இந்தப் பதிவின் இறுதியில் 2022 மற்றும் 2023 ம் வருட எனது தராவீஹ் குறிப்புகளின்
இணைப்பையும் வாஹிதிகள் பேரவை சார்பாக வெளியிடப்பட்ட குறிப்புகளின் இணைப்பையும்
தந்திருக்கிறேன். அருள் பொருந்திய இந்த ரமலான் காலங்களில் உங்களின் மேலான
துஆக்களில் இந்த அடியேனையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
وَقَالَتِ
امْرَاَتُ فِرْعَوْنَ قُرَّتُ عَيْنٍ لِّىْ وَلَكَ لَا تَقْتُلُوْهُ عَسٰٓى اَنْ يَّـنْفَعَنَاۤ اَوْ نَـتَّخِذَهٗ
وَلَدًا وَّهُمْ لَا يَشْعُرُوْنَ
இன்னும்: (குழந்தையைக் கண்ட) ஃபிர்அவ்னின் மனைவி (“இக்குழந்தை) எனக்கும் உங்களுக்கும் கண் குளிர்ச்சியாக இருக்கிறது - இதை நீங்கள் கொன்று விடாதீர்கள்; நமக்கு இவர் பயன் அளிக்கக்கூடும்; அல்லது நாம் இவரை நம் புதல்வராக்கிக் கொள்ளலாம்” என்று சொன்னார்; இன்னும் அவர்கள் (இதன் விளைவு என்னவாகும் என்பதை) உணர்ந்து கொள்ளவில்லை. (அல்குர்ஆன் : 28:9)
أنَّهم حِينَ
التَقَطُوا التابُوتَ عالَجُوا فَتْحَهُ فَلَمْ يَقْدِرُوا عَلَيْهِ فَعالَجُوا
كَسْرَهُ فَأعْياهم فَدَنَتْ آسِيَةُ فَرَأتْ في جَوْفِ التابُوتِ نُورًا
فَعالَجَتْهُ فَفَتَحَتْهُ فَإذا بِصَبِيٍّ نُورُهُ بَيْنَ عَيْنَيْهِ فَأحَبُّوهُ
وكانَتْ لِفِرْعَوْنَ بِنْتٌ بَرْصاءُ فَنَظَرَتْ إلى وجْهِهِ فَبَرَأتْ فَقالَتِ
الغُواةُ مِن قَوْمِهِ هو الَّذِي نَحْذَرُ مِنهُ فَأْذَنْ لَنا في قَتْلِهِ
فَهَمَّ بِذَلِكَ فَقالَتْ آسِيَةُ قُرَّةُ عَيْنٍ لِي ولَكَ، فَقالَ فِرْعَوْنُ
لَكِ لا لِي، وفي الحَدِيثِ: « " لَوْ قالَ كَما قالَتْ لَهَداهُ اللهُ
تَعالى كَما هَداها » وهَذا عَلى سَبِيلِ الفَرْضِ أيْ: لَوْ كانَ غَيْرَ
مَطْبُوعٍ عَلى قَلْبِهِ كَآسِيَةَ لَقالَ مِثْلَ قَوْلِها وكانَ أسْلَمَ كَما أسْلَمَتْ
ابن كثير
ஃபிர்அவ்னிடமிருந்து
தன் குழந்தையை பாதுகாப்பதற்காக பெட்டியில் வைத்து மூஸா நபி அலை அவர்களின் தாயார்
தன் குழந்தையை நைல் நதியில் அனுப்பினார்கள். அந்தப் பெட்டி மிதந்து ஃபிர்அவுனின் அரண்மனைக்கு அருகில் சென்றது.
அதைத் திறந்து பார்த்த போது மூஸா நபியின் ஒளி பொருந்திய முகத்தைக்
கண்டார்கள்.அவர்களைப் பார்த்தவுடன் அனைவரும் அவர்களின் மீது அன்பு கொண்டார்கள்.
அந்தக் குழந்தையின் முகத்திலிருந்து வெளிப்பட்ட அந்த ஒளியைப் பார்த்ததினால் குஷ்ட
நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஃபிர்அவ்னின் மகளுடைய அந்த நோய் குணமானது. அந்த
குழந்தையின் அழகிய முகத்தைப் பார்த்தவுடன் ஆசியா அம்மையாருக்கு அந்த குழந்தையின்
மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. அது ஆண் குழந்தை என்று தெரிந்தவுடன் அதைக் கொல்வதற்கு
ஃபிர்அவ்னுடைய ஆட்கள் முற்பட்டார்கள். அப்போது ஆசியா அம்மையார் இந்த குழந்தையைக்
கொல்ல வேண்டாம். இது எனக்கும் உங்களுக்கும் கண் குளிர்ச்சியாக இருக்கும் என்று
கூறினார்கள். அதைக் கேட்ட ஃபிர்அவ்ன் இது உனக்கு வேண்டுமானால் கண் குளிர்ச்சியாக
இருக்கலாம். எனக்கு இதன் மூலம் எந்தக் கண்குளர்ச்சியும் இல்லை என்று கூறினான்.
நபி
ஸல் அவர்கள் கூறினார்கள் ஆசியா அம்மையார் சொன்னதைப் போன்றே அவனும் அவ்வாறு சொல்லியிருந்தால்
அவனுக்கும் நேர் வழி கிடைத்திருக்கும். மூஸா நபியைக் கொண்டு ஈமான் கொள்ளும்
வாய்ப்பு கிடைத்திருக்கும். எனக்கு கண் குளிர்ச்சி இல்லை என்று சொன்னதினால்
அவனுக்கு ஹிதாயத் கிடைக்காமல் போனது என்று குறிப்பிடுகிறார்கள். (இப்னுகஸீர்)
இன்றைக்கு
நிறைய பேருக்கு சோதனைகளும் ஆபத்துகளும் அவர்களின் நாவுகளால் தான்
ஏற்படுகிறது.தெரிந்தோ தெரியாமலோ ஒருவன் சொல்லும் வார்த்தையினால் அவனுடைய
வாழ்க்கையே தலைகீழாக மாறி விடும்.
நாம் பயன்படுத்தும்
வார்த்தைகள் ஒவ்வொன்றும் முக்கியமானவை. அர்த்தமுள்ளவை. வாழ்க்கையில் பல மாற்றங்களை
ஏற்படுத்துபவை. நாம் தெரியாமல் அல்லது அதன் விபரீதம் புரியாமல் பேசி விடும் சில
வார்த்தைகளால் நமக்கு கிடைக்க வேண்டிய பாக்கியங்கள் கிடைக்காமல் போய் விடலாம். ஆபத்துக்களும்
சோதனைகளும் வந்து விடலாம்.
நாவால்
யூசுப் அலை அவர்கள் சந்தித்த சோதனை
قَالَ رَبِّ
السِّجْنُ اَحَبُّ اِلَىَّ مِمَّا يَدْعُوْنَنِىْۤ اِلَيْهِ وَاِلَّا تَصْرِفْ
عَنِّىْ كَيْدَهُنَّ اَصْبُ اِلَيْهِنَّ وَاَكُنْ مِّنَ الْجٰهِلِيْنَ
(அதற்கு)
அவர், “என் இறைவனே! இவர்கள் என்னை எதன் பக்கம்
அழைக்கிறார்களோ, அ(த்தீய)தை விடச் சிறைக்கூடமே எனக்கு
அதிக விருப்பமுடையதாகும்; இவர்களின் சதியை விட்டு நீ என்னைக்
காப்பாற்றவில்லையானால், நான் இவர்கள் பால் சாய்ந்து
(பாவத்தால்) அறிவில்லாதவர்களில் ஒருவனாகிவிடுவேன்” என்று (பிரார்த்தித் தவராக)
கூறினார். (அல்குர்ஆன்
: 12:33)
لَمّا قالَ:
﴿رَبِّ السِّجْنُ أحَبُّ إلَيَّ﴾ إلَخْ أوْحى اللَّهُ تَعالى إلَيْهِ: يا يُوسُفُ
أنْتَ جَنَيْتَ عَلى نَفْسِكَ ولَوْ قُلْتَ: العافِيَةُ أحَبُّ إلَيَّ عُوفِيتَ،
இந்த
மாதிரியான ஒரு காரியத்தில் ஈடுபடுவதை விட சிறையே எனக்கு மேலானது என்று அவர்கள் சொன்னார்கள்.சிறைக்கு
சென்றார்கள். அல்லாஹ் அவர்களைப் பார்த்து யூசுஃபே! தவறு செய்து விட்டீர். அவ்வாறு சொன்னதினாலேயே
நீங்கள் சிறைக்கு சென்றீர். நான் இதிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும். அதுவே
எனக்கு மேலானது என்று மட்டும் கூறியிருந்தால் நீங்கள் பாதுகாக்கப்பட்டிருப்பீர்.
சிறைக்கு சென்றிருக்க மாட்டீர் என்று அல்லாஹ் கூறினான். (குர்துபீ)
நாம் பயன்படுத்தும் வார்த்தைகளுக்கு கனம் அதிகம்.
நாம் சொல்வதைப் போன்றே நடந்து விடும்.சில பேர் சொல்வதை நாம் பார்த்திருக்கலாம்.
எனக்கெல்லாம் எங்கே வேலை கிடைக்கப் போகிறது? கடைசி வரை அவருக்கு வேலையே கிடைக்காது. எனக்கெல்லாம் எங்கே கல்யாணம்
ஆகப்போகிறது? கடைசி வரை அவருக்கு
கல்யாணமே ஆகாது. எனக்கெல்லாம் எங்கே குழந்தை பிறக்கப்போகிறது? கடைசி வரை அவருக்கு குழந்தையே பிறக்காது.
இது நமக்கு மட்டுமல்ல,
நம்மைச் சார்ந்தவர்களுக்கும் விபரீதங்களை ஏற்படுத்தும். என் பையன் எங்கே உருப்படப்போறான்? என்று சில தாய்மார்கள் சொல்வார்கள். அவன் கடைசி வரை
உருப்பட மாட்டான். எனவே நாம் சொல்லி விடும் வார்த்தைகளால் நிஃமத்துக்கள் தடுக்கப்படவும்
செய்யும். சோதனைகள் வரவும் செய்யும்.
சொல்லும் வார்த்தைகளை நன்கு
கவனித்து நிதானித்துச் சொல்ல வேண்டும்.
عَنْ مُعاذِ
بْنِ جَبَلٍ «عَنْهُ عَلَيْهِ الصَّلاةُ والسَّلامُ أنَّهُ سَمِعَ رَجُلًا وهو
يَقُولُ: ”اللَّهُمَّ إنِّي أسْألُكَ الصَّبْرَ، فَقالَ صَلّى اللَّهُ تَعالى
عَلَيْهِ وسَلَّمَ: سَألْتَ اللَّهَ تَعالى البَلاءَ فاسْألْهُ العافِيَةَ“»
இறைவா
எனக்கு பொறுமையைத் தா என்று ஒருவர் கேட்ட போது நபி ஸல் அவர்கள் அவரிடத்தில் நீ
சோதனையைக் கேட்டு விட்டாயே! அல்லாஹ்விடம் ஆரோக்கியத்தைக் கேள் என்றார்கள்.
(திர்மிதி)
சோதனைகளும் கஷ்டங்களும் வரும் போது தான் பொறுமை
தேவைப்படும். எனவே ஒருவர் பொறுமையைக் கேட்டால் சோதனையைக் கேட்கிறார் என்று தான் பொருள்.
எனவே தான் அவ்வாறு கேட்க வேண்டாம் என்று சொன்னார்கள்.
தன் வார்த்தையால் தன் முடிவைத் தேடிக் கொண்ட
கிராமவாசி
عَنِ ابْنِ
عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم دَخَلَ عَلَى
أَعْرَابِيٍّ يَعُودُهُ ـ قَالَ ـ وَكَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا
دَخَلَ عَلَى مَرِيضٍ يَعُودُهُ فَقَالَ لَهُ "" لاَ بَأْسَ طَهُورٌ
إِنْ شَاءَ اللَّهُ "". قَالَ قُلْتَ طَهُورٌ، كَلاَّ بَلْ هِيَ حُمَّى
تَفُورُ ـ أَوْ تَثُورُ ـ عَلَى شَيْخٍ كَبِيرٍ، تُزِيرُهُ الْقُبُورَ. فَقَالَ
النَّبِيُّ صلى الله عليه وسلم "" فَنَعَمْ إِذًا "
நபி
(ஸல்) அவர்கள் (நோயுற்றிருந்த) ஒரு கிராமவாசியிடம், அவரை
உடல் நலம் விசாரிக்கச் சென்றார்கள். நபி (ஸல்) அவர்கள் ஒரு நோயாளியிடம் உடல் நலம்
விசாரிக்கச் சென்றால் அந்த நோயாளியிடம், ‘‘கவலைப்பட
வேண்டாம். இறைவன் நாடினால், (இது உங்கள்
பாவத்தை நீக்கி உங்களைத்) தூய்மைப் படுத்தி விடும்” என்று கூறுவார்கள்-
(தமது
அந்த வழக்கப்படி நபி (ஸல்) அவர்கள் கிராமவாசியிடம் கூறிய போது) அந்தக் கிராமவாசி,
‘‘நான் தூய்மை பெற்று விடுவேன் என்றா சொன்னீர்கள்! (சாத்தியம்)
கிடையாது. இதுவோ வயது முதிர்ந்த பெரியவரைப் பீடிக்கின்ற சூடாகித் தகிக்கின்ற
