அல்லாஹ்வின் மகத்தான அருளால் இஸ்லாமிய ஆண்டின் மூன்றாவது மாதமான ரபீவுல் அவ்வல் மாதத்தை அடைய இருக்கிறோம். மாதங்களில் ரமலான் என்றவுடன் குர்ஆன் நம் ஞாபகத்திற்கு வருவதைப் போல, துல்ஹஜ் என்றவுடன் இப்ராஹீம் நபியின் குடும்பம் நம் நினைவுக்கு வருவதைப் போல, முஹர்ரம் என்றவுடன் இஸ்லாமிய வரலாற்றின் மாபெரும் அத்தியாயமான ஹிஜ்ரத் நம் சிந்தனைக்கு வருவதைப் போல, ரஜப் என்றவுடன் நபி ஸல் அவர்கள் மேற்கொண்ட அற்புத பயணமான மிஃராஜ் நம் எண்ணத்தில் உதிப்பதைப் போல, ரபீவுல் அவ்வல் என்று சொன்னவுடன் நம் எல்லோரின் மனதிலும உள்ளத்திலும் சிந்தனையிலும் எண்ணத்திலும் வருவது நபி ஸல் அவர்களின் அதிசயமான பிறப்பும், அவர்களின் அற்புதமான வாழ்வும் அவர்களின் படிப்பினை தரும் மரணமும் தான். நபி ஸல் அவர்களின் பிறப்பு அவர்களின் இறப்பு அவர்களின் பரிசுத்தமான வாழ்க்கை என நபியோடு தொடர்பு கொள்கிற அத்தனையும் அற்புதமானது,ஆச்சரியமானது, வியப்பானது.
உலகில் கோடிக்கணக்கானோர் பிறந்தார்கள். பிறக்கிறார்கள். உலக அழிவு
நாள் வரை பிறந்து கொண்டே இருப்பார்கள். ஆனால் மற்றவர்களின் பிறப்பும் மனிதருள்
மாணிக்கம் மாநபி ஸல் அவர்களின் பிறப்பும் ஒன்றல்ல. உலகில் அனைவரும் பிறந்த பிறகு
அறியப்படுவார்கள். ஆனால் நபி ஸல் அவர்கள் பிறப்பதற்கு முன்பே அறியப்பட்டு
விட்டார்கள். உலகில் ஒருவர் பிறந்த பிறகு அவரை வளர்ப்பதற்காக இந்த உலகம்
தயாராகும். ஆனால் நபி ஸல் அவர்களின் பிறப்பிற்காக இந்த உலகத்தையே அல்லாஹ் தயார்
செய்து வைத்து விட்டான். நபி ஸல் அவர்களின் பிறப்பை காரணமாக வைத்து இந்த உலகில்
அல்லாஹ் பல்வேறு அதிரடியான மாற்றங்களை நிகழ்த்தினான். பொதுவாக ஒருவரின் வரலாறு
அவரின் பிறப்பிலிருந்து தொடங்குகிறது. ஆனால் நபி ஸல் அவர்களின் வரலாறு அவர்களின்
பிறப்புக்கு முன்பே தொடங்கி விட்டது.அந்த வகையில் அவர்களின் பிறப்பே ஒரு அதிசயம்
தான். அந்த அதிசய பிறப்பையும் அதை ஒட்டி இந்த உலகில் நடந்த அதிசயங்களையும் தான்
இந்த ஜும்ஆவின் வழியாக நாம் பார்க்க இருக்கிறோம்.
பிறக்கும் முன்பே அறியப்பட்டார்கள்
اَلَّذِيْنَ
اٰتَيْنٰهُمُ الْكِتٰبَ يَعْرِفُوْنَهٗ كَمَا يَعْرِفُوْنَ اَبْنَآءَهُمْ وَاِنَّ
فَرِيْقًا مِّنْهُمْ لَيَكْتُمُوْنَ الْحَـقَّ وَهُمْ يَعْلَمُوْنَؔ
எவர்களுக்கு
நாம் வேதம் கொடுத்திருக்கிறோமோ அவர்கள் தங்கள் பிள்ளை களை(ச் சந்தேகமற) அறிவதைப்
போல் அவரை அறிவார்கள். ஆனால், நிச்சயமாக அவர்களில் ஒரு பிரிவினர்
நன்கறிந்து கொண்டே (இந்த) உண்மையை மறைக்கின்றனர். (அல்குர்ஆன் : 2:146)
இது எவ்வளவு
பெரிய உண்மை என்பதை வரலாற்றைப் வாசிக்கிற எல்லோரும் அறிவார்கள்.
وَيُرْوَى
أَنَّ عُمَرَ قَالَ لِعَبْدِ اللَّهِ بْنِ سَلَامٍ: أَتَعْرِفُ مُحَمَّدًا ﷺ كَمَا
تَعْرِفُ وَلَدَكَ ابْنَكَ، قَالَ: نَعَمْ وَأَكْثَرَ
அப்துல்லாஹ் பின்
ஸலாம் ஒரு யூதப் பண்டிதராக இருந்தவர். வேத ஞானங்களைக் கரைத்துக் குடித்தவர். நபி ஸல்
அவர்கள் மதினாவுக்கு வந்த போது இஸ்லாத்தை தழுவினார். உமர் (ரலி) அவர்கள் ஒருமுறை
வேதக்காரர்களாகிய நீங்கள் உங்கள் மகனை அறிவதைப் போல இந்த நபியை நன்கு அறிவீர்களா? என்று கேட்டதற்கு ஆம்.. அதை விட அதிகமாகவே அறிவோம் என்று கூறினார்கள். (இப்னு கஸீர்)
عَنْ عُمَرَ -
رَضِيَ اللَّهُ عَنْهُ - أنَّهُ سَألَ عَبْدَ اللَّهِ بْنَ سَلامٍ عَنْ رَسُولِ
اللَّهِ ﷺ فَقالَ: أنا أعْلَمُ بِهِ مِنِّي بِابْنِي، قالَ: ولِمَ ؟ قالَ: لِأنِّي
لَسْتُ أشُكُّ في مُحَمَّدٍ أنَّهُ نَبِيٌّ وأمّا ولَدِي فَلَعَلَّ والِدَتَهُ
خانَتْ. فَقَبَّلَ عُمَرُ رَأسَهُ
உமர் ரலி
அவர்களிடம் அப்துல்லாஹ் பின் ஸலாம் கூறினார்கள் ; நான் என் மகனை அறிந்திருப்பதை விட நபியை நான் நன்கு அறிந்திருந்தேன்.
