Wednesday, March 27, 2024

பத்ர் தரும் படிப்பினை

 


இந்தப் பதிவின் இறுதியில் 2022 மற்றும் 2023 ம் வருட எனது தராவீஹ் குறிப்புகளின் இணைப்பையும் வாஹிதிகள் பேரவை சார்பாக வெளியிடப்பட்ட குறிப்புகளின் இணைப்பையும் தந்திருக்கிறேன். அருள் பொருந்திய இந்த ரமலான் காலங்களில் உங்களின் மேலான துஆக்களில் இந்த அடியேனையும் சேர்த்துக் கொள்ளுங்கள். 

வரலாற்று சிறப்புமிக்க பத்ர் போர்க்களத்தில் கலந்து கொண்ட பத்ர் ஸஹாபாக்களை நினைவு கூறுகின்ற தினம் இது. இந்த போரில் சமூகத்திற்குத் தேவையான ஏராளமான பாடங்களும் படிப்பினைகளும் உண்டு. அந்த வகையில் பத்ர் போர்க்களம் நமக்குத் தருகின்ற முதல் பாடம் என்னவென்றால் வெற்றியும் உதவியும் இறைவன் புறத்தில் தான் இருக்கிறது. வெற்றியையும் உதவியையும் இறைவன் தான் நமக்கு தர வேண்டும். வெற்றி இறைவனைக் கொண்டு மட்டும் தான் இருக்கிறது. வேறு எதைக் கொண்டும் அல்ல என்கிற ஒரு ஆழமான இறை நம்பிக்கையை இந்த பத்ர் போர்க்களம் நமக்கு ஊட்டுகிறது.

பத்ரு போர்க்களத்திலே எதிரிகளின் எண்ணிக்கை அதிகம் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை குறைவு. எதிரிகள் நன்கு போர்ப் பயிற்சி பெற்றவர்கள். இஸ்லாமியர்கள் போர் பயிற்சி பெறாதவர்கள். எதிரிகளிடம் ஆயுத பலம் இருந்தது. இஸ்லாமியர்களிடத்தில் ஆயுத பலம் எதுவும் இல்லை. எதிரிகளிடத்தில் எண்ணற்ற குதிரைகள், ஒட்டகங்கள் என வாகன வசதிகள் நிறைவாக இருந்தது. இஸ்லாமியர்களிடத்தில் அதுவும் இல்லை.

وروى البيهقي في دلائل النبوة من حديث ابن عباس أن علياً قال: ما كان معنا إلا فرسان، فرس للزبير، وفرس للمقداد بن الأسود، يعني يوم بدر[18].

وروى الأموي من حديث البهي قال: كان يوم بدر مع رسول الله - صلى الله عليه وسلم - فارسان: الزبير على الميمنة، والمقداد على الميسرة[19].

முஸ்லிம்களிடம் ஒன்று அல்லது இரண்டு குதிரைகளே இருந்தன. ஜுபைர் இப்னு அவ்வாம் (ரழி) அவர்களிடம் ஒரு குதிரையும் மிக்தாது இப்னு அஸ்வத் (ரழி) அவர்களிடம் ஒரு குதிரையும் இருந்தது. மேலும், 70 ஒட்டகங்கள் மட்டும் இருந்தன. அதில் ஓர் ஒட்டகத்திற்கு இருவர் அல்லது மூவராக மாறிமாறி பயணம் செய்தனர்.

عن عبد الله بن مسعود، رضي الله عنه، قال: كنا يوم بدر، كل ثلاثة على بعير، فكان أبو لبابة وعلي بن أبي طالب زميلي رسول الله، قال: فكان إذا جاءت عُقْبَة رسول الله قالا: نحن نمشي عنك. فقال: «ما أنتما بأقوى مني، وما أنا بأغنى عن الأجر منكما».

அலி ரலி அவர்கள், அபூ லுபாபா ரலி அவர்கள் நபி ஸல் அவர்கள் ஆகிய மூவருக்கும் ஒரு ஒட்டகம் ஒதுக்கப்பட்டிருந்தது.

ஆக எல்லா வகையிலும் எதிரிகளின் கைகள் ஓங்கி இருந்தது. எதிரிகள் பலம் மிக்கவர்களாக இருந்தார்கள். இருந்தாலும், அல்லாஹுத்தஆலா இஸ்லாமியர்களுக்கு வெற்றியைக் கொடுத்தான்.

كم من فئه قليله غلبت فئه كثيره باذن الله

சிறிய கூட்டம் ஒரு பெரும் கூட்டத்தை ஒன்றும் இல்லாமல் ஆக்கியது

இந்த பத்ர் போர்க்களம் நமக்கு தரும் அழுத்தமான செய்தி என்னவென்றால், சாதகங்களும் சாதனங்களும் வெற்றியை தீர்மானிப்பதில்லை. வெற்றியைத் தீர்மானிப்பது இறைவன் மட்டும் தான். ஒரு பக்கம் சாதகங்களும் சாதனங்களும் இருப்பதினால் மட்டும்  வெற்றி கிடைப்பதில்லை. இறைவன் நாடினால் மட்டுமே வெற்றி கிடைக்கும் என்கிற அழுத்தமான செய்தி பத்ரு போர்க்களத்திலே நமக்கு இருக்கிறது.

பத்ர் போர்களத்தில் இஸ்லாமியர்களுக்கு அல்லாஹ் செய்த மிகப் பெரிய உபகாரம் என்னவென்றால், மனிதர்களும் மனிதர்களும் சந்தித்துக் கொள்கிற அந்த போர்க்களத்தில் எதிரிகளை வீழ்த்துவதற்கு அல்லாஹ் வானத்திலிருந்து வானவர்களை இறக்கி வைத்தான்.

وَلَقَدْ نَصَرَكُمُ اللّٰهُ بِبَدْرٍ وَّاَنْـتُمْ اَذِلَّةٌ   فَاتَّقُوا اللّٰهَ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ‏

“பத்ரு” போரில் நீங்கள் மிகவும் சக்தி குறைந்தவர்களாக இருந்த போது, அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தான்; ஆகவே நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் : 3:123)

اِذْ تَقُوْلُ لِلْمُؤْمِنِيْنَ اَلَنْ يَّكْفِيَكُمْ اَنْ يُّمِدَّكُمْ رَبُّكُمْ بِثَلٰثَةِ اٰلَافٍ مِّنَ الْمَلٰٓٮِٕكَةِ مُنْزَلِيْنَ‏

(நபியே!) முஃமின்களிடம் நீர் கூறினீர்: “உங்கள் ரப்பு (வானிலிருந்து) இறக்கப்பட்ட மூவாயிரம் வானவர்களைக் கொண்டு உங்களுக்கு உதவி செய்வது உங்களுக்குப் போதாதா?” என்று. (அல்குர்ஆன் : 3:124)

بَلٰٓى ۙ اِنْ تَصْبِرُوْا وَتَتَّقُوْا وَيَاْتُوْكُمْ مِّنْ فَوْرِهِمْ هٰذَا يُمْدِدْكُمْ رَبُّكُمْ بِخَمْسَةِ اٰلَافٍ مِّنَ الْمَلٰٓٮِٕكَةِ مُسَوِّمِيْنَ‏

ஆம்! நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து பொறுமையுடனிருந்தால், பகைவர்கள் உங்கள் மேல் வேகமாக வந்து பாய்ந்த போதிலும், உங்கள் இறைவன் போர்க்குறிகள் கொண்ட ஐயாயிரம் வானவர்களைக் கொண்டும் உங்களுக்கு உதவி புரிவான். (அல்குர்ஆன் : 3:125)

وَمَا جَعَلَهُ اللّٰهُ اِلَّا بُشْرٰى لَـكُمْ وَلِتَطْمَٮِٕنَّ قُلُوْبُكُمْ بِهٖ‌ وَمَا النَّصْرُ اِلَّا مِنْ عِنْدِ اللّٰهِ الْعَزِيْزِ الْحَكِيْمِۙ‏

உங்கள் இருதயங்கள் (அவ்வுதவியில் நின்றும்) நிம்மதியடையவும், ஒரு நல்ல செய்தியாகவுமே தவிர (வேறெதற்குமாக) அல்லாஹ் அதைச் செய்யவில்லை; அல்லாஹ் விடத்திலல்லாமல் வேறு உதவியில்லை; அவன் மிக்க வல்லமையுடையவன்; மிகுந்த ஞானமுடையவன். (அல்குர்ஆன் : 3:126)

حديث ابن عباس رضي اللهُ عنهما قال: بَيْنَمَا رَجُلٌ مِنَ الْمُسْلِمِينَ يَوْمَئِذٍ يَشْتَدُّ فِي أَثَرِ رَجُلٍ مِنَ الْمُشْرِكِينَ أَمَامَهُ، إِذْ سَمِعَ ضَرْبَةً بِالسَّوْطِ فَوْقَهُ، وَصَوْتَ الْفَارِسِ يَقُولُ: أَقْدِمْ حَيْزُومُ[3]؛ فَنَظَرَ إِلَى الْمُشْرِكِ أَمَامَهُ فَخَرَّ مُسْتَلْقِيًا، فَنَظَرَ إِلَيْهِ فَإِذَا هُوَ قَدْ خُطِمَ أَنْفُهُ، وَشُقَّ وَجْهُهُ كَضَرْبَةِ السَّوْطِ، فَاخْضَرَّ ذَلِكَ أَجْمَعُ، فَجَاءَ الْأَنْصَارِيُّ فَحَدَّثَ بِذَلِكَ رَسُولَ اللَّهِ صلى اللهُ عليه وسلم فَقَالَ: "صَدَقْتَ، ذَلِكَ مِنْ مَدَدِ السَّمَاءِ الثَّالِثَةِ"، فَقَتَلُوا يَوْمَئِذٍ سَبْعِينَ، وَأَسَرُوا سَبْعِينَ[4].

இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் கூறுகிறார்கள் ; ஒரு நபித்தோழர் தனக்கு முன்னால் ஒரு எதிரியை வீழ்த்துவதற்காக வேகமாக துறத்திச் செல்வார்.சென்று கொண்டிருக்கும் போதே ஒரு சப்தம் கேட்கும். அந்த எதிரி சரிந்து கீழே விழுவான். இந்த காட்சியை பெருமானாரிடம் எடுத்துச் சொன்ன போது நீங்கள் கூறுவது உண்மை தான். அது மலக்குகளின் உதவி. அவர்கள் எழுபது எதிரிகளை வீழ்த்தினார்கள். எழுபது நபர்களை கைது செய்தார்கள் என்றார்கள்.

எனவே உண்மையில் பார்த்தால் சஹாபாக்கள் போர் செய்ய வில்லை. வானவர்கள் தான் போர் செய்தார்கள். வானவர்கள் தான் எதிரிகளை வெட்டி வீழ்த்தினார்கள். அவர்கள் தான் எதிரிகளை சிறை பிடித்தார்கள். வானவர்களை போர்க்களத்திலே இறக்கி அவர்களுக்கு வெற்றி கிடைப்பதற்கு அல்லாஹ் உதவி புரிந்தான்

 

இந்த நிகழ்வை அல்லாஹ் சுட்டிக்காட்டுகிறான்.

وَمَا جَعَلَهُ اللّٰهُ اِلَّا بُشْرٰى وَلِتَطْمَٮِٕنَّ بِهٖ قُلُوْبُكُمْ‌ وَمَا النَّصْرُ اِلَّا مِنْ عِنْدِ اللّٰهِ‌ اِنَّ اللّٰهَ عَزِيْزٌ حَكِيْمٌ‏

உங்கள் இருதயங்கள் திருப்தியடைவதற்காகவும், ஒரு நன்மாராயமாகவும் (இந்த வெற்றியை) அல்லாஹ் ஆக்கினான்; அல்லாஹ்விடமிருந்தே தவிர உதவி இல்லை; நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.   (அல்குர்ஆன் : 8:10)

மலக்குகள் போர்க்களம் கண்ட காரணத்தினாலோ அவர்கள் எதிரிகளை வீழ்த்திய காரணத்தினாலோ அவர்கள் எதிரிகளை சிறைபிடித்த காரணத்தினாலோ வெற்றி மலக்குமார்களை கொண்டு என்றும் நீங்கள் நினைத்து விடக்கூடாது.வெற்றி என்னைக் கொண்டு தான்.நான் தான் உங்களுக்கு வெற்றியைத் தந்தேன் என்று அல்லாஹ் கூறுகிறான்.

வெற்றியும் உதவியும் ஆள் பலத்தைக் கொண்டோ ஆயுத பலத்தைக் கொண்டோ போர்த் தந்திரங்களைக் கொண்டோ போர் வியூகங்களைக் கொண்டோ அல்ல, வெற்றியும் உதவியும் என்னைக் கொண்டு தான் என்பதை அல்லாஹுத்தஆலா அறுதியிட்டுக் கூறுகிறான்.

அந்த நம்பிக்கையும் பலமான ஈமானும் நபிகள் நாயகம் ஸல் அவர்களோடு உடனிருந்த ஸஹாபாக்களுக்கு நிறைவாக இருந்தது. அதனால் தான் வெற்றி அவர்கள் கைவசம் வந்து சேர்ந்தது. அந்த மாதிரி பலமான ஈமானும் இறை நம்பிக்கையும் நமக்கும் வேண்டும் என்பது பத்ர் போர் நமக்கு தரும் பாடமாகும்.

இன்றைக்கு நம் நம்பிக்கை முழுக்க படைப்பினங்கள் மீது தான் இருக்கிறதே தவிர, படைத்தவன் மீது இல்லை. அதனால் தான் நமக்கு சில நேரங்களில் அல்ல, பல நேரங்களில் வெற்றியும் உதவியும் கிடைக்காமல் போய் விடுகிறது.

 

நம்பிக்கையை இறைவன் மீது ஆக்கிக்கொள்ள வேண்டும். அந்த நம்பிக்கை பலமாக இருந்தால் எதைக் கண்டும் நமக்கு அச்சமோ நடுக்கமோ வராது.

أحمد بن طولون أحد ولاة مصر: كان من أشد الظلمة حتى قيل: إنه قتل ثمانية عشر ألف إنسان صبراً - أي يقطع عنه الطعام والشراب حتى يموت - وهذا أشد أنواع القتل، فذهب أبو الحسن الزاهد امتثالاً لقوله عليه الصلاة والسلام: "أفضل الجهاد كلمة حق عند سلطان جائر" فدخل عليه وأخذ ينصحه في الله وقال له: إنك ظلمت الرعية وفعلت كذا وكذا وخوفه بالله فغضب ابن طولون غضباً شديداً - وأمر بأسد يجوّع ثم يطلق على أبى الحسن.

يا له من موقف رهيب.. لكن نفس أبى الحسن الممتلئة بالإيمان والثقة بالله جعلت موقفه عجيباً عندما أطلقوا الأسد عليه جعل يزأر ويتقدم ويتأخر وأبو الحسن جالس لا يتحرك ولا يبالى والناس ينظرون إلى الموقف بين باك وخائف ومشفق على هذا العالم الورعِ.. ولكن ما الذي حدث؟

تقدم الأسد وتأخر وزأر ثم سكت ثم طأطأ رأسه فاقترب من أبى الحسن فشمّه.. ثم انصرف عنه هادئاً ولم يمسسه بسوء.. وهنا تعجب الناس وكبّروا وهللوا.

ولكن في القصة ما هو أعجب: لما يئس ابن طولون وأخذته الدهشة استدعى أبا الحسن وقال له: فيما كنت تفكر والأسد عندك وأنت لا تلتفت إليه؟

قال: كنت أفكر في لعاب الأسد إن مسنى أهو طاهر أم نجس؟

قال: ألم تخف من الأسد؟ قال: لا. إن الله قد كفاني ذلك

أَلَيْسَ اللَّهُ بِكَافٍ عَبْدَهُ 

எகிப்தை ஆட்சி செய்த ஆட்சியாளர்களில் ஒருவர் அஹ்மத் பின் தூலூன். மக்களுக்கு அநீதம் செய்து கொண்டிருந்தார். சுமார் 18 ஆயிரம் பேரை சாப்பிட உணவின்றி குடிக்க தண்ணீரின்றி சிறையில் அடைத்து கொன்றதாக வரலாறு அவரைக் குறித்து வரலாறு பதிவு செய்திருக்கிறது. அந்த காலகட்டத்தில் வாழ்ந்த இறைநேசரான அபுல் ஹசன் பன்னான் ரஹ் அவர்கள் அநியாயக்கார அரசனுக்கு முன்னால் சத்தியத்தை எடுத்துச் சொல்வது மிகச் சிறந்த போர் என்ற நபிமொழிக்கேற்ப அவருடைய அநியாயத்தை சுட்டிக்காட்டி அவருக்கு உபதேசம் செய்வதற்காக சென்றிருந்தார்கள். அல்லாஹ்வை அஞ்சி கொள்! உனக்கு அவன் வழங்கிய பொறுப்பில் அநீதம் செய்யாதே! என்றெல்லாம் சொன்ன பொழுது அவருக்கு கோபம் வந்து பொங்கி எழுந்தார். அவர்களை சிறையில் அடைத்து கடும் பசியில் இருக்கக்கூடிய ஒரு சிங்கத்தை அவிழ்த்து விட்டார். ஆனால் அதைப் பார்த்து அவர்கள் கொஞ்சமும் பயப்பட வில்லை. நடுங்க வில்லை. அந்த சிங்கமோ உள்ளே சென்று அவருக்கு அருவில் தலை சாய்த்து அவரை நுகர்ந்து பார்த்து விட்டு எதுவும் செய்யாமல் திரும்பி வந்து விட்டது. இதைப் பார்த்த அரசனும் அங்கே சுற்றி இருந்த அத்தனை பேரும் ஆச்சரியத்தில் உறைந்து போனார்கள். சிங்கம் அருகே வருகின்ற அந்த நேரத்தில் அபுல் ஹாசன் பன்னான் ரஹ் அவர்கள் ஏதோ சிந்தித்துக் கொண்டிருந்ததைப் பார்த்த அரசன் கடும் பசியில் இருக்கக்கூடிய சிங்கம் உனக்கு அருகில் வருகின்ற பொழுது நீ எதை சிந்தித்துக் கொண்டிருக்கிறாய் என்று கேட்டான். அப்போது அவர்கள் சிங்கத்தின் எச்சில் என் மீது பட்டு விட்டால் அது சுத்தமா இல்லை அசுத்தமா என்று நான் யோசித்துக் கொண்டிருந்தேன் என்று பதில் சொன்னார்கள். அந்த சிங்கத்தைப் பார்த்து உனக்கு அச்சம் இல்லையா? என்று கேட்ட போது நான் எதற்கு அஞ்ச வேண்டும். அல்லாஹ் எனக்கு துணை நிற்கிறான் என்று கூறினார்கள். (ஸியரு அஃலாமின் நுபலா)

அல்லாஹ் அவனுடைய அடியாருக்கு போதுமானவனில்லையா? (அல்குர்ஆன் : 39 ; 36)

இந்த இறை வார்த்தையை நாம் நம் உள்ளங்களில் ஆழமாக பதிய வைத்துக் கொண்டால் நாம் எதற்கும் அஞ்சத் தேவையில்லை. எந்த சோதனைகளும் நம்மை ஒன்றும் செய்து விடாது. அல்லாஹ் நம் அனைவருக்கும் அந்த உறுதியான நம்பிக்கையை நிறைவாக தருவானாக.

2022 தனித்துவம் வாய்ந்த பத்ர் ஸஹாபாக்கள் 

வாஹிதிகள் பேரவை பத்ர் போர்

பத்ர் போர் வரலாறு 


2 comments:

  1. மாஷா அல்லாஹ் பாரக்கல்லாஹ் உங்கள் சேவை தொடரட்டும்

    ReplyDelete