1446 ம் ஹிஜ்ரிப் புத்தாண்டு பிறந்து அதன் முதல் மாதமான முஹர்ரம் மாதத்தின் முதல் ஜும்ஆ இது. வருடத்தின் மூன்று பத்து நாட்கள் மகத்துவமானவை. துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்கள், ரமலான் மாதத்தின் இறுதிப் பத்து நாட்கள், முஹர்ரம் மாதத்தின் முதல் பத்து நாட்கள். பொதுவாக நிகழ்வுகள் தான் காலத்தையும் நாளையும் அடையாளப்படுத்துகிறது. நிகழ்வுகளைக் கொண்டு தான் காலமே அறியப்படுகின்றது. நிகழ்வுகளை எண்ணிப்பார்க்காமல் அதனை தனியாக பிரித்து விட்டு காலத்தை மட்டும் ஒருவர் யோசிக்க முடியாது.