Friday, January 26, 2024

குடியரசு

 

இன்று நாட்டின் 75 வது குடியரசு தினம். 1947 ஆகஸ்ட் 15  இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, இந்திய அரசியல் நிர்ணய சபைத் தலைவராக டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் நியமிக்கப்பட்டார். இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராகவும் அவர் பொறுப்பேற்றார். அதன் பிறகு, இந்திய அரசியலமைப்பு வரைவுக்குழு அமைக்கப்பட்டு, டாக்டர் அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் அமைப்பு சாசனம் எழுதப்பட்டது. பல சிறப்பு அம்சங்களைக் கொண்டு நீண்ட ஆவணமாக எழுதப்பட்ட இந்த சாசனம், இந்திய அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு,, 1950 ஜனவரி 26 ஆம் நாள் நிறைவேற்றப்பட்டது. அந்த நாளை நினைவு கூறும் வகையில் 1950 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாளை இந்திய குடியரசு தினமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவர் மக்களுக்காக ஆட்சி செய்ய வேண்டும். அதற்கே குடியரசு என்று சொல்லப்படுகிறது. குடிமக்கள் அனைவருக்கும் போதுமான வாழ்க்கை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். மக்கள் வாழ்க்கை தரத்தினை உயர்த்த வேண்டும்.பொது சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும்.குழந்தைகளுக்கு இலவச, கட்டாய கல்வி தர வேண்டும்.ஒரு சிலரின் கைகளிலேயே நாட்டின் செல்வ வளம் குவியா வண்ணம் தடுக்க வேண்டும்.ஏழைகளுக்கு இலவச சட்ட உதவி வழங்க வேண்டும். நாட்டின் இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும்.பன்னாட்டு அமைதியையும், பாதுகாப்பையும் மேம்படுத்த வேண்டும். குறிப்பாக நாட்டில் வாழும் சிறுபான்மையின மக்கள், தங்கள் உரிமைமைகளைப் பெற வேண்டும். அவர்கள் சுதந்திரமாக வாழ வேண்டும். இவைகள் தான் குடியரசு அமைக்கப்பட்டதற்கான நோக்கம். ஒரு அரசு எப்படி இருக்க வேண்டும். ஆட்சியாளர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை இஸ்லாம் தெளிவுபடுத்தியிருக்கிறது. 

இஸ்லாம், ஆன்மீகத்தை மட்டும் போதித்து விட்டுச் சென்று விடாமல், இறைவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை மட்டும் சட்டமாகச் சொல்லி விட்டுப் போகாமல் மக்களை வழிநடத்துகின்ற, மக்களின் பிரதிநிதிகளாக இருக்கின்ற ஆட்சியாளர்களும் எப்படி இருக்க வேண்டும் என்று அற்புதமான முறையில் வழிகாட்டுகின்றது.


عَنْ أَبِي الْمَلِيحِ أَنَّ عُبَيْدَ اللَّهِ بْنَ زِيَادٍ عَادَ مَعْقِلَ بْنَ يَسَارٍ فِي مَرَضِهِ فَقَالَ لَهُ مَعْقِلٌ إِنِّي مُحَدِّثُكَ بِحَدِيثٍ لَوْلَا أَنِّي فِي الْمَوْتِ لَمْ أُحَدِّثْكَ بِهِ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَا مِنْ أَمِيرٍ يَلِي أَمْرَ الْمُسْلِمِينَ ثُمَّ لَا يَجْهَدُ لَهُمْ وَيَنْصَحُ إِلَّا لَمْ يَدْخُلْ مَعَهُمُ 

மரண நேரத்தில் தன்னை சந்திக்க வந்த உபைதுல்லாஹ் பின் ஜியாதிடம் மஅகல் பின் யஸார் ரலி அவர்கள் கூறினார்கள் ; “உமக்கு நான் ஒரு ஹதீஸை அறிவிக்கப்போகிறேன். நான் இறக்கும் தறுவாயில் இல்லா விட்டால் அதை நான் உமக்கு அறிவித்திருக்க மாட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்: ஓர் ஆட்சியாளர் முஸ்லிம்களை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பின்னர் அவர்களுக்காக உழைக்காமலும் (அவர்கள்மீது) அக்கறை காட்டாமலும் இருந்தால், அவர்களுடன் அவர் சொர்க்கத்திற்குச் செல்லவே மாட்டார். (முஸ்லிம்: 229)


மக்களுக்கு உழைக்காதவருக்கு இறைவனின் கருணை கிடையாது

مَنْ وَلَّاهُ اللَّهُ عَزَّ وَجَلَّ شَيْئًا مِنْ أَمْرِ الْمُسْلِمِينَ فَاحْتَجَبَ دُونَ حَاجَتِهِمْ وَخَلَّتِهِمْ وَفَقْرِهِمُ احْتَجَبَ اللَّهُ عَنْهُ دُونَ حَاجَتِهِ وَخَلَّتِهِ وَفَقْرِهِ قَالَ فَجَعَلَ رَجُلًا عَلَى حَوَائِجِ النَّاسِ

முஸ்லிம்களின் விவகாரங்களில் ஏதாவது ஒன்றை ஒருவருக்கு பொறுப்புக் கொடுத்து, அவர், மக்களின் தேவைகளை, அவசியத் தேவைகளையும் வறுமைகளையும் (கண்டுகொள்ளாமல்) தடுத்துக் கொண்டால் இவனின் தேவைகளையும் அவசியத் தேவைகளையும் வறுமையையும் அல்லாஹ் கண்டு கொள்ளாமல் தடுத்து விடுவான்  (அபூதாவூத் : 2948)

நல்ல ஆட்சியாளர் மக்களின் தேவைகளை அறிந்து அதை பூர்த்தி செய்பவராக இருக்க வேண்டும்.

تاريخ الطبري عن زيد بن أسلم عن أبيه قال: خرجت مع عمر بن الخطاب رحمه الله إلى حرة واقم، حتى إذا كنا بصرار إذا نار تؤرث، فقال: يا أسلم، إني أرى هؤلاء ركبا قصر بهم الليل والبرد، انطلق بنا فخرجنا نهرول حتى دنونا منهم، فإذا امرأة معها صبيان لها وقدر منصوبة إلى النار وصبيانها يتضاغون، فقال عمر: السلام عليكم يا أصحاب الضوء وكره أن يقول: يا أصحاب النار، قالت: وعليك السلام، قال: أأدنوا؟ قالت: ادن بخير أو دع، فدنا فقال: ما بالكم؟ قالت: قصر بنا الليل والبرد، قال: فما بال هؤلاء الصبية يتضاغون؟ قالت: الجوع، قال: وأي شيء في هذا القدر؟ قالت: ماء أسكتهم به حتى يناموا، الله بيننا وبين عمر! قال: أي رحمك الله، ما يدري عمر بكم! قالت: يتولى أمرنا ويغفل عنا! فأقبل علي، فقال: انطلق بنا، فخرجنا نهرول، حتى أتينا دار الدقيق، فأخرج عدلا فيه كبة شحم، فقال: أحمله علي، فقلت: أنا أحمله عنك، قال: احمله علي، مرتين أو ثلاثا كل ذلك أقول: أنا أحمله عنك، فقال لي في آخر ذلك: أنت تحمل عني وزري يوم القيامة، لا أم لك! فحملته عليه، فانطلق وانطلقت معه نهرول، حتى انتهينا إليها، فألقى ذلك عندها، وأخرج من الدقيق شيئا فجعل يقول لها: ذري علي، وأنا أحرك لك، وجعل ينفخ تحت القدر وكان ذا لحية عظيمة فجعلت أنظر إلى الدخان من خلل لحيته حتى أنضج وأدم القدر ثم أنزلها، وقال: ابغني شيئا، فأتيته بصفيحة فأفرغها فيها، ثم جعل يقول: أطعميهم، وأنا أسطح لك، فلم يزل حتى شبعوا، ثم خلى عندها فضل ذلك، وقام وقمت معه، فجعلت تقول: جزاك الله خيرا! أنت أولى بهذا من أمير المؤمنين! فيقول: قولي خيرا، إنك إذا جئت أمير المؤمنين وجدتني هناك إن شاء الله، ثم تنحى ناحية عنها، ثم استقبلها وربض مربض السبع، فجعلت أقول له: إن لك شأنا غير هذا، وهو لا يكلمني حتى رأيت الصبية يصطرعون ويضحكون ثم ناموا وهدؤوا، فقام وهو يحمد الله ثم أقبل علي فقال: يا أسلم، إن الجوع أسهرهم وأبكاهم، فأحببت ألا أنصرف حتى أرى ما رأيت منهم


உமர் (ரலி) அவர்கள் தங்களுடைய ஆட்சியில் இரவு பொழுதில் மக்களின் குறை, நிறைகளை கண்டரிவதற்காக இரவில் நகர் வழம் வருவதுண்டு.அவர்கள் அவ்வாறு நகரை உலாவுகையில் தலைநகரில் இருந்து மூன்று மைல்  தொலைவில் ஒரு சிரிய கூடாரத்தின் அறுகில் ஒரு தாய் தனது குழந்தைகளுக்காக இரவு உணவு தயாரித்துக் கொண்டு இருந்ததைக் கண்டார்கள். அவர்கள் அந்த பெண்ணிடம் ஸலாம் கூறி அங்கு அருகில் சென்று உற்கார அனுமதி கேட்டார்கள், அவளும் அனுமதிக்க," என்ன சமைக்கின்றீர்கள் " என்று உமர் (ரலி) அவர்கள் கேட்க அதற்கு அந்த பெண்மணி " இந்த பாத்திரத்தில் நான் எதுவும் சமைக்கவில்லை " குழந்தைகள் பசி காரணமாக அழுதார்கள். குழந்தைகளை சமாளிக்கவே நான் இந்த பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அடுப்பில் நெருப்பு மூட்டி அவர்களுக்காக சமைப்பது போல வெரும் சட்டியில் துலாவுகிறேன்.

அவர்களும் அம்மா எங்களுக்காக ஏதோ தயாரிக்கிறாள் என்று சந்தோஷமாக விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள்.அவர்கள் விளையாடிக் கலைத்துப் போனதும் உறங்கி விடுவார்கள்.அது வரைக்கும் நான் சமைப்பது போல அவர்களை நம்ப வைக்கவே பாசாங்கு செய்கிறேன் " என்றாள்.

உமர் (ரலி) அவர்கள் அந்த பெண்ணிடத்தில் " உமரின் ஆட்சியைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் " என்று கேட்டார்கள். அதற்கு அந்த பெண் " நான் இறைவனிடத்தில் உமருக்கு எதிராக முறைப்பாடு செய்வேன் " என்றாள். உமர் (ரலி) அவர்கள் அந்த பெண்ணிடத்தில் " ஒரு வேலை உமருக்கு உங்களுடைய நிலமை பற்றி தெரியாமல் இருக்கலாம் அல்லவா  ? " என்றார்கள். அதற்கு அந்த பெண் அது எப்படி ? அவர் ஆட்சி செய்யும்  குடி மக்களின் நிலமை அவருக்கு தெரியாமல் இருக்கும் ? " என்று அந்த பெண்மணி திரும்பக் கேட்டாள்.

உமர் (ரலி) அங்கிருந்து வெளியேறி தனது உணவுக் கலஞ்சியத்துக்கு சென்று, " ஒரு பொதி நிறைய உணவை எடுத்து தனது தோல்களில் ஏற்றி வை " என தனது பணியாளனை சொன்ன போது, உதவியாளன் " அரசே நீங்கள் ஏன் சுமந்து செல்ல வேண்டும் ? " " கொடுங்கள் நான் சுமந்து வருகிறேன் "என்றான். அதற்கு உமர் (ரலி) " முடியாது " என மறுத்து விட்டார்கள்.

இவ்வாறு முன்று முறை உதவியாளன்  பொதியை தான் சுமப்பதாக விவாதிக்க கோபமடைந்த உமர் (ரலி) " என்னுடைய பாவச் சுமையை தீர்ப்பு வழங்கும் மறுமை நாளில் எனக்காக நீ சுமப்பாயா ? "என்று கேட்டு விட்டு, உணவுப் போதியை தனது தோல்களில்  சுமந்து கொண்டு மீண்டும் முன்று மைல் அந்த பெண்ணின் கூடாரம் இருக்கும்  இடத்தை நோக்கி நடக்கலானார்கள். குடிசையை அடைந்ததும், உமர் (ரலி) அவர்களின் கரங்கலாளேயே நெருப்பு மூட்டி அடுப்பு பற்ற வைத்தார்கள். கொண்டு வந்த உணவை தனது  கரங்களாளேயே சமைத்து குழந்தைகளுக்கும் பரிமாரினார்கள். ஆனால் அந்த பெண்ணுக்கு இத்துனையும் அவளுக்காக செய்தது நாட்டின் தலைவர் உமர் பின் கத்தாப் என்பது தெரியாமல் அவள் " இறைவனின் மீது ஆணையாக  நீங்கள் உமரை விட சிறந்தவர் " என்றாள்.


கூடவே வந்த பணியாளன் " வாருங்கள். மிகவும் இருளாகவும், குளிராகவும்  இருக்கிறது நாம் மாளிகைக்கு விரைவாக திரும்பி விடுவோம் " என்று உமர் (ரலி) அவர்களிடத்தில் சொன்ன போது உமர் (ரலி) அவர்கள் " கொஞ்சம் பொறு, பசியின் காரணமாக அழுத குழந்தைகள் சிரித்து விளையாடி மகிழ்ச்சியாக தூக்கச் சென்ற பின்னரே நான் இங்கிருந்து புரப்படுவேன் " என்றார்கள்.அனைத்தும் முடிந்த பின்னர் மாளிகைக்கு திரும்பிய உமர் (ரலி) அவர்கள் தமது பஜ்ர் தொழுகையில் நாட்டு மக்களின் பசி பஞ்சத்தை போக்குமாறு இறைவனிடத்தில் அழுது மன்றாடி பிரார்த்தனை செய்தார்கள். (தாரீஹுத் தப்ரீ)

சிறந்த ஆட்சியாளர் நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும். நாட்டின் வளத்தையும் பெருக்க வேண்டும். நாடும் நாட்டு மக்களும் செழிப்படையக் காரணமாக இருக்க வேண்டும். நம் நாட்டில் ஆட்சி செய்த இஸ்லாமிய மன்னர்கள் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறார்கள்.

கிபி 1211 ல் இந்தியாவை ஆண்ட மன்னர்களில் ஒருவர் சுல்தான் சம்சுதீன் அல்துமிஷ். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அரசு தலைநகராக தில்லிகா என்ற பெயரிலும் இந்திரப்பிரஸ்தம் என்ற பெயரிலும் டெல்லி இருந்த நேரத்தில் தொடர்ந்து நடைபெற்ற பல்வேறு படையெடுப்புகளாலும்  கொள்கை கூட்டத்தாரின் தாக்குதலாலும் டெல்லி சீரழிந்து அழகொழிந்து காணப்பட்டது. இந்த மன்னர் தான் பாழடைந்து போன டெல்லிக்கு புத்துயிர் அளித்தார். அதனை அழகு படுத்தினார். பல அரண்மனைகளைக் கட்டினார். தொடர்ந்து டெல்லி தலைநகராக அமைய வழி வகையும் செய்தார். இது இவரது வரலாற்று புகழ்மிக்க சாதனை என்றே சொல்ல வேண்டும். மட்டுமல்ல டெல்லியில் தமது சொந்த செலவில் ஒரு பெரிய கல்லூரி ஒன்றை நிறுவி அங்கு அனைத்து சமய மாணவர்களுக்கும் இலவசமாக கல்வி வழங்கினார்.

குடிமக்களுக்கு இந்து முஸ்லிம் என்ற வேறுபாடின்றி அனைவருக்கும் நீதி வழங்குவதில் உறுதியாக இருந்தார். துன்பப்படும் மக்கள் அல்லது அநீதி இழைக்கப்பட்ட குடிமக்கள் உடனடியாக மன்னனின் பார்வையில் படுவதற்காக ஓர் அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி வெள்ளை ஆடையை தவிர வேறு வண்ண ஆடை உடுத்தி மன்னர் முன் வர வேண்டும் என்று உத்தரவிட்டார். வெண்ணிற ஆடைகளையே உடுத்தும் அக்கால மக்களிடையே இந்த வண்ண ஆடை, உடனடியாக இவர்கள் துன்பத்திற்கு உள்ளானோர் என்பதை மன்னனுக்கு உணர்த்துவதாக இருந்தது. அவர்களை உடனடியாக சுல்தான் சம்சுதீன் அல்தூமிஸ் அழைத்து விசாரித்து துயர் நீக்கி நீதி வழங்கினார். அதேபோன்று இவரது அரண்மனை வாயிலில் வெண் சலவைக் கல்லால் செய்த இரண்டு சிங்கங்களை நிறுவியிருந்தார். அவற்றின் கழுத்தில் மணி கட்டப்பட்டிருந்தது. துன்பப்பட்டோர் அநீதி இழைக்கப்பட்டோர் இரவு நேரங்களிலும் கூட அந்த மணியை அசைத்தால் சுல்தான் உடனடியாக எழுந்து வந்து விசாரித்து உதவியும் நீதியும் வழங்கினார் என்ற செய்தி வரலாற்றில் இடம் பெற்றிருக்கிறது.


மங்கோலியர்களின் அழிச்சாட்டியத்திலும் அமைதியாக இருந்த இந்தியா


முஸ்லிம் மன்னர்களின் ஆட்சி காலத்தில் இந்தியாவில் வாழ்ந்த மக்கள் நிம்மதியாகவும் அமைதியாகவும் வாழ்ந்தார்கள். உலகத்தின் பல நாடுகள் அழிந்து கொண்டிருந்த அந்த நேரத்திலும் இந்தியாவில் வாழ்ந்த மக்கள் மட்டும் பாதுகாப்பாக இருந்தார்கள் என்றால் அதற்கு காரணம், அந்த மன்னர்கள் தான். 

மனித குல வரலாற்றில் இவனைப் போன்று இரத்த வெறி பிடித்தவன் எவனுமே இல்லை என்று சொல்லப்படும் கொடியவன் தான் செங்கிஸ்கான். எந்த காரணமும் இன்றி கொலை செய்வதையும் சூறையாடுவதையும் கொள்ளையடிப்பதையும் மனித ரத்தத்தை ஓட்டுவதையும் விளையாட்டாக கருதி கொடூர காட்டுமிராண்டியாக அவனும் அவனுடைய பரம்பரையை சேர்ந்தவர்களும் இருந்தார்கள். அவர்களின் அழிச்சாட்டியத்தால் ஈரான், ஈராக், சிரியா, ஆஸர்பைஜான் போன்ற இஸ்லாமிய குடியரசு நாடுகள் அழிக்கப்பட்டன. பக்தாத் நகரில் நுழைந்து அப்பாசிகளின் கிலாஃபத் ஆட்சியை ஒழித்துக் கட்டினர். லட்சக்கணக்கான முஸ்லிம்கள் காரணமின்றி கொல்லப்பட்டார்கள். ரஷ்யாவும் மத்திய ஐரோப்பாவும் கூட அவர்களின் ரத்த வெறிக்கு இரையானது. அந்த நேரத்தில் பலமுறை இந்தியாவையும் அவர்கள் நெருங்க முற்பட்டார்கள். ஆனால் குத்துபுதீன் ஐபகின் வழிவந்த அடிமை சுல்தான்கள் அவர்களை தடுத்து நிறுத்தி இந்தியாவை பாதுகாத்தனர். இவர்களின் தொடர்ச்சியான தளர்ச்சியில்லாத போராட்ட த்தால் செங்கிஸ்கானையும் அவனது கூட்டத்தினரையும் இந்தியாவில் நுழைய விடாமல் பாதுகாத்தது. அந்த நேரத்தில் உலகில் இந்தியாவை போன்று அமைதியான நாடு வேறு எதுவும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு அந்த மன்னர்களால் இந்தியா பாதுகாக்கப்பட்டது.