எப்படி என்று கேட்ட போது, அவர்கள் நபி என்பதில் எனக்கு ஒரு துளி சந்தேகமும்
இருந்ததில்லை. ஆனால் இதே அளவான நம்பிக்கை என் மகனின் மீது எனக்கு இல்லை. ஏனெனில்
என் மனைவி எனக்கு மோசடி செய்திருக்கலாம் என்று கூறினார்கள். இதைக் கேட்ட உமர் ரலி
அவரின் தலையில் முத்தமிட்டார்கள். (தப்ஸீர் ராஸி)
அப்துல்
முத்தலிப் அவர்களைப் பார்த்து வேதப் பண்டிதர் கூறியது
عن ابن عباس ،
عن أبيه ، قال : قال عبد المطلب : « قدمت اليمن في رحلة الشتاء ، فنزلت على حبر
من اليهود ، فقال لي رجل من أهل الزبور : يا عبد المطلب : أتأذن لي أن أنظر
إلى بدنك ؟ فقلت : انظر ما لم يكن عورة . قال : ففتح إحدى منخري فنظر فيه ،
ثم نظر في الآخر ، فقال : أشهد أن في إحدى يديك ملكا ، وفي الأخرى نبوة ،وأرى
ذلك في بني زهرة ، فكيف ذلك ؟ فقلت : لا أدري . قال : هل لك من شاعة ؟ قال :
قلت : وما الشاعة ؟ قال : زوجة . قلت : أما اليوم فلا . قال : إذا قدمت فتزوج فيهن
. فرجع عبد المطلب إلى مكة ، فتزوج هالة بنت وهب بن عبد مناف ، فولدت له : حمزة ،
وصفية . وتزوج عبد الله بن عبد المطلب ، آمنة بنت وهب ، فولدت رسول الله صلى الله
عليه وسلم
நபியின் பாட்டனார் அப்துல் முத்தலிப் அவர்கள் கூறுகிறார்கள் ;
நான் ஏமனில்
தங்கிருந்த போது ஒரு வேதப் பண்டிதர் என்னிடத்தில் வந்து நான் உங்கள் உடலை பார்க்க
அனுமதிப்பீர்களா என்று கேட்டார். மறைவிடத்தைத் தவிர மற்ற பகுதிகளை விரும்பினால்
பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொன்னேன்.என் உடல் அமைப்பை ஆராய்ந்து விட்டு,
“அப்துல் முத்தலிபே! உமது ஒரு கையில்
அரசாட்சியையும் மறு கையில் நபித்துவத்தையும் நான் காண்கிறேன். அது பனூ ஸஹ்ரா
குடும்பத்திலிருந்து ஏற்படலாம் என்று கருதுகிறேன்” என்றார். “அது எப்படி?” என்று நான் கேட்டேன்.“எப்படி என்று தெரியாது. ஆனால் இது நடக்கும்.
உமக்குத் திருமணம் ஆகி விட்டதா? என்று
கேட்டார். “தற்போது இல்லை என்று கூறினேன். “அப்படியானால்
நீர் ஊர் திரும்பியதும் அந்தக் குடுபத்தில் ஒரு பெண்ணை மணமுடித்துக் கொள்ளும்.”
என்று கூறினார்.
அப்துல்
முத்தலிப் அவர்கள் மக்கா திரும்பி ஹாலா பின்த் வஹ்ப் என்ற பெண்ணைத் திருமணம்
செய்து கொண்டார்கள். அவர்களின் மகனான அப்துல்லாஹ் அவர்கள் ஆமினா பின்த் வஹ்ப்
அவர்களை திருமணம் செய்தார்கள். அவர்கள் அந்த பனூ ஸஹ்ரா குடும்பத்தில் உள்ளவர் தான்.
அந்த பரிசுத்த தம்பதிகளுக்குத் தான் மாநபி ஸல் அவர்கள் பிறந்தார்கள்.
நபி ஸல் அவர்கள் பிறந்த அன்று
فلمّا أصبح
جاء إلى نادي قريش فقال: هل وُلد فيكم الليلة مولود؟ قالوا: قد ولد لعبد الله بن
عبد المطّلب ابن في هذه الليلة، قال: فاعرضوه عليَّ. فمشوا إلى باب آمنة، فقالوا
لها: أخرجي ابنك، فأخرجته في قماطه، فنظر في عينه وكشف عن كتفيه، فرأى شامة سوداء
وعليها شعيرات، فلمّا نظر إليه اليهودي وقع إلى الأرض مغشياً عليه، فتعجّبت منه
قريش وضحكوا منه.
فقال: أتضحكون
يا معشر قريش؟ هذا نبي السيف، ليبيرنكم، وذهبت النبوّة عن بني إسرائيل إلى آخر
الأبد. وتفرّق الناس يتحدّثون بخبر اليهودي».
மக்காவில்
வாழ்ந்த ஒரு யூதன் , நபி ஸல் அவர்கள் பிறந்த அன்றிரவு
குறைஷிகளின் கூட்டத்தில் வந்து இன்றிரவு உங்களில் யாருக்காவது ஒரு குழந்தை
பிறந்துள்ளதா? என்று கேட்க,
அப்துல் முத்தலிபின் மகன் அப்துல்லாஹ்விற்கு ஒரு ஆண்குழந்தை பிறந்திருப்பதாக தெரிவித்தனர்.
அந்த குழந்தையின் முதுகில் நபித்துவ முத்திரையின் அடையாளம் இருப்பதைக் கண்டு
மயக்கம் போட்டு விழுந்தான். மயக்கம் தெளிந்து எழுந்து கூறினான்;
அல்லாஹ்வின் மீது
ஆணையாக! நபித்துவம் பனூ இஸ்ரவேலர்களிடமிருந்து எடுபட்டு விட்டது. குறைஷிகளே!