காய்ச்சலாகும். இது அவரை மண்ணறைகளைச் சந்திக்க வைக்கும்” என்று சொன்னார்.அப்போது
நபி ஸல்) அவர்கள், ‘‘அப்படியென்றால் ஆம் (அவ்வாறே
நடக்கும்)” என்று கூறினார்கள். (புகாரி ; 5656)
أن عند
الطبراني من حديث شرحبيل والد عبد الرحمن أن الأعرابي المذكور أصبح ميتا
அவ்வாறு
நபி ஸல் அவர்களிடம் பதில் சொன்ன அந்த கிராமவாசி அன்று இறந்து போனார். (ஃபத்ஹுல்
பாரீ)
நாவால்
நரகம் செல்லும் பெண்கள்
يا مَعْشَرَ
النِّساءِ، تَصَدَّقْنَ وأَكْثِرْنَ الاسْتِغْفارَ، فإنِّي رَأَيْتُكُنَّ أكْثَرَ
أهْلِ النَّارِ فَقالتِ امْرَأَةٌ منهنَّ جَزْلَةٌ: وما لنا يا رَسولَ اللهِ،
أكْثَرُ أهْلِ النَّارِ؟ قالَ: تُكْثِرْنَ اللَّعْنَ، وتَكْفُرْنَ العَشِيرَ
பெண்களே
நீங்கள் ஸதகா செய்து கொள்ளுங்கள். அதிகமாக பாவமன்னிப்புத் தேடிக்
கொள்ளுங்கள்.நிச்சயமாக நான் உங்களை நரகத்தில் அதிகம் இருப்பதைப் பார்த்தேன் என்று
நபி ஸல் அவர்கள் கூறினார்கள். அவர்களில் விபரமுள்ள ஒரு பெண்மனி நரகத்தில் அதிகமாக
இருப்பதற்கு எங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது என்று கேட்டார்கள். அப்போது நபி ஸல்
அவர்கள் நீங்கள் அதிகம் சாபமிடுகிறீர்கள். கணவனிடம் நன்றியில்லாமல் நடக்கிறீர்கள்
என்றார்கள். (முஸ்லிம் ; 79)
யூதர்கள்
அவர்களின் நாவின் காரணமாக சபிக்கப்பட்டார்கள்.
وَقَالَتِ
الْيَهُوْدُ يَدُ اللّٰهِ مَغْلُوْلَةٌ
غُلَّتْ اَيْدِيْهِمْ وَلُعِنُوْا بِمَا قَالُوْا ۘ بَلْ يَدٰهُ
مَبْسُوْطَتٰنِ ۙ يُنْفِقُ كَيْفَ يَشَآءُ
وَلَيَزِيْدَنَّ كَثِيْرًا مِّنْهُمْ مَّاۤ اُنْزِلَ اِلَيْكَ مِنْ
رَّبِّكَ طُغْيَانًا وَّكُفْرًا وَاَ
لْقَيْنَا بَيْنَهُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَآءَ اِلٰى يَوْمِ الْقِيٰمَةِ كُلَّمَاۤ اَوْقَدُوْا نَارًا لِّلْحَرْبِ
اَطْفَاَهَا اللّٰهُ ۙ وَيَسْعَوْنَ فِى الْاَرْضِ فَسَادًا وَاللّٰهُ لَا يُحِبُّ الْمُفْسِدِيْنَ
“அல்லாஹ்வின்
கை கட்டப்பட்டிருக்கிறது” என்று யூதர்கள் கூறுகிறார்கள்; அவர்களுடைய
கைகள்தாம் கட்டப்பட்டுள்ளன. இவ்வாறு கூறியதின் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டார்கள்;
அல்லாஹ்வின் இரு கைகளோ விரிக்கப்பட்டே இருக்கின்றன; தான்
நாடியவாறு (தன் அருட்கொடைகளை) கொடுக்கிறான்; உம்
மீது உம் இறைவனால் இறக்கப்பட்ட (இவ்வேதம்) அவர்கள் அநேகரில் வரம்பு மீறுதலையும்
குஃப்ரை (நிராகரிப்பை)யும் நிச்சயமாக அதிகப் படுத்துகிறது, ஆகவே
அவர்களிடையே பகைமையும், வெறுப்புணர்ச்சியையும் இறுதி நாள்வரை
நாம் போட்டுவிட்டோம்; அவர்கள் யுத்த நெருப்பை
மூட்டும்போதெல்லாம் அதனை அல்லாஹ் அணைத்து விடுகிறான்; (ஆயினும்)
