Saturday, March 1, 2025

தராவீஹ் 1 - மறைவானதை நம்புதல்

ذٰ لِكَ الْڪِتٰبُ لَا رَيْبَۛ فِيْهِۛ هُدًى لِّلْمُتَّقِيْنَۙ‏

இதுதான் வேதநூல். இதில் சந்தேகமேயில்லை. இறையச்சம் உடையவர்களுக்கு (இது) நேரான வழியைக் காட்டும். (அல்குர்ஆன் : 2:2)

الَّذِيْنَ يُؤْمِنُوْنَ بِالْغَيْبِ وَ يُقِيْمُوْنَ الصَّلٰوةَ وَمِمَّا رَزَقْنٰهُمْ يُنْفِقُوْنَۙ

அவர்கள் மறைவானவற்றை (உண்டென்று) நம்பிக்கை கொள்வார்கள். தொழுகையையும் நிலைநிறுத்துவார்கள் (தவறாது கடைபிடிப்பார்கள்). நாம் அவர்களுக்கு வழங்கிய (பொருள், செல்வம் போன்ற)வற்றிலிருந்து (தானமாக) செலவும் செய்வார்கள். (அல்குர்ஆன் : 2:3)

அல்லாஹுத்தஆலா நமக்கு வாழ்க்கை நெறியாக தீனுல் இஸ்லாத்தை கொடுத்திருக்கிறான் தீனுல் இஸ்லாம் என்பது ஈமானை அடிப்படையாகக் கொண்டது இறை நம்பிக்கையை அடித்தளமாகக் கொண்டதுசெயல்களை காட்டிலும் இறை நம்பிக்கைக்கும் கொள்கை கோட்பாடுகளுக்கும் முதன்மை இடத்தை கொடுக்கும் மார்க்கம் இஸ்லாம்.

ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை அமல்கள் என்பது அவனுக்கு பிரதானமான விஷயமாக இருந்தாலும் அந்த அமல்களுக்கு பிரதானமானது அவனது இறைநம்பிக்கையும் இறை விசுவாசமும் தான்.

இறை விசுவாசமும் தான் அவன் செய்யக்கூடிய காரியங்கள் நன்மையா இல்லையா என்பதையே தீர்மானிக்கிறது. இறை விசுவாசத்திற்கு பிறகுதான் ஒரு காரியம் நன்மை என்ற அங்கீகாரத்தை பெறுகிறது.

குர்ஆனுடைய வசனங்களை நாம் சற்று உற்று நோக்கினால் அமல்களை குறித்து எங்கெல்லாம் இறைவன் பேசுகிறானோ அங்கெல்லாம் ஈமானையும்  இணைத்தே பேசுகிறான்.இந்த வசனத்திலும் அவ்வாறு தான் பேசுகிறான். ஈமானைப் பற்றி கூறிய பிறகு தான் தொழுகையையும் ஜகாத்தையும் கூறுகிறான்.

" فقال: ( الَّذِينَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ )، حقيقة الإيمان: هو التصديق التام بما أخبرت به الرسل، المتضمن لانقياد الجوارح، وليس الشأن في الإيمان بالأشياء المشاهدة بالحس، فإنه لا يتميز بها المسلم من الكافر، إنما الشأن في الإيمان بالغيب، الذي لم نره ولم نشاهده، وإنما نؤمن به، لخبر الله وخبر رسوله؛ فهذا الإيمان الذي يميز به المسلم من الكافر، لأنه تصديق مجرد لله ورسله. فالمؤمن يؤمن بكل ما أخبر الله به، أو أخبر به رسوله، سواء شاهده، أو لم يشاهده، وسواء فهمه وعقله، أو لم يهتد إليه عقله وفهمه.

وأما أهل الكفر: فكثير منهم متيقن بعدم صدور الكذب عن رسلهم، لكنه ينكر الغيب، ويتخذ لذلك معاذير، فإذا عاينوا ملائكة الموت وعاينوا الآخرة، فإيمانهم لا ينفعهم في هذه الحال لأنه إيمان اضطرار وليس بتصديق، فلذا لو أعيدوا إلى الدنيا لعادوا إلى التكذيب.

இறை நிராகரிப்பாளர்கள் அனைவருமே அந்தந்த நபிமார்கள் உண்மையாளர்கள் அவர்கள் பொய் சொல்ல மாட்டார்கள் என்று நம்பி இருந்தார்கள். இருந்தாலும் அவர்களைக் கொண்டு ஈமான் கொள்ளாமல் போனதற்கு காரணம் மறைவானதை அவர்கள் ஏற்க மறுத்தார்கள்.

இறை நிராகரிப்பாளர்கள் மறைவானதை ஏற்க மாட்டார்கள். நாத்திகர்கள் இறைவன் இல்லை என்று சொல்வதற்கு காரணம் அது தான்.

ஒரு நாத்திகரான மருத்துவர் ஒருவரிடம் ஒரு ஆலிம் பேசினார். அவர் இறைவன் இல்லை என்று மறுத்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த ஆலிம் கேட்டார்கள். வீதியில் ஒரு இடத்தில் சானத்தைப் பார்த்தால் நீங்கள் என்ன சொல்வீர்கள். ஒரு மாடு அவ்வழியாக சென்றிருக்கிறது என்று கூறுவேன் என்று மருத்துவர் கூறினார்.ஒரு இடத்தில் செருப்பின் அச்சு தெரிகிறது என்றால் என்ன பொருள் என்று கேட்டார். அவ்வழியாக ஒரு மனிதர் சென்றிருக்கிறார் என்று மருத்துவர் கூறினார். அதேபோன்று தான் இந்த பிரமாண்டமான உலகம் அதை படைத்து பரிபாளிக்கும் ஒருவன் இருக்கிறான் என்பதைத்தானே அறிவிக்கிறது என்று அந்த ஆலிம் கூறினார்.

மறைவானவற்றை நம்புவது தான் உண்மையான ஈமானாக இருக்க முடியும். கண்கூடாக பார்த்ததையும் தெரிந்து கொண்டதையும் அறிவுக்கு புலப்படுவதையும் மட்டுமே நம்புதல் என்பது அது உண்மையான ஈமானாக இருக்க முடியாது. எனவே தான் காஃபிர்களைக் குறித்து அல்லாஹ் சொல்லும் போது ;  நரகத்தை அவர்கள் கண்கூடாக பார்க்கின்ற நேரத்தில் இதை நம்பாமல் போய் விட்டோமே என்று வருத்தப்படுவார்கள். மீண்டும் ஒரு வாய்ப்பு எங்களுக்கு தரப்பட்டால் இதையெல்லாம் நாங்கள் நம்புவோம் என்று கூறுவார்கள். ஆனால் திரும்பி உலகத்திற்கு வந்தாலும் அவர்கள் அதை நம்ப மாட்டார்கள். ஏனென்றால் அவர்களின் அந்த ஈமான் உண்மையான ஈமான் இல்லை.

அல்லாஹ் கூறுகின்றான் ;

وَلَوْ تَرٰٓى اِذْ وُقِفُوْا عَلَى النَّارِ فَقَالُوْا يٰلَيْتَنَا نُرَدُّ وَلَا نُكَذِّبَ بِاٰيٰتِ رَبِّنَا وَنَكُوْنَ مِنَ الْمُؤْمِنِيْنَ

(நரக) நெருப்பின் முன் அவர்கள் நிறுத்தப்படும் பொழுது, (நபியே!) நீர் (அவர்களைப்) பார்த்தால், ‘‘நாங்கள் (உலகத்திற்கு)த் திரும்ப அனுப்பப்பட வேண்டுமே! (அவ்வாறாயின்) எங்கள் இறைவனின் வசனங்களை நாங்கள் பொய்யாக்காமல், நம்பிக்கையாளர்களில் ஆகிவிடுவோம்'' என்று அவர்கள் புலம்புவார்கள். (அல்குர்ஆன் : 6:27)

 

بَلْ بَدَا لَهُمْ مَّا كَانُوْا يُخْفُوْنَ مِنْ قَبْلُ‌ وَلَوْ رُدُّوْا لَعَادُوْا لِمَا نُهُوْا عَنْهُ وَاِنَّهُمْ لَـكٰذِبُوْنَ

(இதுவும் அவர்கள் மனமாறக் கூறவில்லை) மாறாக! இதற்கு முன்னர் (அவர்கள் தங்களுக்குள்) மறைத்து வைத்திருந்ததுதான் அவர்களிடம் தென்பட்டது. (ஏனென்றால்,) அவர்கள் (இவ்வுலகத்திற்குத்) திரும்ப அனுப்பப்பட்டால், அவர்களுக்குத் தடை செய்திருந்தவற்றின் பக்கமே மீண்டும் செல்வார்கள். நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள்தான். (அல்குர்ஆன் : 6:28)

உண்மையான முஃமின்கள் யாரென்றால், மறைவானவற்றை நம்புவார்கள். அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் எதைக் கூறினாலும் சிறிதும் சந்தேகமின்றி அதை ஏற்பார்கள்.  

اِنَّمَا الْمُؤْمِنُوْنَ الَّذِيْنَ اٰمَنُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖ ثُمَّ لَمْ يَرْتَابُوْا وَجَاهَدُوْا بِاَمْوَالِهِمْ وَاَنْفُسِهِمْ فِىْ سَبِيْلِ اللّٰهِ‌  اُولٰٓٮِٕكَ هُمُ الصّٰدِقُوْنَ

(உண்மையான) நம்பிக்கையாளர்கள் எவர்களென்றால், அவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் மெய்யாகவே நம்பிக்கை கொண்டு, பின்னர் எவ்வித சந்தேகமும் கொள்ளாது, அல்லாஹ்வுடைய பாதையில் தங்கள் உயிரையும் பொருளையும் தியாகம் செய்து போர் புரிவார்கள். இவர்கள்தான் (தங்கள் நம்பிக்கையில்) உண்மையானவர்கள். (அல்குர்ஆன் : 49:15)

 

அத்தகைய உண்மையான உறுதியான ஈமான் ஸஹாபாக்களிடம் இருந்தது.நபி அவர்களை நம்புவதில் அவர்களுக்கு என்றைக்கும் எந்த குழப்பமும் இருந்ததில்லை.எந்த சந்தேகமும் இருந்ததில்லை. கண்ணை மூடிக் கொண்டு நம்பினார்கள்.சொல்லப்போனால் நபியவர்களை அவர்கள் கண்மூடித்தனமாக நம்பினார்கள் என்று தான் சொல்ல வேண்டும். எதையும் ஆராயாமல் உண்மையா இல்லையா என்று யோசிக்காமல் எதையும் நம்பக்கூடாது என்பது உண்மை தான். ஆனால் பெருமானார் நபி அவர்கள்  விஷயத்தில் அவர்கள் சொன்ன அந்த விஷயம் உண்மை என்று தெரிந்து விட்ட பிறகு எதையும் யோசிக்காமல் தான் நம்ப வேண்டும். ஸஹாபாக்கள் அப்படித்தான் நம்பினார்கள்.

أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ابْتَاعَ فَرَسًا مِنْ أَعْرَابِيٍّ فَاسْتَتْبَعَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِيَقْضِيَهُ ثَمَنَ فَرَسِهِ فَأَسْرَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَشْيَ وَأَبْطَأَ الْأَعْرَابِيُّ فَطَفِقَ رِجَالٌ يَعْتَرِضُونَ الْأَعْرَابِيَّ فَيُسَاوِمُونَهُ بِالْفَرَسِ وَلَا يَشْعُرُونَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ابْتَاعَهُ فَنَادَى الْأَعْرَابِيُّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ إِنْ كُنْتَ مُبْتَاعًا هَذَا الْفَرَسِ وَإِلَّا بِعْتُهُ فَقَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ سَمِعَ نِدَاءَ الْأَعْرَابِيِّ فَقَالَ أَوْ لَيْسَ قَدْ ابْتَعْتُهُ مِنْكَ فَقَالَ الْأَعْرَابِيُّ لَا وَاللَّهِ مَا بِعْتُكَهُ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَلَى قَدْ ابْتَعْتُهُ مِنْكَ فَطَفِقَ الْأَعْرَابِيُّ يَقُولُ هَلُمَّ شَهِيدًا فَقَالَ خُزَيْمَةُ بْنُ ثَابِتٍ أَنَا أَشْهَدُ أَنَّكَ قَدْ بَايَعْتَهُ فَأَقْبَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى خُزَيْمَةَ فَقَالَ بِمَ تَشْهَدُ فَقَالَ بِتَصْدِيقِكَ يَا رَسُولَ اللَّهِ فَجَعَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَهَادَةَ خُزَيْمَةَ بِشَهَادَةِ رَجُلَيْن

நபிகள் நாயகம் அவர்கள் ஒரு கிராமவாசியிடம் குதிரையை விலைபேசி முடித்தார்கள். அந்தக் கிராமவாசி (அதற்கான கிரயத்தைப் பெறுவதற்காக) நபிகள் நாயகம் அவர்களைப் பின் தொடர்ந்தார். நபிகள் நாயகம் அவர்கள் விரைந்து நடக்க, அந்தக் கிராமவாசி மெதுவாக நடந்து வந்தார்.நபிகள் நாயகம் அவர்கள் விலைபேசி வாங்கியதை அறியாத மக்கள் அந்தக் கிராமவாசியிடம் கூடுதல் விலைக்கு கேட்கலானார்கள். அப்போது கிராமவாசி நபிகள் நாயகத்தை உரத்த சப்தத்தில் அழைத்து நீங்கள் இதை வாங்குவதாக இருந்தால் வாங்கிக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் நான் மற்றவருக்கு விற்று விடுவேன் என்று கூறினார். உடன் நபிகள் நாயகம் அவர்கள் நின்றார்கள்.

நான் தான் உன்னிடம் விலை பேசி வாங்கி விட்டேனே என்று நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள். அந்தக் கிராமவாசி அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் இதை உங்களுக்கு விற்க வில்லை என்றார். இல்லை நான் உன்னிடம் இதை விலைக்கு வாங்கி விட்டேன் என்று கூறினார்கள். அப்போது கிராமவாசி இதற்கு சாட்சியைக் கொண்டு வாருங்கள் என்று கூறினார்.

அப்போது குஸைமா என்ற நபித்தோழர் கிராமவாசியைப் பார்த்து நீ நபிகள் நாயகத்திடம் விற்றாய் என்று  நான் சாட்சி கூறுகிறேன் என்றார்கள். பின்னர் நபிகள் நாயகம் அவர்கள் குஸைமாவிடம் (நான் அவரிடம் விலை பேசிய போது நீ அந்த இடத்தில் இல்லை. நீ பார்க்க வில்லை) பிறகு எப்படி சாட்சி கூறினாய் என்று கேட்டார்கள். உங்கள் மீது உள்ள நம்பிக்கையால் சாட்சி கூறினேன் என்றார். அப்போது நபிகள் நாயகம் அவர்கள் அவரது சாட்சியத்தை இருவரின் சாட்சியத்துக்கு சமமாக ஆக்கினார்கள்.  (நஸயீ ; 4661)

عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَعَى زَيْدًا، وَجَعْفَرًا، وَابْنَ رَوَاحَةَ لِلنَّاسِ قَبْلَ أَنْ يَأْتِيَهُمْ خَبَرُهُمْ، فَقَالَ: «أَخَذَ الرَّايَةَ زَيْدٌ فَأُصِيبَ، ثُمَّ أَخَذَ جَعْفَرٌ فَأُصِيبَ، ثُمَّ أَخَذَ ابْنُ رَوَاحَةَ فَأُصِيبَ» وَعَيْنَاهُ تَذْرِفَانِ: «حَتَّى أَخَذَ الرَّايَةَ سَيْفٌ مِنْ سُيُوفِ اللَّهِ، حَتَّى فَتَحَ اللَّهُ عَلَيْهِمْ»

அனஸ் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்.

