Monday, March 7, 2022

தொழுகை

 الحمد لله والصلوة والسلام علي رسول الله سيدنا محمد واله وصحبه اجمعين اما بعد قال الله تعالي في القران العظيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

அனவற்ற அருளாளன் நிதரற்ற அன்புடையோன் வல்லோன் அல்லாஹ்வின் திருநாமத்தால் ஆரம்பம் செய்கிறேன்.சாந்தியும் சமாதானமும் எங்கள் உயிரிலும் மேலான கண்மனி நாயகம் ரசூலுல்லாஹி ஸல் அவர்களின் மீதும் பரிசுத்தமான அவர்களின் குடும்பத்தார் மீது உன்னதமான அவர்களின் தோழர்கள் மீதும் உண்டாகட்டுமாக.


இந்த மாமன்றத்தில் தொழுகையைப் பேணுவோம் என்ற தலைப்பு எனக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

அன்பிற்குறிய அல்லாஹ்வின் நல்லடியார்களே நாம் இப்போது ஷஃபர் மாதத்திலே இருந்து கொண்டிருக்கிறோம்.இஸ்லாமிய ஆண்டின் முதல் மாதமான முஹர்ரம் மாதம் ஹள்ரத் ஹுஸைன் ரலி அவர்களின் தியாகத்தையும், இறுதி மாதமான துல்ஹஜ் மாதம் இப்ராஹீம் நபியின் குடும்பத்தார் செய்த தியாகத்தை நமக்கு நினைவுபடுத்தும்.ஆண்டின் தொடக்கமும் தியாகம், இறுதியும் தியாகம்.முதலும் தியாகம்,முடிவும் தியாகம்.

அன்பிற்குறிய அல்லாஹ்வின் நல்லடியார்களே தொடக்கத்திலும், முடிவிலும் தியாகத்தை அமைத்து வைத்த இறைவன் நமக்கு சொல்லும் செய்தி என்னவென்றால்-முஸ்லிமாக பிறந்த ஒருவன் வாழுகிறபோது தியாக உணர்வோடு வாழ வேண்டும்,அல்லாஹ்விற்காக எதையும் தியாகம் செய்யத் துணிய வேண்டும்,மார்க்க சட்ட திட்டங்களை செயலாற்றுவதில் ஏற்படும் சிரமங்களைத்தாங்கிக் கொள்ள வேண்டும்.நல்லதை செய்வதிலும்,தீயதை விட்டு விலகுவதிலும் ஏற்படும் கஷ்டங்களை சகித்துப் பொறுமை கொள்ள வேண்டும் என்பதை இறைவன் நமக்கு இந்த மாதங்களின் வழியாக சொல்கிறான். 

சுருங்கச்சொல்ல வேண்டும் என்றால் நாம் வாழ்க்கையில் அனுபவித்துக் கொண்டிருக்கிற அனைத்தும் இறைவன் தந்தவை.உண்ணும் உணவு, உடுத்தும் உடை, தங்கும் இருப்பிடம்,செலவழிக்கும் பணம், ஏன்  நமது பேச்சி முதல் நமது மூச்சி வரை எல்லாம் அல்லாஹ் கொடுத்தவை. அவைகளை தேவைக்குப் பயன்படுத்துகிற நாம் தேவைப்படுகிறபோது அவைகளை இறைவனுக்காக தியாகமும் செய்ய வேண்டும். அப்போது தான் நாம் உண்மை முஸ்லிம்களாக ஆக முடியும். இப்ராஹீம் நபியின் வாழ்க்கை நமக்கு இதைத்தான் உணர்த்துகிறது.

ஆனால் இன்றைக்கு நமது நிலை என்ன? ஆயிரம்  ஆயிரமாக சம்பாதிக்கிற நாம் அதில் இரண்டரை சதவீதம் ஜக்காத் கொடுக்க முடியவில்லை.பல லட்சம் சம்பாதிக்கும் நம்மால் அல்லாஹ்வுக்காக ஒரு ஹஜ் செய்ய முடியவில்லை.பல மணி நேரங்களை அரட்டையிலும், குரட்டையிலும், டீவி பார்ப்பதிலும்,வீண் விளையாட்டுகளிலும் கழிக்கிற நாம் ஒரு பத்து நிமிடத்தை தொழுகைக்காக ஒதுக்குவதில்லை. இதுதான் நமது நிலை.அல்லாஹ்விற்காக உலகத்தை ஒதுக்க வேண்டும்.ஆனால் இன்றைக்கு நாம் உலகத்திற்காக அல்லாஹ்வையே ஒதுக்கி விட்டோம். காரணம் நமக்கு தொழுகையின் மகத்துவம் புரியவில்லை.தொழுகையின் அருமை விளங்க வில்லை.

ஒரு நாளைக்கு பல மணி நேரங்களை டீவிக்காகவும், விளையாட்டுக் காகவும் ஒதுக்குகிற நாம் ஒரு 10 நிமிடத்தை அல்லாவுக்காகவும், தொழுகைக்காகவும் ஒதுக்குவதில்லை. 

அன்பிற்குறியவர்களே இன்னைக்கு நாம தொழுகாம இருக்குறத ரொம்ப சாதாரணமா நினைக்கிறோம். ஆனா அது எந்த அளவுக்கு அல்லாவோட கோபத்தையும் வேதனையையும் ஏற்படுத்தும் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒருவர் ஒரு காட்டுப் பகுதியில தங்கியிருந்தார். கூடவே அவனோடு ஒரு ஷைத்தானும் தங்கியிருந்தான். இரவு நேரம் வந்ததும் அவர விட்டு ஷைத்தான் விரண்டோடினான். ஏன் திடீர்னு ஓடுற அப்டின்னு அந்த மனிதர் கேட்டார். அப்ப ஷைத்தான் சொன்னான்.----நான் ஒரு நாள் முழுதும் உன் கூட இருந்திருக்கேன்.இந்த ஒரு நாள்ள நீ ஒரு தொழுகையையும் தொழுகல்ல. வாழ்க்கைல ஒரே ஒரு தடவ அல்லாவுடைய கட்டளையை மீறினேன்.அதுக்கே என் நிலம இப்டி ஆயிப்பேச்சு. ஆனா நீ ஒரு நாளைக்கே 5 தடவ அல்லாஹ்வோட கட்டளைய மீர்ர,அதனால எப்டியும் அவனோட கோபப்பார்வையும் வேதனையும் இறங்குறது நிச்சயம்.அதனால தான் உன் கிட்ட இருந்து ஓடுறேன் அப்டின்னு சொன்னான்.அன்பானவர்களே ஒரு நாளைக்கு 5 வேளை தொழுகையை விட்டதுக்கே அல்லாஹ்வோட கோபப்பார்வ இறங்கும்னு சொன்னா  ஒவ்வொரு நாளும் விடக்கூடிய நமது நில என்னவாகும் என்று யோசித்துப்பார்க்க வேண்டும்

ஒரு முஸ்லிமுக்கும் ஒரு காஃபிருக்கும் மத்தியில் வித்தியாசமே தொழுகை தான் என்றார்கள் நபி ஸல் அவர்கள்.எனவே நம்மில் எத்தனை பேர் முஸ்லிம்களாக இருக்கிறோம் எத்தனை பேர் காஃபிர்களாக இருக்கிறோம் என்று எண்ணிப்பார்க்க வேண்டும்.

நாளை கியாமத் நாளில் நரக வாசிகளைப்பார்த்து நீங்கள் எதன் காரணமாக நரகம் வந்தீர்கள் என்று சொர்க்கவாசிகள் கேக்கும்போது லம் நகு மினல் முஸல்லீன் நாங்கள் உலகத்தில் தொழாமல் இருந்தோம் என்று நரகவாதிகள் சொல்வார்கள் என்று அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்.எனவே நாம் செல்லும் இடம் எதுவென்று நாம் தான் முடிவு செய்ய வேண்டும்.

ஆனால் இன்றைக்கு தொழுகையில் நமது நிலை எப்டி இருக்குது----வீட்ல ஏதாவது விஷேசம்னா தொழுவோம், இல்லன்னா தொழ மாட்டோம்.வீட்ல ஏதாவது பிரச்சனன்னா தொழுவோம், இல்லன்னா தொழ மாட்டோம். சும்மா இருந்தா தொழுவோம், வேலை இருந்தா தொழ மாட்டோம். முழிச்சிகிட்டு இருந்தா தொழுவோம், தூங்குனா தொழ மாட்டோம். இப்டி அல்லாஹ் கடமையாக்கிய தொழுகைய என்னமோ நாமலே உருவாக்குன மாதிரி நம்ம தேவைக்கு பயன்படுத்தி கிட்டு இருக்கோம். அன்பிற்குறியவர்களே நாம் தொழுகையில் விளையாடுகிற இந்த விளையாட்டை இறைவன் பார்த்துக்கொண்டிருக்கிறான் என்பதை நாம் நம் நினைவில் வைக்க வேண்டும்.

இன்னைக்கி நாம தொழுகாட்டியும் நாம செய்ற மத்த நல்ல காரியம் நம்ம சொர்க்கம் செல்ல வைக்கும் என்று கணக்கு போட்டு வைத்திருக்கிறோம் ஆனால் இது தப்பு கணக்கு என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் கியாமத் நாளில் முதன் முதலில் ஒருவனிடம் தொழுகையைத்தான் பார்க்கப்படும். அது ஒழுங்காக இருந்தால் தான் மற்ற அமல்களை இறைவன் பார்க்கிறான் தொழுகை இல்லையென்றால் மற்ற எந்த அமலையும் இறைவன் பார்ப்பதில்லை என்று கண்மனி நாயகம் ஸல் அவர்கள் கூறுகிறார்கள். எனவே தொழுகை இல்லாமல் மற்ற எந்த அமலும் பிரயோஜனம் தராது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

எனவே இறைவன் கடமையாக்கிய அந்த தொழுகையில் கவனம் செலுத்துவோம் அல்லாஹ்வின் கோபப்பார்வையிலிருந்து தப்பித்து ஈருலகிலும் ஏற்றம் பெறுவோம் அல்லாஹ் நம் எல்லோருக்கும் அருள்புரிவானாக ஆமீன்.


No comments:

Post a Comment