Friday, July 14, 2023

ஊடகம்

நம்மைச் சுற்றி நடக்கும் செய்திகளை நம் பார்வைக்கும் நம் காதுகளுக்கும் நம் சிந்தனைக்கும் கொண்டு வந்து சேர்க்கும் பணியை இன்றைக்குள்ள ஊடகங்கள் செய்து கொண்டிருக்கின்றன.

 

நம்மை சுற்றிய இச்சமூகத்தில் என்ன நடக்கிறது? எதற்கு நடக்கிறது? ஏன் நடக்கிறது? அதன் பிண்ணனி என்ன? என்று தினமும் நாம் தெரிந்து கொள்ள ஊடகங்கள் துணை நிற்கின்றன. மழை வெள்ளம், பூகம்பம், சுனாமி, பஞ்சம், படுகொலை, தேர்தல், விபத்து, கொண்டாட்டங்கள், குற்றங்கள், இப்படி எங்கிருந்து வேண்டுமானாலும் எந்த ஒரு செய்தியும் நொடி நேரத்தில் எந்த ஒரு மூலைக்கும் போய் சேர்க்கும் தொழில் நுட்பத்தோடு இன்றைய ஊடகங்கள் செயல்படுகின்றன.

ஊடகங்கள் இல்லாத ஒரு நாளை நம்மால் சிந்திக்க முடியாது என்றளவிற்கு அதன் தேவை மிக மிக அவசியமானது.

ஒரு நாட்டில் ஏர் முனை, போர் முனை, பேனா முனை, மூன்றும் பலமாக இருக்கும் பட்சத்தில் அது தான் வல்லரசு. பேனா முனை என்பது ஊடகம் தான்.

ஒவ்வொரு காலத்திலும் ஒரு சக்தி மிகவும் செல்வாக்கு மிக்கதாக இருக்கும். 19 ஆம் நூற்றாண்டில் யாரிடம் கடற்படை இருந்ததோ அவர்கள் தான் அந்நூற்றாண்டின் சக்திகள், 20 ஆம் நூற்றாண்டில் யாரிடம் விமானங்கள் இருந்ததோ அவர்கள் தான் அந்நூற்றாண்டின் சக்திகள், 21 ஆம் நூற்றாண்டில் யாரிடம் ஊடகம் உள்ளதோ அவர்கள் தான் அந்நூற்றாண்டின் சக்தி என்று மலேசியாவின் முன்னால் ஜனாதிபதி மஹாதிர் முஹம்மது குறிப்பிடுகிறார்.

சமூகவியல் அறிஞர் கோவிந்தநாத்இன்றைய உலகின் ஜாம்பவான்கள் ஊடகத்துறையினர் தான். அவர்கள் தான் இவ்வுலகில் கருத்துருவாக்கத்தை (opinion makers) தீர்மானிக்கிறார்கள்என்று கூறுகிறார்.அந்தளவு ஊடகம் என்பது மிகவும் வலிமை மிக்கதாக இருக்கிறது.

ஆனால் வலிமை மிக்கதாக கருதப்படும் அந்த ஊடகம் இன்றைக்கு நடுநிலையானதாக இல்லை. தேவைக்குத் தகுந்தாற் போல் தன்னை மாற்றி கொள்ளும் வியாபார தந்திர நுணுக்கதோடு தான் பல ஊடகங்கள் வேலை பார்க்கின்றன. ஊடகங்கள் செய்திகளை சேவையாக செய்தது ஒரு காலம். ஆனால் இன்று அதற்குள் பணமும் அரசியலும் புகுந்து எல்லா தரவுகளையும் தன் பக்கம் இழுத்து தனக்கு சாதகமான முறையில் பயன்படுத்தப்படும் ஒரு தன் முனைப்பின் வெளிப்பாடாகவும் தன் சொந்த நிறுவனத்தின் வளர்ச்சியாகவும் தான் இருக்கிறது. ஆளும் கட்சிக்கு ஒரு சேனல், ஒரு பத்திரிக்கை. எதிர்க் கட்சிக்கு ஒரு சேனல், ஒரு பத்திரிக்கை. அவருக்கு ஒரு சேனல், ஒரு பத்திரிக்கை. இவருக்கு ஒரு சேனல், ஒரு பத்திரிக்கை. பார்க்கும், படிக்கும் சாமானியர்கள் குழம்பிப் போகும் அளவிற்கு ஒவ்வொரு சேனலும் பத்தரிக்கையும் ஒவ்வொரு மாதிரியான செய்திகளை வெளியிடுகிறது.

