Friday, December 29, 2023

புத்தாண்டு கொண்டாட்டமல்ல ; திண்டாட்டம்

 

இந்த வருடத்தின் இறுதியில் இருக்கிறோம். 2024 ம் ஆண்டு பிறக்க இருக்கிறது. புத்தாண்டை வரவேற்பதற்கும் கொண்டாடுவதற்கும் உலகமே தயாராகிக் கொண்டிருக்கிறது. மிகுந்த உற்சாகத்தோடு கொண்டாடப்படும் தினங்களில் புத்தாண்டும் ஒன்று. மற்ற பண்டிகைகளுக்கும் இந்த புத்தாண்டிற்கும் ஒரு வித்தியாசம் உண்டு. மற்ற பண்டிகைகளை அந்தந்த மதம் சார்ந்தவர்கள் அல்லது அந்தந்த சமூகத்தினர்கள் கொண்டாடு வார்கள். மற்றவர்கள் அவர்களுக்கு வாழ்த்துச் சொல்வார்கள். ஆனால் இந்தப் புத்தாண்டில் நடைபெறும் விநோதம் என்னவென்றால் அதை அனைவருமே கொண்டாடுவார்கள்.அனைவருமே வாழ்த்துச் சொல்லிக் கொள்வார்கள்.

உலகத்தில் கொண்டாடப்படும் அனைத்துப் பண்டிகைகளுக்குப் பிண்ணனியிலும் ஒரு காரணம் இருக்கும். அந்த தினத்திற்கான காரணமும் தத்துவமும் சொல்லப்படும். (அது பொருத்தமில்லாததாக இருக்கும் என்பது வேறு விஷயம்) ஆனால் புத்தாண்டு கொண்டாடக் கூடியவர்களிடம் அதற்கான காரணம் கேட்கப்பட்டால் ஒருவருக்கும் தெரியாது. ஏன் கொண்டாடுகிறோம்? எதற்காக கொண்டாடுகிறோம்? என்று தெரியாமல் அனைவராலும் கொண்டாடப்படும் ஒரு தினம் புத்தாண்டு என்பது விந்தையிலும் விந்தையானது.

காரணம் தெரியாத செயல்கள் பெருகுவது உலக அழிவு நாளின் அறிகுறி

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَا تَذْهَبُ الدُّنْيَا حَتَّى يَأْتِيَ عَلَى النَّاسِ يَوْمٌ لَا يَدْرِي الْقَاتِلُ فِيمَ قَتَلَ وَلَا الْمَقْتُولُ فِيمَ قُتِلَ

அல்லாஹ்வின் மீது சத்தியமாக கொலை செய்தவன் ஏன் கொலை செய்தான். கொலை செய்யப்பட்டவன் ஏன் கொலை செய்யப்பட்டான் என்று தெரியாத ஒரு நாள் வரும் வரை இந்த உலகம் அழியாது. (முஸ்லிம் ; 2908)  

உலகில் ஷிர்கில் இருக்கும் அனைவரும் கூறும் பொதுவான காரணங்களில் ஒன்று எங்கள் முன்னோர்கள் மூதாதையர்களை இப்படித்தான் பெற்றுக் கொண்டோம் என்று கூறுவார்கள்.

اِذْ قَالَ لِاَبِيْهِ وَقَوْمِهٖ مَا هٰذِهِ التَّمَاثِيْلُ الَّتِىْۤ اَنْتُمْ لَهَا عٰكِفُوْنَ‏

அவர் தம் தந்தையிடமும், தம் சமூகத்தாரிடமும் நீங்கள் வழிபடும் இந்த உருவங்கள் என்ன?” என்று கேட்ட போது: (அல்குர்ஆன் : 21:52)

قَالُوْا وَجَدْنَاۤ اٰبَآءَنَا لَهَا عٰبِدِيْنَ‏

அவர்கள், “எங்கள் மூதாதையவர்கள் இவற்றை வணங்கிக் கொண்டிருந்ததை நாங்கள் கண்டோம் என்று கூறினார்கள். (அல்குர்ஆன் : 21:53)

