாக இருக்கிறது என்று கூறினார்கள். அவ்வருடம் ஹஜ்ஜை முடித்து திரும்பினார்கள். மீண்டும் அடுத்த வருடம் ஹஜ் செய்யும் பாக்கியம் அவர்களுக்கு கிடைக்க வில்லை. சரியாக ஹிஜ்ரி 198 ம் ஆண்டு ரஜம் மாதம் பிறை 1 ல் மரணித்து விட்டார்கள். (ரிஹ்லதுல் முஷ்தாகி லில் ஹஜ்ஜி வல் உம்ரா) 

உலகிலுள்ள அனைத்து முஸ்லிம்களும் மக்காவை நேசிக்கிறார்கள். குறிப்பாக நபி அவர்கள் அதிகமதிகம் மக்கா நகரை நேசித்தார்கள்.

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَدِيِّ بْنِ حَمْرَاءَ ، قَالَ : رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاقِفًا عَلَى الْحَزْوَرَةِ، فَقَالَ : " وَاللَّهِ، إِنَّكِ لَخَيْرُ أَرْضِ اللَّهِ، وَأَحَبُّ أَرْضِ اللَّهِ إِلَى اللَّهِ، وَلَوْلَا أَنِّي أُخْرِجْتُ مِنْكِ مَا خَرَجْتُ

நபி அவர்கள் ''ஹஸ்வரா'' என்ற ஒட்டகத்தின் மீது நின்றவர்களாக மக்காவை நோக்கி, ''நீ தான் அல்லாஹ்வுடைய பூமியில் சிறந்த ஊராவாய்! அல்லாஹ்வுடைய பூமியில் மிகவும் விருப்பத்திற்குரிய ஊராவாய்! என்னுடைய சமுதாயம் (உன்னை விட்டும்) என்னை வெளியேற்றி இருக்கா விட்டால் நான் வெளியேறி இருக்க மாட்டேன். (ஆனால், அவர்களோ என்னை வெளியேற்றி விட்டார்கள்.)'' என்று கூறினார்கள். (திர்மிதீ ; 3525)

عَنِ ابْنِ عباس: كان أوَّل ما نُسخَ من القرآن القبلة، وَذَلِكَ أَنَّ رَسُولَ اللَّهِ لَمَّا هاجرَ إِلَى الْمَدِينَةِ، وَكَانَ أَكْثَرُ أَهْلِهَا الْيَهُودَ، فَأَمَرَهُ اللَّهُ أَنْ يَسْتَقْبِلَ بَيْتَ الْمَقْدِسِ، فَفَرِحَتِ الْيَهُودُ، فَاسْتَقْبَلَهَا رَسُولُ اللَّهِ بضْعَةَ عَشَرَ شَهْرًا، وَكَانَ يُحِبُّ قِبْلَةَ إِبْرَاهِيمَ فَكَانَ يَدْعُو إِلَى اللَّهِ وَيَنْظُرُ إِلَى السَّمَاءِ، فَأَنْزَلَ اللَّهُ: ﴿قَدْ نَرَى تَقَلُّبَ وَجْهِكَ فِي السَّمَاءِ ابن كثير

அல்குர்ஆனிலிருந்து முதன்முதலாக மாற்றி அமைக்கப்பட்ட சட்டம் என்பது கிப்லாவைப் பற்றிய சட்டம் தான். நபி அவர்கள் மதினாவிற்கு ஹிஜ்ரத் செய்து வந்த போது அங்கே யூதர்கள் அதிகமாக வசித்து வந்தார்கள். எனவே அல்லாஹுத்தஆலா பைத்துல் முகத்தஸை முன்னோக்கி தொழும் படி நபி அவர்களுக்கு உத்தரவிட்டான்.பைத்துல் முகத்தஸை நோக்கி நபி அவர்கள் தொழுவதைப் பார்த்து யூதர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். இருந்தாலும் கஃபாவை முன்னோக்கி தொழ வேண்டும் என்பது தான் நபி அவர்களின் விருப்பமாக இருந்தது. எனவே அது குறித்து அல்லாஹ்விடம் துஆ செய்து கொண்டே இருந்தார்கள். அந்த  சட்டம் மாற்றி அமைக்கப்படுவது பற்றி வஹீ இறங்காதா என்ற எண்ணத்தில் வானத்தின் பக்கம் தன் பார்வையை உயர்த்தி பார்த்துக் கொண்டே இருந்தார்கள்.(இப்னு கஸீர்)

قَدْ نَرٰى تَقَلُّبَ وَجْهِكَ فِى السَّمَآءِ‌‌ فَلَـنُوَلِّيَنَّكَ قِبْلَةً تَرْضٰٮهَا‌ فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَـرَامِ وَحَيْثُ مَا كُنْتُمْ فَوَلُّوْا وُجُوْهَكُمْ شَطْرَهٗ ‌ وَاِنَّ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ لَيَـعْلَمُوْنَ اَنَّهُ الْحَـقُّ مِنْ رَّبِّهِمْ‌ وَمَا اللّٰهُ بِغَافِلٍ عَمَّا يَعْمَلُوْنَ‏

(நபியே!) உங்களுடைய முகம் (பிரார்த்தனை செய்து) அடிக்கடி வானத்தை நோக்குவதை நாம் காண்கிறோம். ஆதலால், நீங்கள் விரும்பும் கிப்லா(வாகிய மக்கா)வின் பக்கமே நாம் உங்களை நிச்சயமாகத் திருப்புகின்றோம். எனவே, நீங்கள் (தொழும்போது மக்காவிலுள்ள) "மஸ்ஜிதுல் ஹராமின்" பக்கமே உங்களுடைய முகத்தைத் திருப்புங்கள். (நம்பிக்கையாளர்களே!) நீங்களும் எங்கிருந்தபோதிலும் (தொழுகையில்) அதன் பக்கமே உங்களுடைய முகங்களைத் திருப்புங்கள். வேதம் கொடுக்கப்பட்ட (யூதர்களும், கிறிஸ்த)வர்களும் (நீங்கள் மக்காவின் திசையளவில் திரும்பிய) "இது தங்கள் இறைவனிடமிருந்(து வந்)த உண்மை(யான உத்தரவு)தான்" என நிச்சயமாக அறிவார்கள். (ஏனென்றால், அவ்வாறே அவர்களுடைய வேதத்தில் இருக்கின்றது. எனவே, உண்மையை மறைக்கும்) அவர்கள் செயலைப்பற்றி அல்லாஹ் பராமுகமாயில்லை. (அல்குர்ஆன் : 2:144)

عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ : كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى نَحْوَ بَيْتِ الْمَقْدِسِ سِتَّةَ عَشَرَ أَوْ سَبْعَةَ عَشَرَ شَهْرًا، وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُحِبُّ أَنْ يُوَجَّهَ إِلَى الْكَعْبَةِ فَأَنْزَلَ اللَّهُ : { قَدْ نَرَى تَقَلُّبَ وَجْهِكَ فِي السَّمَاءِ } فَتَوَجَّهَ نَحْوَ الْكَعْبَةِ وَقَالَ السُّفَهَاءُ مِنَ النَّاسِ، وَهُمُ الْيَهُودُ : { مَا وَلَّاهُمْ عَنْ قِبْلَتِهِمُ الَّتِي كَانُوا عَلَيْهَا قُلْ لِلَّهِ الْمَشْرِقُ وَالْمَغْرِبُ يَهْدِي مَنْ يَشَاءُ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ } فَصَلَّى مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلٌ، ثُمَّ خَرَجَ بَعْدَمَا صَلَّى فَمَرَّ عَلَى قَوْمٍ مِنَ الْأَنْصَارِ فِي صَلَاةِ الْعَصْرِ نَحْوَ بَيْتِ الْمَقْدِسِ، فَقَالَ : هُوَ يَشْهَدُ أَنَّهُ صَلَّى مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَنَّهُ تَوَجَّهَ نَحْوَ الْكَعْبَةِ فَتَحَرَّفَ الْقَوْمُ، حَتَّى تَوَجَّهُوا نَحْوَ الْكَعْبَةِ.

