Tuesday, March 4, 2014

உரையாடல் - போராட்டத்தில் பெண்கள்.

                                                                                 
 சித்தீக்கா ; அஸ்ஸலாமு அலைக்கும். நல்ல இருக்கியா?

சுமைய்யா ; வ அலைக்குமுஸ்ஸலாம் ரொம்ப நல்ல இருக்கேன்.                     

சித்தீக்கா ; என்ன நேத்து உன் வீட்டுக்கு வந்தேன். உன்ன காணோம் எங்க போயிருந்த?

சுமைய்யா ; என்னக்கா உனக்கு விஷயமே தெரியாதா?               

சித்தீக்கா ;  என்ன விஷயம் டீ?


சுமைய்யா ; நேத்து என்ன நாள்?                                                     

சித்தீக்கா ;  இதான் முக்கியமான விஷயமா?

சுமைய்யா ; அது இல்லக்கா நேத்து என்ன தேதின்னு கேட்டேன்.                                   

சித்தீக்கா ;  நேத்து.... டிசம்பர்-6 அதுக்கு என்ன?

சுமைய்யா ; நேத்து டிசம்பர் 6-ல்ல !!!                               

சித்தீக்கா ;  ஏய் நில்லு.. நேத்து டிசம்பர் 6 ரா? இல்லயா? ஒன்னு 6-ன்னு சொல்லனும் அல்லது இல்லன்னு சொல்லனும்.அத விட்டுட்டு 6-ல்ல அப்டின்னு சொன்னா நான் எத எடுக்குறது?

சுமைய்யா ; இல்லக்கா நேத்து டிசம்பர் 6-ல்ல !!!            

சித்தீக்கா ;  பார்ரா மறுபடியும் அப்டித்தான் சொல்றா.

சுமைய்யா ; சாரி மன்னிச்சிடுங்க நேத்து டிசம்பர் 6. எதிரிகள் அல்லாஹ்வோட பள்ளிய இடிச்சி தர மட்டமாக்கிய தினம்.அதுக்கு நியாயம் கேட்டு பக்கத்து ஊர்ல ஒரு போராட்டம் வச்சிருந்தாங்க. அதுல கலந்துக்கத்தான் அக்கா போயிருந்தேன்.அதான் அக்கா ஊர்ல இல்ல.                           

சித்தீக்கா ;  அடப்பாவி என்ன காரியம் பன்னிட்டு வந்துறுக்க !!!

சுமைய்யா ; ஏன் அப்டி என்ன பன்னிட்டேன்?                     

சித்தீக்கா ;  உனக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லயா !

சுமைய்யா ; ஏன் அக்கா அப்டி சொல்றீங்க!                       

சித்தீக்கா ; எவனோ கூப்புட்டான்னு உடனே போயிடுறதா போலாமா போகக்கூடாதான்னு கொஞ்சங்கூட யோசிக்க மாட்டியா?

சுமைய்யா ; ஏன் அக்கா நல்ல விஷயந்தானே.       

சித்தீக்கா ; நல்ல விஷயந்தான் யார் இல்லன்னு சொன்னா ஆனா அதுக்குலாம் ஆம்பளைங்க போலாம் நம்ம போலாமா? பொம்பளைங்க வீட்ட வுட்டு வெளியவே போவக்கூடாதுன்னு இஸ்லாம் சொல்லுது தெரியுமா?

சுமைய்யா ; ஏன் நபி ஸல் அவங்க காலத்துல பெண்கள் ஆண்களோட போருக்குலாம் போயிருக்காங்களே….                                    

சித்தீக்கா ; பெண்கள் போனாங்கன்னா......எதுக்கு போனாங்க?.... தண்ணீர் கேக்குறவங்களுக்கு தண்ணீர் கொடுக்க போனாங்க. அடி பட்டவங்களக்கு மருந்து போட போனாங்க.போர் செய்யுற ஆம்பளைங்களுக்கு உதவி செய்ய போனாங்க. என்ன வீதியில நின்னு போர் செய்றதுக்கா போனாங்க.ஆனா நீ வெளிய போனதுமில்லாம ஃபோட்டாவுக்கு போஸ் கொடுத்துட்டு வேற வந்துறுக்குற.இன்னைக்கு செய்தியில பாத்தியா.உங்களோட முகத்தெல்லாம் போக்கஸ் பன்னி காட்டுறாங்க.உங்கள உலகத்துல எத்தன பேரு பாத்துறுப்பாங்க. இப்டித்தான் இஸ்லாம் சொல்லுதா?  பெணகளிடம் ஏதாவது ஒரு பொருளை கேட்பதாக இருந்தால் அவங்களோட முகத்த பாத்து கேக்காதீங்க திரைக்குப் பின்னால் இருந்து கேளுங்கன்னு அல்லாஹ் சொல்றான்.ஒரு ஆளுக்கு காட்டுறதே தப்பு. ஆனா நீ உன்ன உலகத்துக்கே படம் போட்டு காட்டி இருக்க.

சுமைய்யா ; அப்டியாக்கா இதுலாம் தெரியாம போச்சே !!! 

சித்தீக்கா ; அது மட்டுமில்லாம அவங்க போராட்டத்துக்கு எதுக்கு பொம்பளைங்கள கூப்புடுறாங்கன்னு தெரியுமா?

சுமைய்யா ; எதுக்குக்கா?                   

சித்தீக்கா ; அவங்க போலீஸ்லயிருந்து தப்பிக்கிறதுக்காக. பொம்பளைங்க இருந்தா போலீஸ் புடிக்க மாட்டான்ல அதுக்குதான்.

சுமைய்யா ; அப்டியாக்கா?            

சித்தீக்கா ; வேறென்ன  அதனால.... இனிமே அவன் கூப்புடுறான் இவன் கூப்புடுறான்னு உடனே கொடிய தூக்கி கிட்டு போயிறாத. நம்ம வீட்லயிருந்து துஆ செய்றது தான் நமக்கு அழகு.இப்படி ரோட்ல நின்னு கொடி புடிக்கிறதுலாம் அசிங்கம்.அல்லாஹ்வுக்கு புடிக்காத செயலும் கூட இனிமேலாவது ஒழுங்கா இருந்துக்கோ என்ன....

சுமைய்யா ; சரிக்கா வாக்கா உள்ள போயிடுலாம்.உள்ள போய் புர்கா போட்டுட்டு வரலாம். 

சித்தீக்கா ; ஏன் உடனே உள்ள கூப்புடுற.புர்கா போடனும்னு சொல்ற?

சுமைய்யா ; பள்ளி வாசல் ஜமாத்துக்காரங்கெல்லாம் வர்ராங்க உன் கண்ணுக்கு தெரியலியா?        

சித்தீக்கா ; அடிப்பாவி இவ்ளோ நேரமா பால்காரன் வந்தான் அப்பலாம் உள்ள போகல! மீன் காரன் வந்தான். அப்பலாம் உள்ள போகல! பிளாஸ்டிக் ஜாமான் விக்கிறவன் வந்தான். அப்பவும் உள்ள போகல! இப்ப மட்டும் உள்ள கூப்புடுற. ஏன் ஜமாத் காரங்க மட்டுந்தான் அன்னிய ஆண்களா? ரோட்ல போர மத்தவங்கள்ளாம் அண்ணிய ஆண்கள் இல்லயா ஆ... இந்தப்பாரு....நம்மோட அண்ணன், தம்பி,வாப்பா,சின்ன வாப்பா,பெரிய வாப்பா,மகன்,மாமா இவங்களத் தவிர வேற யாரா இருந்தாலும் அவங்க அன்னிய ஆண்கள் தான்.நாம ஒழுக்கமா தான் இருக்கனும்.இப்படித்தான் இஸ்லாம் சொல்லுது புரியுதா?

சுமைய்யா ; புரியுது. ஆனா இன்னைக்கு நம்ம பொம்பளைங்கள்ள பல பேர் இப்டித்தான இருக்காங்க,ஜமாத்துக்காரங்க வந்தா மட்டும் வீட்டுக்குள்ள ஓடுறது. ஆனால் மத்த படி மீன் காரன்,பால் காரன்டலாம் சகஜமா பேசுறது.புர்கா போடாம அவங்க முன்னால நிக்கிறது.இதையெல்லாம் நாம மாற்றிக் கொள்ளனும்.இஸ்லாம் சொல்லுகிற முறைப்படி ஒழுங்கா வாழனும்.அல்லாஹ் நமக்கு இஸ்லாத்தை முழுமையாக புரிந்து கொள்ள தவ்ஃபீக் செய்வானாக.ஆமீன்.                       

சித்தீக்கா ; ஆமீன்.


3 comments: