Saturday, April 15, 2023

அவர்கள் கழுதையைப் போன்றவர்கள்

 

مَثَلُ الَّذِيْنَ حُمِّلُوا التَّوْرٰٮةَ ثُمَّ لَمْ يَحْمِلُوْهَا كَمَثَلِ الْحِمَارِ يَحْمِلُ اَسْفَارًا‌  بِئْسَ مَثَلُ الْقَوْمِ الَّذِيْنَ كَذَّبُوْا بِاٰيٰتِ اللّٰهِ ‌ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الظّٰلِمِيْنَ‏

"தவ்றாத்" என்னும் வேதத்தைச் சுமந்து கொண்டு, அதிலுள்ளபடி நடக்காதவர்களின் உதாரணம்: புத்தகங்களைச் சுமக்கும் கழுதையின் உதாரணத்தை ஒத்திருக்கின்றது. அல்லாஹ்வுடைய வசனங்களைப் பொய்யாக்கும் மக்களின் இவ்வுதாரணம் மகாகெட்டது. அல்லாஹ் இத்தகைய அநியாயக்கார மக்களை நேரான வழியில் செலுத்தமாட்டான். (அல்குர்ஆன் : 62:5)

يَقُولُ تَعَالَى ذَامًّا لِلْيَهُودِ الَّذِينَ أُعْطُوا التَّوْرَاةَ وَحَمَلُوهَا لِلْعَمَلِ بِهَا، فَلَمْ يَعْمَلُوا بِهَا، مَثَلُهُمْ فِي ذَلِكَ كَمَثَلِ الْحِمَارِ يَحْمِلُ أَسْفَارًا، أَيْ: كَمَثَلِ الْحِمَارِ إِذَا حُمِّلَ كُتُبًا لَا يَدْرِي مَا فِيهَا، فَهُوَ يَحْمِلُهَا حَمْلًا حِسِّيًّا(١) وَلَا يَدْرِي مَا عَلَيْهِ. وَكَذَلِكَ هَؤُلَاءِ فِي حَمْلِهِمُ الْكِتَابَ الَّذِي أُوتُوهُ، حَفِظُوهُ لَفْظًا وَلَمْ يَفْهَمُوهُ(٢) وَلَا عَمِلُوا بِمُقْتَضَاهُ، بَلْ أَوَّلُوهُ وَحَرَّفُوهُ وَبَدَّلُوهُ، فَهُمْ أَسْوَأُ حَالًا مِنَ الْحَمِيرِ؛ لِأَنَّ الْحِمَارَ لَا فهمَ لَهُ، وَهَؤُلَاءِ لَهُمْ فُهُومٌ لَمْ يَسْتَعْمِلُوهَا؛

அமல் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் வழங்கப்பட்ட தவ்ராத்தை யூதர்கள் வீணடித்தார்கள். அதைக் கொண்டு அமல் செய்யாமல் புறக்கணித்தார்கள். எனவே அவர்களை கழுதைக்கு இறைவன் ஒப்பிடுகிறான். கழுதையைப் பொருத்த வரை அதன் மீது பயனுள்ள புத்தகங்கள் இருந்தாலும் தன் மீது என்ன வைக்கப்பட்டிருக்கிறது என்று அதற்குத் தெரியாது. அதில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்று அதற்கு தெரியாது. அதனுடைய அருமை புரியாமல் சுமந்து கொண்டிருக்கும். அதேபோன்று அவர்கள் தவ்ராத் என்ற உயர்ந்த வேதத்தைப் பெற்றார்கள். அதில் உள்ள விஷயங்களை படித்தார்கள், விளங்கினார்கள். ஆனால் அதைக் கொண்டு அமல் செய்ய வில்லை. மாறாக அதற்கு தவறான விளக்கத்தைக் கொடுத்தார்கள். அதிலுள்ள கருத்துக்களை மாற்றினார்கள். இல்லாத கருத்துக்களை அதில் திணித்தார்கள். ஆக மொத்தத்தில் தவராத்தை அவர்கள் வீணடித்து விட்டார்கள். அந்த வகையில் அவர்கள் கழுதையை விட மோசமானவர்கள். ஏனென்றால் கழுதைக்கு தன் மீது ஏற்றி வைக்கப்பட்டிருக்கிற அந்த கிதாபில் இருக்கக்கூடிய விஷயங்கள் எதுவும் புரியாது. ஆனால் யூதர்கள் தவராத்தை புரிந்தும் அமல் செய்ய வில்லை. (இப்னு கஸீர்)

وقالَ أهْلُ المَعانِي: هَذا المَثَلُ مَثَلُ مَن يَفْهَمُ مَعانِيَ القُرْآنِ ولَمْ يَعْمَلْ بِهِ، وأعْرَضَ عَنْهُ إعْراضَ مَن لا يَحْتاجُ إلَيْهِ، ولِهَذا قالَ مَيْمُونُ بْنُ مِهْرانَ: يا أهْلَ القُرْآنِ اتَّبِعُوا القُرْآنَ قَبْلَ أنْ يَتْبَعَكم ثُمَّ تَلا هَذِهِ الآيَةَ

இதே உதாரணம் குர்ஆனைப் படித்து விளங்கி அதனை அமல் செய்யாமல் புறக்கணித்தவர்களுக்கும் பொருந்தும். அதனால் தான் மைமூன் பின் மிஹ்ரான் ரலி அவர்கள் குர்ஆனைக் கற்றுக் கொண்டவர்களே! நீங்கள் குர்ஆனை பின்பற்றுங்கள் என்று சொல்லி விட்டு இந்த வசனத்தை ஓதிக் காண்பிப்பார்கள். (தஃப்ஸீர் ராஸீ)

கழுதையை உதாரணப்படுத்துவதற்குக் காரணம் ;

وَّالْخَـيْلَ وَالْبِغَالَ وَالْحَمِيْرَ لِتَرْكَبُوْهَا وَزِيْنَةً‌  وَيَخْلُقُ مَا لَا تَعْلَمُوْنَ‏

குதிரைகள், கோவேறு கழுதைகள் ஆகியவற்றை நீங்கள் ஏறிச் செல்வதற்காகவும் (உங்களுக்கு) அலங்காரமாகவும் (அவன் படைத்திருக்கிறான்.) இன்னும் நீங்கள் அறியாதவற்றையும் அவன் படைப்பான். (அல்குர்ஆன் : 16:8)

இந்த வசனத்திலும் இதற்கு முந்தைய வசனங்களிலும் அல்லாஹுத்தஆலா குதிரை, கோவேறிக் கழுதை, கழுதை ஆகிய மூன்றைக் குறிப்பிட்டு, அதனால் சமூகம் அடைகின்ற மூன்று பயன்களைக் குறிப்பிடுகின்றான். ஒன்று அலங்காரம். இரண்டாவது பயணிப்பது. மூன்றாவது பொதி சுமப்பது. இதில் குதிரையைப் பொறுத்த வரை பொதி சுமப்பதை விட அதில் வாகனிப்பதை விட அலங்காரமாகவும் கண்ணியமாகவும் அதை மக்கள் கருதுவது தான் அதிகம். கழுதையைப் பொறுத்த வரை வாகனிப்பதை விட அலங்காரமாக அதைப் பார்ப்பதை விட பொதி சுமக்கும் ஒன்றாக அதைக் கருதுவது தான் அதிகம். கோவேறிக் கழுதை இதில் நடுத்தரமானது. அந்த வகையில் பார்க்கின்ற பொழுது, பொதி சுமப்பதற்கு அதிகம் பயன்படுகின்ற கழுதையை இங்கே குறிப்பிடுவது தான் பொருத்தமாக இருக்கும். எனவே தான் எல்லாம் வல்ல ரப்புல் ஆலமீன் மற்ற மிருகங்களைக் காட்டிலும் இந்த இடத்தில் கழுதையை உதாரணமாக சொல்லி இருக்கிறான்.

இரண்டாவது காரணம், கழுதைக்கு கோவேறிக் கழுதையை விட, குதிரையை விட அறிவு குறைவு. தவராத் என்ற உயர்ந்த வேதத்தைப் பெற்று அதை அமல் செய்யாமல் விட்டு விட்ட யூதர்கள் அறிவில்லாதவர்கள் என்பதை உணர்த்தும் முகமாக அல்லாஹ் கழுதையை அவர்களுக்கு உதாரணமாக காட்டியிருக்கிறான்.

மூன்றாவது காரணம், குதிரை மற்றும் கோவேறிக் கழுதையை விட கழுதை அதிகம் பணிந்து போகக் கூடியது. சிறு குழந்தை கூட இலகுவாக அதன் மேல் அமர்ந்து பயணிக்க முடியும். (தஃப்ஸீர் ராஸீ)

கற்றதின் படி அமல் செய்ய வேண்டும். அது தான் பயனுள்ள கல்வியாகும்.

عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيِّ ، عَنْ أَخِيهِ عَبَّادِ بْنِ أَبِي سَعِيدٍ ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ يَقُولُ : كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : " اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْأَرْبَعِ : مِنْ عِلْمٍ لَا يَنْفَعُ، وَمِنْ قَلْبٍ لَا يَخْشَعُ، وَمِنْ نَفْسٍ لَا تَشْبَعُ، وَمِنْ دُعَاءٍ لَا يُسْمَعُ

இறைவா பயன் தராத கல்வி,பயபக்தியில்லாத இதயம், திருப்தியடையாத உள்ளம், பதிலளிக்கப்படாத துஆ, இந்த நான்கிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று நபி அவர்கள் கேட்பவர்களாக இருந்தார்கள். (அபூதாவூது ; 1548)

قال يحيى بن معاذ: العلم والعمل قرينان لا ينفع أحدهما إلا بصاحبه

கல்வியும் அமலும் ஒன்றுடன் ஒன்று இணைந்தது அதில் ஒன்று இல்லாமல் இன்னொன்று பயன் தராது என்று யஹ்யா பின் முஆத் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

قال أبو الدرداء رضي الله عنه: لا يكون الرجل عالماً حتى يكون به عاملاً

படித்ததைக் கொண்டு அமல் செய்யக்கூடியவராக ஆகும் வரை ஒரு மனிதர் ஆலிமாக முடியாது என்று அபுத்தர்தா ரலி அவர்கள் கூறுகிறார்கள்.

 

قال الإمام أحمد: ما كتبت حديثًا إلا وعملت به،  في مسند الإمام أحمد حوالي 40.000 حديث)  حتى مرَّ بي أن النبي صلى الله عليه وسلم احتجم، وأعطى أبا طيبة دينارًا، فأعطيت الحجام دينارًا حين احتجمت

بل إنه رحمه الله استأذن زوجته في أن يتخذ أمَةً فأذنت له، فاشترى جارية بثمن يسير وسماها ريحانة؛ استنانًا بالرسول صلى الله عليه وسلم

நபி அவர்களின் எந்த ஹதீஸையும் அமல் செய்யாமல் நான் எழுதியதில்லை என்று அஹ்மது பின் ஹம்பல் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள். அவர்களால் எழுதப்பட்ட முஸ்னத் அஹ்மதில் ஏறக்குறைய 40000 ஹதீஸ்கள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. நபி அவர்கள் ரத்தம் குத்தி எடுத்தார்கள் என்ற ஹதீஸைக் கொண்டு அமல் செய்ய வேண்டும் என்பதற்காக அவர்களும் அவ்வாறு செய்து கொண்டார்கள். நபி அவர்களித்தில் அடிமைப் பெண்கள் இருந்தார்கள் என்பதற்காக தன் மனைவியிடத்தில் அனுமதி பெற்று ஒரு அடிமைப் பெண்ணை விலைக்கு வாங்கினார்கள்.

عن أنس بن مالك قال: قال رسول الله صلى الله عليه وسلم: ((أتيت ليلة أسري بي على قوم تُقرَض شِفاهُهم بمقاريضَ من نارقلت: من هؤلاء يا جبريل؟ قال: هؤلاء خطباء أمتك الذين يقولون ولا يفعلون، ويقرؤون كتاب الله ولا يعملون

மிஃராஜ் இரவில் ஒரு கூட்டத்தைக் கண்டேன். அவர்களின் உதடுகள் நெருப்புக் கத்திரிக்கோல்களால் துண்டிக்கப்படுகிறது. இவர்கள் யாரென்று ஜிப்ரயீல் அலை அவர்களிடம் கேட்டேன். உங்களில் சமூகத்தில் பிரசங்கம் செய்பவர்கள். சொல்வார்கள். ஆனால் செய்ய மாட்டார்கள். குர்ஆனை ஓதுவார்கள். அதன் படி அமல் செய்ய மாட்டார்கள். (முஸ்னத் அஹ்மது)

وهذا الحسن البصري رحمه الله، جاءه الرقيق يومًا وطلبوا منه أن يكلم الناس في خطبة الجمعة عن فضل عتق الرقاب؛ إذ كان الناس وقتئذٍ يَقبلون منه ما لا يقبلون من العلماء. فقام الحسن في الجمعة الأولى فلم يتكلم في هذا، وفي الثانية لم يتكلم أيضًا، وفي الجمعة الثالثة تكلم فأحسن في فضل عتق الرقاب، وكان أن خرج الناس من المسجد فأعتقوا من كان عندهم من الرقيق

 

وحينها جاء الرقيق المحررون لوجه الله تعالى يشكرون الحسن ويقولون: أبطأت علينا ثلاث جمع، فقال: لقد انتظرت حتى رزقني الله مالاً، فاشتريت عبدًا وأعتقته لوجه الله تعالى؛ حتى لا آمر الناس بما لم أفعل

ஹஸனுல் பஸரி ரஹ் அவர்களிடத்தில் சில அடிமைகள் வந்து நீங்கள் ஜும்மா பிரசங்கத்தில் அடிமைகளை உரிமை விடுவதின் சிறப்புகளைப் பற்றி மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்கள். சரி என்று ஒத்துக் கொண்ட ஹஸனுல் பஸரீ ரஹ்  அவர்கள் முதல் ஜும்மா அன்று அதைப் பற்றி பேச வில்லை. இரண்டாவது ஜும்மாவிலும் அதைப் பற்றி பேச வில்லை. மூன்றாவது ஜும்மாவில் அதைப் பற்றி பேசினார்கள். அதைக் கேட்ட மக்கள் ஜும்மா முடிந்தவுடன் அவர்கள் வைத்திருந்த அத்தனை அடிமைகளையும் உரிமை விட்டு விட்டார்கள். இதனால் மகிழ்ச்சியடைந்த உரிமையிடப்பட்ட அடிமைகள் அவர்களை சந்தித்து அவர்களுக்கு நன்றிகளை கூறி விட்டு இதை நீங்கள் முதல் வாரமே செய்திருக்கலாமே என்று கேட்ட போது, அப்பொழுது என்னிடத்தில் வசதி இல்லை. இப்போது தான் எனக்கு வசதி வந்தது. அதை வைத்து ஒரு அடிமையை வாங்கி, அவரை உரிமை விட்டு விட்டேன். அதற்குப் பிறகு நான் அதைக் குறித்து பேசினேன் என்று சொன்னார்கள்.

يقول ابن مسعود: كان الرجل منا إذا تعلّم عشر آيات لم يجاوزهن حتى يعرف معانيهن ، والعمل بهن

எங்களில் ஒருவர் குர்ஆனிலிருந்து ஒரு பத்து வசனங்களை கற்றுக் கொண்டால் அவற்றின் கருத்துக்களை புரிந்து அதைக் கொண்டு அமல் செய்யாமல் அதை விட்டும் அந்த வசனத்திற்கு கடந்து செல்ல மாட்டார் என இப்னு மஸ்வூத் ரலி அவர்கள் கூறுகிறார்கள்.

يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا نَاجَيْتُمُ الرَّسُوْلَ فَقَدِّمُوْا بَيْنَ يَدَىْ نَجْوٰٮكُمْ صَدَقَةً  ‌ ذٰ لِكَ خَيْرٌ لَّكُمْ وَاَطْهَرُ ‌ فَاِنْ لَّمْ تَجِدُوْا فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ‏

நம்பிக்கையாளர்களே! நீங்கள் நம்முடைய தூதருடன் இரகசியம் பேச விரும்பினால், உங்கள் இரகசியத்திற்கு முன்னதாகவே (ஏழைகளுக்கு) ஏதும் தானம் செய்துவிடுங்கள். இது உங்களுக்கு நன்மையும் பரிசுத்தத் தன்மையும் ஆகும். (தானம் கொடுப்பதற்கு எதனையும்) நீங்கள் அடைந்திராவிட்டால், (அதைப்பற்றி உங்கள் மீது குற்றமில்லை.) நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவனும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் : 58:12)

 

மேற்கூறப்பட்ட வசனம் ஒரு இரவு மட்டும் அமலில் இருந்தாலும் அந்த குறுகிய காலத்திலும் ஹளர்த் அலி ரலி அவர்கள் அதைக் கொண்டு அமல் செய்து விட்டார்கள்.

عن علي بن أبي طالب أنه قال : في كتاب الله آية ما عمل بها أحد قبلي ولا يعمل بها أحد بعدي ، وهي : يا أيها الذين آمنوا إذا ناجيتم الرسول فقدموا بين يدي نجواكم صدقة كان لي دينار فبعته ، فكنت إذا ناجيت الرسول تصدقت بدرهم حتى نفد ، فنسخت بالآية الأخرى أأشفقتم أن تقدموا بين يدي نجواكم صدقات

ஹள்ரத் அலி ரலி அவர்கள் கூறுகிறார்கள் ; அல்குர்ஆனில் ஒரு வசனம் இருக்கிறது. அந்த வசனத்தின் படி எனக்கு முன்னாலும் யாரும் அமல் செய்ய வில்லை. எனக்கு பின்னாலும் அதன்படி யாரும் அமல் செய்ய முடியாது. அந்த வசனத்தைக் கொண்டு அமல் செய்தது நான் ஒருவன் தான் என்றார்கள். அது தான் மேற்கூறப்பட்ட வசனம். (தஃப்ஸீர் தப்ரீ)

وقال ابن عمر : لقد كانت لعلي رضي الله عنه ثلاثة لو كانت لي واحدة منهن كانت أحب إلي من حمر النعم : تزويجه فاطمة ، وإعطاؤه الراية يوم خيبر وآية النجوى

ஹள்ரத் அலி ரலி அவர்களுக்கு மூன்று விசேஷமான விஷயங்கள் இருந்தது. அதில் ஒன்று கிடைத்திருந்தாலும் அது எனக்கு செந்நிற ஒட்டகைகள் கிடைப்பதை விட மிகவும் விருப்பமானது. ஒன்று நபி அவர்களின் மகளை அவர்கள் மனமுடித்தது. இரண்டாவது கைபர் யுத்தகளத்தில் அவர்களிடத்தில் நபியவர்கள் கொடியைக் கொடுத்தது. மூன்றாவது மேற்கூறப்பட்ட வசனத்தின் படி அமல் செய்வது என்று இப்னு உமர் ரலி அவர்கள் கூறுகிறார்கள்.

قال ابن عباس : نزلت بسبب أن المسلمين كانوا يكثرون المسائل على رسول الله صلى الله عليه وسلم حتى شقوا عليه ، فأراد الله عز وجل أن يخفف عن نبيه صلى الله عليه وسلم ، فلما قال ذلك كف كثير من الناس . ثم وسع الله عليهم بالآية التي بعدها

 

ஈமான் கொண்டவர்கள் நபி அவர்களிடம் வந்து அடிக்கடி மார்க்க விளக்கத்தை கேட்டுக்கொண்டிருந்தார்கள் அது நபி அவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி விடும் என்பதினால் அதை கொஞ்சம் குறைப்பதற்காக அல்லாஹுத்தஆலா, நீங்கள் பேசுவதாக இருந்தால் தர்மம் செய்து விட்டு பேசுங்கள் என்ற வசனத்தை இறக்கியருளினான் இந்த வசனம் இறக்கியருளப்பட்ட பிறகு அவ்வாறு கேட்பது கொஞ்சம் குறைந்தது. இருந்தாலும் தர்மம் செய்வது எல்லோரும் முடியாது என்பதினால் அந்த சட்டத்தை நீக்கி விட்டான் என இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் கூறுகிறார்கள். (குர்துபீ)

No comments:

Post a Comment