நபி அவர்கள் பதினாறு அல்லது பதினேழு மாதங்கள் பைத்துல் முகத்தஸை நோக்கித் தொழுதார்கள். நபி அவர்கள் கஃபாவை நோக்கித் தொழ வேண்டுமென ஆசைப்பட்டார்கள். அப்போது நீர் வானத்தை நோக்கி உமது முகத்தைத் திருப்பித் திருப்பிப் பார்த்துக் கொண்டிருப்பதை நாம் அறிவோம் (2:144) என்ற வசனத்தை அல்லாஹ் இறக்கினான். உடனே கஃபாவை முன்னோக்கி தொழலானார்கள். (யஹுதிகளிலுள்ள சில அறிவீனர்கள்) அவர்கள் முன்னர் நோக்கியிருந்த கிப்லாவை விட்டுத் திருப்பி விட்டது எது? என்று கேட்கின்றனர். (நபியே!) நீர் கூறும்: கிழக்கும் மேற்கும் அல்லாஹ்வுக்கே உரியன. தான் நாடியோரை அவன் நேர்வழியில் நடத்திச் செல்வான் என்று (2:142) இந்த வசனம் இறங்கியதும் ஒரு மனிதர் நபி அவர்களுடன் தொழுது விட்டு வெளியே வந்து அன்ஸாரிக் கூட்டத்தாரிடம் சென்றார். அவர்கள் பைத்துல் முகத்தஸை நோக்கி அஸர் தொழுது கொண்டிருந்தனர். அவர்களிடம் நான் நபி அவர்களுடன் தொழுதேன்: அவர்கள் கஃபாவை முன்னோக்கித் தொழுதார்கள் என்று நான் சாட்சி சொல்கிறேன், என்று கூறினார். உடனே தொழுதுக் கொண்டிருந்தவர்கள் கஃபாவை முன்னோக்கித் திரும்பினார்கள். (புகாரி ; 399)

عن أبي قتادة: أن النبي صلى الله عليه وسلم لما قدم المدينة ، سأل عن البراء بن معرور رضي الله عنه ؟ فقالوا : تُوفي ، وأوصى بثلث ماله لك ، وأن يوجه للقبلة لمّا احتُضر ، فقال النبي صلى الله عليه وسلم : [ أصاب الفطرة ، وقد رددت ثلث ماله على ولده ] ، ثم ذهب فصلى عليه وقال: [ اللهم اغفر له وارحمه وأدخله جنتك

كَانَ الْبَرَاءُ بْنُ مَعْرُورٍ أَوَّلَ مَنِ اسْتَقْبَلَ الْقِبْلَةَ حَيًّا وَمَيِّتًا قَبْلَ أَنْ يُوَجَّهَهَا رَسُولُ اللَّهِ  صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

நபி அவர்கள் மதீனாவிற்கு வருவதற்கு முன்பே மக்கா நகர் சென்று நபி அவர்களை சந்தித்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு அவர்களிடத்தில் பைஅத் செய்த அன்சாரி சஹாபாக்களில் ஒருவர் பரா இப்னு மஃரூர் ரலி அவர்கள். மக்காவையும் கஃபத்துல்லாவையும் அதிகம் நேசித்தார்கள். நபி அவர்களின் வருகைக்கு முன்பு மதீனாவில் அன்சாரிகள் பைத்துல் முகத்தஸை நோக்கி தொழுது கொண்டிருந்த போது இவர்கள் மட்டும் கஃபத்துல்லாவை நோக்கியே தொழுவார்கள். இது தான் எனக்கு மிகவும் விருப்பமானது என்று கூறுவார்கள். மட்டுமல்லாது எனக்கு மரண நேரம் நெருங்கி விட்டால் என் முகம் கஃபதுல்லாவை நோக்கி இருக்குமாறு என்னை படுக்க வைக்க வேண்டும். நான் இறந்து விட்டால் என்னை அடக்கம் செய்யும் போதும் அவ்வாறே என்னை அடக்கம் செய்ய வேண்டும் என்று வஸிய்யத் செய்து கொண்டார்கள். அவர்கள் மரணித்த போது அவ்விதத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது. நபி நபி அவர்கள் மதீனாவிற்கு வந்த போது அவரைக் குறித்து விசாரித்தார்கள். அப்போது நடந்ததை மக்கள் சொன்னார்கள். பெருமானார் அவர்கள் இஸ்லாத்தின் அடிப்படையை அவர் எடுத்துக் கொண்டார் என்று கூறி அவர்களுக்காக துஆ செய்தார்கள். உயிரோடு இருந்த நிலையிலும் மரணித்த நிலையிலும் கிப்லாவை முன்னோக்கிய முதல் மனிதர் இவர் தான் என்று வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.