உங்களுக்கு ஒரு மகத்தான ஆட்சி அதிகாரம் கிடைக்கப்போகிறது; அந்த செய்தி கிழக்கிலிருந்து மேற்குவரை பரவப் போகிறது. (தலாயிலுன் நுபுவ்வா)
ஆதம் அலை கொடுத்த மஹர்
و لما ظهر آدم
لمع نور نبينا مُحَمَّدٍ فِي جَبينِهِ، ثُمَّ خَلَقَ مِن ضلعه الأيسر حواء، فأراد
مَدَّ يده إليها؛ فَكَفَّتْه الملائكة عنها حتَّى يُصلِّي على نبينا ثلاثَ
مَرَّاتٍ، وفي رواية: عشرين (الامام قسطلاني في المواهب اللدنية)
ஹவ்வா அலை அவர்கள் படைக்கப்பட்டார்கள். அவர்களைப் பார்த்தவுடன்
அவர்களைத் தொடுவதற்கு ஆதம் அலை அவர்கள் முற்பட்ட போது வானவர்கள் அவர்களைத் தடுத்து
நிறுத்தி நபி ஸல் அவர்களின் மீது மூன்று முறை ஸலவாத் சொல்லுங்கள். அதற்குப் பிறகு
நெருங்குங்கள் என்று கூறினார்கள். (அல் மவாஹிபுல் லதுன்னிய்யா)
ஆதம் அலை அவர்களுக்கு கிடைத்த மன்னிப்பு
قَالَ كَعْبُ
الأحبار (۲) : لما أراد الله أنْ
يَخْلُقَ مُحَمَّدًا؛ أَمْرَ جِبْرِيلَ أَنْ يأتيه بالطينة التي هي قلب الأرض،
فهبط في ملائكة الفردوس
وملائكة
[الرفيق ] ) الأعلى، فقبضها مِن مَحَلِّ قَبرِهِ المُكرَّم، أي وأصلها من محل
الكعبة المُشرفة، فوجهها الطُّوْفانُ إلى هناك، فَعُجِنَتْ بماء التسنيم، ثُمَّ
غُمِسَتْ في أنهار الجَنَّةِ، حتى صارت كالدرة البيضاء، ثمَّ طافت بها الملائكة
حول العرش والكرسي و في السماوات والأرض والبحار، فعرفت الملائكة وجميعُ الخَلْقِ
سَيِّدَنا مُحَمَّدًا قبل أن تعرف آدم و رأى آدم نورَ مُحَمَّدٍ في سرادق (۲۸) العرش، واسمه
مكتوبا عليه، مقرونا باسمه تعالى فسأل الله عنه .. فقالَ لَهُ رَبُّهُ: هذا
النَّبِيُّ مِن ذُرِّيَّتِكَ، اسْمُهُ فِي السماء أحمد، وفى الأرضِ مُحَمَّدٌ ،
ولولاه ما خلقتك ولا خَلقتُ سماء ولا أرضًا، و سأله أن يغفر له مُتوسّلًا إِلَيهِ
بِمُحَمَّدٍ ، فغفر له . (طبراني في المعجم الاوسط)
அல்லாஹு ரப்புல்
ஆலமீன் நபி ஸல் அவர்களை படைக்க நாடிய போது பூமியிலிருந்து மண்ணை எடுத்து வரும் படி
ஜிப்ரீல் அலை அவர்களுக்கு உத்தரவிட்டான். அவர்கள் தன்னுடன் வானவர்களை அழைத்துக்
கொண்டு பூமிக்கு வருகை தந்து தற்போது நபியவர்கள் அடக்கம் செய்யப்பட்டிருக்கிற ரவ்ளாவிலிருந்து
மண்ணை எடுத்துச் சென்றார்கள். சுவனத்து நீரான தஸ்னீமுடன் சேர்த்து அது
குழைக்கப்பட்டது. பின்பு சுவனத்து நதிகளில் அது நணைக்கப்பட்டது. அதை அர்ஷ் மற்றும்
குர்ஸீ, வானம், பூமி, கடல் போன்ற இடங்களுக்கு அதைக் கொண்டு சென்றார்கள். அப்போது
அனைத்து வானவர்களும் இப்படி ஒரு நபி வரப் போகிறார் என்பதை அறிந்து கொண்டார்கள். அர்ஷில்
அல்லாஹ்வுடைய பெயரோடு முஹம்மது என்ற பெயர் இணைத்து எழுதப்பட்டிருப்பதை ஆதம்
நபியவர்கள் பார்த்தார்கள். அது குறித்து அல்லாஹ்விடம் கேட்ட போது உங்கள்
சந்ததிகளில் வரக்கூடிய ஒரு நபியாகும். வானுலகத்தில் இவர் பெயர் அஹ்மது. பூமியில்
அவர்களது பெயர் முஹம்மது. அவர்கள் இல்லையென்றால் உங்களையும் வானத்தையும் இந்த
பூமியையும் நான் படைத்திருக்க மாட்டேன் என்று அல்லாஹ் சொன்னான். அப்போது அந்தப்
பெயரை அல்லாஹ்விடத்தில் வஸீலாவாக வைத்து அவனிடத்தில் ஆதம் நபி அலை அவர்கள்
மன்னிப்பு கேட்டார்கள். அல்லாஹ்விடத்தில் மன்னிப்பை பெற்றார்கள். (மவ்லித் லி
இப்னி ஹஜர்)
நபியின்
பிறப்புக்காக அவர்களின் பரம்பரையை அல்லாஹ் தூய்மைப்படுத்தி பாதுகாத்தான்
நபி ஸல் அவர்கள் பிறக்க வேண்டும் என்பதற்காகவே அல்லாஹ் அவர்களின் மொத்த
பரம்பரையையும் பாதுகாத்து விட்டான். அவர்களின் பரம்பரையில் யாரும் இணை வைத்ததில்லை.
தவறான திருமணத்தின் மூலம் சேர்ந்ததில்லை. அறியாமைக் காலத்து மோசமான நடைமுறைகள்
அவர்களிடம் இருந்ததில்லை.