அது மட்டுமல்ல, ஒவ்வொரு ஊடகத்திற்கும் ஒரு அரசியல் பின்னணி, சாதிய பின்னணி, மதப் பின்னணி, வர்த்தக பின்னணி உண்டு. எனவே தங்கள் நலன்களை பாதிக்கும் செய்திகளை வெளியிட ஒரு போதும் அவர்கள் முன் வர மாட்டார்கள். தங்களை பாதிக்கும் விஷயங்களில் பாரபட்சமான செய்திகளை வெளியிடுவார்கள்.

ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்பது பழைய மொழி. ஆவதும் ஊடகத்தாலே அழிவதும் ஊடகத்தாலே என்பது இன்றைய புதுமொழி. ஆக்கம் அழிவு இரண்டும் இன்றைக்கு ஊடகத்தைக் கொண்டே ஏற்படுகிறது. குறிப்பாக அழிவு அதிகம். ஒரு சமுதாயத்தின் அழிவிற்கும் ஒரு சமூகத்தின் கண்ணியம் சிதைவதற்கும் ஊடகங்கள் பெரும் காரணங்களாக இருக்கின்றன.

இஸ்லாமிய எதிர்ப்பு அலையை உருவாக்கியதில் ஊடகங்களின் பங்கு கணிசமானது. இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான மிகப்பெரிய அவதூறுகளையும் இழப்புக்களையும் ஊடகங்கள் செய்து வருகின்றன.

 

தாடி வைப்பவர்களெல்லாம் வன்முறையாளர்கள் அல்லது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் என்ற எண்ணமும், முஸ்லிம்கள் வக்கிர எண்ணம் கொண்டவர்கள் என்ற சிந்தனையும் இன்றைக்கு ஊட்டப்பட்டிருக்கிறது. பிரச்சனை நடந்தால் முஸ்லிம் இளைஞர்களை காவல்துறையினர் கேள்வி கேட்காமலேயே கைது செய்வது இன்றைக்கு வாடிக்கையாகி விட்டது. இவ்வாறு முஸ்லிம்களை பயங்கரவாதிகளாகவும் வக்கிர எண்ணம் கொண்டவர்களாகவும் சித்தரித்ததில் பெரும்பங்கு ஊடகங்களுக்கே உண்டு.

இரு மாதங்களுக்கு முன்பு ZEE NEWS, TIME OF INDIA, ND TV போன்ற சேனல்களில் ஒரு செய்தி வந்தது. பாகிஸ்தானிலுள்ள ஒரு மண்ணரையைச் சுற்றிலும் இரும்பு கம்பிகளைக் கொண்டு பாதுகாப்பு வளையம் இடப்பட்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டு அங்கே ஒரு இளம் பெண் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறாள். இதுமாதிரியான கப்ரை அங்குள்ள முஸ்லிம்களில் சிலர் தோண்டி அந்த பிரேதத்தை வெளியே எடுத்து அந்த பிரேதத்துடன் வக்கிரமமாக நடந்து கொள்வார்கள். எனவே அவர்களிடமிருந்து பிரேதத்தைப் பாதுகாப்பதற்குத்தான் அந்த குடும்பத்தைச் சார்ந்தவர்கள் இதுபோன்ற ஒரு பாதுகாப்பு வளையத்தை ஏற்பாடு செய்திருக்கிறார்கள் என்ற செய்தியை அந்த சேனல்கள் வெளியிட்டன.

ஆனால் உண்மையில் அவ்வாறு பாதுகாப்பு வளையம் போடப்பட்டது ஹைதராபாத்தில். போடப்பட்டதற்கான காரணம் கொஞ்ச காலத்திற்கு அந்த இடத்தில் வேறு எவரும் அடக்கம் செய்யப்படக்கூடாது என்பதற்காக அவ்வாறு செய்திருக்கிறார்கள்.இஸ்லாத்தின் மீது தப்பெண்ணம் கொண்ட ஒருவன் தன் முகநூல் பக்கத்தில் அவ்வாறு தவறான செய்தியை பதிவு செய்திருந்தான். அதைப்பார்த்து அதன் உண்மைத்தன்மையை கொஞ்சமும் ஆராயாமல் அந்த சேனல்கள் வெளியிட்டிருக்கின்றன.

இன்றைக்குள்ள ஊடகங்கள் எதிலும் நம்பகத்தன்மை இல்லை என்பதற்கும் இஸ்லாத்தின் மீது எவ்வளவு தூரம் காழ்ப்புணர்ச்சியோடு செயல்படுகின்றன என்பதற்கும் இந்த ஒரு செய்தியே ஆதாரம்.

பொது சிவில் சட்டத்திற்கு எதிராக நாடே கடும் எதிர்ப்பை பதிவு செய்து கொண்டிருக்கிற இந்த சூழ்நிலையில் இந்த மாதம் 11 ம் தேதி ONE INDIA TAMIL ஒரு செய்தியை வெளியிட்டது. அதில் காஷ்மீர் முதல் தமிழ்நாடு வரை நாடு முழுக்க உள்ள 25 மாநிலங்களில் உள்ள 8,035 முஸ்லிம் பெண்களை நியூஸ் 18 சேனல் நேர்காணல் செய்தது. திருமணம், விவாகரத்து, தத்தெடுப்பு மற்றும் வாரிசுரிமை போன்ற தனிப்பட்ட விஷயங்களில் அனைத்து இந்தியர்களுக்கும் பொதுவான சட்டம் வேண்டும் என நினைக்கிறீர்களா என்ற கேள்விக்கு 67.2 சதவீதம் பெண்கள் 'ஆம்' என்று சொன்னார்கள் என்பது தான் அந்த செய்தி.

இன்றைக்கு பொதுசிவில் சட்டத்தை அனைத்து மதத்தவர்களும் எதிர்க்கிறார்கள். குறிப்பாக நாம் முழுமையாக எதிர்க்கிறோம். அப்படி இருக்கின்ற போது முஸ்லிம் பெண்கள் ஆதரவு தெரிவித்தார்கள் என்று சொல்வது எவ்வளவு அப்பட்டமான பொய் என்பதை விளங்கிக் கொள்ள முடிகிறது.

ஊடகங்களில் வரும் அனைத்தும் உண்மை என்று நம்புவது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும்.ஒரு செய்தி வருகின்ற அந்த ஊடகத்தின் நிலை என்ன ? அதை எழுதக்கூடியவர்கள் எந்த சித்தாந்தத்தை உடையவர்கள் என்பதை ஆய்வு செய்ய வேண்டும். இல்லையென்றால் ஏமாந்து விடுவோம்.

பொதுவாக எதிரிகள் வதந்திகளைப் பரப்பி அதை நம்மை நம்ப வைத்து அதன் மூலமே வெற்றி பெற நினைக்கிறார்கள். அவர்கள் நினைத்ததை சாதிக்க முனைகிறார்கள். இதற்கு வரலாறுகள் சான்றாக இருக்கிறது.

لما هاجر الصحابة من مكة إلى الحبشة وكانوا في أمان ، أُشيع أن كفار قريش في مكة أسلموا فخرج بعض الصحابة من الحبشة وتكبدوا عناء الطريق حتى وصلوا إلى مكة ووجدوا الخبر غير صحيح ولاقوا من صناديد قريش التعذيب . وكل ذلك بسبب الإِشاعة

சஹாபாக்கள் மக்காவிலிருந்து அபிசீனியாவிற்கு ஹிஜ்ரத் சென்று அங்கே பாதுகாப்போடும் நிம்மதியோடும் இருந்த அந்த நேரத்தில் மக்காவில் இருக்கிற குரைஷித் தலைவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு விட்டார்கள் என்ற ஒரு செய்தி பரவியது. அதை அறிந்த சஹாபாக்கள் அபிசீனியாவிலிருந்து கிளம்பி பெரும் சிரமத்தை மேற்கொண்டு மக்காவிற்கு வந்தார்கள். வந்த பிறகு தான் அது வதந்தி என்பதை அறிந்து கொண்டார்கள். ஆனால் அங்கிருந்து மக்காவிற்குத் திரும்பி வந்த காரணத்தினால் மக்காவாசிகளால் அவர்கள் எண்ணற்ற தொல்லைகளை அனுபவிக்க நேரிட்டது.

அதேபோன்று உஹது போர்க்களத்தில் சஹாபாக்கள் எதிரிகளை வீழ்த்தி முன்னேறிச் சென்று கொண்டிருந்த அந்த நேரத்தில் நபியவர்கள் ஷஹீதாகி விட்டார்கள் என்ற தவறான வதந்தி பரவியதால் தான் அவர்கள் அதற்குப் பிறகு முன்னேற முடியாமல் சிதறுண்டு போனார்கள்.

எனவே வதந்திகளால் எண்ணற்ற சிக்கல்களை ஒரு சமூகம் சந்திக்கும். வதந்திகளை பரப்பி அதன் மூலமே எதிரிகள் வெற்றி பெற நினைக்கிறார்கள். இன்றைக்கும் அதே நிலை தான்.

பொதுவாக ஒருவர் ஒரு செய்தியைக் கூறினால் உடனே அதை நம்பி விடக் கூடாது.

قال ابن رجب: (يشير إلى أنَّه لا ينبغي الاعتماد على قول كلِّ قائل،

செய்தியில் உண்மையும் இருக்கும் பொய்யும் இருக்கும். எல்லாவற்றையும் உடனே நம்பி விடக்கூடாது என இப்னு ரஜப் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

ஒரு செய்தி வருகின்ற அது உண்மையா இல்லையா என்பதை ஆராய வேண்டும். ஒரு செய்தியைப் பற்றி தெளிவாக தெரியாமல் அதை பிறருக்கு பகிரவும் கூடாது.

وَاِذَا جَآءَهُمْ اَمْرٌ مِّنَ الْاَمْنِ اَوِ الْخَـوْفِ اَذَاعُوْا بِهٖ‌  وَلَوْ رَدُّوْهُ اِلَى الرَّسُوْلِ وَاِلٰٓى اُولِى الْاَمْرِ مِنْهُمْ لَعَلِمَهُ الَّذِيْنَ يَسْتَنْبِطُوْنَهٗ مِنْهُمْ‌ وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهٗ لَاتَّبَعْتُمُ الشَّيْطٰنَ اِلَّا قَلِيْلًا‏

பயத்தையோ (பொது மக்கள்) பாதுகாப்பையோ பற்றிய யாதொரு செய்தி அவர்களுக்கு எட்டினால் (உடனே) அதனை (வெளியில்) கூற ஆரம்பித்து விடுகின்றனர். (அவ்வாறு செய்யாது) அதனை (அல்லாஹ்வுடைய) தூதரிடமும், அவர்களுடைய அதிகாரிகளிடமும் (மட்டும்) தெரிவித்தால் அதிலிருந்து ஊகிக்கக்கூடிய அவர்கள் உண்மையை நன்கறிந்து (தக்க நடவடிக்கைகளை எடுத்துக்) கொள்வார்கள். (நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ்வுடைய அருளும், அவனுடைய கிருபையும் உங்கள்மீது இல்லையென்றால் (உங்களில்) சிலரைத் தவிர நீங்கள் அனைவரும் ஷைத்தானையே பின்பற்றியிருப்பீர்கள். (அல்குர்ஆன் : 4:83)