قَالَ لَـقَدْ كُنْتُمْ اَنْتُمْ وَاٰبَآؤُكُمْ فِىْ ضَلٰلٍ مُّبِيْنٍ‏

(அதற்கு) அவர், “நிச்சயமாக நீங்களும், உங்களுடைய மூதாதையரும் - பகிரங்கமான வழி கேட்டில் தான் இருந்து வருகிறீர்கள் என்று கூறினார். (அல்குர்ஆன் : 21:54)

புத்தாண்டைப் பொருத்த வரை அதற்கான காரணம் தெரியாமல் மற்றவர்களைப் பார்த்து, அவர்கள் செய்கிறார்கள், அவர்கள் கொண்டாடுகிறார்கள், நாமும் கொண்டாடுவோம் என்ற நிலை தான் இருக்கிறது.

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا ادْخُلُوْا فِى السِّلْمِ کَآفَّةً  وَلَا تَتَّبِعُوْا خُطُوٰتِ الشَّيْطٰنِ‌ اِنَّهٗ لَـکُمْ عَدُوٌّ مُّبِيْنٌ‏

நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் தீனுல் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள்; தவிர ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்; நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் ஆவான், (அல்குர்ஆன் : 2:208)

நாம் இஸ்லாமியர்களாக இருக்கிறோம். இஸ்லாம் என்பது நம்மை அதில் முழுமையாக நுழைந்து விடும் அழைக்கிறது. நம்மை வழிகெடுக்கும் ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்ற வேண்டாம் என்று உணர்த்துகிறது. இரவு நேரத்தில் ஊர் சுற்றுவது, மது அருந்துவது, பெண்களோடு உல்லாசம் அனுபவிப்பது, கூத்து கும்மாலத்தில் ஈடுபடுவது, இவைகள் இன்றைக்குள்ள புத்தாண்டுக் கொண்டாட்டங்கள். இஸ்லாத்தில் இவைகளுக்கு அனுமதியில்லை.

ஒரு முஸ்லிம் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் விரும்பும் காரியங்களை, அவர்களை திருப்திப்படுத்தும் காரியங்களை மட்டுமே செய்ய வேண்டும்.

يَحْلِفُوْنَ بِاللّٰهِ لَـكُمْ لِيُرْضُوْكُمْ‌ وَاللّٰهُ وَرَسُوْلُهٗۤ اَحَقُّ اَنْ يُّرْضُوْهُ اِنْ كَانُوْا مُؤْمِنِيْنَ‏

(முஃமின்களே!) உங்களைத் திருப்திப்படுத்துவதற்காக உங்களிடத்தில் அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கிறார்கள்; அவர்கள் (உண்மையாகவே) முஃமின்களாக இருந்தால், அவர்கள் திருப்திப் படுத்த மிகவும் தகுதியுடையவர்கள் அல்லாஹ்வும், அவனுடைய ரஸூலும் தான். (அல்குர்ஆன் : 9:62)

இந்த மாதிரியான புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் நிச்சயம் அல்லாஹ்வின் அதிர்ப்தியைத் தான் பெற்றுத்தரும் என்பதில் ஐயமில்லை.

இஸ்லாம் அனைத்துக் காரியங்களுக்கும் வரம்பை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த வகையில் ஒரு முஸ்லிம் எதைக் கொண்டு மகிழ்ச்சியடைய வேண்டும். எதைக் கொண்டு மகிழ்ச்சியடைக் கூடாது என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறது. இன்றைக்கு நம்மில் ஒவ்வொருவரும் அதிகம் எதிர் பார்க்கிற விஷயம் மகிழ்ச்சி. எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பது தான் அனைவரின் எதிர் பார்ப்பும் ஆசையும். இதில் தவறொன்றும் இல்லை. மார்க்கம் மகிழ்ச்சிக்கு தடை  விதிக்க வில்லை. ஆனால் எதை வைத்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். எதை வைத்து மகிழ்ச்சியாக இருக்கக்கூடாது என்பதற்கான அளவுகோலையும் வரையரையையும் மார்க்கம் ஏற்படுத்தியிருக்கிறது.

மகிழ்ச்சி நன்மைகளைக் கொண்டும் ஏற்படும். தீமைகளைக் கொண்டும் ஏற்படும். நம் மகிழ்ச்சி நன்மைகளைக் கொண்டு இருக்க வேண்டுமே தவிர தீமைகளைக் கொண்டு இருக்கக்கூடாது. இரண்டையும் குர்ஆன் விவரிக்கிறது.

ذلِكُمْ بِمَا كُنْتُمْ تَفْرَحُوْنَ فِى الْاَرْضِ بِغَيْرِ الْحَقِّ وَبِمَا كُنْـتُمْ تَمْرَحُوْنَ‌ ‏

(பின்னர் அவர்களை நோக்கி) "பூமியில் நீங்கள் உண்மையற்றதைக் கொண்டு அளவுகடந்து சந்தோஷப்பட்டுக் கொண்டு இருந்ததாலும், இறுமாப்போடு இருந்ததாலும் இதுவே உங்களுக்கு (தண்டனையாகும்)" என்றும், (அல்குர்ஆன் : 40:75)

بِما كُنْتُمْ تَفْرَحُونَ" بِالْمَعَاصِي يُقَالُ لَهُمْ ذَلِكَ تَوْبِيخًا أَيْ إِنَّمَا نَالَكُمْ هَذَا بِمَا كُنْتُمْ تُظْهِرُونَ فِي الدُّنْيَا مِنَ السُّرُورِ بِالْمَعْصِيَةِ وَكَثْرَةِ الْمَالِ وَالْأَتْبَاعِ وَالصِّحَّةِ. وَقِيلَ إِنَّ فَرَحَهُمْ بِهَا عِنْدَهُمْ أَنَّهُمْ قَالُوا لِلرُّسُلِ: نَحْنُ نَعْلَمُ أَنَّا لَا نُبْعَثُ وَلَا نُعَذَّبُ. وَكَذَا قَالَ مُجَاهِدٌ فِي قَوْلِهِ جَلَّ وَعَزَّ:

"உண்மையற்றதைக் கொண்டு" சந்தோஷப்படுவார்கள் என்று இந்த வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான். அதற்கான பொருள், உலகத்தில் அவர்கள் சமாதித்த அளவு கடந்த பொருளாதாரத்தைக் கொண்டும், அவர்கள் புரியும் பாவத்தை கொண்டும் சந்தோஷப்படுவார்கள். இன்னொரு பொருள்,  இந்த உலகத்தோடு எங்கள் வாழ்க்கை முடிந்து விடும். இதற்குப் பிறகு நாங்கள் எழுப்பப்பட மாட்டோம். எங்களுக்கு வேதனைகள் இல்லை என்று அவர்கள் கருதினார்கள். அதைக் கொண்டு அவர்கள் சந்தோஷப்பட்டார்கள். இதே விளக்கத்தை தான் முஜாஹிது அவர்கள் பின்வரும் வசனத்திற்கும் தருகிறார்கள்.

நாம் நன்மையான காரியங்களைக் கொண்டே மகிழ்ச்சியடைய வேண்டும். நமக்கு கிடைத்த பாக்கியங்களைக் கொண்டு, அல்லது நமக்கு கிடைக்க இருக்கிற பாக்கியங்களைக் கொண்டு மகிழ்ச்சியடைய வேண்டும். இதுவே ஈமான் கொண்டவர்களின் மகிழ்ச்சி.

 روى مسلم في صحيحه من حديث أسماء بنت عميس رضي الله عنها وكانت قد قدمت على حفصة زوج النبي صلى الله عليه وسلم زائرة، وقد كانت هاجرت إلى النجاشي فيمن هاجر إليه، فدخل عمر على حفصة وأسماء عندها، فقال عمر حين رأى أسماء: من هذه؟ قالت: أسماء بنت عميس، قال عمر: الحبشية هذه؟ البحرية هذه؟ فقالت أسماء: نعم، قال عمر: سبقناكم بالهجرة، فنحن أحق برسول الله صلى الله عليه وسلم منكم، فغضبت، وقالت كلمة: كذبت يا عمر، كلا والله، كنتم مع رسول الله صلى الله عليه وسلم يطعم جائعكم، ويعظ جاهلكم، وكنا في دار - أو في أرض البعداء البغضاء في الحبشة، وذلك في الله وفي رسوله، وأيم الله لا أطعم طعامًا، ولا أشرب شرابًا حتى أذكر ما قلت لرسول الله صلى الله عليه وسلم، ونحن كنا نؤذى ونُخاف، وسأذكر ذلك لرسول الله صلى الله عليه وسلم وأسأله، ووالله لا أكذب ولا أزيغ، ولا أزيد على ذلك. قال: فلما جاء النبي صلى الله عليه وسلم قالت: يا نبي الله! إن عمر قال كذا وكذا، فقال رسول الله صلى الله عليه وسلم: «لَيْسَ بِأَحَقَّ بِي مِنْكُمْ، وَلَهُ وَلِأَصْحَابِهِ هِجْرَةٌ وَاحِدَةٌ، وَلَكُمْ أَنْتُمْ أَهْلَ السَّفِينَةِ هِجْرَتَانِ»، قالت: فلقد رأيت أبا موسى وأصحاب السفينة يأتوني أرسالًا، يسألوني عن هذا الحديث، ما من الدنيا شيء هم به أفرح ولا أعظم في أنفسهم مما قال لهم رسول الله صلى الله عليه وسلم  رواه مسلم برقم

உமர் (ரலி) (தம் மகள்) ஹஃப்ஸா (ரலி) அவர்களின் இல்லத்திற்குச் சென்றார்கள். அப்போது ஹஃப்ஸா அவர்களுக்கு அருகில் அஸ்மா அவர்கள் இருந்தார்கள். நஜ்ஜாஷீ மன்னரை நோக்கி (அபிசீனியாவிற்கு) ஹிஜ்ரத் செய்தவர்களில் அஸ்மாவும் ஒருவராவார். உமர் (ரலி) அஸ்மா அவர்களைக் கண்ட போது, இவர் யார்?’ என்று (தம் மகள் ஹஃப்ஸா அவர்களிடம்) கேட்டார்கள். ‘(இவர்) அஸ்மா பின்த் உமைஸ் என்றார்கள். இவர், அபிசீனியரா? இவர் கடல் மார்க்கமாக (மதீனா) வந்தவரா?’ என்று கேட்டார்கள். அதற்கு, ‘ஆம் என்று அஸ்மா அவர்கள் பதிலளித்தார்கள். அப்போது உமர் ரலி அவர்கள்,  உங்களுக்கு முன்பே நாங்கள் (மதீனாவிற்கு) ஹிஜ்ரத் செய்து வந்து விட்டோம். எனவே, உங்களை விட நாங்களே இறைத்தூதர் அவர்களிடத்தில் மிகவும் மேலானவர்கள் என்று கூறினார்கள். இது கேட்டு அஸ்மா (ரலி) கோபப்பட்டு, ‘அல்லாஹ்வின் மீதாணையாக! அப்படியில்லை. நீங்கள் இறைத்தூதர் அவர்களுடன் இருந்தீர்கள். உங்களில் பசித்தவருக்கு அவர்கள் உணவளித்தார்கள். உங்களில் அறியாதவர்களுக்கு அவர்கள் அறிவூட்டினார்கள். (உடல் மற்றும் அறிவு ரீதியான நபியவர்களிடமிருந்து நீங்கள் உதவி பெற்று வந்தீர்கள்.) நாங்களோ வெகு தொலைவிலிருக்கும், பகைவர்கள் உள்ள அபிசீனிய நாட்டில் இருந்தோம். அல்லாஹ்வுக்காகவும் அவனுடைய தூதருக்காகவுமே இதைச் செய்தோம். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள் சொன்னதை இறைத்தூதர் அவர்களிடம் தெரிவிக்கும் வரையில் நான் எதையும் உண்ணவோ குடிக்கவோ மாட்டேன். நாங்கள் துன்புறுத்தப்பட்டோம்; அச்சுறுத்தப்பட்டோம். நான் இதை நபி அவர்களிடம் கூறி, அல்லாஹ்வின் மீதாணையாக! நான் பொய் சொல்ல மாட்டேன்; திரித்துப் பேசவும் மாட்டேன். நீங்கள் சொன்னதை விட கூட்டிச் சொல்லவும் மாட்டேன் என்று கூறினார்கள். நபி அவர்கள் வந்த போது, அஸ்மா பின்த் உமைஸ் (ரலி அவர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! உமர் அவர்கள் இன்னின்னவாறு கூறினார்கள் என்று கூறினார்கள். அவருக்கு நீ என்ன பதிலளித்தாய்?’ என்று நபி அவர்கள் கேட்ட போது, ‘அவருக்கு இன்னின்னவாறு பதிலளித்தேன் என்று அஸ்மா அவர்கள் கூறினார்கள். அப்போது நபி அவர்கள், ‘உங்களை விட அவர் எனக்கு உரியவர் இல்லை. அவருக்கும் அவரின் சகாக்களுக்கும் ஒரேயொரு ஹிஜ்ரத் (செய்த சிறப்பு) தான் உண்டு. (அபிசினியாவிலிருந்து) கப்பலில் வந்தவர்களே! உங்களுக்கு (அபிசீனியாவிற்கு ஒன்றும், மதீனாவிற்கு ஒன்றுமாக) இரண்டு ஹிஜ்ரத் (செய்த சிறப்பு) உண்டு என்று கூறினார்கள். நபி அவர்கள் சொன்ன இந்த வார்த்தையை விட அவர்களுக்கு உலகில் மிகவும் மகிழ்ச்சியானதாக வேறு எதுவும் இருக்க வில்லை என்று கூறப்படுகிறது. (முஸ்லிம் : 2503)

நீங்கள் தான் என்னிடம் உயர்ந்தவர்கள் என்று நபியவர்கள் சொன்னதைக் கேட்டு அஸ்மா ரலி அவர்கள் எண்ணிலடங்கா மகிழ்ச்சியடைந்தார்கள்.

لما قال له النبي مرة: إن الله أمرني أن أقرأ عليك سورة كذا؟ قال: وذكرني لك؟ ذكرني باسمي؟ قال: نعم فبكى أبي من شدة الفرح

அல்லாஹ்வின் தூதர் அவர்கள், உபை பின் கஅப் ரலி அவர்களிடம் உங்களுக்கு இன்ன அத்தியாயத்தை ஓதிக் காட்டுமாறு அல்லாஹ் என்னைப் பணித்துள்ளான்என்று கூறினார்கள். அல்லாஹ் என் பெயரைத் தங்களிடம் குறிப்பிட்டானா?” என்று உபை ரலி கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் ஆம்என்று பதிலளிக்க, (உணர்ச்சிப் பெருக்கால்) அப்போது உபை ரலி அவர்கள் ஆனந்தக் கண்ணீர் வடித்தார்கள். (முஸ்லிம் : 1901)

أن رجلًا سأل النبي صلى الله عليه وسلم عن الساعة، فقال: مَتَى السَّاعَةُ؟ قَالَ: «وَمَاذَا أَعْدَدْتَ لَهَا؟» قَال: لَا شَيءَ، إِلَّا أَنِّي أُحبُ اللهَ وَرَسُولَهُ، فَقَال: «أَنْتَ مَعَ مَنْ أَحْبَبْتَ»[9]. قال أنس: فما فرحنا بشيء فرحنا بقول النبي صلى الله عليه وسلم: «أَنْتَ مَعَ مَنْ أَحْبَبْتَ»،

ஒரு மனிதர் நபி அவர்களிடம் மறுமை நாளைப் பற்றி, “மறுமை நாள் எப்போது வரும்?” என்று கேட்டார். நபி அவர்கள், “அதற்காக நீ என்ன தயார் செய்து வைத்திருக்கின்றாய்?” என்று கேட்டார்கள். அம்மனிதர், “அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நான் நேசிக்கின்றேன் என்பதைத் தவிர எதுவுமில்லைஎன்று பதிலளித்தார். அதற்கு நபி அவர்கள், “நீ நேசித்தவர்களுடன் தான் நீ (மறுமையில்) இருப்பாய்என்று சொன்னார்கள். நபி அவர்கள், “நீ நேசித்தவர்களுடன் இருப்பாய்என்று சொன்னதைக் கேட்டு நாங்கள் மகிழ்ச்சியடைந்ததைப் போன்று வேறு எதற்காகவும் மகிழ்ச்சியடைந்த தில்லை.(புகாரி :  3688)

ஒரு முஸ்லிமின் மகிழ்ச்சி இந்த வகையில் தான் இருக்க வேண்டும். புத்தாண்டு தினத்தில் நடக்கின்ற கூத்து கும்மாலங்களைக் கொண்டு மகிழ்வது ஒரு இஸ்லாமியனுக்கு அழகல்ல.  

