Saturday, March 30, 2024

மன்னிப்போம் மறப்போம்


இந்தப் பதிவின் இறுதியில் 2022 மற்றும் 2023 ம் வருட எனது தராவீஹ் குறிப்புகளின் இணைப்பையும் வாஹிதிகள் பேரவை சார்பாக வெளியிடப்பட்ட குறிப்புகளின் இணைப்பையும் தந்திருக்கிறேன். அருள் பொருந்திய இந்த ரமலான் காலங்களில் உங்களின் மேலான துஆக்களில் இந்த அடியேனையும் சேர்த்துக் கொள்ளுங்கள். 

وَجَزٰٓؤُا سَيِّئَةٍ سَيِّئَةٌ مِّثْلُهَا‌ فَمَنْ عَفَا وَاَصْلَحَ فَاَجْرُهٗ عَلَى اللّٰهِ‌ اِنَّهٗ لَا يُحِبُّ الظّٰلِمِيْنَ‏

இன்னும் தீமைக்கும் கூலி அதைப் போன்ற தீமையேயாகும்; ஆனால், எவர் (அதனை) மன்னித்துச் சமாதானம் செய்கிறாரோ அவருக்குரிய நற்கூலி அல்லாஹ்விடம் இருக்கிறது - நிச்சயமாக அவன் அநியாயம் செய்பவர்களை நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன் : 42:40)

ஒரு குற்றத்திற்கு அதற்குரிய தண்டனை என்ற சட்டத்தின் படி அநியாயம் இழைக்கப்பட்டவன் பழிதீர்த்துக் கொள்ள மார்க்கம் அனுமதிக்கிறது. இருந்தாலும் அநியாயம் இழைக்கப்பட்டவர் பழிவாங்கும் உணர்ச்சிக்கு செவிசாய்க்காமல் மன்னித்து சகித்துக் கொண்டால் அவருக்கு உயரிய அந்தஸ்து கிடைக்குமென்று கூறி அவரின் மனதில் மன்னிக்கும் ஆசையை இஸ்லாம் வளர்க்கிறது.

الَّذِيْنَ يُنْفِقُوْنَ فِى السَّرَّآءِ وَالضَّرَّآءِ وَالْكٰظِمِيْنَ الْغَيْظَ وَالْعَافِيْنَ عَنِ النَّاسِ‌ وَاللّٰهُ يُحِبُّ الْمُحْسِنِيْنَ‌‏

(பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றால்,) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள்; தவிர கோபத்தை அடக்கி கொள்வார்கள்; மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிப்போராய் இருப்பார்கள்; (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான். (அல்குர்ஆன் : 3:134)

فقال رسولُ اللَّهِ ﷺ يا عقبةَ بنَ عامرٍ صِل من قطعَك وأعطِ من حرمَك واعفُ عمَّن ظلمَك

உக்பா இப்னு ஆமிர் (ரழி) நபி (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! நற்செயல்களில் மிகச் சிறப்பானதை எனக்கு அறிவித்துத் தாருங்கள்” என வேண்டிக் கொண்ட போது, நபி (ஸல்) அவர்கள், “உக்பாவே! உம்மைத் துண்டிப்பவர்களுடன் சேர்ந்து வாழ்ந்து, உமக்குக் கொடுக்காதவர்களுக்குக் கொடுத்து வருவீராக! உமக்கு அநீதமிழைத்தவர்களைப் புறக்கணித்து விடுவீராக!” என்று கூறினார்கள். மற்றொரு அறிவிப்பில், “உமக்கு அநீதமிழைப்பவரை மன்னித்து விடுவீராக!” என்று வந்துள்ளது. (முஸ்னத் அஹ்மத்)

 

தனது மார்க்கத்தின் வழிகாட்டுதலை எற்றுக் கொண்ட உண்மை முஸ்லிம், மன்னிக்கும் மாண்பாளராகத் திகழ்வார். மன்னிப்பது மனிதனின் உயர் பண்பாகும். அந்தப் பண்புகளைப் பெற்றவர்களை இஸ்லாம் “இறையச்சமுள்ள சிறந்த முன்மாதிரியான முஸ்லிம்’ என்றும் “அல்லாஹ்வின் அன்பையும் திருப்பொருத்தத்தையும் அடைந்தவர்கள்’ என்றும் கூறுகிறது.

 

மன்னிக்கும் குணம் பகைமையைப் போக்கி நட்பை உருவாக்கும்

وَلَا تَسْتَوِى الْحَسَنَةُ وَ لَا السَّيِّئَةُ  اِدْفَعْ بِالَّتِىْ هِىَ اَحْسَنُ فَاِذَا الَّذِىْ بَيْنَكَ وَبَيْنَهٗ عَدَاوَةٌ كَاَنَّهٗ وَلِىٌّ حَمِيْمٌ‏

நன்மையும் தீமையும் சமமாக மாட்டா, நீங்கள் (தீமையை) நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்வீராக! அப்பொழுது, யாருக்கும் உமக்கிடையே, பகைமை இருந்ததோ, அவர் உற்ற நண்பரே போல் ஆகிவிடுவார். (அல்குர்ஆன் : 41:34)

وَمَا يُلَقّٰٮهَاۤ اِلَّا الَّذِيْنَ صَبَرُوْا‌ وَمَا يُلَقّٰٮهَاۤ اِلَّا ذُوْ حَظٍّ عَظِيْمٍ‏

பொறுமையாக இருந்தார்களே அவர்கள் தவிர வேறு யாரும் அதை அடைய மாட்டார்கள்; மேலும், மகத்தான நற்பாக்கியம் உடையவர்கள் தவிர, வேறு யாரும் அதை அடைய மாட்டார்கள். (அல்குர்ஆன் : 41:35)

 

ஒரு தீமையை எப்போதும் தீமையால் எதிர்கொண்டால் மனித மனங்கள் குரோதங்களுக்கும், பகைமைக்கும் ஆளாகி விடும். அதே தீமையை நன்மையால் எதிர்கொண்டால் கோப ஜுவாலைகள் அணைந்து, மனம் கொதிப்படைவதிலிருந்து அமைதியாகி, குரோதமெனும் அழுக்குகளிலிருந்து தூய்மையாகி விடும். அதன் மூலம் கொடும் விரோதிகளான இருவர் ஒருவரையொருவர் நேசிக்கும் நண்பர்களாக மாறி விடுவார்கள்.

 

தன்னைக் கொல்ல முற்பட்ட பெண்ணை மன்னித்த மாண்பாளர்

فلما اطمأن رسول الله - صلى الله عليه وسلم - أهدت له زينب بنت الحارث، امرأة سلام بن مشكم ، شاة مصلية وقد سألت أي عضو من الشاة أحب إلى رسول الله - صلى الله عليه وسلم - ؟ فقيل لها : الذراع فأكثرت فيها من السم، ثم سمت سائر الشاة ثم جاءت بها، فلما وضعتها بين يدي رسول الله - صلى الله عليه وسلم - تناول الذراع فلاك منها مضغة فلم يسغها ، ومعه بشر بن البراء بن معرور ، قد أخذ منها كما أخذ رسول الله - صلى الله عليه وسلم - . فأما بشر فأساغها ، وأما رسول الله - صلى الله عليه وسلم - فلفظها ، ثم قال : إن هذا العظم ليخبرني أنه مسموم، ثم دعا بها فاعترفت، فقال : ما حملك على ذلك ؟، قالت : بلغت من قومي ما لم يخف عليك ، فقلت : إن كان ملكا استرحت منه، وإن كان نبيا فسيخبر .. قال : فتجاوز عنها رسول الله - صلى الله عليه وسلم -، ومات بشر من أكلته التي أكل " .

ஒரு யூதப்பெண் நபி (ஸல்) அவர்களுக்கு விஷம் கலந்து சமைக்கப்பட்ட ஆட்டிறைச்சியை அன்பளிப்பாக அனுப்பி வைத்தாள். அதை நபி (ஸல்) அவர்களும் சில நபித் தோழர்களும் சாப்பிடத் தொடங்கினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் தங்களது தோழர்களிடம் “அதை சாப்பிடாதீர்கள்; அதில் விஷம் கலக்கப்பட்டிருக்கிறது” என்றார்கள்.

பிறகு அந்தப் பெண் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டாள். அவளிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள் “நீ இவ்வாறு செய்யக் காரணமென்ன?” அவள், “நீங்கள் அல்லாஹ்வின் தூதரா என்பதை அறிய விரும்பினேன். நீங்கள் நபியாக இருந்தால் அல்லாஹ் உங்களுக்கு அறிவித்துக் கொடுத்து விடுவான்; விஷம் உங்களுக்குத் தீங்களிக்காது. நீங்கள் நபியாக இல்லையென்றால் உம்மிடமிருந்து நாங்கள் நிம்மதி அடைந்து விடுவோம்” என்றாள். அப்போது நபித்தோழர்கள் “அவளை நாங்கள் கொன்று விடட்டுமா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் “வேண்டாம்” என்று கூறி மன்னித்து விட்டார்கள். (அஸ்ஸீரத்துன் நபவிய்யா லிஇப்னி ஹிஷாம்)

 

பொறுமையாளர்களுக்கு அல்லாஹ்வின் உதவி

عَنْ أَبِي هُرَيْرَةَ، رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَجُلًا شَتَمَ أَبَا بَكْرٍ وَالنَّبِيُّ ﷺ جَالِسٌ، فَجَعَلَ النَّبِيُّ ﷺ يَعْجَبُ وَيَتَبَسَّمُ، فَلَمَّا أَكْثَرَ رَدَّ عَلَيْهِ بَعْضَ قَوْلِهِ، فَغَضِبَ النَّبِيُّ ﷺ وَقَامَ، فَلَحِقَهُ أَبُو بَكْرٍ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ إِنَّهُ كَانَ يَشْتُمُنِي وَأَنْتَ جَالِسٌ، فَلَمَّا رَدَدْتُ عَلَيْهِ بَعْضَ قَوْلِهِ غَضِبْتَ وَقُمْتَ! قَالَ: "إِنَّهُ كَانَ مَعَكَ مَلَكٌ يَرُدُّ عَنْكَ، فَلَمَّا رَدَدْتَ عَلَيْهِ بَعْضَ قَوْلِهِ حَضَرَ(٢٨) الشَّيْطَانُ، فَلَمْ أَكُنْ لِأَقْعُدَ مَعَ الشَّيْطَانِ". "

ஒரு சமயம் நபிகளாரின் சபையில் அமர்ந்திருந்த போது ஒருவர் அபூபக்கர் (ரலி) அவர்களைத் திட்டினார். நபியவர்கள் புன்னகைத்துக் கொண்டிருந்தார்கள். கொஞ்ச நேரம் சகித்துக் கொண்டிருந்த அபூபக்கர் (ரலி) ஒரு கட்டத்தில் எதிர்த்துப் பேசினார்கள். மாநபி (ஸல்) அவர்கள் வெருட்டென எழுந்து சென்று விட்டார்கள். பின்னாலேயே ஓடிச்சென்ற அபூபக்கர் (ரலி) அவர்கள் ஏன்? எழுந்து வந்தீர்கள் என மாநபியிடம் கேட்ட போது, நீங்கள் நிதானத்தை கையாண்டு கொண்டிருக்கும் வரை ஒரு வானவர் உங்கள் சார்பாக பதில் கூறிக்கொண்டிருந்தார்.எப்போது நீங்கள் பதில் கூற ஆரம்பித்தீர்களோ, வானவர் அங்கிருந்து சென்று விட்டார்.ஷைத்தான் அங்கு வந்து அமர்ந்து விட்டான்.ஷைத்தான் அமரும் இடத்தில் நான் அமர அனுமதி இல்லை என்று மாநபி (ஸல்) அவர்கள் கடிந்து கொண்டார்கள். (தப்ரானீ ; 7/189)

 

தன் மகள் மீது அவதூறு சொன்னவரை மன்னித்த அபூபக்கர் ரலி அவர்கள்

وَلَا يَاْتَلِ اُولُوا الْـفَضْلِ مِنْكُمْ وَالسَّعَةِ اَنْ يُّؤْتُوْۤا اُولِى الْقُرْبٰى وَالْمَسٰكِيْنَ وَالْمُهٰجِرِيْنَ فِىْ سَبِيْلِ اللّٰهِ ‌‌  وَلْيَـعْفُوْا وَلْيَـصْفَحُوْا‌  اَلَا تُحِبُّوْنَ اَنْ يَّغْفِرَ اللّٰهُ لَـكُمْ‌  وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ‏

இன்னும், உங்களில் (இறைவனின்) கொடை அருளப் பெற்றவர்களும், தக்க வசதி உடையவர்களும், உறவினர்களுக்கும் ஏழைகளுக்கும், (தம்மிடங்களை விட்டு) அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கும் (எதுவும்) கொடுக்க முடியாது என்று சத்தியம் செய்ய வேண்டாம்; (அவர்கள் தவறு செய்திருப்பின்) அதை மன்னித்து (அதைப்) பொருட்படுத்தாமல் இருக்கவும்; அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்ப மாட்டீர்களா? மேலும் அல்லாஹ் (பிழை பொறுப்பவன்) மிக மன்னிப்பவன்; அன்பு மிக்கவன். (அல்குர்ஆன் : 24:22)

وَهَذِهِ الْآيَةُ نَزَلَتْ فِي الصدِّيق، حِينَ حَلَفَ أَلَّا يَنْفَعَ مِسْطَح بْنَ أُثَاثَةَ بِنَافِعَةٍ بَعْدَمَا قَالَ فِي عَائِشَةَ مَا قَالَ، كَمَا تَقَدَّمَ فِي الْحَدِيثِ. فَلَمَّا أَنْزَلَ اللَّهُ براءةَ أُمِّ الْمُؤْمِنِينَ عَائِشَةَ، وَطَابَتِ النُّفُوسُ الْمُؤْمِنَةُ وَاسْتَقَرَّتْ، وَتَابَ اللَّهُ عَلَى مَن كَانَ تَكَلَّمَ مِنَ الْمُؤْمِنِينَ فِي ذَلِكَ، وَأُقِيمَ الْحَدُّ عَلَى مَن أُقِيمَ عَلَيْهِ(٣) -شَرَع تَبَارَكَ وَتَعَالَى، وَلَهُ الْفَضْلُ وَالْمِنَّةُ، يعطفُ الصدِّيق عَلَى قَرِيبِهِ وَنَسِيبِهِ، وَهُوَ مِسْطَح بْنُ أُثَاثَةَ، فَإِنَّهُ كَانَ ابْنَ خَالَةِ الصَّدِيقِ، وَكَانَ مِسْكِينًا لَا مَالَ لَهُ إِلَّا مَا يُنْفِقُ عَلَيْهِ أَبُو بَكْرٍ، رَضِيَ اللَّهُ عَنْهُ، وَكَانَ مِنَ الْمُهَاجِرِينَ فِي سَبِيلِ اللَّهِ، وَقَدْ وَلَق وَلْقَة(٤) تَابَ اللَّهُ عَلَيْهِ مِنْهَا، وضُرب الْحَدَّ عَلَيْهَا. وَكَانَ الصَّدِّيقُ، رَضِيَ اللَّهُ عَنْهُ، مَعْرُوفًا بِالْمَعْرُوفِ، لَهُ الْفَضْلُ وَالْأَيَادِي عَلَى الْأَقَارِبِ وَالْأَجَانِبِ. فَلَمَّا نَزَلَتْ هَذِهِ الْآيَةُ إِلَى قَوْلِهِ: ﴿أَلا تُحِبُّونَ أَنْ يَغْفِرَ اللَّهُ لَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ﴾ أَيْ: فَإِنَّ الْجَزَاءَ مِنْ جِنْسِ الْعَمَلِ، فَكَمَا تَغْفِرُ(٥) عَنِ الْمُذْنِبِ إِلَيْكَ نَغْفِرُ(٦) لَكَ، وَكَمَا تَصْفَحُ نَصْفَحُ(٧) عَنْكَ. فَعِنْدَ ذَلِكَ قَالَ الصَّدِّيقُ: بَلَى، وَاللَّهِ إِنَّا نُحِبُّ -يَا رَبَّنَا -أَنْ تَغْفِرَ لَنَا. ثُمَّ رَجَع إِلَى مِسْطَحٍ مَا كَانَ يَصِلُهُ مِنَ النَّفَقَةِ، وَقَالَ: وَاللَّهِ لَا أَنْزَعُهَا مِنْهُ أَبَدًا،

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் மீது, அவதூறு சொல்லப்பட்ட விஷயத்தில் தமது பராமரிப்பின் கீழும், தமது உதவியின் கீழும் இருந்த மிஸ்தஹ் (ரலி) அவர்கள் ஈடுபட்டார்கள் எனத் தெரிய வந்த போது அல்லாஹ் மீது சத்தியமிட்டு அவருக்கு செய்து வந்த உதவிகளை நிறுத்தப் போவதாக அறிவித்த போது அல்லாஹ் அந்நூர் அத்தியாயத்தின் வசனத்தை இறக்கி அபூபக்கர் (ரலி) அவர்கள் நிதானமின்றி நடந்து கொண்டது தவறு என்று அல்லாஹ் கடிந்து கொண்டான். மேலும் பெருந்தன்மையோடு நடந்து கொள்ளுமாறும் அல்லாஹ் கட்டளை பிறப்பித்தான்.

அந்த வசனத்தில் அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்ப மாட்டீர்களா? என்று அல்லாஹ் கேட்கிறான். அபூபக்கர் ரலி அவர்கள் கூறினார்கள் ; நிச்சயமாக அவனுடைய மன்னிப்பை நான் விரும்புகிறேன் என்று கூறி மிஸ்தஹை மன்னித்து மீண்டும் உதவியை செய்ய ஆரம்பித்தார்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக நான் இதை நிறுத்த மாட்டேன் என்று கூறினார்கள். (இப்னு கஸீர்)

عَنْ عَلِيِّ بْنِ الْحُسَيْنِ رَضِيَ اللَّهُ عَنْهُمْ قَالَ: إِذَا كَانَ يَوْمُ الْقِيَامَةِ نَادَى مُنَادٍ أَيُّكُمْ أَهْلُ الْفَضْلِ؟ فَيَقُومُ نَاسٌ مِنَ النَّاسِ، فَيُقَالُ: انْطَلِقُوا إِلَى الْجَنَّةِ فَتَتَلَقَّاهُمُ الْمَلَائِكَةُ، فَيَقُولُونَ إِلَى أَيْنَ؟ فَيَقُولُونَ إِلَى الْجَنَّةِ، قَالُوا قَبْلَ الْحِسَابِ؟ قَالُوا نَعَمْ قَالُوا مَنْ أَنْتُمْ؟ قَالُوا أَهْلُ الْفَضْلِ، قَالُوا وَمَا كَانَ فَضْلُكُمْ؟ قَالُوا كنا إذا جهل علينا حلمنا وإذا ظلمنا صبرنا وإذا سيئ إِلَيْنَا عَفَوْنَا، قَالُوا ادْخُلُوا الْجَنَّةَ فَنِعْمَ أَجْرُ الْعَامِلِينَ

நாளை மறுமையில் உங்களில் உயர்வை உடையவர்கள் யார் என்று ஒரு அழைப்பாளர் கேட்பார். அப்போது மக்களில் சிலர் எழுந்து செல்வார்கள். அப்போது அவர்களைப் பார்த்து மலக்குமார்கள் எங்கே செல்கிறீர்கள் என்று கேட்பார்கள். சொர்க்கத்திற்கு செல்கிறோம் என்பார்கள். கேள்வி கணக்கின்றியா? என்று கேட்பார்கள். ஆம் என்று கூறுவார்கள். நீங்கள் யார் என்று கேட்கும் போது, நாங்கள் உயர்வை உடையவர்கள் என்று கூறுவார்கள். நீங்கள் என்ன செய்தீர்கள்? என்று மலக்குமார்கள் கேட்கும் போது, எங்களிடத்தில் அறிவீனமாக மக்கள் நடந்து கொள்ளும் போது சகித்துக் கொண்டோம். அநீதம் இழைக்கப்பட்ட போது பொறுமையாக இருந்தோம். எங்களுக்கு தீங்கிழைக்கும் போது மன்னித்து விட்டோம் என்று கூறுவார்கள். அப்படியானால் நீங்கள் சொர்க்கத்திற்கு செல்லுங்கள் என்று மலக்குமார்கள் கூறுவார்கள். (பைஹகீ)

2022 ஆலோசனை 

2023 நான்கு CCTV கேமராக்கள்

வாஹிதிகள் பேரவை இரவுத் தொழுகை

1 comment:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் பயான் பதிவுகளைத் தேடுகிறோம் ஆலிம்சா

    ReplyDelete