قال الإمام ابن كثير (رحمه الله) قوله تعالى: ﴿ وَإِذَا جَاءَهُمْ أَمْرٌ مِنَ الْأَمْنِ أَوِ الْخَوْفِ أَذَاعُوا بِهِ ﴾ [النساء: 83] إنكار على من يبادر إلى الأمور قبل تحقُّقها، فيخبر بها ويفشيها وينشرها، وقد لا يكون لها صحة

ஒரு விசயம் உண்மைக்கு மாற்றமாகவும் இருக்கலாம். எனவே ஒரு செய்தியின் உண்மைத் தன்மையை ஆராயாமல் அதை பரப்ப நினைப்பவர்களை அல்லாஹ் இந்த வசனத்தின் மூலம் எச்சரிக்கை செய்கிறான். (இப்னுகஸீர்)

عَنْ حَفْصِ بْنِ عَاصِمٍ قَالَ  : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " كَفَى بِالْمَرْءِ كَذِبًا أَنْ يُحَدِّثَ بِكُلِّ مَا سَمِعَ

ஒருவர் தாம் கேள்விப்பட்டதை எல்லாம் (ஆராயாமல் பிறருக்கு) அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்குப் போதுமான சான்றாகும். (முஸ்லிம் ; 5(

ஒரு செய்தி கிடைத்தவுடன் அதை உடனே பிறருக்கு சொல்வது மற்றவர்களுக்கு அதைப் பகிர்வது சிலருக்கு இருக்கின்ற நோய். அந்த செய்தி தவறான இருந்தால் அதன் மூலம் பொய்யை பரப்பிய குற்றம் ஏற்படும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

قال الامام النووي: الكذب هو الإخبار عن الشيء بخلاف ما هو ... عليه، ولا يشترط فيه العمد، لكن التعمد شرط للإثم.

உண்மைக்கு மாற்றமாக ஒன்றை சொல்வதற்குப் பெயர் பொய்யாகும். வேண்டுமென்றே சொல்ல வேண்டும் என்பது நிபந்தனையல்ல என்று நவவி ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

அந்த செய்தி பொய் என்று எனக்குத் தெரியாது. நான் வேண்டுமென்றே அதைப் பகிர வில்லை என்று யாரும் தப்பித்துக் கொள்ள முடியாது.

ஒரு செய்தியின் உண்மைத் தன்மையை ஆராய வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது.

يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنْ جَآءَكُمْ فَاسِقٌ  بِنَبَاٍ فَتَبَيَّنُوْۤا اَنْ تُصِيْبُوْا قَوْمًا  بِجَهَالَةٍ فَتُصْبِحُوْا عَلٰى مَا فَعَلْتُمْ نٰدِمِيْنَ‏

நம்பிக்கையாளர்களே! யாதொரு விஷமி உங்களிடம் யாதொரு செய்தியைக் கொண்டுவந்தால், (அதன் உண்மையை அறியும் பொருட்டு அதனைத்) தீர்க்க விசாரணை செய்து கொள்ளுங்கள். (இல்லையெனில், அவனுடைய சொல்லை நம்பி) அறியாமையால் யாதொரு மக்களுக்கு நீங்கள் தீங்கிழைத்துவிட்டுப் பின்னர், நீங்கள் செய்தவைகளைப் பற்றி நீங்களே துக்கித்துக் கவலைப்படும்படியும் நேர்ந்துவிடும். (அல்குர்ஆன் : 49:6)

عَنِ ابْنِ عَبَّاسٍ فِي هَذِهِ الْآيَةِ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم بَعَثَ الْوَلِيدَ بْنَ عُقْبَةَ بْنِ أَبِي مُعَيْط إِلَى بَنِي الْمُصْطَلِقِ لِيَأْخُذَ مِنْهُمُ الصَّدَقَاتِ، وَإِنَّهُمْ لَمَّا أَتَاهُمُ الْخَبَرُ فَرِحُوا وَخَرَجُوا يَتَلَقَّوْنَ رَسُولَ رَسُولِ اللَّهِ ﷺ، وَأَنَّهُ لَمَّا حُدِّثَ الْوَلِيدُ أَنَّهُمْ خَرَجُوا يَتَلَقَّوْنَهُ، رَجَعَ الْوَلِيدُ إِلَى رَسُولِ اللَّهِ ﷺ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ بَنِي الْمُصْطَلِقِ قَدْ مَنَعُوا الصَّدَقَةَ. فَغَضِبَ رَسُولُ اللَّهِ ﷺ مِنْ ذَلِكَ غَضَبًا شَدِيدًا، فَبَيْنَا هُوَ يُحَدِّثُ نَفْسَهُ أَنْ يَغْزُوَهُمْ إِذْ أَتَاهُ الْوَفْدُ فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ، إِنَّا حُدِّثْنَا أَنَّ رَسُولَكَ رَجَعَ مِنْ نِصْفِ الطَّرِيقِ، وَإِنَّا خَشِينَا أَنَّ مَا رَدَّهُ كِتَابٌ جَاءَ مِنْكَ لِغَضَبٍ غَضِبْتَهُ عَلَيْنَا، وَإِنَّا نَعُوذُ بِاللَّهِ مِنْ غَضَبِهِ وَغَضَبِ رَسُولِهِ. وَإِنَّ النَّبِيَّ ﷺ اسْتَغَشَّهُمْ وَهَمَّ بِهِمْ، فَأَنْزَلَ اللَّهُ(١٠) عُذْرَهُمْ فِي الْكِتَابِ، فَقَالَ: ﴿يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنْ جَاءَكُمْ فَاسِقٌ بِنَبَإٍ فَتَبَيَّنُوا﴾ إلى آخر الآية

 

ஒரு தடவை நபி அவர்கள் ஜகாத் நிதியை வசூலிப்பதற்கு ஹழ்ரத் வலீத் பின் உக்பா (ரலி) அவர்களை பனீமுஸ்தலிக் எனும் கோத்திரத்தாரிடம் அனுப்பி வைத்தார்கள். இவருக்கும் அந்த கோத்திரத்தாருக்கும் இஸ்லாத்திற்கு வரும் முன் ஒரு கொலை சம்பந்தமான பகை உணர்வு இருந்து வந்தது. இஸ்லாத்திற்கு வந்தபின் அந்த பகை மறைந்து போனது.

ஹழ்ரத் வலீத் பின் உக்பா (ரலி) அவர்கள் வருகை புரியும் செய்தியறிந்து, அந்த கோத்திரத்தார் அவரை வரவேற்பதற்காக பெரும் படையை திரட்டி புடைசூழ ஊரின் எல்லையில் குழுமியிருந்தார்கள்.

இதைக் கண்ட ஹழ்ரத் வலீத் பின் உக்பா (ரலி) அவர்கள் உண்மை என்னவென்று உறுதிப்படுத்தாமல் பழைய பகை உணர்வை மனதில் வைத்து நம்மை தீர்த்து கட்ட இவர்கள் ஒன்று குழுமியிருக்கிறார்கள் என மனதில் நினைத்துக் கொண்டு, வந்த வழியை நோக்கி நபி அவர்களிடம் திரும்பி விட்டார்கள்.

மேலும் அந்த கோத்திரத்தார் குறித்து தம் எண்ண அடிப்படையில் பின்வரும் சில வதந்திகளை பரப்பி விடுகிறார்கள். 1) அவர்கள் இஸ்லாத்திலிருந்து வெளியேறி விட்டார்கள், 2) ஜகாத் நிதியை தர மறுக்கிறார்கள், 3) என்னை கொலை செய்யவும் தயாராகி விட்டார்கள்.

இந்த வதந்திகளை நபி அவர்கள் கேட்டதும் நம்பவில்லை. நடந்தது உண்மையா? அல்லது வதந்தியா? என்பதை ஆய்வு செய்வதற்காக ஹழ்ரத் காலித் பின் வலீத் (ரலி) அவர்களின் தலைமையில் ஒரு சிறிய படையை அனுப்பி வைத்து, அவர்களுக்கு தெரியாமல் இரவு நேரத்தில் அந்த ஊருக்குள் நுழையும்படி ஆலோசனை வழங்கினார்கள்.

