Sunday, December 14, 2025

20 கேள்வி - பதில்


இறை நேசர் பா யஜீத் பிஸ்தாமி ரஹ் அவர்களிடம் ஒரு பாதிரியார் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர்கள் கூறிய பதில்களும்.






1. ஒன்று மட்டும் தான். இரண்டாவது கிடையாது. அது என்ன ?

2. இரண்டு மட்டும் தான். மூன்றாவது கிடையாது. அது என்ன ?

3. மூன்று மட்டும் தான் நான்காவது கிடையாது. அது என்ன ?

4. நான்கு மட்டும் தான் ஐந்தாவது கிடையாது. அது என்ன ?

5. ஐந்து மட்டும் தான் ஆறாவது கிடையாது. அது என்ன ?

6. ஆறு மட்டும் தான் ஏழாவது கிடையாது. அது என்ன ?

7. ஏழு மட்டும் தான் எட்டாவது கிடையாது. அது என்ன ?

8. எட்டு மட்டும் தான் ஒன்பதாவது கிடையாது. அது என்ன ?

9. ஒன்பது மட்டும் தான் பத்தாவது கிடையாது. அது என்ன ?

10. பத்து மட்டும் தான் பதினொன்றாவது கிடையாது. அது என்ன ?

11. பதினொன்று மட்டும் தான் பன்னிரெண்டாவது கிடையாது. அது என்ன?

12. பன்னிரெண்டு மட்டும் தான் பதிமூன்றாவது கிடையாது. அது என்ன ?

13. பதிமூன்று மட்டும் தான் பதினான்காவது கிடையாது. அது என்ன ?

14. பதினான்கு மட்டும் தான். பதினைந்தாவது கிடையாது. அது என்ன

15. பொய்யர்கள். ஆனால், சொர்க்கவாசிகள். அவர்கள் யார் ?

16. உண்மையாளர்கள். ஆனால், நரகவாதிகள். அவர்கள் யார் ?

17. ஒருவரை அவரது கப்ரே தூக்கிச் சென்றது. அது எந்த கப்ர் ?

18. அல்லாஹ் ஒன்றை படைத்து விட்டு அவனே அதை வெறுக்கிறான். அது என்ன ?

19. அல்லாஹ் ஒன்றை மிகப்பெரியது என்று கூறுகிறான். அது என்ன ?

20. ஒரு மரம். அதில் 12 கிளைகள். ஒவ்வொரு கிளையிலும் 30 இலைகள்

ஒவ்வொரு இலையிலும் 5 பழங்கள் அது என்ன ?










 1. அல்லாஹ் ஒருவன். இரண்டாமவன் கிடையாது

2. இரவு பகல் இரண்டு. மூன்றாவது கிடையாது.

3. மூஸா நபி அலை, கிழ்ர் அலை. அந்த இருவருக்கும் இடையில் நடந்த நிகழ்வுகள் மூன்று. 4 வது கிடையாது.

4. நான்கு வேதங்கள். 5 வது கிடையாது.

5. ஐந்து நேரத் தொழுகைகள். 6 வது கிடையாது.

6. வானம் பூமி ஆறு நாளில் படைக்கப்பட்டது.

7. ஏழு வானங்கள். 8 வது கிடையாது.

8. அர்ஷை சுமக்கும் மலக்குகள் 8 பேர். 9 வது கிடையாது.

9. மூஸா நபி அலை அவர்களது அற்புதங்கள் ஒன்பது. 10 வது கிடையாது.

10. ஒரு நன்மை செய்தவருக்கு பத்து மடங்கு கூலி கிடைக்கும்.

11. யூசுப் நபி அலை அவர்களின் சகோதரர்கள் 11 பேர். 12 வது கிடையாது.

12. மாதங்களின் எண்ணிக்கை பன்னிரெண்டு. 13 வது கிடையாது.

13. யூசுப் நபி அலை அவர்களின் சகோதரர்கள் 11 பேர். தாய், தந்தை ஆகிய 13 பேர். 14 வது கிடையாது.

14. வானம் ஏழு. பூமி ஏழு. மொத்தம் பதினான்கு. 15 வது கிடையாது

15. யூசுஃப் அலை அவர்களின் சகோதரர்கள்.

16. யூதர்களும் நஸாராக்களும்.

17. யூனுஸ் நபியை விழுங்கிய மீன்.

18. கழுதையின் சப்தம்.

19. பெண்களின் சூழ்ச்சி.

20. ஒரு வருடம். அதில் 12 மாதங்கள். ஒவ்வொரு மாதத்தில் 30 நாட்கள். ஒவ்வொரு நாளிலும் 5 நேரத் தொழுகைகள்.

பதிலை கேட்ட அந்த பாதிரியாரும் அங்கிருந்த அனைவரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள்.

No comments:

Post a Comment