Wednesday, December 18, 2013

ஈமானிய உறுதி

     
அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்]அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடோன் அல்லாஹ்வின் திருப்பெயர் கூறி ஆரம்பம் செய்கிறேன்.
                
அன்பு நிறைந்தவர்களே ! நாயகத்தோழர்களில் ஒருவரான ஹஜ்ரத் சஃத் {ரலி}அவர்கள் கூறுகிறார்கள். நான் கலிமா சொல்லி இஸ்லாத்தில் நுழைந்து விட்டேன்.ஆனால் என் தாயார் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.
ஒரு நாள் அவர்கள் என்னை அழைத்து ; நீ இஸ்லாமிய மார்க்கத்தை நிராகரிக்காதவரை நான் உன்னுடன் பேசமாட்டேன், உண்ணவும், பருகவும் மாட்டேன் என்று சத்தியம் செய்துவிட்டார். 
      
உன் பெற்றோரிடம் நீ நல்லமுறையில் நடந்து கொள்ளுமாறு அல்லாஹ் உன்னை அறிவுருத்தியுள்ளான் என்று கூறுகிறாய். சஃதே நான் உன்தாய்.  நான்தான் உன்னை இஸ்லாத்தை விட்டுவிடுமாறு கட்டளையிடுகிறேன்! என்று கூறினார். இவ்வாறு மூன்று நாட்கள் இருந்ததால் என்தாயார்  மயக்கமுற்று விட்டார்கள். அப்போது அவரது உமாரா என்ற மகன்தான்,  என் தாயாருக்கு தண்ணீர் கொடுத்தார். அப்போது என் தாயார் எனக்கெதிராக பிரார்த்தித்தார்.
    
அந்த நேரத்தில்  அல்லாஹ் தன் திருமறையில் ; நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது பற்றி வஸிய்யத்துச் செய்தோம்; அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்தலில் இரண்டு வருடங்கள் ஆகின்றன ஆகவே "நீ எனக்கும் உன் பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது."
    
நீ எது பற்றி அறிவு பெற்றவனாக இல்லையோ அதனை எனக்கு இணை வைக்குமாறு உன்னை அவ்விருவரும் வற்புறுத்தினால் அப்போது நீ அவ்விருவருக்கும் வழிபட வேணடாம்; ஆனால் இவ்வுலக வாழ்க்கையில் அவ்விருவருடனும் அழகிய முறையில் உறவு வைத்துக் கொள்; (யாவற்றிலும்) என்னையே நோக்கி நிற்போரின் வழியையே நீ பின்பற்றுவாயாக - பின்னர் உங்கள் அனைவருடைய மீளுதலும் என்னிடமே இருக்கிறது; நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதை நான் உங்களுக்கு அறிவிப்பேன்." அத்தியாயம் ; 31.வசனம் ; 14,15.என்ற இரு வசனங்களை அருளினான் என சஃத் [ரலி] அவர்கள் கூறுகிறார்கள்.
            
இந்த ஹதீஸில், இஸ்லாத்தை விட்டுவிட வேண்டும் என்று தன்னுடைய தாய் மூன்று நாட்கள்  உணவருந்தாமல்பருகாமல் மயக்கமுற்றபோதும், சஅத் [ரலி] அவர்கள்தன்னுடைய தாயின் கட்டளையைவிட இறைக்கட்டளைக்கு முக்கியத்துவம் அளித்த அந்த உறுதியை நாம் காணுகிறோம்.இன்று நம்மில் எத்தனை பேர் அல்லாஹ்வின் கட்டளைக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம்?.
            
நாவளவில் அல்லாஹ் அல்லாஹ் என்று சொல்லுகிறோம்.ஆனால் அந்த ஸஹாபாக்களிடம் இருந்த அந்த ஈமானிய உறுதி நம்மிடம் இல்லை என்பது தான் யதார்த்தம்.

  
எனவே அன்பானவர்களே நாம் நமது ஈமானை பலப்படுத்த வேண்டும்.எந்த நேரத்திலும் இறை கட்டளைக்கு முன்னுரிமை வழங்குகிற நிலைக்கு நாம் வர வேண்டும். யா அல்லாஹ் வாழும் காலமெல்லாம் உன் கட்டளையை மதித்து வாழும் அருட்பேற்றை எங்களுக்கு வழங்குவாயாக ஆமீன்.

No comments:

Post a Comment