Friday, January 26, 2024

குடியரசு

 

இன்று நாட்டின் 75 வது குடியரசு தினம். 1947 ஆகஸ்ட் 15  இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, இந்திய அரசியல் நிர்ணய சபைத் தலைவராக டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் நியமிக்கப்பட்டார். இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராகவும் அவர் பொறுப்பேற்றார். அதன் பிறகு, இந்திய அரசியலமைப்பு வரைவுக்குழு அமைக்கப்பட்டு, டாக்டர் அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் அமைப்பு சாசனம் எழுதப்பட்டது. பல சிறப்பு அம்சங்களைக் கொண்டு நீண்ட ஆவணமாக எழுதப்பட்ட இந்த சாசனம், இந்திய அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு,, 1950 ஜனவரி 26 ஆம் நாள் நிறைவேற்றப்பட்டது. அந்த நாளை நினைவு கூறும் வகையில் 1950 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாளை இந்திய குடியரசு தினமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.

Thursday, January 4, 2024

மானம் பெரிது

 

நமக்கு அல்லாஹ் கண்ணியமான வாழ்வைத் தந்திருக்கிறான். நாம் அதிகம் எதிர் பார்க்கின்ற விஷயம் கண்ணியம். பிறர் நம்மைக் கண்ணியப்படுத்த வேண்டும். நம்மை மதிக்க வேண்டும் என்று நினைக்கின்றோம். நம் மானம் மரியாதை காக்கப்பட வேண்டும் என எதிர் பார்க்கின்றோம்.எந்த சந்தர்ப்பத்திலும் நம் கண்ணியம் போய் விடக் கூடாது. நம் மானம் மரியாதையை எவரும் கெடுத்து விடக்கூடாது என்பதில் அதிக கவனம் செலுத்துகிறோம்.