قُلْ لِّـلْمُؤْمِنِيْنَ يَغُـضُّوْا مِنْ
اَبْصَارِهِمْ وَيَحْفَظُوْا فُرُوْجَهُمْ ذٰ لِكَ اَزْكٰى لَهُمْ
اِنَّ اللّٰهَ خَبِيْرٌ بِمَا يَصْنَـعُوْنَ
(நபியே!) நம்பிக்கையாளர்களான ஆண்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வையைக் கீழ் நோக்கியே வைக்கவும். அவர்கள் தங்கள் கற்பையும் பாதுகாத்துக் கொள்ளவும். இது அவர்களைப் பரிசுத்தமாக்கி வைக்கும். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கறிந்தவன் ஆவான். (அல்குர்ஆன் : 24:30)
பார்வையை தாழ்த்த வேண்டும் என்று அல்லாஹு ரப்புல் ஆலமீன் இந்த வசனத்திலும்
இதனை அடுத்து வரக்கூடிய வசனத்திலும் ஆண்களுக்கும் சொல்லுகிறான். பெண்களுக்கும்
சொல்லுகிறான். பார்வையை தாழ்த்துதல் என்பது அந்நிய பெண்களை பார்க்காமல் இருப்பது
என்பது மட்டுமல்ல, இதற்கு குர்ஆன் விரைவுரைகள் பல்வேறு
விளக்கங்களை நமக்கு தருகிறது.
غض البصر في الشرع يشمل أمورا عدة:
- غض البصر عن عورات الناس، ومن ذلك زينة المرأة
الأجنبية.
1. ஒரு ஆண் அன்னிய பெண்களை பார்க்காமல்
இருப்பது. ஒரு பெண் அன்னிய ஆண்களை பார்க்காமல் இருப்பது.
- غض البصر عن بيوت الناس وما أغلقت عليه أبوابهم:
2. பிறருடைய வீட்டை நோட்டமிடாமல் இருப்பது.
وقد ذكر سبحانه غض البصر وحفظ الفرج بعد آية
الاستئذان، وذلك أن البيوت سترة كالثياب التى على البدن" انتهى.
ويقول ابن القيم رحمه الله في "مدارج
السالكين" (1/117):
” ومن النظر الحرام النظر إلى العورات، وهي قسمان:
عورة وراء الثياب. وعورة وراء الأبواب" انتهى.
ஒரு வீட்டுக்கு செல்லும்போது நாம் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகள்
சுன்னத்துக்களை கூறும் வசனங்களை அடுத்து அல்லாஹு ரப்புல் ஆலமீன் பார்வையை தாழ்த்த
வேண்டும் என்ற வசனத்தை குர்ஆனில் இடம் பெறச் செய்திருக்கிறான் அந்த அடிப்படையில்
அன்னிய வீடுகளை பார்ப்பதிலிருந்தும் நோட்டமிடுவதிலிருந்தும் நம் பார்வையை
தாழ்த்திக் கொள்ள வேண்டும் என்பதை இந்த வசனங்களின் தொடர் நமக்கு உணர்த்துகிறது.
மறைக்கப்பட்டதை பார்ப்பதை இஸ்லாம் தடை செய்திருக்கிறது. அது இரண்டு வகை.
ஒன்று ஆடைக்கு பின்னால் உள்ளது. இரண்டாவது வாசல் திரைக்குப் பின்னால் உள்ளது என
இமாம் இபுனுல் கையும் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.
- غض البصر عما في أيدي الناس من الأموال والنساء
والأولاد والمتاع ونحوها.
3. பிறரிடத்தில் இருக்கக்கூடிய பொருளாதார
வசதி வாய்ப்புகள் இதை நோக்கி நம் பார்வையை செலுத்தாமல் இருப்பது.
لَا تَمُدَّنَّ عَيْنَيْكَ اِلٰى مَا مَتَّعْنَا
بِهٖۤ اَزْوَاجًا مِّنْهُمْ وَلَا تَحْزَنْ عَلَيْهِمْ وَاخْفِضْ جَنَاحَكَ
لِلْمُؤْمِنِيْنَ
(பாவிகளாகிய) இவர்கள் (இவ்வுலகில்) பல
வகைகளிலும் சுகமனுபவிக்க இவர்களுக்கு நாம் கொடுத்திருப்பவற்றின் பக்கம் நீர் உமது
இரு கண்களையும் நீட்டாதீர்; நீர் இவர்களுக்காக கவலையும் படாதீர்.
எனினும், நீர் நம்பிக்கையாளர்களுக்கு உமது பணிவான
அன்பைக் காட்டுவீராக. (அல்குர்ஆன் : 15:88)
இப்படி பல்வேறு வியாக்கியானங்கள் இந்த வசனங்களுக்கு சொல்லப்பட்டாலும்
அந்நிய பெண்களை பார்ப்பதிலிருந்து பார்வையை தாழ்த்த வேண்டும் என்பது இந்த
வசனத்தின் முக்கிய கருத்தாகும்.
ஆண்களும் பெண்களும் மறைக்க வேண்டிய பகுதிகளை முழுமையாக மறைப்பது அவர்கள்
மீது கடமை என்று இஸ்லாம் கூறுகிறது. குறிப்பாக பெண்கள் முகம் மணிக்கட்டை தவிர
அவர்களின் உடல் அவயங்கள் அனைத்தையும் மறைத்தாக வேண்டும் என்பது ஷரீஅத்தின் சட்டம்.
குழப்பம் ஏற்படும் என்று பயந்தால் அந்த நேரத்தில் முகத்தையும் மறைத்தாக வேண்டும்
என்பதே சட்டம்.
وقال النووي : ويجب على الرجال غض البصر عنها في
جميع الأحوال إلا لغرض صحيح شرعي وهو حالة الشهادة والمداواة وإرادة خطبتها، أو
شراء الجارية، أو المعاملة بالبيع والشراء وغيرهما ونحو ذلك، وإنما يباح في جميع
هذا قدر الحاجة دون ما زاد.
சாட்சி சொல்லுதல், மருத்துவம், பெண் பார்த்தல், அடிமையை வாங்குதல், கொடுக்கல் வாங்கல் போன்ற சூழ்நிலைகளில் தவிர மற்ற எந்த நிலைகளிலும் ஒரு
அந்நிய பெண்ணை பார்ப்பதற்கு இஸ்லாம் அனுமதி வழங்கவில்லை.
எதார்த்தமாக பார்க்கின்ற முதல் பார்வை அனுமதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து
பார்க்கின்ற பார்வை தடுக்கப்பட்டு இருக்கிறது.
عَنْ ابْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، رَفَعَهُ
قَالَ:
«يَا عَلِيُّ لَا تُتْبِعِ النَّظْرَةَ النَّظْرَةَ
فَإِنَّ لَكَ الأُولَى وَلَيْسَتْ لَكَ الآخِرَةُ
பார்வை பார்வையை பின்தொடர வேண்டாம். முதல் (பார்வை) உனக்குரியது
(அனுமதிக்கப்பட்டது) அடுத்தது உனக்கு அனுமதிக்கப்பட்டதல்ல என்று நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்.
அறிவிப்பவர் : புரைதா (ரலி),
(திர்மிதி: 2777)
عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ رَضِيَ اللَّهُ
عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
«إِيَّاكُمْ وَالجُلُوسَ عَلَى الطُّرُقَاتِ»،
فَقَالُوا: مَا لَنَا بُدٌّ، إِنَّمَا هِيَ مَجَالِسُنَا نَتَحَدَّثُ فِيهَا،
قَالَ: «فَإِذَا أَبَيْتُمْ إِلَّا المَجَالِسَ، فَأَعْطُوا الطَّرِيقَ حَقَّهَا»،
قَالُوا: وَمَا حَقُّ الطَّرِيقِ؟ قَالَ: «غَضُّ البَصَرِ، وَكَفُّ الأَذَى،
وَرَدُّ السَّلاَمِ، وَأَمْرٌ بِالْمَعْرُوفِ، وَنَهْيٌ عَنِ المُنْكَرِ»
அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
‘நீங்கள் சாலையில் அமர்வதைத் தவிருங்கள்’
என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், ‘எங்களுக்கு அங்கு அமர்வதைத் தவிர வேறு வழியில்லை. அவைதாம், நாங்கள் பேசிக் கொள்கிற எங்கள் சபைகள்’ என்று கூறினார்கள்.
நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியென்றால் நீங்கள் அந்தச்
சபைகளுக்கு வ(ந்து அம)ரும் போது, பாதைக்கு அதன் உரிமையைக் கொடுத்து
விடுங்கள்’ என்று கூறினார்கள். மக்கள், ‘பாதையின் உரிமை என்ன?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘(அந்நியப் பெண்களைப் பார்க்காமல்)
பார்வையைத் தாழ்த்திக் கொள்வதும் (பாதையில் செல்வோருக்குச் சொல்லாலோ செயலாலோ)
துன்பம் தராமலிருப்பதும், சலாமுக்கு பதிலுரைப்பதும், நன்மை புரியும்படி கட்டளையிடுவதும், தீமையிலிருந்து தடுப்பதும் (அதன்
உரிமைகள்) ஆகும்’ என்று பதிலளித்தார்கள்.Book : 46
(புகாரி: 2465)
فَضْلُ(٧) بْنُ جُبَيْرٍ: سَمِعْتُ أَبَا
أُمَامَةَ يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ: "اكْفُلُوا لِي
بِستّ أَكْفُلْ لَكُمْ بِالْجَنَّةِ: إِذَا حدَّث أَحَدُكُمْ فَلَا يَكْذِبْ،
وَإِذَا اؤْتُمِنَ فَلَا يَخُن، وَإِذَا وَعَد فَلَا
يُخْلِفْ. وغُضُّوا أَبْصَارَكُمْ، وكُفُّوا أَيْدِيَكُمْ، وَاحْفَظُوا
فُرُوجَكُمْ
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள், ‘எனக்காக நீங்கள் ஆறு விஷயங்களில் பொறுப்பேற்றுக்
கொள்ளுங்கள்.; உங்களுக்காக நான் சொர்க்கத்தை பெற்றுத்
தருவதில் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்’. நபிகள் குறிப்பிட்ட அந்த ஆறு விஷயங்கள் இது
தான்: 1. நீங்கள் பேசினால் உண்மையே பேசுங்கள், 2. நீங்கள் வாக்குறுதி கொடுத்தால் முழுமையாக நிறைவேற்றுங்கள், 3. உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்டதை ஒழுங்காகத் திருப்பிக்
கொடுத்து விடுங்கள், 4. உங்களின் கற்புகளை பேணிக்
காத்துக்கொள்ளுங்கள், 5. உங்களின் பார்வைகளைத் தாழ்த்திக்
கொள்ளுங்கள், 6. உங்களின் கைகளை போர் செய்யாமல் தடுத்துக்
கொள்ளுங்கள்.
முன்னோர்களின் பேணுதல்
وكان الربيع بن خثيم يغض بصره فمر به نسوة فأطرق (
أي أمال رأسه إلى صدره) فظن النسوة أنه أعمى وتعوذن بالله من العمى.
ரபீஃ பின் கைஸம் ரஹ் அவர்கள் அந்நிய பெண்களை கடந்து செல்லும் நேரத்தில்
அவர்கள் தங்கள் தலையை தங்களின் மார்பின் பக்கம் சாய்த்து கொண்டு நடந்து செல்வார்கள்.
அவரை பார்க்கின்றவர்கள் அவர் பார்வையற்றவர் என்று புரிந்து கொண்டு அவருக்காக துஆ
செய்து விட்டு செல்வார்கள்.
அவர்கள் ஹிஜாபைப் பேண வில்லையானாலும் நாம் பார்க்க கூடாது
ولما قال رجل للحسن رحمه الله: إن نساء العجم
يكشفن صدورهن ورؤوسهن قال: اصرف بصرك.
ஹசன் ரஹ் அவர்களிடத்தில் ஒருவர் கேட்டார் ; அந்நிய நாட்டுப்
பெண்கள் தங்கள் உடல் அவயங்களை ஒழுங்காக மறைத்துக் கொள்வதில்லை. அதற்கவர்கள் நீ
அவர்களை பார்க்காதே! உன் பார்வையை திருப்பிக் கொள் என்று சொன்னார்கள்.
பார்வையை தாழ்த்துவதால் ஏற்படும் பயன்கள்
يذكر العلماء في فوائد غض البصر أمورا كثيرة، منها
ما قاله ابن القيم رحمه الله في “الجواب الكافي” (125):
” وفي غض البصر عدة منافع:
அல்லாமா இப்னுல்
கய்யூம் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள் ;
تخليص القلب من ألم الحسرة، فإن من أطلق نظره دامت
حسرته.
1. கை சேதப்படும் நிலையிலிருந்து நம்மை
பாதுகாக்கும். ஏனென்றால் பார்வை தான் பாவங்களுக்கான முதல் படியாக இருக்கிறது. பார்க்கக்
கூடாததை ஒருவன் பார்க்கிறான். அதற்குப் பிறகு தான் தவறு செய்கிறான். பின்பு
வருந்துகிறான். பார்வையை தாழ்த்தி விட்டால் வருந்துகின்ற நிலை ஏற்படாது.
أنه يورث القلب نورا وإشراقا يظهر في العين وفي
الوجه وفي الجوارح، كما أن إطلاق البصر يورثه ظلمة تظهر في وجهه وجوارحه.
