Friday, April 14, 2023

நரகம்

 அல்லாஹ்வின் அருளால் புனித ரமலானை அடைந்து அதன் முதல் இரு பகுதிகளைக் கடந்து அதன் மிக முக்கியமான மூன்றாவது பகுதியில் இருக்கிறோம். ரமலான் மாதத்தினுடைய மூன்றாம் பகுதி நரகத்தின் விடுதலையை நரகிலிருந்து பாதுகாப்பை நம்மைப்படைத்த ரப்புல் ஆலமீனிடம் கேட்கும் ஒரு பகுதி. இந்த நேரத்தில் நரகத்தைப் பற்றிய சிந்தனை நமக்கு வர வேண்டும்.உண்மையில் நரகத்தின் சிந்தனை நம் வாழ்க்கையை செதுக்கும், பக்குவப்படுத்தும். நமக்கு இறையச்சத்தைத் தரும். பாவங்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கும். வணக்க வழிபாடுகளில் அதீத ஈடுபாட்டைத் தரும்.

عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : " نَارُكُمْ هَذِهِ الَّتِي يُوقِدُ ابْنُ آدَمَ جُزْءٌ مِنْ سَبْعِينَ جُزْءًا مِنْ حَرِّ جَهَنَّمَ ". قَالُوا : وَاللَّهِ إِنْ كَانَتْ لَكَافِيَةً يَا رَسُولَ اللَّهِ. قَالَ : " فَإِنَّهَا فُضِّلَتْ عَلَيْهَا بِتِسْعَةٍ وَسِتِّينَ جُزْءًا، كُلُّهَا مِثْلُ حَرِّهَا

 

 

உங்களின் உலக நெருப்பு நரக நெருப்பின் எழுபது பாகங்களிலிருந்து ஒரு பாகமாகும் என்று நபி அவர்கள் கூறினார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் அவர்களே! இந்த உலக நெருப்ப போதுமானதாக ஆகி விடுமே என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி அவர்கள் உலக நெருப்பை விட நரக நெருப்பு 69 பாகங்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் ஒவ்வொரு பாகமும் உலக நெருப்பின் வெப்பத்திற்கு சமமானதாகும் என்று கூறினார்கள். (முஸ்லிம்  ; 2843)

மறுமையில் உள்ள நெருப்புக்கும் இம்மையில் உள்ள நெருப்புக்கும் உள்ள வேறுபாட்டை ஹதீஸ் விவரிக்கின்றது. இந்த வேறுபாட்டை தவிர இன்னும் பல வேறுபாடுகள் உள்ளன. இந்த உலகத்தைப் பொறுத்த வரை கோடை காலத்தில் வெயில் கொளுத்தினாலும் பருவ காலம் மாறி மழை காலமோ குளிர் காலமோ வந்து விட்டால் அதிலிருந்து நாம் நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். அதல்லாமல் நிழல் தருகின்ற இடத்திற்கு சென்று விட்டாலும் சூரிய வெபத்திலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். அதே போன்று ஒருவேளை அந்த வெப்பத்தினால் ஒருவர் இறந்து விட்டாலும் இந்த உலகத்தில் அத்தோடு அதனுடைய வேதனை முடிந்து போய் விடும். மரணம் அவனை அந்த வேதனையிலிருந்து காத்து விடும். ஆனால் மறுமையின் வேதனை அப்படியல்ல.

மறுமையில் மரணம் கிடையாது.

الَّذِىْ يَصْلَى النَّارَ الْكُبْرٰى‌‏

(எனினும்,) அவன் (நரகத்தின்) பெரிய நெருப்பை   அடைவான். (அல்குர்ஆன் : 87:12)

ثُمَّ لَا يَمُوْتُ فِيْهَا وَلَا يَحْيٰى‏

பின்னர், அதில் அவன் மரணிக்கவுமாட்டான்; (சுகமாக) வாழவும் மாட்டான். (அல்குர்ஆன் : 87:13)

وأما حر الدنيا فإنه يتقى, فقد مد الله لعباده الظل يقيهم الحر, ورزقهم الماء يرويهم من العطش, وأوجد لهم الهواء والريح الكريمة تلطف وتهون من شدة الفيح.

