Friday, March 7, 2014

உரையாடல் - டீச்சர்,மாணவன்

                                                     
சமீரா ; டேய் என்னடா? EXAM ல இவ்ளோ கம்மியா மார்க் வாங்கி இருக்க….

நவ்ஷாத் ; இப்ப விக்கிற விலை வாசியில எதையுமே அதிகமா வாங்க முடியல டீச்சர்.
           

சமீரா ; டேய் திருவள்ளுவர் னா யாருன்னு தெரியுமாடா?

நவ்ஷாத் ; தெரியாது டீச்சர்.                        

சமீரா ; பாடத்துல கவனம் செலுத்துடா

நவ்ஷாத் ; பூஜா ஆண்ட்டி யாருன்னு உங்களுக்கு தெரியுமா டீச்சர்?

சமீரா ; தெரியாது ஏன்டா கேக்குற?

நவ்ஷாத் ; உங்க புருஷன் மேல கவனம் செதுத்துங்க டீச்சர். 

சமீரா ; டேய் உண்மையான தமிழன் யாருடா?

நவ்ஷாத் ; இங்லீஸ் பேப்பர்ல ஃபெயில் ஆகுரவன் தான் டீச்சர் உண்மையான தமிழன்.                                

சமீரா ; டேய் கடல் நடுவுல ஒரு மாமரம் இருக்குது. அதுலயிருந்து மாம்பலத்த எப்டிடா பறிப்ப?

நவ்ஷாத் ; பறவ மாதிரி பறந்து பறந்து பறிப்பேன் டீச்சர்.      

சமீரா ; பறவ மாதிரி உன்ன உங்க தாத்தாவாடா மாத்துவாரு….

நவ்ஷாத் ; கடல் நடுவுல மரத்த உங்க தாத்தாவோட தாத்தாவா டீச்சர் வைப்பாரு.                       

சமீரா ; டேய் உன் வயசுல லாம் அப்துல் கலாம் எப்டி படிச்சார் தெரியுமாடா முண்டம்?

நவ்ஷாத் ; அவர் உங்க வயசுல பிரசிடன்ட் டா ஆனார் நீங்களும் இருக்கீங்களே தெண்டம்.                                           

சமீரா ; டேய் இந்த வயசுலயே சிகரட் குடிக்கிறியாமே உங்க அப்பாவ கூப்புட்டு வாடா நான் கேக்குறேன்   

நவ்ஷாத் ; சாரி டீச்சர் எங்க அப்பா கேட்டா உங்களுக்கு தர மாட்டாரு. நான் கேட்டே தரல. நீங்க கேட்டா தரப்போராரு...       

சமீரா ; டேய் அசோகர் ஏண்டா வீதியில மரம் நட்டுனாரு?    

நவ்ஷாத் ; நடு ரோட்ல நட்டுனா டிராஃபிக் ஜாம் ஆகிடும் டீச்சர். அதான் ஓரமா நட்டுனாரு.           

சமீரா ; டேய் சோல்லுடா சுத்தம் சோறு போடும்

நவ்ஷாத் ; சால்னாவ யார் டீச்சர் போடுவாங்க.                           

சமீரா ; டேய் வயிறு காலியா இருந்தா அடிக்கடி வயிறு வலிக்கத்தாணாடா செய்யும்

நவ்ஷாத் ; ஓ....நீங்க்  அடிக்கடி தலைவலின்னு சொல்றீங்களே உங்க தலையும் காலியா தான் இருக்குதா டீச்சர்.                               
சமீரா ; டேய் நான் இங்க கழுத மாதிரி கத்துறேன் அங்க என்னடா பன்னிகிட்டு இருக்குற?

நவ்ஷாத் ; சாரி டீச்சர் உண்மையிலேயே கழுத தான் கத்துதுன்னு நெனச்சேன்.                                                            

சமீரா ; இப்ப நான் கேள்வி கேப்பேன்.எந்த கேள்வி கேட்டாலும் டான் டான்னு பதில் சொல்லனும் என்ன...?

நவ்ஷாத் ; சரி டீச்சர்.                                           

சமீரா ; நம் நாட்டு ஜனாதிபதி யாருடா?


நவ்ஷாத் ; டான் டான்.                                    

சமீரா ; நம் நாட்டு பிரதமர் யாருடா?

நவ்ஷாத் ; டான் டான்.                                    

சமீரா ; உன் பேரு என்னடா?

நவ்ஷாத் ; டான் டான்.                                          

சமீரா ; நீ புள்ளையா குரங்காடா?

நவ்ஷாத் ; டான் டான்.  

                                                                                                    
                                                                                                                                               
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                     


No comments:

Post a Comment