وروى ابن سعد
وابن عساكر عن الكلبي رحمه الله تعالى قال: كتبت للنبي صلى الله عليه وسلم خمسمائة
أم فما وجدت فيهن سفاحا ولا شيئا من أمر الجاهلية.
قوله خمسمائة
أم: يريد الجدات وجدات الجدات من قبل أبيه وأمه
கலபீ ரஹ்
அவர்கள் கூறுகிறார்கள் ; நபி ஸல் அவர்களின்
பரம்பரையில் சுமார் 500 தாய்மார்களின் (நபி ஸல் அவர்களின் தாய்,
அவர்களின் தாயின் தாய். இவ்வாறு) வரலாறுகளை நான் எழுதியிருக்கிறேன். அவர்களில் யாரிடத்திலும் தவறான நடத்தையோ
அறியாமைக் காலத்து பழக்கமோ இருந்ததில்லை.
وَعَنِ ابْنِ
عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ " كَانَتْ رَوْحُهُ نُورًا بَيْنَ يَدَيِ
اللَّهِ تَعَالَى، قَبْلَ أَنْ يَخْلُقَ آدَمَ بِأَلْفَيْ عَامٍ، يُسَبِّحُ ذَلِكَ
النُّورُ، وَتُسَبّحُ الْمَلَائِكَةُ بِتَسْبِيحِهِ، فَلَمَّا خَلَقَ اللَّهُ آدَمَ،
أَلْقَى ذَلِكَ النُّورَ فِي صُلْبِهِ "، فَقَالَ رَسُولُ اللَّهِ
صلي الله عليه وسلم: " فَأَهْبَطَنِي اللَّهُ إِلَى الْأَرْضِ فِي صُلْب
آدَمَ، وَجَعَلَنِي فِي صُلْبِ نُوحٍ، وَقَذَفَ بِي فِي صُلْبِ إِبْرَاهِيمَ،
ثُمَّ لَمْ يَزَلِ اللَّهُ تَعَالَى يَنْقُلُنِي مِنَ الأَصْلَابِ الْكَرِيمَةِ،
وَالْأَرْحَام الطَّاهِرَةِ، حَتَّى أَخْرَجَنِي مِنَ أَبَوَيَّ، لَمْ يَلْتَقِيَا
عَلَى سِفَاحٍ قَطُّ (الشفا باحوال المصطفي)
ஆதம் அலை
அவர்களைப் படைப்பதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அன்னாரின் ஒளி அல்லாஹ்வை
துதித்த வண்ணம் இருந்தது. ஆதமைப் படைத்து அவர்களின் முதுகந்தண்டில் அந்த நூரை
செலுத்தினான். அதன் பிறகு அதன் நிலையை அண்ணலாரே விவரிக்கிறார்கள்: ஆதமின்
முதுகந்தண்டின் மூலம் அல்லாஹ் என்னை புவியில் இறக்கினான். அதன் பின் நூஹ் அலை, இப்றாஹீம் அலை இப்படியாக சங்கைக்குரியவர்களின் முதுகந்தண்டுகளிலும்
பரிசுத்த கருவறைகளிலும் இறக்கி. பின்னர் என் பெற்றோர்கள் மூலம் என்னை அவதரிக்கச்
செய்தான். அவர்கள் தீய நடத்தை உள்ளவர்களாக ஒருபோதும் இருந்ததில்லை. (அஷ்ஷிஃபா)
عَنْ أَبِي
هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ، قَالَ «بُعِثْتُ مِنْ خَيْرِ قُرُونِ بَنِي آدَمَ، قَرْنًا فَقَرْنًا،
حَتَّى كُنْتُ مِنَ القَرْنِ الَّذِي كُنْتُ فِيهِ
ஆதமின்
சந்ததிகளில் தலைமுறை தலைமுறையாக நான் சிறந்த தலைமுறை வழியே (மரபணுக்களில்
பாதுகாக்கப்பட்டு வந்து இப்போது) நான் தோன்றியிருக்கும் (இந்தச்) சிறந்த
தலைமுறையில் தோன்றி இறைத் தூதராக்கப்பட்டுள்ளேன். (புகாரி: 3557)
عن عبد الله
بن عباس قال قُلتُ: يا رسولَ اللهِ، أين كُنتَ وآدَمُ في الجَنَّةِ؟ قال: كُنتُ في
صُلبِه، وأهبِطُ إلى الأرضِ وأنا في صُلبِه، ورَكِبتُ السَّفينةَ في صُلبِ أبي
نوحٍ، وقُذِفتُ في النّارِ في صُلبِ أبي إبراهيمَ، لم يَلتَقِ لي أبَوانِ قَطُّ
على سِفاحٍ، لم يَزَلْ يَنقُلُني من الأصلابِ الطاهِرَةِ إلى الأرحامِ النَّقيَّةِ
مُهذَّبًا، لا تَتَشعَّبُ شُعبتانِ إلّا كُنتُ في خَيرِهما تاريخ دمشق
ஆதம் நபி அலை
அவர்கள் சுவனத்தில் இருந்த போது நீங்கள் எங்கிருந்தீர்கள் என்று இப்னு அப்பாஸ் ரலி
அவர்கள் கேட்ட போது, நான் அவர்களின் முதுகந்தண்டில் இருந்தேன். நூஹ் நபி அலை
அவர்கள் கப்பலில் பயணித்த போது அவர்களின் முதுகந்தண்டில் இருந்தேன். இப்ராஹீம் நபி
அலை அவர்கள் நெருப்பில் போடப்பட்ட போது அவர்களின் முதுகந்தண்டில் இருந்தேன். எனது
தாய் - தந்தை இருவரும் அறியாமை கால திருமண முறையை சந்தித்ததில்லை. தூய்மையான
முதுகந்தண்டிலிருந்து பரிசுத்தமான கருவறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் என்னை
இறைவன் கொண்டு வந்து கொண்டேயிருந்தான். இரு பிரிவினர் தோன்றினால் அவ்விரண்டில்
சிறந்த பிரிவினரில் நானிருந்தேன். (தலாயிலுன் நுபுவ்வா)
நபியின் பிறப்புக்காக அவர்களின் தந்தையை அல்லாஹ் பாதுகாத்தான்
عن عبد الله
بن عباس رضي الله عنه أنه قال: ".. كان عبد المطلب بن هاشم نذر إن توافى له
عشرة رهط (أي أعطاه الله عشرة أولاد) أن ينحر أحدهم، فلما توافى له عشرة، أقرع
بينهم أيهم ينحر (يذبح)، فطارت القرعة على عبد الله بن عبد المطلب والد رسول الله
صلى الله عليه وسلم، وكان أحب الناس إلى عبد المطلب، فقال عبد المطلب: اللهم هو أو
مائة من الإبل، ثم أقرع بينه وبين الإبل، فطارت القرعة على المائة من الإبل".
(سيرة ابن هشام)
குறைஷிகள்
நபிகள் நாயகம் ஸல் அவர்களின் பாட்டனார்
அப்துல் முத்தலிபிடம் தங்களின் சந்ததியினரையும் செல்வத்தையும் குறித்து பெருமையடித்துக்
கொண்டிருந்தனர். அப்போது அப்துல் முத்தலிப், தனக்கு
பத்து ஆண் மக்களை அல்லாஹ் கொடுத்தால் அவர்களில் ஒருவரை அறுத்துப் பலியிடுவதாக
நேர்ச்சை செய்து கொண்டார். அவர் விரும்பியது நடந்தது. அவருக்கு பத்து ஆண்
மக்கள் பிறந்தனர். அவர்களில் ஒருவர் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தகப்பனார்
அப்துல்லாஹ் ரலி அவர்கள்.
அப்துல்
முத்தலிப் தனது நேர்ச்சையை நிறைவேற்ற நாடிய போது தனது பிள்ளைகளிடையே சீட்டுக்
குலுக்கிப் போட்டார். அதில் அப்துல்லாஹ் ரலி அவர்களின் பெயர் வந்தது.பத்து
மக்களில் அவரே அப்துல் முத்தலிப் அவர்களுக்கு மிகவும் விருப்பமானவர். இருந்தாலும்
வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். என்ன செய்வது என்று யோசித்தார். அவருக்குப்
பகரமாக ஒட்டகத்தை அறுத்து பலியிடலாம் என்று அனைவரும் ஆலோசனை கூறினர். அப்துல்லாஹ்வா
அல்லது அவருக்கு ஈடாக பத்து ஒட்டகமா? எனச் சீட்டுக்
குலுக்கி போட்ட போது அப்துல்லாஹ் ரலி அவர்களின் பெயரே அதில் வந்தது. அதனால் ஒட்டகங்களின்
எண்ணிக்கையை இருமடங்காக்கினர். மீண்டும் சீட்டுக் குலுக்கிப் போட்ட போதும் அவர்களின்
பெயரே திரும்பவும் வந்தது. ஆகவே ஒட்டகங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தினர்.
இவ்வாறு தொடர்ந்து சீட்டுக் குலுக்கிப் போட்டதில் அப்துல்லாஹ் ரலி அவர்களின் பெயரே
அதில் வரவும் ஒட்டகங்களின் எண்ணிக்கை நூறை எட்டியது. ஆப்போது தான் சீட்டில்
ஒட்டகங்களின் பெயர் வந்தது. அப்துல் முத்தலிப் தனது மகன் அப்துல்லாஹ் வுக்குப் பகரமாக
அந்த ஒட்டகங்களை அறுத்தார். (ஸீரத்து இப்னு ஹிஷாம்)
மாநபியின் பிறப்புக்காகவே அல்லாஹ் இஸ்மாயீல் அலை அவர்களையும் பாதுகாத்தான்
إن للنبي محمد
صلى الله عليه وآله وسلم بركة على أبويه إسماعيل بن إبراهيم وعبد الله بن عبد
المطلب، فقد كانت نجاتهما من الذبح بإذن الله بمعجزة، وذلك حتى يخرج من نسلهما
رسول الله سيد الخلق، فدى الله تعالي إسماعيل بذبح عظيم، قال تعالى:
«وَفَدَيْنَاهُ بِذِبْحٍ عَظِيمٍ» [الصَّافات:107]، وكانت نجاة عبد الله من الذبح
آية أيضا، حيث كان سيذبح في وفاء عبد المطلب بنذره، فألهم الله القبائل أن
تفديه بمائة ناقة، فلما كبر وتزوج آمنة بنت وهب، أنجبا محمدا عليه الصلاة
والسلام، فهو ابن الذبيحين
நபி பிறக்க வேண்டும் என்பதற்காகவே அறுக்கப்பட இருந்த அவர்களின்
தந்தை அப்துல்லாஹ் ரலி அவர்களை அல்லாஹ் பாதுகாத்தான். அவருக்குப் பகரமாக
ஒட்டகங்களை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை அவர்களுக்கு கொடுத்து அதன் மூலம்
அவர்களின் தந்தையின் ஆயுளை நீட்டித்தான்.
இஸ்மாயீல் நபி அலை அவர்களின் சந்ததியில் தான் நபி ஸல் அவர்கள்
வர வேண்டும் என்று முடிவெடுத்தான். எனவே அவர்களும் அறுக்கப் படுவதிலிருந்து
பாதுகாக்கப்பட்டார்கள். நபி ஸல் அவர்களின் பிறப்புக்காகவே அவ்விருவரும்
பாதுகாக்கப்பட்டதாக சூஃபியாக்கள் கூறுகிறார்கள்.