 

உம்முல் குரா – நகரங்களின் தாயாக இருக்கிற மக்கா

وَكَذٰلِكَ اَوْحَيْنَاۤ اِلَيْكَ قُرْاٰنًا عَرَبِيًّا لِّـتُـنْذِرَ اُمَّ الْقُرٰى وَمَنْ حَوْلَهَا وَتُنْذِرَ يَوْمَ الْجَمْعِ لَا رَيْبَ فِيْهِ‌ فَرِيْقٌ فِى الْجَنَّةِ وَفَرِيْقٌ فِى السَّعِيْرِ

(நபியே!) இவ்வாறே இந்தக் குர்ஆனை அரபி மொழியில் நாம் வஹீ மூலம் உங்களுக்கு அறிவித்தோம். (இதனைக் கொண்டு, அரபி மொழி பேசும் மக்காவாசிகளாகிய) தாய்நாட்டாரையும், அதைச் சூழ்ந்த கிராமங்களில் வசிப்பவர்களையும், நீங்கள் எச்சரிக்கை செய்து அனைவரும் (விசாரணைக்காக) ஒன்று சேரக்கூடிய நாளைப் பற்றி அச்சமூட்டுங்கள்! அந்நாள் வருவதில் சந்தேகமே இல்லை. (அந்நாளில்) ஒரு கூட்டத்தார் சுவனபதிக்கும், ஒரு கூட்டத்தார் நரகத்திற்கும் செல்வார்கள். (அல்குர்ஆன் : 42:7)

واخْتَلَفُوا في السَّبَبِ الَّذِي لِأجْلِهِ سُمِّيَتْ مَكَّةُ بِهَذا الِاسْمِ. فَقالَ ابْنُ عَبّاسٍ: سُمِّيَتْ بِذَلِكَ؛ لِأنَّ الأرَضِينَ دُحِيَتْ مِن تَحْتِها ومِن حَوْلِها، وقالَ أبُو بَكْرٍ الأصَمُّ: سُمِّيَتْ بِذَلِكَ لِأنَّها قِبْلَةُ أهْلِ الدُّنْيا، فَصارَتْ هي كالأصْلِ وسائِرُ البِلادِ والقُرى تابِعَةٌ لَها، وأيْضًا مِن أُصُولِ عِباداتِ أهْلِ الدُّنْيا الحَجُّ، وهو إنَّما يَحْصُلُ في تِلْكَ البَلْدَةِ، فَلِهَذا السَّبَبِ يَجْتَمِعُ الخَلْقُ إلَيْها كَما يَجْتَمِعُ الأوْلادُ إلى الأُمِّ، وأيْضًا فَلَمّا كانَ أهْلُ الدُّنْيا يَجْتَمِعُونَ هُناكَ بِسَبَبِ الحَجِّ، لا جَرَمَ يَحْصُلُ هُناكَ أنْواعٌ مِنَ التِّجاراتِ والمَنافِعِ ما لا يَحْصُلُ في سائِرِ البِلادِ، ولا شَكَّ أنَّ الكَسْبَ والتِّجارَةَ مِن أُصُولِ المَعِيشَةِ، فَلِهَذا السَّبَبِ سُمِّيَتْ مَكَّةُ أُمَّ القُرى. وقِيلَ: إنَّما سُمِّيَتْ مَكَّةُ أُمَّ القُرى لِأنَّ الكَعْبَةَ أوَّلُ بَيْتٍ وُضِعَ لِلنّاسِ، وقِيلَ أيْضًا: إنَّ مَكَّةَ أوَّلُ بَلْدَةٍ سُكِنَتْ في الأرْضِ.

