இந்தப் பதிவின் இறுதியில் 2022 மற்றும் 2023 ம் வருட எனது தராவீஹ் குறிப்புகளின் இணைப்பையும் வாஹிதிகள் பேரவை சார்பாக வெளியிடப்பட்ட குறிப்புகளின் இணைப்பையும் தந்திருக்கிறேன். அருள் பொருந்திய இந்த ரமலான் காலங்களில் உங்களின் மேலான துஆக்களில் இந்த அடியேனையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
سُوْرَةٌ
اَنْزَلْنٰهَا وَفَرَضْنٰهَا وَاَنْزَلْنَا فِيْهَاۤ اٰيٰتٍۭ بَيِّنٰتٍ
لَّعَلَّكُمْ تَذَكَّرُوْنَ
(இது திருக்குர்ஆனின்) ஓர் அத்தியாயமாகும்; இதனை நாமே அருளச் செய்து, அதிலுள்ளவற்றை விதியாக்கினோம்; நீங்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக இதில் நாம் தெளிவான வசனங்களை அருள் செய்தோம். (அல்குர்ஆன் : 24:1)
أما القرآن
فإن الله تعالى خص هذه السورة من بين مائة وأربع عشرة سورة بوصفٍ هو ثابتٌ لكل
السور فقال {سُورَةٌ أَنزَلْنَاهَا وَفَرَضْنَاهَا وَأَنزَلْنَا فِيهَا
آيَاتٍ بَيِّنَاتٍ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ
كل سورة كذلك، الله تعالى أنزلها وفرض أحكامها وأنزل فيها آياتٍ بيِّنات من
آيات العقيدة والإيمان لعل الناس يتذكرون، فهذا الوصف ثابتٌ لكل السور، وحين يُطلق
خاصةً على هذه السورة كأن الله تعالى قال هذه سورةٌ مهمة خاصة
இந்த
வசனத்தில் வந்திருக்கிற கருத்து குர்ஆனிலுள்ள எல்லா சூராவிற்கும் பொருந்தும்.
இருந்தாலும் இந்த சூராவின் தனித்து வத்துவத்தை வெளிப்படுத்துவதற்காக
இவ்வாறு சொல்கிறான்.
إذ قال رسول
الله صلى الله عليه وسلم: علموا رجالكم سورة المائدة، وعلموا نسائكم سورة النور،
உங்களில்
ஆண் மக்களுக்கு மாயிதா சூராவையும் பெண் மக்களுக்கு நூர் சூராவையும் கற்றுக்
கொடுங்கள். (ஷுஃபுல் ஈமான் ; 2428)
رُوي عن عمر
بن الخطاب رضي الله تعالى عنه أنه أوصى – وخاصةً للنساء – بتعلم سورة النساء
"تعلموا سورة النساء والأحزاب والنور"[5]، فعلاً هي سورةٌ جديرةٌ
بالتعلم والقراءة والحفظ والتفسير، وأن نعرف معانيها وأحكامها لأنه لا غنى لنا
عنها.
உமர்
ரலி அவர்கள் தன் மக்களுக்கு நிஸா, அஹ்ஜாப்,
நூர் ஆகிய சூராக்களை கற்றுக் கொள்ளும் படி
உபதேசம் செய்பவர்களாக இருந்தார்கள்.
எனவே
நூர் சூரா என்பது படிப்பதற்கும் மனனமிடுவதற்கும் அதன் கருத்துக்களை சிந்தித்து உள்
வாங்குவதற்கும் மிகவும் ஏற்றமான சூராக்களில் ஒன்று.
மனித
சமூகத்திற்குத் தேவையான எண்ணற்ற சட்டங்கள், வாழ்க்கைக்குத் தேவையான ஒழுக்கவியல்
மாண்புகள், சமூகத்தில் நடக்க வேண்டிய நாகரீகங்கள் என பல்வேறு முக்கிய செய்திகள்
இந்த சூராவில் இடம் பெற்றிருக்கிறது.
இந்த சூராவில் இடம் பெற்றுள்ள முக்கியச்
செய்திகளை நாம் பார்க்கலாம்.
1,விபச்சாரம்
செய்தால் 100 கசையடியும் எந்த சாட்சியும் இல்லாமல்
ஒரு அப்பாவி பெண்ணின் மீது அவதூரான வார்த்தைகளை சொன்னால் 80 கசையடியும் கொடுக்க வேண்டும் அதுவும் பிறர் பார்த்து பயந்து தங்களை
திருத்திக் கொள்ளும் வகையுல் முற்சந்தியில் வைத்து கொடுக்க வேண்டும் என்று தண்டனை
சட்டங்களை கூறுகிறான்.
اَلزَّانِيَةُ
وَالزَّانِىْ فَاجْلِدُوْا كُلَّ وَاحِدٍ مِّنْهُمَا مِائَةَ جَلْدَةٍوَّلَا
تَاْخُذْكُمْ بِهِمَا رَاْفَةٌ فِىْ دِيْنِ اللّٰهِ اِنْ كُنْتُمْ تُؤْمِنُوْنَ
بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ وَلْيَشْهَدْ عَذَابَهُمَا طَآٮِٕفَةٌ مِّنَ
الْمُؤْمِنِيْنَ
விபசாரியும்,
விபசாரனும் - இவ்விருவரில் ஒவ்வொருவரையும் நூறு
கசையடி அடியுங்கள்; மெய்யாகவே, நீங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி
நாள் மீதும் ஈமான் கொண்டவர்களாக இருந்தால். அல்லாஹ்வின் சடடத்(தை நிறைவேற்றுவ)தில்,
அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட
வேண்டாம்; இன்னும் அவ்விருவரின் வேதனையையும்
முஃமின்களில் ஒரு கூட்டத்தார் (நேரில்) பார்க்கட்டும். (அல்குர்ஆன்
: 24:2)
2,
பொதுவாக ஒரு தவறை நிரூபிக்க 4 சாட்சிகள்
வேண்டும் என்று இஸ்லாம் சொல்கிறது. ஆனால் ஒருவன் தன் மனைவி தவறு செய்வதை
பார்க்கிறான். அல்லது கேள்விப்படுகிறான். அப்போது அவன் எப்படி நடந்து கொள்ள
வேண்டும் என்பதை கீழ் வரும் வசனம் விவரிக்கிறது.
وَالَّذِيْنَ
يَرْمُوْنَ اَزْوَاجَهُمْ وَلَمْ يَكُنْ لَّهُمْ شُهَدَآءُ اِلَّاۤ اَنْفُسُهُمْ
فَشَهَادَةُ اَحَدِهِمْ اَرْبَعُ شَهٰدٰتٍۭ بِاللّٰهِۙ اِنَّهٗ لَمِنَ
الصّٰدِقِيْنَ
எவர்கள்
தம் மனைவிமார்களை அவதூறு கூறி (அதை நிரூபிக்கத்) தங்களையன்றி அவர்களிடம் வேறு
சாட்சிகள் இல்லாமலிருந்தால் அவன், நிச்சயமாக தாம்
உண்மையே கூறுவதாக அல்லாஹ்வின் மீது நான்கு முறை சத்தியம் செய்து கூறி: (அல்குர்ஆன்
: 24:6)
وَالْخَـامِسَةُ
اَنَّ لَـعْنَتَ اللّٰهِ عَلَيْهِ اِنْ كَانَ مِنَ الْكٰذِبِيْنَ
ஐந்தாவது
முறை, “(இதில்) தான் பொய் சொல்வதாக இருந்தால்,
நிச்சயமாக அல்லாஹ்வுடைய சாபம் தன் மீது
உண்டாகட்டும்” என்றும் (அவன் கூற வேண்டும்). (அல்குர்ஆன் : 24:7)
عن ابن عباس
رضي الله عنهما أن هِلَالَ بن أُمَيَّةَ، قذف امرأته عند النبي صلى الله عليه وسلم
بِشَرِيكِ بن سَحْمَاءَ، فقال النبي صلى الله عليه وسلم : «البَيِّنَةَ أو حَدٌّ
في ظَهْرِكَ»، فقال: يا رسول الله، إذا رأى أحدنا على امرأته رجلًا ينطلق
يَلْتَمِسُ البَيِّنَةَ، فجعل النبي صلى الله عليه وسلم يقول: «البَيِّنَةَ وإلا
حد في ظهرك» فقال هلال: والذي بعثك بالحق إني لصادق، فلَيُنْزِلَنَّ الله ما
يُبَرِّئُ ظهري من الحد، فنزل جبريل وأنزل عليه: {والذين يرمون أزواجهم} [النور:
6] فقرأ حتى بلغ: {إن كان من الصادقين} [النور: 9] فانصرف النبي صلى الله عليه
وسلم فأرسل إليها، فجاء هِلال فشهد، والنبي صلى الله عليه وسلم يقول: «إن الله
يعلم أن أحَدَكُمَا كاذب، فهل منكما تائب» ثم قامت فشهدت، فلما كانت عند الخامسة
وَقَّفُوهَا، وقالوا: إنها مُوجِبَة، قال ابن عباس: فَتَلَكَّأَتْ وَنَكَصَتْ، حتى
ظننا أنها ترجع، ثم قالت: لا أفضح قومي سائر اليوم، فَمَضَتْ، فقال النبي صلى الله
عليه وسلم : «أبصروها، فإن جاءت به أَكْحَلَ العينين، سَابِغَ الْأَلْيَتَيْنِ،
خَدَلَّجَ الساقين، فهو لِشَرِيكِ بْنِ سَحْمَاءَ»، فجاءت به كذلك، فقال النبي صلى
الله عليه وسلم : «لولا ما مضى من كتاب الله لكان لي ولها شأن»
இப்னு
அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஹிலால்
பின் உமய்யா (ரலி) அவர்கள் (கர்ப்பவதியான) தம் மனைவியை ஷரீக் பின் சஹ்மா
என்பவருடன் இணைத்து (இருவருக் குமிடையே தகாத உறவு இருப்பதாகக்) குற்றம்
சாட்டினார்கள்.
அப்போது
நபி (ஸல்) அவர்கள், (உன்) ஆதாரத்தைக் கொண்டு வா!
இல்லையென்றால், உன் முதுகில் கசையடி வழங்கப்படும்
என்று சொன்னார்கள். அதற்கு அவர், அல்லாஹ்வின்
தூதரே! எங்களில் ஒருவர் தம் மனைவியுடன் ஓர் அன்னிய ஆடவன் இருப்பதைக் கண்டாலுமா
ஆதாரம் தேடிக் கொண்டு செல்ல வேண்டும்? என்று
கேட்டார்கள். அப்போதும் நபி (ஸல்) அவர்கள், (உன்)
ஆதாரத்தைக் கொண்டு வா! இல்லையென்றால், உன்
முதுகில் கசையடி கொடுக்கப்படும் என்று சொன்னார்கள்.
அதற்கு
ஹிலால் (ரலி) அவர்கள், தங்களைச் சத்திய(மார்க்க)த்துடன்
அனுப்பியவன் மீது ஆணையாக! நான் உண்மையே சொல்கிறேன். எனது முதுகைக்
கசையடியிலிருந்து காப்பாற்றும் செய்தியை அல்லாஹ் நிச்சயம் அருள்வான் என்று
சொன்னார்கள். உடனே (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் இறங்கி, நபி (ஸல்) அவர்களுக்கு யார் தம் துணைவியர் மீது அவதூறு கூறி என்று
தொடங்கும் (24:6-9) வசனங்களை ஓதிக் காட்டினார்கள்.
நபி
(ஸல்) அவர்கள் திரும்பி வந்து ஹிலால் (ரலி) அவர்களுடைய மனைவிக்கு ஆளனுப்பினார்கள்.
(இதற்கிடையே) ஹிலால் (ரலி) அவர்களும் வந்து (தாம் சொன்னது உண்மையே என நான்கு முறை)
சத்தியம் செய்து சாட்சியமளித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், உங்கள் இருவரில் ஒருவர் பொய்யர் என்பதை அல்லாஹ் அறிவான். ஆகவே,
உங்கள் இருவரில் பாவ மன்னிப்புக்கோரி (தவறு
தன்னுடயது தான் என்று ஒப்புக் கொண்டு, இறைவன்
பக்கம்) திரும்புகின்றவர் யார்? என்று கேட்டுக்
கொண்டிருந்தார்கள். பிறகு, ஹிலால் (ரலி) அவர்களின் மனைவி எழுந்து
நின்று (நான்கு முறை சத்தியம் செய்து) சாட்சியம் அளித்தார். ஐந்தாம் முறையாக (சாப
அழைப்புப் பிரமாணம்) செய்யச் சென்ற போது மக்கள் அவரை நிறுத்தி இது (பொய்யான சத்திய
மாயிருந்தால் இறை தண்டனையை) உறுதிப்படுத்தி விடும். (எனவே, நன்கு யோசித்துச் செய்!) என்று கூறினார்கள்.
ஹிலால்
அவர்களின் மனைவி சற்றே தாமதித்து, பிரமாணம்
செய்யத் தயங்கினார். நாங்கள் அவர் தம் பிரமாணத்திலிருந்து பின்வாங்கி விடுவார்
என்றே எண்ணினோம். ஆனால் பிறகு அவர், காலமெல்லாம்
என் சமுதாயத் தாரை நான் இழிவுக்குள்ளாக்கப் போவ தில்லை என்று கூறி (சாப அழைப்புப்
பிரமாணத்தைச்) செய்து முடித்தார்.
அப்போது
நபி (ஸல்) அவர்கள் இவளைக் கவனித்து வாருங்கள். இவள் கரிய விழிகளும், பெருத்த புட்டங்களும், தடித்த
கால்களும் உடைய பிள்ளையைப் பெற்றெடுத்தால், அது
ஷரீக் பின் சஹ்மாவுக்கே உரியதாகும் என்று சொன்னார்கள். அப்பெண் நபியவர்கள்
வர்ணித்தவாறே குழந்தை பெற்றெடுத்தார். இதையறிந்த நபி (ஸல்) அவர்கள், இது பற்றிய இறைச்சட்டம் (லிஆன் விதி) மட்டும் வந்திருக்கா விட்டால்
நான் அவளைக் கடுமையாகத் தண்டித்திருப்பேன் என்று சொன்னார்கள். (புகாரி
4747)
3,அன்னை
ஆயிஷா ரலி அவர்களின் தூய்மையை நிரூபிக்கும் வகையில் 10 வசனங்களை அடுத்து கூறுகிறான்.
اِنَّ
الَّذِيْنَ جَآءُوْ بِالْاِفْكِ عُصْبَةٌ مِّنْكُمْ لَا تَحْسَبُوْهُ شَرًّا لَّـكُمْ بَلْ هُوَ خَيْرٌ لَّـكُمْ لِكُلِّ امْرِىٴٍ مِّنْهُمْ مَّا اكْتَسَبَ مِنَ
الْاِثْمِ وَالَّذِىْ تَوَلّٰى كِبْرَهٗ
مِنْهُمْ لَهٗ عَذَابٌ عَظِيْمٌ
எவர்கள்
பழி சுமத்தினார்களோ, நிச்சயமாக அவர்களும் உங்களில் ஒரு
கூட்டத்தினரே! ஆனால் அது உங்களுக்குத் தீங்கு என்று நீங்கள் எண்ண வேண்டாம். அது
உங்களுக்கு நன்மையாகும். (பழி சுமத்தியவர்கள்) ஒவ்வொரு மனிதனுக்கும் அவன்
சம்பாதித்த பாவம் (அதற்கொப்ப தண்டனை) இருக்கிறது; மேலும்,
அ(ப்பழி சுமத்திய)வர்களில் பெரும்
பங்கெடுத்துக் கொண்டவனுக்குக் கடினமான வேதனையுண்டு. (அல்குர்ஆன் : 24:11)
தன் மீது பழி சுமத்தப்பட்டது மிகப் பெரும்
சோதனையாக ஆயிஷா அம்மையாருக்கு அப்போது தெரிந்தாலும் அவர்கள் குறித்த அல்லாஹ்
இறக்கிய இந்த வசனங்கள் அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி யளிப்பதாகவும் பெருமையாகவும்
இருந்தது. அப்படியொரு பழிச் சொல் வர வில்லையெனில் இந்த வசனங்கள் அருளப்பட்டிருக்காது.
எனவே தான் அது உங்களுக்கு நண்மை என்று கூறுகிறான்.
عن أم
المؤمنين عائشة وزينب [ بنت جحش ] رضي الله عنهما ، أنهما تفاخرتا فقالت
زينب : زوجني الله وزوجكن أهاليكن وقالت عائشة : نزلت براءتي من السماء في القرآن
. فسلمت لها زينب ، ثم قالت : كيف قلت حين ركبت راحلة صفوان بن المعطل ؟ فقالت :
قلت : حسبي الله ونعم الوكيل ، فقالت زينب : قلت كلمة المؤمنين
அன்னை ஆயிஷா ரலி அவர்களும் ஜைனப் பின்த் ஜஹ்ஷ் ரலி
அவர்களும் தங்களில் யார் சிறந்தவர் என்று பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஜைனப்
ரலி அவர்கள் கூறினார்கள் ; உங்களை
உங்கள் குடும்பத்தார்கள் திருமணம் முடித்து வைத்தார்கள். ஆனால் என்னை
பெருமானாருக்கு அல்லாஹ்வே மணமுடித்து வைத்தான். அதற்கு ஆயிஷா ரலி அவர்கள் கூறினார்கள் ; நான் தூய்மையானவள் என்பதை பறைசாற்றும் விதமாக அல்லாஹ்
வானத்திலிருந்து வசனங்களை இறக்கி வைத்தான்.
4,பிறர்
வீட்டுக்கு செல்லும் போது கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகள். 3 முறை அனுமதி கேட்டு 3 முறை ஸலாம்
சொல்ல வேண்டும். அனுமதி கிடைக்க வில்லையென்றால் திரும்பி விட வேண்டும்.
يٰۤـاَيُّهَا
الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَدْخُلُوْا بُيُوْتًا غَيْرَ بُيُوْتِكُمْ حَتّٰى
تَسْتَاْنِسُوْا وَتُسَلِّمُوْا عَلٰٓى اَهْلِهَا ذٰ لِكُمْ خَيْرٌ لَّـكُمْ
لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ
ஈமான்
கொண்டவர்களே! உங்கள் வீடுகளல்லாத (வேறு) வீடுகளில், அ(வ்வீட்டிலுள்ள)வர்களிடம்
அனுமதி பெற்று, அவர்களுக்கு ஸலாம் சொல்லாதவரை
(அவற்றினுள்) பிரவேசிக்காதீர்கள் - (அவ்வாறு நடப்பதுவே) உங்களுக்கு நன்மையாகும்;
நீங்கள் நற்போதனை பெறுவதற்கு (இது உங்களுக்குக்
கூறப்படுகிறது). (அல்குர்ஆன் : 24:27)
فَاِنْ لَّمْ
تَجِدُوْا فِيْهَاۤ اَحَدًا فَلَا تَدْخُلُوْهَا حَتّٰى يُؤْذَنَ لَـكُمْ وَاِنْ
قِيْلَ لَـكُمُ ارْجِعُوْا فَارْجِعُوْا هُوَ اَزْكٰى لَـكُمْ وَاللّٰهُ بِمَا
تَعْمَلُوْنَ عَلِيْمٌ
அதில்
நீங்கள் எவரையும் காணாவிட்டால், உங்களுக்கு
அனுமதி கொடுக்கப்படும் வரையில் அதில் பிரவேசிக்காதீர்கள்; அன்றியும், “திரும்பிப் போய் விடுங்கள்” என்று
உங்களுக்குச் சொல்லப்பட்டால், அவ்வாறே
திரும்பி விடுங்கள் - அதுவே உங்களுக்கு மிகவும் பரிசுத்தமானதாகும்; மேலும், அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிபவன். (அல்குர்ஆன்
: 24:28)
عن أبي موسى
رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم : « إذا أستأذن أحدكم ثلاثا
فلم يؤذن له فليرجع » متفق عليه
உங்களில்
மூன்று முறை அனுமதி கேட்டு அனுமதி கிடைக்க வில்லையென்றால் அவர் திரும்பி
விடட்டும். (அபூதாவூது ; 5180)
ஏனென்றால்
சில நேரங்களில் அவர் வீட்டிற்குள் நுழைவதை அவர்கள் விரும்பாமல் இருக்கலாம். அல்லது
வெளியே வர முடியாத சூழ்நிலையாக இருக்கலாம். அந்த நேரத்தில் ரொம்ப நேரமாக நின்று
கொண்டே இருந்தால் அது அவர்களுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும். நமக்கும் நேரம்
வீணாகும்.இதை கருத்தில் கொண்டு தான் இப்படி ஒரு சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
كما ثبت في
الصحيح : أن أبا موسى حين استأذن على عمر ثلاثا ، فلم يؤذن له ، انصرف . ثم قال
عمر : ألم أسمع صوت عبد الله بن قيس يستأذن؟ ائذنوا له . فطلبوه فوجدوه قد ذهب ،
فلما جاء بعد ذلك قال : ما رجعك؟ قال : إني استأذنت ثلاثا فلم يؤذن لي ، وإني سمعت
رسول الله صلى الله عليه وسلم يقول : " إذا استأذن أحدكم ثلاثا ، فلم يؤذن له
، فلينصرف
"
அபூ
மூஸா அஷ்அரி ரலி அவர்கள் உமர் ரலி அவர்களை சந்திப்பதற்காக சென்றிருந்தார்கள்.
அனுமதி கேட்டார்கள். அவர்களுக்கு அனுமதி கிடைக்க வில்லை. எனவே திரும்பி
விட்டார்கள். உள்ளே உமர் ரலி அவர்கள், அவர்
அனுமதி கேட்கிறார். உங்களுக்கு சப்தம் கேட்க வில்லையா அவருக்கு அனுமதியளியுங்கள்
என்றார்கள். வெளியே வந்து பார்த்த போது அவர் இல்லை.திரும்பி விட்டார்கள். மீண்டும்
வந்த பிறகு ஏன் வந்து விட்டு திரும்பி விட்டீர்கள் என்று கேட்டார்கள். அப்போது அபூ
மூஸா அஷ்அரி ரலி அவர்கள், நான் மூன்று முறை அனுமதி கேட்டேன்.
அனுமதி வழங்க வில்லை. மூன்று முறை அனுமதி கேட்டும் அனுமதி வழங்கப்பட
வில்லையென்றால் அவர் திரும்பி விட வேண்டும் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்
என்றார்கள்.
5,ஆணும்
பெண்ணும் பார்வையை தாழ்த்திக் கொள்ளும் படி அடுத்த வசனங்கள் பேசுகிறது.அதற்கு
காரணத்தையும் சொல்கிறது எல்லாவற்றிற்கும் காரணம் பார்வை தான்.
قُلْ
لِّـلْمُؤْمِنِيْنَ يَغُـضُّوْا مِنْ اَبْصَارِهِمْ وَيَحْفَظُوْا فُرُوْجَهُمْ ذٰ لِكَ اَزْكٰى لَهُمْ اِنَّ اللّٰهَ خَبِيْرٌ بِمَا يَصْنَـعُوْنَ
(நபியே!)
முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக்
கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப்
பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு
மிகப் பரிசுத்தமானதாகும்; நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை
நன்கு தெரிந்தவன். (அல்குர்ஆன் : 24:30)
பார்வை தான் எல்லா குற்றங்களுக்கும்
அடிப்படையானது. எனவே அதைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும் என இஸ்லாம் கூறுகிறது.
