وَاِنِّىْ
مُرْسِلَةٌ اِلَيْهِمْ بِهَدِيَّةٍ فَنٰظِرَةٌ بِمَ يَرْجِعُ الْمُرْسَلُوْنَ
ஆகவே, நான் அவர்களிடம் (உயர்ந்த பொருள்களைக் கொண்ட) ஒரு காணிக்கையை அனுப்பி, (அதை எடுத்துச் செல்லும்) தூதர்கள் (அவரிடமிருந்து) என்ன பதில் கொண்டு வருகிறார்கள் என்பதை எதிர்பார்ப்பேன்'' என்று கூறினாள். (அவ்வாறே அனுப்பியும் வைத்தாள்.) (அல்குர்ஆன் : 27:35)
فَلَمَّا
جَآءَ سُلَيْمٰنَ قَالَ اَتُمِدُّوْنَنِ بِمَالٍ فَمَاۤ اٰتٰٮنَِۧ اللّٰهُ خَيْرٌ
مِّمَّاۤ اٰتٰٮكُمْ بَلْ اَنْـتُمْ بِهَدِيَّتِكُمْ تَفْرَحُوْنَ
அந்தத் தூதர்
ஸுலைமானிடம் வரவே (ஸுலைமான் அவரை நோக்கி) ‘‘ நீங்கள் பொருளைக் கொண்டு எனக்கு உதவி
செய்யக் கருதுகிறீர்களா? அல்லாஹ் எனக்குக் கொடுத்து இருப்பவை
உங்களுக்குக் கொடுத்திருப்பவற்றை விட (அதிகமாகவும்) மேலானதாகவும் இருக்கின்றன.
மாறாக, உங்கள் இக்காணிக்கையைக் கொண்டு நீங்களே
சந்தோஷமடையுங்கள். (அது எனக்கு வேண்டியதில்லை) என்றும், (அல்குர்ஆன்
: 27:36)
لمَّا قَرَأَتْ
عَلَيْهِمْ كِتَابَ سُلَيْمَانَ اسْتِشَارَتْهُمْ فِي أَمْرِهَا، وَمَا قَدْ
نَزَلَ بِهَا؛ وَلِهَذَا قَالَتْ: ﴿يَا أَيُّهَا الْمَلأ أَفْتُونِي فِي أَمْرِي
مَا كُنْتُ قَاطِعَةً أَمْرًا حَتَّى تَشْهَدُونِ
وَقَالَ ابْنُ
عَبَّاسٍ وَغَيْرُ وَاحِدٍ: قَالَتْ لِقَوْمِهَا: إِنْ قَبِلَ الْهَدِيَّةَ فَهُوَ
مَلِكٌ فَقَاتِلُوهُ، وَإِنْ لم يقبلها فهو نبي فاتبعوه
நபி சுலைமான் அலை அவர்கள் இஸ்லாத்திற்கு வருமாறு ஒரு கடிதத்தை பில்கீஸ்
ராணிக்கு அனுப்பி வைத்தார்கள். அதைக் கண்டதும் என்ன செய்யலாம் என்று ஆலோசனை
கேட்டார்கள்.நீங்களே பொருத்தமானதை செய்யுங்கள் என்று சொல்லப்பட்டதும் நான்
அவருக்கு சில அன்பளிப்புகளை அனுப்பி வைக்கின்றேன். அவர் ஏற்றுக் கொள்கின்றாரா பார்க்கலாம்
என்று கூறினார்கள்.
இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் கூறுகிறார்கள் ; நான் அனுப்புகின்ற அன்பளிப்பை அவர் ஏற்றுக் கொண்டால் அவர் ஒரு அரசர்.
இல்லையென்றால் அவர் ஒரு தூதராகத்தான் இருக்கும் என்று பில்கீஸ் ராணி கூறினார்.
ذَكَرَ غَيْرُ
وَاحِدٍ مِنَ الْمُفَسِّرِينَ، مِنَ السَّلَفِ وَغَيْرِهِمْ: أَنَّهَا بَعَثَتْ
إِلَيْهِ بِهَدِيَّةٍ عَظِيمَةٍ مِنْ ذَهَبٍ وَجَوَاهِرَ وَلَآلِئَ وَغَيْرِ
ذَلِكَ. وَقَالَ بَعْضُهُمْ: أَرْسَلَتْ بلَبِنَة مِنْ ذَهَبٍ. وَالصَّحِيحُ
أَنَّهَا أَرْسَلَتْ [إِلَيْهِ](١) بِآنِيَةٍ مِنْ ذَهَبٍ.
قَالَ
مُجَاهِدٌ، وَسَعِيدُ بْنُ جُبَيْرٍ، وَغَيْرُهُمَا: وَأَرْسَلَتْ جِوَارِيَ فِي
زي الغلمان، وغلمان فِي زِيِّ الْجَوَارِي، وَقَالَتْ: إِنْ عَرَفَ هَؤُلَاءِ مِنْ
هَؤُلَاءِ فَهُوَ نَبِيٌّ. قَالُوا: فَأَمَرَهُمْ [سُلَيْمَانُ](٢) عليه السلام،
أن يتوضؤوا، فَجَعَلَتِ الْجَارِيَةُ تُفرغ عَلَى يَدِهَا مِنَ الْمَاءِ، وَجَعَلَ
الْغُلَامُ يَغْتَرِفُ، فَمَيَّزَهُمْ بِذَلِكَ.
وَقِيلَ: بَلْ
جَعَلَتِ الْجَارِيَةُ تَغْسِلُ بَاطِنَ(٣) يَدِهَا قَبْلَ ظَاهِرِهَا،
وَالْغُلَامُ بِالْعَكْسِ.
وَقِيلَ: بَلْ
جَعَلَتِ الْجَوَارِي يَغْتَسِلْنَ(٤) مِنْ أَكُفِّهِنَّ إِلَى مُرَافِقِهِنَّ،
وَالْغِلْمَانُ مِنْ مَرَافِقِهِمْ إِلَى أَكُفِّهِمْ. وَلَا مُنَافَاةَ بَيْنَ
ذَلِكَ كُلِّهِ، وَاللَّهُ أَعْلَمُ.
தங்கம் மற்றும்
மாணிக்கத்தினாலான பொருட்களை அனுப்பி வைத்தார்கள் என்று சிலரும் தங்கக் கட்டி ஒன்றை
அனுப்பி வைத்தார்கள் என்று சிலரும் கூறுகிறார்கள்.
இன்னும் சில
விரிவுரையாளர்கள் ஆண்களின் தோற்றத்தில் பெண்களையும் பெண்களின் தோற்றத்தில்
ஆண்களையும் அனுப்பி வைத்து, இவர்களை சரியான முறையில் அடையாளம் கண்டு கொண்டால் அவர்
இறைத்தூதராக இருக்கும் என்று கூறி அனுப்பி வைத்தார்கள். சுலைமான் நபி அலை அவர்கள்,
வந்தவர்களை உளு செய்யும் படி கூறினார்கள். பெண்கள் தண்ணீரை எடுத்து கைகளில் ஊற்றி
கழுவினார்கள். ஆண்கள் தண்ணீருக்குள் கையை விட்டு தண்ணீரை கையால் அள்ளி கழுவினார்கள்.
அதை வைத்து அடையாளம் கண்டு கொண்டார்கள். பெண்கள் உள்ளங்கையை முதலில் கழுவினார்கள்.
ஆண்கள் கைகளின் வெளிப்புறத்தை முதலில் கழுவினார்கள். அதை வைத்து அடையாளம் கண்டு
கொண்டார்கள். பெண்கள் உள்ளங்கையில் இருந்து தொடங்கி முழங்கை வரை கழுவினார்கள்.
ஆண்கள் முழங்கையில் இருந்து தொடங்கி உள்ளங்கை வரை கழுவினார்கள். அதை வைத்து
அடையாளம் கண்டு கொண்டார்கள்.
இந்த வசனத்தில் நாம் இன்றைக்கு சிந்தனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டிய
செய்தி இது தான் ;
فَما آتانِيَ
اللَّهُ خَيْرٌ مِمَّا آتاكُمْ﴾ أَيْ فَمَا أَعْطَانِي مِنَ الْإِسْلَامِ
وَالْمُلْكِ وَالنُّبُوَّةِ خَيْرٌ مِمَّا أَعْطَاكُمْ، فَلَا أَفْرَحُ بِالْمَالِ
அல்லாஹ்
எனக்குக் கொடுத்து இருப்பவை உங்களுக்குக் கொடுத்திருப்பவற்றை விட (அதிகமாகவும்)
மேலானதாகவும் இருக்கின்றன.
அதாவது இந்த செல்வத்தை விட அல்லாஹ் எனக்கு வழங்கிய இஸ்லாமும் இந்த
நபித்துவ அறிவும் தான் சிறந்தது என்று கூறினார்கள்.
உண்மையில் செல்வத்தை விட கல்வி தான்
உயர்ந்தது. செல்வந்தர்களை விட கல்வியாளர்களே உயர்ந்தவர்கள்.
وإنَّ أول ما
نزل من القرآن: {اقْرَأْ}، فكان حضاً على العلم إذ قال: { اقْرَأْ وَرَبُّكَ
الْأَكْرَمُ. الَّذِي عَلَّمَ بِالْقَلَمِ. عَلَّمَ الْإِنْسانَ ما لَمْ
يَعْلَمْ}، ثم قال عن المال: {كَلَّا إِنَّ الْإِنْسَانَ لَيَطْغَى. أَنْ رَآهُ
اسْتَغْنَى} أرأيتَ كيف قابل هنا بين العلم فرفع منزلتَه، وبين المال فحذَّر
الناسَ فتنتَه.
குர்ஆனின் முதல் வசனம் ஒருவர் கல்வியைத் தேர்ந்தெடுத்தால் அவருக்கு இறைவன்
எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்து அவரை உயர்வுபடுத்துவான் என்று கூறுகிறது. அதே
அத்தியாயத்தின் இன்னொரு வசனம் செல்வம் ஒரு மனிதனை வரம்பு மீற வைக்கும் என்கின்றது.
عقد ابن القيم
مقارنة بين العلم والمال مبينا فضل العلم على المال فقال في مفتاح دار السعادة
«وفضل العلم على المال يعلم من وجوه:
أحدها: أن
العلم ميراث الأنبياء، والمال ميراث الملوك والأغنياء.
والثاني: أن
العلم يحرس صاحبه، وصاحب المال يحرس ماله.
والثالث: أن
المال تذهبه النفقات، والعلم يزكو على النفقة.
الرابع: أن
صاحب المال إذا مات فارقه ماله، والعلم يدخل معه قبره.
الخامس: أن
العلم حاكم على المال، والمال لا يحكم على العلم.
السادس: أن
المال يحصل للمؤمن والكافر والبر والفاجر، والعلم النافع لا يحصل إلا للمؤمن.
السابع: أن
العالم يحتاج إليه الملوك فمن دونهم، وصاحب المال إنما يحتاج إليه أهل العدم
والفاقة.
الثامن: أن
النفس تشرف وتزكو بجمع العلم وتحصيله، وذلك من كمالها وشرفها، والمال يزكيها ولا
يكملها ولا يزيدها صفة كمال، بل النفس تنقص وتشح وتبخل بجمعه والحرص عليه، فحرصها
على العلم عين كمالها، وحرصها على المال عين نقصها.
التاسع: أن
المال يدعوها إلى الطغيان والفخر والخيلاء، والعلم يدعوها إلى التواضع والقيام
بالعبودية، فالمال يدعوها إلى صفات الملوك، والعلم يدعوها إلى صفات العبيد.
العاشر: أن
العلم جاذب موصل لها إلى سعادتها التي خلقت لها، والمال حجاب بينها وبينها.