ولهذا ذكر سبحانه آية النور عقيب الأمر بغض البصر، فقال: قُل
لِّلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ النور/30 ثم قال إثر ذلك: اللَّهُ نُورُ السَّمَاوَاتِ وَالأَرْضِ مَثَلُ نُورِهِ كَمِشْكَاةٍ فِيهَا
مِصْبَاحٌ
2. பார்வையை தாழ்த்துவது உள்ளத்திற்கு ஒளியை
ஏற்படுத்தும். பார்வையை தாழ்த்த வேண்டும் என்று வரக்கூடிய வசனத்தை அடுத்து
வானங்களுக்கும் பூமிக்கும் அல்லாஹ் ஒளியாக இருக்கிறான் என்ற வசனத்தை அல்லாஹ்
இடம்பெறச் செய்ததிலிருந்து இந்த கருத்தை மார்க்க அறிஞர்கள் கூறுகிறார்கள்.
أنه يورث صحة الفراسة، فإنها من النور وثمراته،
قال شجاع الكرماني: من عمر ظاهره باتباع السنة، وباطنه بدوام المراقبة، وغض بصره
عن المحارم، وكف نفسه عن الشهوات، وأكل من الحلال- لم تخطئ فراسته.
3. பார்வையை தாழ்த்தினால் அகக் கண்
திறக்கும்.
நபியின் சுன்னத்தை பின்பற்றுதல் தன்னை உற்று நோக்குதல் பார்வையை
தாழ்த்துதல் விருப்பங்களை விட்டும் தன் உள்ளத்தை தடுத்துக் கொள்ளுங்கள் ஹலாலான
உணவு உட்கொள்ளுங்கள் இவைகள் எல்லாம் அகக்கண் திறப்பதற்கு காரணமாக இருக்கும் என்று
ஷுஜாஃ கிர்மானி ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.
أنه يفتح له طرق العلم وأبوابه، ويسهل عليه
أسبابه, وذلك بسبب نور القلب، فإنه إذا استنار ظهرت فيه حقائق المعلومات، ومن أرسل
بصره تكدر عليه قلبه وأظلم.
4. அறிவின் வாசல்கள் திறக்கப்படும்.
أنه يورث قوة القلب وثباته وشجاعته، قال بعض
الشيوخ: الناس يطلبون العز بأبواب الملوك، ولا يجدونه إلا في طاعة الله.
5. இதயத்தை வலுப்படுத்தும்.
أنه يورث القلب سرورا وفرحة وانشراحا أعظم من
اللذة والسرور الحاصل بالنظر، فلذة العفة أعظم من لذة الذنب.
6. உள்ளத்திற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
أنه يسد عن العبد بابا من أبواب جهنم، فإن النظر
باب الشهوة الحاملة على مواقعة الفاحشة، فمتى غض بصره سلم من الوقوع في الفاحشة،
ومتى أطلقه كان هلاكه أقرب.
7. நரகத்தின் வாசலை அடைத்து அதில் இருந்து
மனிதனை பாதுகாக்கும்.
أنه يقوي العقل ويزيده ويثبته، فإن إطلاق البصر
وإرساله لا يحصل إلا من خفة العقل وطيشه وعدم ملاحظته للعواقب كما قيل:
وأعقل الناس من لم يرتكب سببا
حتى يفكر ما تجني عواقبه
8. விசாலமான அறிவுக்கும் சிந்தனைக்கும்
காரணமாக இருக்கும்.
أنه يخلص القلب من ذكر الشهوة ورقدة الغفلة، فإن
إطلاق البصر يوجب استحكام الغفلة عن الله والدار والآخرة، ويوقع في سكرة العشق.
9. அல்லாஹ்வின் சிந்தனையை தரும்.
பார்வையின் ஆபத்து
1. குர்ஆன் ஓதும் பாக்கியம் கிடைக்காது.
من يطلق بصره في الحرام لا يستلذُّ بالقرآن كثيرًا:
قال الشيخ صالح بن عبدالعزيز آل الشيخ: أعظم ما
يصد به المرء عن القرآن: النظر، والغناء....وإذا تأملت فإن الذي يطلق نظره، ويسعى
في الشهوات من جهة النظر المحرمإلى النساء لا يستلذُّ للقرآن كثيرًا.
இரண்டு விஷயங்கள் குர்ஆன் ஓதுவதில் இருக்கிற இன்பத்தை இல்லாமல் ஆக்கிவிடும்
என்று சாலிஹ் பின் அப்துல் அஜீஸ் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.
1. தடுக்கப்பட்ட பார்வை
2. இசை
2. குர்ஆன் மறந்து போகும்.
قال عبدة بن عبد الرحيم: خرجنا في سرية إلى أرض
الروم فصحبنا شاب لم يكن فينا أقرأ للقرآن منه ولا أفقه ولا أفرض، صائم النهار
قائم الليل، فمررنا بحصن فمال عنه العسكر ونزل بقرب الحصن فظننا أنه يبول فنظر إلى
امرأة من النصارى تنظر من وراء الحصن فعشقها فقال لها بالرومية: كيف السبيل إليك؟
قالت: حين تتنصر يفتح لك الباب وأنا لك ففعل فأدخل الحصن، قال فقضينا غزاتنا في
أشد ما يكون من الغم كأن كل رجل منا يرى ذلك بولده من صلبه، ثم عدنا في سرية أخرى
فمررنا به ينظر من فوق الحصن مع النصارى فقلنا: يا فلان ما فعلت قراءتك؟ ما فعل
علمك؟ ما فعلت صلواتك وصيامك؟ قال: اعلموا أني نسيت القرآن كله ما أذكر منه إلا
هذه الآية: {رُبَمَا يَوَدُّ الَّذِينَ كَفَرُوا لَوْ كَانُوا مُسْلِمِينَ *
ذَرْهُمْ يَأْكُلُوا وَيَتَمَتَّعُوا وَيُلْهِهِمُ الْأَمَلُ فَسَوْفَ
يَعْلَمُونَ} [الحجر: ٢، ٣
ஒரு இளைஞனை பற்றி வரலாற்று நூல்கள் குறித்து வைத்திருக்கிறது அவன் குர்ஆனை
மனனமிட்ட ஒரு இஸ்லாமிய இளைஞன். அவனைவிட சிறப்பாக வேறு யாரும் ஓதி விட முடியாது
என்று சொல்லும் அளவிற்கு குர்ஆனை மிக அழகாக ஓத கூடியவன். மார்க்கத்தினுடைய
சட்டங்களையும் அறிந்து வைத்திருந்த ஒரு இளைஞன். அவன் ஒரு கிறிஸ்துவ பெண்ணை
பார்த்து அவளுடைய அழகில் மயங்கி அவள் மீது காதல் வயப்பட்டு அவளை அடைந்து
கொள்வதற்காக இஸ்லாத்திலிருந்து மதம் மாறி கிருத்துனாக போய் விட்டான். சில
நாட்களுக்கு பிறகு அவனை சந்தித்த மக்கள் இப்போது எப்படி இருக்கிறாய் குர்ஆனை அழகாக
ஓதக்கூடியவனாக இருந்தாய். இப்போது உன்னோடு குர்ஆன் எந்த அளவு இருக்கிறது என்று
கேட்கப்பட்டது. அப்போது அந்த இளைஞன்
رُبَمَا يَوَدُّ الَّذِيْنَ كَفَرُوْا لَوْ
كَانُوْا مُسْلِمِيْنَ
தாங்களும் முஸ்லிம்களாக இருந்திருக்க வேண்டுமே? என்று நிராகரிப்பவர்கள் (மறுமையில்) பெரிதும் விரும்புவர்.
(அல்குர்ஆன் : 15:2)
ذَرْهُمْ يَاْكُلُوْا وَيَتَمَتَّعُوْا
وَيُلْهِهِمُ الْاَمَلُ فَسَوْفَ يَعْلَمُوْنَ
(நபியே!) அவர்கள் (நன்கு)
புசித்துக்கொண்டும், (தங்கள் இஷ்டப்படி) சுகம் அனுபவித்துக்
கொண்டும் இருக்க (தற்சமயம்) நீர் அவர்களை விட்டுவிடுவீராக. அவர்களுடைய (வீண்)
நம்பிக்கைகள் (மறுமையை அவர்களுக்கு) மறக்கடித்து விட்டன. இதன் (பலனை) பின்னர்
அவர்கள் நன்கறிந்து கொள்வார்கள்.
(அல்குர்ஆன் : 15:3)
இந்த ஒரு வசனத்தை தவிர குர்ஆனில் உள்ள மொத்த வசனங்களும் என் உள்ளத்தில் இருந்து மறந்து போய் விட்டது என்று சொல்லி வருத்தம் அடைந்தார்.(ஸஹ்மு இப்லீஸி வகவ்ஸுஹு)
2023 அவதூறு
2024 நூர் அத்தியாயம் ஓர் பார்வை
வாஹிதிகள் பேரவை அவைகளும் தஸ்பீஹ் செய்கின்றன
No comments:
Post a Comment