Thursday, March 6, 2014

உரையாடல் - டீச்சர்,மாணவி


ஹுமைரா ; ஏய் இப்பு STANT UP  நேத்து ஏன் டீ  ஸ்கூலுக்கு வரல?

இப்திஸாம் ; நேத்து  நான் I CARE HOSPITAL  க்கு போயிருந்தேன் டீச்சர்.

ஹுமைரா ;   I CARE HOSPITAL க்கா…. எதுக்கு?                                  

இப்திஸாம் ; என் கண்ண  TEST பண்றதுக்கு டீச்சர்.

ஹுமைரா ;  என்ன--- TEST பன்னியாச்சா?                                                             

இப்திஸாம் ; இல்ல டீச்சர்.

ஹுமைராஏன் என்ன ஆச்சி….?                                                                                                                 
இப்திஸாம் ; நான் HOSPITAL-க்கு போனேன். அங்க வெளிய ஒரு BOARD போட்டிருந்தாங்க. அதுல----D.R.முருகன், பார்வை நேரம்-10-to-1 ன்னு போட்டிருந்தாங்க. D.R க்கே 10-to-1 வரைக்கும் தான் கண் தெரியமாம்.அவர்ட்ட போய் எப்டி TEST பன்னுறதுன்னு சொல்லி தான் டீச்சர்  திரும்ப வந்துட்டேன்.

ஹுமைரா ; அடிப்பாவி  அத அப்டியா விளங்குறது--- அது சரி--- CLASS நான் கேள்வி கேக்க ஆரம்பிச்ச உடனே  நீ கண்ண மூடி தூங்க ஆரம்பிச்சர்ரயே எதுக்கு?                                                                                         

இப்திஸாம் ; நீங்க தானே டீச்சர் எப்போ கேள்வி கேட்டாலும் முழிச்சிகிட்டே இருக்காத டீ அப்டின்னு சொன்னீங்க அதான் டீச்சர் தூங்கிட்டேன்.

ஹுமைரா ;  அட மக்கு--- மக்குகேள்வி கேக்கும் போது திரு திருன்னு முழிக்காத டீ அப்டின்னு சொன்னேன். உன்ன என்ன தூங்கவா சொன்னேன். சரி---வீட்ல எதோ தினமும் குழிக்குள்ள உக்காந்து படிக்கறியாமே எதுக்கு?                                   

இப்திஸாம் ; நீங்க தானே டீச்சர் எதப் படிச்சாலும் ஆழமா  படிக்கனும்னு சொன்னீங்க அதான் டீச்சர் எங்க வாப்பாட்ட சொல்லி குழி தோண்டி உள்ள உக்காந்து படிக்கிறேன்.

ஹுமைரா ; அப்டியா VERY GOOD DOUGHTER , VERY GOOD FATHER. ஆமா நான் இங்க அம்மா சுட்ட தோசை அம்மா சுட்ட தோசைன்னு சொல்லிக் கொடுக்குறேன். நீ என்ன அப்பா சுட்ட தோசை அப்பா சுட்ட தோசைன்னு சொல்லிக்கிட்டு இருக்குற என்ன காது கேக்கலியா உனக்கு?                                                                                                                
இப்திஸாம் ;  நீங்க தானே டீச்சர் எப்பவும் பொய் சொல்லக்கூடாதுன்னு சொன்னீங்க அதான் டீச்சர் அப்டி சொன்னேன். ஏன்னா இன்னைக்கி எங்க வாப்பா தான் தோசை சுட்டாங்க டீச்சர்.

ஹுமைராஆமாஎதுக்கு  டீஉஃப் உஃப் ன்னு ஊதிக்கிட்டே இருக்குற?                                                                                                                                                                                  
இப்திஸாம் ; நீங்க தானே டீச்சர் ஊதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்னு படிச்சிக் கொடுத்தீங்க.அதான் ஊதிக்கிட்டு இருக்கேன்.

ஹுமைரா ; அடிப்பாவி அது ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம் டீ   எப்டி விளங்கி வச்சிருக்கா பாரு.  ஆமா கையில என்ன வச்சிருக்க?                                                                

இப்திஸாம் ;  90 ரூபா டீச்சர். எங்க வாப்பா பாக்கைட்ல இருந்து எடுத்துட்டு வந்தேன்.

ஹுமைரா ;  வாப்பா பாக்கைட்ல இருந்தா ….. எதுக்கு டீ எடுத்துட்டு வந்த?                                                                                                                

இப்திஸாம் ; நீங்க தானே டீச்சர் 100-க்கு 90 எடுக்கனும்னு சொன்னீங்க அதான் டீச்சர் எடுத்துட்டு வந்தேன்.

ஹுமைரா ; அடிப்பாவி 100-க்கு 90 மார்க் எடுக்கனும்னு சொன்னேன் டீ. ரூபாயவா எடுக்கச் சொன்னேன்.உன்ன வச்சி பாடம் நடத்துனா இந்த ஸ்கூல் விளங்கும். சரி---காக்காவ புடிச்சி தண்ணீல போட்டு வச்சியாமே எதுக்கு?                                                                                                            

இப்திஸாம் ; நீங்க தானே டீச்சர் காகம் கறையும் அப்டின்னு சொன்னீங்க அதான் தண்ணீல போட்டு கறையுதான்னு பாத்தேன் டீச்சர்.

ஹுமைரா ; அய்யோ இதுக்கு மேல கேள்வி கேட்டேன்---எனக்கு பைத்தியமே புடிச்சிரும் நீ போயிட்டு வாம்மா.                                                       

இப்திஸாம் ; ங்க டீச்சர் போவனும்.

    ஹுமைரா ; ---எங்கயாவது போய் தொல என்ன ஆள வுடு.


                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                     
                                                                                                                                                                
                                                                                                                
                                                                                                                                                                                        



No comments:

Post a Comment