பூரண மதுவிலக்குக் கொள்கையின் தந்தை அலாவுத்தீன் கில்ஜி

நாட்டின் வளத்தையும் நாட்டு மக்களின் குடியையும் கெடுப்பதில் மிக முக்கிய பங்கு மதுவிற்கு உண்டு. எனவே தான் இஸ்லாம் அதை தடை செய்திருக்கிறது. நாம் வாழக்கூடிய இந்தியாவில் மதுவை ஒழிக்கமுதன் முதலில் சட்டம் கொண்டு வந்தவர் சுல்தான் அலாவுத்தீன் கில்ஜி. மதுவினால் அன்றாட வாழ்க்கையில் அனுபவப்பூர்வமாக மிகவும் பாதிக்கப்பட்டவராக அவர் இறந்தார். அதனால் மதுவிலக்கு சட்டத்தைக் கொண்டு வருவதற்கு முன்னால் தமது மதுக் கோப்பையைப் பகிரங்கமாக உடைத்து 'இனி மதுவைத் தொடுவதில்லை' என்று சபதம் செய்தார். அத்துடன் மதுவைத் தயாரிப்பதையும், விற்பதையும், அருந்துவதையும் கடும் தண்டனைக்குரிய குற்றமாக ஆக்கினார். மீறுபவர்களைக் கடுமையாகத் தண்டித்து மற்றவர்களை எச்சரித்தார். 

ஆட்சிக் காலத்திலும் அதற்கு முந்திய காலத்திலும் ஏன் இன்றைக்கும் கூட வழிப்பறிக் கொள்ளை என்பது பொதுமக்களுக்கு ஒரு பெரும் சவாலாகவே இருந்து வருகிறது. அன்றைய காலகட்டத்தில் சரியான சாலை வசதிகள், போதிய பாதுகாப்பு இன்மை காரணமாக வழிப்பறிக் கொள்ளைகளும், கொலைகளும் நாட்டில் மிகுதியாக இருந்தன.மக்களுடைய தொல்லைகளைப் போக்குவதற்காகவும், வியாபாரிகள், பயணிகள் பாதுகாப்புக்காகவும் நாட்டின் நெடுஞ்சாலைகளை மேம்படுத்த ஒரு பெரும் திட்டம் தீட்டினார் அலாவுத்தீன் கில்ஜி. அதன்படி புதிய நெடுஞ்சாலைகள் போடப்பட்டன.இவரது ஆட்சி எல்லையும் டெல்லி தொடங்கிக் கன்னியாகுமரி வரை நீண்டு இருந்ததால் நெடுஞ்சாலைகளை உருவாக்குவதற்கான அவசியமும், வசதியும் இவருக்கு ஏற்பட்டது. எனவே சிந்து நாட்டில் இருந்து தெலுங்கானா வரையிலும் மலபார் கடற்கரைப் பிரதேசங்கள் வரையிலும் காஷ்மீரிலிருந்து வங்காளம் வரையிலும் இத்தகைய தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அகலமான நெடுஞ்சாலைகளை இவர் உருவாக்கினார். திருடர்கள் பயம் ஒழிந்தது.

இதைப் பற்றி வரலாற்றாசிரியர்கள் விவரிக்கும் போது பெண் தனியாக பீகாரிலிருந்து பஞ்சாப் வரை கையில் வெள்ளி நாணயங்களை வெளிப்படையாகக் கட்டிக் கொண்டு செல்லக் கூடிய நிலை ஏற்பட்டது. வியாபாரக் கூட்டங்கள் அச்சமின்றி பயணம் செய்தன. களவு என்பதே மறைந்து விட்டது.''

1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி அண்ணல் மகாத்மா காந்தியடிகள் நவகாளி யாத்திரை சென்றார். மதக்கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களைப் பார்த்து விட்டு அவர் சொன்னார்: "நான் சுதந்திரம் கிடைத்ததை ஒப்புக் கொள்ள மாட்டேன். நள்ளிரவில் ஓர் இளம் பெண் நடு வீதியில் எந்தவித பயமுமின்றி சென்று வரும் நாள் என்று வருகிறதோ அன்று தான் சுதந்திரமடைந்த நாளாக ஒத்துக் கொள்வேன்.' அலாவுத்தீன் கில்ஜி காலத்தில் தனியே அரும் பொருள்களோடும் - இரவிலும் போக்குவரத்து செய்து பத்திரமாக - பாதுகாப்பாகத் திரும்பும் நிலைமையிருந்தது என்று பார்க்கும் போது மகாத்மா காந்தியடிகள் கண்ட பரிபூரண சுதந்திரம் என்பது அலாவுத்தீன் கில்ஜியின் காலத்தில் நாட்டில் நிலவியது என்பதும் அதற்கு அவரின் கண்டிப்பான தண்டனை முறைகளே காரணம் என்பதும் நமக்குத் தெளிவாகிறது.


அடிமைகளை விடுவித்த சுல்தான் ஃபைரோஜ்ஷா துக்ளக் (கி.பி. 1351)

அடிமைகள் கல்வியில் பயிற்சி பெற்றுத் திருக்குர்ஆனை முழுவதாக மனப்பாடம் செய்வதற்கும், மார்க்கச் சட்டங்களான பிக்ஹுவை அறிந்து கொள்வதற்கும், தர்க்க சாஸ்திரத்தில் மேம்பாடு அடைவதற்கும் அவர்களைத் தயார் செய்தார். சிலருக்குச் சொற்பொழிவுப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. வேறு சிலர் இராணுவப் பயிற்சிக்குச் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள். இவ்வாறு சுமார் 12 ஆயிரம் அடிமைகள் பல்வேறு தொழில்களுக்கு அனுப்பப்பட்டார்கள். அடிமைகள் நலனுக்காகவே ஒரு துறை ஏற்படுத்தப்பட்டது. ஓர் அமைச்சரும் காசாளரும் கணக்காளரும் இதற்காகவே நியமிக்கப்பட்டனர்.இவர் நாட்டின் வேளாண்மை முன்னேற்றத்தில் தீவிர அக்கறை காட்டினார். தோ ஆப் பிரதேசத்தில் மட்டும் 52 மாவட்டங்கள் இருந்தன. அவற்றில் தீவிர விவசாயம் செய்ய இவர் மக்களை ஊக்கப்படுத்தினார். நீர் மேலாண்மையில் அதிகக் கவனம் செலுத்தினார். இவர் ஃபதஹ்கான் அணைக்கட்டு மஹர்பால்பூர் அணைக்கட்டு, பால்ஜிபா அணைக்கட்டு முதலிய பெரிய அணைக்கட்டுகளைக் தவிர சிறிய, சிறிய நீர்ப் பாசனக் கால்வாய்களையும் உருவாக்கினார். அவர் உருவாக்கிய கால்வாய்களின் எண்ணிக்கை ஐம்பதுக்கும் மேல். இதனால் கோதுமை முதலிய உணவுப் பண்டங்களின் விலை எப்போதும் மலிவாகவும் ஏழைகளுக்கு எளிதில் கிடைத்தது. மட்டுமல்ல நாற்பது மசூதிகள், முப்பது இலவச மருத்துவமனைகள், நூறு பொதுக் குளியல் கூடங்கள், நூறு பாலங்கள் ஆகியவற்றைக்கட்டினார். முப்பது ஏரிகளை உருவாக்கினார். நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் என்பதே இருக்கக் கூடாது என்பதில் தீவிரமாக இருந்தார். எனவே வேலை வாய்ப்புத் தொடர்பான அலுவலகத்தை அமைத்தார். அதில் பதிவு செய்து கொண்டவர்களை வரச் செய்து விசாரித்து உரிய வேலை கிடைக்கச் செய்தார். தொழிலாளர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கும் திட்டத்தையும் இவர் அப்போதே தொடங்கி வைத்தார்.

இவ்வாறு நாட்டை ஆண்ட முஸ்லிம் மன்னர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாதவர்களாக இருந்தாலும் நாட்டின் வளர்ச்சிக்காகவும் நாட்டு மக்களின் வாழ்வாதாரத்திற்காகவும் நாட்டின் செழிப்பிற்காகவும் பல்வேறு திட்டங்களையும் பணிகளையும் மேற்கொண்டார்கள். குடியரசு நாடாக இருக்கிற நம் நாட்டின் ஆட்சியாளர்கள் அந்த மன்னர்களிடமிருந்து பாடம் கற்க வேண்டும்.



 



1 comment: