فَمَنْ
ثَقُلَتْ مَوَازِيْنُهٗ فَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ
ஆகவே, எவர்களுடைய
நன்மையின் எடைகள் கணக்கிறதோ அவர்கள்தான் வெற்றி அடைவார்கள்.(அல்குர்ஆன் : 23:102)
وَمَنْ
خَفَّتْ مَوَازِيْنُهٗ فَاُولٰٓٮِٕكَ الَّذِيْنَ خَسِرُوْۤا اَنْفُسَهُمْ فِىْ
جَهَـنَّمَ خٰلِدُوْنَ
எவர்களுடைய (நன்மையின்) எடைகள் குறைகிறதோ அவர்கள் தமக்குத் தாமே நஷ்டத்தை உண்டுபண்ணிக் கொண்டு எந்நாளுமே நரகத்தில் தங்கிவிடுவார்கள் (அல்குர்ஆன் : 23:103)
அடியார்கள்
செய்யக்கூடிய நன்மை தீமைகள் அனைத்தும் நாளை மறுமையில் தராசில் நிறுத்தப்படும். ஒரு கடுகளவு
நன்மையாக இருந்தாலும் அல்லது ஒரு கடுகளவு தீமையாக இருந்தாலும் அல்லாஹ் ஒன்று
விடாமல் அங்கே கொண்டு வந்து விடுவான். அந்த நிறுத்தலின் போது எந்தவிதமான அநீதமும்
யாருக்கும் நடைபெறாது என்பதை அல்லாஹ் குர்ஆனில் பல வசனங்களின் மூலமாக
உறுதிப்படுத்தி கூறுகிறான்.
وَنَضَعُ
الْمَوَازِيْنَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيٰمَةِ فَلَا تُظْلَمُ نَـفْسٌ
شَيْــٴًـــا وَاِنْ كَانَ مِثْقَالَ
حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ اَتَيْنَا بِهَا
وَكَفٰى بِنَا حٰسِبِيْنَ
மறுமை நாளில்
சரியான தராசையே நாம் நிறுத்துவோம். எந்த ஓர் ஆத்மாவுக்கும் (நன்மையைக் குறைத்தோ,
தீமையைக் கூட்டியோ) அநியாயம் செய்யப்பட மாட்டாது. (நன்மையோ தீமையோ)
ஒரு கடுகின் அளவு இருந்தபோதிலும் அதையும் கொண்டு வருவோம். கணக்கெடுக்க நாமே
போதும். (வேறெவரின் உதவியும் நமக்குத் தேவையில்லை.) (அல்குர்ஆன்
: 21:47)
اِنَّ اللّٰهَ
لَا يَظْلِمُ مِثْقَالَ ذَرَّةٍ وَاِنْ
تَكُ حَسَنَةً يُّضٰعِفْهَا وَيُؤْتِ مِنْ لَّدُنْهُ اَجْرًا عَظِيْمًاؔ
நிச்சயமாக
அல்லாஹ் (யாருக்கும் அவர்களுடைய பாவத்திற்கு அதிகமான தண்டனையைக் கொடுத்து) ஓர்
அணுவளவும் அநியாயம் செய்வதில்லை. ஆயினும், (ஓர்
அணுவளவு) நன்மை இருந்தால் (கூட) அதை இரட்டிப்பாக்கித் தன் அருளால் மேலும், அதற்கு
மகத்தான கூலியைக் கொடுக்கிறான். (அல்குர்ஆன்
: 4:40)
உலகைப் பொருத்த வரை ஒரு பொருள் வெளிப்படையாக பார்ப்பதற்கு பெரிதாக
பிரமிப்பாக தெரிந்தால் அது எடை அதிகமாக இருக்கும்.ஒரு பொருள் தோற்றத்தில் சிறியதாக
இருந்தால் அதன் எடையும் குறைவாகத் தான் இருக்கும்.ஆனால் அல்லாஹ்வைப் பொருத்த வரை வெளித்
தோற்றத்தை வைத்து எதுவும் இல்லை. சிலர் பார்ப்பதற்கு வசீகரமாக பொழிவாக அழகாக இருப்பார்கள்.
ஆனால் அல்லாஹ்விடம் அவர் மதிப்பில்லாதவராக இருப்பார். சிலர் பார்ப்பதற்கு அழகில்லாதவராக
தெரிவார். ஆனால் அல்லாஹ்விடம் அவருக்கு மதிப்பு கூடுதலாக இருக்கும்.
தோற்றத்தில் பெரிது, ஆனால் எடையில் கனம்
இருக்காது.
عَنْ أَبِي
هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ قَالَ إِنَّهُ لَيَأْتِي الرَّجُلُ العَظِيمُ السَّمِينُ يَوْمَ
القِيَامَةِ، لاَ يَزِنُ عِنْدَ اللَّهِ جَنَاحَ بَعُوضَةٍ، وَقَالَ: اقْرَءُوا،
{فَلاَ نُقِيمُ لَهُمْ يَوْمَ القِيَامَةِ وَزْنًا} [الكهف: 105]
மறுமை நாளில்
உடல் பருத்த கொழுத்த மனிதன் ஒருவன் வருவான். அல்லாஹ்விடம் கொசுவின் இறக்கையளவு எடை
கூட அவன் (மதிப்பு) பெற மாட்டான். ‘மறுமை நாளில் அவர்களுக்கு எத்தகைய மதிப்பையும்
அளிக்க மாட்டோம்’ எனும் (திருக்குர்ஆன் 18:105
வது) இறைவசனத்தை ஓதிக்கொள்ளுங்கள். (புகாரி:
4729)
وَاِذَا
رَاَيْتَهُمْ تُعْجِبُكَ اَجْسَامُهُمْ
وَاِنْ يَّقُوْلُوْا تَسْمَعْ لِقَوْلِهِمْ كَاَنَّهُمْ خُشُبٌ مُّسَنَّدَةٌ
يَحْسَبُوْنَ كُلَّ صَيْحَةٍ عَلَيْهِمْ
هُمُ الْعَدُوُّ فَاحْذَرْهُمْ
قَاتَلَهُمُ اللّٰهُ اَنّٰى يُـؤْفَكُوْنَ
(நபியே!) அவர்களை
நீர் பார்த்தால், அவர்களுடைய தேகங்கள் உங்களை
ஆச்சரியப்படுத்தும். அவர்கள் பேச ஆரம்பித்தால், அவர்களுடைய
வார்த்தையையே நீங்கள் கேட்கும்படி ஏற்படும். (நீர் பேசுவதற்கு வாய்ப்பளிக்காது
பேசுவார்கள்.) சுவற்றில் சாய்ந்த மரங்களைப்போல் அவர்கள் (அசையாது) இருப்பார்கள்.
(அவர்கள் செவியுறும்) எந்தச் சப்தத்தையும் தங்களுக்கு விரோதமாகப் பேசுவதாகவே
எண்ணிக் கொள்வார்கள். (நபியே!) இவர்கள்தான் (உமது உண்மையான) எதிரிகள். ஆகவே,
இவர்களைப் பற்றி நீர் எச்சரிக்கையாக இருந்து கொள்வீராக. அல்லாஹ்
அவர்களை அழித்துவிடுவான். (சத்தியத்திலிருந்து) அவர்கள் எங்கு செல்கின்றனர்?
(அல்குர்ஆன் : 63:4)
قَالَ:
سَمِعْتُ زَيْدَ بْنَ أَرْقَمَ، قَالَ
خَرَجْنَا
مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ أَصَابَ النَّاسَ
فِيهِ شِدَّةٌ، فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ أُبَيٍّ لِأَصْحَابِهِ: لاَ
تُنْفِقُوا عَلَى مَنْ عِنْدَ رَسُولِ اللَّهِ حَتَّى يَنْفَضُّوا مِنْ حَوْلِهِ،
وَقَالَ: لَئِنْ رَجَعْنَا إِلَى المَدِينَةِ لَيُخْرِجَنَّ الأَعَزُّ مِنْهَا
الأَذَلَّ، فَأَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
فَأَخْبَرْتُهُ، فَأَرْسَلَ إِلَى عَبْدِ اللَّهِ بْنِ أُبَيٍّ فَسَأَلَهُ،
فَاجْتَهَدَ يَمِينَهُ مَا فَعَلَ، قَالُوا: كَذَبَ زَيْدٌ رَسُولَ اللَّهِ صَلَّى
اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَوَقَعَ فِي نَفْسِي مِمَّا قَالُوا شِدَّةٌ، حَتَّى ”
أَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ تَصْدِيقِي فِي: {إِذَا جَاءَكَ المُنَافِقُونَ} [المنافقون:
1] فَدَعَاهُمُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِيَسْتَغْفِرَ
لَهُمْ، فَلَوَّوْا رُءُوسَهُمْ “، وَقَوْلُهُ: {خُشُبٌ مُسَنَّدَةٌ} [المنافقون:
4] قَالَ: كَانُوا رِجَالًا أَجْمَلَ شَيْءٍ
ஸைத் இப்னு
அர்கம் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்
நாங்கள் நபி(ஸல்)
அவர்களுடன் ஒரு பயணத்திற்காகப் புறப்பட்டோம். அந்தப் பயணத்தில் (உணவுப்
பற்றாக்குறையால்) மக்களுக்குச் சிரமம் ஏற்பட்டது. அப்போது (நயவஞ்சகர்களின் தலைவன்)
அப்துல்லாஹ் இப்னு உபை தம் நண்பர்களிடம், ‘அல்லாஹ்வின்
தூதருடன் இருக்கும் இவர்களுக்கு நீங்கள் செலவு செய்வதை நிறுத்திவிடுங்கள். அவர்கள்
நபியிடமிருந்து விலகிச் செல்வார்கள்’ என்றும், ‘நாங்கள்
மதீனாவிற்குத் திரும்பிச் சென்றால், (எங்கள்
இனத்தாரான) கண்ணியவான்கள், இழிந்தோ(ராகிய முஹாஜி)ர்களை
அங்கிருந்து வெளியேற்றி விடுவர்’ என்றும் சொன்னான். நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்று,
(அவன் சொன்னதை) அவர்களிடம் தெரிவித்தேன். அப்போது இறைத்தூதர்(ஸல்)
அவர்கள் அப்துல்லாஹ் இப்னு உபைக்கு ஆளனுப்பினார்கள். (அவன் வந்தவுடன்,) அவனிடம்
(அது குறித்துக்) கேட்டார்கள். தான் அப்படிச் செய்யவேயில்லை என்று அவன் சத்தியம்
செய்து சாதித்தான். அன்சாரிகள், ‘இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஸைத் பொய்
சொல்லிவிட்டார்’ என்று (என்னைப் பற்றிக்) கூறினார்கள். அவர்கள் அப்படிச் சொன்னதால்
என் உள்ளத்தில் கடுமை(யான கவலை) ஏற்பட்டது.
அப்போது என்
வாய்மையைக் குறிக்கும் வகையில் ‘(நபியே!) இந்த நயவஞ்சகர்கள் உங்களிடம்
வருகிறபோது…’ என்று தொடங்கும் (திருக்குர்ஆன் 63:1
வது) வசனத்தை அல்லாஹ் அருளினான். அப்போது, இறைத்தூதர் (ஸல்)
அவர்கள் அந்த நயவஞ்சகர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோர அவர்களை அழைத்தார்கள்.
(அவர்கள் அதற்கு இணங்காமல்) தங்கள் தலையைத் திருப்பினார்கள்.
(மேற்கண்ட
வசனத்தின் மூலத்திலுள்ள ‘குஷுபும் முசன்னதா’ (சாய்த்துவைக்கப்பட்டிருக்கும்
மரக்கட்டை) என்பது, அவர்கள் மிகவும் அழகானவர்களாக (வாட்ட
சாட்டமானவர்களாக) இருந்ததைக் குறிக்கிறது. (புகாரி: 4903)
மேற்கூறப்பட்ட வசனத்திலும் இந்த ஹதீஸிலும் நயவஞ்சகர்களின் தலைவனான
அப்துல்லாஹ் பின் உபையைப் பற்றி கூறப்பட்டுள்ளது. அவன் பார்ப்பதற்கு அழகான
தோற்றத்தில் இருப்பான். பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் அவனுடைய உடல்
தோற்றம் அமைந்திருக்கும். அவன் பேச்சு இனிமையாக இருக்கும்.அவன் பேச ஆரம்பித்தால்
நீங்களே நின்று அவன் பேச்சை கேட்பீர்கள் என்று அல்லாஹ் கூறுகின்றான்.
ஆனால் அவனைப் பற்றி அடுத்த வார்த்தையில் அல்லாஹ் சுவற்றில்
சாய்ந்த மரங்களைப்போல் என்று குறிப்பிடுகின்றான். அதாவது மரக்கட்டையைப் போன்று
தான் அவர்கள். வெளித்தோற்றத்தில் பிரமிப்பாக தெரிவார்கள். உள்ளே ஒன்றும்
இருக்காது.
தோற்றத்தில் சிறிது,ஆனால் எடையில் கனமானது.
قَالَ:
سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرِو بْنِ العَاصِ، يَقُولُ: قَالَ رَسُولُ
اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
إِنَّ اللَّهَ
سَيُخَلِّصُ رَجُلًا مِنْ أُمَّتِي عَلَى رُءُوسِ الخَلَائِقِ يَوْمَ القِيَامَةِ
فَيَنْشُرُ عَلَيْهِ تِسْعَةً وَتِسْعِينَ سِجِلًّا كُلُّ سِجِلٍّ مِثْلُ مَدِّ
البَصَرِ، ثُمَّ يَقُولُ: أَتُنْكِرُ مِنْ هَذَا شَيْئًا؟ أَظَلَمَكَ كَتَبَتِي
الحَافِظُونَ؟ فَيَقُولُ: لَا يَا رَبِّ،
فَيَقُولُ: أَفَلَكَ عُذْرٌ؟ فَيَقُولُ: لَا يَا رَبِّ، فَيَقُولُ: بَلَى إِنَّ
لَكَ عِنْدَنَا حَسَنَةً، فَإِنَّهُ لَا ظُلْمَ عَلَيْكَ اليَوْمَ، فَتَخْرُجُ
بِطَاقَةٌ فِيهَا: أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ
مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، فَيَقُولُ: احْضُرْ وَزْنَكَ، فَيَقُولُ: يَا
رَبِّ مَا هَذِهِ البِطَاقَةُ مَعَ هَذِهِ السِّجِلَّاتِ، فَقَالَ: إِنَّكَ لَا
تُظْلَمُ “، قَالَ: «فَتُوضَعُ السِّجِلَّاتُ فِي كَفَّةٍ وَالبِطَاقَةُ فِي
كَفَّةٍ، فَطَاشَتِ السِّجِلَّاتُ وَثَقُلَتِ البِطَاقَةُ، فَلَا يَثْقُلُ مَعَ
اسْمِ اللَّهِ شَيْءٌ»
மறுமை நாளில்
அனைத்துப் படைப்பினங்களுக்கு முன்பாக என்னுடைய சமுதாயத்திலிருந்து ஒரு மனிதனைத்
தனியாக அல்லாஹ் நிறுத்துவான். அவனுக்கு எதிராகத் தொன்னூற்று ஒன்பது (பாவ) ஏடுகள்
விரிக்கப்படும். அதிலிருந்து ஒவ்வொரு ஏடும் பார்வை செல்கின்ற தொலைவின் அளவிற்கு
இருக்கும். பிறகு அல்லாஹ் அவனிடம் இதிலிருந்து நீ எதையாவது மறுக்கின்றாயா?
(அல்லது) பாதுகாவலர்களாகிய என்னுடைய எழுத்தாளர்கள், உனக்கு
அநீதி இழைத்து விட்டார்களா? என்று கேட்பான். என்னுடைய இரட்சகனே
இல்லை (அனைத்தும் நான் செய்த பாவங்கள் தான்) என்று அவன் கூறுவான். (நீ
வேதனையிலிருந்து தப்பிக்க) உனக்கு ஏதாவது காரணம் இருக்கிறதா? என்று
அல்லாஹ் கேட்பான்.
அதற்கு அவன் என்
இரட்சகனே ஏதுமில்லை என்று கூறுவான். அப்போது அல்லாஹ் கூறுவான். அவ்வாறில்லை,
உனக்கு நம்மிடத்தில் ஒரு நன்மை இருக்கிறது, இன்றைய
தினம் உனக்கு எந்த அநீதியும் இழைக்கப்படாது என்று கூறியவுடன் ஒரு சிற்றேடு
வெளிப்படும். அதில் அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ் வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு
வ ரஸுலுஹு (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நான்
சாட்சி கூறுகிறேன், மேலும் உறுதியாக முஹம்மது நபி (ஸல்) அவர்கள்
அல்லாஹ்வுடைய அடியார் என்றும் அவனுடைய தூதர் என்றும் சாட்சி கூறுகிறேன்) என்ற
ஏகத்துவக் கலிமா இருக்கும். நீ உன்னுடைய (நன்மை, தீமைகளின்)
எடையைப் பார் என்று அல்லாஹ் கூறுவான். என்னுடைய இரட்சகனே (இந்த பாவ) ஏடுகளுடன்
இந்தச் சிறிய ஏடு என்ன (பெரிதா?) என்று அவன் கேட்பான். அதற்கு அல்லாஹ்
உறுதியாக நீ அநீதி இழைக்கப்பட மாட்டாய் என்று கூறுவான்.
அந்தப் பாவ
ஏடுகள் ஒரு தட்டிலும், அந்த சிற்றேடு ஒரு தட்டிலும் வைக்கப்படும்.
அந்தப் பாவ ஏடுகள் பறந்தோடிவிடும். அந்தச் சிற்றேடு கனத்து விடும். அல்லாஹ்வின்
பெயரை விட எதுவும் கனத்து விடாது. (திர்மிதி:
2639)
ففي حديث ابن
مسعود رضي الله عنه، أنه كان يجتني سواكا من الأراك –وهو اسم الشجر الذي يؤخذ
منه-، وكان دقيق الساقين، فجعلت الريح تحركه يمنة ويسرة، فضحك القوم منه، فقال
رسول الله -صلى الله عليه وسلم-: (مم تضحكون؟) قالوا: يا نبي الله، من دقة ساقيه،
فقال عليه الصلاة والسلام: (والذي نفسي بيده، لهما أثقل في الميزان من أحد) رواه
أحمد
இப்னு மஸ்வூத்
ரலி அவர்கள் மரத்தின் மேல் நின்றிருந்த போது அவர்களது கீழாடை விலகி அவர்களுடைய மெல்லிய
கால்கள் வெளிப்பட்டன. அவ்வளவு ஒல்லியான கால்களைக் கண்டதும் சில தோழர்கள் சிரித்து விட்டனர். அதைக் கவனித்த நபியவர்கள், “அவரது
கால்களைக் கண்டு சிரிக்கிறீர்களா? நிச்சயமாக, மறுமையில்
அல்லாஹ்வின் எடையில் அவை உஹது மலையை விடப் பளுவானவை” என்று கூறினார்கள்.
எனவே நம் வெளித்தோற்றத்தில் கவனம் செலுத்துவதை விட்டு விட்டு அகத்தை
அழகுபடுத்துவோம்.படைத்தவனிடத்தில் நன்மதிப்பை பெறுவோம்.
கடந்த கால குறிப்புகள்
2023 மதில் மேல் பூனை
2024 நியாயமான தீர்ப்பு
வாஹிதிகள் பேரவை கால்நடைகள்
No comments:
Post a Comment