عَنْ أَبِي
سَعِيدٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: "إِيَّاكُمْ وَالْجُلُوسَ عَلَى
الطُّرُقَاتِ". قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، لَا بُدَّ لَنَا مِنْ
مَجَالِسِنَا، نَتَحَدَّثُ فِيهَا. فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ: "إِنْ
أَبَيْتُمْ، فَأَعْطُوا الطَّرِيقَ حقَّه". قَالُوا: وَمَا حَقُّ الطَّرِيقِ
يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: "غَضُّ الْبَصَرِ، وكَفُّ الْأَذَى، وَرَدُّ
السَّلَامِ، وَالْأَمْرُ بِالْمَعْرُوفِ، وَالنَّهْيُ عَنِ الْمُنْكَرِ" صحيح
البخاري برقم (٢٤٦٥)
“நீங்கள் சாலைகளில் அமர்வதைத் தவிருங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள். மக்கள், “எங்களுக்கு அங்கு அமர்வதைத் தவிர வேறு வழியில்லை. அவைதாம், நாங்கள் பேசிக் கொள்கின்ற எங்கள்
சபைகள்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், “அப்படியென்றால் நீங்கள் அந்தச் சபைகளுக்கு வ(ந்து அம)ரும் போது, பாதைக்கு அதன் உரிமையைக்
கொடுத்து விடுங்கள்” என்று கூறினார்கள். மக்கள், “பாதையின் உரிமை என்ன?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “(அந்நியப் பெண்களைப் பார்க்காமல்) பார்வையைத் தாழ்த்திக் கொள்வதும்
(பாதையில் செல்வோருக்குச் சொல்லாலோ செயலாலோ) துன்பம் தராமலிருப்பதும், சலாமுக்கு பதிலுரைப்பதும், நன்மை புரியும்படி
கட்டளையிடுவதும், தீமையிலிருந்து தடுப்பதும் (அதன்
உரிமைகள்) ஆகும்” என்று பதிலளித்தார்கள். (புகாரி ; 2465)
فَضْلُ(٧)
بْنُ جُبَيْرٍ: سَمِعْتُ أَبَا أُمَامَةَ يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ
يَقُولُ: "اكْفُلُوا لِي بِستّ أَكْفُلْ لَكُمْ بِالْجَنَّةِ: إِذَا حدَّث
أَحَدُكُمْ فَلَا يَكْذِبْ، وَإِذَا اؤْتُمِنَ فَلَا يَخُن، وَإِذَا وَعَد فَلَا
يُخْلِفْ. وغُضُّوا أَبْصَارَكُمْ، وكُفُّوا أَيْدِيَكُمْ، وَاحْفَظُوا
فُرُوجَكُمْ ورواه الطبراني في المعجم الكبير (٨/٣١٤)
ஆறு விஷயங்களை செய்வதாக நீங்கள் பொறுப்பேற்றுக்
கொண்டால் சொர்க்கம் கிடைக்க நான் பொறுப்பு என்று கூறிய நபியவர்கள் உங்கள் பார்வையை
தாழ்த்திக் கொள்ளுங்கள் என்பதையும் குறிப்பிட்டார்கள். (முஃஜமுல் கபீர்)
6,பெண்கள்
தங்கள் உடல் அவயங்களை மறைத்து புர்கா அணிந்து செல்ல வேண்டும்.
7,ஆண்
பெண் திருமண வயதை அடைந்து விட்டால் திருமணம் முடித்து வையுங்கள். வசதி இல்லா
விட்டாலும் பரவா இல்லை அல்லாஹ் உங்களுக்கு வசதியை தருவான் என்று கூறுகிறான்.
وَاَنْكِحُوا
الْاَيَامٰى مِنْكُمْ وَالصّٰلِحِيْنَ مِنْ عِبَادِكُمْ وَاِمَآٮِٕكُمْ اِنْ يَّكُوْنُوْا فُقَرَآءَ يُغْنِهِمُ
اللّٰهُ مِنْ فَضْلِهٖ وَاللّٰهُ وَاسِعٌ
عَلِيْمٌ
இன்னும்,
உங்களில் வாழ்க்கைத் துணை இல்லா (ஆடவர்,
பெண்டி)ருக்கும், அவ்வாறே
(வாழ்க்கைத் துணையில்லா) ஸாலிஹான உங்கள் (ஆண், பெண்)
அடிமைகளுக்கும் விவாகம் செய்து வையுங்கள்; அவர்கள்
ஏழைகளாக இருந்தால், அல்லாஹ் தன் நல்லருளைக் கொண்டு
அவர்களைச் சீமான்களாக்கி வைப்பான்; மேலும் அல்லாஹ்
(கொடையில்) விசாலமானவன். (யாவற்றையும்) நன்கறிந்தவன். (அல்குர்ஆன் : 24:32)
عَنْ سَعِيدٍ
-يَعْنِي: ابْنَ عَبْدِ الْعَزِيزِ -قَالَ: بَلَغَنِي أَنَّ أَبَا بَكْرٍ
الصِّدِّيقَ، رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: أَطِيعُوا اللَّهَ فِيمَا أَمَرَكُمْ
بِهِ مِنَ النِّكَاحِ، يُنْجِزْ [لَكُمْ](٣) مَا وَعَدَكُمْ مِنَ الْغِنَى، قَالَ:
﴿إِنْ يَكُونُوا فُقَرَاءَ يُغْنِهِمُ اللَّهُ مِنْ فَضْلِهِ﴾ .
அல்லாஹ் உங்களுக்கு ஏவிய திருமணத்தை செய்வதின் மூலம்
அவனுக்கு வழப்படுங்கள். அல்லாஹ் செல்வத்தைத் தருவதாக அவன் கூறிய வாக்குறுதியை
நிறைவேற்றுவான் என அபூபக்கர் ரலி அவர்கள் கூறுகிறார்கள்.