பலியிடப்பட்ட இருவரின் மகன்
- أَنا ابنُ
الذَّبيحينِ [يعني حديث: حضَرْنا مجلِسَ مُعاويةَ بنِ أبي سُفْيانَ، فتَذاكَرَ
القَومُ إسْماعيلَ وإسْحاقَ بنَ إبْراهيمِ، فقالَ بَعضُهم: الذَّبيحُ إسْماعيلُ،
وقالَ بَعضُهم: بل إسْحاقُ الذَّبيحُ، فقالَ مُعاويةُ: «سَقَطْتُم على الخَبيرِ،
كنّا عندَ رَسولِ اللهِ ﷺ، فَأتاهُ أعْرابيٌّ، فقالَ: يا رَسولَ اللهِ، خلَّفْتُ
البِلادَ يابِسةً، والماءَ يابِسًا، هلَكَ المالُ وضاعَ العيالُ، فعُدْ عليَّ بما
أفاءَ اللهُ عليكَ يا ابنَ الذَّبيحَينِ، قالَ: فتبسَّمَ رَسولُ اللهِ ﷺ ولم
يُنكِرْ عليه، فقُلْنا: يا أميرَ المؤمِنينَ، وما الذَّبيحانِ؟ قالَ: إنَّ عبدَ
المُطلَّبِ لمّا أمَرَ بحَفْرِ زَمْزمَ نذَرَ للهِ إنْ سهَّلَ اللهُ أمْرَها أنْ
يَنحَرَ بَعضَ ولَدِه، فأخْرَجَهم، فأسْهَمَ بيْنَهم، فخرَجَ السَّهمُ لعَبدِ
اللهِ، فأرادَ ذَبْحَه، فمنَعَه أخْوالُه من بَني مَخْزومٍ، وقالوا: أَرْضِ
ربَّكَ، وافْدِ ابنَكَ، قالَ: ففَداه بمائةِ ناقةٍ، قالَ: فهو الذَّبيحُ،
وإسْماعيلُ الثاني».]
நபி ஸல் அவர்களை
சந்திக்க கிராமவாசி ஒருவர் வந்தார். அல்லாஹ்வின் தூதர் அவர்களே எங்கள் ஊர்
வறட்சியாக இருக்கிறது. தண்ணீர் இல்லாமல் பஞ்சம் ஏற்பட்டு இருக்கிறது. எங்கள்
செல்வங்களும் குடும்பங்களும் அழிந்து கொண்டிருக்கிறது. எனவே பலியிடப்பட்ட இருவரின்
மகனே உங்களுக்கு அல்லாஹ் அளித்த செல்வங்களில் இருந்து எனக்கு கொடுத்து உதவுங்கள்
என்று கூறினார். அந்த வார்த்தையைக் கேட்டவுடன் மாநபி ஸல் அவர்கள் சிரித்தார்கள்.
இந்த செய்தியைச் சொன்ன முஆவியா ரலி அவர்களிடம் பலியிடப்பட்ட இருவர் யார் என்று
மக்கள் கேட்டார்கள் அப்போது அவர்கள் கூறினார்கள் ; நபியின் பாட்டனாரான அப்துல் முத்தலிப் அவர்கள்
பலியிட இருந்த தன்னுடைய மகன் அப்துல்லாஹ் ரலி அவர்களுக்கு பகரமாக 100 ஒட்டகைகளைக்
கொடுத்தார். அந்த வகையில் மாநபியின் தந்தை பலியிடப்பட்டவர். பலியிடப்பட்ட இரண்டாவது
நபர் இஸ்மாயில் அலை அவர்கள். (ஹாகிம்)
நபி ஸல் அவர்களின்
பிறப்புடன் அவர்கள் வந்த வேலை முடிந்து விட்டது
ولم يلبث أبوه
عبد الله أن توفي بعد أن حملت آمنة وترك هذه النسمة المباركة، ودفن بالمدينة عند
أخواله بني عدي بن النجار، وكأن القدر يقول له: قد انتهت مهمتك في الحياة,
وهذا الجنين الطاهر يتولى الله عز وجل بحكمته ورحمته تربيته وتأديبه وإعداده
لإخراج البشرية من الظلمات إلى النور.
பலியிடும் இந்த
சம்பவத்திற்குப் பிறகு அப்துல் முத்தலிப் அவர்கள் பனூஸஹ்ரா கோத்திரத்தில் வஹ்ப்
என்பவரின் மகளான ஆமினா அவர்களை தன் மகனார் அப்துல்லாஹ் ரலி அவர்களுக்கு மணமுடித்து
வைத்தார். மணமுடித்தவுடன் ஆமினா ரலி அவர்கள் கர்ப்பமானார்கள். அவர்கள் கருவுற்று
சில நாட்களில் அப்துல்லாஹ் ரலி அவர்கள் வியாபாரக் கூட்டத்துடன் சிரியா
நாட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார்கள். திரும்பி வரும் வழியில்
நோய்வாய்ப்பட்டார். எனவே மதீனாவில் பனூநஜ்ஜார் கோத்திரத்தைச் சேர்ந்த தனது
மாமன்மார்களிடத்தில் தங்கியிருந்தார். அங்கேயே அவருக்கு மரணம் ஏற்பட்டு அடக்கமும்
செய்யப்பட்டார்.
அப்துல்லாஹ் ரலி
அவர்கள் பலியிடுவதிலிருந்து பாதுகாக்கப் பட்டார்கள். உடனே திருமணம் நடந்து
அவர்களின் மூலமாக ஆமினா அம்மையார் கருவுற்றார்கள். உடனே தந்தையார் மரணித்து
விட்டார்கள். அப்துல்லாஹ் அவர்கள் பிறந்ததே பெருமானாருக்காகத் தான். நபி
பெருமானார் ஸல் அவர்கள் தாயின் வயிற்றுக்குள் வந்தவுடன் அப்துல்லாஹ் ரலி அவர்கள்
வந்த வேலை முடிந்து விட்டது. எனவே அவர்களை அல்லாஹ் அழைத்துக் கொண்டான்.
மாநபி ஸல் அவர்களின் பிறப்பு
وأكثر أهل
السير على أنه ولد يوم الثاني عشر من ربيع الأول عام الفيل، بعد الحادثة بخمسين
يوما
யமன் நாட்டு
மன்னனான அப்ரஹா புனித கஃபாவை இடிக்கும் நோக்கத்துடன் படையெடுத்து வந்தான். அல்லாஹுத்தஆலா அவனையும், அவனுடைய யானைப் படையையும்
பொடிக்கற்களைக் கொண்டு அழித்தான். புனித
கஃபாவையும் காத்தருளினான். இந்த நிகழ்ச்சிக்கு ஐம்பது நாட்கள் கழித்து அண்ணல் நபி
ஸல் அவர்கள் பிறந்தார்கள்.
عن أبى قتادة
الأنصارى رضى الله عنه أن رسول الله صلى الله عليه وآله وسلم سئل عن صوم يوم
الاثنين فقال: «ذاك يوم ولدت فيه، ويوم بعثت -أو أنزل علي- فيه»،
திங்கட்கிழமை நோன்பு வைப்பதைக் குறித்து கேட்கப்பட்ட போது
அன்று தான் நான் பிறந்தேன். அன்று தான் எனக்கு நபித்துவம் வழங்கப்பட்டது என்றார்கள்.
(முஸ்லிம்)
الجمهور على
أن ذلك كان فى شهر ربيع الأول؛ فقيل: لليلتين خلتا منه، وقيل: لثنتى عشرة خلت منه؛
نص عليه ابن إسحاق،
நபி
ஸல் அவர்கள் ரபீவுல் அவ்வல் மாதம் திங்கட்கிழமை பிறந்தார்கள் என்பதில் வரலாற்று ஆசிரியர்களிடையே
கருத்துவேறுபாடு கிடையாது. அதில் எந்த நாள் என்பதில் கருத்துவேறுபாடு இருக்கிறது.
இருந்தாலும் அதிகமான இமாம்கள் ரபீவுல் அவ்வல் 12 என்றே கூறுகிறார்கள்.
ورواه ابن أبى
شيبة فى "مصنفه" عن عفان، عن سعيد بن مينا، عن جابر وابن عباس رضى الله
عنهما أنهما قالا: "ولد رسول الله صلى الله عليه وآله وسلم عام الفيل، يوم
الاثنين، الثانى عشر من شهر ربيع الأول، وفيه بعث، وفيه عرج به إلى السماء، وفيه
هاجر، وفيه مات". وهذا هو المشهور عند الجمهور].
ஜாபிர்
ரலி மற்றும் இப்னு அப்பாஸ் ரலி ஆகியோர் கூறுகிறார்கள். நபி ஸல் அவர்கள் ரபீவுல் அவ்வல்
மாதம் 12 ம் நாள் திங்கட்கிழமை பிறந்தார்கள். அந்த நாளில் ஹிஜ்ரத்தும் நடந்தது.
அவர்களின் மரணமும் ஏற்பட்டது. (முஸன்னஃப் லி இப்னி அபீ ஷைபா)
وقال الإمام
محمد بن إسحاق -كما حكاه عبد الملك بن هشام "السيرة النبوية" (1/ 158،
ط. الحلبي)-: [ولد رسول الله صلى الله عليه وآله وسلم يوم الاثنين، لاثنتى عشرة
ليلة خلت من شهر ربيع الأول، عام الفيل]،
நபி
ஸல் அவர்கள் யானை ஆண்டு ரபீவுல் அவ்வல் மாதம் 12 ம் நாள் திங்கட்கிழமை
பிறந்தார்கள். (ஸீரத்துன் நபவிய்யா)
அவர்களின் பரக்கத்தினால் ஜம்ஜம் கிடைத்தது
எமன் நாட்டைச்
சார்ந்த ஜுர்ஹூம் கிளையினர் ஆரம்பமாக மக்காவில் இஸ்மாயீல் மற்றும் ஹாஜர் அலை
அவர்களுடன் தங்கினார்கள். நீண்ட காலம் வாழ்ந்த அவர்களுடன் இஸ்மாயீல் அலை அவர்களின்
குடும்பத்தினர் திருமண உறவுகளை வைத்துக் கொண்டார்கள்.ஒரு கட்டத்தில் அவர்கள் அநீதங்கள்
செய்ய ஆரம்பித்தார்கள். அதனால் இஸ்மாயீல் அலை அவர்களின் குடும்பத்தினர்
மக்காவிற்கு வெளியே சென்று வசிக்க ஆரம்பித்தார்கள். அவர்களின் அந்த அநீதங்கள்
எல்லையைக் கடந்ததும் எல்லா புறத்திலிருந்தும் அவர்களுக்கு எதிர்ப்பு ஆரம்பித்து
விட்டது. எதிர்ப்பு அதிகமானதும் நிர்பந்தமாக மக்காவை விட்டும் விருண்டு ஓட
ஆரம்பித்து விட்டார்கள். மக்காவை விட்டு ஓடும் பொழுது கஃபாவில் இருந்த அனைத்துப்
பொருட்களையும் ஜம்ஜம் கிணற்றில் போட்டுப் புதைத்து, ஜம்ஜம்
கிணறு இருந்த அடையாளமே இல்லாமல் தரைமட்டமாக ஆக்கி விட்டார்கள்.
பனூ ஜுர்ஹூம்
சென்ற பின் பனூஇஸ்மாயீல் மக்காவிற்கு திரும்பி வந்து விட்டார்கள். ஆனால் அவர்கள்
ஜம்ஜம் கிணற்றின் பக்கம் கவனம் செலுத்த வில்லை. நீண்ட காலம் அதன் அடையாளமும் அதன்
பெயரும் இல்லாமல் ஆகி விட்டது.
அப்துல் முத்தலிப் அவர்களின் கனவு
قال:
"قال عبد المطلب: إني لنائم في الحجر إذ أتاني آت فقال لي: احفر طيبة. قلت:
وما طيبة؟ قال: ثم ذهب عني.
قال: فلما كان
الغد رجعت إلى مضجعي، فنمت فيه، فجاءني فقال: احفر برَّة، قال: قلت وما برَّة؟
قال: ثم ذهب عني.
فلما كان الغد
رجعت إلى مضجعي فنمت فيه، فجاءني. فقال: احفر المضنونة. قال: قلت: وما المضنونة؟
قال: ثم ذهب عني.
فلما كان الغد
رجعت إلى مضجعي، فنمت فيه. فجاءني فقال: احفر زمزم. قال: قلت: وما زمزم؟ قال: لا
تنزف أبدًا، ولا تذم، تسقي الحجيج الأعظم، وهي بين الفرث والدم، عند نقرة الغراب
الأعصم، عند قرية النمل.
قال: فلما بين
شأنها، ودلَّ على موضعها، وعرف أنه قد صدق، غدا بمعوله ومعه ابنه الحارث بن عبد
المطلب، وليس معه يومئذ ولد غيره، فحفر فيها، فلما بدا لعبد المطلب الطيُّ كبَّرَ،
فعرفت قريش أنه قد أدرك حاجته
மக்காவின்
பொறுப்பு அப்துல் முத்தலிபின் கீழ் வந்த பொழுது அல்லாஹ்வின் நாட்டப்படி நீண்ட நாள்
பெயரும் அடையாளமும் மறைந்திருந்த புனித ஜம்ஜமை வெளிப்படுத்த வேண்டும் என்ற எண்ணம்
ஏற்பட்டது. ஆகவே அப்துல் முத்தலிப் அவர்களுக்கு அதைத் தோண்டவும், அது இருக்கும் இடத்தின் அடையாளமும் கனவிலே அறிவிக்கப்பட்டது.
அப்துல்
முத்தலிப் அவர்கள் கூறுகிறார்கள் "நான் ஒ ரு நாள் ஹதீம் என்ற இடத்திலே
தூங்கிக் கொண்டிருந்தேன். கனவிலே ஒருவர் எனது பக்கத்திலே வந்தார். "பர்ராவை
தோண்டு" என்று அவர் கூறினார். "பர்ரா என்றால் என்ன?" என்று நான் கேட்டேன். அவர் எந்த பதிலும் சொல்லாமல் சென்று விட்டார்.
அடுத்த நாள் அதே இடத்திலே நான் தூங்கிக் கொண்டிருந்தேன். கனவு கண்டேன்.
"மழ்னூனாவை தோண்டு” என்று அதே மனிதர் மீண்டும் கனவில் கூறினார்.
"மழ்னூனா என்றால் என்ன?" என்று நான் கேட்டேன். அவர் சென்று
விட்டார். மூன்றாம் நாளும் அதே இடத்திலே தூங்கினேன். என் கனவிலே அதே மனிதரைப்
பார்த்தேன். "தைய்யிபாவைத் தோண்டு" என்று அவர் கூறினார் "தைய்யிபா
என்றால் என்ன?" என்று நான் கேட்டேன். அவர் சென்று
விட்டார். நான்காவது நாள் கனவில் அதே மனிதரைப் பார்த்தேன். 'ஜம்ஜமைத் தோண்டு" என்று அவர்
கூறினார். “ஜம்ஜம் என்றால் என்ன?" என்று நான்
கேட்டேன். அப்பொழுது அவர் பதில் கூறினார். அது ஒரு கிணற்றின் தண்ணீர்; அது எப்பொழுதும் வற்றவும் செய்யாது; குறையவும்
செய்யாது: எண்ணற்ற ஹாஜிகள் அதை பருகுவார்கள். அதன் பின் எந்த இடத்தில் தோண்ட
வேண்டும் என்ற இடமும் காட்டப்பட்டது"
(குறிப்பு-பர்ரா
மழ்னூனா, தைய்யிபா என்பது ஜம்ஜம்குரிய மற்றொரு பெயர்கள்
ஆகும்)
அப்துல்
முத்தலிப் அவர்கள் அடிக்கடி கனவு கண்டதும், அடையாளம்
காட்டப்பட்டதும், அது உண்மையான கனவு என்று அவர்களுக்கு
உறுதியாக ஆகி விட்டது.
அப்துல்
முத்தலிப் அவர்கள் குறைஷிகளிடம் தன்னுடைய கனவைக் கூறினார்கள். மேலும் எனக்கு அந்த
இடத்தில் தோண்ட வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது என்றும் கூறினார்கள். அப்பொழுது
குறைஷியர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் அப்துல்
முத்தலிப் அவர்கள் எதிர்ப்பை பொருட்படுத்தாது மம்மட்டியையும், கடப்பாறையையும் எடுத்துக் கொண்டு தன்னுடைய மகன் ஹாரிஸையும் அழைத்துக்
கொண்டு அடையாளம் காட்டப்பட்ட இடத்திற்குச் சென்று தோண்டுவதற்கு ஆரம்பித்து
விட்டார்கள்.
அப்துல்முத்தலிப்
தோண்டிக் கொண்டேயிருந்தார்கள். ஹாரிஸ் மண்ணை எடுத்துப் போட்டுக் கொண்டேயிருந்தார்.
மூன்று நாட்களுக்குப் பின் தண்ணீர் வெளியானது.அப்துல் முத்தலிப் அவர்கள்
மகிழ்ச்சியால் "அல்லாஹு அக்பர்” எனமுழங்கினார். இது தான் ஹள்ரத் இஸ்மாயீல்
(அலை) அவர்களின் கிணறு என்று கூறினார். (தலாயிலுன் நுபுவ்வா)
இந்த நிகழ்வு நபி ஸல் அவர்களின் பிறப்பை
ஒட்டி நடந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.
நபி ஸல் அவர்களின் பிறப்பே ஒரு அதிசயம். அவர்களின் வாழ்வு அதை விட அதிசயம்.
நபி ஸல் அவர்களின் பிறந்த மாதமான ரபீவுல் அவ்வல் மாதத்தில் நபி பெருமானார் ஸல் அவர்களை
அதிகமாக நினைவு கூறுவோம். பேசுவோம்.புகழுவோம். அல்லாஹ் அருள் புரிவானாக!
இன்ஷா அல்லாஹ் அடுத்த வருகின்ற வாரங்களில்
மாநபியின் குழந்தைப் பருவம்
வாலிபப்பருவம்
மக்கா வாழ்க்கை
மதீனா வாழ்க்கை
அவர்களின் மரணம்
ஆகிய தலைப்புக்களில் ஜும்ஆ குறிப்புகள் இப்பக்கத்தில்
பதிவு செய்யப்படும்.அல்லாஹ் உதவி புரிவானாக!
மாஷா அல்லாஹ்... அருமையான பதிவு...
ReplyDeleteஇன் ஷா அல்லாஹ் 💚🤲🏻 பாரக்கல்லாஹ்💚 🤲🏻
ReplyDeleteமாஷா அல்லாஹ் பயனுள்ள தகவல்...
ReplyDeleteجزاءكم الله خيرا في الدارين..... 🤲🤲🤲🤲🤲
சிறப்பு சிறப்பு மிக மிகச் சிறப்பு
ReplyDeleteInshallah
ReplyDeleteAlhamdulillah 🥰
ReplyDelete