الحادي عشر:
أن غنى العلم أجل من غنى المال، فإن غني المال غني بأمر خارجي عن حقيقة الإنسان،
لو ذهب في ليلة أصبح فقيرا معدما، وغني العلم لا يخشى عليه الفقر، بل هو في زيادة
أبدا، فهو الغني العالي حقيقة كما قيل:
غنيت بلا مال
عن الناس كلهم... وإن الغني العالي عن الشيء لا به.
الثاني عشر:
أن المال يستعبد محبه وصاحبه فيجعله عبدا له، كما قال النبي صلى الله عليه وسلم:
«تعس عبد الدينار والدرهم...» الحديث، والعلم يستعبده لربه وخالقه، فهو لا يدعوه
إلا إلى عبودية الله وحده.
الثالث عشر:
أن حب العلم وطلبه أصل كل طاعة، وحب الدنيا والمال وطلبه أصل كل سيئة.
الرابع عشر:
أن قيمة الغني ماله، وقيمة العالم علمه، فهذا متقوم بماله، فإذا عدم ماله عدمت
قيمته وبقي بلا قيمة، والعالم لا تزول قيمته، بل هي في تضاعف وزيادة دائما.
الخامس عشر:
أن جوهر المال من جنس جوهر البدن، وجوهر العلم من جنس جوهر الروح، كما قال يونس بن
حبيب: علمك من روحك، ومالك من بدنك. والفرق بين الأمرين كالفرق بين الروح والبدن.
السادس عشر:
أن العالم لو عرض عليه بحظه من العلم الدنيا بما فيها لم يرضها عوضا من علمه،
والغني العاقل إذا رأى شرف العلم وفضله وابتهاجه بالعلم وكماله به يود لو أن له
علمه بغناه أجمع.
السابع عشر:
أنه ما أطاع الله أحد قط إلا بالعلم، وعامة من يعصيه إنما يعصيه بالمال.
الثامن عشر:
أن العالم يدعو الناس إلى الله بعلمه وحاله، وجامع المال يدعوهم إلى الدنيا بحاله
وماله.
التاسع عشر:
أن غنى المال قد يكون سبب هلاك صاحبه كثيرا، فإنه معشوق النفوس، فإذا رأت من
يستأثر بمعشوقها عليها سعت في هلاكه، كما هو الواقع، وأما غنى العلم فسبب حياة
الرجل وحياة غيره به، والناس إذا رأوا من يستأثر عليهم به ويطلبه أحبوه وخدموه
وأكرموه.
العشرون: أن
اللذة الحاصلة من غنى، إما لذة وهمية وإما لذة بهيمية، فإن صاحبه التذ بنفس جمعه
وتحصيله فتلك لذة وهمية خيالية، وإن التذ بإنفاقه في شهواته فهي لذة بهيمية، وأما
لذة العلم فلذة عقلية روحانية، وهي تشبه لذة الملائكة وبهجتها، وفرق ما بين
اللذتين.
الحادي
والعشرون: أن عقلاء الأمم مطبقون على ذم الشره في جمع المال الحريص عليه، وتنقصه
والإزراء به، ومطبقون على تعظيم الشره في جمع العلم وتحصيله، ومدحه ومحبته، ورؤيته
بعين الكمال.
الثاني
والعشرون: أنهم مطبقون على تعظيم الزاهد في المال المعرض عن جمعه، الذي لا يلتفت
إليه، ولا يجعل قلبه عبدا له، ومطبقون على ذم الزاهد في العلم، الذي لا يلتفت إليه
ولا يحرص عليه.
الثالث
والعشرون: أن المال يمدح صاحبه بتخليه منه وإخراجه، والعلم إنما يمدح بتخليه به
واتصافه به.
الرابع
والعشرون: أن غنى المال مقرون بالخوف والحزن، فهو حزين قبل حصوله، خائف بعد حصوله،
وكلما كان أكثر كان الخوف أقوى، وغنى العلم مقرون بالأمن والفرح والســـرور.
الخامس
والعشرون: أن الغني بماله لابد أن يفارقه غــــناه، ويتعذب ويتألم بمفارقته،
والغني بالعلم لا يزول، ولا يتعذب صاحبه، ولا يتألم، فلذة الغنى بالمال لذة زائلة
منقطعة، يعقبها الألم، ولذة الغنى بالعلم لذة باقية مستمرة، لا يلحقها ألم.
السادس
والعشرون: أن استلذاذ النفس وكمالها بالغنى استكمال بعارية مؤداة، فتجملها بالمال
تجمل بثوب مستعار، لابد أن يرجع إلى مالكه يوما ما، وأما تجملها بالعلم وكمالها به
فتجمل بصفة ثابتة لها، راسخة فيها لا تفارقها.
السابع
والعشرون: أن الغنى بالمال هو عين فقر النفس، والغنى بالعلم هو غناها الحقيقي،
فغناها بعلمها هو الغنى، وغناها بمالها هو الفقر.
الثامن
والعشرون: أن من قدم وأكرم لماله إذا زال ماله زال تقديمه وإكرامه، ومن قدم وأكرم
لعلمه لا يزداد إلا تقديما وإكراما.
التاسع
والعشرون: أن تقديم الرجل لماله هو عين ذمه، فإنه نداء عليه بنقصه، وأنه لولا ماله
لكان مستحقا للتأخر والإهانة، وأما تقديمه وإكرامه لعلمه فإنه عين كماله، إذ هو
تقديم له بنفسه وبصفته القائمة به لا بأمر خارج عن ذاته.
அல்லாமா இப்னுல்
கய்யூம் ரஹ் அவர்கள் செல்வத்தை விட கல்வியே உயர்ந்தது என்பதற்கு பல காரணங்களை குறிப்பிடுகிறார்கள்.
1. கல்வி நபிமார்களின் சொத்து. பொருள்
செல்வந்தர்கள் மன்னர்களுடைய சொத்து.
2. கல்வி நம்மை பாதுகாக்கும். பொருளாதாரத்தை நாமே
பாதுகாக்க வேண்டும்.
3. பணம் செலவழித்தால் அழிந்து விடும். கல்வி செலவினத்திற்கே
அழகு சேர்க்கும்.
4. செல்வந்தன் இறந்து விட்டால் அவன் சேமித்த
பொருளாதாரத்தை எடுத்துச் சொல்ல முடியாது. ஆனால் கல்வி மண்ணறையிலும் அவனுடன்
இருக்கும்.
5. கல்வி பொருளாதாரத்தின் மீது ஆதிக்கம்
செலுத்தும். பணம் கல்வியின் மீது ஆதிக்கம் செலுத்தாது.
6. பொருளாதாரம் ஈமான் கொண்டவன், அல்லாஹ்வை
மறுத்தவன், நல்லவன், கெட்டவன் எல்லோருக்கும் கிடைக்கும், பயன் தரும் கல்வி ஈமான்
கொண்டவனுக்கு மட்டுமே கிடைக்கும்.
7. கல்வியாளர்களை அரசர்களும் தேடி வருவார்கள்,
பணம் உடையவர்களை ஏழைகளும் இல்லாதவர்களும் மட்டுமே தேடி வருவார்கள்.
8. பொருளாதாரம் கஞ்சத்தனத்தை ஏற்படுத்தும். கல்வி
பிறருக்கு பயன் தர வேண்டும் என்ற எண்ணத்தை தரும்.
9. பொருளாதாரம் பெருமையை ஏற்படுத்தும். கல்வி
பணிவைத் தரும்.
10. கல்வி நற்பாக்கியத்திற்கு காரணமாக இருக்கும்.
பொருளாதாரம் நற்பாக்கியத்தைத் தடுத்து விடும்.
11. பொருள் செல்வத்தை விட அறிவுச் செல்வம் மேலானது,
உயர்ந்தது. ஏனென்றால் பொருள் செல்வத்தை திருடி விட முடியும். ஒரே நாளில் அவன்
ஏழையாகி விட முடியும். கல்வி செல்வத்தை யாராலும் திருட முடியாது. குறையாது. அது கூடிக்கொண்டே
போகும்.
12. பொருளாதாரம் மனிதனை அதற்கு அடிமையாக்கி விடும்.
கல்வி மனிதனை இறைவனுக்கு அடிபணிய வைக்கும்.
13. கல்வியை நேசிப்பது, தேடுவது நன்மைக்கு காரணமாக
இருக்கும். பொருளாதாரத்தைத் தேடுவது, விரும்புவது பாவத்திற்குக் காரணமாக இருக்கும்.
14. செல்வந்தனுக்கு அவனுடைய செல்வத்தைக் கொண்டு
தான் மதிப்பும் மரியாதையும். அந்த செல்வம் போய் விட்டால் அவனுடைய மதிப்பும் போய் விடும்.
கல்வியாளனுக்கு அவனுடைய கல்வியும் போகாது. மதிப்பும் குறையாது.
15. பொருளாதாரம் உடலைப் போன்றது. கல்வி உயிரைப்
போன்றது. உடல் அழியும். உயிர் அழியாது.
16. கல்வியாளன் அதற்கு பகரமாக உலகத்தில் வேறு
எதையும் தேர்ந்தெடுக்க மாட்டான். ஆனால் செல்வந்தன் உண்மையில் அவன் கல்வியின்
சிறப்பையும் மேன்மையும் அறிந்து விட்டால் அந்த செல்வத்திற்குக் பகரமாக கல்வியை
தேர்ந்தெடுக்க முற்படுவான்.
17. செல்வந்தன் மக்களை உலகத்தை நோக்கி அழைத்துச்
செல்வான். கல்வியாளன் மக்களை அல்லாஹ்வை நோக்கி அழைப்பான்.
நல்லோர்கள் பணத்தை விட அறிவையே
தேர்ந்தெடுத்தார்கள்.
عن علي بن أبي
طالب، قال: جلست مع رسول الله - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم َ -، فقال: «يا
أبا حسن، أيما أحب إليك: خمس مائة شاة ورعاها، أهبها لك، أو خمس كلمات أعلمكهن
تدعو بهن؟» فقلت له: بأبي أنت وأمي، أما من يريد الدنيا فيريد خمس مائة شاة
ورعاها، وأما من يريد الآخرة فيريد خمس كلمات، قال: «فأيهما تريد؟»، قلت: الخمس
كلمات، قال: «فقل: اللهم اغفر لي ذنبي، وطيب لي كسبي، ووسع لي في خلقي، وقنعني بما
قسمت لي، ولا تذهب بنفسي إلى شيء قد صرفته عنى» وتاريخ دمشق 42/ 370
ஹழ்ரத் அலி ரலி
அவர்கள் கூறுகிறார்கள் ; நான்
நபி ஸல் அவர்களோடு அமர்ந்திருந்தேன். அப்போது என்னைப் பார்த்து ஹஸனின் தந்தையே
உனக்கு 500 ஆடுகளைத் தருகிறேன். அல்லது அல்லாஹ்விடத்தில் நீ துஆ செய்யும் படியான
ஐந்து கலிமாக்களை உனக்கு கற்றுத் தருகிறேன். இவ்விரண்டில் உனக்கு எது பிரியமானது
என்று கேட்டார்கள். அப்போது நான் கூறினேன் ; யார்
உலகத்தை விரும்புகிறாரோ அவர் 500 ஆடுகளை விரும்புவார். யார் மறுமையை
விரும்புகிறாரோ அவர் ஐந்து கலிமாக்களை விரும்புவார். இவ்விரண்டில் உனக்கு எது விருப்பம் என்று
கேட்டார்கள்.
ஐந்து கலிமாக்களை சொல்லித் தாருங்கள் என்றேன். அப்போது இந்த ஐந்து துஆக்களையும் எனக்கு
நபியவர்கள் கற்றுக் கொடுத்தார்கள்.
1. என் பாவத்தை மன்னித்து விடு.
2. என் சம்பாத்தியத்தை தூய்மாக்கு
3. என் குணத்தை விசாலமாக்கு
4. போதுமென்ற தன்மையைக் கொடு
5. என்னை விட்டும் எதை நீ தடுத்து விட்டாயோ அதனைப்
பற்றிய எண்ணத்தை எனக்கு ஏற்படுத்தாதே (தாரீகே திமிஷ்க்)
கல்வியைத் தேர்ந்தெடுத்தால் அல்லாஹ்
செல்வத்தையும் கொடுத்து விடுவான்.
وهاك مثالاً
يبين فضل العلم على الإنسان، إنه يدور في زمن الخليفة العباسي هارون الرشيد، إنها
قصة تلميذ الإمام أبي حنيفة (أبو يوسف)، التي يرويها علي بن الجعد فيقول:
"أخبرني أبو يوسف قال توفي أبي إبراهيم بن حبيب وخلفني صغيراً في حجر أمي
فأسلمتني إلي قصار أخدمه، فكنت أدع القصار وأمر إلى حلقة أبي حنيفة فأجلس أسمع،
فكانت أمي تجيء خلفي إلى الحلقة فتأخذ بيدي وتذهب بي إلى القصار، وكان أبو حنيفة
يعني بي لما يرى من حضوري وحرصي على التعلم، فلما كثر ذلك على أمي وطال عليها هربي
قالت لأبي حنيفة ما لهذا الصبي فساد غيرك، هذا صبي يتيم لا شيء له وإنما أطعمه من
مغزلي، وآمل أن يكسب دانقاً يعود به على نفسه، فقال لها أبو حنيفة: قري يا رعناء
ها هو ذا يتعلم أكل الفالوذج بدهن الفستق، فانصرفت عنه وقالت له: أنت يا شيخ قد
خرفت وذهب عقلك!! فأكمل أبو يوسف فقال: ثم لزمت أبا حنيفة وكان يتعهدني بماله فما
ترك لي خلة فنفعني الله بالعلم ورفعني حتى تقلدت القضاء، وكنت أجالس هارون الرشيد
وآكل معه على مائدته، فلما كان في بعض الأيام قدم إلي هارون الرشيد فالوذجاً بدهن
الفستق، فضحكت فقال لي مم ضحكت؟ فقلت: خيراً أبقى الله أمير المؤمنين، قال:
لتخبرني وألح علي فأخبرته بالقصة من أولها إلي آخرها، فعجب من ذلك وقال لعمري: إنه
العلم ليرفع وينفع ديناً ودنيا وترحم على أبي حنيفة، وقال: كان ينظر بعين عقله ما
لا يراه بعين رأسه".
இமாம் அபூயூசுஃப் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள் ;
சிறு வயதில் என் தந்தை இறந்து விட்டார். என்
தாயார் என்னை வேலைக்கு அனுப்பி வைத்தார்கள். நான் செல்லும் வழியில் இமாம்
அபூஹனீஃபா ரஹ் அவர்களின் பாடசாலையை கடந்து செல்வேன். அங்கே சென்று அமர்ந்து
கொள்வேன். ஒரு நாள் என் தாயார் என்னைப் பார்த்து விட்டார்கள். திருப்பி என்னை வேலை
செய்யும் இடத்தில் கொண்டு போய் விட்டார்கள். நான் மறுபடியும் அந்த பாடத்தில் வந்து
அமர்ந்து கொண்டேன். அதைப் பார்த்த என் தாயார் இவனை இவ்வாறு கெடுக்கின்றீர்களே
என்று இமாம் அபூஹனீஃபா ரஹ் அவர்களை கடிந்து கொண்டார்கள். அப்போது இமாம் அவர்கள்
என் தாயாரிடம் அம்மா நீங்கள் கவலைப் பட வேண்டாம். இவன் கல்வி கற்கட்டும். நெய்யால்
செய்யப்பட்டட உயர்தரமான இனிப்புப் பண்டத்தை உண்ணும் அளவுக்கு இவனின் நிலையை அல்லாஹ் உயர்த்துவான்
என்று கூறினார்கள். நான் அவர்களிடத்திலேயே கல்வி கற்றேன்.
பிற்காலத்தில்
மன்னர் ஹாரூன் ரஷீத், என்னை அரசின் தலைமை நீதிபதியாக
நியமித்தார். ஒருநாள் ஹாரூன் ரஷீத், தலைமை
நீதிபதியைக் கௌரவிக்கும் பொருட்டு ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்தார்.அதில் நான்
கலந்து கொண்டேன். அப்போது சிறப்பு உணவாக, ‘ரோஹ்னி பிஸ்தா'
(நெய்யால் செய்யப்பட்டட உயர்தரமான ஒரு வித இனிப்புப் பண்டம்)
பரிமாறப்பட்டது.
அதைக் கண்டதும் நான்
சிரித்தேன். “இமாம் அவர்களே! என்னவானது தங்களுக்கு?” என்று
விசாரித்தார்.
அதற்கு நான்,
“ஜனாதிபதி அவர்களே! எனக்குப் பழைய சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன.
நான் வேலைக்குச் செல்லாமல் பாடசாலைக்கு செல்வதைக் கண்டு கோபம் கொண்ட என் தாயார்,
என் ஆசிரியரை திட்டலானார். ஆனால், எல்லாவற்றையும்
புன்முறுவலுடன் ஏற்றுக்கொண்ட என் ஆசிரியர் இமாம் அபூ ஹனீபா அவர்கள், “அம்மா!
கவலைப்படாதீர்கள்! உங்கள் மகன் வெறும் காய்ந்த ரொட்டித் துண்டுகளை சம்பாதிப்பதற்கு
பதிலாக கல்வி, கேள்விகளில் சிறந்து ‘ரோஹ்னி பிஸ்தா' உண்ணும்
காலம் வரத்தான் போகிறது. பொறுமையாய் இருங்கள்!” என்றார். எவ்வளவு தீர்க்கதரிசனம் அவருடையது! என்றார்கள்
மாமேதை அறிஞர் இமாம் அபூ யூஸுஃப்
ரஹ் அவர்கள்.
சுலைமான் நபிக்கு இரண்டையும் கொடுத்தான்
قال عبدالله
بن عباس رضي الله عنهما "خُيّر النبي سليمان عليه السلام بين العلم والمال
والملك فاختار العلم فأُعطي المال والملك معه
இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் கூறுகிறார்கள் ;
அல்லாஹ் சுலைமான் நபியிடம் உங்களுக்கு கல்வி,ஆட்சி,செல்வம் இவற்றில்
எது வேண்டும் என்று கேட்டான். சுலைமான் நபி அவர்கள் கல்வியைத்
தேர்ந்தெடுத்தார்கள். அல்லாஹ் அவர்களுக்கு மூன்றையும் கொடுத்து விட்டான்.
பொருளை விட கல்வியே சிறந்தது என்ற
சிந்தனையை உருவாக்க வேண்டும். அத்தகைய தலைமுறையை வார்த்தெடுக்க வேண்டும்.
كانت ام
الامام الشافعي تعلمه أيضا البر والتصدق، فكانت دائما توصيه بألا يدخل مكة حتى
يتصدق بكل ما معه
இமாம் ஷாஃபிஈ ரஹ் அவர்கள் கல்வி காலத்தை முடித்து கலீஃபாவிடமிருந்து
தனக்கு கிடைத்த பொற்காசுகளை ஏழ்மையான தன் தாயிடம் கொடுத்து அவர்களை மகிழ்விக்க
வேண்டும் என்ற எண்ணத்தில் வந்து கொண்டிருந்தார்கள். இதைக் கேள்விப்பட்ட அவர்களின்
தாயார் அந்த அனைத்து பொற்காசுகளையும் ஸதகா செய்து விட்டுத் தான் என்னை சந்திக்க
வேண்டும் என்று கூறி விட்டார்கள்.
கடந்த கால பதிவுகள்
2023 ஹுத்ஹுத் பறவை
வாஹிதிகள் பேரவை சோதனையில்லாமல் சுவனமா
No comments:
Post a Comment