உம்முல் குரா என்று சொன்னதற்கு பல காரணங்கள் உண்டு.

ஹள்ரத் இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் கூறுகிறார்கள் ;

وَالْاَرْضَ بَعْدَ ذٰلِكَ دَحٰٮهَا

இதற்குப் பின்னர், அவனே பூமியை விரித்தான். (அல்குர்ஆன் : 79:30)

அல்லாஹுத்தஆலா பூமியை மக்காவிலிருந்து தான் விரித்தான். எனவே அதற்கு உம்முல் குரா என்ற பெயர்.

அபூபக்கர் அல் அஸம்மு ரஹ் அவர்கள் கூறுகிறார்கள் ; உலக மக்களின் தொழுகைக்கான கிப்லாவாக மக்கா இருக்கிறது. அந்த வகையில் மக்கா எல்லா ஊர்களுக்கும் அடிப்படையாக இருக்கிறது. மற்ற ஊர்களெல்லாம் அதைப் பின்பற்றக் கூடியதாக இருக்கிறது. மேலும் மக்களுடைய வணக்க வழிபாடுகளில் அடிப்படையான வணக்கம் என்பது ஹஜ்ஜாகும். அந்த ஹஜ் என்ற வணக்கம் அங்கே தான் நடைபெறுகிறது. ஒரு தாயிடத்தில் குழந்தைகள் ஆசையோடு செல்வதைப் போன்று எல்லா பகுதிகளிலிருந்தும் அந்த நகரை நோக்கி மக்கள் செல்கிறார்கள். ஹஜ்ஜுடைய நகரமாக இருப்பால் மற்ற ஊர்களில் இல்லாத அளவிற்கு வியாபாரங்கள் நடக்கும் இடமாக மக்கா இருக்கிறது. வியாபாரமும் அதன் மூலம் கிடைக்கின்ற வருமானமும் வாழ்க்கையினுடைய அடிப்படைத் தேவைகள். வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாகின்ற காரணத்தினால் அந்த ஊருக்கு உம்முல் குரா என்று பெயர்.

சிலர் கூறுகிறார்கள் ; இந்த உலகத்தில் கட்டப்பட்ட முதல் ஆலயம் கஃபா அங்கே அமைந்திருப்பதினால் அது உம்முல் குராவாகும்.

இன்னும் சிலர் கூறுகிறார்கள் ; இந்த பூமியிலேயே முதன் முதலாக மக்கள் வசிக்கும் இடமாக மக்கா நகர் தான் இருந்தது. எனவே அதற்கு உம்முல் குரா என்று பெயர். (தஃப்ஸீர் ராஸீ)

 

மனித சமூகத்தின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தியாக்கும் மக்கா

جَعَلَ اللّٰهُ الْـكَعْبَةَ الْبَيْتَ الْحَـرَامَ قِيٰمًا لِّـلنَّاسِ وَالشَّهْرَ الْحَـرَامَ وَالْهَدْىَ وَالْقَلَاۤٮِٕدَ‌  ذٰ لِكَ لِتَعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ يَعْلَمُ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ وَاَنَّ اللّٰهَ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ‏

சிறப்புற்ற வீடாகிய கஅபாவை மனிதர்களுக்கு அபயம் அளிக்கக்கூடிய இடமாக அல்லாஹ் ஆக்கியிருக்கின்றான். (அவ்வாறே துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் ஆகிய இந்நான்கு) சிறப்புற்ற மாதங்களையும், (ஹஜ்ஜின்) குர்பானிகளையும், (அல்லாஹ்வுடைய காணிக்கை என்பதற்காக) அடையாளம் இடப்பட்ட மிருகங்களையும் (அபயம் பெற்றவைகளாக ஆக்கியிருக்கின்றான்.) வானங்களிலும், பூமியிலுமுள்ள யாவையும் நிச்சயமாக அல்லாஹ் நன்கறிகின்றான் என்பதை நீங்கள் அறிவதற்காகவே (இவ்வாறு செய்தான்.) நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்து கொள்கின்றான். (அல்குர்ஆன் : 5:97)