அந்த ஊரின் எல்லை அருகே படை வந்ததும், ஹழ்ரத் காலித் (ரலி) அவர்கள் சில ஒற்றர்களை உளவு பார்க்க அனுப்பி வைத்தார்கள். அந்த நேரம் மக்ரிப் தொழுகை நேரமாகும். ஒற்றர்கள் சென்ற போது அந்த கோத்திரத்தார் தொழுகையில் ஆர்வமாக ஈடுபட்டதை கண்டார்கள்.

 

இந்த செய்தியை அறிந்து கொண்ட காலித் (ரலி) அடுத்த நாள் காலையில் அவர்களிடம் சென்று ஜகாத் நிதியை வசூலித்துக் கொண்டு, நபி அவர்களிடம் திரும்பிச் சென்று நடந்த உண்மை நிலவரத்தை எடுத்துச் சொன்னார்கள். அப்போது தான் மேற்கூறப்பட்ட (49:6) இறைவசனம் இறங்கியது. )இப்னுகஸீர்(

எனவே எதையும் தீர விசாரிக்க வேண்டும். உண்மைத் தன்மை என்ன என்பதை ஆராய வேண்டும்.

இன்றைக்குள்ள ஊடகங்கள் முழுக்க முழுக்க இஸ்லாமிய சமூகத்தின் மீது அவதூரான செய்திகளை பரப்புவதையே குறிக்கோளாக கொன்டிருக்கிறது.

முஸ்லிம்கள் தங்கள் சமூகத்தை சரி செய்யும் வரை துன்பங்களை அனுபவிக்க வேண்டும். பயணம் செய்ய அவர்களை அனுமதிக்கக்கூடாது. அவர்களை நாடு கடத்த வேண்டும். அவர்களது சுதந்திரத்தைப் பறிக்க வேண்டும். மத்திய கிழக்கு பகுதி அல்லது பாகிஸ்தானிலிருந்து வருபவரைப் போன்ற தோற்றம் இருந்தால் அவர்களின் ஆடைகளை களைந்து சோதனையிட வேண்டும். முழு முஸ்லிம் சமூகமும் காயப்படுத்தப்பட்டு அதன் விளைவாக தங்கள் பிள்ளைகளுடன் அவர்கள் கடுமையாக நடந்து கொள்கின்ற வரை அவர்களை ஒதுக்கி வைக்க வேண்டும்.

இவ்வாறு கூறியது இன வெறி பிடித்த ஒரு தலைவர் அல்ல. மாறாக இங்கிலாந்தில் நாட்டிலுள்ள மார்ட்டின் அமிஸ் என்ற நாவலாசிரியர்.

இந்த நேரத்தில் இதற்கான சரியான தீர்வு ஊடகத்துறையில் நாம் கால் பதிக்க வேண்டும்.இன்று ஊடகத்தில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. கடந்த நூறு ஆண்டுகளில் உலக அளவில் சுமார் நூறு செய்தி நிறுவனங்கள் இருக்கின்றன. ஆனால் இன்று அது இருபதாக சுருங்கி விட்டது. இதில் 66% செய்தி நிறுவனங்களை கட்டுப்படுத்துவது உலகில் 0.3 விழுக்காடாக இருக்கும் யூதர்களே. அவர்கள் தரும் செய்திகளை ஊடகங்கள் எவ்வித விசாரணையும் இன்றி அப்படியே வெளியிடுகின்றன. இந்தியாவில் எட்டு சதவீதமாக இருக்கும் உயர் ஜாதி பிரிவினரே தேசிய ஊடகத்தில் மேல் மட்டத்தில் 71% இடத்தை ஆக்கிரமித்து இருக்கிறார்கள். இதில் இஸ்லாமியர்களின் பங்கு வெறும் மூன்று சதவீதம் மட்டுமே.இந்த நிலை மாற வேண்டும்.

 

 

 

2 comments:

  1. ஊடகத்தின் நாடகம்

    ReplyDelete
  2. Alhamdulillah, nalla kurippu, jazakallah khair ji

    ReplyDelete