أما في جهنم فإن هذه الثلاثة تنقلب عذاباً على أهلها فالهواء سموم,والظل يحموم والماء حميم

பொதுவாக உலகிலுள்ள வெப்பத்திலிருந்து மூன்று முறையில் நம்மை நாம் தற்காத்துக் கொள்ள முடியும். 1, நிழல் 2, தண்ணீர். 3, காற்று. ஆனால் நரகில் இந்த மூன்றே வேதனை தரும் பொருளாக மாறி விடும். நிழல் என்பது அடர்ந்த இருண்ட புகையாகவும், தண்ணீர் கடுமையான கொதிக்கும் நீராகவும், காற்று கொடிய வெப்பமாகவும் இருக்கும்.

وَاَصْحٰبُ الشِّمَالِ ۙ مَاۤ اَصْحٰبُ الشِّمَالِ‏

இடப்பக்கத்தில் உள்ளவர்களோ, இவர்களின் துர்ப்பாக்கியம் தான் என்னே! (அல்குர்ஆன் : 56:41)

فِىْ سَمُوْمٍ وَّحَمِيْمٍۙ‏

(அவர்கள்) கொடிய வெப்பத்திலும், முற்றிலும் கொதிக்கும் நீரிலும், (அல்குர்ஆன் : 56:42)

وَّظِلٍّ مِّنْ يَّحْمُوْمٍۙ‏

அடர்ந்த இருண்ட புகையின் மத்தியிலும் இருப்பார்கள். (அல்குர்ஆன் : 56:43)

لَّا بَارِدٍ وَّلَا كَرِيْمٍ‏

(அங்குக்) குளிர்ச்சியான பானமும் இருக்காது; சங்கையான எதுவும் இருக்காது. (அல்குர்ஆன் : 56:44)

இன்னொரு விஷயத்தில் சீர்சலம் அவர்களுக்கு நீராக புகட்டப்படும் என்று வந்துள்ளது.

مِّنْ وَّرَآٮِٕهٖ جَهَـنَّمُ وَيُسْقٰى مِنْ مَّآءٍ صَدِيْدٍۙ‏

அவர்களுக்கு பின்புறம் நரகம்தான் இருக்கிறது. (அங்குதான் அவர்கள் செல்ல வேண்டும். நரகவாசிகளின் தேகத்திலிருந்து வடியும்) சீழ்தான் அவர்களுக்கு (நீராக)ப் புகட்டப்படும். (அல்குர்ஆன் : 14:16)

يَّتَجَرَّعُهٗ وَلَا يَكَادُ يُسِيْـغُهٗ وَيَاْتِيْهِ الْمَوْتُ مِنْ كُلِّ مَكَانٍ وَّمَا هُوَ بِمَيِّتٍ‌ وَمِنْ وَّرَآٮِٕهٖ عَذَابٌ غَلِيْظٌ‏

அதனை அவர்கள் (மிகக் கஷ்டத்தோடு) சிறுகச் சிறுக விழுங்குவார்கள். எனினும், அது அவர்களுடைய தொண்டைகளில் இறங்காது; (விக்கிக்கொள்ளும்.) ஒவ்வொரு திசையிலிருந்தும் மரணமே அவர்களை நோக்கி வந்துகொண்டிருக்கும்; எனினும், அவர்கள் இறந்துவிட மாட்டார்கள். இதற்குப் பின் கடினமான வேதனையையும் அவர்கள் சந்திக்க நேரிடும். (அல்குர்ஆன் : 14:17)

உலகில் வாழும் மனிதர்களின் சராசரி உயரம் 5 அடி, எடை 80 கிலோ இருக்கிறார்கள். ஆனால் நரகவாசிகளின் உடம்பு, பூமியில் இருப்பது போல் சராசரி ஐந்தடி உயரம் எண்பது கிலோ எடையில் இருக்காது.

عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " ضِرْسُ الْكَافِرِ - أَوْ نَابُ الْكَافِرِ - مِثْلُ أُحُدٍ، وَغِلَظُ جِلْدِهِ مَسِيرَةُ ثَلَاثٍ ".

 (நரகத்தில்) இறை மறுப்பாளனின் கடவாய்ப்பல்அல்லது கோரைப்பல்உஹுத் மலையைப் போன்றிருக்கும்.  அவனது தோலின் பருமன் மூன்று நாள் நடைப் பயணத் தொலைவுடையதாக இருக்கும்.    (முஸ்லிம் ; 5479)

 

நரகவாசிகளின் உடல், கொடும் வெப்ப வேதனையை நன்கு ருசிப்பதற்க்காக அல்லாஹ்வால் பிரமாண்ட மாமிச மலையாக மாற்றப்பட்டே நரகில் தள்ளப்படுவார்கள். மேலும் சொர்க்க, நரகவாசிகளுக்கு மீண்டும் ஒரு மரணம் இல்லை. ஆகவே நரகவாசிகள் கொடும் நெருப்பால் சுடப்பட்டு பஸ்பமாக ஆகிவிடக் கூடாது என்பதற்காகவே மிக கனமான தோல் போர்த்தப்பட்டு, இறப்பில்லா நீடித்த வேதனை அனுபவித்துக் கொண்டே இருப்பார்கள். மனிதன் தோலில் தான் வலி உணர்வு நரம்புகள் அமைந்துள்ளது. தோலில் உள்ள இந்த நரம்புகள் எரிந்து விட்டாலோ அல்லது அழுகி விட்டாலோ மனிதனால் வலியை உணர முடியாது.எனவே அவர்களின் தோல்கள் கருகி வலியுணர்ச்சி குறையும் போது மீண்டும் புதுத் தோல் மாற்றப்பட்டு வலி வேதனையை தொடர்ந்து உணர்ந்து கதறுவார்கள்.

اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا بِاٰيٰتِنَا سَوْفَ نُصْلِيْهِمْ نَارًا  كُلَّمَا نَضِجَتْ جُلُوْدُهُمْ بَدَّلْنٰهُمْ جُلُوْدًا غَيْرَهَا لِيَذُوْقُوا الْعَذَابَ‌  اِنَّ اللّٰهَ كَانَ عَزِيْزًا حَكِيْمًا‏

எவர்கள் நம்முடைய (இவ்வேத) வசனங்களை நிராகரிக்கின்றார்களோ அவர்களை நிச்சயமாக நாம் (மறுமையில்) நரகத்தில் சேர்த்து விடுவோம். அவர்கள் வேதனையைத் தொடர்ந்து அனுபவிப்பதற்காக அவர்களுடைய தோல்கருகி விடும் போதெல்லாம் மற்றொரு புதிய தோலை மாற்றிக்கொண்டே இருப்போம். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனும், ஞானமுடைய வாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் : 4:56)

நரகத்தின் ஆளம்


رواه أبو هريرة رضي الله عنه قال: كنا مع رسول الله صلى الله عليه وسلم , إذ سمع وجبة (أي سقطة) فقال النبي صلى الله عليه وسلم :" تدرون ما هذا؟ قلنا: الله ورسوله أعلم. قال: هذا حجر رمي به في النار منذ سبعين خريفاً, فهو يهوى في النار إلى الآن" [مسلم

(ஒருமுறை) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் அவர்களுடன் இருந்தோம். அப்போது, ஏதோ விழுந்த சப்தத்தை அவர்கள் கேட்டார்கள். (நாங்களும் கேட்டோம்) அப்போது அல்லாஹ்வின் தூதர் அவர்கள், “இது என்ன சப்தம் என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். நாங்கள், “அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்கறிந்தவர்கள்என்று சொன்னோம். நபி அவர்கள், “ இது எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் நரகத்தில் தூக்கியெறியப்பட்ட ஒரு கல்லாகும், அது இந்த நேரம் வரை சென்று கொண்டேயிருந்து இப்போது தான் அதன் ஆழத்தை எட்டியது என்று சொன்னார்கள். (முஸ்லிம் ; 5466)

நரகத்தின் குறைந்த பட்ச வேதனை

فعن النعمان بن بشير رضي الله عنه قال: سمعت النبي صلى الله عليه وسلم يقول:"إن أهون أهل النار عذاباً يوم القيامة رحل يوضع على أخمص قدميه جمرتان يغلي منهما دماغه

மறுமையில் மிகக்குறைந்த வேதனை என்பது ஒரு மனிதனின் பாதத்தில் நெருப்பாலான செருப்புக்கள் அணிவிக்கப்படும். அதனால் உஷ்ணத்தால் அவனுடைய மூளை உருகி வடியும். (புகாரி ; 6561)

நரகத்தில் ஒருவர் இருக்கும் குறைந்த பட்ச கால அளவு என்பது நாற்பது ஆண்டுகள்.குறைந்த பட்ச அளவே நாற்பது வருடங்கள் என்றால் அதன் கூடுதல் அளவு என்னவென்பதை இறைவனுக்கு மட்டுமே தெரியும். அல்லாஹ் பாதுகாப்பானாக!

اِنَّ جَهَنَّمَ كَانَتْ مِرْصَادًا ۙ‏

நிச்சயமாக நரகம் (இந்தப் பாவிகளின் வரவை) எதிர் பார்த்துக் கொண்டிருக்கின்றது. (அல்குர்ஆன் : 78:21)

لِّلطّٰغِيْنَ مَاٰبًا ۙ‏

(பாவிகளாகிய) இந்த அநியாயக்காரர்கள் தங்குமிடம் அதுவே. (அல்குர்ஆன் : 78:22)

لّٰبِثِيْنَ فِيْهَاۤ اَحْقَابًا‌ ‏

அதில் அவர்கள் நீண்ட காலங்கள் தங்கிவிடுவார்கள். (அல்குர்ஆன் : 78:23)

عن أبي هريرة: أنه قال: الحُقب: ثمانون سنة، والسنة: ستون وثلاث مئة يوم، واليوم: ألف سنة

இந்த வசனத்தில் வந்திருக்கும் ஹுக்ப் என்ற வார்த்தைக்கு அபூஹுரைரா ரலி அவர்கள் கூறும் அளவு ; 80 வருடங்கள். ஒரு வருடம் 360 நாட்களாகும். அதில் ஒவ்வொரு நாளும் 1000 வருடங் களாகும். (தப்ரீ)

நம் முன்னோர்கள் நரகத்தைப் பற்றி சிந்திக்கும் பொழுதெல்லாம் தேம்பித் தேம்பி அழுதார்கள்.


وكان ميسرة يقول إذا أوى إلى فراشه: "ليت أمي لم تلدني، فقالت له أمه حين سمعته مرة من المرات: يا ميسرة! إن الله قد أحسن إليك، هداك إلى الإسلام؟ قال: أجل. ولكن الله تعالى بيَّن الله لنا أنا واردون على النار، ولم يبين لنا أنا صادرون منها
"

மைஸரா ரலி அவர்கள் இரவு படுக்கைக்கு செல்லும் போதெல்லாம் என் தாய் என்னை பெற்றெடுக்காமல் இருந்திருக்கலாமே! என்று கூறுவார்கள். இதை பல தடவைக் கேட்ட அவர்களின் தாய் ஒரு தடவை, மகனே! அல்லாஹ் உனக்கு அழகான வாழ்வை தந்திருக்கிறான். இஸ்லாத்தை தந்திருக்கிறான். எதற்காக இப்படி சொல்லிக் கொண்டிருக்கிறாய் என்று கூறிய போது, ஹழ்ரத் மைஸரா ரலி அவர்கள் தாயே! உண்மை தான். ஆனால் அல்லாஹ் நரகத்தை கடந்து தான் சுவனம் செல்ல வேண்டும் கூறுகிறானே.அதை நினைத்தால் எனக்கு பயமாக உள்ளது என்று கூறினார்கள். (இப்னு கஸீர்)

 

كَانَ عَبْدُ اللَّهِ بْنُ رَوَاحة وَاضِعًا رَأْسَهُ فِي حِجْر امْرَأَتِهِ، فَبَكَى، فَبَكَتِ امْرَأَتُهُ فَقَالَ(٥) مَا يُبْكِيكِ؟ فَقَالَتْ:(٦) رَأَيْتُكَ تَبْكِي فَبَكَيْتُ. قَالَ: إِنِّي ذَكَرْتُ قَوْلَ اللَّهِ عَزَّ وَجَلَّ: ﴿وَإِنْ مِنْكُمْ(٧) إِلا وَارِدُهَا﴾ ، فَلَا أَدْرِي أَنْجُو مِنْهَا أَمْ لَا؟(٨) وَفِي رِوَايَةٍ: وَكَانَ مَرِيضًا.

 

அப்துல்லாஹ் பின் ரவாஹா ரலி அவர்கள் ஒரு நாள் தன்னுடைய மனைவியின் மடியில் தலையை வைத்து தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்த அவர்களின் மனைவியும் அழ ஆரம்பித்து விட்டார்கள். நீ ஏன் அழுகிறாய் என்று கேட்ட பொழுது, நீங்கள் அழுகிறீர்கள். உங்களைப் பார்த்து நானும் அழுது கொண்டிருக்கிறேன் என்றார்கள். அப்போது அப்துல்லா பின் ரவாஹா ரலி அவர்கள். (இப்னுகஸீர்)

 

وَاِنْ مِّنْکُمْ اِلَّا وَارِدُهَا ‌ كَانَ عَلٰى رَبِّكَ حَتْمًا مَّقْضِيًّا‌ ‏

அதனைக் கடக்காது உங்களில் எவருமே தப்பிவிட முடியாது. இது உங்களது இறைவனிடம் முடிவு கட்டப்பட்ட மாற்ற முடியாத தீர்மானமாகும். (அல்குர்ஆன் : 19:71)

 

அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்.அதை நினைத்துப் பார்த்தேன். எனக்கு அதிலிருந்து ஈடேற்றம் கிடைக்குமா கிடைக்காதா என்று எனக்கு தெரியவில்லையே என்றார்கள். (இப்னுகஸீர்)

 

وروي أن عيسى عليه السلام مر بأربعة آلاف امرأة متغيرات الألوان ، وعليهن مدارع الشعر والصوف ، فقال عيسى : ما الذي غير ألوانكن معاشر النسوة ؟ قلن : ذكر النار غير ألواننا يا ابن مريم ، إن من دخل النار لا يذوق فيها بردا ولا شرابا

ஈஸா அலை அவர்கள் 4000 பெண்களை கடந்து சென்றார்கள். அவர்கள் அத்தனை பேருடைய நிறங்களும் மாறிப் போயிருந்தது. உங்கள் நிறங்கள் எப்படி மாறியது என்று கேட்டார்கள். நரகத்தைப் பற்றிய சிந்தனை தான் எங்கள் உடலின் நிறங்களை மாற்றி விட்டது என்று கூறினார்கள்.


روى الإمام أحمد أن رَسُول اللَّهِ صلى الله عليه وسلم قَالَ لِجِبْرِيلَ عَلَيْهِ السَّلاَمُ : " مَا لِي لَمْ أَرَ مِيكَائِيلَ ضَاحِكاً قَطُّ ؟ قَالَ : مَا ضَحِكَ مِيكَائِيلُ مُنْذُ خُلِقَتِ النَّارُ

 

மிஃராஜ் பயணத்தின் போது நபி அவர்கள் மீகாயீல் அலை அவர்கள் ஒருபோதும் சிரித்து நான் பார்த்ததில்லையே என்ன காரணம் என்று ஜிப்ரயீல் அலை அவர்களிடம் கேட்டார்கள். நரகம் படைக்கப் பட்டதிலிருந்து மீகாயீல் சிரிக்கவே இல்லை என்று ஹழ்ரத் ஜிப்ரயீல் அலை அவர்கள் கூறினார்கள்.

 

ரமலான் முதல் நாளிலிருந்தே கடுமையான வெயிலையும் அதன் மூலம் கடும் உஷ்ணத்தையும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். ஒரு அடியானின் சிரமத்திற்கு தகுந்தார் போல் கூலி இரட்டிப்பாக கிடைக்கும் என்று பெருமானார் அவர்கள் நற்செய்தி கூறியிருப்பதால் நம் முன்னோர்கள் கடும் வெயில் காலங்களில் நோன்பு வைப்பதைப் பாக்கியமாக கருதினார்கள். தங்கள் வாழ்க்கையில் எங்களுக்கு மிகவும் பிடித்தமான நாங்கள் அதிகம் விரும்புகிற காரியம் என்றார்கள். நமக்கு அதிகம் நன்மைகள் கிடைக்க வேண்டும் என்பதற்காகவோ என்னவோ நாம் விரும்பியோ விரும்பாமலோ கடும் வெயில் காலங்களில் ரமலான் மாதத்தை அமைத்து அதில் நோன்பு நோற்கும் சூழ்நிலை ரப்புல் ஆலமீன் ஏற்படுத்தித் தந்திருக்கிறான். நம் சிரமத்திற்கு தகுந்தார்போல் நமக்கு அல்லாஹ் கூலிகளை பன்மடங்காக்கித் தருவானாக!

இதுமாதிரியான சுட்டெரிக்கும் சூரியனின் வெப்பம் நமக்கு நரகத்தின் வெப்பத்தை நினைவுபடுத்துகிறது. நினைவுபடுத்த வேண்டும்.காரணம் நாம் இந்த பூமியில் அனுபவிக்கின்ற அந்த சூட்டை நபியவர்கள் நரகத்தின் நெருப்போடு முடிச்சு போடுகிறார்கள்.

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ، أَنَّهُمَا حَدَّثَاهُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ : " إِذَا اشْتَدَّ الْحَرُّ فَأَبْرِدُوا عَنِ الصَّلَاةِ ؛ فَإِنَّ شِدَّةَ الْحَرِّ مِنْ فَيْحِ جَهَنَّمَ

வெப்பம் கடுமையாக இருக்கும் போது லுஹரைத் தாமதப்படுத்துங்கள். ஏனெனில் கடுமையான வெப்பம் நரகத்தின் வெப்பக் காற்றின் வெளிப்பாடாகும். (புகாரி  : 534)

 

عَنْ أَبِي جَمْرَةَ الضُّبَعِيِّ ، قَالَ : كُنْتُ أُجَالِسُ ابْنَ عَبَّاسٍ بِمَكَّةَ، فَأَخَذَتْنِي الْحُمَّى، فَقَالَ : أَبْرِدْهَا عَنْكَ بِمَاءِ زَمْزَمَ ؛ فَإِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : " الْحُمَّى مِنْ فَيْحِ جَهَنَّمَ ؛ فَأَبْرِدُوهَا بِالْمَاءِ

அபு ஜம்ரா ரஹ் அவர்கள் கூறுகிறார்கள் ; நான் மக்காவில் இப்னு அப்பாஸ் ரலி அவர்களோடு அமர்ந்திருந்தேன். அப்போது எனக்கு காய்ச்சல் ஏற்பட்டது. உடனே இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் கூறினார்கள் ; ஜம்ஜம் நீரைக் கொண்டு உங்களை விட்டும் இந்த காய்ச்சலை தனித்து கொள்ளுங்கள். ஏனென்றால் நபிகள் நாயகம் அவர்கள் காய்ச்சல் என்பது நரகத்தின் பெரும் மூச்சினால் உண்டாகிறது. அதை தண்ணீரைக் கொண்டு தணித்துக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள். (புகாரி ; 3261)

காய்ச்சலும் நரக சூடு தான் என்று சொன்னதோடு அதற்கான மருத்துவத்தையும் கூறுகிறார்கள். இன்று அறிவியல் உலகில் 100 டிகிரிக்கு மேல் காய்ச்சல் அதிகமாகி விட்டால் நெற்றியில் ஈரத் துணியை வைத்து விடுகிறோம். அப்போது உடல் சூடு உடனே தணிந்து விடுகிறது.

இன்றைக்கு சூரியனிலிருந்து பூமி 149 மில்லியன் கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தும் அதன் கொடுமையை நம்மால் தாங்க முடியவில்லை. அதன் வெப்பத்தில் சுருண்டு விடுகிறோம். சூரியனின் மேற்பரப்பின் வெப்பம் 6000 டிகிரி செல்சியஸ். அதனால் தான் 149 மில்லியன் கிலோ மீட்டர் தூரத்தில் சூரியன் இருந்தும் அதன் வெப்பக் கதிர்கள் நம் கண்களை கூசச் செய்கின்றது. அதனுடைய மையப்பகுதியில் வெப்பம் ஒரு லட்சம் டிகிரி செல்சியஸ் ஆகும். சாதாரணமாக 100 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் தண்ணீர் கொதித்து ஆவியாக விடுகிறது. 1100 டிகிரி வெப்பத்தில் கடின இரும்பு திரவ நிலைக்கு வந்து விடுகிறது. மனித உடல் தாங்கும் வெப்பம் 38 முதல் 40 டிகிரி செல்சியஸ் தான். அதற்கு மேல் கொதிக்கும் வெப்பத்தை மனித உடல் தாங்காது. இப்போது யோசித்துப் பார்ப்போம் சூரியனின் வெப்பத்தை விட பன்மடங்கு வெப்பம் நிறைந்த பல கோடி அணு உலைகளுக்குச் சமமான நரக வெப்பத்தை நம்மால் எப்படி தாங்க முடியும். சிந்திப்போம், நம்மை சீர்திருத்துவோம், படைத்தவனிடம் பிரார்த்திப்போம். வல்ல ரஹ்மான் அந்த கொடுமையான நரக வேதனையிலிருந்து நம்மையும் நம் குடும்பத்தையும் காத்தருள்வானாக!

4 comments:

  1. மாஷா அல்லாஹ் பாரக்கல்லாஹ் ஹழ்ரத்

    ReplyDelete
  2. அல்லாஹ் நம் அனைவருக்கும் சுவனத்தை தருவானாக ஆமீன்

    ReplyDelete
  3. மாஷா அல்லாஹ் அபார ச்சிந்தனையின் அற்புத வெளிப்பாடு பாரக்கல்லாஹ்

    ReplyDelete
  4. நடுங்க வைக்கும் நரகம்

    ReplyDelete