பரக்கத்தைப்
பெற்றுத்தரும் அம்சங்கள் :-
நமது வாழ்வின் அனைத்து விஷயங்களிலும் பரக்கத் [அபிவிருத்தி] ஏற்படுவதற்கு மார்க்கம் ஒரு சில விஷயங்களை அடையாளம்
காட்டுகிறது.அவற்றை நாம் பேணி வந்தால் இன்ஷா அல்லாஹ் பரக்கத்தைப் பெற்றி மகிழலாம்.
وَمَنْ يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ
எவர் அல்லாஹ்விற்கு அஞ்சி நடப்பாரோ அவருக்கு அவன் [தக்க] வழியை
ஏற்படுத்துவான்.அவன் அறியா புறத்திலிருந்து அவனுக்கு ரிஜ்க் [வசதி]களை
வழங்குவான். [அல்குர்ஆன்
65 : 2,3]
وأما ابن عباس كان يقول: يا معشر الموالي، إنكم
وليتم أمرين بهما هلك الناس قبلكم: هذا المكيال، وهذا الميزان. قال وذكر لنا أن نبي
الله صلى الله عليه وسلم كان يقول: "لا يقدر رجل على حرام ثم يدعه، ليس به إلا
مخافة الله، إلا أبدله الله في عاجل الدنيا قبل الآخرة ما هو خير له من ذلك"
ஒருவர் தடுக்கப்பட்ட ஓர் விஷயத்தை செய்வதற்கு சக்தி
பெற்றிருந்தும் அல்லாஹ்வின் அச்சத்தினால் அதை செய்யாமல் விட்டு விட்டால் ,
அதற்குப் பகரமாக அதை விட மகத்தான ஒன்றை அவருக்கு உலகிலேயே அல்லாஹ் வழங்கி
விடுவான். [இப்னு கஸீர் ; 17:35]
وقد جاء في مسند أحمد (5/78) عن أبي قتادة وأبي الدهماء عن رجل
من أهل البادية، أن النبي صلى الله عليه وسلم أخذ بيده وقال: "إنك لا تدع شيئا
اتقاء الله، عز وجل، إلا أعطاك الله خيرا منه".
நபி [ஸல்] அவர்கள் ஒரு
கிராமப் புறத்து வாலிபரின் கரத்தைப் பிடித்துக் கொண்டு அல்லாஹ்விற்குப் பயந்து ஒரு
விஷயத்தை விட்டு விட்டால் அதை விட சிறந்ததை இறைவன் உனக்கு வழங்குவான் என்றார்கள். [முஸ்னத் அஹ்மது 5 / 78]
عَنْ
أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّهُ حَدَّثَ
عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ الْكَافِرَ
إِذَا عَمِلَ حَسَنَةً أُطْعِمَ بِهَا طُعْمَةً مِنْ الدُّنْيَا وَأَمَّا الْمُؤْمِنُ فَإِنَّ
اللَّهَ يَدَّخِرُ لَهُ حَسَنَاتِهِ فِي الْآخِرَةِ وَيُعْقِبُهُ رِزْقًا فِي الدُّنْيَا
عَلَى طَاعَتِهِ
ஒரு இறை
மறுப்பாளன் ஒரு நன்மையான காரியத்தை செய்து விட்டால் உலகத்திலேயே [மறுமையில் இருக்காது] அதற்குறிய பலனைப் பெற்றுக் கொள்வார்.ஒரு இறை நம்பிக்கையாளன்
ஒரு நன்மையை செய்தால் அதற்குறிய கூலியை அவருக்கு இறைவன் மறுமையில் வழங்குகிறான்.
அத்துடன் அந்த நன்மைக்காக உலகத்திலும் அவர் அல்லாஹ்வால் ரிஜ்க் அளிக்கப்படுகிறார்.
[முஸ்லிம் 4/2162]
وَلَوْ أَنَّهُمْ أَقَامُوا
التَّوْرَاةَ وَالْإِنْجِيلَ وَمَا أُنْزِلَ إِلَيْهِمْ مِنْ رَبِّهِمْ لَأَكَلُوا
مِنْ فَوْقِهِمْ وَمِن تَحْتِ أَرْجُلِهِمْ
يعني كثرة الرزق النازل عليهم من السماء والنابت لهم من الأرض
அவர்கள் தவ்ராத்தையும், இன்ஜீலையும், இறைவனிடமிருந்து
அவர்களுக்கு இறக்கப்பட்டதையும் அவர்கள் நிலை நாட்டியிருந்தால் [அல்லாஹ்வுக்கு
அதன் படி அமல் செய்திருந்தால்] மேலே [வானத்தில்] இருந்தும்,
அவர்களின் பாதங்களுக்கடியில் [பூமியில்] இருந்தும்
புசித்திருப்பார்கள். [ரிஜ்க்
அளிக்கப்பட்டிருப்பார்கள்].[அல்குர்ஆன் –
5 ; 66]
وَلَوْ أَنَّ أَهْلَ الْقُرَى
آَمَنُوا وَاتَّقَوْا لَفَتَحْنَا عَلَيْهِمْ بَرَكَاتٍ مِنَ السَّمَاءِ وَالْأَرْضِ
நிச்சயமாக அவ்வூர் வாசிகள் ஈமான் கொண்டு இறைவனுக்கு அஞ்சி
நடந்திருந்தால் வானத்திலிருந்தும்,பூமியிலிருந்தும் பரக்கத்துகளை [பாக்கியங்களை] திறந்து கொடுத்திருப்போம். [அல்குர்ஆன் – 7 ; 96]
-எல்லா வகையான சந்தர்ப்பங்களும் வாய்க்கப்பெற்றும்
அல்லாஹ்வுக்கு அஞ்சி தவறில் ஈடுபடாமல் தன்னைத் தற்காத்துக் கொண்ட காரணத்தி னால்
அல்லாஹுத்தஆலா யூசுஃப் [அலை] அவர்களுக்கு பல்வேறு வகையான அந்தஸ்துகளை வழங்கினான்.
கனவுக்கு விளக்கம் கூறும் ஆற்றல்.மிகப்பெரிய அரசாட்சி இவைக
ளெல்லாம் அவர்களின் இறையச்சத்திற்குக் கிடைத்த பரிசுகளாகும்
.- மூவர் குகையில் மாட்டிக் கொண்ட நிகழ்வும் நமக்கு சிறந்த
உதாரணமாகும்.
عَنْ
ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا
أَنَّ
رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ بَيْنَمَا ثَلَاثَةُ نَفَرٍ
مِمَّنْ كَانَ قَبْلَكُمْ يَمْشُونَ إِذْ أَصَابَهُمْ مَطَرٌ فَأَوَوْا إِلَى غَارٍ
فَانْطَبَقَ عَلَيْهِمْ فَقَالَ بَعْضُهُمْ لِبَعْضٍ إِنَّهُ وَاللَّهِ
يَا هَؤُلَاءِ لَا يُنْجِيكُمْ إِلَّا الصِّدْقُ فَليَدْعُ كُلُّ رَجُلٍ مِنْكُمْ بِمَا
يَعْلَمُ أَنَّهُ قَدْ صَدَقَ فِيهِ فَقَالَ وَاحِدٌ مِنْهُمْ اللَّهُمَّ إِنْ كُنْتَ
تَعْلَمُ أَنَّهُ كَانَ لِي أَجِيرٌ عَمِلَ لِي عَلَى فَرَقٍ مِنْ أَرُزٍّ فَذَهَبَ
وَتَرَكَهُ وَأَنِّي عَمَدْتُ إِلَى ذَلِكَ الْفَرَقِ فَزَرَعْتُهُ فَصَارَ مِنْ أَمْرِهِ
أَنِّي اشْتَرَيْتُ مِنْهُ بَقَرًا وَأَنَّهُ أَتَانِي يَطْلُبُ أَجْرَهُ فَقُلْتُ
لَهُ اعْمِدْ إِلَى تِلْكَ الْبَقَرِ فَسُقْهَا فَقَالَ لِي إِنَّمَا لِي عِنْدَكَ
فَرَقٌ مِنْ أَرُزٍّ فَقُلْتُ لَهُ اعْمِدْ إِلَى تِلْكَ الْبَقَرِ فَإِنَّهَا مِنْ
ذَلِكَ الْفَرَقِ فَسَاقَهَا فَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي فَعَلْتُ ذَلِكَ مِنْ خَشْيَتِكَ
فَفَرِّجْ عَنَّا فَانْسَاحَتْ عَنْهُمْ الصَّخْرَةُ فَقَالَ الْآخَرُ اللَّهُمَّ إِنْ
كُنْتَ تَعْلَمُ أَنَّهُ كَانَ لِي أَبَوَانِ شَيْخَانِ كَبِيرَانِ فَكُنْتُ آتِيهِمَا
كُلَّ لَيْلَةٍ بِلَبَنِ غَنَمٍ لِي فَأَبْطَأْتُ عَلَيْهِمَا لَيْلَةً فَجِئْتُ وَقَدْ
رَقَدَا وَأَهْلِي وَعِيَالِي يَتَضَاغَوْنَ مِنْ الْجُوعِ فَكُنْتُ لَا أَسْقِيهِمْ
حَتَّى يَشْرَبَ أَبَوَايَ فَكَرِهْتُ أَنْ أُوقِظَهُمَا وَكَرِهْتُ أَنْ أَدَعَهُمَا
فَيَسْتَكِنَّا لِشَرْبَتِهِمَا فَلَمْ أَزَلْ أَنْتَظِرُ حَتَّى طَلَعَ الْفَجْرُ
فَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي فَعَلْتُ ذَلِكَ مِنْ خَشْيَتِكَ فَفَرِّجْ عَنَّا فَانْسَاحَتْ
عَنْهُمْ الصَّخْرَةُ حَتَّى نَظَرُوا إِلَى السَّمَاءِ فَقَالَ الْآخَرُ اللَّهُمَّ
إِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّهُ كَانَ لِي ابْنَةُ عَمٍّ مِنْ أَحَبِّ النَّاسِ إِلَيَّ
وَأَنِّي رَاوَدْتُهَا عَنْ نَفْسِهَا فَأَبَتْ إِلَّا أَنْ آتِيَهَا بِمِائَةِ دِينَارٍ
فَطَلَبْتُهَا حَتَّى قَدَرْتُ فَأَتَيْتُهَا بِهَا فَدَفَعْتُهَا إِلَيْهَا فَأَمْكَنَتْنِي
مِنْ نَفْسِهَا فَلَمَّا قَعَدْتُ بَيْنَ رِجْلَيْهَا فَقَالَتْ اتَّقِ اللَّهَ وَلَا
تَفُضَّ الْخَاتَمَ إِلَّا بِحَقِّهِ فَقُمْتُ وَتَرَكْتُ الْمِائَةَ دِينَارٍ فَإِنْ
كُنْتَ تَعْلَمُ أَنِّي فَعَلْتُ ذَلِكَ مِنْ خَشْيَتِكَ فَفَرِّجْ عَنَّا فَفَرَّجَ
اللَّهُ عَنْهُمْ فَخَرَجُوا ]بخاري
باب الغار[
அந்த மூன்று
பேர்களில் ஒருவர் ஒரு பெண்ணிடம் தன் ஆசையை நிறைவேற்ற ஆயத்தமான சமயம் அல்லாஹ்வை “அஞ்சிக் கொள்” என்று அந்தப் பெண் சொன்னவுடன் அவருக்கு அல்லாஹ்வின் அச்சம்
மேலிட்டு அந்த காரியத்தை செய்யாமலேயே எழுந்து விடுவார்.அவர் அப்போது அல்லாஹ்வை அஞ்சிய
காரணத்தினால் அவருக்கு அல்லாஹ் அந்த குகையிலிருந்து ஈடேற்றமளித்தான்.
தொடரும்........
தங்களின் வலைப்பூ குறித்த தகவல் ulama ulagam மூலமாகவே அறிய வந்தேன் நல்ல முயற்சி ,கடும் சிரத்தை எடுத்துள்ளீர்கள் ! வாழ்வில் வளம் பெற துஆக்கள் பல!
ReplyDeleteமுஹம்மது ஷாபி ஜஸாகல்லாஹ் அப்துல் காிம் சிராஜி சென்னை
ReplyDelete