Friday, June 28, 2024

சுயமரியாதையை கற்றுத் தந்த இப்ராஹீம் அலை அவர்கள்

இந்த உலகத்தில் இறைவனின் படைப்புக்கள் ஏராளம் உண்டு.மனிதர்களை விட பிரம்மாண்டமான உடலமைப்பு கொண்ட உயிரினங்களும், மனிதர்களை விட ஆற்றல் பெற்ற உயிரினங்களும் இந்த உலகத்தில் படைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், எத்தனை பெரிய ஆற்றலும், பிரம்மாண்டமும் இறைவனால் பிற உயிரினங்களுக்கு வழங்கப்பட்டிருந்தாலும், அனைத்துப் படைப்பினங்களை விட மனிதனே கண்ணியமானவன்.உயர்ந்தவன்.

காரணம், மற்ற ஜீவராசிகளிடத்தில் இல்லாத மிக உயர்ந்த குணநலன்கள் மனிதனுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.இறைவன் மனிதர்களுக்கு வழங்கியிருக்கின்ற மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த, சிறப்பிற்குரிய, கண்ணியத்தைப் பெற்றுத் தருகின்ற குணநலன்களில் ஒன்று சுயமரியாதை. சுயமரியாதை என்பது ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் இன்றியமையாத, அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய பண்பாகும்.

இறைவன் கண்ணியமானவன். மனிதனையும் இறைவன் கண்ணியமாகவே படைத்திருக்கின்றான். எனவே எந்த சூழலிலும் யாருக்காகவும் தன்னுடைய சுயமரியாதையை இழக்கக்கூடாது. சுயமரியாதையை இழப்பது ஒரு இஸ்லாமியனுக்கு அழகல்ல.

பொதுவாக மனிதன் கண்ணியத்தையும் மரியாதையையும் எதிர் பார்ப்பான். சக மனிதனுக்கு முன்னால் தான் இழிவுபடுத்தப்படுவதை விரும்ப மாட்டான். அடுத்தவருக்கு முன் கணவன் தன்னை திட்டுவதை மனைவி விரும்ப மாட்டாள். வகுப்பறையில் சக தோழர்களுக்கு முன் ஆசிரியர் கண்டிப்பதை ஒரு மாணவன் விரும்ப மாட்டான். நண்பர்களுக்கு முன் தந்தை அறிவுரை கூறுவதை மகன் விரும்ப மாட்டான்.

ஆனால் அத்தகைய மனிதன் சமயங்களில் உலக ஆதாயங்களுக்காகவும் ஒரு காரியம் ஆக வேண்டும் என்பதற்காகவும் பிறரிடத்தில் தேவையாகி,பிறர் காலில் விழுந்து தன் சுயமரியாதையை இழந்து விடுகிறான். காரியம் நடந்தால் போதும். சுயமரியாதை என்ன ஆனாலும் பரவா இல்லை என்ற நிலைக்கு போய் விடுகின்றான்.உலக ஆதாயங்களைப் பெற வேண்டும் அடைய வேண்டும் என்ற ஆசையில் சுயமரியாதையை காக்க வேண்டும் என்ற எண்ணம் காணாமல் போய் விடுகின்றது.

இஸ்லாமியனாக இருக்கக்கூடியவன் ஒருநாளும் அவ்வாறு தன் சுயமரியாதை இழக்க மாட்டான். இழக்கக் கூடாது.

مَن أصبَح حَزينًا على الدُّنيا أصبَح ساخِطًا على ربّه، ومَن أصبَح يَشكو مُصيبَةً نزَلَتْ به إنَّما يَشكو اللهَ، ومَن تَضَعضَعَ لِغَنِيٍّ لِينالَ فضلَ ما عِندَه أحبَط اللهُ عمَلَه

உலக நன்மைகளை அடைந்து கொள்ளும் எண்ணத்தில் வசதி படைத்தவனின் முன் ஒருவர் தலை குனிந்தால் அவருடைய அமல்களை அல்லாஹ் அழித்து விடுவான். (தப்ரானி 

எந்த சூழலிலும் சுயமரியாதையை இழக்காத முன்னோர்கள்.

அல்லாஹ்வின் மீது சத்தியமாக இரண்டு ஊசிகளால் இரண்டு கிணறு தோண்டுவதும் இரு இறகுகளால் அரபு தீபகற்பத்தை பெருக்கி சுத்தம் செய்வதும் என்னை நானே இழிவு படுத்தி இன்னொரு மனிதனின் வாசலில் நின்று கைநீட்டுவதை விட எனக்கு எளிதானதாக இருக்கும் என்று அலி ரலி அவர்கள் கூறினார்கள்.

அரஃபா மைதானத்தில் பிறரிடம் கையேந்தும் ஒருவனைப் பார்த்த அலி ரலி அவர்கள் தம் கையில் இருந்த தஸ்பீஹ் மாலையால் அவனை ஒரு அடி அடித்து விட்டு இந்த நாளில் அதுவும் இந்த இடத்தில் இறைவன் அல்லாத ஒருவரிடத்தில் கையேந்துகின்றாயா என்று கேட்டார்கள்.

فقال : إن ابنك ألحد في حرم الله ، فقتلته ملحدا عاصيا حتى أذاقه الله عذابا أليما ، وفعل به وفعل ، فقالت : كذبت يا عدو الله وعدو المسلمين ، والله لقد قتلته صواما قواما برا بوالديه ، حافظا لهذا الدين ، ولئن أفسدت عليه دنياه لقد أفسد عليك آخرتك ، ولقد حدثنا رسول الله صلى الله عليه وآله وسلم : " أنه يخرج من ثقيف كذابان الآخر منهما أشر من الأول ، وهو المبير " ، وما هو إلا أنت يا حجاج "

إن الحجاج حلف أن لا ينـزله من تلك الخشبة حتى تشفع فيه أمه، فبقي سنة. ثم مرت تحته أمه فقالت: أما آن لهذا الراكب أن ينـزل! فيقال: إن هذا الكلام قيل للحجاج إن معناه الشفاعة فيه فأنـزله

وفي رواية أن أحد أنصار عبدالله بن الزبير دخل على عبدالملك بن مروان فسأله إنـزال عبدالله بن الزبير من الخشبة، فأمر بإنـزاله وكانت أسماء قبل ذلك تقول: اللهم لا تمتني حتى تقر عيني بجثته، فما أتى عليها بعد ذلك جمعة حتى ماتت؛ ويقال لما جيء بعبدالله إِلى أمه أسماء وضعته في حجرها فحاضت ودر ثديها

கிலாபத்தே உமய்யாவில் வாரிசுமுறை முடிசூட்டப்பட்டவர் யசீத். இந்த செயல் கிலாபத் என்னும் இறையாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்பதால் எந்த முஸ்லிம் தலைவரும் இதை ஏற்றுக் கொள்ள முன் வர வில்லை. ஆனால் யாரும் அவர்களை எதிர்த்து கேட்கவில்லை.நபிகளாரின் பேரர் ஆன ஹுசைன் (ரலி) அவர்களும், அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் (ரலி) அவர்களும் எதிராக குரல் கொடுத்தனர் .செயல் ரீதியாக மோதவும் செய்தனர்.

கர்பலாவில் இமாம் ஹுசைன் (ரலி) கொல்லப்பட்டார்கள். அதை தொடர்ந்து அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் (ரலி) அவர்கள் உமய்யா ஆட்சியை ஏற்காமல் மக்காவை தனியே ஆட்சி செய்து வந்தார்கள். ஒரு கட்டத்தில் உமைய்யாவின் கொடுங்கோல் ஆட்சியாளன் ஹஜ்ஜாஜ் பின் யூசுஃபுடன் வீரத்துடன் போர்களம் சென்றார்கள்.நன்பகல் முதல் மாலை வரை போரிட்டார்கள்.பல எதிரிகளை சாய்த்தார்கள். அவர்கள் கால்கள் வெட்டப்பட்டன‌ கீழே சரிந்த போதும் போரிடுவதை நிறுத்தாது சண்டையிட்டு இறுதியில் வீரமரணம் அடைந்தார்கள்.

பிறகு ஹஜ்ஜாஜ் அப்துல்லாஹ் பின் ஜுபைர் ரலி அவர்களின் உடலை அவருடைய தாயாரிடம் ஒப்படைக்காமலும் முறையாக அடக்கம் செய்ய விடாமலும் கழுமரத்தில் கட்டித் தொங்க விட்டான். மறுநாள் அன்னை அஸ்மா (ரழி) அவர்கள் வேலைக்காரப் பெண்மணி ஒருவரின் துணையுடன் தம்முடைய அருமை மகனாரின் உடலைத் தேடி வந்தார்கள். தன் மகனைக் குறித்து அவர்கள் இஸ்லாத்தின் இந்த மாவீரன் தியாக மறவன் இன்னும் குதிரையை விட்டு இறங்க வில்லையே! என்று கூறினார்கள்.

அதற்கு ஹஜ்ஜாஜ் இப்னு யுசுஃப் உம்முடைய மகன் அப்துல்லாஹ் கஃபா ஆலயத்தினுள் உட்கார்ந்து கொண்டு இறைச் சட்டங்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கினாறென்றால் அவருக்கு எவ்வளவு துணிச்சல்! எனவே தான் அல்லாஹ் அவர் மீது இந்த வேதனையை இறக்கியுள்ளான் என்றான்.

நீ பொய் சொல்கின்றாய்! என்னுடைய மகன் இறைச் சட்டங்களுக்கு எதிராக செயல்படுபவன் அல்ல. அவன் நோன்பாளியாகவும், தஹஜ்ஜுத் இரவுத் தொழுகை தொழுபவனாகவும், பரிசுத்தவானாகவும், பக்திமானாகவும் திகழ்ந்தான்! தாய் தந்தையரின் சொல்லை மதித்து நடந்தான். ஆனால் கேள்! அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஒருபோது இவ்வாறு கூறியதை நான் கேட்டுள்ளேன். அதாவது ஸகீஃப் கோத்திரத்திலிருந்து இரண்டு மடையர்கள் தோன்றுவார்கள். முதலாமவன் பொய்யனாகவும், இரண்டாமவன் கொடுங்கோலனாகவும் இருப்பார்கள் அதன்படி ஸகீஃப் குலத்தைச் சார்ந்த முக்தார் எனும் பொய்யனை நான் பார்த்து விட்டேன். மற்றொருவனாகிய கொடுங்கோலன் இப்பொழுது என் முன்னிலையில் நின்று கொண்டிருக்கிறான் என்று வீரமுழக்கமிட்டார்கள்.

பளீரென சாட்டை கொண்டு தாக்குவது போன்று இந்தப் பதிலைக் கேட்டதும் ஹஜ்ஜாஜின் மனம் துடிதுடித்துப் போய் விட்டது. அவனுடைய முகத்தில் இழிவும், கேவலமும் கூத்தாட தலையைத் தாழ்த்தியவாறு கொஞ்ச நேரம் மௌனமானான். சிறிது நேரத்திற்குப் பிறகு உம்முடைய மகனுக்கு நான் நல்ல பாடம் புகட்டியிருக்கிறேன், என்று பிதற்றினான்!

நீ என்னுடைய மகனின் உலக வாழ்க்கையைத்தான் பாழ்படுத்தினாய், ஆனால் என் மகனோ உனது மறுமை வாழ்வை பாழ்படுத்தி விட்டான்! இந்த அழுத்தமான பதிலைக் கேட்டதும் ஹஜ்ஜாஜ் நிதானம் இழந்து உணர்ச்சி வசப்பட்ட நிலையில் அவனுடைய நா உளறிக்கொட்டியது.

இறுதியாக தன் மகனின் உடலைக் கேட்ட போது, நீ என்னிடம் கெஞ்சிக் கேட்டால் உன் மகனின் உடலைத் தருவேன் என்று கூறினான். அப்படி கேட்க வேண்டிய அவசியம் எனக்கில்லை என்று கூறி, அந்நேரத்தில் தன் சுயமரியாதையை விட்டுக் கொடுக்காமல் நான் யாரிடம் கேட்க வேண்டுமோ அவனிடம் கேட்டுக் கொள்கிறேன் என்று படைத்த ரப்பிடம் முறையிட்டார்கள். வாழ்க்கையின் இறுதி நிலையை அடைந்திருந்த அஸ்மா (ரழி) அவர்கள், நான் என்னுடைய வீரத்திருமகனின் உடலைப் பெற்று முறையாகக் குளிப்பாட்டி கபன் இட்டு அடக்கம் செய்யாதவரை எனக்கு மரணம் வரக்கூடாது என்று பிரார்த்தனை செய்தார்கள்.அல்லாஹ் அவர்களின் துஆவை ஏற்றுக் கொண்டான்.கலீஃபா அப்துல் மலிகிடமிருந்து, அப்துல்லாஹ்வின் உடலை அவருடைய தாயாரிடம் ஒப்படைத்து விட வேண்டும் என கட்டளை வந்தது. பிறகு அப்துல்லாஹ் பின் ஜுபைர் ரலி அவர்களின் உடலை தாயாரிடம் ஒப்படைத்தான். (அல்பிதாயா வன் நிஹாயா)

قدم هارون الرّشيد المدينة، وكان قد بلغه أن مالك بن أنس عنده «الموطأ» يقرؤه على النّاس، فوجّه إليه البرمكيّ فقال: أقرئه السلام وقل له: يحمل إليّ الكتاب ويقرؤه عليّ، فأتاه البرمكيّ فقال: أقرئه السلام، وقل له: إن العلم يؤتى ولا يأتي، فأتاه البرمكيّ فأخبره، وكان عنده أبو يوسف القاضي، فقال: يا أمير المؤمنين، يبلغ أهل العراق أنك وجّهت إلى مالك في أمر فخالفك، اعزم عليه، فبينما هو كذلك، إذ دخل مالك، فسلّم وجلس، فقال له الرّشيد: يا ابن أبي عامر أبعث إليك وتخالفني؟ فقال: يا أمير المؤمنين، أخبرني الزّهري، عن خارجة بن زيد، عن أبيه قال: كنت أكتب الوحي بين يدي رسول الله- صلى الله عليه وسلّم- لا يَسْتَوِي الْقاعِدُونَ من الْمُؤْمِنِينَ 4: 95 [النساء: 95] وابن أمّ مكتوم عند النّبيّ- صلّى الله عليه وسلّم- فقال: يا رسول الله انى رجل ضرير، وقد انزل الله عليك فى فضل الجهاد ما قد علمت، فقال النبي صلى الله عليه وآله وسلم: «لا ادرى» وقلمي رطب ما جف، ثم وقع فخذ النبي صلى الله عليه وآله وسلم على فخذي، ثم أغمي على النبي صلى الله عليه وآله وسلم ثم جلس النبي صلى الله عليه وآله وسلم فقال يا زيد اكتب غَيْرُ أُولِي الضَّرَرِ 4: 95 [النساء:

ويا أمير المؤمنين حرف واحد بعث فيه جبريل والملائكة- عليهم السلام- من مسيرة خمسين ألف عام، ألا ينبغي لي أن أعزّه وأجلّه، وإن الله تعالى رفعك وجعلك في هذا الموضع بعملك، فلا تكن أنت أول من يضيع عزّ العلم فيضيع الله عزّك، فقام الرّشيد يمشي مع مالك إلى منزله ليسمع منه «الموطأ

 

மன்னர் ஹாரூன் ரஷீத் மதீனா வந்தார்.வந்த இடத்தில் இமாம் மாலிக் ரஹ் அவர்கள் முஅத்தா எனும் ஒரு அற்புதமான ஹதீஸ்நூல் ஒன்றை தொகுத்து,அதை அவர்களே மக்களுக்கு பாடம் நடத்துகிறார்கள் எனவும் கேள்விப்பட்டார்கள்.தன் பணியாள் பர்முகியை அனுப்பி, இமாம் அவர்களுக்கு ஸலாம் கூறி- தாங்கள் இராக் வந்து அரசருக்கு அந்த ஹதீஸ் நூலை கற்றுத்தரவேண்டும் என்பது அரசரின் வேண்டுகோள் என்று சொல்லியனுப்பினார்கள். அதற்கு இமாம் மாலிக் ரஹ் அவர்கள், மன்னருக்கு என் ஸலாமை சொல்லுங்கள். மேலும் கல்வியை நீங்கள் தேடி வரவேண்டும்.அது உங்களை தேடி வராது என்பதையும் தெரிவித்து விடுங்கள் என்று தைரியமாக சொல்லி அனுப்பினார்கள். அப்போது அந்த சபையில் இருந்த அபூயூஸுப் காழி அவர்கள் மன்னர் அவர்களே! இமாம் மாலிகிடம் நீங்கள் வேண்டியதையும்,இமாம் அவர்கள் உங்களுக்கு அனுப்பிய பதிலையும் இராக்வாசிகள் கேள்விப்பட்டால் சரியாக இருக்காது.எனவே உடனடியாக அவர்மீது நடவடிக்கை எடுங்கள் என்று சொன்னபோது- அச்சபைக்கு இமாம் மாலிக் ரஹ் அவர்கள் வருகை தருகிறார்கள். அப்போது இமாம் அவர்களை நோக்கி மன்னர் ஹாரூன் ரஷீத் அவர்கள், என் உத்தரவுக்கு நீங்கள் ஏன் மாறு செய்தீர்?என வினவியபோது மாலிக் ரஹ் கூறினார்கள் நபித்தோழர் ஜைத் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள் ;

நான் நபி ஸல் அவர்களிடம் வஹி எழுதிக்கொண்டிருந்தேன்.அப்போது

لا يَسْتَوِي الْقاعِدُونَ من الْمُؤْمِنِين

(இந்த தீனுக்காக போரில் கலந்துகொள்பவர்களும் கலந்து கொள்ளாதவர்களும் நன்மையில் சமமாகிவிடமாட்டார்கள்) எனும் வசனம் இறங்கியது.அந்நேரம் பார்வை தெரியாத ஸஹாபியான இப்னு உம்முமக்தூம் ரலி அங்கிருந்து, அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நான் பார்வை தெரியாதவன்.என் போன்றோரின் நிலை என்ன என வினவினார். அதற்கு நபி ஸல் அவர்கள் பணிவாக அதுபற்றி நான் ஒன்றும் சொல்வதற்கில்லை இறைச்செய்தியை என் பேனா எழுதி முடித்துவிட்டது என்று கூறினார்கள். சிரிதுநேரத்தில் நபி ஸல் அவர்கள் மயக்கநிலைக்கு சென்றுவிட்டார்கள்.அதாவது வஹி வருகிறது.என்னை அழைத்து

غَيْرُ أُولِي الضَّرَرِ 4: 95 [النساء

(நோயாளிகளை தவிர)என்ற ஒரு எழுத்தை அதில் சேர்த்து எழுதச்சொன்னார்கள்

அமீருல் முஃமினீன் அவர்களே! ஒரு எழுத்துக்காக அதன் கண்ணியம் கருதி ஹழ்ரத் ஜிப்ரயீல் அலை,மற்றும் பல வானவர்களையும் 500 ஆண்டின் தொலைவிலிருந்து அல்லாஹ் அனுப்பி வைத்தான். அப்படிப்பட்ட அல்லாஹ்வின் கல்விக்கு நான் மரியாதை செய்ய வேண்டாமா?   அல்லாஹ் உங்களின் உயர்வான செயலால் உங்களை இந்நிலையில் வைத்துள்ளான்.கல்வியின் கண்ணியத்தை கெடுத்தால் அல்லாஹ் உங்களின் கண்ணியத்தை கெடுத்து இந்த இடத்தை விட்டும்  இறக்கிவிடுவான் என்றார்கள்.அதைக்கேட்ட இமாம் அவர்களின் இல்லம் தேடிவந்து முஅத்தா எனும் ஹதீஸ் நூலை மாமன்னர் ஹாரூன் ரஷீத் அவர்கள் கற்றதாக வரலாறு.

அரசர் அழைத்த போதும் தன் சுயமரியாதையை விட்டுத்தராத மாலிக் ரஹ் அவர்களின் இந்த வரலாறு நமக்கு ஒரு பாடம்.நம் முன்னோர்களிடம் எவரும் எந்த சூழ்நிலையிலும் தன் சுயமரியாதையை விட்டுத் தர வில்லை. ஒரு மனிதன் எப்போதும் பிற மனிதர்களின் தேவையை எதிர் பார்க்கின்றானோ அப்போது தான் அவன்தன் சுயமரியாதையை காற்றில் பறக்க விட்டு விடுகிறான். நம் முன்னோர்களான அந்த பரிசுத்தவான்கள் யாரிடமும் தன் தேவையை முன் வைக்க வில்லை.அவரின் மூலம் காரியம் ஆக வேண்டும் என்று நினைக்க வில்லை. தேவைகளை இறைவன் மட்டுமே பூர்த்தி செய்வான் என்று கருதினார்கள். ரப்பிடமே தன் தேவைகளைக் கேட்டார்கள். அதனால் அவர்கள் தன் சுயமரியாதைப் பாதுகாத்துக் கொண்டார்கள்.  

இறைவனிடம் மட்டுமே நம் தேவைகளைக் கேட்க வேண்டும்.

وعن عائشة رضي الله عنها قالت : ( سَلُوا اللَّهَ كُلَّ شَيءٍ حَتَّى الشِّسعَ ، فَإِنَّ اللَّهَ إِن لَمْ يُيَسِّرهُ لَمْ يَتَيَسَّرْ

செருப்பின் வார் உட்பட அனைத்தையும் அல்லாஹ்விடே கேளுங்கள். ஏனெனில் அவன் ஒன்றை இலேசாக்க வில்லையெனில் அது இலேசாகாது. (பைஹகீ)

سالم بن عبد الله بن عمر بن الخطاب -رضي الله عنهم- كان يطوف ذات يوم بالكعبة فإذا بخليفة من الخلفاء، فقال هذا الخليفة: يا سالم سلني، فقال سالم: إني أستحي أن أسأل غير الله في بيت الله، فلما خرج سالم من المسجد الحرام، قال هذا الخليفة: يا سالم سلني. فقال سالم: أمن حوائج الدنيا أم من حوائج الآخرة؟ فقال هذا الخليفة: من حوائج الدنيا، فإن حوائج الآخرة لا أملكها. فقال سالم -رضي الله عنه-: إذا لم أسأل حوائج الدنيا ممن يملكها، فكيف أسألها ممن لا يملكها؟.

உமர் ரலி அவர்களின் பேரர் ஸாலிம் பின் அப்துல்லாஹ் ரஹ் அவர்கள் ஒரு முறை தவாஃப் செய்து கொண்டிருந்தார்கள். அப்போது கலீஃபாக்களில் ஒருவர் ஸாலிமே உனக்கு எதுவும் தேவையிருந்தால் கேள்! அப்போது அவர்கள் அல்லாஹ்வின் இறையில்லத்தில் இருந்து கொண்டு அவனிடம் கேட்காமல் மற்றவர்களிடம் கேட்க நான் வெட்கப்படுகிறேன் என்றார்கள். ஹரமிலிருந்து வெளியே வந்த பிறது இப்போது சொல் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார் கலீஃபா. உலகத்தின் தேவையா மறுமையின் தேவையா என்று ஸாலிம் கேட்டார்கள். மறுமையின் தேவையை நான் எப்படி செய்ய முடியும்? உலகத்தின் தேவையைத்தான் கேட்கிறேன் என்றார் கலீஃபா. அப்போது ஸாலிம் ரஹ் அவர்கள் தருவதற்கான தகுதி படைத்த இறைவனிடமே நான் எப்போதும் உலகத்தேவையைக் கேட்டதில்லை. உங்களிடமா கேட்கப் போகிறேன் என்றார்கள்.

யார் சுயமரியாதையையும் தன் நிறைவையும் தேடுகின்றாரோ அவருக்கு இறைவன் அவற்றை கொடுத்து விடுவான் யார் தன்னிடம் இருப்பதை வைத்து போதுமாக விரும்புகின்றாரோ அவருக்கு இறைவன் தன்னிறைவு கொடுக்கிறான்

أنَّ ناسًا مِنَ الأنصارِ سألوا رسولَ اللهِ صلَّى اللهُ عليه وسلَّمَ فأعطاهم، ثمَّ سألوه فأعطاهم، حتَّى إذا نَفِدَ ما عِندَه قال: ما يكونُ عِندي مِن خيرٍ، فلَنْ أدَّخِرَه عنكم، ومَن يستعفِفْ يُعِفَّهُ اللهُ عزَّ وجَلَّ، ومَن يَصبِرْ يُصبِّرْه اللهُ، وما أُعْطِيَ أحدٌ عطاءً هو خيرٌ وأوسَعُ مِنَ الصَّبرِ.

அன்சாரிகளில் சிலர் நபி {ஸல்} அவர்களிடம் உதவி கேட்டார்கள். கேட்ட யாருக்குமே நபி {ஸல்} அவர்கள் கொடுக்காமல் இருக்கவில்லை. இறுதியாக, நபியவர்களிடம் இருந்த அனைத்தும் தீர்ந்து விட்டது. தம் கரங்களால் செலவிட்டு எல்லாப் பொருட்களும் தீர்ந்து போன பின்பு அந்த அன்சாரிகளிடம் நபி {ஸல்} அவர்கள் என்னிடத்தில் உள்ள எந்தச் செல்வத்தையும் உங்களுக்கு வழங்காமல் நான் சேமித்து வைக்கப் போவதில்லை.(இருப்பினும்) யார் சுயமரியாதையோடு நடந்து கொள்கிறாரோ அவரை அல்லாஹ் சுயமரியாதையுடன் வாழச் செய்வான்.யார் (இன்னல்களைச்) சகித்துக் கொள்கிறாரோ அவருக்கு அல்லாஹ் (மேலும்) சகிப்புத் தன்மையை வழங்குவான்.யார் பிறரிடம் தேவையாகாமல் இருக்கிறாரோ அவரை அல்லாஹ் தன்னிறைவு உள்ளவராக ஆக்குவான். பொறுமையைக் காட்டிலும் மேலான விசாலமானதோர் அருட்கொடை உங்களுக்கு வழங்கப்படப் போவதில்லை  என்று கூறினார்கள்.(புகாரி 6470)

இப்போது ஹாஜிகள் ஹஜ்ஜை முடித்து இப்ராஹீம் அலை அவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தார்களின் நினைவுகளை தங்கள் உள்ளங்களில் சுமந்து கொண்டு தங்கள் ஊர்களுக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றார்கள். இப்ராஹீம் அலை அவர்களை முன்மாதிரி என்று இறைவன் கூறுகிறான். இறைவனிடம் மட்டுமே தேவையாக வேண்டும். பிற படைப்பினங்களிடம் தேவையாகி தன் சுயமரியாதையை இழந்து விடக்கூடாது என்பதற்கும் அவர்களே முன்மாதிரி.

فَرُوِيَ أَنَّهُ لَمَّا رُمِيَ بِالْمَنْجَنِيقِ وَصَارَ فِي الْهَوَاءِ أَتَاهُ جِبْرِيلُ عَلَيْهِ السَّلَامُ فَقَالَ: أَلَكَ حَاجَةٌ؟ قَالَ: أَمَّا إِلَيْكَ فَلَا. فَخَلَّةُ اللَّهِ تَعَالَى لِإِبْرَاهِيمَ نُصْرَتُهُ إِيَّاه

நெருப்புக் குண்டத்தில் போடப்படும் அந்த நேரத்தில் ஜிப்ரயீல் அலை அவர்கள் வந்து உங்களுக்கு எதுவும் தேவையிருக்கிறதா உதவி எதுவும் தேவைப்படுகிறதா என்று கேட்டார்கள். உங்களின் உதவி எனக்கு தேவையில்லை என்று இப்ராஹீம் அலை அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வே அவர்களுக்கு உதவி செய்தான். (குர்துபீ) 

3 comments:

  1. அல்ஹம்துலில்லாஹ் இந்த பயான் கட்டுரையை படிக்கின்ற பொழுது மிகவும் ஆழமான கருத்துக்களை ஹஜ்ரத் அவர்கள் பதிவு செய்திருக்கின்றார்கள்... பாரகல்லாஹ்... ஹஸ்ரத் அவர்களுக்கு அல்லாஹ் ரப்புல் ஆலமீன் மென்மேலும் சிறப்பையும் பரக்கத்தையும் கொடுத்தருள்வானாக...🤲🤲🤲 ஆமீன் பிஜாஹின் நபிய்யி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்...

    ReplyDelete
    Replies
    1. இப்படிக்கு என்றென்றும் ஹஜரத் அவர்களுடைய மாணவர் M S கேம்பல் மஹ்ழரி

      Delete