புத்தாண்டு என்பது முதலில் கொண்டாடப்படும் தினமே அல்ல.  

ஒவ்வொரு புத்தாண்டு துவங்கும் போதும் மனிதனின் ஆயுட்காலம் குறைந்து கொண்டே வருகிறது என்பது தான் உண்மை. உதாரணமாக 2021-ல் ஒருவர் பிறந்திருக்கிறார். அவருக்கு 2081-ல் மரணத்தை அல்லாஹ் அவருடைய விதியில் எழுதியிருக்கிறான் என்று வைத்துக் கொண்டால் இப்போது அவருடைய வாழ்க்கை அறுபது வருட காலம்.  2030 ஜனவரி 1ம் தேதி புத்தாண்டு பிறக்கும் போது  அவரது ஆயுள்  ஐம்பதாக குறையும். 2040 ஜனவரி 1-ல் அவருடைய ஆயுள் நாற்பதாக குறையும். இவ்வாறாக...ஆயுள் குறைந்து கொண்டே செல்லும். எனவே ஒவ்வொரு புத்தாண்டிலும் நமக்கு அல்லாஹ் எழுதிய ஆயுளில் ஒரு வருடம் குறைகிறது என்பதை நினைத்து வருத்தப்பட வேண்டும். ஆயுள் அதிகரிக்க அல்லாஹ்விடம் துஆ செய்ய வேண்டும். மரணம் நெருங்குவதை நினைத்து அல்லாஹ்விற்கு அஞ்சி அமல்களை அதிகப்படுத்த வேண்டும். புத்தாண்டைக் குறித்த நம் பார்வையும் சிந்தனையும் இவ்வாறே இருக்க வேண்டும்.

உண்மையில் மரண சிந்தனையும் கவலையுமே மனித வாழ்வை சீர்படுத்தும்.அதனால் மரணித்தவர்களை அதிகம் ஜியாரத் செய்ய வேண்டும் என்று நபி அவர்கள் உணர்த்தினார்கள்.

عَنْ ابْنِ مَسْعُودٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ كُنْتُ نَهَيْتُكُمْ عَنْ زِيَارَةِ الْقُبُورِ فَزُورُوهَا فَإِنَّهَا تُزَهِّدُ فِي الدُّنْيَا وَتُذَكِّرُ الْآخِرَةَ (ابن ماجة

மண்ணரைவாசிகளை ஜியாரத் செய்யுங்கள். அது உலக ஆசையை நீக்கும். மறுமையை நினைவுபடுத்தும். (இப்னுமாஜா)

மரணத்தை நினைத்தால் குதூகலமும், கொண்டாட்டமும் காணாமல் போய் விடும். வாழ்க்கை அர்த்தப்படும்.

ஒரு குண்டான மனிதர் தன் உடம்பை குறைக்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய அபிமான டாக்டரிடம் வந்து  டாக்டர் என் உடல் எடை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகிறது. என் எடை குறைவதற்கு ஏதேனும் ஆலோசனை சொல்லுங்கள் என்று கூற,  உடனே டாக்டர் அந்த மனிதரை பரிசோதித்துப் பார்த்து விட்டு கவலையுடன் உங்களுக்கு குணப்படுத்த முடியாத வியாதி ஏற்பட்டுள்ளது இன்னும் 40 நாட்களில் நீங்கள் இறந்து விடுவீர்கள் என்று கூறினார். அந்த மனிதரின் முகமே மாறிப் போய் கவலையுடன் வீடு திரும்பினார். அன்று முதல் அவர் சரியாக சாப்பிட வில்லை. சரியாக தூங்க வில்லை. பொழுது போக்கான விஷயங்களில் ஈடுபட வில்லை.இருக்கின்ற அந்த சொர்ப்ப நாட்களில் நல்ல காரியங்களை செய்வோம் என்று நினைத்து நிறைய தர்மங்களை செய்தார். நாற்பது நாட்களும் கவலையுடன் நாட்களை எண்ணிக் கொண்டிருந்தார். நாற்பதாவது நாள் அவர் மிகவும் துக்கத்துடன் தன்னுடைய கடைசி நிமிடங்களை எண்ணிக் கொண்டிருந்தார். சரியாக நாற்பது நாள் முடிந்தது. ஆனால் அவர் சாகவில்லை. அடுத்த நாள் அவர் ஆச்சரியத்துடன் ஓடோடி வந்து  டாக்டர் நாற்பது நாட்களில் நீ இறந்து விடுவாய் என்றீர்கள். ஆனால் 41 நாள் ஆகி விட்டது. நான் இறக்கவில்லையே.. எனக்கு உண்மையிலேயே வியாதி இருக்கிறதா?  இல்லையா? தெளிவாகச் சொல்லுங்கள் என்றார். அப்போது டாக்டர்  சிரித்துக் கொண்டே உங்களுக்கு எந்த வியாதியும் இல்லை. உங்களுடைய எடை குறைய வேண்டும் என்பதற்காக நான் அளித்த வித்தியாசமான சிகிச்சை தான் இது.. இப்போது உங்கள் உடம்பைப் பாருங்கள் என்றார். அப்போது தான் அந்த மனிதர் தன்னுடைய எடை வெகுவாகக் குறைந்து விட்டதைக் கண்டு டாக்டருக்கு நன்றி கூறினார்.

وقال الثوري : لو أن البهائم تعقل من الموت ما تعقلون ما أكلتم منها سمينا

நீங்கள் அறிந்த அளவு பிராணிகள் மரணத்தை அறியத் தொடங்கினால் எந்த பிராணியும் சதையுள்ளதாக இருக்காது. மரணத்தின் சிந்தனையில் அனைத்தும் மெலிந்து விடும் என்று ஸுஃப்யானுஸ் ஸவ்ரீ ரஹ் அவர்கள் கூறினார்கள்.  

மரண சிந்தனை மனித வாழ்வை அழகுபடுத்தும். அல்லாஹ்விற்குப் பொருத்தமானதாக மாற்றும்.

قال العلماء : تذكر الموت يردع عن المعاصي ويلين القلب القاسي، ويذهب الفرح بالدنيا و يهون المصائب فيها.

மரண சிந்தனை பாவங்களிலிருந்து மனிதனைத் தடுக்கும். கடின உள்ளத்தை இலகுவாக்கும்.உலகத்தைக் கொண்டு மகிழ்ச்சியடையும் எண்ணத்தைப் போக்கும்.சோதனைகளை இலேசாக்கும் என்று சூஃபியாக்கள் கூறுகிறார்கள்.

قالت صفية رضي الله عنها: إن امرأة اشتكت إلى عائشة رضي الله عنها قساوة قلبها, فقالت: أكثري من ذكر الموت يرق قلبك, فرق قلبها, فجاءت تشكر عائشة

அன்னை ஆயிஷா ரலி அவர்களிடம் ஒரு பெண் வந்து தன் உள்ளம் கடினமாக இருக்கிறது என்று முறையிட்டாள். அதற்கவர்கள், மரண சிந்தனையை அதிகமாக்கிக் கொள். உன் இதயம் மிருதுவாகி விடும் என்றார்கள். அந்தப் பெண் அவ்வாறு செய்யவே இதயம் மிருதுவானது.

நம் முன்னோர்கள் மரண சிந்தனை மறுமை சிந்தனையோடு வாழ்ந்தார்கள்.

قام محمد بن المنكدر ذات ليلة يصلي فمرَّ بآية فبكى واتصل بكاؤه ولم يسكت, وانعقد لسانُهُ عن الكلام، فخشيَ عليه أهلُهُ فدعو صديقاً له يُسمى أبا حازم, فلما جاءه هدأ ، فسأله: ما يبكيك ؟ قال : مررت بقوله تعالى: ) وَبَدَا لَهُم مِّنَ اللَّهِ مَا لَمْ يَكُونُوا يَحْتَسِبُونَ(, فبكى أبو حازم معه, وأخذا يتجاوبان البكاء، فقال أهلُهُ : أتينا بك لتخفِّف عنه فزدْته.

முஹம்மத் பின் முன்கதிர் ரஹ் அவர்கள் ஒரு நாள் இரவு தேம்பித் தேம்பி அழுதார்கள். அவர்களின் அழுகைப் பார்த்த அவர்களின் குடும்பத்தினர்கள் பயந்து அவர்களின் நண்பரான அபூஹஜ்ம் ரஹ் அவர்களை அழைத்து விஷயத்தைக் கூறினார்கள். அவர்கள் வந்து அழுததற்கான காரணத்தைக் கேட்டார்கள். அப்போது அவர்கள்

وَلَوْ اَنَّ لِلَّذِيْنَ ظَلَمُوْا مَا فِى الْاَرْضِ جَمِيْعًا وَّمِثْلَهٗ مَعَهٗ لَافْتَدَوْا بِهٖ مِنْ سُوْٓءِ الْعَذَابِ يَوْمَ الْقِيٰمَةِ‌ وَبَدَا لَهُمْ مِّنَ اللّٰهِ مَا لَمْ يَكُوْنُوْا يَحْتَسِبُوْنَ‏

மேலும், அநியாயம் செய்தவர்களிடம் பூமியிலுள்ளயாவும், அத்துடன் அது போன்றதும் இருக்குமானாலும் நிச்சயமாக கியாம நாளின் கொடிய வேதனைக்கு (அதிலிருந்து விடுதலை பெற அவையனைத்தையுமே) ஈடாகக் கொடுத்துவி(ட நா)டுவார்கள்; மேலும், அவர்கள் எண்ணிப் பார்த்திராதவையெல்லாம் அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு (வேதனையாக) வெளியாகும். (அல்குர்ஆன் : 39:47) இந்த வசனம் தான் என்னை அழ வைத்தது என்றார்கள். அந்த வசனத்தைக் கேட்டு அவர்களும் அழ ஆரம்பித்து விட்டார்கள். அவர்களின் அழுகையைக் கட்டுப்படுத்துவதற்கு உங்களை அழைத்தால் நீங்கள் அதிகப்படுத்தி விட்டீர்களே என்று குடும்பத்தார்கள் கூறினார்கள்.

வாழ்க்கை என்பது மரணத்தை நோக்கிய ஒரு பயணம். இந்தப் பயணத்தில் பலரும் தன் வாகனத்தில் ஏற அழைப்பார்கள். ஷைத்தான்,  நஃப்ஸ், கெட்ட நண்பன். இப்படியாக பலரும் அழைக்கும் போது கண்ட கண்ட வாகனத்தில் ஒருவர் ஏறினால் அவர் போய்ச் சேருமிடம் நரகமாகி விடலாம். மற்றொரு புறம் குர்ஆனும் அழைக்கும். அதன் வழியில் சென்றால் சுவனம்.

ஒரு பேருந்து நிலையத்தில் நிற்கும் போது தமது பஸ்ஸில் ஏறும் படி பலரும் கூவிக்கூவி நம்மை அழைத்தாலும் நாம் நிதானமாக யோசித்து எந்தப் பேருந்து நாம் செல்ல வேண்டிய இடத்திற்குப் பாதுகாப்பாகவும், விரைவாகவும் நம்மைக் கொண்டு போய் சேர்க்கும் என தேர்ந்தெடுக்கிறோம். வாழ்க்கைப் பயணம் என்பது அதை விட மிக முக்கியமானது. கெட்ட நண்பர்களின் சகவாசத்தில் கொண்டாட்டம், கூத்து கும்மாலம் என்ற மோசமான பாதையின் அளவில் போய் விடக்கூடாது.

எனவே புத்தாண்டு கொண்டாட்டமல்ல, அதை கொண்டாட்டமாக்கினால் மறுமையில் திண்டாட்டம் தான். அல்லாஹ் பாதுகாப்பானாக!

புத்தாண்டு குறித்த பழைய பதிவு....

இஸ்லாத்தின் பார்வையில் நிவ் இயர்

 

No comments:

Post a Comment