Tuesday, October 8, 2013

கவிதை-ஏழ்மை



          எல்லோருக்கும் ஹஜ்ஜிப்பெருநாள் வந்தது ,

புத்தாடை உடுத்தி கறிசோறு உண்ணப்போகிறோம் என்ற மகிழ்ச்சியும் 

கூடவே வந்தது.

ஆனால் எங்களுக்கோ 

ஹஜ்ஜிம் இல்லை,

பெருநாளும் இல்லை,


ஆடையும் இல்லை,

கறியும் இல்லை,

சோறும் இல்லை.

 எல்லோரின் வீட்டிலும் உப்புக்கண்டம் காய்கிறது,

ஆனால் எங்களுக்கோ இங்கே வயிறு காய்கிறது. 

பெருநாளைக்கொண்டாடும் கணவான்களே !

எங்களின் இருண்ட நாட்களையும் கொஞ்சம் எண்ணிப்பாருங்கள். 

புத்தாடை உடுத்தும் கணவான்களே !

எங்களின் வெற்றுடம்பையும் கொஞ்சம் எண்ணிப்பாருங்கள். 

 கறிசோறு உண்ணும் கணவான்களே !

எங்களின் காலி வயிறையும் கொஞ்சம் எண்ணிப்பாருங்கள். 

 பஞ்சி மெத்தையில் புரளும் கணவான்களே !

எங்களின் முதுகுத்தழும்புகளையும் கொஞ்சம் எண்ணிப்பாருங்கள். 

ஏசியில் துயில் கொள்ளும் கணமான்களே !

எங்களின் வியர்வைத்துளிகளையும் கொஞ்சம் எண்ணிப்பாருங்கள். 

வருடந்தோறும் ஹாஜி ஹாஜி என்று ஹஜ் பட்டம் பெறும் வசதி 

வர்கத்தினரே !

சற்று நின்று பட்டினிக்குப் பட்டியல் போடும் எங்களையும் கொஞ்சம் 

எண்ணிப்பாருங்கள். 

 தினமும் சொத்துக்கு கணக்கு போடும் செல்வந்தர்களே !

உண்ணாமல் தினமும் செத்துக்கொண்டிருக்கும் எங்களையும் கொஞ்சம் 

எண்ணிப்பாருங்கள். 

 வீண் செலவு செய்யும் வீணர்களே !

வீணாய்ப்போன எங்களையும் கொஞ்சம் எண்ணிப்பாருங்கள். 

 திருமணம் என்ற பெயரால் பகட்டு செலவு செய்யும் பண முதலைகளே! 

எங்கள் முகத்தையும் கொஞ்சம் எண்ணிப்பாருங்கள். 

 தொழுகையில் தோளோடு தோள் நின்று வேதம் படித்து ஏற்றம் காண 

வரும் கணமான்களே !ஏழையின் வீடு என்ன வேதம் பேசுகிறது என்று 

கொஞ்சம் எண்ணிப்பாருங்கள்.

 ஆடம்பரத்துக்கும்,அரசியல் சாக்கடைக்கும்,உலக மாயைகளுக்கும் 

பணத்தை பஞ்சாய் பறக்க விடுபவர்களே !

எங்களின் நிலையையும் கொஞ்சம் எண்ணிப்பாருங்கள். 

 உலகத்தில் நீங்கள் ஏற்றம் பெற்றிருக்கலாம் ஆனால் ஏழை எங்களுக்கே 

ஏக இறைவனிடம் முதல் இடம் என்பதை மறந்துவிடாதீர்கள் .

                    இப்படிக்கு என்றும் ஏக்கத்துடன் ஏழை முதல்வன்.

3 comments: