Friday, July 12, 2024

ஆணவக்காரர்களின் முடிவு

 

1446 ம் ஹிஜ்ரிப் புத்தாண்டு பிறந்து அதன் முதல் மாதமான முஹர்ரம் மாதத்தின் முதல் ஜும்ஆ இது. வருடத்தின் மூன்று பத்து நாட்கள் மகத்துவமானவை. துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்கள், ரமலான் மாதத்தின் இறுதிப் பத்து நாட்கள், முஹர்ரம் மாதத்தின் முதல் பத்து நாட்கள். பொதுவாக நிகழ்வுகள் தான் காலத்தையும் நாளையும் அடையாளப்படுத்துகிறது. நிகழ்வுகளைக் கொண்டு தான் காலமே அறியப்படுகின்றது. நிகழ்வுகளை எண்ணிப்பார்க்காமல் அதனை தனியாக பிரித்து விட்டு காலத்தை மட்டும் ஒருவர் யோசிக்க முடியாது.

அதேபோன்று நடக்கும் நிகழ்வுகளைக் கொண்டும் சம்பவங்களைக் கொண்டும் தான் ஒரு நாளோ அல்லது ஒரு மாதமோ சிறப்பைப் பெறுகிறது. அந்த வகையில் ஹஜ்ஜுடைய கடமைகள், குர்பானி போன்ற அமல்கள் நடைபெறுவதால் துல்ஹஜ்ஜின் பத்து நாட்கள் சிறந்தவை. குர்ஆன் அருளப்பட்டதால் ரமலானின் பத்து நாட்கள் சிறப்பானவை. வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுகளும் சம்பவங்களும் முஹர்ரம் பத்தாம் நாள் நடைபெற்றதால் முஹர்ரமின் பத்து நாட்கள் மகத்தானவை.

ரமலான் மாதத்தை அடுத்து மிகச்சிறந்த நோன்பு என்றால் அது, முஹர்ரம் மாதத்தில், குறிப்பாக இந்த ஆஷுரா தினத்தில் நோற்கும் நோன்பு என்று மார்க்கம் கூறுகிறது.

أن السيدة عائشة ـ رضي الله عنها ـ قالت: كانت قريش تصوم عاشوراء في الجاهلية، وكان رسول الله ـ صلى الله عليه وسلم ـ يصومه، فلما هاجر إلى المدينة صامَه وأمر بصيامه فلما فُرِض شهر رمضان قال: “مَن شاءَ صامَه ومَن شاء تركَه

அறியாமைக் காலத்தில் குரைஷிகள் ஆஷூரா நோன்பை நோற்பவர்களாக இருந்தார்கள். நபி  அவர்களும் அதை நோற்று வந்தார்கள். அவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து வந்த போது அவர்களும் நோற்று மற்றவர்களையும் நோற்கும் படி ஏவினார்கள்.  அல்லாஹ் ரமளானுடைய நோன்பைக் கடமையாக்கிய போது, “யார் (ஆஷூராவுடைய) நோன்பு நோற்க விரும்புகிறாரோ அவர் அதை நோற்றுக் கொள்ளட்டும்! யார் அதை விட்டு விட விரும்புகிறாரோ அவர் அதை விட்டு விடட்டும்!’’ என்று கூறி விட்டார்கள். (முஸ்லிம் 1125)

ரமலான் மாதத்தின் கடமையான நோன்பிற்குப் பிறகு ஏராளமான சுன்னத்தான நோன்புகள் மார்க்கத்தில் சொல்லப்பட்டுள்ளது. அவற்றில் அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களால் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட நோன்பு ஆஷுரா நோன்பாகும்.

عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: مَا رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَحَرَّى صِيَامَ يَوْمٍ فَضَّلَهُ عَلَى غَيْرِهِ إِلّا هَذَا الْيَوْمَ يَوْمَ عَاشُورَاءَ وَهَذَا الشَّهْرَ يَعْنِي شَهْرَ رَمَضَانَ

ஆஷுரா எனும் இந்த நாளையும், (ரமளான் எனும்) இந்த மாதத்தையும் தவிரவேறெதையும் ஏனையவற்றை விடச் சிறப்பித்துத் தேர்ந்தெடுத்து நபி ﷺ அவர்கள் நோன்பு நோற்பதை நான் பார்த்ததில்லை என இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி 2006)

அந்த நோன்பிற்கான காரணம்


عن ابن عباس أنه قال "قدم النبي المدينة فرأى اليهود تصوم يوم عاشوراء فقال: ما هذا؟ قالوا: هذا يوم صالح، هذا يوم نجى الله بني إسرائيل من عدوهم فصامه موسى، قال: فأنا أحق بموسى منكم، فصامه وأمر بصيامه

நபி  அவர்கள் மதீனா வந்த போது யூதர்கள் ஆஷூரா நாளில் நோன்பு நோற்பதைக் கண்டார்கள். "இது என்ன நாள்?'' என்று கேட்டார்கள். "இது மாபெரும் நாள்! மூஸா (அலை) அவர்களை இந்த நாளில் தான் அல்லாஹ் காப்பாற்றினான். ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை (கடலில்) மூழ்கடித்தான். ஆகவேமூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் விதத்தில் இந்நோன்பை நோற்றார்கள்'' என்று யூதர்கள் கூறினர். நபி (ஸல்) அவர்கள் "நான் அவர்களை விட மூஸாவுக்கு நெருக்கமானவன்'' என்று கூறிவிட்டு அந்த நாளில் தாமும் நோன்பு நோற்று தம் தோழர்களுக்கும் நோன்பு நோற்கும்படி கட்டளை இட்டார்கள். (புகாரி ; 3397)

ஃபிர்அவ்ன் என்ற ஆணவக்காரனுக்கு அழிவையும் மூஸா நபிக்கு வெற்றியையும் தந்த நாள் என்பதால் அந்த நாளில் நோன்பு வைக்க வேண்டும் என்று நபி ஸல் அவர்கள் ஏவினார்கள்.

ஆஷூரா தினத்தை சந்திக்க இருக்கிற இந்த நேரத்தில் ஃபிர்அவ்ன் அழிக்கப்பட்ட அந்த நிகழ்வை சற்று எண்ணிப் பார்க்க வேண்டும்.

 

 

 

ஒரு நாட்டின் ஆட்சியாளர் எப்படியெல்லாம் இருக்கக் கூடாதோ அப்படியான எல்லாக் குணங்களையும் ஒருசேரப் பெற்றிருந்தான் எகிப்து நாட்டின் அரசன் ஃபிர்அவ்ன். எகிப்
அவன் தன்னை உலகத்தின் அதிபதியாகக் கருதினான். தன்னைக் காட்டிலும் உயர்ந்தவர் யாருமில்லை என்று பெருமையடித்துக் கொண்டான். அந்தக் கொடுங்கோலன் தனது ஆட்சியதிகாரத்தால் ஆணவத்தின் உச்சத்திற்கு சென்று தன்னையே கடவுள் என்றான். மூஸா நபி அலை அவர்களின் சமூகமான பனூஇஸ்ரவேலர்களை கொத்தடிமைகளாக்கி துன்புறுத்திக் கொண்டிருந்தான். தன் ஆட்சிக்கு கேடாக வந்துவிடும் என்று எண்ணி ஆயிரக்கணக்கான ஆண் குழந்தைகளை கொன்று குவித்தான். இப்படி ஆணவத்தின் உச்சத்தில் அநியாயங்களையும் அக்கிரமங்களையும் செய்து கொண்டிருந்த ஃபிர்அவனுக்கு அல்லாஹ் மோசமான முடிவை ஏற்படுத்தினான். உலகில் ஆணவம் கொள்கின்ற அனைவருக்கும் ஃபிர்அவனின் முடிவு ஒரு பாடமாகும்.


இன்றைய உலகில் தனது பணத்தாலும், பதவியாலும், பெற்ற படிப்பாலும், பிறந்த குடும்பத்தாலும் பெருமையடிக்கும் பலரை நாம் நமது அன்றாட வாழ்வில் பார்த்து வருகிறோம். இது பலரையும் பீடித்திருக்கும் ஒரு வியாதி என்றால் மிகையில்லை.

அல்லாஹ்விற்கு பிடிக்காத ஒரு குணம் பெருமை.

لا يَدْخُلُ الجَنَّةَ مَن كانَ في قَلْبِهِ مِثْقالُ ذَرَّةٍ مِن كِبْرٍ قالَ رَجُلٌ: إنَّ الرَّجُلَ يُحِبُّ أنْ يَكونَ ثَوْبُهُ حَسَنًا ونَعْلُهُ حَسَنَةً، قالَ: إنَّ اللَّهَ جَمِيلٌ يُحِبُّ الجَمالَ، الكِبْرُ بَطَرُ الحَقِّ، وغَمْطُ النَّاسِ.

எவனுடைய உள்ளத்தில் அணுவளவேனும் பெருமை இருக்கிறதோ, அவன் சுவர்க்கத்தில் நுழைய முடியாது என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் (மக்களை நோக்கி) கூறிய போது, ஒரு மனிதர் யாரசூலுல்லாஹ்! தனது ஆடை மற்றும் காலணிகள் போன்றவை அழகாக இருக்க வேண்டுமென ஒருவர் விரும்புகிறார். அது பெருமை ஆகுமா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், அல்லாஹ் மிகவும் அழகானவன். அழகாக இருப்பதை விரும்பக்கூடியவன். எனவே, இவை பெருமை ஆகாது என்று பதில் கூறிவிட்டு, பெருமை என்றால் என்னவென்று தெரியுமா? “சத்தியத்தை மறுப்பதும்-மற்றவர்களை இழிவாக எண்ணுவதுமே (பெருமை ஆகும்) என்றும் கூறினார்கள். (முஸ்லிம்-91)

قَالَ: قَالَ رَسُولُ اللَّه ﷺ: ثَلاثَةٌ لاَ يُكَلِّمُهُمْ اللَّه يوْمَ الْقِيَامةِ، وَلاَ يُزَكِّيهِمْ، وَلا ينْظُرُ إلَيْهِمْ، ولَهُمْ عذَابٌ أليمٌ: شَيْخٌ زَانٍ، ومَلِكٌ كَذَّابٌ، وَعَائِل مُسْتَكْبِرٌ رواهُ مسلم.

மறுமையில் மூவருடன் அல்லாஹ் பேசவும் மாட்டான். பாவங்களை மன்னித்து பரிசுத்தமாக்கவும் மாட்டான். கருணைக் கண்கொண்டு பார்க்கவும் மாட்டான். அவர்களுக்கு கடுமையான வேதனை உண்டு.

1. முதுமையில் விபச்சாரம் செய்தவர்.

2. பொய்யுரைக்கும் அரசன்,

3.பெருமை அடிக்கும் ஏழை (முஸ்லிம்)

உலகில் பெருமையும் ஆணவமும் கொண்டு திரிந்த அத்தனை பேருக்கும் முடிவு மிக மோசமானதாகத்தான் இருந்தது.

நம்ரூதின் முடிவு

عن زيد بن أسلم : " إن أول جبار كان في الأرض نمرود ، فبعث الله عليه بعوضة فدخلت في منخره ، فمكث أربعمائة سنة يضرب رأسه بالمطارق ، أرحم الناس به من جمع يديه فضرب رأسه بهما ، وكان جبارا أربع مائة سنة ، فعذبه الله أربع مائة سنة كملكه ، ثم أماته الله

உலகில் தோன்றிய முதல் கொடுங்கோல் மன்னன் நம்ரூத். ஒரு நாள் அவனுடைய மூக்கு துவாரத்தின் வழியாக கொசு ஒன்று உள்ளே சென்று அவனுடைய மண்டைக்குள் அமர்ந்து அவனை பாடாய் படுத்தியது. வலியால் துடித்தான். யாராவது எதைக் கொண்டாவது அடித்தால் அவனுக்கு சுகமாக இருக்கும். எனவே அரசவையில் அவனுடைய ஆட்சிக்கு கீழ் இருந்தவர்களைக்கொண்டே தன்னை அடிக்க வைத்தான். இவ்வாறு செருப்புகளைக் கொண்டும் சுத்தியலைக் கொண்டு அவனை அடித்துக் கொண்டே இருப்பார்கள். இவ்வாறு 400 வருடம் அவஸ்தைகளை அனுபவித்து மடிந்து போனான். ஆணவம் கொண்டு 400 ஆண்டுகள் அவன் செய்த ஆட்சிக்கு தண்டனையாக 400 வருடங்கள் இவ்வாறான வேதனையை அல்லாஹ் அவனுக்கு வழங்கினான். (தஃப்ஸீர் தப்ரீ)  

 

அபூஜஹ்லின் முடிவு

أنه لما نزلت سورة الرحمن قال عليه السلام "من يقرأها على رؤساء قريش" فتثاقلوا فقام ابن مسعود رضى الله عنه وقال انا فأجلسه عليه السلام ثم قال ثانيا من يقرأها عليهم فلم يقم الا ابن مسعود رضى الله عنه ثم ثالثا الى ان أذن له وكان عليه السلام يبقى عليه لما كان يعلم ضعفه وصغر جثته ثم انه وصل اليهم فرآهم مجتمعين حول الكعبة فافتتح قرآءة السورة فقام ابو جهل فلطمه فشق اذنه وادماها فانصرف وعينه تدمع فلما رآه عليه السلام رق قلبه واطرق رأسه مغموما فاذا جبرآئيل جاء ضاحكا مستبشرا فقال ياجبرائيل تضحك ويبكى ابن مسعود فقال سيعلم فلما ظفر المسلمون يوم بدر التمس ابن مسعود ان يكون له حظ فى الجهاد فقال له عليه السلام "خذ رمحك والتمس فى الجرحى من كان له رمق فاقتله فانك تنال ثواب المجاهدين " فاخذ يطالع القتلى فاذا ابو جهل مصروع يخور فخاف ان تكون به قوة فيؤذيه فوضع الرمح على منحره من بعيد فطعنه ولعل هذا قوله سنسمه على الخرطوم ثم لما عرف عجزه لم يقدر ان يصعد على صدره لضعفه فارتقى عليه بحيلة فلما رآه ابو جهل قال له يا رويعى الغنم لقد ارتقيت مرتقى صعبا فقال ابن مسعود الاسلام يعلو ولا يعلى عليه فقال له ابو جهل بلغ صاحبك انه لم يكن احد ابغض الى منه فى حال مماتى فروى أنه عليه السلام لما سمع ذلك قال "فرعونى اشد من فرعون موسى فانه قال آمنت وهو قد زاد عنوا ثم قال يا ابن مسعود اقطع بسيفى هذا لأنه أحد" وأقطع فلما قطع رأسه لم يقدر على حمله فشق اذنه وجعل الخيط فيها وجعل يجره الى رسول الله عليه السلام وجبرآئيل بين يديه يضحك ويقول يا محمد اذن باذن لكن الرأس ههنا مع الاذن مقطوع ولعل الحكيم سبحانه انما خلقه ضعيفا حتى لم يقو على الرأس المقطوع لوجوه احدها أن ابا جهل كلب والكلب يجر ولا يحمل والثانى ليشق الاذن فيقتص الاذن بالاذن والثالث ليحقق الوعيد المذكور بقوله لنسفعا بالناصية فيجر تلك الرأس على مقدمها قال ابن الشيخ والناصية شعر الجبهة وقد يسمى مكان الشعر ناصية ثم انه تعالى كنى بها ههنا عن الوجه والرأس ولعل السبب فى تخصيص السفع بها ان اللعين كان شديد الاهتمام بترجيل الناصية وتطييبها.

 

அர் ரஹ்மான் அத்தியாயம் இறக்கப்பட்டபோது இதனை குரஷிகளிடம் ஓதிக் காட்டுவதற்கு உங்களில் யார் தயார் என்று நபியவர்கள் கேட்ட போது மற்றவர்கள் எல்லாம் தயங்கிய அந்த நேரத்தில் இப்னு மஸ்ஊத் ரலி அவர்கள் எழுந்து நான் ஓதி காட்டுகிறேன் என்றார்கள். இவ்வாறு மூன்று முறை கேட்ட போதும் அவர்களே எழுந்து நின்றார்கள். அதனைப் பார்த்த நபி ஸல் அவர்கள் மகிழ்ச்சியடைந்து கஃபாவிற்கு சென்று அதனை ஓதுமாறு கூறினார்கள். இப்னு மஸ்ஊத் அவர்கள் கஃபாவிற்கு அருகில் மக்கத்து குரைஷிகள் அனைவரும் கூடி இருக்கக்கூடிய அந்த இடத்தில் அர்ரஹ்மான் சூராவை சப்தமிட்டு ஓதினார்கள். இதைப் பார்த்த அபூஜஹ்ல் கோபமடைந்து அவர்களின் கன்னத்தில் ஓங்கி அறைந்தான். அதனால் அவர்களின் காது கிழிந்து விட்டது. அழுது கொண்டே பெருமானாரிடத்தில் வந்தார்கள். அப்போது வருகை தந்த ஜிப்ரீல் அலை அவர்கள் சிரித்துக் கொண்டிருந்தார்கள். என் தோழர் அழுது கொண்டிருக்க நீங்கள் சிரிக்கிறீர்களே என்று பெருமானார் கேட்டபோது கூடிய விரைவில் அது அவருக்கு புரியும் என்று கூறினார்கள். இஸ்லாத்தின் முதல் போரான பத்ர் போர்க்களம் முடிந்த அந்த நேரத்தில் பெருமானார் ஸல் அவர்கள்  இப்னு மஸ்ஊத் ரலி அவர்களை அழைத்து எதிரிகளில் இன்னும் யார் உயிரோடு இருக்கிறார் என்று பார். யாரும் இறக்காமல் இருந்தால் அவரை கொன்று விடு என்று சொல்லி அனுப்பினார்கள். அவர்களும் சென்று பார்த்தார்கள். அப்போது அபூஜஹ்லின் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது. மண்ணில் சரிந்து கிடந்த மாமிச மலையைப் போன்று இருந்த அபூஜஹ்லின் நெஞ்சின் மீது ஏறி அமர்ந்து கொண்டார்கள். டேய் இடைப்பயலே நீ பெரிய இடத்தில் அல்லவா அமர்ந்து விட்டாய் என்று கூறினான் அவன். அப்போது அபூஜஹ்லின் தலையை அறுக்க முற்பட்டார்கள். அவர்களின் வாள் மழுங்கி விட்டதால் அபூஜஹ்லின் வாளைக் கொண்டே அவனுடைய தலையை வெட்டி எடுத்தார்கள். அது மிக கனமானதாக இருந்தது. எனவே என்னுடைய காதில் துளையிட்டு ஒரு கயிற்றை கட்டி அந்த தலையை பெருமானார் ஸல் அவர்களிடத்தில் இழுத்து வந்தார்கள். அப்போது மீண்டும் ஜிப்ரீல் அவர்கள் வருகை தந்து நான் அன்றைக்கு சிரித்ததற்கான காரணம் இது தான் இன்று விளக்கம் அளித்தார்கள்.

(தஃப்ஸீர் ராஸீ)

ஹஜ்ஜாஜ் பின் யூசுஃபின் முடிவு

 

அவன் செய்த அநியாயத்தாலும் ஆணவத்தாலும் நல்லோர்களின் பத்வாவைப் பெற்றான். அதனால் கடைசி நேரத்தில் கடுமையான அவஸ்தைகளை அனுபவித்தான்.


فلما وصل سعيد إلى الحجاج وأدخلوه عليه نظر إليه في حقد وغيظ وقال : ما اسمك ؟ قال : اسمي سعيد بن جبير ، قال له : بل أنت شقي بن كسير ، فقال : بل كانت أمي أعلم باسمي منك ، فقال: ما تقول في محمد ؟ قال : من تعني بمحمد هل تريد الرسول صلى الله عليه وسلم ؟ قال : نعم ، قال : وهل يخفى عليك قولي فيه، وهو سيد ولد آدم، النبي المصطفى وليس مثلك يسأل مثلي لأننا جميعًا نؤمن برسالته، ولا يُسأل إلا شاك مرتاب

قال له : فما تقول في أبي بكر ؟ قال : هو الصديق خليفة رسول الله صلى الله عليه وسلم، ذهب حميدًا وعاش سعيدًا، وسأله عن عمر، وعن عثمان، وعن علي، وهو يجيب بما اتصف به كل واحد من هؤلاء الكرام البررة صفوة الخلق بعد الرسل الأئمة المهديين الذي رضي الله عنهم ورضوا عنه، ثم قال له : أي خلفاء بني أمية أعجب لك ؟ قال : أرضاهم لخالقهم

قال : فأيهم أرضى للخالق ؟

قال : علم ذلك عند ربي في كتاب لا يضل ربي ولا ينسى

قال : فما تقول فيَّ ؟

قال : أنت أعلم بنفسك

قال : أريد علمك أنت ؟

قال : إذن يسوؤك ولا يسرك

قال : لا بد أن أسمع منك

قال : إني لأعلم أنك مخالف لكتاب الله تعالى، تقدم على أمور تريد بها الهيبة وهي تقحمك في الهلكة، وتدفعك إلى النار، قال له : والله لأقتلنك، قال : إذن تفسد علي دنياي وأفسد عليك آخرتك... قال : اختر لنفسك أي قتلة شئت ؟

قال : بل اخترها أنت لنفسك يا حجاج، فوالله ما تقتلني قتلة إلا قتلك الله مثلها في الآخرة

قال : أتريد أن أعفو عنك ؟

قال : إن كان عفو فمن الله تعالى، فدعا الحجاج بالسيف والنطع فتبسم سعيد فقال له الحجاج : وما تبسمك ؟ قال : عجبت من جراءتك على الله وحلم الله عليك

قال : اقتله يا غلام فاستقبل سعيد القبلة ثم قال : "وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ حَنِيفًا وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ"[الأنعام: 8]

قال : احرفوا وجهه عن القبلة، قال سعيد : "فَأَيْنَمَا تُوَلُّوا فَثَمَّ وَجْهُ اللَّهِ" [البقرة: 116]

فقال : كبوه على الأرض

فقال : "مِنْهَا خَلَقْنَاكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَى" [طه: 55] 

فقال الحجاج : اذبحوا عدو الله فما رأيت أحدًا أدعى للآيات منه

فرفع سعيد المظلوم كفيه البريئتين إلى الرب القدير الذي يعلم خائنة الأعين وما تخفى الصدور ثم قال: «اللهم لا تسلط الحجاج على أحد بعدي»

ولم يمض على مصرع سعيد غير خمسة عشر يومًا حتى أصيب الحجاج بالحمى الشديدة، واشتدت عليه وطأة المرض حتى كان يغفو ساعة ويفيق ساعة، فإذا أفاق استيقظ مذعورًا مهزومًا وهو يصيح ويقول : ما لي ولسعيد بن جبير، ردوا عني سعيد بن جبير، وما بقي إلا أيامًا وهو في عذاب شديد حتى قصم الله ظهره، وأزال ذكره، وأحصى بطشه، وجعله عبرة للمعتبرين

ஸஈத் பின் ஜுபைர் ரலி அவர்களுக்கும் ஹஜ்ஜாஜ் பின் யூசுஃபுக்கும் மத்தியில் நடந்த உரையாடல் ;

ஹஜ்ஜாஜ் ; உன் பெயர் என்ன ?

ஸஈத் பின் ஜுபைர் ரலி ;  என் பெயர் ஸஈத். ஸஈத் என்றால் பாக்கியம் பெற்றவர் என்று பொருள்.

ஹஜ்ஜாஜ் ; இல்லை இல்லை, உன் பெயர் ஷகீ. ஷகீ என்றால் பாக்கியமில்லாதவர் என்று பொருள்.

ஸஈத் பின் ஜுபைர் ரலி ;  உன்னை விட என் உம்மாவிற்கு என் பெயர் நன்றாகத் தெரியும்.

ஹஜ்ஜாஜ் ; முஹம்மதைப்  பற்றி நீ என்ன நினைக்கிறாய் ?

ஸஈத் பின் ஜுபைர் ரலி ;  முஹம்மத் என்றால் அல்லாஹ்வின் தூதரைக் குறித்து கேட்கிறாயா ?

ஹஜ்ஜாஜ் ; ஆம்.

ஸஈத் பின் ஜுபைர் ரலி ;  ஏன் அவர்களைப் பற்றி உனக்குத் தெரியாதா ? அவர்கள் மனிதகுலத் தலைவர். அல்லாஹ்வினால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபி. உன்னைப் போன்றவர் அல்ல.நாங்கள் அனைவரும் அவர்களை அல்லாஹ்வின் தூதர் என்று நம்பியிருக்கிறோம். சந்தேகத்தில் உள்ளவன் தான் அவர்களைப் பற்றி இவ்வாறு கேட்பான்.

ஹஜ்ஜாஜ் ; அபூபக்கரைக் குறித்து உன் கருத்து என்ன ?

ஸஈத் பின் ஜுபைர் ரலி ;  அவர்கள் சித்தீக், நபி  அவர்களின் கலீஃபா. பாக்கியத்துடன் வாழ்ந்தார். புகழுடன் சென்றார்.

இப்படியே எல்லா கலீஃபாக்களைக் குறித்தும் கேட்ட போது அவர்களைப் பற்றி சொன்னார்கள்.

ஹஜ்ஜாஜ் ; பனூ உமய்யாவின் கலீஃபாக்களில் உனக்கு யாரைப் பிடிக்கும் ?

ஸஈத் பின் ஜுபைர் ரலி ;  அவர்களில் அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றவர்.

ஹஜ்ஜாஜ் ; அவர்களில் அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றவர் யார் ?

ஸஈத் பின் ஜுபைர் ரலி ;  அதைப் பற்றிய ஞானம் என் இறைவனிடத்தில் தான் இருக்கிறது.

ஹஜ்ஜாஜ் ; என்னைப் பற்றி என்ன சொல்கிறாய் ?

ஸஈத் பின் ஜுபைர் ரலி ;  அது உனக்கே நன்றாகத் தெரியுமே !

ஹஜ்ஜாஜ் ; என்னைப் பற்றி நீ என்ன அறிந்து வைத்திருக்கிறாய் ! சொல்.

ஸஈத் பின் ஜுபைர் ரலி ;  நான் சொன்னால் அது உனக்கு வேதனையைத் தான் ஏற்படுத்தும். நிச்சயம் மகிழ்ச்சியைத் தராது.

ஹஜ்ஜாஜ் ; பரவா இல்லை சொல்.

ஸஈத் பின் ஜுபைர் ரலி ;  நீ அல்லாஹ்வின் வேதமான அல்குர்ஆனுக்கு மாறு செய்பவன். கர்வத்துடன் நடப்பவன். நீ புரியும் காரியங்கள் நிச்சயம் உன்னை அழிவில் கொண்டு போய் சேர்க்கும். நரகத்திற்கு இழுத்துச் செல்லும்.

ஹஜ்ஜாஜ் ; நிச்சயம் உன்னை நான் கொல்வேன்.

ஸஈத் பின் ஜுபைர் ரலி ;  அப்படி செய்தால் என் உலக வாழ்க்கை நீ அழித்து விடலாம். ஆனால் என்னைக் கொல்வதால் உன் மறுமை வாழ்க்கை அழிந்து போகும்.

ஹஜ்ஜாஜ் ; உன்னை எப்படிக் கொல்வது என்பதை நீயே முடிவு செய்து சொல்.

ஸஈத் பின் ஜுபைர் ரலி ;  இல்லை உன் விருப்பம்.ஆனால் அல்லாஹ்வின் மீது சத்தியமாக என்னை எப்படி கொல்கிறாயோ அவ்வாறே உன்னை மறுமையில் அல்லாஹ் கொல்வான்.

ஹஜ்ஜாஜ் ; உன்னை மன்னிக்க வேண்டும் என்று விரும்புகிறாயா ?

ஸஈத் பின் ஜுபைர் ரலி ;  மன்னிப்பு இருந்தால் அது என் இறைவன் புறத்திலிருந்து மட்டும் தான். உன் தயவு எனக்கு தேவையில்லை.

அவனைக் கொல்வதற்கு ஹஜ்ஜாஜ் முற்பட்ட போது அவர்கள் சிரித்தார்கள்.

ஹஜ்ஜாஜ் ; உனக்கென்ன சிரிப்பு ?

ஸஈத் பின் ஜுபைர் ரலி ;  அல்லாஹ்விடம் நீ இவ்வளவு துணிச்சலாக நடந்து கொண்டும், உன்னை தண்டிக்காமல் அவன் பொறுமையாக இருக்கிறானே அதை நினைத்து சிரிக்கிறான்.

அவர்களைக் கொல்வதற்கு உத்தவிட்ட போது அவர்கள் கிப்லாவை முன்னோக்கி வஜ்ஜஹ்து வஜ்ஹிய லில்லதீ என்ற தஸ்பீஹை ஓதினார்கள். அவர் முகத்தை கிப்லாவை விட்டும் திருப்புங்கள் என்று சொன்னான்.அப்போது நீங்கள் எங்கே திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் இருக்கிறது என்ற வசனத்தை ஓதினார்கள். அவரை முகம் குப்புரப் போடுங்கள் என்று சொன்னான்.அந்த மண்ணிலிருந்தே உங்களை நாம் படைத்தோம். அதன் பக்கமே உங்களை மீட்டுவோம். அதிலிருந்தே மறுமுறை உங்களை வெளியாக்குவோம் என்ற வசனத்தை ஓதினார்கள். அவரை கொல்லுங்கள். இவரைப் போன்று அல்லாஹ்வின் வசனங்களை வாதிட்ட வேறு எவரையும் நான் கண்டதில்லை என்று கூறினான்.அப்போது ஸஈத் ரலி அவர்கள் தன் கரங்களை உயர்த்தி எனக்குப் பிறகு வேறு யாரின் மீதும் இவனை சாட்டி விடாதே  ! அதாவது இவனால் கொல்லப்படுகிற கடைசி நபராக நான் தான் இருக்க வேண்டும் என்று பிரார்த்தித்தார்கள்.அவர்களின் பிரார்த்தனை அல்லாஹ்வினால் ஏற்கப்பட்டது. அவர்கள் இறந்து 15 நாட்களில் ஹஜ்ஜாஜின் மரணம் ஏற்பட்டது.கடுமையாக காய்ச்சல் ஏற்பட்டு மயக்கமுற்று நடக்க முடியாமல் படுத்த படுக்கையானான். மயக்கம் தெளிந்த பிறகு ஸஈத் ரலி அவர்கள் செய்த பிரார்த்தனைய்யை எண்ணிப் பார்த்து வருந்தினான். கடைசியில் மிகவும் வேதனைக்குள்ளாக்கப்பட்டு இறந்து போனான்.

كانت نهاية هذا الطاغية بمرض الأكلة التي وقعت في بطنه ، فدعا الطبيب لينظر إليه فأخذ لحماً و علَّقه في خيط و سَرحه في حلقه و تركه ساعة ثم أخرجه و قد لصق به دود كثير ، و سلّط الله عليه الزمهرير ، فكانت الكوانين تجعل حوله مملوءة ناراً و تُدَّنى منه حتى تحرق جلده و هو لا يَحُسُّ بها

அவனுடைய வயிற்றில் கடுமையான நோய் ஒன்றை அல்லாஹ் ஏற்படுத்தினான். அதிலிருந்து புழுக்கள் வெளியாகிக் கொண்டிருக்கும். அதேபோன்று தாங்க முடியாத கடும் குளிரைக் கொடுத்து அவனை சோதித்தான். அவனைச்சுற்றிலும் கடும் உஷ்ணமுள்ள அடுப்புக்களை வைக்கப்படும். அதனால் அவனுடைய தோள்கள் கறிந்து விடும். ஆனால் அவனுக்கு எந்த உணர்வும் ஏற்படாது. இப்படியே நீண்ட நாட்களாக கொடுமைகளை அனுபவித்து இறந்து போனான்.

அநியாயம் செய்யக்கூடிய யாரையும் பிடிக்காமல் விட மாட்டான். சிறிது காலம் சுகமாக அவர்கள் வாழலாம். எப்படியும் ஒரு நாள் அல்லாஹ்வின் பிடியில் சிக்குவார்கள். அல்லது மறுமையில் கடுமையான வேதனைகள் அவர்களுக்கு உண்டு.

ولا تحسبن اللّٰهَ غَافِلًا عَمَّا يَعْمَلُ الظّٰلِمُوْنَ‌  اِنَّمَا يُؤَخِّرُهُمْ لِيَوْمٍ تَشْخَصُ فِيْهِ الْاَبْصَارُ ۙ‏

மேலும் அக்கிரமக்காரர்கள் செய்து கொண்டிருப்பதைப் பற்றி அல்லாஹ் பராமுகமாக இருக்கிறான் என்று (நபியே!) நீர் நிச்சயமாக எண்ண வேண்டாம்; அவர்களுக்கு (தண்டனையை) தாமதப் படுத்துவதெல்லாம், கண்கள் விரைத்துப் பார்த்துக் கொண்டேயிருக்கும் (அந்த மறுமை) நாளுக்காகத்தான்.(அல்குர்ஆன் : 14:42)

 

5 comments:

  1. மாஷா அல்லாஹ் பாரக்கல்லாஹ் ஹழ்ரத்

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ் மிகவும் அழகிய பயான்

    ReplyDelete
  3. மாஷாஅல்லாஹ் அருமையான பதிவு இன்றைய காலத்திர்கு ஏற்ற சிரப்பான கருத்துக்கள். அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக ஆமீன் ஆமீன் ஆமீன் யாறப்பல் ஆலமீன்

    ReplyDelete
  4. முஹம்மது அலி ஜின்னா சதகீJuly 12, 2024 at 2:08 PM

    அல்ஹம்துலில்லாஹ்
    ஷாஃபி மிகவும் நன்றாக இருக்கிறது

    ReplyDelete
  5. الحمد لله ماشاء الله
    மிக அருமையான கட்டுரை
    بارك الله في علمك

    ReplyDelete