ஸைத் இப்னு ஹாரிஸா (ரலி) அவர்களும் ஜஅஃபர் இப்னு அபீ தாலிப் (ரலி) அவர்களும் (அப்துல்லாஹ்) இப்னு ரவாஹா(ரலி) அவர்களும் (மூத்தா போர்க்களத்தில்) கொல்லப்பட்டுவிட்ட செய்தியை, அது (மதீனாவிற்கு) வந்து சேர்வதற்கு முன்பே (இறைவனால் அறிவிக்கப் பெற்று மக்களுக்கு) நபி(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். அப்போது கூறினார்கள்.

(முதலில் இஸ்லாமியச் சேனையின்) கொடியை ஸைத் பிடித்தார். அவர் கொல்லப்பட்டுவிட்டார். அடுத்து ஜஅஃபர் பிடித்தார். அவரும் கொல்லப்பட்டுவிட்டார். அடுத்து இப்னு ரவாஹா பிடித்தார். அவரும் கொல்லப்பட்டுவிட்டார்.

அறிவிப்பாளர் கூறுகிறார்: அப்போது நபி(ஸல்) அவர்களின் கண்கள் இரண்டும் கண்ணீர்; சொரிந்து கொண்டிருந்தன. இறுதியில், அக்கொடியை அல்லாஹ்வின் வாட்களில் ஒரு வாள் (காலித் இப்னு வலீத்) எடுத்தது. அல்லாஹ் (அவரின் கரத்தில்) முஸ்லிம்களுக்கு வெற்றியை அளித்துவிட்டான்’ என்று கூறினார்கள். (புகாரி: 4262)

பல மைல்களுக்கு அப்பால் எங்கோ நடந்து கொண்டிருந்த போர்க்களத்தின் தகவல்களை நபி ஸல் அவர்கள் கூறினார்கள். அதைக் கேட்ட ஸஹாபாக்களுக்கு சிறிதும் சந்தேகம் வர வில்லை.அதை அப்படியே நம்பினார்கள்.

لما كان حين أمرنا رسولُ اللهِ صلَّى اللهُ عليهِ وسلَّم بحَفْرِ الخَنْدَقِ عَرَضَتْ لنا في بعضِ الخَنْدَقِ صخرةٌ لا نأخذُ فيها المَعَاوِلَ، فاشتَكَيْنا ذلك إلى النبيِّ صلَّى اللهُ عليهِ وسلَّم، فجاء فأخذ المِعْوَلَ فقال : بسمِ اللهِ، فضرب ضربةً فكسر ثُلُثَها، وقال : اللهُ أكبرُ أُعْطِيتُ مَفاتيحَ الشامِ، واللهِ إني لَأُبْصِرُ قصورَها الحُمْرَ الساعةَ، ثم ضرب الثانيةَ فقطع الثلُثَ الآخَرَ فقال : اللهُ أكبرُ، أُعْطِيتُ مفاتيحَ فارسٍ، واللهِ إني لَأُبْصِرُ قصرَ المدائنِ أبيضَ، ثم ضرب الثالثةَ وقال : بسمِ اللهِ، فقطع بَقِيَّةَ الحَجَرِ فقال : اللهُ أكبرُ أُعْطِيتُ مَفاتيحَ اليَمَنِ، واللهِ إني لَأُبْصِرُ أبوابَ صنعاءَ من مكاني هذا الساعةَ

(இந்த அரபி வாசகத்தின் முழுமையான தமிழாக்கம் அல்ல)

அகழ் வெட்டும் போது பெரும் பாறையொன்று எதிர்ப்பட்டது.  தகர்க்கவே இயலவில்லை.  கோடாரிகளின் கூர் மழுங்கிப் போனது தான் மிச்சம்.  பாறையைச் சுற்றிக் கொண்டு அகழை வெட்டிக் கொண்டு செல்லவும் மனமில்லை.  இறைத்தூதர் வகுத்துத் தந்த பாதை ஆயிற்றே!  எனவே, ஓடோடிச் சென்று இறைத்தூதரையே உதவிக்கு அழைத்து வந்தனர்.  அண்ணலெம் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) வந்து பார்த்தார்கள்.  கோடாரியை கையில் வாங்கி (“உம்முடைய இறைவனின் வாக்கில் உண்மை….. முழுமையாக உள்ளது”) என்று கூறிக் கொண்டே ஒரே போடாய் போட்டார்கள்.  மின்னலென ஓர் ஒளிக்கீற்று தெறித்தது.  பாறையின் கால்பாகம் பிளந்து போனது.  (“உம்முடைய இறைவனின் வாக்கில் உண்மையும், நீதியும் உள்ளது”) என்று கூறியவாறு மீண்டும் அடித்தார்கள்.  இன்னொரு பாகம் கழன்று போனது.  பிறகு மூன்றாம் முறையாக (“உம்முடைய இறைவனின் வாக்கில் உண்மையும் நீதியும் உள்ளன.  அவனுடைய வார்த்தைகளை மாற்றக் கூடியவர் யாரும் இல்லை!”) என்று கூறினார்கள்.  பாறை முழுவதுமாய் தூள் தூளானது.  பிறகு, அதைப் பார்த்துக் கொண்டிருந்த ஸல்மான் (ரழியல்லாஹு அன்ஹு) இறைத்தூதரை அணுகி, ‘அண்ணலே! தாங்கள் ஒவ்வொரு முறை அடிக்கும் போதும் ஓர் ஒளிக் கீற்று வெளிப்பட்டதே! என்ன அது?’ என்று கேட்டார்கள்.  அதற்கு இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், ‘ஸல்மானே!’ நீங்கள் கவனிக்க வில்லையாமுதல் ஒளிக் கீற்றில் யமன், மாளிகைகளை நான் பார்த்தேன்.  (அவற்றை முஸ்லிம்கள் வெற்றி கொள்வர்!)  இரண்டாவது ஒளிக்கீற்றில் ரோமானியர்களின் சிவப்பு அரண்மனையைக் கண்டேன்.  (அவற்றையும் வெற்றி கொள்வர்!)  மூன்றாவது ஒளிக்கீற்றில் மதாயின் (கிஸ்ராவின்) மாளிகைகளைக் கண்டேன்!’ என்று கூறினார்கள்.  இறைவனுடைய, இறைத் தூதருடைய வாக்குறுதியாகும் இது!  இவை உண்மையென காலம் நிரூபித்தது.

தங்களையும் தங்களது ஊரையும் எதிரிகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான பணியில் இருந்த அந்த நேரத்தில் சிரியா,பாரசீகம்,யமன் வெற்றி கொள்ளப்படும் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள். அப்போதும் ஸஹாபாக்கள் கொஞ்சமும் சலனம் இல்லாமல் அதை ஏற்றுக் கொண்டார்கள். மதீனாவின் நிலையே இவ்வாறு இருக்கிறது. சிரியா பாரசீகத்தை எவ்வாறு வெற்றி கொள்ள முடியும் என்று சிந்திக்க வில்லை. அதை அப்படியே நம்பினார்கள்.

இந்த ஈமான் நம்மிடம் வர வேண்டும். அல்லாஹ் அத்தகைய ஈமானை நம் அனைவருக்கும் வழங்குவானாக!

 கடந்த வருட குறிப்புகள்

2024 - நடுநிலைச் சமூகம் 

2023 - ஏன் இந்த தயக்கம்

2022 - பொற்காலம்

வாஹிதிகள் பேரவை - அற்புத வேதம் அல்குர்ஆன்

No comments:

Post a Comment