: قَوْلُهُ: ﴿قِيامًا لِلنّاسِ﴾ أصْلُهُ (قِوامٌ) لِأنَّهُ مِن قامَ يَقُومُ، وهو ما يَسْتَقِيمُ بِهِ الأمْرُ ويَصْلُحُ، ثُمَّ ذَكَرُوا هاهُنا في كَوْنِ الكَعْبَةِ سَبَبًا لِقِوامِ مَصالِحِ النّاسِ وُجُوهًا:

الأوَّلُ: أنَّ أهْلَ مَكَّةَ كانُوا مُحْتاجِينَ إلى حُضُورِ أهْلِ الآفاقِ عِنْدَهم لِيَشْتَرُوا مِنهم ما يَحْتاجُونَ إلَيْهِ طُولَ السَّنَةِ، فَإنَّ مَكَّةَ بَلْدَةٌ ضَيِّقَةٌ لا ضَرْعَ فِيها ولا زَرْعَ، وقَلَّما يُوجَدُ فِيها ما يَحْتاجُونَ إلَيْهِ، فاللَّهُ تَعالى جَعَلَ الكَعْبَةَ مُعَظَّمَةً في القُلُوبِ حَتّى صارَ أهْلُ الدُّنْيا راغِبِينَ في زِيارَتِها، فَيُسافِرُونَ إلَيْها مِن كُلِّ فَجٍّ عَمِيقٍ لِأجْلِ التِّجارَةِ ويَأْتُونَ بِجَمِيعِ المَطالِبِ والمُشْتَهَياتِ، فَصارَ ذَلِكَ سَبَبًا لِإسْباغِ النِّعَمِ عَلى أهْلِ مَكَّةَ.

الثّانِي: أنَّ العَرَبَ كانُوا يَتَقاتَلُونَ ويُغِيرُونَ إلّا في الحَرَمِ، فَكانَ أهْلُ الحَرَمِ آمِنِينَ عَلى أنْفُسِهِمْ وعَلى أمْوالِهِمْ حَتّى لَوْ لَقِيَ الرَّجُلُ قاتِلَ أبِيهِ أوِ ابْنِهِ في الحَرَمِ لَمْ يَتَعَرَّضْ لَهُ، ولَوْ جَنى الرَّجُلُ أعْظَمَ الجِناياتِ ثُمَّ التَجَأ إلى الحَرَمِ لَمْ يُتَعَرَّضْ لَهُ، ولِهَذا قالَ تَعالى: ﴿أوَلَمْ يَرَوْا أنّا جَعَلْنا حَرَمًا آمِنًا ويُتَخَطَّفُ النّاسُ مِن حَوْلِهِمْ﴾ [العَنْكَبُوتِ: ٦٧] الثّالِثُ: أنَّ أهْلَ مَكَّةَ صارُوا بِسَبَبِ الكَعْبَةِ أهْلَ اللَّهِ وخاصَّتَهُ وسادَةَ الخَلْقِ إلى يَوْمِ القِيامَةِ، وكُلُّ أحَدٍ يَتَقَرَّبُ إلَيْهِمْ ويُعَظِّمُهم.

الرّابِعُ: أنَّهُ تَعالى جَعَلَ الكَعْبَةَ قِوامًا لِلنّاسِ في دِينِهِمْ بِسَبَبِ ما جَعَلَ فِيها مِنَ المَناسِكِ العَظِيمَةِ والطّاعاتِ الشَّرِيفَةِ، وجَعَلَ تِلْكَ المَناسِكَ سَبَبًا لِحَطِّ الخَطِيئاتِ ورَفْعِ الدَّرَجاتِ وكَثْرَةِ الكَراماتِ.

