Friday, March 7, 2014

உரையாடல் - அண்ணன்,தங்கை

                                                               
இப்ராஹீம் ; அஸ்ஸலாமு அலைக்கும் தங்கச்சி.

ஹுமைரா ; வ அலைக்குமுஸ்ஸலாம் அண்ணே                                               

இப்ராஹீம் ; என்னம்மா ரொம்ப சோகமா இருக்க?


ஹுமைரா ;  அதெல்லாம் ஒன்னு மில்ல அண்ணே                                  

இப்ராஹீம் ; சும்மா சொல்லு அதான் உன் மூஞ்ச பாத்தாவே தெரியுதே

ஹுமைரா ;  உங்க கிட்ட சொல்றதுக்கு என்ன. எனக்கு எத எடுத்தாலும் தோல்வியாவே போவுது. என் நேரமே சரியில்ல அண்ணே என்ன பன்றது                            

இப்ராஹீம் ;  ஏன் என்ன ஆச்சி.

ஹுமைரா ;  என் மகளுக்கு கல்யானம் ஆச்சு. ஆனா ரண்டு மாசத்திலேயே புருஷனோட சண்ட போட்டுட்டு ஒடி வந்துட்டா. நல்ல நேரம் பாக்காம கல்யாணம் பன்னி வச்சோம். அதான் இப்படி ஆயிடுச்சி.                                                            

இப்ராஹீம் ;  அதுக்கு காலத்த ஏம்மா திட்டுற!

ஹுமைரா ஏன்னேகூடாது?                                                   
இப்ராஹீம் ;  காலத்தையும் நேரத்தையும் நான் இயக்குகிறேன்.அதை திட்டாதீங்க. அது என்ன திட்டுறதுக்கு சமம்னு அல்லாஹ் சொல்றான் தெரியுமா?

ஹுமைரா ;  அப்படியா! இது எனக்கு தெரியாதே.இன்ஷா அல்லாஹ் இனி நான் திட்ட மாட்டேன்.ஆனா என் மகளுக்கு மாப்ள பாக்குறதுக்காக வீட்ட வுட்டு கிழம்பும் போது ஒரு பூன குறுக்க போச்சு. அந்த சனியனால தான் இப்டி ஆயிடுச்சின்னு நினக்கிறேன்.                             

இப்ராஹீம் ;  ஏய்! முதல்ல கெட்ட நேரம் கெட்ட காலம்னு காலத்த திட்டுன. இப்ப பூனை குறுக்க போயிடுச்சுன்னு பூனைய திட்டுற. பூன குறுக்க போனதுனால தான் உன் மகள் வாழ்க்கை வீணாப்போச்சின்னு பூனைய திட்டுற. ஆனால் நீ குறுக்க போனதுனால அந்த பூனையே செத்துப்போச்சே அது உனக்கு தெரியுமா?

ஹுமைரா ;  அப்டிய்யா!!!                                      

இப்ராஹீம் ;  அது மட்டுமில்லாம இப்படி சகுணம் பாக்குறது ஷைத்தானுடைய வேளன்னு நபி ஸல் அவங்க செல்லியிருக்காங்க. அதனால எது நடந்தாலும் அல்லாஹ்வோட நாட்டம்னு தான்  நினைக்கனும் புரிஞ்சுதா?

ஹுமைரா ;  புரியுது அண்ணே.                                                              
இப்ராஹீம் ;  சரி இப்ப என்ன யோசிக்கிற?

ஹுமைரா ;  இல்ல நாளைக்கு ஒரு ஜோஷியக்காரன்ட போய் இதப்பத்தி கேக்கலாம்னு நினைக்கிறேன்.                                                 

இப்ராஹீம் ;  நீ முதல்ல முஸ்லிமா? இல்லையா? அத சொல்லு.

ஹுமைரா ;  ஏண்ணே அப்டி கேக்குறீங்க?                                

இப்ராஹீம் ;  பின்ன என்னம்மா  நீ செய்ற ஒவ்வொரு காரியமும் 
இஸ்லாத்துக்கு எதிராலோ இருக்குது. நல்ல நேரம் கெட்ட நேரம் பாக்குறது, சகுணம் பாக்குறது, ஜோஷியம் பாக்குறது, இதெல்லாம் அல்லஹ்வோட கோபத்த ஏற்படுத்தக் கூடிய செயல். அது மட்டுமில்லாம ஜோஷியம் பார்த்தா 40 நாளோட தொழுகை ஏற்றுக் கொள்ளப்படாதுன்னு  நபி ஸல் அவங்க சொல்லியிருக்காங்க.

ஹுமைரா ;  அப்டியாண்ணே! இது வரைக்கும் எது சரி எது தவறுன்னு தெரியாம  செய்துகிட்டு இருந்தேன். இன்ஷா அல்லாஹ் இனி நான் இப்டி செய்ய மாட்டேன் ஆனா இன்னைக்கு பல பேர் இப்டித்தானே செய்றாங்க.                                                  

இப்ராஹீம் ;  அவங்க நரகத்தின் பாதைய தேடுறாங்க ஏன் உனக்கும் நரகம் வேணுமா?

ஹுமைரா ;  வேணாம் வேணாம். நான் ரொம்ப தெளிவாயிட்டேன். சரி இப்ப நான் என்ன பன்றது?       

இப்ராஹீம் ;  உன் கவலைய அல்லாஹ்ட்ட சொல்லு. அல்லாஹ் நம் கவலைய போக்குவான்.

ஹுமைரா ;  சரி அல்லாஹ்கிட்டயே கேக்குறேன். யா அல்லாஹ்! என்னுடைய கவலய போக்கி மகிழ்ச்சியைக் கொடு. என் மகளுக்கு நல்ல வாழ்க்கையைக் கொடு. சகுணம் பார்ப்பது ஜோஷியம் பார்ப்பது இது மாதிரியான பாவங்களிலிருந்து எங்களையும் இந்த கேம்பலாபாத் மக்களையும் காப்பாற்று.        

இப்ராஹீம் ;  ஆமீன்.

                                                                             
                 
                                                                 
                                                                       
.                                                                                   
                                                                                                      .                                                                                                                             
                                                                                         

                                                                                                                                                

3 comments: