Thursday, March 28, 2024

பரம எதிரி

இந்தப் பதிவின் இறுதியில் 2022 மற்றும் 2023 ம் வருட எனது தராவீஹ் குறிப்புகளின் இணைப்பையும் வாஹிதிகள் பேரவை சார்பாக வெளியிடப்பட்ட குறிப்புகளின் இணைப்பையும் தந்திருக்கிறேன். அருள் பொருந்திய இந்த ரமலான் காலங்களில் உங்களின் மேலான துஆக்களில் இந்த அடியேனையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.  

اِنَّ الشَّيْطٰنَ لَـكُمْ عَدُوٌّ فَاتَّخِذُوْهُ عَدُوًّا  اِنَّمَا يَدْعُوْا حِزْبَهٗ لِيَكُوْنُوْا مِنْ اَصْحٰبِ السَّعِيْرِ‏

நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்குப் பகைவனாக இருக்கின்றான்; ஆகவே நீங்களும் அவனைப் பகைவனாகவே எடுத்துக் கொள்ளுங்கள்; அவன் (தன்னைப் பின்பற்றும்) தன் கூட்டத்தாரை அழைப்பதெல்லாம் அவர்கள் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்புக்கு உரியவர்களாய் இருப்பதற்காகவே தான். (அல்குர்ஆன் : 35:6)

இப்லீஸ் மனித சமூகத்தின் மிகப்பெரும் எதிரியாக இருக்கிறான். மனிதனை வழிகெடுத்து அவனை நரகத்தில் தள்ளுவதையே தன் வாழ்நாள் இலட்சியமாக கொண்டிருக்கிறான்.அவனிடமிருந்து மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

ஆதம் நபிக்கு ஸுஜூத் செய்ய சொன்னதிலிருந்து அவனுடைய விரோதம் தொடங்குகிறது.

اِذْ قَالَ رَبُّكَ لِلْمَلٰٓٮِٕكَةِ اِنِّىْ خَالِـقٌ  بَشَرًا مِّنْ طِيْنٍ‏

(நபியே! நினைவு கூர்வீராக!) “நிச்சயமாக நான் களிமண்ணிலிருந்து மனிதனைப் படைக்க இருக்கின்றேன்” என்று உம்முடைய இறைவன் கூறிய வேளையில்: (அல்குர்ஆன் : 38:71)

 

فَاِذَا سَوَّيْتُهٗ وَنَفَخْتُ فِيْهِ مِنْ رُّوْحِىْ فَقَعُوْا لَهٗ سٰجِدِيْنَ‏

நான் அவரைச் செவ்வைப்படுத்தி, எனது ஆவியிலிருந்து அவருக்குள் ஊதிய பொழுது: அவருக்கு நீங்கள் விழுந்து ஸுஜூது செய்யுங்கள்” (எனக் கூறியதும்); (அல்குர்ஆன் : 38:72)

فَسَجَدَ الْمَلٰٓٮِٕكَةُ كُلُّهُمْ اَجْمَعُوْنَۙ‏

அது சமயம் மலக்குகள் யாவரும் ஸுஜூது செய்தார்கள்.(அல்குர்ஆன் : 38:73)

اِلَّاۤ اِبْلِيْسَ اِسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكٰفِرِيْنَ‏

இப்லீஸைத் தவிர; அவன் பெருமை அடித்தவனாக (நம் கட்டளையை மறுத்த) காஃபிர்களில் (ஒருவனாக) ஆகிவிட்டான். (அல்குர்ஆன் : 38:74)

ஸுஜூத் செய்ய மறுத்ததினால் அல்லாஹ் சாபத்திற்கு ஆளானான்.

 

قَالَ فَاخْرُجْ مِنْهَا فَاِنَّكَ رَجِيْمٌۙ‏

அவ்வாறாயின், நீ இங்கிருந்து வெளியேறிவிடு; நிச்சயமாக நீ விரட்டப்பட்டவனாக இருக்கிறாய்.” (அல்குர்ஆன் : 15:34)

 

وَّاِنَّ عَلَيْكَ اللَّعْنَةَ اِلٰى يَوْمِ الدِّيْنِ‏

மேலும், நிச்சயமாக நியாயத் தீர்ப்பு நாள் வரை உன் மீது சாபம் உண்டாவதாக!” என்று (இறைவனும்) கூறினான். (அல்குர்ஆன் : 15:35)

ஆதம் நபிக்கு அல்லாஹ் வழங்கிய அந்தஸ்தின் மீது அவனுக்கு ஏற்பட்ட பொறாமையும் அவனிடம் ஏற்பட்ட பெருமையும் அவனை ஸுஜூத் செய்ய விடாமல் தடுத்தது. அல்லாஹ்வின் சாபத்திற்கு ஆளானான். ஆதம் நபியால் தான் தனக்கு இந்நிலை ஏற்பட்டது என்றெண்ணி அவரின் மீது அவரின் சந்ததிகள் மீதும் விரோதம் கொண்டான்.

 

எனவே ஆதம் நபியை சொர்க்கத்திலிருந்து வெளியாக்க திட்டமிட்டான்.

وَقَاسَمَهُمَاۤ اِنِّىْ لَـكُمَا لَمِنَ النّٰصِحِيْنَۙ‏

நிச்சயமாக நான் உங்களிருவருக்கும் நற்போதனை செய்பவனாக இருக்கிறேன்” என்று சத்தியம் செய்து கூறினான். (அல்குர்ஆன் : 7:21)

 

பின்பு எல்லா மனிதர்களையும் வழிகெடுப்பதாக வாக்களித்தான்.

قَالَ فَبِمَاۤ اَغْوَيْتَنِىْ لَاَقْعُدَنَّ لَهُمْ صِرَاطَكَ الْمُسْتَقِيْمَۙ‏

(அதற்கு இப்லீஸ்) “நீ என்னை வழி கெட்டவனாக (வெளியேற்றி) விட்டதன் காரணத்தால், (ஆதமுடைய சந்ததியரான) அவர்கள் உன்னுடைய நேரான பாதையில் (செல்லாது தடுப்பதற்காக அவ்வழியில்) உட்கார்ந்து கொள்வேன்” என்று கூறினான். (அல்குர்ஆன் : 7:16)

ثُمَّ لَاَتِيَنَّهُمْ مِّنْ بَيْنِ اَيْدِيْهِمْ وَمِنْ خَلْفِهِمْ وَعَنْ اَيْمَانِهِمْ وَعَنْ شَمَآٮِٕلِهِمْ‌ وَلَاٰ تَجِدُ اَكْثَرَهُمْ شٰكِرِيْنَ‏

பின் நிச்சயமாக நான் அவர்கள் முன்னும், அவர்கள் பின்னும், அவர்கள் வலப்பக்கத்திலும், அவர்கள் இடப்பக்கத்திலும் வந்து (அவர்களை வழி கெடுத்துக்) கொண்டிருப்பேன்; ஆதலால் நீ அவர்களில் பெரும்பாலோரை (உனக்கு) நன்றி செலுத்துவோர்களாகக் காண மாட்டாய்” (என்றும் கூறினான்). (அல்குர்ஆன் : 7:17)

கியாமத் வரை மனிதனை எல்லா நிலையிலும் ஷைத்தான் வழிகெடுத்துக் கொண்டே இருப்பான்.

- إنَّ الشيطانَ قعدَ لابنِ آدمَ ثلاثَ مقاعدَ، قعد له في طريقِ الإسلامِ فقال: لم تَذَرْ دينَك ودينَ آبائِك؟ فخالفه وأسلم. وقعد له في طريقِ الهجرةِ فقال له: أتذرُ أهلَك ومالَك؟ فخالفَه وهاجرَ. ثمَّ قعد له في طريقِ الجهادِ فقال له: تُجاهدُ فتُقتلُ فيُنكحُ أهلُك، ويُقسمُ مالُك. فخالفه وجاهد. فحقٌّ على اللهِ أن يُدخلَه الجنةَ

ஷைத்தான் மிக முக்கியமாக மூன்று இடங்களில் மனிதனை வழிகெடுக்க முயற்சிப்பான். அதில் மனிதன் தப்பித்துக் கொண்டால் அவன் வெற்றி பெற்று சுவனத்திற்குரியவனாக மாறி விடுவான். 1. மனிதன் இஸ்லாத்தை ஏற்க நினைக்கின்ற போது உன் முன்னோர்களின் மார்க்கத்தை விடப் போகின்றாயா என்று கூறுவான். 2. ஹிஜ்ரத் செய்ய முற்படுகின்ற போது உன் குடும்பத்தையும் செல்வத்தையும் விட்டுச் செல்லப் போகிறாயா என்று கேட்பான். 3. ஜிஹாதுக்கு செல்ல முற்படுகின்ற போது நீ செல்லாதே! சென்றால் நீ மரணித்து விடுவாய். உன் மனைவி மறுமணம் செய்யப்பட்டு உன் பிள்ளைகள் அநாதையாகி விடும். உன் சொத்துக்கள் வேறு நபர்களுக்கு பங்கு வைக்கப்பட்டு விடும் என்று அச்சத்தை ஏற்படுத்துவான். (குர்துபீ)

 

எல்லா மனிதரோடும் ஷைத்தான் இருக்கிறான்.

ففي صحيح مسلم عن عائشة رضي الله عنها، قالت: ((خرج النبي صلى الله عليه وسلم من عندي ليلًا، فغِرْتُ عليه، فجاء فرأى ما أصنع، فقال: ما لك يا عائشة؟ قلت: وما لي لا يغار مثلي على مثلك؟ فقال: أقد جاءك شيطانك؟ قلت: يا رسول الله، أو معي شيطان؟ قال: نعم، قلت: ومع كل إنسان؟ قال: نعم، قلت: ومعك يا رسول الله؟ قال: نعم، ولكن ربي أعانني عليه حتى أسْلَمَ))، وفي رواية: ((ما منكم من أحد إلا وقد وُكِّل به قرينه من الجن، وقرينه من الملائكة

 

 

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம் தங்கியிருந்த நாளில்) ஓர் இரவில் என்னிடமிருந்து புறப்பட்டுச் சென்றார்கள். அவர்கள் மீது எனக்கு ரோஷம் ஏற்பட்டது. பிறகு அவர்கள் (திரும்பி)வந்து என் நடவடிக்கையைக் கண்டபோது, “”ஆயிஷா! உனக்கு என்ன நேர்ந்தது? ரோஷம் கொண்டு விட்டாயா?” என்று கேட்டார்கள். அதற்கு நான், “”என்னைப் போன்ற ஒருத்தி  தங்களைப் போன்ற ஒருவர் மீது ரோஷம் கொள்ளாமல் எப்படி இருக்க முடியும்?” என்று சொன்னேன்.அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “”உன் ஷைத்தான் உன்னிடம் வந்து விட்டானா?” என்று கேட்டார்கள். நான், “”அல்லாஹ்வின் தூதரே! என்னுடனும் ஷைத்தான் உள்ளானா?” என்று கேட்டேன்.அதற்கு அவர்கள், “ஆம்’ என்றார்கள். “”ஒவ்வொரு மனிதனுடனும் (ஷைத்தான்) உள்ளானா?” என்று கேட்டேன். அதற்கும் அவர்கள் “ஆம்’ என்றார்கள். நான், “”தங்களுடனுமா, அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “”ஆம். ஆயினும், என் இறைவன் அவனுக்கெதிராக எனக்கு உதவி செய்து விட்டான். அவன் (எனக்குப்) பணிந்து விட்டான்” என்று சொன்னார்கள். (முஸ்லிம் ; 5422)

 

கணவன் மனைவியைப் பிரிப்பதே ஷைத்தானின் மிக உயர்ந்த பணி

‏وعن جابر رضي الله عنه، قال: قال رسول صلى الله عليه وسلم: ((إن إبليس يضع عرشه على الماء، ثم يبعث سراياه، فأدناهم منه منزلةً أعظمهم فتنةً، يجيء أحدهم فيقول: فعلت كذا وكذا، فيقول: ما صنعت شيئًا، قال ثم يجيء أحدهم فيقول: ما تركته حتى فرَّقتَ بينه وبين امرأته، قال: فيدنيه منه ويقول: نعم أنت.

இப்லீஸ், தனது சிம்மாசனத்தை (கடல்)நீரின் மீது அமைக்கிறான். பிறகு தன் பட்டாளங்களை (மக்களிடையே) அனுப்புகிறான். அவர்களில் மிகப்பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகின்ற (ஷைத்தான் எவனோ அ)வனே இப்லீஸிடம் மிகவும் நெருங்கிய அந்தஸ்தைப் பெறுகிறான். அவனிடம் ஷைத்தான்களில் ஒருவன் (திரும்பி)வந்து "நான் இன்னின்னவாறு செய்தேன்" என்று கூறுவான். அப்போது இப்லீஸ், "(சொல்லிக்கொள்ளும் அளவுக்கு) நீ எதையும் செய்யவில்லை" என்று கூறுவான். பிறகு அவர்களில் மற்றொருவன் வந்து, "நான் ஒரு மனிதனுக்கும் அவனுடைய மனைவிக்கும் இடையே பிரிவை ஏற்படுத்தாமல் அவனை நான் விட்டுவைக்கவில்லை" என்று கூறுவான். அப்போது இப்லீஸ், அவனை அருகில் வரச்செய்து, "நீதான் சரி(யான ஆள்)" என்று (பாராட்டிக்) கூறுவான். (முஸ்லிம் ; 2813)

 

பெருமானரைக் கொல்வதற்கு ஆலோசனை சொன்ன இப்லீஸ்

وَاِذْ يَمْكُرُ بِكَ الَّذِيْنَ كَفَرُوْا لِيُثْبِتُوْكَ اَوْ يَقْتُلُوْكَ اَوْ يُخْرِجُوْكَ‌ وَيَمْكُرُوْنَ وَيَمْكُرُ اللّٰهُ‌ وَاللّٰهُ خَيْرُ الْمٰكِرِيْنَ‏

(நபியே!) உம்மைச் சிறைப்படுத்தவோ, அல்லது உம்மைக் கொலை செய்யவோ அல்லது உம்மை (ஊரைவிட்டு) வெளியேற்றிவிடவோ நிராகரிப்போர் சூழ்ச்சிசெய்ததை நினைவு கூறுவீராக; அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர்; அல்லாஹ்வும் (அவர்களுக்கு எதிராகச்) சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். சூழ்ச்சி செய்வோரில் எல்லாம் அல்லாஹ் மிகவும் மேன்மையுடையவன். (அல்குர்ஆன் : 8:30)

عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: وَحَدَّثَنِي الْكَلْبِيُّ، عَنْ بَاذَانَ مَوْلَى أُمِّ هَانِئٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ؛ أَنَّ نَفَرًا مِنْ قُرَيْشٍ مِنْ أَشْرَافِ كُلِّ قَبِيلَةٍ، اجْتَمَعُوا لِيَدْخُلُوا دَارَ النَّدْوَةِ، فَاعْتَرَضَهُمْ(٩) إِبْلِيسُ فِي صُورَةِ شَيْخٍ جَلِيلٍ، فَلَمَّا رَأَوْهُ قَالُوا: مَنْ أَنْتَ؟ قَالَ: شَيْخٌ مِنْ نَجْدٍ، سَمِعْتُ أَنَّكُمُ اجْتَمَعْتُمْ، فَأَرَدْتُ أَنْ أَحْضُرَكُمْ وَلَنْ يُعْدِمَكُمْ رَأْيِي وَنُصْحِي. قَالُوا: أَجَلْ، ادْخُلْ فَدَخَلَ مَعَهُمْ فَقَالَ: انْظُرُوا فِي شَأْنِ هَذَا الرَّجُلِ، وَاللَّهِ لَيُوشِكَنَّ أَنْ يُوَاثِبَكُمْ فِي أَمْرِكُمْ بِأَمْرِهِ. قَالَ: فَقَالَ قَائِلٌ مِنْهُمْ: احْبِسُوهُ فِي وِثَاقٍ، ثُمَّ تَرَبَّصُوا بِهِ رَيْبَ الْمَنُونِ، حَتَّى يَهْلِكَ كَمَا هَلَكَ مَنْ كَانَ قَبْلَهُ مِنَ الشُّعَرَاءِ: زُهَيْرٌ وَالنَّابِغَةٌ، إِنَّمَا هُوَ كَأَحَدِهِمْ، قَالَ: فَصَرَخَ عَدُوُّ اللَّهِ الشَّيْخُ النَّجْدِيُّ فَقَالَ: وَاللَّهِ مَا هَذَا لَكُمْ بِرَأْيٍ، وَاللَّهِ لَيُخْرِجَنَّهُ رَبُّهُ مِنْ مَحْبِسِهِ(١٠) إِلَى أَصْحَابِهِ، فَلَيُوشِكَنَّ أَنْ يَثِبُوا عَلَيْهِ حَتَّى يَأْخُذُوهُ مِنْ أَيْدِيكُمْ، فَيَمْنَعُوهُ مِنْكُمْ، فَمَا آمَنُ عَلَيْكُمْ أَنْ يُخْرِجُوكُمْ مِنْ بِلَادِكُمْ. قَالَ: فَانْظُرُوا فِي غَيْرِ هَذَا.

قَالَ: فَقَالَ قَائِلٌ مِنْهُمْ: أَخْرِجُوهُ مِنْ بَيْنِ أَظْهُرِكُمْ تَسْتَرِيحُوا مِنْهُ، فَإِنَّهُ إِذَا خَرَجَ لَنْ يَضُرَّكُمْ مَا صَنَعَ وَأَيْنَ وَقَعَ، إِذَا غَابَ عَنْكُمْ أَذَاهُ وَاسْتَرَحْتُمْ، وَكَانَ أَمْرُهُ فِي غَيْرِكُمْ، فَقَالَ الشَّيْخُ النَّجْدِيُّ: وَاللَّهِ مَا هَذَا لَكُمْ بِرَأْيٍ، أَلَمْ تَرَوْا حَلَاوَةَ [قَوْلِهِ](١١) وَطَلَاوَةَ لِسَانِهِ، وَأَخْذَ الْقُلُوبِ مَا تَسْمَعُ(١٢) مِنْ حَدِيثِهِ؟ وَاللَّهِ لَئِنْ فَعَلْتُمْ، ثُمَّ اسْتَعْرَضَ الْعَرَبَ، لَيَجْتَمِعَنَّ عَلَيْكُمْ(١٣) ثُمَّ لَيَأْتِيَنَّ إِلَيْكُمْ حَتَّى يُخْرِجَكُمْ مِنْ بِلَادِكُمْ وَيَقْتُلَ أَشْرَافَكُمْ. قَالُوا: صَدَقَ وَاللَّهِ، فَانْظُرُوا بَابًا غَيْرَ هَذَا.

قَالَ: فَقَالَ أَبُو جَهْلٍ، لَعَنَهُ اللَّهُ: وَاللَّهِ لَأُشِيرَنَّ عَلَيْكُمْ بِرَأْيٍ مَا أَرَاكُمْ تَصْرِمُونَهُ(١٤) بَعْدُ، مَا أَرَى غَيْرَهُ. قَالُوا: وَمَا هُوَ؟ قَالَ: نَأْخُذُ مِنْ كُلِّ قَبِيلَةٍ غُلَامًا شَابًّا وَسِيطًا نَهِدًا، ثُمَّ يُعْطَى كُلُّ غُلَامٍ مِنْهُمْ سَيْفًا صَارِمًا، ثُمَّ يَضْرِبُونَهُ ضَرْبَةَ رَجُلٍ وَاحِدٍ، فَإِذَا قَتَلُوهُ تَفَرَّقَ دَمُهُ فِي الْقَبَائِلِ [كُلِّهَا](١٥) فَلَا أَظُنُّ هَذَا الْحَيَّ مِنْ بَنِي هَاشِمٍ يَقْوَوْنَ عَلَى حَرْبِ قُرَيْشٍ كُلِّهَا. فَإِنَّهُمْ إِذَا رَأَوْا ذَلِكَ قَبِلُوا الْعَقْلَ، وَاسْتَرَحْنَا وَقَطَعْنَا عَنَّا أَذَاهُ.

قَالَ: فَقَالَ الشَّيْخُ النَّجْدِيُّ: هَذَا وَاللَّهِ الرَّأْيُ. الْقَوْلُ مَا قَالَ الْفَتَى لَا رَأْيَ غَيْرَهُ، قَالَ: فَتَفَرَّقُوا عَلَى ذَلِكَ وَهُمْ مُجْمِعُونَ لَهُ(١٦)

فَأَتَى جِبْرِيلُ النَّبِيَّ ﷺ، فَأَمَرَهُ أَلَّا يَبِيتَ فِي مَضْجَعِهِ الَّذِي كَانَ يَبِيتُ فِيهِ، وَأَخْبَرَهُ بمكر القوم.

மக்காவின் முக்கிய தலைவர்கள் ஒரு நாள் இரவு ஆலோசனைக்காக தாருன் நத்வாவில் ஒன்று கூடினார்கள். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் தன்னை நஜ்த் நாட்டைச் சேர்ந்தவன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு வயோதிக தோற்றத்தில் இபிலீஸும் கலந்து கொண்டான். உங்களுடைய இந்த கூட்டத்தில் நானும் என்னுடைய ஆலோசனைகளை வழங்குகிறேன் என்று கூறினான். நபி ஸல் அவர்களை என்ன செய்யலாம் என்பதைப் பற்றித்தான் அவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டார்கள். அதில் ஒருவன் சொன்னான் ; அவரை சிறை பிடித்து அவர் மரணிக்கும் வரை அதில் அடைத்து வைக்கலாம். உடனே இப்லீஸ் வேண்டாம், நீங்கள் அவ்வாறு செய்தால் அவரை சிறை பிடித்த அந்த செய்தியை அல்லாஹ் அவரின் தோழர்களுக்கு சொல்லி விடுவான். அவர்கள் நபியை உங்களிடமிருந்து காப்பாற்றி விடுவார்கள் என்றான். இன்னொருவன் ஆலோசனை சொன்னான் ; நம்ம ஊரில் இருந்து அவர்களை வெளியாக்கி விடலாம். இங்கிருந்து வெளியே போய் விட்டால் அவரின் மூலம் உங்களுக்கு எந்த தொந்தரவும் ஏற்படாது என்று கூறினான். அப்பொழுதும் இப்லீஸ் குறிப்பிட்டு இது சரியான ஆலோசனை அல்ல, அங்கே சென்று அவருடைய வார்த்தைக்கு மயங்கி பெரும் கூட்டம் சேர்ந்து, அவர்கள் ஒன்று சேர்ந்து வந்து உங்களை எதிர்ப்பார்கள். உங்கள் ஊரை விட்டு உங்களை வெளியாக்குவார்கள். உங்களில் இருக்கிற முக்கிய தலைவர்களை கொலை செய்வார்கள். எனவே வேறு ஆலோசனை கூறுங்கள் என்று கூறினான். இறுதியாக அபூஜஹ்ல் கூறினான் ; நம் ஊரில் ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் ஒரு வாலிபனையும் தேர்வு செய்து அவனிடத்தில் ஒரு கூறான  வாளைக் கொடுத்து அவரை வெட்டும் படி சொல்லுவோம். அவ்வாறு அவர்கள் செய்து விட்டால் முஹம்மதின் குடும்பம் அவர்கள் அனைவரையும் பழி வாங்க முடியாது. எதிர்க்க முடியாது. நாமும் அவரின் தீங்கிலிருந்து பாதுகாக்கப்பட்டு விடலாம் என்று சொன்ன பொழுது இப்லீஸ் இதுவல்லவா ஆலோசனை என்று கூறினான். அவ்வாறு செய்து கொள்ளலாம் என்ற முடிவோடு அங்கிருந்து அவர்கள் கலைந்து சென்றார்கள். அந்த செய்தியை அல்லாஹ் பெருமானாருக்கு அறிவித்துத் தந்தான். எனவே அங்கிருந்து அவர்கள் ஹிஜ்ரத்திற்கு புறப்பட்டார்கள். (இப்னுகஸீர்)

 

பத்ருக்கு மக்கவாசிகள் வருவதற்கு தைரியமூட்டிய இப்லீஸ்

عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ قَالَ: لَمَّا أَجْمَعَتْ(١٠) قُرَيْشٌ الْمَسِيرَ(١١) ذَكَرَتِ الَّذِي بَيْنَهَا وَبَيْنَ بَنِي بَكْرٍ مِنَ الْحَرْبِ، فَكَادَ ذَلِكَ أَنْ يُثْنِيَهُمْ، فَتَبَدَّى لَهُمْ إِبْلِيسُ فِي صُورَةِ سُرَاقَةَ بْنِ مَالِكِ بْنِ جُعْشُمٍ الْمُدْلِجِيِّ -وَكَانَ مِنْ أَشْرَافِ بَنِي كِنَانَةَ -فَقَالَ: أَنَا جَارٌ لَكُمْ أَنْ تَأْتِيَكُمْ كِنَانَةُ بِشَيْءٍ تَكْرَهُونَهُ، فَخَرَجُوا سِرَاعًا.

மக்காவின் படை புறப்படுவதற்கு ஒன்று கூடிய போது பக்ர் கிளையினரைப் பற்றிய நினைவு அவர்களுக்கு வந்தது. குறைஷிகளுக்கும் இவர்களுக்கு மிடையில் நீண்டகாலமாகப் பகைமை இருந்தது. இவர்கள் பின்புறமாகத் தங்களை தாக்கி விட்டால் இரு நெருப்புக் கிடையில் சிக்கிக் கொள்வோமே என்று பயந்து பின் வாங்கினர். ஆனால், அந்நேரத்தில் பக்ர் கிளையினரின் முக்கிய பிரிவான கினானாவின் தலைவர் சுராகா இப்னு மாலிக் இப்னு ஜுஃஷுமின் உருவத்தில் ஷைத்தான் தோற்றமளித்து ‘‘கினானா கிளையினர் உங்களுக்குப் பின்புறமாக தாக்குவதிலிருந்து நான் பாதுகாப்பளிக்கிறேன். நீங்கள் துணிந்து செல்லலாம்'' என்று கூறினான். அதன் பிறகே அவர்கள் பத்ருக்கு புறப்பட்டனர். (இப்னு கஸீர்)

அல்லாஹ் அதைக் குறித்து கூறுகிறான்.

وَاِذْ زَيَّنَ لَهُمُ الشَّيْطٰنُ اَعْمَالَهُمْ وَقَالَ لَا غَالِبَ لَـكُمُ الْيَوْمَ مِنَ النَّاسِ وَاِنِّىْ جَارٌ لَّـكُمْ‌ فَلَمَّا تَرَآءَتِ الْفِئَتٰنِ نَكَصَ عَلٰى عَقِبَيْهِ وَقَالَ اِنِّىْ بَرِىْٓءٌ مِّنْكُمْ اِنِّىْۤ اَرٰى مَا لَا تَرَوْنَ اِنِّىْۤ اَخَافُ اللّٰهَ‌ وَاللّٰهُ شَدِيْدُ الْعِقَابِ‏

ஷைத்தான் அவர்களுடைய (பாவச்)செயல்களை அவர்களுக்கு அழகாகக் காண்பித்து, “இன்று மனிதர்களில் உங்களை வெற்றி கொள்வோர் எவருமில்லை; மெய்யாக நான் உங்களுக்கு துணையாக இருக்கின்றேன்!” என்று கூறினான்; இரு படைகளும் நேருக்கு நேர் சந்தித்தபோது அவன் புறங்காட்டிப் பின்சென்று, “ மெய்யாக நான் உங்களை விட்டு விலகிக் கொண்டேன்; நீங்கள் பார்க்க முடியாததை நான் பார்க்கின்றேன்; நிச்சயமாக நான் அல்லாஹ்வுக்கு பயப்படுகிறேன்; அல்லாஹ் தண்டனை கொடுப்பதில் கடினமானவன்” என்று கூறினான்.   (அல்குர்ஆன் : 8:48)

ஷைத்தானிடமிருந்து எச்சரிக்கையாக இருப்போம். அல்லாஹ் பாதுகாப்பானாக!

2022 நன்றி மறப்பது நன்றன்று 

2023 அமானிதம்

வாஹிதிகள் பேரவை நன்மைகளில் போட்டி போடுவோம்

 


No comments:

Post a Comment