واعْلَمْ أنَّهُ لا يَبْعُدُ حَمْلُ الآيَةِ عَلى جَمِيعِ هَذِهِ الوُجُوهِ، وذَلِكَ لِأنَّ قِوامَ المَعِيشَةِ إمّا بِكَثْرَةِ المَنافِعِ وهو الوَجْهُ الأوَّلُ الَّذِي ذَكَرْناهُ، وإمّا بِدَفْعِ المَضارِّ وهو الوَجْهُ الثّانِي، وإمّا بِحُصُولِ الجاهِ والرِّياسَةِ وهو الوَجْهُ الثّالِثُ، وإمّا بِحُصُولِ الدِّينِ وهو الوَجْهُ الرّابِعُ، فَلَمّا كانَتِ الكَعْبَةُ سَبَبًا لِحُصُولِ هَذِهِ الأقْسامِ الأرْبَعَةِ، وثَبَتَ أنَّ قِوامَ المَعِيشَةِ لَيْسَ إلّا بِهَذِهِ الأرْبَعَةِ، ثَبَتَ أنَّ الكَعْبَةَ سَبَبٌ لِقَوامِ النّاسِ.

எதைக் கொண்டு அல்லது யாரைக் கொண்டு ஒருவரின் காரியங்கள் சரியாக நடைபெறுமோ அதற்கு அல்லது அந்த மனிதருக்கு கிவாம் என்று சொல்லப்படும். அந்த வார்த்தைப் பிரயோகத்தை அல்லாஹ் இங்கே கையாளுகிறான். மனித வாழ்க்கையில் நான்கு விஷயங்கள் மிகவும் அவசியமானவை. அந்நான்கு விஷயங்களைக் கொண்டு தான் மனித வாழ்வு பூர்த்தியாகும். 1, பொருளாதாரம். 2, பாதுகாப்பு. 3, ஆட்சி அதிகாரம். 4, மார்க்கம். இந்த நான்கையும் மக்கமாநகரம் மனிதர்களுக்கு தருகின்றது. அனைத்து நாட்டு மக்களும் வந்து செல்வதால் உலகத்தின் அனைத்து பொருட்களும் கிடைக்கும் ஒரு நகரமாக இருக்கிறது.எனவே மக்கா உலகின் மிகப்பெரிய வியாபாரஸ்தலம். அல்லாஹுத்தஆலா அந்த பூமியை பாதுகாப்பான பூமியாக ஆக்கிருப்பதால் அங்கே மனிதர்களுக்கு எந்த ஆபத்துகளும் ஏற்படாது. இறை இல்லமான கஃபதுல்லாஹ் அங்கு அமையப் பெற்றிருப்பதால் அந்த ஊரைச் சார்ந்தவர்கள் அல்லாஹ்விற்கு நெருக்கமானவர்களாக இருக்கிறார்கள். அந்த வகையில் அவர்கள் அந்தஸ்தில் உயர்ந்தவர்கள். இறுதிக் கடமையான ஹஜ் நிறைவேற்றப்படும் இடமாக மக்கா இருப்பதால் மனித சமூகத்திற்கு மார்க்கத்தையும் அது தருகிறது. எனவே மொத்த மனித வாழ்க்கைக்குத் தேவையான அத்தனை விஷயங்களும் ஒன்றே அமையப் பெற்ற இடமாக இருப்பதால் அல்லாஹ் கியாமல்லின்னாஸ் என்று குறிப்பிடுகிறான். (தஃப்ஸீர் ராஸீ)

இவ்வாறு எண்ணற்ற சிறப்புக்களைக் கொண்டிருக்கிறது. அந்த மக்கமாநகரை நாமும் நேசிப்போம். அல்லாஹ்வின் அன்பைப் பெறுவோம்.

1 comment:

  1. மாஷா அல்லாஹ்
    ஆய்வு கட்டுரை மிகவும் சிறப்பாக இருக்கிறது மௌலானா பாரக்கல்லாஹு
    அல்லாஹ் உங்கள் கல்வி ஞானத்தை அதிகப்படுத்துவானாக.

    ReplyDelete