இன்னும் அவர்கள் பூமியில் குழப்பம் செய்து கொண்டே திரிகின்றனர்; அல்லாஹ்
குழப்பம் செய்பவர்களை நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன்
: 5:64)
ஒரு
வார்த்தையால் நரகம் சென்ற மனிதர்
كانَا رجلانِ
في بني إسرائيلَ مُتواخيينِ فكانَ
أحدُهما
يذنِبُ والآخَرُ مجتهدٌ في العبادةِ فكانَ لا يزالُ المُجتهدُ يرى الآخرَ على
الذَّنبِ فيقولُ أقصِر فوجدَهُ يومًا على ذنبٍ فقالَ لهُ أقصِر فقالَ خلِّني
وربِّي أبُعِثتَ عليَّ رقيبًا فقالَ واللَّهِ لا يغفرُ اللَّهُ لكَ أو لا يدخلُكَ
اللَّهُ الجنَّةَ فقبضَ أرواحَهما فاجتمعا عندَ ربِّ العالمينَ فقالَ لهذا
المُجتهدِ أكنتَ بي عالِمًا أو كنتَ على ما في يدي قادِرًا وقالَ للمذنبِ اذهب
فادخلِ الجنَّةَ برحمتي وقالَ للآخرِ اذهبوا بهِ إلى النَّارِ قالَ أبو هريرةَ
والَّذي نفسي بيدِهِ لَتكلَّمَ بكلمةٍ أوبَقت دنياهُ آخرتَهُ
பனூ
இஸ்ரவேலர்களில் இரு சகோதரர்கள் இருந்தார்கள். அதிலே ஒருவர் அதிகம் வணக்கங்களில்
ஈடுபடுபவர். இன்னொருவர் பாவம் செய்யக்கூடியவர். அவரை பாவத்தில் பார்க்கும் பொழுதெல்லாம்
அந்த வணக்கசாலி அல்லாஹ்வை அஞ்சிக் கொள். பாவத்தை விட்டு விடு என்று சொல்லிக்
கொண்டிருப்பார். ஒரு நாள் அவ்வாறு சொன்ன பொழுது என்னை விட்டு விடு. இது எனக்கும்
என் இறைவனுக்கும் மத்தியில் உள்ளது. அதில் நீ தலையிட வேண்டாம். என்னை
கண்காணிப்பதற்காகவா இறைவன் உன்னை அனுப்பி இருக்கிறான் என்று கூறினார். அதற்கவர்
உன்னை இறைவன் மன்னிக்க மாட்டான் அல்லது சுவனத்தில் நுழைவிக்க மாட்டான் என்று
கூறினார். அவ்விருவரின் உயிரும் கைப்பற்றப்பட்டது. இறைவன் மறுமையில் அவர்களை எழுப்பினான்.
அந்த வணக்கசாலியைப் பார்த்து என்னைப் பற்றி நன்கு அறிந்திருக்கிறாயா என் விதியில்
உள்ளதை அறிந்து கொள்ளும் ஆற்றல் உனக்கு இருக்கிறதா என்று கூறி அவரை நரகத்திற்கு
அழைத்துச் செல்லும்படி உத்தரவிட்டான். பிறகு அந்தப் பாவியை அழைத்து சுவனத்தில்
நுழையச் செய்தான். (அஸ்ஸஹீஹுல் முஸ்னத் ; 1318)
வார்த்தைகளால்
இதுபோன்ற பல்வேறு விபரீதங்கள் ஏற்படுவால் நம் முன்னோர்கள் பேசுவதற்கே பயந்தார்கள்.
عن إبراهيم
النخعي أنه قال: "إِنِّي لأَجِدُ نَفْسِي تُحَدِّثُنِي بِالشَّيْءِ، فَمَا
يَمْنَعُنِي أَنْ أَتَكَلَّمَ بِهِ؛ إِلاَّ مَخَافَةَ أَنِ أُبْتَلَى بِهِ"
சில விஷயத்தைப் பேச வேண்டும் என்று என் உள்ளம் நாடும்.ஆனால்
அதனால் சோதிக்கப்பட்டு விடுவேனோ என்று பயந்து பேசுவதில்லை என்று இப்ராஹீம் நகயீ
ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.
2023 ஹுத்ஹுத்
வாஹிதிகள் பேரவை சோதனைகள்
அருமை அருமை
ReplyDeleteமாஷா அல்லாஹ்
அல்லாஹ் உங்களுக்கு மென்மேலும் எழுத்துத் துறையில் வளர்ச்சி தருவானாக
ஆமீன்
Delete