اِذْهَبَاۤ
اِلٰى فِرْعَوْنَ اِنَّهٗ طَغٰى
நீங்கள்
இருவரும் ஃபிர்அவ்னிடம் செல்லுங்கள். நிச்சயமாக அவன் மிக்க வரம்பு கடந்துவிட்டான். (அல்குர்ஆன் : 20:43)
فَقُوْلَا
لَهٗ قَوْلًا لَّيِّنًا لَّعَلَّهٗ يَتَذَكَّرُ اَوْ يَخْشٰى
நீங்கள் அவனுக்கு நளினமாகவே உபதேசம் செய்யுங்கள். அவன் நல்லுணர்ச்சி பெறலாம் அல்லது அச்சம் கொள்ளலாம்'' (என்றும் கூறினோம்.) (அல்குர்ஆன் : 20:44)
لِمَ أمَرَ
اللَّهُ تَعالى مُوسى عَلَيْهِ السَّلامُ بِاللِّينِ مَعَ الكافِرِ الجاحِدِ ؟
الجَوابُ لِوَجْهَيْنِ:
الأوَّلُ:
أنَّهُ عَلَيْهِ السَّلامُ كانَ قَدْ رَبّاهُ فِرْعَوْنُ فَأمَرَهُ أنْ يُخاطِبَهُ
بِالرِّفْقِ رِعايَةً لِتِلْكَ الحُقُوقِ وهَذا تَنْبِيهٌ عَلى نِهايَةِ تَعْظِيمِ
حَقِّ الأبَوَيْنِ.
الثّانِي:
أنَّ مِن عادَةِ الجَبابِرَةِ إذا غُلِّظَ لَهم في الوَعْظِ أنْ يَزْدادُوا
عُتُوًّا وتَكَبُّرًا، والمَقْصُودُ مِنَ البَعْثَةِ حُصُولُ النَّفْعِ لا حُصُولُ
زِيادَةِ الضَّرَرِ فَلِهَذا أمَرَ اللَّهُ تَعالى بِالرِّفْقِ.
மிகவும் மோசமான ஒருவனிடம் எதற்காக மிருதுவாக நடந்து கொள்ளும்படி
அல்லாஹ் கூறினான் என்ற கேள்விக்கு இமாம்கள் இரண்டு பதிலை தருவார்கள்.
1. ஃபிர்அவ்ன்
தான் மூஸா நபியை வளர்த்தான். எனவே தந்தையின் ஸ்தானத்தில் இருப்பதால் அவனிடம்
மிருதுவாக நடக்கச் சொன்னான்.
2. அநியாயக்கார
அரசர்களைப் பொருத்த வரை அவர்களிடத்தில் மிருதுவாகத்தான் நடக்க வேண்டும். அதைத்தான்
அவர்கள் எதிர் பார்ப்பார்கள். கடுமையாக நடந்து கொண்டால் பேசுவதை கேட்க
மாட்டார்கள். ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
அல்லாஹ் மிக மென்மையாளன்
وَقَالَ
يَحْيَى بْنُ مُعَاذٍ فِي هَذِهِ الْآيَةِ: هَذَا رِفْقُكَ بِمَنْ يَقُولُ أَنَا
الْإِلَهُ فَكَيْفَ رِفْقُكَ بِمَنْ يَقُولُ أَنْتَ الْإِلَهُ؟
நான் தான் இறைவன் என்று சொன்ன ஒருவனிடத்திலேயே நீ இவ்வளவு மென்மையாக
நடந்து கொள்கிறாயே நீ தான் இறைவன் என்று கூறும் அடியானிடம் நீ எவ்வளவு மென்மையாக
நடந்து கொள்வாய் என்று கேட்பார்கள் யஹ்யா பின் முஆத் ரஹ் அவர்கள்.
எல்லோரிடமும் மிருதுவாக நடந்து கொள்ள வேண்டும்.மிருதுவாக பேச வேண்டும்
என்று இஸ்லாம் கற்றுத் தருகின்றது.ஒருவன் எத்தனை பெரிய வம்பனாகவும் கொம்பனாகவும்
இருந்தாலும் அவனிடத்திலும் மிருதுவான நடைமுறைகளையே கையாள வேண்டும் என்பதற்கு இந்த வசனம்
தான் சான்று.ஏனென்றால் உலகில் ஃபிர்அவ்னை விட மோசமானவன் யாருமில்லை. அவனிடமே மிருதுவாக
நடந்து கொள்ளும் படி குர்ஆன் கூறுகிறது.
மிருதுவாகவும் நளினமாகவும் நடந்து கொள்வதால் மட்டும் தான் எதையும் சாதிக்க
முடியும்.மக்கள் அதைத்தான் விரும்புவார்கள். கடுகடுப்பாக நடந்து கொள்பவரை மக்கள் விரும்ப
மாட்டார்கள். பக்கத்திலும் வர மாட்டார்கள்.
فَبِمَا
رَحْمَةٍ مِّنَ اللّٰهِ لِنْتَ لَهُمْ وَلَوْ كُنْتَ فَظًّا غَلِيْظَ الْقَلْبِ
لَانْفَضُّوْا مِنْ حَوْلِكَ فَاعْفُ عَنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمْ
وَشَاوِرْهُمْ فِى الْاَمْرِ فَاِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللّٰهِ اِنَّ
اللّٰهَ يُحِبُّ الْمُتَوَكِّلِيْنَ
(நபியே!)
அல்லாஹ்வுடைய அருளின் காரணமாகவே நீர் அவர்கள் மீது மென்மையானவராக நடந்து கொண்டீர்.
நீங்கள் கடுகடுப்பானவராகவும், கடின உள்ளம் கொண்டவராகவும்
இருந்திருப்பீரானால் உம்மிடமிருந்து அவர்கள் வெருண்டோடி இருப்பார்கள். ஆகவே,
அவர்(களின் குற்றங்)களை நீர் மன்னித்து (இறைவனும்) அவர்களை
மன்னிக்கப் பிரார்த்திப்பீராக! மேலும், (யுத்தம்,
சமாதானம் ஆகிய) மற்ற காரியங்களிலும் அவர்களுடன் கலந்து ஆலோசித்தே
வருவீராக! (ஒரு விஷயத்தை செய்ய) நீர் முடிவு செய்தால் அல்லாஹ்விடமே பொறுப்பை
ஒப்படைப்பீராக. ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் (தன்னிடம்) பொறுப்பு
சாட்டுபவர்களை நேசிக்கிறான். (அல்குர்ஆன்
: 3:159)
مَن يُحْرَمِ
الرِّفْقَ، يُحْرَمِ الخَيْرَ
எவர் மென்மையை இழக்கிறாரோ அவர் நன்மைகளை இழக்கிறார். (முஸ்லிம் ; 2592)
நபி ஸல் அவர்கள் அனைத்து விஷயங்களிலும் மென்மையாக நடந்து கொள்ள
வேண்டும் என்று கற்றுத் தந்தார்கள். கொடுக்கல் வாங்கலில் மென்மை.வேலை
செய்பவர்களிடம் மென்மை. பெண்களிடம் மென்மை.கால்நடைகளிடம் மென்மை. இவ்வாறு அனைத்து
வஸ்துக்களிடத்திலும் மென்மையை கடைபிடிக்கும் படி அறிவுறுத்தினார்கள்.
நபி ஸல் அவர்கள் அந்த மென்மையைக் கொண்டு தான் மக்களை வென்றெடுத்தார்கள்.
عمير بن وهب
كانت قصة إسلامه: أنه جلس مع صفوان بن أمية في الحجر بعد مصاب أهل بدر بيسير، وكان
عمير بن وهب شيطانا من شياطين قريش، وممن كان يؤذي رسول الله وأصحابه، ويلقون منه
عناء وهو بمكة، وكان ابنه وهب بن عمير في أسارى بدر، فقال صفوان : والله ما إن في
العيش بعدهم خير قال له عمير : صدقت، أما والله لولا دين علي ليس عندي قضاؤه وعيال
أخشى عليهم الضيعة بعدي، لركبت إلى محمد حتى أقتله، فإن لي فيهم عليه، ابني أسير
في أيديهم، فاغتنمها صفوان بن أمية فقال : علي دينك أنا أقضيه عنك، وعيالك مع
عيالي أواسيهم ما بقوا، لا يسعني شيء ويعجز عنهم، فقال له عمير : فاكتم علي شأني
وشأنك. قال : سأفعل.
ثم أمر عمير
بسيفه فشحذ له وسم، ثم انطلق حتى قدم المدينة، فبينما عمر بن الخطاب في نفر من
المسلمين يتحدثون عن يوم بدر، ويذكرون ما أكرمهم الله به وما أراهم في عدوهم، إذا
نظر عمر إلى عمير بن وهب وقد أناخ راحلته على باب المسجد متوشحا السيف فقال : هذا
الكلب عدو الله عمير بن وهب ما جاء إلا لشر، وهو الذي حرش بيننا وحزرنا للقوم يوم
بدر، ثم دخل عمر على رسول الله فقال : يا نبي الله هذا عدو الله عمير بن وهب قد
جاء متوشحا سيفه، قال : فأدخله علي، قال : فأقبل عمر حتى أخذ بحمالة سيفه في عنقه
فلببه بها، وقال لمن كان معه من الأنصار : ادخلوا على رسول الله فاجلسوا عنده،
واحذروا عليه من هذا الخبيث فإنه غير مأمون.
ثم دخل به على
رسول الله، فلما رآه رسول الله وعمر آخذ بحمالة سيفه في عنقه قال : أرسله يا عمر،
ادن يا عمير، فدنا ثم قال : أنعم صباحا، وكانت تحيه أهل الجاهلية بينهم، فقال رسول
الله : قد أكرمنا الله بتحية خير من تحيتك يا عمير، بالسلام تحية أهل الجنة قال :
أما والله يا محمد إن كنت بها لحديث عهد، قال : فما جاء بك يا عمير، قال : جئت
لهذا الأسير الذي في أيديكم فأحسنوا فيه، قال : فما بال السيف في عنقك، قال :
قبحها الله من سيوف وهل أغنت شيئا، قال: اصدقني ما الذي جئت له، قال : ما جئت إلا
لذلك، قال : بل قعدت أنت وصفوان بن أمية في الحجر، فذكرتما أصحاب القليب من قريش،
ثم قلت : لولا دين علي وعيال عندي لخرجت حتى أقتل محمدا، فتحمل لك صفوان بن أمية
بدين وعيالك، على أن تقتلني له، والله حائل بينك وبين ذلك.
فقال عمير :
أشهد أنك رسول الله، قد كنا يا رسول الله نكذبك بما كنت تأتينا به من خبر السماء
وما ينزل عليك من الوحي، وهذا أمر لم يحضره إلا أنا وصفوان، فوالله إني لأعلم ما
أتاك به إلا الله. فالحمد لله الذي هداني للإسلام وساقني هذا المساق. ثم شهد شهادة
الحق، فقال رسول الله : فقهوا أخاكم في دينه، وعلموه القرآن وأطلقوا أسيره، ففعلوا.
பத்ருப் போரில்
நிகழ்ந்தது. முஸ்லீம்களுக்கு அல்லாஹ் மகத்தான வெற்றியை வழங்கினான். குறைஷியர்களின்
தலைவர்களில் அபூஜஹல், உத்பா, ஸைபா, வலீத்
போன்றோர் வெட்டி வீழ்த்தப்பட்டு தீண்டுவாரின்றி கிடந்தனர். தோல்வியின் விளைவு
இணைவைப்பாளர்களு முஸ்லீம்களின் மீது குரோத உணர்வையும் பழிதீர்க்கும் எண்ணத்தையும்
வளர்த்தது.
அவ்வாறு
முஸ்லிம்களை பழிவாங்க வேண்டும் என்று நினைத்தவர்களில் உமைர் பின் வஹ்பும் ஒருவர்.
குறைஷிகள் இவரை இஸ்லாத்தில் இணையும் முன்பு ஷைத்தானுல் குறைஷ் என்று அழைத்தனர்.
பத்ருப் போரில் படுதோல்வியைத் தழுவிய இணைவைப்பாளர்களில் பொருளாலும், உடலாலும்
உயிராலும் இழப்புக்குள்ளானோர் முஸ்லீம்களைப் பழிவாங்குவதில் முனைப்பாய் இருந்தனர்.
உமைர் பின் வஹ்பின் மகனும் பத்ருப் போரில் முஸ்லீம்களால் கைது செய்யப்பட்டு
சிறைக்கைதியாய் இருந்தார். அவரின் சிறிய தந்தையான உமைய்யா என்பவர் பத்ருப்போரில்
முஸ்லீம்களால் கொல்லப்பட்டார்.
சிறைபிடிக்கப்பட்ட
மகனை மீட்கவும் முஸ்லீம்களை பழிதீர்க்கவும் எண்ணிய உமைர் அவர்களுக்கு கடன்
தொல்லையும் குடும்ப பராமரிப்பு செலவுகளும் தடையாய் இருந்தது. இந்நிலையில் போரில்
உமைய்யாவைக் கொன்றதால் குரோதமுடன் இருந்த அவரின் வாரிசாகிய ஸஃப்வானும் உமைர் அவர்களும்
கஃபாவில் ஒன்று கூடி பழிதீக்கும் விஷயம் பற்றி ஆலோசித்தனர். ஒருவருக்கொருவர்
உறவினராயும் உற்ற நண்பர்களுமாயிருந்தனர். குறைஷிகளாகிய நாம் மிக இழிவுபடுத்தப்
பட்டு விட்டோம். என் மீது மாத்திரம் கடன் தொல்லையும், குடும்ப
பராமரிப்பு செலவினங்களும் மட்டும் இல்லாதிருந்தால் முகம்மதுவைக் கொன்று பழிதீர்த்திருப்பேன்
என உமைர் கூற உம் கடனையும், குடும்ப
பராமரிப்பு செலவுகளையும் நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். நீர் சென்று பழிதீரும்
என ஸஃப்வான் கூற உமைர் மதீனா பிரயாணமாகிறார். நபி (ஸல்) அவர்களை ஒழித்துக் கட்டி
விட வேண்டும் எனும் பழிதீர்க்கும் எண்ணத்தை மனதில் தேக்கியவராய் மதீனா வந்தடைந்த
உமைர் தம் வாகனத்தை நிறுத்தி விட்டு வாளைத் தோளில் தொங்க விட்டவாறு நடந்து
வருவதைக் கண்ட உமர் (ரலி) முஸ்லீம்களை நோக்கி உமைர் இவ்வாறு வருவது தீய நோக்குடன் தான்
இருக்கும். எனவே அல்லாஹ்வின் தூதரிடம் சென்று அவர்களுக்கு அருகில் பாதுகாப்பாக
நில்லுங்கள் என கூறினார்கள்.
உமைர் அவர்களை அழைத்து வர நபி(ஸல்) அவர்கள் அனுமதி தர
உமர் (ரலி) அவர்கள் உமைரின் தோளில் தொங்கும் வாளை இரு கரங்களாலும் பிடித்துக் கொண்டு
நபிகளாரிடம் அழைத்து வருகிறார்கள். நபிகளார் உமர் (ரலி)-யை நோக்கி உமைரை விட்டு விடுங்கள்
எனக் கூற உமைர் நபிகளாரின் சந்திப்பு
நிகழ்கிறது. நபிகளார் உமைரை நோக்கி நீர் இங்கு வந்ததன் நோக்கமென்ன? என்று
வினவ நான் என் மகனை மீட்டுப் போக வந்தேன் என்று பதிலுரைக்கிறார் உமைர். நபிகள் (ஸல்)
அவர்கள் உமைரை நோக்கி நிச்சயமாய் நீர் பொய்யுரைக்கின்றீர். காஃபாவில் நீரும்
ஸஃப்வானும் ஒன்று கூடிப் பேசியது இவ்வாறு தானே என நபிகளார் (ஸல்) அவ்விருவருக்கும்
இடையே நடந்த உரையாடலை உரைக்க திடுக்குற்றவராக ஆச்சரியமடைந்த உமைர் நாங்கள் மக்காவில் பேசியது எவ்வாறு உங்களுக்கு
தெரியும்? அல்லாஹ்வே உங்களுக்கு இதனை
அறிவித்துக் கொடுத்திருக்கிறான்.
நிச்சயம் நீர் இறைவனின் தூதரே என நான் நம்புகிறேன் என்று கூறி ஈமான் கொள்கிறார்.
உங்கள் புதிய
சகோதரருக்கு (உமைர்(ரலி)க்கு) மார்க்கத்தை கற்றுக் கொடுங்கள் என நபிகளார்(ஸல்) கூற
நபித்தோழர்களின் நன்மதிப்பையும் அரவணைப்பையும் பெறுகிறார்;. உமைர்(ரலி)
நீர் நபியின் எதிரியாக இருந்த போது பன்றியை விடவும் மோசமாகக் கருதினேன். நீர் ஈமான் கொண்டு விட்ட
பின்னரோ என் மகனைப் போல்
உம்மை நேசிக்கிறேன். என்று உமர் (ரலி) கூறியது வரலாற்று நூட்களில் இடம்
பெற்றுள்ளது.
தன்னைக் கொல்ல வேண்டும் என்று வந்தவரிடம் மிகவும் மிருதுவாகவும்
மென்மையாக நடந்து கொண்ட பெருமானாரின் நற்பண்பை இங்கே நாம் கவனிக்க வேண்டும்.
عن معاوية بن
الحكم السلمي رضي الله عنه قال: (بينا أنا أصلي مع رسول الله صلى الله عليه وسلم ـ
إذ عطس رجل من القوم، فقلت: يرحمك الله، فرماني القوم بأبصارهم (أسرعوا في
الالتفات إلي، ونفوذ البصر في)، فقلت: واثكل أمياه (الثكل فقدان المرأة ولدها،
وحزنها عليه لفقده، والمعنى: وافقدها لي فإني هلكت)، ما شأنكم تنظرون إلي؟ فجعلوا
يضربون بأيديهم على أفخاذهم، فلما رأيتهم يصمتونني لكني سكت، فلما صلى رسول الله
صلى الله عليه وسلم فبأبي هو وأمي، ما رأيت معلما قبله ولا بعده أحسن تعليما منه،
فوالله ما كهرني (ما انتهرني ولا عبس في وجهي) ولا ضربني ولا شتمني، قال: إن هذه
الصلاة لا يصلح فيها شيء من كلام الناس، إنما هي التسبيح والتكبير وقراءة القرآن)
رواه مسلم
நான் நபி ﷺ
அவர்களோடு தொழுது கொண்டிருந்தேன். அப்போது கூட்டத்தில் ஒருவர் தும்மினார்.
அதற்கு நான் “யர்ஹமுகல்லாஹ்” அல்லாஹ் உமக்கு அருள்புரிவானாக! என்றேன். உடனே
அங்குள்ளோர் அனைவரும் என்னை கூர்ந்து பார்த்தார்கள். அப்போது நான் “ஏன் என்னை
நீங்கள் இவ்வாறு முறைத்துப் பார்க்கிறீர்கள்? உங்கள்
தாய்மார்கள் உங்களை இழக்கக் கூடாது” என்றேன். அப்போது அவர்கள் தம் தொடைகளில்
தமது கைகளை அடித்தார்கள். அவர்கள் என்னை மெளனமாக இருக்கும்படி சிமிக்கை செய்வதாக
உணர்ந்து நான் மெளனமாக இருந்து கொண்டேன்.
நபி ﷺ
அவர்கள் தொழுது முடித்தவுடன், அல்லாஹ்வின் மீது ஆணையாக என்னை அவர்கள்
அதட்டவோ, அடிக்கவோ. ஏசவோ, பேசவோ
செய்யவில்லை, எனது தாயையும். தந்தையையும் அவர்களுக்கு
அர்ப்பணிக்கிறேன். அவர்களுக்கு முன்னரும், பின்னரும் அவர்களை
விடச் சிறியதொரு அழகான ஆசிரியரை நான் கண்டதேயில்லை.
அப்போது
அவர்கள் என்னை நோக்கி, நிச்சயமாக தொழுகை என்பது, இதில்
மனிதர்களின் எவ்விதமான பேச்சுக்கும் இடமில்லை. தொழுகை என்றால் “தஸ்பீஹ்” செய்தல்,
தக்பீர் கூறல், குர்ஆன் ஓதுதல் ஆகியவையேயாகும்
என்றார்கள். (முஸ்லிம் ; 537)
இது தான் நபி ﷺ
அவர்களின் அழகிய பண்பு. நாமாக இருந்தால் ஒன்று அந்த தவறுகளை கண்டும் காணாமல்
விட்டு விடுவோம்.இல்லையென்றால் தடுக்கிறோம் என்ற பெயரில் வேகமாக பேசி அவர்களது
மனதை காயப்படுத்தி விடுவோம்.ஆனால் நபி ﷺ
அவர்கள் எந்த வகையிலும் அவர்களது மனம் காயப்படாத வகையில், எப்படி
கூறினால் அவர் புரிந்து அதிலிருந்து தவிர்ந்து கொள்வாரோ அப்படி பக்குவமாக நளினமாக
கூறி தவறைத் தடுத்தார்கள்.
அல்லாஹ் இந்த தன்மையை நம் அனைவருக்கும் வழங்குவானாக
கடந்த கால பதிவுகள்
2023 நூலைப் போல சேலை
2024 மிக முக்கியமான தூண்
வாஹிதிகள் பேரவை பிரார்த்தனை
அருமை. மாஷாஅல்லாஹ் பாராகல்லாஹ்.
ReplyDelete