وَعَنِ ابْنِ
مَسْعُودٍ: الْتَمِسُوا الْغِنَى فِي النِّكَاحِ، يَقُولُ اللَّهُ تَعَالَى: ﴿إِنْ
يَكُونُوا فُقَرَاءَ يُغْنِهِمُ اللَّهُ مِنْ فَضْلِهِ﴾
இப்னு மஸ்வூத் ரலி அவர்கள் நிகாஹின் மூலம் செல்வத்தைத்
தேடுங்கள் என்று இந்த வசனத்தை ஓதுவார்கள்.
8,காஃபிர்கள்
செய்யக்கூடிய அமல்கள் எப்படிப்பட்டது.
وَالَّذِيْنَ
كَفَرُوْۤا اَعْمَالُهُمْ كَسَرَابٍ بِقِيْعَةٍ يَّحْسَبُهُ الظَّمْاٰنُ مَآءً
حَتّٰۤى اِذَا جَآءَهٗ لَمْ يَجِدْهُ شَيْــٴًـــا وَّ وَجَدَ اللّٰهَ عِنْدَهٗ
فَوَفّٰٮهُ حِسَابَهٗ وَاللّٰهُ سَرِيْعُ
الْحِسَابِ ۙ
அன்றியும்,
எவர்கள் காஃபிராக இருக்கிறார்களோ, அவர்களுடைய செயல்கள் பாலைவனத்தில் (தோற்றமளிக்கும்) கானல் நீரைப்
போலாகும்; தாகித்தவன் அதைத் தண்ணீரென்றே
எண்ணுகிறான் - (எது வரையெனில்) அதற்கு (அருகில்) அவன் வரும் பொழுது ஒரு பொருளையும்
(அங்கே) காணமாட்டானே (அது வரை); ஆனால், அங்கு அவன் அல்லாஹ் (அவனுக்கு விதித்திருக்கும் முடி)வை(யே)
காண்கின்றான்; (அதன் படி அல்லாஹ்) அவன் கணக்கைத்
தீர்க்கிறான்; மேலும், அல்லாஹ்
கணக்குத் தீர்ப்பதில் துரிதமானவன். (அல்குர்ஆன் : 24:39)
9,உலகத்தில்
மனிதர்கள் மட்டுமல்ல, மிருகங்கள், பறவைகள் என அனைத்தும் அல்லாஹ்வை தஸ்பீஹ்
செய்கின்றன.
اَلَمْ تَرَ
اَنَّ اللّٰهَ يُسَبِّحُ لَهٗ مَنْ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَالطَّيْرُ
صٰٓفّٰتٍ كُلٌّ قَدْ عَلِمَ صَلَاتَهٗ وَتَسْبِيْحَهٗ وَاللّٰهُ عَلِيْمٌ بِمَا
يَفْعَلُوْنَ
(நபியே!)
நீர் பார்க்கவில்லையா? வானங்களிலும் பூமியிலும் உள்ளவையும்,
பறவைகள் (விண்ணில் தங்கள்) இறக்கைகளை
விரித்(துப் பறந்)த வண்ணமாக நிச்சயமாக அல்லாஹ்வைத் தஸ்பீஹு செய்(து துதிக்)கின்றன;
ஒவ்வொன்றும் தன் தொழுகையையும், (அல்லாஹ்வை) தஸ்பீஹு செய்யும் வழியையும் திட்டமாக அறிந்தே இருக்கிறது
- அல்லாஹ்வும் அவை செய்பவற்றை நன்கறிந்திருக்கிறான். (அல்குர்ஆன் : 24:41)
ابن عباس رضي
الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم مر بقبرين فقال إنهما ليعذبان وما
يعذبان في كبير ؛ أما أحدهما فكان لا يستتر من البول وأما الآخر فكان يمشي
بالنميمة ثم أخذ جريدة رطبة فشقها نصفين ثم غرز في كل قبر واحدة ثم قال لعله يخفف
عنهما ما لم ييبسا أخرجاه في الصحيحين
.
قال بعض من
تكلم على هذا الحديث من العلماء إنما قال ما لم ييبسا لأنهما يسبحان ما دام فيهما
خضرة فإذا يبسا انقطع تسبيحهما والله أعلم
நபி
ஸல் அவர்கள் இரு கப்ரை கடந்து செல்வார்கள்.இந்த இரு கப்ரில் உள்ளவர்களும் வேதனை
செய்யப்படுகிறார்கள் என்று கூறி இரு ஈரமான மரக்கிளைகளை உடைத்து அதை இரண்டாக
உடைத்து ஒவ்வொன் றையும் ஒவ்வொரு கப்ரிலும் நட்டி வைத்தார்கள்.இவைகள் காயும் வரை
அவர்களின் வேதனை குறைக்கப்படும் என்றார்கள். {புகாரி}
நபி
ஸல் அவர்கள் அவ்வாறு சொன்ன காரணம், அவைகள் ஈரமாக
இருக்கும் வரை தஸ்பீஹ் செய்கின்றன என்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.
سمعتُ رسولَ
اللهِ صلى الله عليه وسلم يقولُ: قرصت نملةٌ نبيًّا من الأنبياءِ ، فأمر بقريةِ
النملِ فأُحْرِقت، فأوحى اللهُ إليه: أن قرصتك نملةٌ أحْرَقتَ أُمةً من الأُممِ
تُسَبِّحُ.
நபிமார்களில்
ஒரு நபியை எறும்பொன்று கடித்து விட்டது.அந்த எறும்புப் புற்றை தீயிட்டுக்
கொளுத்தும் படி அந்த அந்த நபி உத்தரவிட்டார்கள். அதன் படி கொளுத்தப்பட்டது.அப்போது
அல்லாஹ் அந்த நபிக்கு ஒரு எறும்பு கடித்ததினால் அல்லாஹ்வை தஸ்பீஹ் செய்யும் ஒரு
கூட்டத்தை அழித்து விட்டீர்களே என்று வஹியின் மூலம் கூறினான். {புகாரி ; 3019}
10,மேகங்களை
உருவாக்கி மழை பொழிய வைத்தல் இரவு பகல் மாறி மாறி வர வைத்தல் என அல்லாஹ்வின் வல்லமையைப்
பேசுகிறான்.
اَلَمْ تَرَ
اَنَّ اللّٰهَ يُزْجِىْ سَحَابًا ثُمَّ يُؤَلِّفُ بَيْنَهٗ ثُمَّ يَجْعَلُهٗ
رُكَامًا فَتَرَى الْوَدْقَ يَخْرُجُ مِنْ خِلٰلِهٖ وَيُنَزِّلُ مِنَ السَّمَآءِ
مِنْ جِبَالٍ فِيْهَا مِنْ بَرَدٍ فَيُـصِيْبُ بِهٖ مَنْ يَّشَآءُ وَ يَصْرِفُهٗ
عَنْ مَّنْ يَّشَآءُ يَكَادُ سَنَا
بَرْقِهٖ يَذْهَبُ بِالْاَبْصَارِ
(நபியே!)
நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் மேகத்தை மெதுவாக
இழுத்து, பின்னர் அவற்றை ஒன்றாக இணையச்செய்து,
அதன் பின் அதை (ஒன்றின் மீது ஒன்று சேர்த்து)
அடர்த்தியாக்குகிறான்; அப்பால் அதன் நடுவேயிருந்து மழை
வெளியாவதைப் பார்க்கிறீர்; இன்னும் அவன் வானத்தில் மலைக(ளைப்
போன்ற மேகக் கூட்டங்க)ளிலிருந்து பனிக்கட்டியையும் இறக்கி வைக்கின்றான்; அதைத் தான் நாடியவர்கள் மீது விழும்படிச் செய்கிறான் - தான்
நாடியவர்களை விட்டும் அதை விலக்கியும் விடுகிறான் - அதன் மின்னொளி பார்வைகளைப்
பறிக்க நெருங்குகிறது. (அல்குர்ஆன் : 24:43)
11,கடைசியாக
நபி ஸல் அவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய மரியாதை, அவர்களிடம் நாம் நடந்து கொள்ளும்
முறை.
لَا
تَجْعَلُوْا دُعَآءَ الرَّسُوْلِ بَيْنَكُمْ كَدُعَآءِ بَعْضِكُمْ بَعْضًا قَدْ يَعْلَمُ اللّٰهُ الَّذِيْنَ
يَتَسَلَّلُوْنَ مِنْكُمْ لِوَاذًا
فَلْيَحْذَرِ الَّذِيْنَ يُخَالِفُوْنَ عَنْ اَمْرِهٖۤ اَنْ تُصِيْبَهُمْ
فِتْنَةٌ اَوْ يُصِيْبَهُمْ عَذَابٌ اَ لِيْمٌ
(முஃமின்களே!)
உங்களில் ஒருவர் மற்றொருவரை அழைப்பதுபோல் உங்களுக்கிடையில் (அல்லாஹ்வுடைய) தூதரின்
அழைப்பை ஆக்காதீர்கள். உங்களிலிருந்து (அவருடைய சபையிலிருந்து) எவர் மறைவாக நழுவி
விடுகிறார்களோ அவர்களை திடமாக அல்லாஹ் (நன்கு) அறிவான் - ஆகவே எவர் அவருடைய
கட்டளைக்கு மாறு செய்கிறார்களோ அவர்கள் தங்களை சோதனை பிடித்துக் கொள்வதையோ,
அல்லது தங்களை நோவினை தரும் வேதனை பிடித்துக்
கொள்வதையோ அஞ்சிக் கொள்ளட்டும். (அல்குர்ஆன் : 24:63)
2023 அவதூறு
வாஹிதிகள் பேரவை அனைத்தும் தஸ்பீஹ் செய்கின்றன
No comments:
Post a Comment